Jump to content

மனிதனும் நட்சத்திரப் பயணங்களும்


Recommended Posts

வணக்கம் கள உறவுகளே !!

ஒரு சிறு அறிவியல் தொடர் ஊடாக உங்களைத் தொடுகின்றேன் . எங்கள் மனமானது இரவில் தெளிவான நீல வானில் தெரியும் பௌர்ணமி நிலவையும் , அதன் தொடர்ச்சியான நட்சதிரங்களையும்  பர்த்து பல கற்பனைகளையும் மேற்கொள்ளும் . ஏன் இவைகளையெல்லாம் நேரில் போய் பார்க்க முடியாதா ?? என்றுகூட சில வேளைகளில் எமது மனம் நினைக்கத் தோன்றும் . எமது பால்வெளியில் உள்ள கிரகங்களுக்கோ அதற்கும் அப்பால் விரிந்து கொண்டிருக்கும் பிரபஞ்ச வெளிக்கும் மனிதன் பயணம்  செய்யமுடியுமா ??  என்ற அறிவியல் கேள்விக்கு இந்த தொடர் விடையளிக்கும் என்றே நினைக்கின்றேன் . வழமை போல் உங்கள் ஆதரவையும் கருத்துகளையும் நாடி நிற்கின்றேன் .

நேசமுடன் கோமகன்.

 

*************************************************************************************

 

மனிதனும் நட்சத்திரப் பயணங்களும்

 

 

galaxie_003.jpg

 

சூரியனை சுற்றி ஒன்பது கிரகங்கள் வலம் வருவது எமக்கு தெரிந்த விடயம். ஆனால் இன்று நாம் வாழும் பூமியானது  ஒரு காலத்தில் பிரபஞ்சத்தின் மையமாக கருதப்பட்டு வந்தது என்பது உங்களுக்கு எத்தனை பேருக்கு தெரியும்?

இன்றைக்கு ஏறக்குறைய 2000 வருடத்திற்கு முன்னர் எழுந்த கோட்பாடு இது. ஆரம்ப காலத்தில் எந்தவித நவீன தொலைநோக்கிகளும் கண்டுபிடிக்கப்படாத நிலையிலும் எந்தவித செய்மதிகள் விண்ணுக்கு ஏவப்படாத நிலையிலும், பூமிக்கு அப்பால் என்ன இருக்கும்? எத்தனை கிரகங்கள் இருக்கும் என்ற ஊகங்கள் பரவலாக கிளம்பலாயின.

உலகத்தின் மிகப்பிரசித்தமான தத்துவவியலாளரான அரிஸ்ட்டோட்டில் வாழ்ந்த காலம் அது.  அவரது கொள்கைகளும், கண்டுபிடிப்புக்களும் பிரபஞ்சத்தின் மையம் பூமி என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தும் கணித சூத்திரங்களாக இருந்தன.

,'எப்பிசைக்கில்ஸ்' எனப்படும்  வட்ட ஒழுக்களினூடே சுமார் 55 வளையங்களில் அக்காலத்தில் அறியப்பட்டிருந்த 6 கிரகங்களும் சூரியனும் வலம் வருவதாக அரிஸ்ட்டோட்டில் கருதினார்.

 

epicycleastro1.jpg

6 கிரகங்களும் சூரியனும் பூமியை சுற்றி வலம் வரும் ஒழுங்கானது பின்வருமாறு

1. சந்திரன்
2.புதன்
3.வெள்ளி
4.சூரியன்
5.செவ்வாய்
6.வியாழன்
7.சனி

விண்ணில் தெரியும் பொருட்கள் பூமியை சுற்றி வலம் வருகின்றனவா? அல்லது பூமி அவற்றை சுற்றி வலம் வருகிறதா என்பதனை அக்காலத்தில் அறிவது கடினமான காரியமாக இருந்தது.

பரலக்ஸ் எனப்படும் அசையும் பொருட்களில் ஏற்படும் தடுமாற்றம் பூமியில் இருந்து அவதானிக்கும் போது விளங்கினால், பூமியே விண் பொருட்களை சுற்றி வருவதும்,  தன்னை தானே சுற்றுவதும், தெளிவாக நிரூபிக்கப்படும். ஆனால் விண்ணில் தெரியும் நட்சத்திரங்களின் அசைவில் ஏற்படும் தடுமாற்றம் மிகச்சிறியதாக இருப்பதானால் இதை நிரூபிக்க வழியில்லை. கிரகங்களின் இயக்கத்தை கொள்கையளவில் வரையறுப்பது அக்காலத்தில் கடினமான காரியமாக இருந்தது. 

வானத்தில் நிலையாக நிற்கும் நட்சத்திரங்களுடன் கிழக்குத்திசையில் பயணிக்கும் கிரகங்களின் இயக்கம், அவற்றின் வேகம் என்பன கேத்திரகணித ரீதியில் சமச்சீரானவையாக (Uniform motion) கணிக்கப்பட்டன.

கிரகம் என்ற சொல், 'வேண்டரர்' (Wanderer)  என்ற கிரேக்க பதத்தில் இருந்து வந்தது. இதற்கு அர்த்தம் அதிசயிக்கத்தக்க பொருள் என்பதாகும்.

இக்கிரகங்களின் இயக்கத்தினை நவீன காலத்தில் பயன்படுத்தப்படும் வானவியல் கருவிகள் எதன் துணைகொண்டுமல்லாது கணித ரீதியாக மட்டுமே ஆராய்ந்து, இப்படியான  தகவல்களை அளித்த அக்காலத்து மாமேதைகளான தொலமியும், அரிஸ்ட்டோட்டிலும் மெச்சத்தக்கவர்கள்தானே.

aristotleastro1.jpg

அரிஸ்டோடில்

 

அக்காலத்தில் இந்த வானவியல் கோட்பாடுகளை மையமாக கொண்டு வரையப்பட்ட கணித சூத்திரங்கள்தான், இன்றைய நவீன வானவியலின் வளர்ச்சிக்கும் அடிப்படை என்பது உங்களில் எத்தனை பேருக்கு நம்ப முடிகிறது.

தொடரும்

http://www.4tamilmedia.com/knowledge/essays/2781-astrnonomy-on-1st-century-star-journey-1

Link to post
Share on other sites

02 நவீன வானவியலின் பிறப்பு

 

modernasronomyastro2.jpg

 

உயிர் வர்க்கங்களில் மிக உயர்ந்தவனான மனிதன் தன்னைப் பற்றியும் சுற்றியுள்ள சூழல் பற்றியும் தனக்கிருக்கும் பகுத்தறிவைப்

பயன்படுத்தி எப்போதும் ஆராய்ந்த வண்ணமே இருக்கிறான். பரிணாமத்தின் ஏறு படிகளை வழிநடத்திச் செல்பவன் அவனே.
இன்றைய விஞ்ஞான யுகத்தில் பூமியின் அருங்கொடையான மனிதனின் அறிவு வளர்ச்சியில் முதற்படியில் நிற்பது வான்வெளி தொடர்பான அவனது வேட்கையே எனலாம்.உலகில் பண்டைய நாகரீகங்கள் தோற்றம் பெற்றதிலிருந்து இன்று வரை அண்டவெளி தொடர்பான அறிவு பல பரிணாமங்களைக் கடந்து விருத்தியாகி வருகிறது.

பிரபஞ்சத்தின் அடிப்படைத் துகள் பற்றி விரிவாக அறிவதற்கு ஆய்வுகூடத்தில் அணுவைப் பிளந்து புரோட்டோன் கற்றைகளை மோதவிட்டு சூரியனை விட பல மடங்கு அதிக வெப்பத்தை உருவாக்கும் பரிசோதனைகளில் எல்லாம் இன்று ஈடுபட்டு வரும் நாம் ஒரு காலத்தில் பூமியே பிரபஞ்சத்தின் மையம் என நம்பிக் கொண்டிருந்தோம் என்றால் அது ஆச்சரியமாகவில்லை?

முற்காலத்தில் வானியல் என்பது, வெறும் கண்ணால் பார்க்கக்கூடிய விண் பொருட்களின் இயக்கங்களைக் கூர்ந்து நோக்குவதையும், எதிர்வு கூறலையும் உள்ளடக்கியிருந்தது. நாகரிகங்கள் வளர்ச்சியடைந்தபோது, சிறப்பாக, மெசொப்பொத்தேமியா, கிரீஸ், எகிப்து, பாரசீகம், மாயா, இந்தியா, சீனா ஆகிய இடங்களிலும், இஸ்லாமிய உலகிலும் பிரபஞ்சத்தின் இயல்புகள் பற்றிய எண்ணக்கருக்கள் உருவாகத் தொடங்கியிருந்தன.

சில குறிப்பிடத்தக்க வானியல் கண்டுபிடிப்புக்கள், தொலைநோக்கிகள் பயன்பாட்டுக்கு வர முன்னரே நிகழ்த்தப்பட்டன. எடுத்துக் காட்டாக சூரியப் பாதையின் சரிவு, கிமு 1000 ஆண்டுக் காலத்திலேயே சீனரால் கணக்கிடப்பட்டு இருந்தது.

சந்திர கிரகணங்கள் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் திரும்பத் திரும்ப நடைபெறுவதைக் கால்டியர் அறிந்து இருந்தனர். கிமு இரண்டாம் நூற்றாண்டில் சந்திரனின் அளவையும், பூமியில் இருந்து அதன் தூரத்தையும் ஹிப்பார்க்கஸ் மதிப்பீடு செய்திருந்தார்.

கி.பி இன் 1473ம் ஆண்டு முதன்முதலில் போலந்து நாட்டைச் சேர்ந்த நிக்காலஸ் கோப்பர்நிக்கஸ், சூரிய மண்டலத்துக்கான, சூரியனை மையமாகக் கொண்ட மாதிரி ஒன்றை முன்மொழியும் வரை புவிமையக் கோட்பாடே உலகம் முழுதும் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. பின்னர் வந்த கலிலியோ கலிலி, ஜொகான்னஸ் கெப்ளர் ஆகியோர், இவரது முடிவுகளை ஏற்றுக்கொண்டு அதனைத் திருத்தியும், விரிவாக்கியும் மேம்படுத்தினர்.

copernicusastro2.jpg
கோள்களின் இயக்கம் தொடர்பான பரிசோதனைகளையும் அவற்றின் முடிவுகளையும் தொலைக்காட்டி மூலம் அவதானித்து கணித முறையில் பகுப்பாய்வு செய்வதை தொடக்கிவைத்ததன் மூலம், நவீன வானியலின் பிறப்புக்கு வித்திட்டவர் என்ற வகையில் அறிஞர் குழாமில் கலீலியோவுக்கு உயர்ந்த இடம் உண்டு.

ஆயினும் சூரிய மண்டலம் பற்றிய கருத்துகளால் வத்திக்கனின் கத்தோலிக்க தேவாலயத்தால் தண்டிக்கப்பட்டு வீட்டுக்காவலில் அடைக்கப்பட்ட கலிலியோவின் இறுதிக்காலத்தில் அவரது கண்கள் குருடாகி விட்டன. அறிவியல் வளர்ச்சி உன்னத இடத்திலிருக்கும் இன்றைய 21ம் நூற்றாண்டிலேயே அதாவது 1992 ம் வருடம் கலிலியோ மறைந்து 350 ஆண்டுகள் கழித்து அவரைத் தண்டித்தது தவறு என போப் ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடரும்

http://www.4tamilmedia.com/knowledge/essays/2782-birth-of-modern-astronomy-star-journey-2

Link to post
Share on other sites

செவ்வாய்க்கு ஆட்களை அனுப்பும் திட்டத்திற்கு கனடாவில் இருந்து இரண்டு இளையோர்களைத் தெரிவு செய்துள்ளார்கள்.. அவர்களின் செவ்வியை சிபிசி வானொலியில் போட்டார்கள்.. இரண்டு பேரும் மிக மகிழ்வாகவும், உற்சாகமாகவும் பேசினார்கள். :unsure: இது ஒரு திசைப் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.. :huh:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய்க்கு ஆட்களை அனுப்பும் திட்டத்திற்கு கனடாவில் இருந்து இரண்டு இளையோர்களைத் தெரிவு செய்துள்ளார்கள்.. அவர்களின் செவ்வியை சிபிசி வானொலியில் போட்டார்கள்.. இரண்டு பேரும் மிக மகிழ்வாகவும், உற்சாகமாகவும் பேசினார்கள். :unsure: இது ஒரு திசைப் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.. :huh:

 

ஆம் இசை...

இங்குள்ள.. பிரபல்ய‌ இணையம் ஒன்றின், முதன்மைச் செய்தியாக இதனை இன்று காலையில் வாசித்தேன். :)

Link to post
Share on other sites

கருத்துக்களைப் பகிர்ந்த இசைக்கலைஞன் தமில்சிரிக்கு மிக்க நன்றிகள் .

Link to post
Share on other sites

பிரபஞ்சத்தின் தோற்றம் - பகுதி 1 

 

நமது கண்ணுக்கு தெரியும் பிரதான வான் பொருட்களான சூரியன் மற்றும் கிரகங்கள் என்பனவற்றின் மையம் பூமி அல்ல சூரியனே என்ற முடிவுக்கு வந்து சுமார் நானூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதன் பிண்ணனியில் சென்ற தொடரில் நவீன வானவியல் எவ்வாறு தோற்றம் பெற்றது என வரலாற்றுக் குறிப்புக்களுடன் ஆராய்ந்தோம். இத்தொடரில் பிரபஞ்சம் எவ்வாறு தோற்றம் பெற்றது? என்பதைப் பற்றி அலசுவோம். பிரபஞ்சத்துக்கு ஆரம்பமும் இல்லை; முடிவும் இல்லை அது மெய்யாக வரையறைக்கு உட்படாதது என்ற கருத்துக்கள் முன்பு நிலவி வந்தன. ஆயினும் 21ம் நூற்றாண்டில் அறிஞர்களால் விவாதிக்கப் பட்டு வரும் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய கருதுகோள்களில் ரஷ்ய அமெரிக்க விஞ்ஞானி ஜார்ஜ் காமாவ் ஊகித்த "பெரு வெடிப்புக் கோட்பாடு" (Big Bang Theory) அமெரிக்க விஞ்ஞானி எட்வின் ஹப்பிளால் நிரூபணமாகி 20 ஆம் நூற்றாண்டிலே உலக விஞ்ஞானிகள் பலரால் ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கிறது.

பிரபஞ்சத்தின் அடிப்படை விதிகள் மிக எளிமையாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என இந்த நூற்றாண்டின் தலை சிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியிருக்கிறார். பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்கும் முக்கியமான கொள்கைகள் இரண்டு.

 

 1.     அதில் முதலாவது ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கொள்கை.
 2.     அடுத்தது குவாண்டம் கொள்கை.

 

einsteinastro3.jpg

 

அல்பேர்ட் ஐன்ஸ்டீன்:

 

இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளானது வெளியினை வளைக்கும் தன்மை கொண்டது என்பதே ஐன்ஸ்டைனின் சிறப்புச் சார்பியற் தத்துவம். அதே போல் இயற்கையின் அடிப்படைக் கூறுகளான ஒளி,இடம்,காலம் போன்றவை தொடர்ந்து பிரிக்கக் கூடியவை அல்ல என்பதே குவாண்டம் கொள்கை.

 

இவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பெருவெடிப்புக் கொள்கை சொல்வது என்னவென்றால் இப்பிரபஞ்சத்தில் உள்ள பொருள் மற்றும் சக்தி இரண்டும் இணைந்து இறுகி நம்மால் கற்பனை செய்து கொள்ள முடியாத அளவு அடர்த்தியுடன் சில மில்லி மீட்டர்கள் விட்டமே உடைய ஒரு பந்தாக சூரியனை விட பல பில்லியன் மடங்கு வெப்பத்துடன் ஆதியில் இருந்தது என்பதாகும். சுமார் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இன்னமும் கண்டறியப்படாத ஏதோ ஒரு காரணத்தால் இப்பந்து வெடித்துச் சிதறியதில் முதல் அணுக்களான ஐதரசன்,ஹீலியம் உட்பட இன்றுள்ள காலக்ஸிகள்,கருந்துளைகள், குவாசர்கள்,நட்சத்திரங்கள் ஆகிய அனைத்தும் தோற்றம் பெற்றன. மேலும் இத்தொகுதிகள் யாவும் அழிந்தும் சிதைந்தும் வேறொன்றாக மாறியும் எல்லையற்ற காலப் பெருவெளியில் மேலும் விரிவடைந்து கொண்டே செல்கின்றன.

தற்போது கண்ணால் அவதானிக்கக் கூடிய பிரபஞ்ச வெளியை அடைக்கும் பொருள்,சக்தி என்பவற்றில் 70 வீதம் கரும் சக்தியும், 25 வீதம் கரும்பொருளும், 4 வீதம் காலக்ஸிகளுக்கிடையில் சிதறிக் கிடக்கும் ஐதரசன்,ஹீலியம் வாயுக்களும், 0.5 வீதம் நட்சத்திரங்களும்,0.3 வீதம் நியூட்ரினோக்களும்,0.03 வீதம் கடின மூலகங்களும் அடங்கியிருக்கின்றன.

 

darkmatteraastro3.jpg

 

பிரபஞ்சத்தின் கட்டமைப்பு சடப்பொருள் மற்றும் சக்தி வீதங்கள்

இதில் கரும்பொருள் என்பது அது வெளியிடும் கதிரியக்கத்தின் மூலம் வானியல் உபகரணங்களால் அவதானிக்க முடியாத ஆனால் அண்டவெளியிலுள்ள விண் பொருட்களைத் தள்ளும் ஈர்ப்பு விசையால் இணங்காணப்படும் சடப்பொருளாகும். கரும் சக்தி என்பது பிரபஞ்சத்தின் விரிவை ஒவ்வொரு கணமும் துரிதப்படுத்திக் கொண்டிருக்கும் ஒப்புக் கொள்ள முடியாத சக்தியாகும்.

இவற்றுடன் பிரபஞ்சத்தில் உள்ள காலக்ஸிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் யாவும் பெருவெடிப்பின் பின்னர் படிப்படியாக எப்படித் தோற்றம் பெற்றன என்பதை இப்போது பார்ப்போம்.

பெருவெடிப்பு ஏற்பட்ட முதலாவது செக்கனில் ஏற்பட்ட மூலக்கூற்று நிலையிலான மாற்றங்களை பிரபஞ்சவியலாளர்கள் ஆறு பகுதிகளாகப் பிரித்து விளக்கியுள்ளனர். இதில் முதலாவது ப்ளாங் இப்போ எனப்படுகிறது. இது பெரு வெடிப்பு ஏற்பட்டு 10 இன் -43ம் அடுக்கு செக்கனின் பின்னர் நிகழ்ந்த மாற்றங்களைக் குறிப்பது. இதன்போதே  விண்வெளியிலுள்ள நான்கு அடிப்படை விசைகளான  மின்காந்தவிசை, நுண்ணிய அணு விசை, கடின அணு விசை,ஈர்ப்பு விசை என்பன தோற்றம் பெற்றன.

அடுத்தது கிராண்ட் யுனிfபிக்கேஷன் இப்போவாகும். பெருவெடிப்பு நிகழ்ந்து 10 இன் -43 ம் அடுக்கிற்கும் 10 இன் -36 ம் அடுக்கிற்கும் இடைப்பட்ட செக்கனில் நிகழ்ந்த மாற்றத்தை இது குறிக்கிறது. இக்காலப் பகுதியிலிருந்தே  விரியத் தொடங்கிய பிரபஞ்சம் குளிரத் தொடங்கியது. 

மேலும் கடின அணு விசையும் நுண்ணிய அணு விசையும் இணைந்து ஹிக்ஸ் போசொன் எனப்படும் நிறையுடைய அடிப்படைத் துணிக்கையை இந்த குறுகிய காலத்திலேயே உருவாக்கியது. கடவுள் துணிக்கை என்று கருதப்படும் அணுக்கருவின் உள்ளே இருக்கும் ஆறு மூலத் துணிக்கைகளில் ஒன்றான ஹிக்ஸ் போசொன் பிக்பாங் கொள்கையை நிரூபிப்பதற்காக தற்போது ஜெனீவாவிலுள்ள சேர்ன் அணுவாராய்ச்சி நிலையத்தில் பரிசோதிக்கபட்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கது.

அடுத்த கட்டமான 10 இன் -36ம் அடுக்கிற்கும் 10 இன் -32ம் அடுக்கிற்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த மாற்றங்களை இன்fப்ளேசனரி இப்போ எனவும் 10 இன் -12ம் அடுக்கு செக்கன் வரையான பகுதியை எலெக்ட்ரோ வீக் இப்போ எனவும் அழைப்பர். 

இன்fப்ளேசனரி இப்போவின் போதே இன்று விண்வெளியியலாளர்கள் தலையைச் சுற்ற வைத்துக் கொண்டிருக்கும் டார்க் எனெர்ஜி எனப்படும் கரும் சக்தி பிரபஞ்ச விரிவாக்கத்தைத் துரிதப்படுத்த தொடங்கியது. மேலும்  எலெக்ட்ரோ வீக் இப்போவின் போது  வெப்பநிலை 10 இன் 28ம் அடுக்கு கெல்வின் வரை குறைவடைந்ததால் கதிரியக்கம் ஆரம்பமாகி அணுக்களின் அடிப்படைத் துணிக்கைகளான குவார்க்குகள்,எலெக்ட்ரான்கள் மற்றும் நியூட்ரினோக்கள் உருவாகத் தொடங்கின.

மேலும் தற்போது பிரபஞ்சம் முழுதும் பரவியிருக்கும் பின்புலக் கதிர்வீச்சு இதன் போதே உருவானது. இக் கதிர் வீச்சே பிரபஞ்சத்தின் தோற்றத்துக்குக் காரணமாக பெரு வெடிப்பு ஒன்று நிகழ்ந்திருக்கலாம் என இன்று விஞ்ஞானிகள் கருதக் காரணமாகும்.

இறுதியாக கருதப்படும் இரு பகுதிகள் குவார்க் இப்போ மற்றும் ஹட்ரொன் இப்போ என்பவை ஆகும். பெருவெடிப்பின் பின்னர் நாம் பார்த்த பகுதிகளில் இன்னமும் சடப்பொருளான அணுக்கருக்கள் உருவாகவில்லை. 10 இன் -12ம் அடுக்கிற்கும் 10 இன் -6ம் அடுக்கிற்கும் இடைப்பட்ட குவார்க் இப்போவின் போதே நான்கு அடிப்படை விசைகளும் பிரிக்கப்பட்டு தனியாக்கப்படுகின்றன.

இதனால் குவார்க்குகள் வலுப்பெற்று புரோட்டன் எனும் அணுக்கருவை உருவாக்கும் நிலைக்குத் தள்ளப் படுகின்றன. ஆனால் வெப்பநிலை மிக மிக அதிகமாக இருந்ததால் இக்கருத்தாக்கம் சாத்தியமாகவில்லை. அடுத்து வரும் 10 இன் -6ம் அடுக்கிற்கும் 1 செக்கனுக்கும் இடைப்பட்ட ஹெட்ரோன் இப்போ காலப்பகுதியிலேயே நிறையுடைய சடப்பொருள் உருவாகிறது.

அதாவது குவார்க்-குளுவோன் பிளாஸ்மா மூலம் வெப்பநிலை வீழ்ச்சியடைந்த பின்னர் ஹட்ரோன்கள் என அழைக்கப்படும் அணுக்கருவை ஆக்கும் நேர்த் துணிக்கையான புரோட்டன்களும், நடுநிலைத் துணிக்கையான நியூட்ரோன்களும் தோற்றம் பெறுகின்றன. இதன்மூலம் பல மில்லியன் நட்சத்திரங்களின் தொகுதியான காலக்ஸிகள் அதாவது அண்டங்கள் முதல் நாம் வாழும் பூமி போன்ற கிரகங்கள் வரை உருவாக வழி ஏற்பட்டது.

 

http://www.4tamilmedia.com/knowledge/essays/2783-origine-of-universe-star-journey-3

Link to post
Share on other sites

பிரபஞ்சத்தின் தோற்றம் பகுதி 02

 

Big%252520Bang%252520Timeline.jpg

பிரபஞ்சத்தின் தோற்றம் பகுதி - 2 (பெருவெடிப்பின் ஒரு செக்கனுக்கு பின்)

முந்தைய தொடரில் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி அலசுகையில் பிக் பாங் எனும் பெரு வெடிப்பு நிகழ்ந்த முதலாவது செக்கனில் நிகழ்ந்த மாற்றங்களை கருக்கள் மற்றும் துணிக்கை ரீதியாக ஆராய்ந்து தகவல்களை வெளியிட்டிருந்தோம். இந்த அடிப்படையில் இறுதியாக பெரு வெடிப்பின் முதல் செக்கனின் பின் குவார்க் குளுவோன் சக்தி திடர் குளுமையடைவதன் மூலம் கருவின் உள்ளே உள்ள புரோட்டன் மற்றும் நியூட்ரோன் துணிக்கைகளை உள்ளடக்கிய ஹெட்ரோன் கூட்டு  உருவாகி பிரபஞ்ச வெளியில் நியூட்ரினோக்கள் சுதந்திரமாக நடமாட வழி ஏற்பட்டது.

இதை அடுத்து பெரு வெடிப்பின் 1-10 செக்கனுக்கு இடையில் லெப்டோன் இப்போ நிகழ்கின்றது. பிரபஞ்சத்தில் அதிக பட்சமாக காணப்படும் ஹெட்ரோன்களும், இதன்  எதிர்த் துணிக்கையான ஆண்டிஹெட்ரோன்களும் தமக்கிடையே தாக்கமுற்று ஒன்றை இன்னொன்று அழித்த பின்னர் லெப்டோன்கள் உருவாகின்றன. இவை பிரபஞ்சத்தின் அதிக பட்ச நிறையை தமதாக்கி விடும். அடுத்த கட்டமாக லெப்டோன்களும் அண்டிலெப்டோன்களும் தாக்கமுற்று ஒன்றையொன்று அழித்த பின் மிகச்சிறிய லெப்டோன்களே எஞ்சி நிற்கும்.

இக்கட்டத்தின் பின்னர் அதாவது 10 செக்கனுக்கும் 380 000 வருடங்களுக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே மிக நீண்ட தாக்கம் நடைபெறுகிறது. இக் காலப்பகுதி போட்டோன் இப்போ எனப்படுகின்றது. அதாவது துணிக்கை என்று கருதமுடியாத எனினும் துணிக்கையின் இயல்பும்,மின்காந்த அலைகளின் இயல்பும் சேர்ந்த போட்டோன் எனும் நிறையற்ற ஒளிக்கற்றை போன்ற பொருள் அணுக்கருவுடனும் புரோட்டன் மற்றும் எலெக்ட்ரோனுடனும் தாக்கமுற்று பிரபஞ்ச உற்பத்தியை நிகழ்த்துகின்றன.

முதல் 10 செக்கனுக்கு பின்னர் நிகழும் போட்டோன் இப்போவின் போதே பிரபஞ்சத்தின் வெப்ப நிலை நன்கு வீழ்ச்சியடைந்து நியூக்ளி எனப்படும் அணுக்கருக்கள் உற்பத்தியாகின்றன.  பெருவெடிப்பின் 3-20 இடைப்பட்ட நிமிடங்களில் நிகழும் இந்த கருத்தாக்கம், பிரபஞ்ச வெளியில் உள்ள சடப்பொருளின் அடர்த்தி,வெப்பநிலை என்பன மேலும் வீழ்ச்சியடையும் வரை நிகழும். இது 17 நிமிடங்களில் நிறைவுறும். அதன் பின் பிரபஞ்ச வெளியில் ஹீலியம்4 அணுக்களும் அதை விட 3 மடங்கு அதிகமாக ஐதரசன் அணுக்களுமே அதிக பட்சமாக நிரம்பியிருக்கும்.

 

bigbangtimeline2astro4.jpg

 

பிரபஞ்ச தோற்றத்தின் காலகட்டங்கள்:

 

பெருவெடிப்பின் 70 000 வருடங்களுக்குப் பின்னர் அணுக் கருக்களின் அடர்த்தியும்,போட்டோன் கதிரியக்கமும் சமப்படும். இந்நிலையில் ஈர்ப்பு விசை மற்றும் சடப்பொருளின் அழுத்தம் என்பவற்றின் போட்டி காரணமாக நிகழும் மிகச்சிறிய அணுக் கட்டமைப்புக்களின் உற்பத்தி வீழ்ச்சியடையும். இது ஜீன்ஸ் லெந்த் எனப்படுகின்றது. 

அடுத்ததாக பெருவெடிப்பின் 377 000 வருடங்களுக்கு பின்னர் பிரபஞ்சத்தின் அடர்த்தி வீழ்ச்சியடைவதால் ஐதரசன் அணுக்களும் ஹீலியம் அணுக்களும் உருவாகின்றன. மேலும் பிரபஞ்சம் குளிர்வடைந்து எலெக்ரோன்கள் யாவும் கருவுடன் இணைந்து நடுநிலையான அணுக்கள் உண்டாகின்றன.ஆரம்பத்தில் ஐதரசன்,மற்றும் ஹீலியம்4 அணுக்கள் உண்டாக எடுத்த நேரத்தை விட இது வேகமாக நிகழ்வதுடன் மறு இணைப்பு அல்லது ரீகம்பினேசன் எனவும் இது அழைக்கப்படுகின்றது.

அணுக் கருக்கள் நடு நிலையாக்கப் பட்டதால் போட்டோன்கள் சுதந்திரமாக வெளியில் பயணஞ் செய்யும் வாய்ப்பும் உருவாகின்றது. இதனால் சடப்பொருளுக்கும் அலைகளுக்கும் இடையில் இடைவெளி அதிகமாகி பிரபஞ்சம் வெளி,ஊடகம்,பொருள் மற்றும் அலை என்பன இணைந்த ஒன்றாக மாற்றமடைகின்றது.

இன்னும் எஞ்சியிருக்கும் கட்டங்களாக, பிரபஞ்சத்தின் இருண்ட யுகம், கட்டமைப்பின் தோற்றம், மறு அயனாக்கம், நட்சத்திரங்களின் தோற்றம்,அண்டங்களின் தோற்றம்,அண்டங்களின் கூட்டு,கிளஷ்டர்ஸ்,சுப்பர் கிளஷ்டர்ஸ் என்பவற்றின் தோற்றம்,சூரிய குடும்பத்தின் தோற்றம் மற்றும் 13.7 பில்லியன் வருடம் கழித்து இன்றைய நிலை என்பன பற்றி அடுத்த தொடரில் ஆராயப்படும்.

 

http://www.4tamilmedia.com/knowledge/essays/2784-origine-of-universe-star-journey-4

Link to post
Share on other sites

பிரபஞ்சத்தின் தோற்றம் பகுதி 03

 

612px-Hubble_-_infant_galaxy.jpg

Infant Galaxy : ஹபிள் தொலைக்காட்டியால்  எடுக்கப்பட்ட புகைப்படம்

பிரபசஞ்சத்தின் தோற்றம் 3 - இன்றைய நிலை

நம் நட்சத்திர பயணங்கள் தொடரில் பிரபஞ்சத்தின் தோற்றம் தொடர்பாக இரு பகுதிகள் ஏற்கனவே பார்வையிட்டோம். இதில் பிரபஞ்சத்தின் தோற்றம் பெருவெடிப்பு நிகழ்ந்து 1 செக்கனுக்குள் மற்றும் 1 செக்கனுக்கு பின்னர் என இரு பகுதிகளாக அலசினோம். இத்தொடரில் பெருவெடிப்பின் பின்னர் இன்றைய நிலைவரை நிகழ்ந்த மூலக்கூறு ரீதியான மாற்றங்களை பார்ப்போம்.

முதலாவதாக பிரபஞ்சத்தின் அடிப்படைத் துகள்கள் பரிணாமமடைந்து உருவாகும் திணிவுடைய துணிக்கைகள்,பின்புலக் கதிர், மூலக்கூறுகள் என்பன பிரிக்க முடியாது ஒரு கலவையாக காணப்பட்ட காலத்தை எடுத்துக் கொள்வோம். இக் காலப்பகுதியில் என்ன என்றே இணங்கான முடியாத திண்மமாக பிரபஞ்சம் இருந்ததாகவும் இது இருண்ட யுகம் எனவும் வானியல் அறிஞர்கள் கூறுகின்றனர். போட்டோன்கள் அணுக்களுடன் இணைந்து பாய்மமாக காணப்பட்டதால் பிரபஞ்சம் நம் கண்ணால் காணும் ஒளியின்றி இருண்டிருந்தது என்பதே இவர்களின் கூற்று.

பெருவெடிப்பின் 150-800 மில்லியன் ஆண்டுகளில் நிலவிய இக்காலத்தில் போட்டோன்கள் எலெக்ரோன் மற்றும் புரோட்டன்களுடன் இணைந்து
போட்டோன்-பர்யோன் பாய்மமாக சடப்பொருள் திகழ்ந்ததாக கருதப்படுகின்றது. பர்யோனிக் சடம் எனும் இப்பொருள் அயன்களுடன் கூடி உருவாகும் ஐனைசைட் பிளாஸ்மா ரீகம்பினேஸன் நிகழும் போது இலத்திரன்களை கவர்ந்து நடுநிலையாக்கப் பட்ட பின் ஒளியை உண்டாக்கும் போட்டோன்களை வெளிவிடும். பிரபஞ்சத்தை அளவிட உதவும் CMB வரைபடம் இந்த போட்டோன்களாலேயே சாத்தியமாகின்றது.

starjourney5wmap%252520%2525282%252529.j

WMAP

பெருவெடிப்பின் 480 மில்லியன் வருடங்கள் கழிந்த நிலையில் இருண்ட யுகத்தின் பின்னர் உருவானதாக கருதப்படும் சூரியனை விட
பல்லாயிரம் மடங்கு ஒளியுடைய UDFY-38135539 எனும் குவாசர் ஜனவரி 2011 அவதானிக்கப்பட்ட போது 13 பில்லியன் வயது உடையது எனும் செய்தி பகிரப்பட்டது.

இருண்ட யுகத்தின் போது மறுஅயனாக்க காலத்தில் பிரபஞ்சத்தின் சிறிய கட்டமைப்பு முதல் மிகப் பெரிய காலக்ஸிகள்,குவாசர்கள்,
கருந்துளைகள்,நட்சத்திரங்கள்,கிரகங்கள் என்பன உருவாகின்றன. இதற்கு முன்னர் பிரபஞ்சத்தை கணிப்பிட நுண்கணிதத்தின்
காஸ்மொலொஜிக்கல் நேர்கோட்டு தொடர்கள் முறையை பின்பற்றும் பெட்ருபேசன் தியரி மூலம் விளக்கங்கள் பெறப்பட்டது.

அடுத்ததாக மறு அயனாக்க காலத்தை மேலும் அலசுவோம். பெருவெடிப்பின் 150 மில்லியன் தொடக்கம் 1 பில்லியன் இடையிலான இக் காலத்தில் பிரபஞ்சத்தில் அதிக பொருள் பிளாஸ்மா எனும் செறிவு கூடிய திண்மமாக இருந்தது. ஈர்ப்பு விசையின் இடையீட்டு தாக்கங்களால் நட்சத்திரங்களும் அவற்றை விட ஒளியில் செறிந்த குவாசர்களும் இக்காலத்தில் தோன்றுகின்றன. இதன்போது 21cm மட்டுமே விட்டமுடைய கதிர்வீச்சு வெளியில் பரவுகின்றது.

மறு அயனாக்கத்தின் போது பெருவெடிப்பின் போது கூடவே தோன்றிய இலகுவான மூலகங்களான ஐதரசன்,ஹீலியம்,லித்திய ஆகியன அடர்த்தி கூடிய மூலகங்களாக மாறி பிரபஞ்ச தோற்றத்தின் ஆதியில் தோன்றிய முதல் பாப்புலேசன் 3 வகை நட்சத்திரங்கள் தோன்றுகின்றன.

அடுத்த கட்டமாக பிரபஞ்சத்தில் அதிக கூடிய கொள்ளளவை எடுக்கும் சடப் பொருள் தமக்கிடையே மோதலுற்று காலக்ஸிகள் உருவாகின்றன.
இதன்போது பாப்புலேசன் 2 மற்றும் 3 வகை நட்சத்திரங்கள் தோற்றமுறுகின்றன. வானியல் அறிஞர்களால் மிக அதிகளவான அதாவது 12.7 பில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ள CFHQS 1641-3755 எனும் குவாசர் அவதானிக்கப் பட்டுள்ளது. நாம் தற்போது காணும் அதன் தோற்றம் பிரபஞ்சம் உருவாகி இன்றிலிருந்து 7% வீதம் கடந்த பழையது என்பது குறிப்பிடத்தக்கது.

இதைவிட கலிபோர்னியாவில் உள்ள கெக் 2 தொலைகாட்டி மற்றும் ஹபிள் விண் தொலைக்காட்டியும் மிக மிக பழைய அண்டங்களை அதாவது காலக்ஸிகளை இணங்கண்டுள்ளன. இவற்றில் சில பிரபஞ்சம் தோன்றி 500 மில்லியன் வருடங்கள் கழித்து உருவானவை. மேலும் சில பிரபஞ்சம் தோன்றி தற்போதைய நிலையிலிருந்து 5 வீதம் கழித்து உருவானவை. பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி படிக்கும் அணுவரிசை பிரபஞ்சவியல் இன் ஆராய்ச்சி முடிவுகளின் படி நமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வெளி அண்டம் அண்ணளவாக 8.8 பில்லியன் வருடங்கள் பழையது.

பிரபஞ்ச வெளியில் அடர்ந்துள்ள சடப்பொருள், ஈர்ப்பு விசை மற்றும் மூலக்கூற்று ரீதியான கருத்தாக்கங்கள் மூலம் நட்சத்திரங்கள் மற்றும் குவாசர்கள்,காலக்ஸிகளாக மாற்றமடைகின்றது எனப் பார்த்தோம். இவை மேலும் ஈர்ப்புவிசை காரணமாக ஈர்க்கப்பட்டு அண்டங்களின் கூட்டு, மற்றும் விசேட அண்டங்களில் கூட்டு (கிளஸ்டர்ஸ்,சுப்பர் கிளஸ்டர்ஸ்) என்பன தோன்றுகின்றன.

அடுத்த கட்டமாக நமது சூரிய குடும்பத்துக்கு வருவோம். பிக்பாங் நிகழ்ந்து சரியாக 8 பில்லியன் வருடம் கழித்து சூரிய குடும்பம் உருவானதாக வானியலாளர்கள் கூறுகின்றனர். காலங்கடந்த தலைமுறை நட்சத்திரமான நமது சூரியன் அதைப் போன்ற ஏனைய தலைமுறை நட்சத்திரங்களின் சிதைவுகளில் இருந்து 4.56 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றியது.

இறுதியாக பிரஞ்சத்தின் இன்றைய வயது சம்பந்தமாக அலசுவோம். பெருவெடிப்பு நிகழ்ந்ததிலிருந்து இன்று வரை விரிவடையும் வேகம் ஆர்முடுகிக் கொண்டு அதாவது அதிகரித்து கொண்டு வரும் பிரபஞ்சம் அண்ணளவாக 13.75 பில்லியன் வருடங்கள் பழையது ஆகும். இன்று பரிணாமமடைந்து வரும் பிரஞ்சத்தில் தற்போது காணப்படும் மிகப் பெரிய பொருள் சுப்பர்கிளஸ்டர்ஸ் எனும் விசேட அண்டங்களின் கூட்டு ஆகும். தற்போது விரிவடைந்து வரும் பிரபஞ்சம் அக வெளியில் வேறு பொருள் நுழைவதை தடுப்பதுடன் புதிதாக ஈர்ப்பு விசையுடைய பொருட்கள் உண்டாவதையும் நிறுத்துகின்றது. பிரபஞ்சத்தின் தோற்றம் தற்போதைய நிலை பற்றி இதுவரை ஆராய்ந்தோம், அடுத்த தொடரில் பிரபஞ்சம் அழிவடைவது என்ன என்ன விதங்களில் சாத்தியம் என்பதை அலசுவோம்.

தொடரும்

http://www.4tamilmedia.com/knowledge/essays/2906-origine-of-universe-star-journey-5

Link to post
Share on other sites

நன்றி இனைப்பிற்க்கு கோமகன் .

 

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பெருமாள் .

 

Link to post
Share on other sites

பிரபஞ்சத்தின் தோற்றம் (முடிவு)

 

starjourney6pic1.jpg

பிரபஞ்சத்தின் முடிவு

சென்ற தொடரில் பிரபஞ்சத்தின் தோற்றம் இன்றைய நிலை தொடர்பாக பார்த்தோம். இது வரை

பிரபஞசத்தின் தோற்றத்தை அணுக்கள் மற்றும் மூலக்கூறு ரீதியாக ஆராய்ந்தோம். பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு பெரு வெடிப்பு கோட்பாடு பிரதானமாக இருப்பதைப் போன்று இப்படித்தான் அதன் அழிவும் இருக்கும் என நிர்ணயிக்கும் உறுதியான ஒரு கோட்பாடு பிரபஞ்சத்தின் முடிவுக்கு கிடையாது. பிரபஞ்சத்தில் உள்ள சடமும் சக்தியும் ஒன்றுடன் ஒன்று தாக்கமுற்ற வண்ணம் புதிது புதிதாக உருமாறி விரிவடைந்து கொண்டே வரும் நிலையில் அதன் முடிவுக்கும் இவை ஏதோ ஒரு வகையில் நிலை மாற்றமைடைந்து பல எதிர்வு கூறல்களுக்கு வழி சமைக்கின்றன.

இது வரை வானியல் அறிஞர்களால் இணங் காணப்பட்ட பிரபஞ்ச முடிவுக் கோட்பாடுகளை ஒழுங்கு படுத்தினால் அவை இவ்வாறு அமையும் -

1.பாரிய உறைவு - big freeze
2.பாரிய உடைவு - big crunch
3.பாரிய உதறல்  - big rip
4.வெற்றிட அதீத ஸ்திரத்தன்மை - vacum metastability
5.வெப்ப இறப்பு  - heat death

பிரபஞ்சத்தின் அழிவு அதில் செறிந்துள்ள சடப்பொருளின் அடர்த்தி வேறுபாடு குறித்தே அடையாளப் படுத்தப் படுகின்றது. மேலே கூறப்பட்ட அழிவு வகைகளில் ஐன்ஸ்டீன் உட்பட பெரும்பாலான அறிவியலாளர்களால் ஒத்துக் கொள்ளப்பட்டது பாரிய உறைவு எனும் குளிரினால் பிரபஞ்சம் உறைந்து போய் அழிவைச் சந்திக்கும் என்பதே ஆகும்.இவ்வகை அழிவே மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் நிகழக்கூடியது அதாவது இன்றிலிருந்து 10 இன் 14ம் அடுக்கும் அதற்கு பிந்தியதுமான காலம் கழிந்த பின்னர் ஏற்படக் கூடியது. இக்காலப் பகுதியில் நட்சத்திரங்களில் காணப்படும் எரிபொருள் யாவும் எரிந்து தீர்ந்து போய் விடும் எனவும் பிரபஞ்சம் இருளடையும் எனவும் கூறப்படுகின்றது. 10 இன் 34ம் அடுக்கு காலம் வரை இது தொடரும். இதன் பின்னர் ஹாவ்கிங் கதிர்வீச்சு வீதப்படி கருந்துளைகளும் காலக்ஸிகளும் ஆவியாகத் தொடங்கும். இதன் விளைவாக லெப்டோன் மற்றும் போட்டோன் ஆகிய நிறையற்ற துணிக்கைகள் மட்டுமே எஞ்சியுள்ள சடப் பொருளாக பிரபஞ்சத்தில் காணப்படும்.

மேலும் எலெக்ரோன்கள் போட்டோன்களாக நிலை மாறுவதால் கதிர்வீச்சு மிகவும் வீழ்ச்சி அடைந்து சடப் பொருட்கள் யாவும் உறைந்து போகும்.

பாரிய உறைவில் பிரபஞ்சத்தின் பொருள் முழுவதும் சிக்க முன்னரே அதாவது இன்றிலிருந்து 100 பில்லியன் வருடங்களுக்கு பின்னர் பாரிய உடைவு எனும் அழிவை பிரபஞ்சம் எதிர்கொள்ளும் எனக் கூறப்படுகின்றது. இதன் போது ஊசலாடும் பிரபஞ்சம் எனும் பதம் பயன்படுத்தப்படுகின்றது. அதாவது அதிகரிக்கும் வேகத்தில்(ஆர்முடுகலில்) பிரபஞ்சம் விரிவடைய காரணமாக உள்ள டார்க் எனெர்ஜி எனும் கருஞ்சக்தி ஒரு கட்டத்தில் நின்று மறு பக்கம் திரும்பும் எனவும் இதனால் பிரபஞ்சம் சுருங்கி சடப்பொருள் உடைவு ஏற்படும் எனவும் இதன் அடர்த்தி அதிகமாகி வெப்பம் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகின்றது. அவதான ரீதியான இக்கருதுகோளை பல அறிவியலாளர்கள் ஏற்பதில்லை எனவும் பிரபஞ்சம் விரிவடையும் வேகம் அதிகரிக்குக் வகையில் இதன் விரிவு மேலும் தொடரும் எனவும் உறுதியான ஆதாரங்களுடன் பாரிய உடைவு கருதுகோளை அவர்கள் மறுத்து வருகின்றமை குறிப்பிடத் தக்கது.

starjourney6pic2.jpg

அடுத்ததாக பாரிய உதறல் கருதுகோளை நோக்குவோம். இன்றிலிருந்து 20 பில்லியன் வருடங்களுக்குப் பின்னர் இது நிகழும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இதன் போது டார்க் எனெர்ஜி எனும் கரும் சக்தி உக்கிரமடைந்து பேய் சக்தி எனப் பொருள்படும் பாண்டம் எனெர்ஜியாக மாறி பிரபஞ்சத்தில் உள்ள பொருட்கள் ஈர்ப்பு விசையினின்றும் விலகி உதறப் படுகின்றன.

அதாவது காலக்ஸிகள்,நட்சத்திரங்கள்,கிரகங்கள் என்பன ஈர்ப்பு விசையை இழந்து ஒன்றிலிருந்து இன்னொன்று விலகி எறியப்படும். மேலும் எல்லையில்லாமல் இச்சக்தி விரிவடையும் எனக் கூறப்படுகின்றது. இக்கடத்தில் இலத்திரன்கள் அணுக்களை விட்டு விலக்கப்பட்டு ஈர்ப்பு விசை தனியாக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.

starjourney6pic3.jpg

பிக் ரிப் எனப்படும் பாரிய உதறல் நிகழ்வதால் பிரபஞ்சத்தின் அடர்த்தி எல்லையில்லாமல் வீழ்ச்சியடைந்து ஒரு கட்டத்தில் வெற்றிட அதீத ஸ்திரத் தன்மை ஏற்படுகின்றது. இதன் போது பிரபஞ்சம் விரிவடையும் வேகம் ஒளியின் வேகத்துக்கு சமனாகும் எனவும் சடப்பொருட்கள் யாவும் அழிவைச் சந்திக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இறுதியாக வெப்ப இறப்பை நோக்குவோம். இன்றிலிருந்து 10 இன் 150 ஆம் அடுக்கு காலத்தின் பின்னர் நிகழும் என எதிர்பார்க்கப்படும் வெப்ப இறப்பு பிரபஞ்சத்திலுள்ள சடப் பொருள் யாவும் தீர்ந்து வெப்ப இயக்க சக்தி மட்டுமே எஞ்சி நிற்பதாகும். பெரும்பாலான அறிவியலாளர்களால் இறுதியாக நிகழக்கூடிய அழிவு இதுவென எற்கப்படுகின்றது. பௌதிக இயக்க சக்தி யாவும் தீர்ந்து போன இந்நிலையில் வெப்பம் அதிக அளவான என்ட்ரோபி எனும் கட்டத்தை அடைந்து நிற்கும். இந்நிகழ்வு பற்றி வெப்பவியலின் முதன்மையான விஞ்ஞானியான லோர்ட் கெல்வின் என அழைக்கப்படும் வில்லியன் தொம்சன் முதலில் கருத்து உரைத்திருந்தார்.

இதுவரை பிரபஞ்சத்தின் அழிவு நிகழக்கூடிய சாத்தியங்களை அலசினோம். அடுத்த தொடரில் சூரிய குடும்பம் பற்றி ஆராய்வோம்.

தொடரும்

http://www.4tamilmedia.com/knowledge/essays/3071-origine-of-universe-end-star-journey-6

Link to post
Share on other sites

சூரிய குடும்பம் 1

 

நட்சத்திர பயணங்கள் தொடரில் இதுவரை பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி மூலக்கூறு ரீதியாக விரிவாக ஆராய்ந்தோம்.

 

612px-Hubble_-_infant_galaxy.jpg

 

இறுதியாக சென்ற தொடரில் பிரபஞ்சத்தின் முடிவு பற்றி எமது பார்வையை தந்திருந்தோம். இத்தொடரில் நமது பூமி அமைந்திருக்கும் பால்வெளி (Milky way)அண்டத்தின் உள்ளே உள்ள சூரிய குடும்பம் பற்றிய விபரங்களை பகிர்ந்து கொள்வோம்.

 

வட்ட உருளை எனும் (Disk) ஆகவும் உருளை எனப்படும் (sphere) ஆகவும் இரு பரிமாணங்களில் ஆராயப்படும் பால்வெளி அண்டம் 75 000 ஒளி வருடங்கள் நீளமான விட்டம் உடையது. கிட்டத்தட்ட 200 பில்லியன் நட்சத்திரங்களை உள்ளடக்கிய இப் பால்வெளி அண்டம் பிரபஞ்சத்தில் உள்ள ஏனைய அண்டங்களுடன் ஒப்பிடுகையில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தது.

 

மேலும் நமது பால்வெளி அண்டத்தின் மத்தியில் விசேச நிறையுடைய மிகப் பெரிய கருந்துளை ஒன்று காணப்படுவதாகவும் வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர். பிரபஞ்சத்தின் தூசு எனப்படும் அடர்ந்த வாயுப் படலத்தில் இருந்து 4.6 பில்லியன் வருடங்களுக்கு முன்பு நமது சூரிய குடும்பம் தோன்றியது. சில நூறு ஆண்டுகளுக்கு முன் நமது சூரியனே பிரபஞ்சத்தின் மையம் என கருதப்பட்ட போதும் ஹபிள் போன்ற நவீன தொலைகாட்டிகளின் புகைப் படங்கள் மூலம் தெளிவாக்கப் படுவது என்னவென்றால் பால்வெளி அண்டத்தின் மையத்தில் இருந்து அண்ணளவாக 27 200 ஒளிவருடங்கள் தூரத்தில் அதன் கரையிலேயே அமைந்திருக்கிறது என்பதாகும்.

 

milkyway-starjourney7.JPG

 

சூரிய குடும்பத்தில் சூரியனுடன் ஒன்பது கிரகங்கல் காணப்பட்டாலும் அவற்றில் மிகப் பெரியதும் நடுநாயகமானதும் சூரியனே ஆகும். பால்வெளி அண்டத்தைப் போலவே சூரியனும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சாதாரண நட்சத்திரமே ஆகும். சூரியனைப் பற்றிய முக்கியமான அறிவியல் தகவல்கள் பினவருமாறு:

1.பூமியில் இருந்தான தூரம் - 1.00 AU(Astronomical unit) or (1.495979 * 10 இன் வலு 8) Km

2.பூமியில் இருந்து நோக்கும் போது தெரியும் சராசரி கோண விட்டம் - 0.53 பாகை

3.தன்னைத் தானே சுற்ற எடுக்கும் நேரம் - 25.38 நாட்கள்

4.விட்டம் - (6.9599 * 10 இன் வலு 5) Km

5.நிறை - (1.989 * 10 இன் வலு 30) Kg

6.சராசரி அடர்த்தி - 1.409 g/cm3

7.மேற் பரப்பில் தப்பு வேகம் - 617.7 km/S

8.ஓளிச்சக்தி - (3.826 * 10 இன் வலு 26) j/S

9.மேற்பரப்பு வெப்பம் - 5800 K(கெல்வின்)

10.மைய வெப்பம் - (15 * 10 இன் வலு 6) K

11.நட்சத்திர வகை - G2V

12.பார்வைத் திறன் - 4.83

 

sunparts-starjourney7.jpg

 

சூரியனில் அடங்கியுள்ள வாயுக்களின் வீதம் வருமாறு :

 

Hydrogen - 73.46%

Helium - 24.85%

Oxygen - 0.77%

Carbon - 0.29%

Iron - 0.16%

Neon - 0.12%

Nitrogen - 0.09%

Silicon - 0.07%

Magnesium- 0.05%

Sulfur - 0.04%

 

சூரியனைச் சுற்றியுள்ள வெளிப்பகுதி மூன்று படலங்களாக பிரிக்கப் பட்டுள்ளது. அவை வருமாறு:

 

1.போட்டோ ஸ்பியர் (photosphere)

2.குரோமோ ஸ்பியர் (chromosphere)

3..கொரோனா(corona)

 

sun-starjourney7.jpg

 

சூரியனின் கண்ணுக்குத் தெரியும் மேற்பரப்பு photosphere எனப்படுகின்றது. சூரியனை ஒரு டென்னிஸ் பந்தாக கருதினால் அதைச் சுற்றிக் காணப்படும் திசுப் பேப்பரை விட அடர்த்தி குறைந்தது இப்படை என கணிக்கப் பட்டுள்ளது. இதன் தடிப்பம் 500 Km இலும் குறைந்தது ஆகும். மேலும் இதன் வெப்பநிலை 5800 K(கெல்வின்) ஆகும். போட்டோ ஸ்பியருக்கு கீழே காணப்படும் பகுதியில் இருந்து அதிகளவு போட்டோன்கள் (ஒளிக்கதிர்கள்) வெளியான போதும் இதன் வாயுப்படை அதில் பெரும்பகுதியை தடுத்து விடுகின்றது. மேலும் பூமியின் வளி மண்டலத்தின் அடர்த்தியுடன் ஒப்பிடுகையில் போட்டோ ஸ்பியரின் அடர்த்தி 3400 மடங்கு குறைந்தது எனவும் கூறப்படுகின்றது. வருங்காலத்தில் மிக உறுதியான உலோகத்தினால் ஆக்கப்படும் விண்கலமொன்று சூரியனின் இப்படையில் (7 * 10 இன் 4 0ஆம் வலு) Km வரை அதாவது மையத்தை நோக்கி 10 வீதம் வரை உள்ளே செல்ல முடியும் என விஞ்ஞானிகளால் கருதப்படுகின்றது.

அடுத்த படலம் இதற்கு மேலே அமைந்துள்ள குரோமோ ஸ்பியர் ஆகும். இது போட்டோ ஸ்பியரை விட அடர்த்தி குறைந்தது. வெறும் கண்களால் பார்க்க முடியாத ஒளிப் படலமான இது சூரிய கிரகணத்தின் போது மறைக்கப்பட்ட சூரியனின் எல்லை வட்டத்தில் மிகுந்த பிரகாசமாக நாவல் நிற கோட்டை அடுத்து தென்படும். நாவல் என்பது சூரிய ஒளியிலுள்ள சிவப்பு,நீலம்,வயலெட் ஆகியவற்றின் கலவை ஆகும். குரோமோ ஸ்பியர் ஆனது அதன் நிற மாலை காரணமாக வானியலாளர்களால் விரும்பி ஆராயப் படுகின்றமை குறிப்பிடத் தக்கது. நாம் சுவாசிக்கும் வாயுவை விட குரோமோ ஸ்பியர் (10 இன் வலு 8) மடங்கு அடர்த்தி குறைவானது.

 

இறுதியாக கொரோனா(corona) பற்றி நோக்குவோம். சூரியனின் மையத்தில் இருந்து மிகப்பெரிய பரப்பளவுடைய குரோமோ ஸ்பியருக்கு மேலாகவும் உள்ளேயிருந்து படர்ந்துள்ள பகுதி கொரோனா படலம் எனப்படுகின்றது.கிரேக்க நாகரிக மக்களால் கிரவுன் என அழைக்கப்பட்ட ஓளி அலைகளை உள்ளடக்கியுள்ள இப்பகுதி சூரியனில் இருந்து பூமிக்கான தூரத்தின் 10 வீதத்தை உடையது என்பதுடன் 20 சூரிய விட்ட ஆரையைக் கொண்டது. மையத்தில் இருந்து புறப்படும் கொரோனோ இன் ஒளிக்கதிர்களின் சராசரி வெப்ப நிலை 1 மில்லியன் கெல்வின் அதாவது போட்டோ ஸ்பியரை விட பல நூறு மடங்கு அதிகமானது. அதிகளவான இந்த வித்தியாசம் பல விஞ்ஞானிகளை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இது பற்றி மேலும் ஆராய்வதற்காக நாசா விண்வெளி ஆய்வு மையம் SOHO எனப்படும் செய்மதியை ஏவியுள்ளமை குறிப்பிடத் தக்கது. மேலும் இச்செய்மதி சூரியனின் வெளிப்படலமான போட்டோ ஸ்பியர் பற்றி தீவிரமாக ஆராய்ந்து பல தகவல்களை வழங்கி வருகின்றது.

சூரியனில் எவ்வகையான செயற்பாடு நிகழ்கின்றது என்பது குறித்து இப்போது நோக்குவோம். சூரியனில் நிகழும் முக்கிய கருத்தாக்கமானது ஐதரசனின் உட்கரு பிளவுற்று ஹீலியம் அணுக்களாக மாறுவதே ஆகும். எனினும் மேலும் சில தாக்கங்களும் நிகழ்கின்றன என விஞ்ஞானிகள் கருதக் காரணம் சூரியனின் மையப் பகுதியிலிருந்து வெளியாகும் சிறியளவான நியூட்ரினோக்களே ஆகும். சமீபத்தில் சுவிட்சர்லாந்தின் சேர்ன் நகரில் மேற் கொள்ளப்பட்ட கடவுள் துணிக்கை குறித்த ஆராய்ச்சியின் போது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் கண்டு பிடிப்பாக ஓளியை விட நியூட்ரினோக்கள் வேகம் கூடியவை என அறிவிக்கப் பட்டமை குறிப்பிடத் தக்கது.

சூரியனைப் போலவே ஏனைய நட்சத்திரங்களிலும் மேலே அவதானித்த மூன்று படைகளும் காணப்படும் என்ற போதும் கருத்தாக்கங்கள் வித்தியாசப் படலாம் என்பது வானியலாளர்களின் கருத்து. இதுவரை சூரியனைப் பற்றிய மேலோட்டமான சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டோம். எதிர்வரும் தொடரில் கிரகங்களைப் பற்றிப் பார்ப்போம்.

 

தொடரும்

http://www.4tamilmedia.com/knowledge/essays/3326-1

Link to post
Share on other sites

சூரிய குடும்பம் 2 (சந்திரன்)

 

star%2520journey%25208%2520moon.jpg

 

நட்சட்த்திரப் பயணங்கள் தொடரில் இதுவரை பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் அழிவு பற்றி விரிவாக எமது பார்வையைத் தந்திருந்தோம்.

இறுதியாக சென்ற தொடரில் நமது பூமி அமைந்திருக்கும் பால்வெளி அண்டம் மற்றும் அதன் கரையில் அமைந்திருக்கும் சூரிய குடும்பம் பற்றிய விளக்கத்துடன் சூரியனைப் பற்றியும் மூன்று படலங்களாக வகுத்து ஆராய்ந்திருந்தோம். சூரிய குடும்பம் 2 எனும் இத்தொடரில் வானில் சூரியனுக்கு அடுத்து ஓளி கூடிய பொருளாகத் தென்படும் பூமியின் உபகோளான சந்திரனைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.

பூமியின் ஒரே ஒரு துணைக் கோளான சந்திரன் சூரிய குடும்பத்தில் ஐந்தாவது மிகப் பெரிய துணைக் கோளாகும். இது சூரியனில் இருந்து மிக அதிக தொலைவிலுள்ள ஒன்பதாவது கிரகமான புளூட்டோவை விட பெரியது என்பது குறிப்பிடத் தக்கது. சூரிய குடும்பத்தின் ஏனைய கிரகங்களை விட பூமிக்கு மிக அருகில் சந்திரன் உள்ளது. இதனால் தான் விண்ணில் மனிதனின் காலடி பட்ட ஒரே இடமாக சந்திரன் விளங்குகின்றது எனலாம். மேலும் விண்வெளி ஆராய்ச்சி செய்து வரும் உலகின் பல வல்லரசு நாடுகள் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக பல செய்மதிகளை ஏவி சந்திரனைப் பற்றி ஆராய்ந்துள்ளன. சற்று முன்னே பார்த்தால் 1957 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் பூமி மற்றும் சந்திரனை மையமாகக் கொண்ட விண்வெளிப் போட்டி தொடங்கியது.

இவ்வாண்டில் ரஷ்யா, விண்வெளியில் வலம் வந்த முதலாவது செய்மதியான ஸ்புட்னிக் ஐ அனுப்பி பூமி மற்றும் விண்வெளி பற்றிய மனிதனின் தேடலுக்கு வித்திட்டது. இதன் பின்னர் சந்திரனை நோக்கி ஆளில்லா விண்கலங்களையும் 1958ம் ஆண்டு விண்ணுக்குச் சென்ற முதலாவது உயிரினமாக லைகா எனும் நாயையும் ரஷ்யா விண்ணுக்கு அனுப்பி விண்வெளி ஓட்டத்தில் முன்னிலை வகித்தது.

starjourney%25208%2520laika.jpg

 

மேலும் ரஷ்ய விண்வெளி வீரர் யூரி ககாரின் 1961ம் ஆண்டு விண்ணுக்குச் சென்ற முதலாவது மனிதராகவும் பின்னர் 1963 இல் ரஷ்ய வீராங்கணை வலென்டினா விலாடிமிரோவ்னா டெரெஷ்கோவா விண்ணுக்குச்ச் சென்ற முதலாவது வீராங்கணையாகவும் புகழ் பெற்றனர்.

starjourney%25208%2520yurigagarin.jpg

பதிலடியாக அமெரிக்கா ரஷ்யாவுக்கு இணையாக 1960 ஆம் ஆண்டு முதல் சந்திரனை நோக்கிய தனது ஆளில்லா விண்கலங்களை செலுத்தி வந்தது. இதன் பின்னர் விண்வெளி ஆய்வின் முக்கிய மைல்கல்லாக விளங்கும் சாதனையை அமெரிக்கா நிகழ்த்தியது. அதாவது 1969 ஆம் ஆன்டு ஜூலை மாதம் அமெரிக்காவின் விண்வெளி வீரர்கள் மூவர் பயணித்த அப்பொலோ 11 விண்கலம் சந்திரனில் தரை இறங்கியதுடன் இவ்வீரர்களில் இருவர் நீல் ஆம்ஸ்ட்ரோங் மற்றும் எட்வின் அல்ட்ரின் ஆகியோர் சந்திரனில் கால் பதித்து நடமாடினர். இதைத் தொடர்ந்து 1969 முதல் 1972 வரை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வகம் சந்திரனை நோக்கி 6 தடவை அப்பொலோ விண்கலங்களைச் செலுத்தி சந்திரனைத் தீவிரமாக ஆராய்ந்தது. இதன் போது மொத்தமாக 12 விண்வெளி வீரர்கள் சந்திரத் தரையில் தரையிறங்கி அதன் மேற்பரப்பில் அவதானங்களை மேற்கொண்டு புகைப்படங்கள் எடுத்ததுடன் விஞ்ஞான உபகரணங்களைப் பயன்படுத்தி 382 கிலோ எடையுடைய கற்கள் மற்றும் மண்ணையும் சேகரித்து வந்தனர்.

இனி சந்திரனின் இயல்புகள் குறித்த சுருக்கமான தகவல்களைப் பார்ப்போம் -

1.உபகோளின் பருமன் நிலை - சூரிய குடும்பத்தில் 5 ஆவது மிகப் பெரிய துணைக் கோள்
2.சந்திரனின் சராசரி விட்டம் - 1737.10 Km
3.துருவ விட்டம் - 1735.7 Km
4.கிடை விட்டம் - 1738.14 Km
5.மேற்பரப்பின் பரப்பளவு - (3.793 * 10 இன் வலு 7) Km2
6.கனவளவு - (2.1958 * 10 இன் வலு 10) Km3
7.நிறை - (7.3477 * 10 இன் வலு 22) Kg
8.சராசரி அடர்த்தி - 3.3464 g/cm3
9.கிடை அச்சில் மேற்பரப்பு ஈர்ப்பு விசை - 1.622 m/s2
10.தப்பு வேகம் - 2.38 Km/s
11.கிடை அச்சில் சுழற்சி வேகம் - 4.627 M/s
12.பூமியை ஒரு தடவை சுற்றி வர எடுக்கும் நேரம் - 27.321582 நாட்கள்
13.சராசரி சுற்றுப் பாதை வேகம் - 1.022 Km/s
14.மேற்பரப்பு அழுத்தம் - (10 இன் -7 ஆம் அடுக்கு) Pa(பாஸ்கல்)
15. பூமிக்கும் நிலவுக்குமான சராசரித் தூரம் - 384,403 Km

கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குச் சமான சந்திர மாதம் 28 நாட்களை உள்ளடக்கியது. சந்திரனில் சூரிய ஒளி பட்டுத் தெறிக்கும் பகுதி சாய்வாக ஒரு நாளைக்கு ஒரு தடவை வீதம் வேறுபடுவதால் அதில் கலைகள் உண்டாகின்றன். சந்திரன் பூமியைச் சுற்றி வருவதே இதற்குக் காரணமாகும். இதன் விளைவாக முதல் 14 நாட்கள் அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை வளரும் கலையாகவும் (வளர்பிறை) இறுதி 14 நாட்கள் பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரை தேயும் கலையாகவும் (தேய்பிறை) சந்திரன் தென்படுகின்றது.

star%2520journey%25208%2520moon%2520phas

மேலும் சந்திரனின் மேற் பரப்பை சாதாரண விண்வெளித் தொலைகாட்டி மூலம் ஒளி பெருக்கி அவதானித்தாலே அதில் பாரிய குழிகள் காணப்படுவதை அடையாளங் காணலாம். இக்குழிகளே வெறுங் கண்ணால் முழு நிலவை அவதானிக்கும் போது கறைகளாக தென்படுவன.

4.6 தொடக்கம் 3.9 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் சந்திரத் தரையில் வீழ்ந்த லட்சக் கணக்கான விண் கற்களாலேயே இக்குழிகள் ஏற்பட்டுள்ளன. மேலும் சந்திரனில் வளி மண்டலம் இல்லாத காரணத்தாலும் பூமியை விட ஆறில் ஒரு பங்கு ஈர்ப்பு சக்தியே உடையதாலும் இக்குழிகள் சேதமடையாமல் இலட்சக் கணக்கான ஆண்டுகளாக அப்படியே இருக்கின்றன. இன்னும் சில விஞ்ஞானிகள் சந்திரன் தோன்றிய புதிதில் அதில் உயிருடன் காணப்பட்ட பல எரிமலைகளின் செயற்பாடு காரணமாக இக் குழிகள் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதுகின்றனர். இவர்களின் கூற்றுப் படி சந்திரன் தோன்றிய புதிதில் 4.45 பில்லியன் வருடங்களுக்கு முதலில் மிகப்பெரிய பரப்பளவுடைய எரிமலைக் குழம்புக் கடல் (magma) சந்திர மேற்பரப்பில் காணப்பட்டது என்பதாகும்.

star%2520journey%25208%2520moon%2520surf

சூரிய குடும்பம் தோன்றி 30-50 மில்லியன் வருடங்களுக்குப் பின்னர் அதாவது 4.527 பில்லியன் வருடங்களுக்குப் பின்னர் பூமியின் மேற்பரப்பில் இருந்து பிரிந்து சென்ற பகுதியே நிலவு எனக் கருதப்படுகின்றது. சூரிய குடும்பம் தோன்றிய புதிதில் ஈர்ப்பு விசை ஒழுங்குக்கு உட்படாத காரணத்தால் பூமியுடனும் ஏனைய கிரகங்களுடனும் மிக அதிகளவில் விண்கற்கள் மற்றும் வால்வெள்ளிகள் மோதி வந்தன. கிட்டத்தட்ட செவ்வாய்க் கிரகத்தின் பருமனுக்கு ஒப்பான விண் பொருள் ஒன்று பூமியுடன் மோதியதால் பிளவுற்ற பாகமே சந்திரன் என்பதே பெருமளவில் வானியலாளர்களால் ஒத்துக் கொள்ளப்பட்ட கருத்து. மேலும் பூமியில் மிகப் பெரிய பரப்பளவுடைய தரைப் பகுதியான பசுபிக் சமுத்திரம் உருவானதற்கும் பூமியிலிருந்து பிரிந்து போன சந்திரனே காரணம் எனவும் ஒரு சாரார் நம்புகின்றனர்.

பூரண சந்திரன் ஒளிரும் போது பூமியில் tidal waves எனப்படும் கடலலைகள் மேலே எழும்பி கொந்தளிப்பாக காணப்படுவதற்கும் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் உடலில் பாலுணர்வு மேலோங்கி காணப்படுவதற்கும் மக்களின் மனநிலை பாதிப்புற்று காணப்படுவதற்கும் சந்திரனின் ஈர்ப்பு சக்தி காரணமாகின்றது என உளவியலாளர்களும் புவியியலாளர்களும் கருதுகின்றனர்.

சமீப காலத்தில் சந்திரனைக் குறித்த ஆய்வுகள் அதில் தண்ணீர் உள்ளதா உயிர் வாழ்க்கைக்கு உகந்த சூழல் காணப்படுகின்றதா மேலும் அதன் பூமிக்கு புலப்படாத மறு பக்கத்தில் என்ன மர்மங்கள் உள்ளன ஆகிய ஆய்வுகள் குறித்த விரிவான ஆய்வுகள் அமெரிக்காவைத் தவிர ஐரோப்பா,சீனா,ரஷ்யா,ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளாலும் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

இதிலும் குறிப்பாக நட்சத்திரங்களைப் பற்றி விரிவாக ஆராய்வதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டிருந்த 2020 ஆம் ஆண்டுக்கான சந்திர பயணம் தவிர்க்க முடியாத காரணங்களால் 2010 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவால் இடை நிறுத்தப் பட்டமை குறிப்பிடத் தக்கது. இதே கட்டத்தில் இன்னொரு பக்கம் சீனாவும் ஜப்பானும் இணைந்து 2015 தொடக்கம் 2035 வரையிலான காலப் பகுதியில் சந்திரனில் வீரர்கள் தங்கி திறம்பட விண்ணாய்வுகளை மேற்கொள்ள வசதியாக விண் பாசறை அமைக்க திட்டமிட்டுள்ளன என்பதும் முக்கியமான தகவலாகும்.

சந்திரன் மீது சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்த சுருக்கமான விபரங்களைஇங்கு காண்க.

(நன்றி விக்கிபீடியா)

http://www.4tamilmedia.com/knowledge/essays/3494-moon-star-journey-8

Link to post
Share on other sites

சூரிய குடும்பம் 3 (பூமி)

 

star%2520journey%25209%2520green%2520hou

 

நட்சத்திரப் பயணங்கள் என்ற எமது பிரபஞ்சம் பற்றிய அறிவியல் தொடரில் தற்போது சூரிய குடும்பம் பற்றி ஆராய்ந்து வருகிறோம். சென்ற தொடரில் எமது பூமியின் உபகோளான சந்திரன் பற்றி பார்த்தோம்.

இத்தொடரினைப் படித்து வாசகர் ஒருவர் பூமியின் சுழற்சியைக் கொண்டு எவ்வாறு நேரம் மற்றும் மாதங்கள் கணிக்கப் படுகின்றன எனும் வினாவினை எழுப்பியிருந்தார். இத் தொடரில் அதற்கான விடையையும் பூமி பற்றிய தகவல்களையும் பகிர்ந்து கொள்வோம்.

star%2520journey%25209%2520earth.jpg

சூரியனிடமிருந்து 3 வது இடத்தில் அமைந்துள்ள கிரகமான பூமி பிரபஞ்சத்தில் உள்ள நன்கு அறியப்பட்ட உயிர் வாழ்க்கைக்கு உகந்த ஒரே கிரகமாக விளங்குகிறது எனலாம். சூரியனைச் சுற்றி அமைந்துள்ள நிலப்பரப்பை உடைய நான்கு கிரகங்களிலும் (Terrestrial Planets) மிகப் பெரியதான பூமி, ஏனைய எல்லா கிரகங்களிலும் மிகவும் அடர்த்தி கூடியதுடன் ஐந்தாவது மிகப் பெரிய கிரகமாகவும் விளங்குகின்றது. சூரிய குடும்பம் தோன்றக் காரணமாக அமைந்த சோலார் நெபுலா எனும் அடர்ந்த வாயுப் படலத்திலிருந்து இயற்கையான திரள் வளர்ச்சி (acccretion) மூலம் சூரியனுடன் சேர்ந்து 4.54 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் நம் பூமி தோன்றியது. எனினும் நம் பூமியில் உயிர் வாழ்க்கை தொடங்கி 1 பில்லியன் வருடங்களே ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பூமியின் தரைப் பரப்பை பெருமளவில் ஆக்கிரமித்துள்ள சமுத்திரங்களின் காரணமாக விண்வெளியிலிருந்து பார்க்கும் போது அழகிய நீல நிறமாகத் தென்படுவதால் 'புளூ பிளானெட்' என பூமி அழைக்கப் படுகின்றது. புவி மேற்பரப்பில் 70.8% வீதம் தண்ணீரால் மூடப்பட்டுள்ளது. மேலும் பூமியின் மேற்பரப்பில் காணப்படும் மூலகங்களின் அளவை ஒப்பிடும் போது சிலிக்கன் மிக அதிகமாக 60.2% வீதமும், அலுமினியம் 15.2% வீதமும் நீர் 1.4% வீதமும் கார்பனீரொட்சைட் 1.2% வீதமும் காணப் படுகின்றன.

star%2520journey%25209%2520seasons.jpg

பூமியின் திணிவு (5.98 * 10 இன் வலு 24) Kg ஆகும். பூமியின் மொத்தத் திணிவில் அதிக பட்சமாக இரும்பும் (32.1%), அதையடுத்து ஆக்ஸிஜெனும் (30.1%) தொடர்ந்து சிலிக்கனும் (15.1%) காணப்படுகின்றன. நாம் வாழும் பூமி இன்னமும் 500 மில்லியன் தொடக்கம் 2.3 பில்லியன் வருடங்களுக்கு உயிர் வாழ்க்கைக்கு உகந்ததாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இனி பூமி பற்றி சுருக்கமான விபரங்களைப் பார்ப்போம் -

1.பூமி தன்னைத் தானே ஒரு முறை சுழல எடுக்கும் காலம் - 0.99 நாள் அல்லது 23 மணி 56 நிமிடம் 4 செக்கன்
2.சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் - 365.256366 நாட்கள் அல்லது 1.0000175 வருடம்
3.சூரியனைச் சுற்றி பயணிக்கும் வேகம் - 29.783 Km/s
4.பூமியின் சராசரி ஆரை - 6371 Km
5..துருவ ஆரை - 6356.8 Km
6.சுற்றளவு (கிடை அச்சில்) - 40 075.02 Km
7.நீள் கோள மேற்பரப்பளவு - 510 072 000 Km2
8.கனவளவு - 1.0832073 * 10 இன் வலு 12 Km3
9.நிறை - 5.9736 * 10 இன் வலு 24 Kg
10.சராசரி அடர்த்தி - 5.5153 g/cm3
11.மையத்திலிருந்து ஈர்ப்பு விசை - 9.780327 m/s2 அல்லது 0.99732 g
12.தப்பு வேகம் - 11.186 Km/s
13.சாய் கோணம் - 23.439281 பாகை
14.எதிரொளி திறன் - 0.367
15.மேற்பரப்பு வெப்பம் - 184 K(குறைந்த), 287 K (மத்திய), 331 K (அதிக பட்ச)
16.வளிமண்டலத்தில் மேற்பரப்பு அழுத்தம் - 101.3 Pa
17. துணைக் கோள் - 1 (சந்திரன்)

பூமியானது தன் அச்சில் சுழலும் மற்றும் சூரியனையும் சுற்றி வரும் தன்மைகளைக் கொண்டு காலம் கணிக்கப் படுகின்றது. பூமி தன்னைத் தானே ஒரு முறை சுற்ற எடுக்கும் நேரம் சராசரியாக 24 மணித்தியாலங்கள் அல்லது ஒரு நாளாகவும் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுக்கும் காலம் 365 1/4 நாட்கள் அல்லது ஒரு வருடமாகவும் கணிக்கப் படுகின்றது. இதில் சூரியனை சுற்றி வர எடுக்கும் காலத்தில் ஒரு நாளின் கால் பங்கை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கணிப்பிட்டு நான்காவது ஆண்டில் பெப்ரவரி மாதம் 29ம் திகதியாக சேர்க்கப்படுகின்றது. இதனையே நாம் லீப் வருடம் என்கிறோம். பண்டைய காலத்தில் சந்திரனின் பிறைகளை அடிப்படையாகக் கொண்டு மாதங்கள் கணிப்பிடப்பட்ட போதும் தற்போது அந் நடை முறை பின்பற்றப் படுவதில்லை. ஓரு மாதத்துக்கு மிக அண்மையாக அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை வளர்பிறை 14 நாட்களும் பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரை தேய்பிறை 14 நாட்களும் மொத்தமாக 28 நாட்களே சந்திர மாதத்தில் வருவது குறிப்பிடத்தக்கது. எனினும் சராசரியாக சந்திரன் ஒருமுறை பூமியைச் சுற்றி சூரியனையும் சுற்றி வரும் வீதத்துடன் ஒப்பிடுகையில் முதல் பௌர்ணமியிலிருந்து அடுத்த பௌர்ணமி வரை 29.53 சராசரியாக 30 நாட்கள் எடுப்பதாக வானியலாளர்கள் கணித்துள்ளனர். இது சைனோடிக் மாதம் எனப்படுகின்றது. 

பூமியின் அச்சு சுழற்சி அதன் கோளப் பாதையிலிருந்து 23.4 பாகை செங்குத்தாக விலகி சாய்ந்திருப்பதால் பருவ நிலை வேறுபாடுகள் ஏற்படுகின்றன. பூமியின் மேற்பரப்பில் விழும் சூரிய ஒளியின் அளவு வெவ்வேறு இடங்களில் படுவதே இதற்குக் காரணமாகும். வட துருவம் சூரியனை நோக்கி உள்ள போது வடவரைக் கோளத்தில் கோடை காலமும் சூரியனை விட்டு விலகி உள்ள போது குளிர் காலமும் ஏற்படுகின்றது. இதே போன்றே தென் துருவத்திலும் எதிரிடையாக காலநிலை வேறுபாடுகள் ஏற்படுகின்றன. துருவப்பகுதிகளின் உச்சியில் குறிப்பிட்ட சில பகுதிகளில் வருடத்தின் ஆறு மாதம் பகல் மற்றும் ஆறு மாதம் இரவு என பருவங்கள் நிகழ்கின்றன. புவியின் சாய்வு காரணமாக சிறிது ஒழுங்கற்ற இயக்கம் நிகழ்வதாக வானியலாளர்கள் கருதுகின்றனர். பூமி மற்றும் சந்திரனின் ஈர்ப்பு காரணமாக துருவ நகர்வுகள் நிகழ்கின்றன. இது சாண்ட்லேர் தள்ளாட்டம் எனப் படுகின்றது. மேலும் சூரியன் பூமிக்கிடையிலான தூரமும் மிகச்சிறியளவில் அதிகமாகிக் கொண்டு வருவதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.

star%2520journey%25209%2520seasons%25202

பூமியின் தரையியல்பைப் பார்ப்போம். பூமியில் மிக உயர்ந்த இடமாக வட இந்தியாவின் இமய மலைத் தொடரில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரமும் (8048 m) மிகத் தாழ்ந்த இடமாக பசுபிக் பெருங்கடலிலுள்ள மரியானா ஆழியும் (10 911.4 m or 11 Km) காணப்படுகின்றன. பூமியில் உள்ள நிலப் பரப்பு 7 கண்டங்களாகவும் 5 சமுத்திரங்களாகவும் வகுக்கப் பட்டுள்ளது. சமுத்திரங்களில் அடங்கியுள்ள நீரில் 97.5% வீதம் உப்பு நீராகவும் 2.5% வீதம் தூய நீராகவும் தூய நீரில் 68.7% வீதம் பனிக்கடிகளாகவும் காணப்படுகின்றன.

starjourney9everest.jpg

பூமியின் வளி மண்டலத்தை எடுத்துக் கொள்வோம். வளி மண்டலத்தின் மேற்பகுதி ஓசோன் படலத்தால் சூழப் பட்டிருப்பதால் பிரபஞ்ச பின்புலக் கதிர்கள் மற்றும் சூரியனிடமிருந்து வரும் அல்ட்ரா வயலெட் எனப் படும் புற ஊதாக் கதிர்கள் தடுக்கப் படுகின்றன. இதனால் உயிர் வாழ்க்கைக்கு உகந்த சூழல் பூமியில் நிகழ ஏதுவாகின்றது. புவி மேற் பரப்பில் சராசரி வளி மண்டல அழுத்தம் 8.5 Km வரை 101.325 Kpa ஆகக் காணப்படுகின்றது. பூமியில் தாவர வளர்ச்சிக்கு ஏதுவான சூரிய ஒளி மூலம் நிகழும் பச்சை வீடு விளைவு எனும் ஒளிப்பெருக்கம் 2.7 பில்லியம் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. தற்போது வளி மண்டலத்தில் காணப்படும் வாயுக்களின் வீதத்தைப் பார்த்தால் அதிகளவாக நைட்ரஜன் 78% வீதமும் ஆக்ஸிஜன் 21% வீதமும் மிகச்சிறியளவில் நீராவி மற்றும் காபனீரொட்சைட்டு வாயுக்களும் காணப்படுகின்றன.

star%2520journey%25209%2520green%2520hou

இதுவரை பூமி பற்றிய பௌதிக மற்றும் விண்ணியல் தகவல்களைச் சுருக்கமாகப் பார்த்தோம். அடுத்த  தொடரில் சூரியனுக்கு மிக அண்மையிலுள்ள கிரகமான புதனைப் பற்றிய விபரங்களைப் பார்ப்போம்.

 

http://www.4tamilmedia.com/knowledge/essays/3705-star-journey-09-earth

Link to post
Share on other sites

சூரிய குடும்பம் 4 (புதன்)

 

Mariner%252010%2520probe%2520star%2520jo

 

நட்சத்திரப் பயணங்கள் எனும் நம் அறிவியற் தொடரில் தற்போது சூரிய குடும்பம் பற்றி ஆராய்ந்து வருகிறோம். இன்றைய தொடரில் சூரியனுக்கு மிக அண்மையிலுள்ள கோளான புதனைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம். சூரிய குடும்பத்தில் புளூட்டோவை கிரகமாக ஏற்றுக் கொள்ளாவிட்டால் புதனே மிகச் சிறிய கோளாகும். புதன் சூரியனைச் சுற்றிச் மிக ஒடுக்கமான நீள் வட்டப் பாதையினூடாகச் சுற்றி வருகின்றது. பூமியைப் போலன்றி புதனுக்கு துணைக் கோள்கள் கிடையாது. எனினும் பூமியின் சந்திரனை ஒத்த இயல்புகள் புதனிலும் காணப்படுகின்றன. சந்திரனைப் போலவே புதனுக்கும் வளி மண்டலம் கிடையாது. மேலும் புதனின் தரை மேற்பரப்பில் சந்திரனைப் போலவே பாரிய குழிகள் காணப்படுகின்றன. மேலும் புதனின் உட்பகுதியில் பெருமளவு இரும்பு மூலகம் காணப்படுகின்றது.

 

mercury%2520backround%2520sun%2520star%2

 

புதன் கிரகமே சூரிய குடும்பத்தில் சூரியனை மிக வேகமாக சுற்றி வரும் கிரகமாகும். இதன் காரணமாகவே ரோமானியர்களின் வேகத்துக்குரிய கடவுளான மெர்கியூரி இன் பெயர் இதற்குச் சூட்டப்பட்டது. சூரியனுடன் ஒப்பிடுகையில் மிகச் சிறிய புள்ளியாகக் தென்படும் புதனுக்கு ஈர்ப்பு விசை மிகக்குறைவு. இதனால் வளி மண்டலத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் இயல்பு இதற்கில்லை. மேலும் இது சூரியனைச் சுற்றி சுற்று வட்டப் பாதையில் 50 Km/s வேகத்தில் மிகத் துரிதமாகப் பயணித்த போதும் தன்னைத் தானே சுற்றும் வேகம் மிகக் குறைவு. இந்த வேகத்தில் இது சூரியனைச் சுற்றி வர 87.969 புவி நாட்களை எடுக்கின்றது. புதன் தன்னைத் தானே ஒரு முறை சுற்ற 59 புவி நாட்களை எடுக்கிறது. இது பூமியை விட 59 மடங்கு அதிகமாகும்.

 

mercury%2520star%2520journey%252010.jpg 

 

புதன் சூரியனை இரு முறை சுற்றி வர எடுக்கும் நேரத்தில் தன்னைத் தானே மூன்று முறை சுற்றிக் கொள்கின்றது. இதனால் ஒரு பகல் பொழுது கழிய அதாவது புதனில் ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு திரும்பவும் சூரியன் வர 176 புவி நாட்களை எடுக்கின்றது. இது அதன் ஒரு பகல் பொழுது அதன் ஒரு வருடத்தின் இரு மடங்காக இருப்பதற்குக் காரணமாகின்றது.

 

பூமியிலிருந்து நோக்கும் போது வானத்தில் புதனைக் காண்பது மிக அரிதான ஒன்றாகும். சிலவேளைகளில் நள்ளிரவு பகுதிகளில் வானத்தில் புதன் தென்படும். சூரியனுக்கு மிக அண்மையில் புதன் இருப்பதால் அதன் பிரகாசம் புதனை மங்கச் செய்து விடுகின்றது. மேலும் மற்றைய கிரகங்களை விட ஒரு புறத்தில் (பகல்) மிக அதிக சூடும் மறு புறத்தில் (இரவு) மிக அதிக குளிரும் காணப்படும் கிரகமாகப் புதன் விளங்குகின்றது. அதாவது புதனில் சூரியனை நோக்கிய பகுதியில் வெப்பநிலை 800 பாகை பரனைட்டும் எதிர்ப்புறத்தில் -(மைனஸ்) 300 பாகை பரனைட்டும் ஆகக் காணப்படுகின்றது.

 

புதனைப் பற்றிய சுருக்கமான தகவல்களை இப்போது பார்ப்போம் -

 

1.சூரியனிலிருந்து சராசரி தூரம் - 0.387 AU

2.சூரியனைச் சுற்றி வர எடுக்கும் காலம் -- 87.969 புவி நாட்கள்

3.பூமி சார்பாக சுற்றுக் காலம் - 87 நாட்கள் 23.3 மணி

4.சராசரி சுற்று வேகம் - 47.8725 Km/S

5.சாய்வு - 7.004 பாகை

6.விட்டம் - 4879.4 Km

7.மேற்பரப்பளவு - 7.5 * 10 இன் வலு 7 Km2

8.திணிவு - 3.302 * 10 இன் வலு 23 Kg

9.அடர்த்தி - 5.427 g/cm3

10.மேற்பரப்பு ஈர்ப்பு விசை - 2.78 M/S2

11.தன்னைத் தானே சுழல எடுக்கும் காலம் - 58 நாள் 15.5088 மணி

12.தப்பு வேகம் - 4.25 Km/s

13.பகலில் சராசரி மேற்பரப்பு வெப்ப நிலை - 623 K

14.இரவில் சராசரி மேற்பரப்பு வெப்ப நிலை - 103 K

புதனின் சூழலில் காணப்படும் மூலகங்களின் சதவீதம் -

பொட்டாசியம் - 31.7%

சோடியம் - 24.9%

ஒட்சிசன் அணு - 9.5%

ஆர்கன் - 7%

ஹீலியம் - 5.9%

ஒட்சிசன் மூலக்கூறு 5.6%

நைதரசன் - 5.2%

காபனீரொட்சைட்டு - 3.6%

நீர் - 3.4%

ஐதரசன் - 3.2%

 

புதனானது மிக வளைந்த நீள் வட்டப் பாதையை உடைய கோளாகும். சூரியனுக்கு மிக அருகில் 47 மில்லியன் கிலோ மீற்றர் தூரம் வரையும் சூரியனுக்குச் சேய்மையில் 70 மில்லியன் கிலோ மிற்றரும் இது சுற்று வட்டப் பாதையில் வருகின்றது. மேலும் கடினமான பாறைகளுடன் கூடிய இதன் தரை மேற்பரப்பில் சூரிய குடும்பம் தோன்றிய புதிதிலிருந்து இலட்சக் கணக்கான விண் கற்களும் வால் வெள்ளிகளும் மோதி வருவதால் மிக அதிகமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாரிய குழிகள் இதன் மேற்பரப்பில் காணப்படுகின்றன. சூரியனுக்கு மிக அண்மையில் இருப்பதால் புதனைப் பற்றி மிகக் குறைவாகவே ஆராயப்பட்டு வந்துள்ளது எனலாம்.

 

1974-1975 வருடங்களில் புதனின் மேற்பரப்பைப் படம் பிடிப்பதற்காக மாரினர் 10 எனும் செய்மதியும் சமீபத்தில் 2008 ஆம் ஆண்டு ஜனவரியில் ஏவப்பட்ட மெசெஞ்சர் செய்மதியும் புதனை ஆராய்ந்தன. இதில் 2009 இல் புதனை நெருங்கிய மெசெஞ்சர் 2011 மார்ச் 18 இல் புதனின் சுற்று வட்டப் பாதைக்குள் புகுந்து அதன் செயற்கைக் கோளாய் மாறி இன்று வரை புகைப் படங்களையும் தகவல்களையும் அனுப்பி வருகின்றமை குறிப்பிடத் தக்கது.

 

mercury%2520surface%2520star%2520journey

 

இது வரை புதன் கிரகம் பற்றிய சுருக்கமான தகவல்களைப் பார்த்தோம். அடுத்த தொடரில் சூரிய குடும்பம் பற்றிய பகுதியில் காதலர்களின் கிரகமான வெள்ளி பற்றிய தகவல்களை பார்ப்போம்.

http://www.4tamilmedia.com/knowledge/essays/3888-star-journey

Link to post
Share on other sites

சூரிய குடும்பம் 5 (வெள்ளி)

 

Star%2520Journey%252011%2520venus%2520an

இதுவரை சூரிய குடும்பத்தில் சூரியன்,பூமியின் துணைக்கோள் சந்திரன் மற்றும் தரை மேற்பரப்பை உடைய கிரகங்களான பூமி, புதன் ஆகிய அங்கத்தவர்களைப் பற்றிப் பார்த்தோம். இன்றைய தொடரில் வானில் சந்திரனுக்கு அடுத்து பிரகாசமாக அதிகாலை மற்றும் அந்தி மாலை ஆகிய இரு வேளைகளிலும் ஒரு நட்சத்திரம் போல் தென்படும் வீனஸ் எனப்படும் வெள்ளியைப் பற்றி பார்ப்போம். பொதுப்படையாக வீனஸ் என்பது ரோமானியார்களின் அன்பு,காதல் மற்றும் அழகுக்கான பெண் தெய்வத்தின் பெயராகும்.

Star%2520Journey%252011%2520venus%2520by

 - ஹபிள் தொலைக் காட்டியால் படம் பிடிக்கப் பட்டுள்ள வெள்ளியின் ஒரு பகுதி

வெள்ளிக் கிரகத்தின் இன்னொரு பெயரான சுக்கிரன் என்பது இந்து சமயத்தில் நவக்கிரகங்களில் அதிர்ஷ்டத்துக்கு அதிபதியாகவும் அசுர குருவாகவும் விளங்கும் கோள் அல்லது தேவராகும். இன்னொரு விதத்தில் வெள்ளியில் காணப்படும் வரண்ட பள்ளத்தாக்குகளாலும் பல உயிருள்ள எரிமலைகளாலும் அது நரகம் அல்லது அசுரர்களின் நிலம் என ஒரு சாராரால் அழைக்கப்படுகின்றது.

வெள்ளி பருமனிலும் இன்னும் சில அம்சங்களிலும் பூமிக்கு சராசரியாக சமனாக இருப்பதால் பூமியின் தங்கைக் கிரகம் என அழைக்கப்படுகின்றது. சூரியனிலிருந்து புதனுக்கு அடுத்து 2வது இடத்தில் இது அமைந்துள்ளது. சூரிய குடும்பத்தின் பெரும்பாலான கிரகங்களைப் போலன்றி வெள்ளி வலமிருந்து இடமாகவே எதிர்ப்பக்கமாக தனது அச்சில் சுழலுகின்றது. வெள்ளிக் கிரகமே தனது சுற்று வட்டப் பாதையில் பூமிக்கு மிக அண்மையில் வந்து செல்லும் கிரகமாகும். இது சூரியனிடமிருந்து சராசரியாக 108 200 000 Km தூரத்தில் சுற்றி வருகிறது.

Star%2520Journey%252011%2520venus%2520an

வெள்ளி தனது அச்சில் மிக மெதுவாக சுற்றி வரும் கிரகமாகும். இது சூரியனை ஒரு முறை சுற்றி வர 224.7 புவி நாட்களையும் தனது அச்சில் தன்னைத் தானே ஒரு முறை சுற்றி வர 243 நாட்களையும் எடுக்கிறது. வெள்ளியின் எடை பூமியின் எடையின் 4/5 பங்காகும். அதன் ஈர்ப்பு விசை புவியை விட சிறிது குறைவு. பூமியில் 100 பவுண்ட் எடையுடைய ஒரு பொருள் வெள்ளியில் 91 பவுண்டுகளாகும். மேலும் வெள்ளியின் அடர்த்தியும் புவியை விட சிறிதே குறைவாகும். வெள்ளியின் வளி மண்டலத்தின் தன்மை காரணமாக அது சூரிய குடும்பத்தில் வேறு எந்த கிரகத்தையும் விட மிக அதிக வெப்பமுள்ள கிரகமாக விளங்குகின்றது. வெள்ளியின் மேற்பரப்பு வளி மண்டல அடுக்கின் வெப்ப நிலை 55 F(13 C) ஆகவும் தரை மேற்பரப்பின் வெப்பநிலை 870 F(465 C) ஆகவும் காணப்படுகின்றது. இக்கிரகத்தின் அதீத வெப்பநிலை காரணமாக இக்கிரகத்தின் உள்ளே தண்ணீர் காணப்படின் அது முழுதும் ஆவியாகி விடும் சூழ்நிலையே நிலவுகின்றது. இதன் காரணமாக பூமியில் காணப்படும் உயிரினங்கள் இங்கே வாழ முடியாது. எனினும் வேறு ஏதும் உயிர்கள் இங்கு காணப்படுகிறதா என விஞ்ஞானிகளால் உறுதிப்படுத்தவும் முடியவில்லை. இனி வெள்ளி பற்றிய சுருக்கமான இயல்புகளைப் பார்ப்போம்.

1.சூரியனிலிருந்து சராசரித் தூரம் - 0.72333199 AU
2.சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் - 224.701 நாட்கள்
3.தன்னைத் தானே தனதச்சில் ஒரு முறை சுற்ற எடுக்கும் காலம் - 243.0187 நாட்கள்
4.பூமி சார்பாக சுற்றுக் காலம் - 583.92 நாட்கள்
5.சராசரி சுற்று வேகம் - 35.0214 Km/s
6.துணைக் கோள் - இல்லை
7.மையத்தினூடாக விட்டம் - 12103.6 Km
8.மேற்பரப்பளவு - (4.60 * 10 இன் வலு 8) Km2
9.திணிவு - (4.869 * 10 இன் வலு 24) Kg
10.சராசரி அடர்த்தி - 5.24 g/cm3
11.மேற்பரப்பு ஈர்ப்பு விசை - 8.87 m/s2
12அச்சின் சாய்வு - 2.64 பாகை
13.தப்பு வேகம் - 10.36 Km/s
14.மேற்பரப்பு வெப்ப நிலை - தாழ்வு 228K இடை 737 K உயர் 773 K
15.வளியமுக்கம் - 9321.9 Kpa

வெள்ளியின் வளி மண்டலத்தில் உள்ள வாயுக்களின் வீதங்கள் -  

1.கார்பனீரொட்சைட்டு - 96%
2.நைட்ரஜன் - 3%
3.சல்பர் ஒக்ஸைட் - 0.015%
4.நீராவி - 0.002%
5.ஹீலியம் - 0.0012%
6.நியோன் - 0.0007%

வெள்ளிக் கிரகத்தின் வயது புவியின் வயதுக்கு அண்ணளவிற் சமனாகும். இரண்டு கிரகங்களும் ஒரே நேரத்திலேயே சூரியனிடமிருந்து தோன்றின என்றும் ஒரு சிலரால் கருதப்படுகின்றது. வெள்ளியின் வளி மண்டலத்தைப் பார்த்தால் மிக அதிகளவாக காபனீரொட்சைட்டு (96%) காணப்படுகின்றது. இதனால் சூரிய குடும்பத்திலேயே மிகப் பாரமான வளி மண்டலத்தையுடைய கிரகமாக வெள்ளி விளங்குகின்றது. பூமியைப் போலவே வெள்ளியிலும் பச்சை வீட்டு விளைவு எனும் தாக்கம் நிகழ்கின்றது. ஆனால் இத்தாக்கம் தாவரங்களில் அல்லாது வளி மண்டலத்தில் நிகழ்கிறது. அதாவது காபனீரொட்சைட்டும், சல்பூரிக் அசிட்டும் இணைந்து சூரிய ஒளியை சிறைப் பிடிப்பதுடன் அதை வெளியேறாமலும் செய்து விடுகின்றன. இதனாலேயே வெள்ளியின் சுற்றாடல் மிக வெப்பமாகக் காணப்படுகின்றது.

மேலும் வெள்ளியின் வளியமுக்கமும் பூமியை விட 90 மடங்கு அதிகம் (9321 Kpa) என்பதுடன் வெள்ளியின் பூமத்திய ரேகைக்கு மேலாக கிழக்கிலிருந்து மேற்காக 362 Km/h வேகத்தில் தொடர்ச்சியாகக் காற்று வீசி வருகின்றது.

வெள்ளியின் தரையியல்பைப் பார்ப்போம். பூமியைப் போலவே வெள்ளியிலும் மலைகள்,மைதானங்கள்,பள்ளத்தாக்குகள், மற்றும் சமவெளிகள் என்பன காணப்படுகின்றன. தரை மேற்பரப்பில் 65% வீதம் சம்வெளிகளாகும். 35% வீதம் மலைகள் காணப்படுகின்றன. மேலும் ஆயிரக்கணக்கான எரிமலைகளும் வரண்ட நிலங்களும் காணப்படுகின்றன. வெள்ளியின் மிக உயர்ந்த மலை மாக்ஸ்வெல் இமய மலையை விடப் பெரிது என்பதுடன் இதன் உயரம் 11.3 Km ஆகும். வெள்ளியில் சந்திரன் மற்றும் செவ்வாயை விடக் குறைவாகவே குழிகள் காணப்படுகின்றன. மேலும் இதன் தரை மேற் பரப்பின் வயது 1 பில்லியன் வருடங்களை விடக் குறைவாகும். பூமியில் காணப்படாத அரிதான மூலகங்கள் சில வெள்ளியின் உட்பகுதியிலிருந்து எரிமலைச் செயற்பாட்டின் மூலம் அதன் தரை மேற்பரப்புக்குத் தள்ளப் பட்டு வருகின்றமை அவதானிக்கப் பட்டுள்ளது.

Star%2520Journey%252011%2520venus%2520cr

வானியல் விஞ்ஞானிகள் ரேடியோ வானியல்,செய்மதிகள், மற்றும் ரேடார் ஆகிய தொழிநுட்பங்களைப் பிரயோகித்து கடந்த 50 வருடங்களாக வெள்ளியின் தரையியல்பை ஆராய்ந்து வருகின்றனர். வெள்ளிக் கிரகமே விண்கலம் ஒன்றின் மூலம் முதன் முறையாக ஆராயப்பட்ட கிரகமாகும். நாசாவின் ஆளில்லா விண்கலமான 'மரீனர் 2' 12 மாதங்களாகக் கிட்டத்தட்ட 34 760 Km தூரம் பயணித்து வெள்ளியை அண்மித்து அதன் மேற்பரப்பு வெப்ப நிலை குறித்து ஆராய்ந்தது. அதன் பின் 1966ம் ஆண்டு இரு ரஷ்ஷிய ஆளில்லா விண்கலங்கள் வெனேரா 2 மற்றும் வெனேரா 3 என்பன வெள்ளியை அண்மித்து அது குறித்து ஆராய்ந்தன. இதையடுத்து மேலும் சில விண்கலங்கள் உதாரணமாக நாசாவின் மரீனர் 10 மற்றும் ரஷ்யாவின் வெனேரா 7,9,10 என்பன வெள்ளிக்கு அனுப்பப் பட்டன.

Star%2520Journey%252011%2520mariner%2520

Star%2520Journey%252011%2520venus%2520ro

சமீபத்தில் வெள்ளி குறித்து ஆராய்ந்த விண்கலங்களில் நாசாவின் மகெல்லன் மற்றும் ஐரோப்பிய விண் ஆய்வுக் கழகத்தின் வீனஸ் எக்ஸ்பிரெஸ் கலமும் முக்கியமானவை. வெள்ளிக் கிரகத்துக்கு அனுப்பபட்ட மற்று அனுப்பப் படவுள்ள விண்கலங்கள் பற்றிய தகவல்களை அறிய விக்கிபீடியாவின் இத் தளத்துக்குச் சென்று நம் வாசகர்கள் பார்வையிட முடியும் -

http://en.wikipedia.org/wiki/Venus?PHPSESSID=64324a5569ea1c41bac3f760f1e0bba2#Timeline

 

Star%2520Journey%252011%2520pioneer%2520

 

http://www.4tamilmedia.com/knowledge/essays/4078-star-journey-11-solar-system-5-venus

 

Link to post
Share on other sites

சூரிய குடும்பம் 6 (செவ்வாய்)

 

star%2520journey%25201.jpg

 

செவ்வாய்க்கிரகம்

 

நட்சதிரப் பயணங்கள் விண்வெளித் தொடரில் இன்று செவ்வாய்க் கிரகத்தைப் பற்றிய தகவல்களை பார்ப்போம்.

தரையின் சிவப்பு நிறம் காரணமாக ரெட் ப்ளானெட் என அழைக்கப்படும் செவ்வாய்,ரோமானியர்களின் யுத்தத்துக்கு உரிய கடவுளான மார்ஸ் எனும் பெயரை சூடியுள்ளது. சூரிய குடும்பத்தில் சூரியனிடமிருந்து 4வது இடத்தில் பூமிக்கு அடுத்ததாக இது காணப்படுகின்றது. செவ்வாய், போபோஸ் மற்றும் டெயிமோஸ் எனும் இரு துணைக் கோள்களைக் கொண்டுள்ளது.

star%2520journey%25202.jpg

 

துணைக்கோள் போபோஸ்

 

star%2520journey%25203.jpg

 

துணைக்கோள் டெயிமோஸ்

 

பூமியைப் போலவே துருவப் பகுதிகளைக் கொண்டுள்ள செவ்வாயில் சந்திரன் மற்றும் வெள்ளி ஆகிய கிரகங்களில் காணப்படுவது போலவே பாரிய குழிகளும் மேலும் மலைகள், பள்ளத்தாக்குகள், கால்வாய்கள், எரிமலைகள் மற்றும் பாலை வனங்கள் என்பனவும் காணப்படுகின்றன. சூரிய குடும்பத்திலேயே மிகப் பெரிய மலைத் தொடரான ஒலிம்பஸ் மொன்ஸ் செவ்வாயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பூமியில் காணப்படுவது போலவே செவ்வாயிலும் பருவ நிலை வட்டம் நிகழ்கின்றது. மிகவும் மெல்லிய வளி மண்டலத்தை உடைய செவ்வாயில் கார்பனீரொட்சைடு வாயுவே அதிகம் உள்ளது.

 

star%2520journey%25207.jpg

 

ஓலிம்பஸ் மலை

 

தரைப்பகுதி சிவப்பாகக் காணப்படுவதற்குக் காரணம் அதில் மேற்பரப்பில் உள்ள துரு அல்லது இரும்பு ஒக்ஸைட்டு ஆகும். துருவப்பகுதிகளில் உள்ள பனி பெரும்பாலும் கார்பனீரொட்சைட்டின் உலர்ந்த வடிவமாகும்.

செவ்வாய்க் கிரகமே அதிகளவு விண்கலங்கள், தொலைக்காட்டிகள் மற்றும் செய்ம்மதிகள் மூலம் ஆராயப்பட்ட கிரகமாகும். 1965ம் ஆண்டு நாசாவால் செலுத்தப்பட்ட மரீனெர் 4 செவ்வாயின் மேற்பரப்பில் நீர் உள்ளதா என ஆய்ந்தது. இதையடுத்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் செவ்வாயில் ஒரு காலத்தில் மிக அதிகளவு நீரும் பூமியில் உள்ளது போலவே கடலும் காணப்பட்டதற்கான சாத்தியக் கூறுகள் கிடைத்தன.

 

star%2520journey%25204.jpg

 

பூமியும் செவ்வாயும்

 

சமீபத்தில் 2007ம் ஆண்டு மார்ச்சில் ஏவப்பட்ட நாசாவின் போஃனிக்ஸ் லேண்டர் செவ்வாயின் மார்ட்டியன் நிலம் எனும் ஆழம் குறைந்த தரையில் 2008 ஜூலை 31 இல் இறங்கி பனித் துகள்கள் குறித்து ஆராய்ந்தது. தற்போது செவ்வாயின் சுற்றுப் பாதையில் மூன்று விண்கலங்கள் இயங்குகின்றன. அவை மார்ஸ் ஒடிஸ்ஸி, மார்ஸ் எக்ஸ்பிரெஸ், மற்றும் மார்ஸ் ரெக்கொன்னைசன்ஸ் ஆர்பிட்டர் என்பனவாகும்,

மேலும் நாசாவின் இரு இரட்டை வண்டிகளான ஸ்பிரிட் மற்றும் ரோவர் என்பன செவ்வாயின் தரையில் இறங்கி அதன் மேற்பரப்பின் இயல்புகளை ஆராய்ந்தன. இவை ஆரம்பத்தில் ஒழுங்காக இயங்கிய போதும் சில மாதங்கள் கழித்து இவற்றுடன் தொடர்புகளை மேற்கொள்வதில் தடங்கல்கள் ஏற்பட்டன. இதையடுத்து நாசாவால் செலுத்தப்பட்ட மார்ஸ் குளோபல் செர்வெயோர் எனும் செய்மதி செவ்வாயின் தென் துருவத்தை ஆராய்ந்து அங்கு பனிப் பாறைகள் விலகுவதைக் கண்டுபிடித்தது. செவ்வாய்க் கிரகம் இத்தனை தீவிரமாக விஞ்ஞானிகளால் ஆராயப்படுவதற்குக் காரணம் அங்கு உறை நிலையிலோ வாயு நிலையிலோ நீர் காணப்படுமிடத்து வருங்காலத்தில் அங்கு மனிதன் குடியேற முடியும் என்பதாகும்.

 

star%2520journey%25206.jpg

 

ஸ்பிரிட் விண்வண்டி

 

star%2520journey%25205.jpg

 

ரோவர் விண்வண்டி

 

இனி செவ்வாய்க்கிரகம் குறித்த சுருக்கமான தகவல்களைப் பார்ப்போம் -

1.சூரியனிடம் இருந்து அமைந்துள்ள அதிக பட்ச தூரம் - 249 209 300 Km அல்லது 1.665 861 AU
2.சூரியனிடம் இருந்து அமைந்துள்ள குறுகிய தூரம் - 206 669 000 Km அல்லது 1.381 497 AU
3.தனது அச்சில் சரிவு - 25.19 பாகை
4.தன்னைத் தானே ஒரு முறை சுற்ற எடுக்கும் நேரம் - 24.6229 புவி மணித்தியாலங்கள்
5.சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் நேரம் - 686.98 நாட்கள்
6.சுற்றுப் பாதையில் பயணிக்கும் வேகம் - 24.1309 Km/s
7.கோளின் விட்டம் மையக் கோட்டினூடாக - 6794.4 Km
8.மேற்பரப்பளவு - 144 மில்லியன் Km2
9.திணிவு - 6.4191 * 10 இன் வலு 23 Kg
10.சராசரி அடர்த்தி - 3.94 g/cm3
11.மேற்பரப்பு ஈர்ப்பு சக்தி - 3.71 m/s2
12.தப்பு வேகம் - 5.02 Km/s
13. மேற்பரப்பு வெப்பநிலை - குறுகியது 133K மத்திய 210K அதிக 293K

செவ்வாயின் வளிமண்டலத்திலுள்ள வாயுக்களின் வீதங்கள் -

1.காபனீரொட்சைட்டு - 95.32%
2..நைதரசன் - 2.7%
3.ஆர்கன் - 1.6%
4.ஒக்ஸிஜன் - 0.13%
5.நீராவி - 0.03%
6.ஓசோன் - மிகக் குறுகியளவு

வெறும் கண்களால் பார்க்கும் போது சந்திரனுக்கு அண்மையில் பிரகாசமான நட்சத்திரம் போல் தென்படும் செவ்வாய் தொலைக் காட்டிகளாலும் தெளிவாக அவதானிக்கத் தக்கது. அமெரிக்காவின் மரீனர் 4 செய்மதியைப் போலவே முந்தைய சோவியத் ஒன்றியம், ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் செவ்வாய் குறித்து ஆராய்வதற்கு ஆர்வம் காட்டின.

செவ்வாயின் தோற்றம் பற்றி நோக்கும் போது விஞ்ஞானிகள் கருதுவது என்னவென்றால் சூரிய குடும்பம் தோன்றும் போது இத்தொகுதியில் காணப்படும் தூசு துகள்களுடன் விண்கற்கள் மோதியதால் செவ்வாய் உருவானதாகவும் பின்னர் சூரியனால் ஈர்க்கப்பட்டு அதைச் சுற்றி வர நேரிட்டதாகவும் கருதப்படுகின்றது. ஆரம்பத்தில் அதிகளவு எரிமலைகள் தொழிற்பட்டு வளிமண்டலத்தில் காபனீரொட்சைட்டு நிரம்பியதாகவும் கூறப்படுகின்றது. செவ்வாயின் தரைப் பகுதி மூன்று பகுதிகளாக வகுக்கப்பட்டு நோக்கப் படுகின்றது.

அவையாவன :

1.தெற்கு உயர் நிலம்
2.வடக்கு சமநிலம்
3.துருவப் பகுதிகள்

தெற்கு உயர் நிலம் மிகப் பெரியதாகும். இங்கு சந்திரனில் காணப்படுவது போன்று குழிகள் காணப்படுகின்றன. 3.9 மில்லியன் வயதுடைய இம்மலைப்பகுதி மிகப் பழையதாகும் வடக்கு சமநிலம் மிகத் தாழ்ந்த பகுதியாகும். மிகப் பழைய காலத்தில் இங்கு பூமியில் உள்ளதைப் போலவே கடல்கள்,அருவிகள்,மற்றும் நீர் வீழ்ச்சிகள் என்பவற்றுடன் எரிமலைகளும் இருந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. துருவப் பகுதிகளை எடுத்து நோக்கினால் நாம் சாதாரண தொலைக் காட்டிகள் மூலம் அவதானிக்கும் போது கூட தெளிவாகத் தென்படுவனவாகும். நாசாவின் போஃனிக்ஸ் லேண்டர் இந்த துருவப் பகுதியிலேயே (தென் துருவம்) இறங்கி பனிக்கட்டிகளைக் குடைந்து நீர் மூலக்கூறுகளைத் தேடியமை குறிப்பிடத்தக்கது.

செவ்வாயின் மையத்திலிருந்து சராசரியான ஆரை 1500 - 2000 Km இடையில் அமைந்துள்ளது. இதன் உட்பகுதி பெரும்பாலும் இரும்பு கலவையினாலும் சல்ஃபர் மற்றும் சிலவேளைகளில் ஒக்ஸிஜனாலும் ஆக்கப்பட்டுள்ளது. பூமியைப் போலவே இதன் மையத்தில் அமைந்துள்ள திரவமான மன்டெல் சிலிக்கேட்டால் ஆனதாகும். இதன் அடர்த்தி 1300 - 1800 Km இடைப்பட்டதாகும். சூரியனுக்கு அண்மையிலுள்ள ஏனைய கிரகங்களைப் போலன்று செவ்வாயின் வளி மண்டலம் அடர்த்தி குறைவாகக் காணப்படுவதால் அதனால் வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடிவதில்லை. எனினும் எரிமலைகளின் தொழிற்பாடு காரணமாகவும் தரையின் இயல்பினாலும் அதன் மேற்பரப்பு வெப்பநிலை பூமியை விட அதிகம். இதனால் திரவ நிலையில் அங்கு நீர் இருப்பதற்கான சாத்தியங்கள் குறைவு.

 

இதன் மேற்பரப்பில் அடிக்கடி நிகழும் மணற் புயல் காரணமாக இதன் தரை வேறுபாடுகளை உயர்ரக விண் தொலைக்காட்டிகளால் கூட தெளிவாக அவதானிக்க முடியாத தன்மை நிலவுகின்றது.

 

http://www.4tamilmedia.com/knowledge/essays/4352-star-journey-12-mars

Link to post
Share on other sites
 • 1 month later...

சூரிய குடும்பம் 7 (வியாழன்) :

 

sj-1.jpg

பூமியும் வியாழனும் ஒப்பீடு

இன்றைய நட்சத்திரப் பயணங்கள் விண்வெளித் தொடரில் சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கிரகமான வியாழன் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்வோம்.

ஐதரசன் மற்றும் ஹீலியம் ஆகிய வாயுக்களினால் பெரும் கனவளவு நிரப்பப் பட்ட பெரு வாயுக் கோளான வியாழன் ஜோவியான் அல்லது வெளிப்புறக் கிரகங்கள் நான்கிலும் மிகப் பெரியதும் அதிக ஈர்ப்புச் சக்தி உடையதுமான கோளாகும். நாம் இதுவரை பார்த்த மிகச் சிறிய கிரகங்கள் பாறை அல்லது தரையை உடைய றொக்கி பிளானெட்ஸ் ஆகும்.

ஆனால் ஏனைய கிரகங்கள் வாயு ஜாம்பவான்கள் அல்லது மேற்பரப்பில் அதிகளவு வாயுவும் உட்கருவில் சூடான பாறையும் திரவ உலோகம் ஆகியவற்றை உடைய போதும் விண்கலங்கள் இறங்கக் கூடிய தரை மேற்பரப்பை இவை கொண்டிருக்காத தன்மை உடையன. இதனால் இவை வெளிப் புறக் கிரகங்கள் அல்லது ஜோவியான் கிரகங்கள் என அழைக்கப் படுகின்றன.

சூரியனிடமிருந்து ஐந்தாவது இடத்தில் அமைந்துள்ள வியாழன் பூமியின் விட்டத்தை விட 11 மடங்கு அதிக விட்டத்தையும் பூமியின் நிறையைப் போல் 318 மடங்கு அதிக நிறையையும் புவியீர்ப்பு விசையைப் போல் 2.5 மடங்கு அதிக ஈர்ப்பு விசையையும் உடையது. வியாழன் கிரகத்திற்குள் 1321 பூமிகளை வைக்கக் கூடிய இடம் காணப்படுகின்றது.

சூரியனிடமிருந்து சராசரியாக 484 மில்லியன் மைல் தூரத்திலும் பூமியிலிருந்து 97 மில்லியன் மைல் தூரத்திலும் அமைந்துள்ள வியாழன் தன்னைத் தானே சுற்றி வரும் வேகம் மிக அதிகமாகும். இது தன்னைத்தானே ஒரு முறை சுற்ற (விநாடிக்கு 8 மைல் வேகத்தில்) 9 மணி 50 நிமிடங்களை எடுக்கின்றது. இது சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் 12 வருடங்களாகும். வானில் நிலா மற்றும் வெள்ளிக்கு அடுத்து வியாழனே மிகப் பிரகாசமாக சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் கிரகமாகும். மேலும் சூரிய குடும்பத்தில் மிக அதிக பட்சமாக 64 துணைக் கோள்களை வியாழன் கொண்டுள்ளது. இவற்றில் கனீமிட் எனும் துணைக் கோள் புதன் கிரகத்தை விட பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

sj-2.jpg

 

வியாழனின் துணைக் கோள்களும் பூமியும் அதன் நிலவும்

வியாழனில் மிக அதிகளவில் வாயுக்களின் புயல் வீசி வருகின்றது. இதன் விளைவாகவே இங்கு மிகப் பிரபலமான பெருஞ்சிவப்புப் பிரதேசம் (Great Red Spot) உருவாகியுள்ளது. பூமியை விட மிகப் பெரிய கனவளவுடைய இப்பிரதேசத்தில் 17ம் நூற்றாண்டில் தொடங்கிய மாபெரும் புயல் வீசி வருகின்றது.

sj-5.jpg

 

மேலும் ஏனைய ஜோவியான் கிரகங்களைப் போலவே (சனி,யுரேனஸ்) வியாழனைச் சுற்றியும் ஒரு மெல்லிய வளையத்தொகுதியும் வலிமையான காந்தப் புலமும் உள்ளது. வியாழனின் அதி கூடிய ஈர்ப்பு விசை காரணமாக விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும் தூசுதுகள்கள், வால் வெள்ளிகள், மற்றும் விண் கற்கள் என்பன ஈர்க்கப்பட்டு அதன் துணைக் கோளாக மாறக் கூடிய சாத்தியங்களும் காணப்படுகின்றன. மேலும் புவிக்கருகில் வியாழன் இருப்பதால் பூமியைத் தாக்க வரும் விண் பொருட்களும் இக்கோளாள் ஈர்க்கப்பட்டு விடும் சந்தர்ப்பங்களும் பல நிகழ்ந்துள்ளன.

மிகச் சிறந்த வானியலாளரும் தொலைக்காட்டியைக் கண்டு பிடித்தவருமான கலிலியோ தனது தொலைக் காட்டியின் மூலம் 1610 ஆம் ஆண்டு வியாழனின் 4 பெரிய நிலவுகளைக் கன்டு பிடித்தார். அவை யுரோப்பா,கனிமீட்,லோ மற்றும் கல்லிஸ்டோ என்பவையாகும். வியாழன் மிகப் பெரிய கிரகமாகத் திகழ்வதால் அதற்கு ரோமானியர்கள் தமது கடவுள்களின் அரசனும் வானத்தின் தேவனுமான ஜுபிடர் எனும் பெயரைச் சூட்டினர் என்பது குறிப்பிடத் தக்கது.

sj-3.jpg

வானியல் அறிஞர் கலிலியோ


sj-4.jpg
 ரோமான் கடவுள்களின் அரசன் ஜுபிட்டர்

வியாழன் ரோபோட்டிக் விண்கலத்தாலும் நாசாவின் பயனீயர் மற்றும் வொயாஜெர் செய்மதிகளாலும் கலிலீயோ ஆர்பிட்டர் எனும் விண்கலத்தாலும் விரிவாக ஆராயப்பட்ட கிரகமாகும். மேலும் 2007 பெப்ரவரியில் வியாழனின் சுற்றுப்பாதை வழியாக புளூட்டோ கிரகத்தை ஆராயச் சென்ற நியூ ஹாரிஸன் எனும் விண்கலத்தால் சமீபத்தில் வியாழன் படம் பிடிக்கப்பட்டது. இவ்விண்கலம் வியாழனின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி தனது வேகத்தை அதிகரித்துக் கொள்ளும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வியாழனின் துணைக் கோளான இயுரோப்பா பனிக்கட்டி மூலக்கூறுகளாலான சமுத்திரத்தை உடையது எனும் காரணத்தால் அது வானியலாளர்களின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகவும் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இனி வியாழன் குறித்த சுருக்கமான தகவல்களைப் பார்ப்போம் -

1.தன்னைத் தானே ஒரு முறை சுற்ற எடுக்கும் நேரம் - 9 மணி 55 நிமிடம் 30 செக்கன்
2.சூரியனை ஒரு முறை சுற்ற எடுக்கும் காலம் - 11.8618 ஆண்டுகள்
3.தனது அச்சில் சாய்வு - 1.305 பாகை
4.சுற்றுப் பாதையில் சராசரி வேகம் - 13.07 Km/s
5.சராசரி ஆரை - 69 911 +or- 6 km
6.மேற்பரப்பளவு - 6.1419 * (10 இன் வலு 10) km2 - 121.9 மடங்கு பூமியின்
7.கனவளவு - 1.4313 * (10 இன் வலு 15) Km3 - 1321.3 மடங்கு பூமியின்
8.நிறை - 1.8986 * (10 இன் வலு 27) Kg - 317.8 மடங்கு பூமியின்
9.சராசரி அடர்த்தி - 1.326 g/cm3
10.மையத்திலிருந்து ஈர்ப்பு - 24.79 m/s2 or 2.528 g
11.தப்பு வேகம் - 59.5 Km/s
12.மேற்பரப்பு வெப்பம் - குறை - 0.1 K, நடு - 0.165 K, மிகை - 0.112 K
13.மேற்பரப்பு அமுக்கம் - 20 - 200 kPa

வளி மண்டலத்தில் வாயுக்களின் வீதம் -

1.ஐதரசன் - 89.8%
2.ஹீலியம் - 10.2%
3.மெதேன் - 0.3%
4.அமோனியா - 0.026%
5.நீர் - 0.0004%

வியாழனின் துணைக் கிரகமான யுரோப்பாவில் தண்ணீர் இருப்பது உறுதியாக தெரியவந்துள்ளது. அங்கு 10 Km அளவுக்கு கனமான ஐஸ்கட்டி படிவங்கள் உள்ளன. அவை 3 Km ஆழத்துக்கு படிந்து உள்ளன. இதன் மூலம் அங்கு பெரிய கடல்களும் ஏரிகளும் இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த தகவலை அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளி இயற்பியல் நிறுவன தலைவர் பிரிட்னி அறியத் தந்தார்.

மேலும் 1994ம் ஆண்டு வெயில் காலத்தில் வானில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வாகப் பதியப் பட்டது என்னவென்றால் சூமேக்கர் லெவி 9 எனும் மிகப் பெரிய வால்வெள்ளி வியாழனுக்கு அண்மையில் வந்து அதன் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு பல துண்டுகளாகச் சிதறி அதனுடன் மோதியது. இத்துண்டுகள் விஞ்ஞானிகளால் முத்துக்களின் சிதறல் எனும் பட்டப் பெயரால் அழைக்கப்பட்டன. இம் மோதுகையினால் வியாழனில் மிகச் சிறிய நடுக்கங்கள் ஏற்பட்டதை வானியலாளர்கள் அவதானித்துள்ளனர். மேலும் இம்மோதுகை காரணமாக ஏற்பட்ட கரும் பொட்டுக்கள் வியாழனில் பல மாதங்களுக்குத் தென்பட்டமை குறிப்பிடத்தக்கது.

sj-6.jpg
இதுவரை வியாழன் குறித்த சுருக்கமான விபரங்களைப் பார்த்தோம். அடுத்த தொடரில் சூரிய குடும்பத்திலேயே அடர்த்தி மிகக் குறைந்த கிரகமாகவும் இரண்டாவது மிகப் பெரிய கிரகமாகவும் விளங்கும் சனிக் கிரகத்தைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.

தொடரும்

http://www.4tamilmedia.com/knowledge/essays/4515-star-journey-13-jupiter

 

Link to post
Share on other sites
 • 2 weeks later...

சூரிய குடும்பம் 8 (சனி)

 

sj%252014%2520-%25203.jpg

 

சனி மற்றும் அதன் துணைக் கோள்கள்

 

4தமிழ்மீடியாவின் நட்சத்திரப் பயணங்கள் விண்வெளித் தொடரில் தற்போது சூரிய குடும்பம் பற்றி ஆராய்ந்து வருவது வாசகர்கள் அறிந்த விடயம். சென்ற வாரம் தரை மேற்பரப்பைக் கொண்டிராத ஆனால் பருமனில் மிகப் பெரிய வாயுக்கோள்களில் முதலாவதான வியாழன் பற்றிய தகவல்களைப் பார்த்தோம். இன்றைய தினம் சூரிய குடும்பத்தில் இரண்டாவது மிகப் பெரிய கோளாக விளங்கும் அதே நேரம் மிகக் குறைந்த அடர்த்தியைக் கொண்டிருப்பதுமான சனிக் கிரகம் பற்றி ஆராய்வோம். சூரியனிடம் இருந்து ஆறாவது இடத்தில் சராசரியாக 9.537 AU தூரத்தில் அமைந்துள்ள சனிக்கிரகம் ரோமானியர்களின் விவாசாயத்திற்கு உதவும் மிக முக்கிய கடவுளின் பெயரான Saturn எனும் பெயரைக் கொண்டுள்ளது. சனிக் கிரகத்தின் ஆரை பூமியை விட 9 மடங்கு அதிகம் என்ற போதும் அதன் அடர்த்தி பூமியை விட 8 மடங்கு குறைவாகும். அடர்த்தி குறைவு காரணமாக சனிக்கிரகத்தை தண்ணீரில் இட்டால் அது மிதக்கும் என்று கூறப்படுகின்றது. எனினும் சனிக்கிரகம் மிகப் பெரிய கனவளவைக் கொண்டிருப்பதால் இதன் நிறை பூமியை விட 95 மடங்கு அதிகம்.

வியாழனைப் போன்றே சனியும் தனது அச்சில் மிக வேகமாக சராசரியாக 10km/s வேகத்தில் சுற்றுவதால் அதன் துருவப் பகுதிகள் தட்டையாக உள்ளன. மேலும் வியாழனை ஒத்த வாயுக் கோளான சனியின் உள்ளகம் இரும்பு,நிக்கல் ஆகிய கணிமங்களாலும், பனிக்கட்டி மற்றும் சிலிக்கன் ஆக்ஸிஜனால் ஆன பாறைகளினாலும் ஆனது. இதன் மேற்பரப்பில் பெரும்பாலும் ஐதரசனும் ஹீலியமும் நிரம்பிக் காணப்படுகின்றன. மேலும் சனியில் வியாழனை விட மிக வேகமாக (1800 Km/h) காற்று வீசி வருகின்றது. சனியின் உள்ளகத்தின் மேலே அதைச் சுற்றிதடிமனான உலோக மற்றும் ஐதரசன் அடுக்கும் அதன் மேல் வளியடுக்கும் காணப்படுகின்றது.

சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் பார்ப்போரைக் கவரும் அழகும் அமைப்புமான வளையங்களைக் கொண்டுள்ள கிரகமாக சனி விளங்குகின்றது. சனியின் மிக முக்கிய அம்சமாக அதன் வளையங்கள் விளங்குகின்றன எனலாம். விண்ணில் காணப்படும் தூசு துகள்களாலும், பனிக்கட்டிகளாலும், சிறிய பாறைகளினாலும் ஆன இதன் வளையங்கள் 6630 Km இலிருந்து 120 700 Km வரை நீண்டு காணப்பட்ட போதும் இவற்றின் தடிப்பம் மிக மிகக் குறைவாக அதாவது வெறும் 20 மீற்றர் மட்டுமே உள்ளது.

sj%252014%2520-%25201.jpg

 

சனியின் வளையங்கள்

 

சனிக் கிரகத்தைச் சுற்றி இதுவரை 62 துணைக் கோள்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன. இவற்றில் 53 நிலவுகள் உத்தியோக பூர்வமாகப் பெயரிடப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர நூற்றுக்கும் மேற்பட்ட குட்டிநிலவுகளும் (Moonlets) சனியைச் சுற்றி வலம் வருகின்றன. பூமியை ஒத்த வளி மண்டல மற்றும் சூழல் இயல்புகள் உடைய சனியின் மிகப் பெரிய துணைக் கோளான டைட்டன் புதன் மற்றும் புளூட்டோ கிரகங்களை விடப் பெரியது என்பதுடன் சூரிய மண்டலத்தில் வியாழனின் கனிமீட்டுக்கு அடுத்து 2வது மிகப் பெரிய துனைக் கோள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சனியின் வளையங்கள் மிக மெல்லியதாக இருப்பதாலும் சனி பூமியைப் போன்றே தனதச்சில் சாய்ந்திருப்பதாலும் ஒவ்வொரு 13 அல்லது 16 வருடங்களுக்கு ஒரு முறை குறிப்பிட்ட மிகச் சிறிய நேரத்துக்கு இவ்வளையங்கள் பார்வைக்குத் தென்படுவதில்லை. சனியின் வளையக் குறுக்கீடு என அழைக்கப் படும் இந்நிகழ்வு இறுதியாக 1995 மற்றும் 1996 ஆம் வருடங்களில் தொடர்ச்சியாக சில மாதங்களுக்கு மும்முறை நிகழ்ந்தமை குறிப்பிடத் தக்கது. மேலும் பூமியிலிருந்து பார்க்கும் போது இதன் வளையங்கள் யாவும் ஒரே நிறத்தில் தென்பட்ட போதும் இது உண்மையல்ல என கஸ்ஸினி செய்மதி அனுப்பிய புகைப்படங்கள் தெளியப்படுத்தின.

1997ம் ஆண்டு ஆக்டோபரில் நாசா மற்றும் ஐரோப்பிய விண்ணாய்வு நிறுவனமான ஈசா என்பவை இணைந்து சனிக் கிரகத்தை நோக்கி கஸ்ஸினி செய்மதியைச் செலுத்தின. இச்செய்மதி 7 வருடங்கள் பயணித்து 2004 ஜூனில் சனியின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது. மேலும் 2005 ஜனவரியில் சனியின் மிகப் பெரிய துணைக் கோளான டைட்டனில் கஸ்ஸினி செய்மதியிலிருந்து ஹுய்ஜென்ஸ் (Huygens) ஆய்வு கருவி வெற்றிகரமாக இறக்கப்பட்டது. இக்கருவியின் மிக நுண்ணிய கமெராவினால் எடுக்கப்பட்ட புகைப்படங்களே சனியின் வளையங்கள் ஒவ்வொன்றும் பல்வேறு நிறங்களையும் பிரகாசத்தையும் உடையவை என நிரூபித்தன. மேலும் இப்புகைப்படங்கள் இவ்வளையத் தொகுதிகள் யாவும் ஆயிரக்கணக்கான சிறிய தனித்தனி வளையங்களால் ஆனவை என்றும் எடுத்துக் காட்டின. சனியின் வளையங்களின் தோற்றம் பற்றிக் கருதும் போது இரு கோட்பாடுகள் வானியலாளர்களால் முன் வைக்கப் படுகின்றன. சனியின் சிறிய நிலவுகள் அல்லது சூரியனை வலம் வரும் வால் வெள்ளிகள் என்பவை மிகச்சிறிய துண்டுகளாக உடைந்து சனியின் வளையங்கள் தோன்றின என்பது ஒரு கோட்பாடு. சனிக்கிரகம் தோன்றும் போது உருவான வான் புகையுரு அல்லது தூசுகளின் எஞ்சிய பாகங்களே இவ்வளையங்களாகின என்பது இன்னொரு கோட்பாடு. தற்போது இவ்வளையங்களின் வயது 4 பில்லியன் வருடங்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இனி சனிக்கிரகம் பற்றிய சுருக்கமான தகவல்களைப் பார்ப்போம் - 

1.தன்னைத் தானே ஒரு முறை சுற்ற எடுக்கும் நேரம் - 10 மணி 39 நிமிடம் 25 செக்கன்
2.சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் - 29 வருடம் 167 தினம் 6.7 மணி
3.சுற்றுப் பாதையில் வலம் வரும் வேகம் - 9.6724 Km/s
4.தன்னைத் தானே அச்சில் சுழலும் வேகம் - 9.87 km/s
5.சூரியனிலிருந்து சராசரித் தூரம் - 1 426 725 400 Km or 9.537 AU
6.விட்டம் - 120 536 Km
7.புற மேற்பரப்பளவு - (4.38 * 10 இன் வலு 10) Km2
8.நிறை - (5.688 * 10 இன் வலு 26) Kg
9.சராசரி அடர்த்தி - 0.69 g/cm3
10.மேற்பரப்பு ஈர்ப்பு சக்தி - 8.96 m/s2
11.அச்சின் சாய்வு - 26.73 பாகை
12.தப்பு வேகம் - 35.49 Km/s
13.மேற்பரப்பு வெப்ப நிலை - குறை - 82K, நடு - 143k
14.துணைக் கோள்களின் எண்ணிக்கை - 62
15..வளி மண்டல அழுத்தம் - 140 kPa

வளிமண்டலத்தில் உள்ள மூலகங்களின் சதவீதம் -

1.ஐதரசன் - 93%
2.ஹீலியம் - 5%
3.மீத்தேன் - 0.2%
4.நீர் ஆவி - 0.1%
5.அமோனியா - 0.01%
6.ஈத்தேன் - 0.0005%
7.பாஸ்பேன் - 0.0001%

வியாழக் கிரகம் பூமியை விட 318 மடங்கு நிறையையும் சனி பூமியை விட 95 மடங்கு நிறையையும் கொண்டுள்ளன. மேலும் வியாழன் சனியை விட 20% பெரியதாகும். இவ்விரு கிரகங்களும் இணைந்து சூரிய மண்டலத்தின் 92% வீதமான நிறையைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சனியின் துணைக்கோள்களில் பெரும்பாலானவற்றுக்கு கிரேக்க புராணக் கதைகளில் வரும் கடவுளர்களின் பெயரே சூட்டப்பட்டுள்ளது. இவற்றில் டைட்டன் மற்றும் என்கெலடுஸ் ஆகிய துணைக் கோள்களில் உயிர் வாழ்க்கைக்கு அறிகுறியான தன்மைகள் நிலவுகின்றது. சூரிய குடும்பத்திலேயே டைட்டன் துணைக்கோள் மட்டுமே மிகப் பரந்த வளிமண்டலத்தைக் கொண்டிருப்பதுடன் சிக்கலான சேதன இரசாயனம் நிகழும் ஐதரோ காபன் ஏரிகளையும் உடையது.

sj%252014%2520-%25204.jpg

 

சனியும் பூமியும் ஒப்பீடு

 

மேலும் என்கெலடுஸ் துணைக் கோள் நுண்ணுயிர்கள் வாழ்வதற்கான அடித்தளத்தை கொண்டிருப்பதுடன் உப்பு பனிக்கட்டிகளாலான கடல் போன்ற அமைப்பையும் இது கொண்டுள்ளது. இதுவரை சனிக்கிரகத்தை ஆராய்ந்த துணைக் கோள்களைப் பற்றிப் பார்த்தால் ஆரம்பத்தில் நாசாவின் பயனீர் 11 விண்கலமும் அதன் பின்னர் வொயேஜர் 1 மற்றும் 2 விண்கலங்களும் இறுதியாக 2004 இல் கஸ்ஸினி விண்கலமும் செலுத்தப்பட்டுள்ளன. இவற்றில் கஸ்ஸினி செய்மதி மட்டுமே தற்போது இயங்கி வருகிறது. இதன் மிக முக்கிய பணி 2008 இல் முடிவடைந்த போது இது சனியைச் சுற்றி 74 தடவை வலம் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் இச்செய்மதியின் ஆய்வுப்பணி 2010 செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டு இறுதியாக 2017 வரை இக்காலம் விரிவு படுத்தப்பட்டது. கஸ்ஸினி விண்கலம் சனியின் வளையங்கள் அதன் துணைக் கிரகங்கள் பற்றிப் பல தெளிவான புகைப்படங்களை எடுத்து அனுப்பியது மட்டுமல்லாமல் சனியின் 8 புதிய துணைக் கோள்களையும் கண்டு பிடித்திருந்தது. தற்போது இதன் நோக்கம் சனியின் பருவ காலங்களைப் பற்றிய முழு விவரங்களையும் சேகரித்து அனுப்புவதாகும்.

sj%252014%2520-%25202.jpg

 

கஸ்ஸினி செய்மதி

 

இதுவரை நட்சத்திரப் பயணங்கள் சூரிய குடும்பம் தொடரில் பூமியிலிருந்து ஆரம்பித்து புதன்,வெள்ளி,செவ்வாய்,வியாழன்.சனி வரை ஆறு முக்கிய கிரகங்கள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டோம். அடுத்த தொடரில் சூரியனிடமிருந்து மிகத் தொலைவிலுள்ள குளிர்ந்த கிரகங்களான யுரேனஸ்,நெப்டியூன் ஆகிய கிரகங்களைப் பற்றியும் கிரகம் என்று கருத முடியாத ஆனால் சூரியனைச் சுற்றி மிகத்தூரத்தில் வலம் வரும் புளூட்டோ பற்றியும் ஆன தகவல்களை எதிர் பாருங்கள்.

 

தொடரும்

http://www.4tamilmedia.com/knowledge/essays/4693-star-journey-14-saturn

Link to post
Share on other sites
 • 3 months later...
 • கருத்துக்கள உறவுகள்

சூரிய குடும்பம் 9 (யுரேனஸ்): நட்சத்திரப் பயணங்கள் 15

 

 

uranus.jpg

நட்சத்திரப் பயணங்கள் விண்வெளித் தொடரில் சூரிய குடும்பத்தில் உள்ள வாயுக் கோள்களைப் பற்றி தற்போது ஆராய்ந்து வருகிறோம்.

இவ்வரிசையில் கடந்த தொடர்களில் வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்களைப் பற்றிய தகவல்களைப் பார்த்தோம். இன்னும் இரு தொடர்களில் நெப்டியூன், மற்றும் புளூட்டோ ஆகிய கிரகங்களுடன் இத்தொடரின் சூரிய குடும்பம் பகுதி நிறைவு பெறுகிறது என 4 தமிழ் மீடியாவின் வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.

sj%252015%2520-%25201.jpg

யுரேனஸும் புவியும் ஓர் ஒப்பீடு

பூமியை விட மூன்று மடங்கு பெரிய கனவளவை உடைய யுரேனஸ் சூரியனிடமிருந்து ஏழாவது இடத்தில் அமைந்துள்ள சூரிய குடும்பத்தில் மூன்றாவது மிகப் பெரிய கோளாகும். இதற்கும் பண்டைய கிரேக்க கடவுளர்களின் முந்தைய சுப்ரீம் கடவுளின் பெயரான யுரேனஸ் எனும் பெயர் இடப்பட்டுள்ளது. யுரேனஸ் கிரகமே தொலைக்காட்டி ஒன்றின் மூலம் முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்ட கிரகமாகும். வியாழனைப் போன்றே மிகப் பெரிய வாயுக் கோளான யுரனேஸ் இன் வளி மண்டலத்தில் ஐதரசன்,ஹீலியம், மெத்தேன் ஆகிய வாயுக்கள் பெருமளவு காணப்படுகின்றன. யுரேனஸில் வெறும் 2% வீதமே மெத்தேன் வாயு காணப்பட்டாலும் தொலைக் காட்டியால் நோக்கும் போது அதன் மேற்பரப்பு அழகிய நீலம் மற்றும் பச்சை வண்ணத்தில் தென்படுவதற்கு இவ்வாயு காரணமாகின்றது.

ஏனைய வாயுக் கோளங்களைப் போலவே யுரேனஸுக்கும் வளையங்களின் தொகுதியும், காந்த மண்டலமும் அதிக பட்சமாக 27 துணைக் கோள்களும் காணப்படுகின்றன. வெள்ளியைப் போன்றே யுரேனஸும் கிழக்கிலிருந்து மேற்காக சுழலும் போதும் தனது அச்சில் 90 பாகை சாய்வில் ஏறக்குறைய நீள்வட்டப்பாதையில் வலம் வருவதால் அது சூரியனைச் சுற்றி வரும் அதே பக்கத்தில் வடக்கிலிருந்து தெற்காக சுழலுவது போன்ற தோற்றம் ஏற்படுகின்றது. மேலும் இத்தகைய முரணான தன்மை காரணமாக அங்கு பருவ காலங்கள் 20 வருடங்களுக்கு ஒரு முறையே மாறுகின்றன. யுரேன்ஸின் மேற்பரப்பிலும் வியாழன் மற்றும் சனி கிரகங்களைப் போலவே மிக வேகமாக கிட்டத்தட்ட 900Km/h வேகத்தில் காற்று வீசி வருகின்றது. யுரேனஸ் கிரகத்தைச் சுற்றி 11 வளையங்கள் அவதானிக்கப் பட்டுள்ளது. எனினும் இவ்வளையங்கள் மிக மெல்லியதாக இருப்பதால் ஹபிள் போன்ற வினைத் திறன் மிக்க விண் தொலைக்காட்டிகளால் மட்டுமே இவை அவதானிக்கப் பட முடிவதுடன் வெறும் கண்களுக்கோ சாதாரண தொலைக்காட்டிகளுக்கோ இவை புலப்படுவதில்லை. யுரேனஸ் கிரகம் 1781ம் ஆண்டு மார்ச் 13 சர்.வில்லியம் ஹெர்ஷெல் எனும் ஆங்கிலேய விஞ்ஞானியால் கண்டு பிடிக்கப்பட்டது.

sj%252015%2520-%25202.jpg

யுரேனஸின் வளையங்களின் நிற மாலை

யுரேனஸின் துணைக் கோள்களும் விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியமூட்டும் தன்மைகளைக் கொண்டுள்ளன. வெறும் 300 மைல்களே விட்டமுடைய டைனி மிரான்டா எனும் துனைக் கோள் பூமியிலுள்ள எவெரெஸ்ட் சிகரத்தை விட உயரமான அதாவது 10 மைல் உயரமுடைய மலையைக் கொண்டுள்ளது, இச் செய்தியை யுரேனஸை ஆராய்வதற்காக அதன் சுற்றுப் பாதைக்குள் நுழைந்த நாசாவின் வொயேஜர் 2 செய்மதி கண்டு பிடித்தது.

இனி யுரேனஸ் குறித்த சுருக்கமான தகவல்களைப் பார்ப்போம் -

1.தனது அச்சில் சுழல எடுக்கும் நேரம் - 17 மணி 14 நிமிடம்

2.சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் - 84 வருடம் 3 நாள் 15.66 மணி

3.சூரியனிடமிருந்து சராசரி தூரம் - 2 872 460 000 Km

4.சுற்றுப் பாதையில் பயணிக்கும் வேகம் - 6.8352 Km/s

5.தனது அச்சில் சுழலும் வேகம் - 2.59 Km/s

6.தனதச்சில் சாய்வு - 0.76986 பாகை

7.விட்டம் மையத்தினூடாக - 51 118 Km

8.மேற்பரப்பளவு - 8 130 000 000 Km2

9.திணிவு - 8.686 * (10 இன் வலு 25) Kg

10.சராசரி அடர்த்தி - 1.29 g/cm3

11.ஈர்ப்பு விசை - 8.69 m/s2

12.தப்பு வேகம் - 21.29 Km/s

13.சராசரி வெப்ப நிலை - 355 பாகை ஃபரனைட்

14.துணைக் கோள்களின் எண்ணிக்கை - 27

யுரேனஸின் வளி மண்டலத்தில் காணப்படும் வாயுக்களின் சதவீதம் (சராசரி) -

1.ஐதரசன் - 83%

2.ஹீலியம் - 15%

3.மெத்தேன் - 2.3%

4.ஐதரசன் டெயூடெரைட் (HD) - 0.009%

 

sj%252015%2520-%25203.jpg

 சூரிய மண்டலத்திலுள்ள கிரகங்களின் பருமன் ஓர் ஒப்பீடு

யுரேனஸில் காணப்படும் வளி மண்டல அமுக்கம் 130 KPa ஆகும். கடந்த 2006 ஆம் ஆண்டு ஹபிள் தொலைக் காட்டியால் யுரேனஸின் வட துருவத்தில் மிகப் பெரிய கரும் பொட்டு ஒன்றை அவதானித்தது. சுமார் 1700 Km நீளமும் 3000 Km அகலமும் உடைய இந்த கரும் பொட்டு பின்னர் வளிச் சுழல் எனத் தெளிவு படுத்தப் பட்டது. மேலும் விஞ்ஞானிகள் யுரேனஸின் வட துருவத்துக்கு வர உள்ள வசந்த காலத்துக்கான அறிகுறி எனத் தெளிவு படுத்தினர். இது வரை யுரேனஸ் குறித்த சுருக்கமான தகவல்களை ஆராய்ந்தோம். எதிர் வரும் தொடரில் நெப்டியூன் கிரகம் பற்றிய தகவல்களை எதிர்பாருங்கள்.

http://www.4tamilmedia.com/knowledge/essays/4825-star-journey-15-uranus

 

சூரிய குடும்பம் 10 (நெப்டியூன்) : நட்சத்திரப் பயணங்கள் 16

 

 

sj%252016%2520-%25201n.jpg

நெப்டியூன் கிரகம் (வொயேஜர் 2 செய்மதியால் எடுக்கப்பட்டது)

இன்றைய நட்சத்திரப் பயணங்கள் தொடரின் சூரிய குடும்பம் பகுதியில் புளூட்டோவை ஒரு

கிரகமாகக் கருதாத காரணத்தால் சூரியனை மிக அதிக தூரத்தில் சுற்றி வரும் இறுதி வாயுக் கோளான நெப்டியூன் பற்றிய தகவல்களைப் பார்ப்போம். நெப்டியூன் விட்டத்தின் அடிப்படையில் சூரிய குடும்பத்தின் நான்காவது மிகப் பெரிய கோளாகவும் திணிவின் அடிப்படையில் மூன்றாவது பெரிய கோளாகவும் விளங்குகின்றது. நெப்டியூன் சூரியனிடமிருந்து 8 ஆவது இடத்தில் 4 498 252 900 Km அல்லது 30.07 AU தூரத்தில் அமைந்துள்ளது. நெப்டியூன் பூமியை விட பருமனில் 4 மடங்கு அதிகமும் திணிவில் 17 மடங்கு அதிகமும் உடையது. நீல நிறக் கோளான நெப்டியூனின் பெயர் ரோமானியர்களின் கடல் கடவுளின் பெயரை ஒத்தது.

நெப்டியூனில் ஒரு நாள் கிட்டத்தட்ட 16 மணித்தியாலங்கள் நீடிக்கும். மேலும் நெப்டியூனில் ஒரு வருடம் என்பது அதாவது அது சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் 165 புவி வருடங்களாகும். நெப்டியூன் சூரியனிடமிருந்து மிக அதிக தூரத்திலுள்ள கிரகம் என்பதும் அது சூரியனைச் சுற்றி வரும் வேகம் குறைவு என்பதனாலுமே அதன் ஒரு வருடம் புவியின் ஒரு வருடத்தின் 165 மடங்காக உள்ள காரணமாகும். மேலும் நெப்டியூனின் சுற்றுப்பாதை ஏனைய கிரகங்களைப் போல் அல்லாது கிட்டத்தட்ட வட்டப் பாதையாகும்.

நெப்டியூனைச் சுற்றி இதுவரை 13 துணைக் கோள்கள் அவதானிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் விசேசமானது ட்ரைட்டன் எனும் நிலவாகும். இந்நிலவு நெப்டியூனை பின்பக்கமாக சுற்றி வருகின்றது. மேலும் ட்ரைட்டனில் வரண்ட நிலங்களும் நைட்ரஜன் திரவ நிலையிலும் வெந்நீர் ஊற்றுக்களும் நிறைந்துள்ளன. சூரிய குடும்பத்திலுள்ள கிரகங்களை அவதானித்த வண்ணம் அதைத் தாண்டிச் செல்லும் நோக்கத்துடன் நாசாவால் செலுத்தப்பட்ட வொயேஜர் 2 செய்மதி இறுதியாகக் கட்டுப்பாட்டு மையத்துக்குத் தகவல் அனுப்பியது நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தே ஆகும். மேலும் அது நெப்டியூனையும் அதன் துணைக் கோள் ட்ரைட்டனையும் படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

sj%252016%2520-%25203n.jpg

நெப்டியூனும் அதன் துணைக் கோள் ட்ரைட்டனும்

sj%252016%2520-%25204n.jpg

துணைக் கோள் டிரைட்டனின் ஒரு பகுதி (வொயேஜர் 2 செய்மதியால் எடுக்கப்பட்டது)

இப்புகைப்படங்களில் வியாழனைப் போலவே நெப்டியூனிலும் இருண்ட நீல நிறப் பொட்டு அல்லது புயல் அவதானிக்கப்பட்டது. இப்பகுதியில் ஒரு மணிக்கு 500 மைல் வேகத்தில் புயல் வீசி வருவதாகக் கூறப்படுகின்றது. மேலும் நெப்டியூனின் வளி மண்டலத்தில் கிட்டத்தட்ட 2000 Km/h வேகத்தில் முகில்கள் அசைகின்றன. பூமியிலிருந்து தொலைக் காட்டியால் நோக்கும் போது சாந்தமான நீல நிறக் கோளாக நெப்டியூன் தென்பட்ட போதும் சூரிய மண்டலத்திலேயே மிக வேகமாக புயல்காற்றும் சூறாவளியும் இங்கு தான் வீசி வருகின்றது.

வொயேஜர் 2 செய்மதி அனுப்பிய புகைப் படங்களில் பூமியிலிருந்து தொலைக்காட்டியால் அவதானிக்கும் போதும் தென்படாத மிக மெல்லிய வளையங்கள் தெளிவாகத் தென்படுகின்றன. நெப்டியூனின் வளி மண்டலத்தில் ஹீலியம்,ஐதரசன், மற்றும் மெதேன் ஆகிய வாயுக்கள் அதிகமாக உள்ளன. மெதேன் வாயு சிவப்பு நிறத்தை உறிஞ்சுவதாலும் பச்சை நிறத்தை வெளிப்படுத்துவதாலும் நெப்டியூன் இரண்டும் கலந்து நீல நிறமாகத் தென்படுகின்றது.

இனி நெப்டியூன் குறித்த சுருக்கமான தகவல்களைப் பார்ப்போம் :

1.தன்னைத் தானே ஒரு முறை சுற்றி வர எடுக்கும் நேரம் - 16 மணி 6.5 நிமிடம்

2.சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் நேரம் - 164 ஆண்டு 288 நாள் 13 மணி

3.சுற்றுப் பாதையில் பயணிக்கும் வேகம் - 5.4778 Km/s

4.சூரியனிடமிருந்து சராசரி தூரம் - 4 498 252 900 Km அல்லது 30.07 AU

5.தனது அச்சில் சாய்வு - 29.58 பாகை

6.மையத்தினூடாக விட்டம் - 49 572 Km

7.மேற்பரப்பு - 7.65 * (10 இன் வலு 9) Km2

8.திணிவு - 1024 * (10 இன் வலு 26) Kg

9.சராசரி அடர்த்தி - 1.64 g/cm3

10.தப்பு வேகம் - 23.71 km/s

11.துணைக் கோள்கள் - 13

12.மேற்பரப்பு வெப்பம் - குறை - 50K, நடு - 53K

13.ஈர்ப்பு விசை - 11 m/s2

14.வளி அமுக்கம் - 100 - 300 KPa

வளிமண்டலத்திலுள்ள வாயுக்களின் சதவீதம் -

1.ஐதரசன் - 84%

2.ஹீலியம் - 12%

3.மெதேன் - 2%

4.அமோனியா - 0.01%

நெப்டியூன் கிரகம் கணித ரீதியான கணிப்புக்களினூடாகவே முதன் முறையாகக் கண்டு பிடிக்கப்பட்டது. அதாவது அதிக பார்க்கும் திறன் உள்ள தொலைக் காட்டிகள் இல்லாத காலமான 1846 ஆம் ஆண்டு யுரேனஸ் கிரகத்தின் சுற்றுப் பாதையில் அதன் ஈர்ப்பு நடுக்கம் காரணமாக அதன் அருகில் அதை ஒத்த கோளொன்று இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கணித மற்றும் வானியல் அறிஞர்களான உர்பைன் லெ வெர்ரியர், ஜான் கூச் ஆடம்ஸ், யோகன் காத்ரிபைட் கால் ஆகியோரால் நெப்டியூனும் அதன் துணைக் கோளான ட்ரைட்டனும் கண்டு பிடிக்கப்பட்டன.

sj%252016%2520-%25202.jpgஅறிஞர் 'உர்பைன் லெ வெர்ரியர்'

இதுவரை சூரிய குடும்பத்தின் இறுதிக் கோளான நெப்டியூன் பற்றிய தகவல்களைப் பார்த்தோம். அடுத்த தொடரில் கோள் என்று கருத முடியாத ஆனால் சூரிய குடும்பத்தில் ஒரு அங்கத்தவரான புளூட்டோ கிரகம் பற்றிய தகவல்களைப் பார்ப்போம். அடுத்த தொடருடன் நட்சத்திரப் பயணங்களின் சூரிய குடும்பம் பகுதி நிறைவுறுகிறது என்பதை வாசகர்களுக்கு அறியத் தருகின்றோம்.

 

http://www.4tamilmedia.com/knowledge/essays/5083-star-journey-16-neptun

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சூரிய குடும்பம் 11 (புளூட்டோ) : நட்சத்திரப் பயணங்கள் 17

 

sj%252017%2520-%25201.jpg

 

புளூட்டோவும் அதன் துணைக் கோள் சாரோனும்

இன்றைய நட்சத்திரப் பயணங்கள் தொடரின் சூரிய குடும்பம் இறுதிப் பகுதியில் சூரியனிடமிருந்து 9 வது

இடத்தில் அமைந்துள்ள விண் பொருளான புளூட்டோ பற்றி ஆராய்வோம். சூரியனைச் சூற்றி 17 டிகிரி சாய்வில் சுற்றி வரும் குறுங்கோளான புளூட்டோ தனது சுற்றுப் பாதையில் சூரியனிடமிருந்து நெப்டியூனை விட அண்மையாகவும் (29.7 Au) அதை விட சேய்மையாகவும் (49.5 AU) வலம் வருகின்றது. 1930 ஆம் ஆண்டு 'கிளைடு டோம்பா' எனும் வானியலாளரால் புளூட்டோ கண்டு பிடிக்கப்பட்டது. நெடுங்காலமாக கிரகம் எனக் கருதப்பட்டு வந்த இக்குறுங்கோள் தற்போது (2006 முதல்) நெப்டியூனை அடுத்துள்ள கியூப்பர் பட்டை(Kuiper belt) எனப்படும் விண்கற்கள் மண்டலத்தின் மிகப் பெரிய பொருளாகவே கணிக்கப்படுவதுடன் கிரகங்கள் பட்டியலில் இருந்தும் நீக்கப் பட்டுள்ளது.


sj%252017%2520-%25205.jpgபுளூட்டோ, பூமி, புதன். பூமியின் சந்திரன் பருமனில் ஓர் ஒப்பீடு

புளூட்டோவின் தோற்றம் பற்றிக் கருதுகையில் வியாழனிடமிருந்து பிரிந்து சென்ற ஒரு சந்திரனே புளூட்டோவானதாகவும் அல்லது சூரிய மண்டலத்தில் சூரியனின் ஈர்ப்பு விசையிலிருந்து விலகிச் சென்ற விண்கல் ஒன்று இறுதியில் புளூட்டோவாகி சூரியனைச் சுற்றி ஒழுக்கில் வர ஆரம்பித்ததாகவும் இரு கருதுகோள்கள் நிலவுகின்றன. அடுத்தடுத்து வாயுக்கோள்கள் அமைந்திருந்த எல்லையைத் தாண்டி அமைந்துள்ள புளூட்டோ கரும் பாறைகளால் ஆன தரையையும் பனிக்கட்டிகளையும் உடைய குறுங்கோள் ஆகும்.


sj%252017%2520-%25203.jpg
புளூட்டோவின் தரை மேற்பரப்பு (கணனியால் வடிவமைக்கப்பட்டது)

இது பூமியின் சந்திரனை விட பருமனில் சிறிதான போதும் ஆறு மடங்கு அதிக நிறையை உடையது. புளூட்டோ சூரிய குடும்பத்தில் உள்ள பொருட்களிலேயே இதுவரை செய்மதி அல்லது விண்கலம் ஒன்றின் மூலம் அவதானிக்கப் படாத கிரகமாகும். எனினும் சமீபத்தில் செலுத்தப்பட்ட விண்கலமான நாசாவின் நியூஹாரிஸன் 2015 ஆம் வருடம் கோடைக் காலத்தில் புளூட்டோவின் சுற்றுப் பாதையை அடைந்து அதைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து பூமிக்கு அனுப்பவுள்ளது. இவ் விண்கலம் கிரகங்களின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி அதனதன் சுற்றுப் பாதைகளில் ஒவ்வொன்றாகப் பயணிக்கும் தன்மையுடையது.


sj%252017%2520-%25204.jpg
நியூ ஹாரிஸன் விண்கலம் (கணனியால் வடிவமைக்கப்பட்டது)

20 ஆம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட ஒரேயொரு கிரகமான புளூட்டோவுக்கு ஏனைய கோள்களைப் போன்றே பாதாள உலகத்தினரின் கடவுளும் தன்னை மறைத்துக் கொள்ளும் சக்தி கொண்டவருமான ரோமானியர்களின் கடவுளின் பெயர் சூட்டப் பட்டுள்ளது. மிகக் குளிர்ந்த பாறைக் கிரகமான புளூட்டோவின் வெப்ப நிலை -235 பாகைக்கும் -170 பாகைக்கும் இடைப்பட்டது. இது சூரியனை ஒரு முறை சுற்றி வரா 247.7 புவி வருடங்களை எடுக்கின்றது. புளூட்டோ தன்னைத் தானே ஒரு முறை சுற்ற எடுக்கும் நேரமும் மிகக் குறைவாகும். இதன் சுழற்சிக் காலம் 6 நாட்கள் 9 மணி 6 நிமிடம் ஆகும்.

ஹபிள் போன்ற மிகுந்த பார்வைத் திறனுள்ள தொலைக்காட்டியால் அவதானிக்கும் போது கூட இது ஒளி அடர்த்தி குறைவாக மங்கலாகவே தென்படுகின்றது. புளூட்டோவுக்கு சாரோன் எனப்படும் ஒரு பெரிய நிலவு உட்பட மொத்தம் 4 நிலவுகள் உள்ளன.


sj%252017%2520-%25202.jpg
புளூட்டோவும் சாரோனும் (ஹபிள் தொலைக் காட்டியால் எடுக்கப் பட்டது)

இனி புளூட்டோ குறித்த சுருக்கமான தகவல்களைப் பார்ப்போம் -

1.தன்னைத் தானே ஒரு முறை சுற்ற எடுக்கும் காலம் - 6 நாள் 9 மணி 6 நிமிடம்
2.சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் - 248 வருடம் 197 நாள் 5.5 மணி
3.சூரியனில் இருந்து சராசரித் தூரம் - 5 906 376 200 Km அல்லது 39.48 AU
4.மையத்தின் ஊடாக விட்டம் - 2320 Km
5.தனது அச்சில் சாய்வு - 119.61 பாகை
5.சுற்றுப் பாதையில் வேகம் -  4.7490 Km/s  
6.மேற்பரப்பளவு - 17 மில்லியன் Km2
7.நிறை - 1.290 * (10 இன் வலு 22) Kg
8.சராசரி அடர்த்தி - 2.05 g/cm3
9.மேற்பரப்பு ஈர்ப்பு விசை - 0.6 m/s2
10.தப்பு வேகம் - 1.2 Km/s
11.எதிரொளி திறன் - 0.3
12.மேற்பரப்பு வெப்பநிலை - குறை 33K நடு 44K மிகை 55K
13.துணைக் கோள்கள் - 4
14.மேற்பரப்பு அழுத்தம் - 0.01 Kpa

வளி மண்டலத்திலுள்ள வாயுக்களின் வீதம் - 

1.நைதரசன் - 90%
2.மீதேன் - 10%

சூரியனைச் சுற்றி வரும் ஒரு பொருள் கிரகம் எனக் கருதப்படுவதற்குப் பின்வரும் நிபந்தனைகளைக் கட்டாயமாகப் பூர்த்தி செய்ய வேண்டும். அவையாவன :

1.சூரியனை ஒரு சுற்றுப் பாதையில் சுற்றி வர வேண்டும்.
2.கிட்டத்தட்ட கோள வடிவம் எனக் கருதத் தக்க நிறையைப் பெற்றிருக்க வேண்டும்.
3.தனது ஈர்ப்பு விசை காரணமாக தனது சுற்றுப் பாதையின் அண்மையில் அமைந்துள்ள பொருட்களை இல்லாமல் செய்திருக்க வேண்டும்

கியூப்பர் பெல்ட்டில் அமைந்துள்ள புளூட்டோ அதன் துணைக் கோள் சாரோன் உட்பட ஏனைய விண் பொருட்கள் இம் மூன்று நிபந்தனைகளில் மூன்றாவதைத் திருப்தி செய்யாததால் அவை கோள் அல்லது கிரகம் என அழைக்கப் படும் அந்தஸ்தை இழந்துள்ளன. இதுவரை சூரிய குடும்பத்தின் அங்கத்தவர்களான பூமியின் சந்திரன் உட்பட ஏனைய ஒன்பது கிரகங்களைப் பற்றிய தகவல்களைப் பார்த்தோம். அடுத்த நட்சத்திரப் பயணங்கள் தொடரில் பிரபஞ்ச்தை விரிவடையச் செய்து கொண்டிருக்கும் கரும் சக்தி பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.
 

- 4தமிழ்மீடியாவுக்காக நவன்

 

http://www.4tamilmedia.com/knowledge/essays/5288-star-journey-17-pluto

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நட்சத்திரப் பயணங்கள் 18 : பிரபஞ்சவியல் 1

Cosmology_CoverPage.jpg

 

நீண்ட இடைவெளிக்குப் பின் நட்சத்திரப் பயணங்கள் எனும் நமது விண்வெளித் தொடரில் புதிய பகுதியாக பிரபஞ்சவியல் எனப்படும் Cosmology புதிய தொடராக தொடக்கியுள்ளோம். முதல் கட்டமாக பிரபஞ்சம் விரிவடைவதைத் துரிதப் படுத்திக் கொண்டிருப்பதும் பிரபஞ்சத்தில் மிக அதிகளவாகக் காணப்படுவதுமான கரும் சக்தியைப் பற்றிய தகவல்களை ஆராய்வோம்.

 

sj+18+-+1.jpg
அவதானிக்கத் தக்க பிரபஞ்ச வெளியின் அண்டங்கள்

 

நமது பிரபஞ்சத்தில் எண்ணிலடங்காது ஒளி வீசிக் காணப்படும் நட்சத்திரங்கள், சூப்பர்நோவாக்கள், மற்றும் குவாசர்கள் என்பவற்றை தவிர்த்து விட்டுப் பார்த்தால் பிரபஞ்சம் முழுவதும் இருளாகவே காணப்படும். 

இதற்குக் காரணம் பிரபஞ்சத்தில் மிகப் பெரியளவு இடத்தை கரும்சக்தியும் (74%) கரும்பொருளும் (22%) தக்க வைத்திருப்பதே ஆகும். ஏனைய பொருட்களைப் பார்த்தால் அண்டங்களுக்கு இடையேயுள்ள வாயுப் படலம் 3.6% வீதத்தையும் பிரபஞ்சத்தில் உள்ள ஒளி வீசிடும் பொருட்களும் நட்சத்திரங்களும் 0.4% வீதத்தையும் மட்டுமே கொண்டுள்ளன.


sj+18+-+2.jpg
பிரபஞ்சத்தை அடைக்கும் கூறுகளின் சதவீதம்

கரும் சக்தி என்பது பிரபஞ்சத்தில் காணப்படும் மிக முக்கியமான விசையான ஈர்ப்பு விசைக்கு (Gravity) எதிரான விலக்கு விசையாகும் (Anti-Gravity). இது முக்கியமாக அண்டங்களின் (Galaxies) நகர்ச்சியைக் கட்டுப் படுத்துகின்றது. மேலும் அண்டங்களின் வெவ்வேறான வடிவங்களுக்குக் காரணமாக விளங்குவதுடன் அவை தமக்கிடையே மோதிக் கொள்ளாமல் இருக்க வைக்கவும்,  ஒன்றிலிருந்து இன்னொன்றை அதிகரித்து வரும் வேகத்தில் விலகிச் செல்லவும் வைக்கின்றது. இதன் மூலம் பிரபஞ்சத்தின் விரிவு துரிதப்படுகின்றது என பிரிட்டனின் நாட்டிங்ஹாம் பல்கலைக் கழகத்தின் பேருரையாளரும், வானியலாளருமான கிறிஸ்டோபர் கன்ஸிலிஸ் கூறுகிறார்.  

sj+18+-+3.jpg
அண்டங்களின் நகர்வு

நமது பூமி மற்றும் நட்சத்திரங்களில் Entropy எனப்படும் பிரபஞ்ச வெப்பத் தேய்வு தீவிரமாகிக் கொண்டு வருகின்றது. இதற்குக் காரணம் கரும்சக்தியாகும். அதாவது நட்சத்திரங்களில் அணுக்கரு எரிசக்தி தீர்ந்து போய் அவை கருந்துளைகளாகியோ அல்லது வேறு விதத்திலோ முற்றாக அழிந்து விடும். இதன் பின்னர் ஒரு காலத்தில் அனைத்து நட்சத்திரங்களுக்கும் இந்நிலை ஏற்பட்டு பிரபஞ்சம் இருண்ட வெளியாகி விடக் கூடும் என சில விஞ்ஞானிகளால் எதிர்வு கூறப்படுகின்றது.

1998 ஆம் ஆண்டுக்கு முன் கருமைச் சக்தி எனும் விஞ்ஞானக் கருத்தை யாரும் கேள்விப் பட்டதில்லை. இக் காலப்பகுதியில் அகிலவியல் மேதைகளான பிரிட்டிஷ் விஞ்ஞானி ஃபிரெட் ஹாயில் மற்றும் அவரின் மாணவர் ஜெயந்த் நர்லிகர் இருவரும் பிரபஞ்சத் தோற்றத்தை விளக்கும் நிரந்தர நிலை அமைப்புப் பிரபஞ்சத்தைப் (Steady State Theory of the Universe) பிரகடனம் செய்திருந்தனர். ஆனால் இக்கொள்கை ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கொள்கையைப் (General Theroy of Relativity) பூர்த்தி செய்த போதும் மக்களால் நம்பப் படவில்லை. இதற்குக் காரணம் பெரு வெடிப்பு நியதியை நம்பி வானாராய்ச்சி செய்து வருபவர்கள் புதிதாகக் கண்டு பிடித்த கரும் பொருள் மற்றும் கரும் சக்தி ஆகிய கோட்பாடுகளை இந்நியதியின் நிழலாகப் பின் தொடர்ந்தமையே ஆகும்.பிரபஞ்சக் கட்டமைப்பின் வெவ்வேறு மாதிரிகள்

பிரபஞ்சத்திலுள்ள ஒளிச்சக்தி, ஒலிச்சக்தி, மின்சக்தி, காந்தசக்தி, அணுச்சக்தி, மற்றும் ஈர்ப்புச்சக்தி போல அங்கு புதிராக மறைந்திருக்கும் ஒரு விசையே கரும் சக்தி என்றால் அது மிகையாகாது. இக் கரும்சக்தி இரு வகைகளாகப் பிரித்து ஆய்வு செய்யப் படுகின்றது. 
அவை

1. பிரபஞ்ச மாறிலி (cosmological constant)
2 ஸ்காலார் ஃபீல்டு (scalar field) எனப்படும் சக்தியின் அடர்த்தி. இது காலம் மற்றும் வெளியில் வேறுபடுகிறது.

இவற்றில்  பிரபஞ்ச மாறிலி பௌதிகவியலில் வெற்றிட சக்திக்கு (Vacum energy) சமனாகக் கருதப் படுகின்றது. ஸ்காலார் ஃபீல்ட் வெற்றிடத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்திய போதும் இவ்வித்தியாசம் வெற்றிட சக்தியிலிருந்து வேறுபடுத்தி அறிய முடியாத அளக்கு மிகக் குறைவாகும்.

பிரபஞ்சம் விரிவடைந்து வருவதை உறுதிப் படுத்துவதற்கும் அளவிடுவதற்கும் பொதுச் சார்புக் கொள்கையும் கரும் சக்திக் கொள்கையும் பயன்படுத்தப் படுகின்றன. இதன் மூலம் பிரபஞ்சத்தின் வெப்பம், அமுக்கம், சடப்பொருள் வீதம்,சக்தி, குறித்த வெளியிலுள்ள வெற்றிடச் சக்தி அடர்த்தி ஆகியவற்றுக்கான தொடர்பை கண்டறிவதே இன்றைய அவதானிக்கத் தக்க விண்வெளியில் உள்ள மிகப் பெரிய சவால் ஆகும்.

CMB எனப்படும் விண்வெளியில் உள்ள புற ஊதாக் கதிர்களின் பின்புல வரைபடம் WMAP எனும் செய்மதி மூலம் அனுமானிக்கப் பட்டு பிரபஞ்சத்தின் தட்டையான வரைபடம் பெறப்பட்டது. இதில் கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக இச் செய்மதியால் சேகரிக்கப் பட்ட விபரங்களைக் கொண்டு பிரபஞ்ச வெளியை அடைக்கும் பொருட்களின் சதவீதம் அறியப்பட்டது.


sj+18+-+6.jpg

WMAP செய்மதிஇன்று கேத்திர கணித (Geometry) ரீதியில் பிரபஞ்சத்தின் முப்பரிமாணக் கட்டமைப்பை வடிவமைக்க உதவும் கருது கோளான கரும் சக்தி ஆரம்பத்தில் கண்டு பிடிக்கப் பட்டது அப்படி ஒரு பொருள் உள்ளது என்ற ஊகத்திலேயே ஆகும். அதாவது பிரபஞ்சத்தில் மிதந்து கொண்டிருக்கும் எண்ணற்ற அண்டங்கள் (Galaxies) ஆற்றல் மிக்க வானியல் தொலைக் காட்டிகளால் நோக்கப் படும் போது தொலைதூரத்தில் ஒன்றை விட்டு ஒன்று அதிகரிக்கும் வேகத்தில் விலகிச் செல்வதைக் கண்டனர். நியூட்டன் ஈர்ப்பு விதிகளின் படி தனிப்பட்ட ஒரு விசையின்றி இவ்வேகங்கள் அதிகரிப்பது சாத்தியமில்லை. இந்தக் காரண காரிய யூகத்தில் தான் கருமைச் சக்தி எனும் ஒரு விசை பிரபஞ்சம் முழுவதையும் ஆக்கிரமித்துள்ளது எனும் கோட்பாடு பிறந்தது.


sj+18+-+5.jpg

விரிவடையும் பிரபஞ்சம்

அண்டங்கள் யாவும் தமக்கிடையே ஈர்ப்பு சக்தியைக் கொண்டுள்ள போதும் இவ் ஈர்ப்பு விசை கரும் சக்தியினால் ஏற்படும் விரிவைத் தடுப்பத்தில்லை. கரும்சக்திக்கு முக்கியமான 3 அம்சங்கள் உள்ளது. அவையாவன :

1.கண்ணுக்குப் புலப்படாமல் பிரபஞ்ச முழுவதும் ஓர் அசுர விலக்கு விசையாகவும் (Anti-Gravity Force) அகில விரைவாக்கியாகவும் (Cosmic Accelerator) செயற்படுதல்

2.அண்டங்களின் வடிவம் மற்றும் வளர்ச்சியை நெறிப் படுத்துதல்

3.பிக்பாங் நிகழ்ந்ததிலிருந்து இன்றைய நிலை வரை அணுக் கருத்தாக்கங்களை நிகழ்த்தி பூமி முதலான கிரகங்களில் மூலகங்கள் மற்றும் பஞ்ச பூதங்கள் என்பன உருவாக வழிவகுத்து வருகின்றமை

இதுவரை கரும் சக்தி பற்றிய அடிப்படைத் தகவல்களைப் பார்த்தோம். அடுத்த பகுதியில் கரும்சக்தி குறித்த மேலும் சில தகவல்களுடன் பிரபஞ்ச அழிவுக்கு அது எவ்வாறு இட்டுச் செல்ல வல்லது என்பது குறித்தும் ஆராய்வோம்.

தகவலுதவி, நன்றி - விக்கிபீடியா, ஜெயபாரதன் (வலைப்பதிவாளர்)

 

 

http://www.4tamilmedia.com/knowledge/essays/6540-cosmolgy-part-1

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நட்சத்திரப் பயணங்கள் 19 : பிரபஞ்சவியல் 2

 

நமது நட்சத்திரப் பயணங்கள் விண்வெளித் தொடரில் சென்ற வாரம் பிரபஞ்சவியல் எனும் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி இருந்தோம்.

அதில் இன்றைய விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில் முதல் நிலை வகிப்பதும் அவர்களை மர்மத்தில் ஆழ்த்தி வருவதும் ஆன கரும் சக்தி (Dark Energy) எனும் அகில விரைவாக்கி அல்லது அசுர விலக்கு விசை குறித்த அடிப்படைத் தகவல்களைப் பார்த்தோம். இன்று அது குறித்து மேலதிக தகவல்களையும் இக் கரும் சக்தி எவ்வாறு பிரபஞ்ச அழிவுக்கு வழி சமைக்க வல்லது என்பது குறித்தும் பார்ப்போம்.

பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிக் கருதும் போது வெகு சமீபத்திலேயே அதாவது 1998 ஆம் ஆண்டே கரும் சக்தி எனும் மறைப்பு விசை பிரபஞ்சத்தை ஆக்கிரமித்திருக்கிறது என்ற ஊகம் உறுதிப் பட்டது. அதுவரை அதன் இருப்பை அறியாது வானியல் வெறும் குருடாகவே இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது இக்கருமைச் சக்தியை மையமாக வைத்து இன்று நிலவும் பௌதிகவியலின் (Phsics and meta physics) கோட்பாடுகள் விருத்தி செய்யப் படவுள்ளமை முக்கியமானது.sj%252019-4.jpg

பிரபஞ்சக் கட்டமைப்பின் வெவ்வேறு மாதிரிகள்
 

இதன் ஒரு கட்டமாகவே சுவிட்சர்லாந்தின் சேர்ன் நகரில் சமீபத்தில் மேற்கொள்ளப் பட்டு வரும் கடவுள் துணிக்கை ஆராய்ச்சியை சொல்ல முடியும். இவ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பல்வேறு நாடுகளில் இருந்தும் வந்துள்ள விஞ்ஞானிகள் தற்போது கடவுள் துணிக்கை இருப்பதை உறுதி செய்யும் அதே போன்ற ஒரு துணிக்கையை கண்டு பிடித்திருந்தனர். இதை மேலும் உறுதி செய்யும் பட்சத்தில் பிரபஞ்சவியலின் மிக முக்கியமான கூறுகளாகவும் மேலும் அதிகமாக ஆராயப் பட வேண்டிய தேவை உடையதாகவும் உள்ள கரும் பொருள் மற்றும் கரும் சக்தி குறித்த இயல்புகளை அறிய இது உதவும் எனக் கூறப் படுகின்றது.

கரும் சக்தி குறித்து இரு வரிகளில் சுருக்கமாக சொல்வதானால் பெருவெடிப்புடன் (Bigbang) தோன்றிய காலத்தை வழி நடத்தும் வெளியில் மறைந்துள்ள விலக்கு விசை எனலாம். அகில விசை (Cosmic Force) எனக் கருதப்படும் கரும் சக்தி இருப்பதை நாசா பெப்ரவரி 2003 ஆம் ஆண்டே நிரூபித்தது.

இதற்கு முன்னர் அல்பேர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீஃபன் ஹாக்கிங் வரை பிரபஞ்சத்தின் அழிவு குறித்து ஒருமித்த கருத்தையே கொண்டிருந்தார்கள். அதாவது பிரபஞ்சம் ஒருநாள் விரிவை நிறுத்தி ஈர்ப்பு விசையால் திரண்டு உள்வெடிப்பில் (Implosion) முறியும் என இவர்கள் கருதினார்கள். இத்தகைய அழிவு பாரிய உடைவு (Big Crunch) எனப் படுகின்றது. ஆனால் இக்கால விஞ்ஞானிகள் இக் கருத்தை ஏற்றுக் கொள்வதில்லை.

இதற்கான காரணம் சமீபத்தைய கண்டு பிடிப்பான கரும் சக்தி பிரபஞ்ச விரிவாக்கத்தைத் துரிதப் படுத்துகிறது (accelarating) எனும் கோட்பாடு ஆகும். அதாவது பிரபஞ்சக் கட்டமைப்பை வடிவமைப்பதற்காகவும் அதன் தோற்றத்தை விளக்கும் பெருவெடிப்பு (Bigbang) கொள்கையினை உறுதிப் படுத்துவதற்காகவும் நாசாவினால் 2001 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப் பட்ட WMAP எனப்படும் நுண்ணலை வேறுபாட்டு விண்ணுளவி எனும் செய்மதி மின்காந்த அலைகளைக் கொண்டு விண்வெளியை ஆராய்ந்தது. இதில் பிரபஞ்சத்தில் 'கனல் தளங்கள்' (Hot Spots) இருப்பதை அது கண்டுபிடித்ததன் மூலம் பிரபஞ்சம் துரித விரைவாக்கத்தில் விரிவதை (Accelarating Expansion) உறுதி செய்தது. இதன் மூலம் பாரிய உடைவுக் கொள்கை (Big Crunch) அடிபட்டுப் போனது.sj%252019-5.jpg

பிரபஞ்ச அழிவுக்கு வித்திடும் கரும் சக்தி
 

அதாவது பிரபஞ்ச விரிவு ஒவ்வொரு விநாடியும் துரிதப் படுவதால் (Accelerating) ஈர்ப்பு விசை காரணமாக அண்டங்கள் சுருங்கி நொறுங்க வாய்ப்பில்லை. இப் புதிய கோட்பாடு பிரபஞ்சம் குறித்த நமது கருத்தை மாற்றி விடும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் வானியலாளர் அந்தோனி லாஸன்பி கூறியுள்ளார்.sj%252019-1.jpgபிரபஞ்ச அழிவு வகைகள் - நேர அட்டவணை
 

பிரபஞ்சத்தில் கரும் சக்தி ஆதிக்கம் செலுத்துவதைக் கண்டு பிடித்த பின்னர் விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ளப் பட்ட பிரபஞ்ச அழிவுக் கொள்கைகளில் முதலாவது பாரிய உதறல் (Big Rip) எனப் படும் வகையாகும். அதாவது பிரபஞ்சத்தின் விரிவியக்க வீதம் மிகையாகத் துரிதமாகும் போது கருமைச் சக்தியுடன் இணைந்த சக்தியின் திணிவு (Energy Density Associated with Dark Energy) வலிமை பெற்று அது பேய்ச் சக்தியாக (Phantom Energy) உக்கிரமடையும். இதனால் அண்டங்கள், நட்சத்திரங்கள், மற்றும் கிரகங்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பாற்றல் வலுவிழந்து பேய்ச் சக்தியின் கோர தாண்டவத்தால் உதறி எறியப்பட்டு அழிவைச் சந்திக்கும் எனக் கூறப்படுகின்றது.

இது குறித்து மேலும் விவரிக்கையில் பேய்ச்சக்தி அணுக்களைக் கூட பிளந்து விரியச் செய்து விடும் எனவும் கூறப் படுகின்றது. எனினும் இந்த Big RiP எனும் அழிவு இன்னும் பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னரேயே நடைபெறும் எனக் கணித்துள்ளனர்.sj%252019-2.jpg
பாரிய உதறல் பிரபஞ்ச அழிவு
 

பிரபஞ்சத்தின் அழிவு குறித்து மேலதிக தகவல்களை நமது நட்சத்திரப் பயணங்கள் தொடரில் தொடர் 6 இல் வாசகர்கள் பார்வையிட முடியும். அதற்கான இணைப்பு -

பிரபஞ்சத்தின் தோற்றம் (முடிவு) - நட்சத்திர பயணங்கள் : 6

இதுவரை கரும் சக்தி  குறித்த தகவல்களையும் அது எவ்வாறு பிரபஞ்சத்தை ஆட்டிப் படைக்கிறது என்பது குறித்தும் பார்த்தோம். அடுத்த தொடரில் இதன் ஜோடியும் பிரபஞ்சத்தின் திணிவில் 63% வீதத்தை தன் வசம் கொண்டிருப்பதும் ஆனால் அதி சக்தி வாய்ந்த தொலைக் காட்டிகளால் கூட அவதானிக்க முடியாதளவு மறைவில் கருமைப் பிண்டமாகவும் விளங்கும் கரும் பொருள் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.

தகவலுதவி, நன்றி - விக்கிபீடியா, ஜெயபாரதன் (வலைப்பதிவாளர்)

http://www.4tamilmedia.com/knowledge/essays/6730-cosmolgy-part-2

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நட்சத்திரப் பயணங்கள் 20 : பிரபஞ்சவியல் 3 (கரும் பொருள்)

 

 

sj20%2520-%25204.jpg

நமது நட்சத்திரப் பயணங்கள் விண்வெளித் தொடரின் புதிய அத்தியாயமான பிரபஞ்சவியல் பகுதியில் முதல் இரண்டு தொடர்களிலும் கரும் சக்தி (Dark energy) பற்றிய சுருக்கமான மற்றும் தெளிவான விளக்கத்தைப் பார்த்தோம்.

 இன்றைய தொடரில் அதன் ஜோடியான கரும் பொருள் (Dark matter) பற்றிய விபரங்களைப் பார்ப்போம்.

நாம் வாழும் பூமி உட்பட இந்த பிரபஞ்சத்தில் மிக அதிகளவு கனவளவைத் (74%) தன்வசம் கொண்டிருப்பது கரும் சக்தி. இதைப் போல் அதிகளவு திணிவைத் தன் வசம் கொண்டிருக்கும் சடப்பொருள் கரும் பொருள் ஆகும். இக் கரும் பொருள் பிரபஞ்சத்தை அடைக்கும் கனவளவில் 22% ஐயும் திணிவில் 63% ஐயும் கொண்டுள்ளது. இக்கரும் பொருளானது அண்டங்களுக்கு (galaxies) மத்தியில் மறைவாகக் காணப்பட்டு அவை ஈர்ப்பு விசை காரணமாக ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளாமல் தடுக்கின்றது. இக்கரும்பொருள் கரும் சக்தி போலவே மிக அண்மையில் அதாவது 21 ஆம் நூற்றாண்டிலேயே விஞ்ஞானிகளால் ஊர்ஜிதப் படுத்தப் பட்ட மிக முக்கியமான அதே நேரம் மர்மமான ஒரு அவதானம் ஆகும்.

அண்டங்கள் (Galaxies) தமக்கிடையே கொண்டிருக்கும் கோடானு கோடி நட்சத்திரங்கள் அவற்றின் மையத்தில் உள்ள கரும் பொருளை (அல்லது அதன் அம்சமான கருந்துளையை) சுற்றி வருகின்றன எனவும் அண்டங்கள் எதையும் சுற்றாமல் கரும் சக்தியால் உந்தப் பட்டு ஒரே திசையில் அதிகரிக்கும் வேகத்துடன் பிரிந்து செல்கின்றன (பிரபஞ்ம் விரிவடைதல்) எனவும் கூறப்படுகின்றது. இதன் போது சில சமயங்களில் இரு அண்டங்கள் அல்லது பல அண்டங்கள் தமக்கிடையே மோதி புதிய அண்டங்கள் தோன்ற அல்லது சூப்பர் நோவாக்கள் (Supernova) உருவாக வழி பிறக்கின்றது.sj%252020%2520-%25201.jpgஇரு அண்டங்கள் மோதி உருவான புது அண்டம்
 

உதாரணமாக வானியலாளர்கள் முதன் முதலாக ஹபிள் மற்றும் சந்திரா விண் தொலைக் காட்டிகள் மூலம் பால்வெளி அண்டத்தில் இருந்து 5.7 பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் அமைந்துள்ள MACSJOO25.4-1222 எனும் அண்டத்துடன் இன்னுமொரு அண்டம் மோதிய அரிய நிகழ்வை பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் அண்டங்களுக்கு இடையேயும் மையத்திலும் பெருமளவு கரும் பொருள் காணப்படுவதற்கு அழுத்தமான சான்று கிடைத்தது. இக் கண்டு பிடிப்பு 2008 ஆம் ஆண்டு ஆகஸ்டு 30 ஆம் திகதி மேற்கொள்ளப் பட்டதாக BBC செய்தி நிறுவனம் முதன் முதலில் செய்தி வெளியிட்டிருந்தது.

அதாவது இம்மோதலின் போது அண்டங்கள் கொண்டிருக்கும் சாதாரண சடப் பொருளிலிருந்து கரும் பொருள் பிரிந்ததை வானியல் நிபுணர்கள் கருவிகள் (விண் தொலைக் காட்டி) மூலம் கண்டு பிடித்துள்ளனர்.

மேலும் நாம் வாழும் பூமி மற்றும் சூரிய குடும்பம் என்பவற்றுடன் பல மில்லியன் நட்சத்திரங்களைக் கொண்டிருக்கும் அண்டமான பால் வெளியின் (Milky way galaxy) மையத்தில் மிகப் பெரிய கருந்துளை ஒன்று காணப்படுவதாகவும் வானியல் அறிஞர்கள் கூறுகின்றனர். ஏனைய அண்டங்களின் நிலமையும் இவ்வாறு இருக்க இன்றைய நவீன தகவற் தொடர்பு யுகத்தில் விஞ்ஞானிகளின் மூளையைக் குழப்பிக் கொண்டிருக்கும் கோட்பாடான கரும் பொருள் பற்றிய முடிச்சு இனிவரும் யுகத்தில் அவிழ்க்கப் பட வேண்டிய கட்டாயம் உள்ளது. இல்லாவிட்டால் பிரபஞ்சத்தின் அம்சங்களை விஞ்ஞானிகள் சிக்கலின்றி எளிதாக நிர்ணயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டு அறிவியலில் மிகப் பெரிய புதிர் தோன்றி விடும்.


sj20%2520-%25204.jpgபால்வெளி அண்டம் (Milky way Galaxy)
 

ஏனென்றால் கரும்பொருள் பற்றி மிக அண்மையிலேயே சான்று கிடைத்த போதும் இதன் அடிப்படை அம்சம் 1930 ஆண்டு டச் வானியல் அறிஞர் ஜான் ஓர்ட் (Jan Oort) என்பவரால் பல ஆண்டுகளுக்கு முன்னமேயே கண்டு பிடிக்கப்பட்டது. அதாவது அவர் சூரியனுக்கு அருகில் நட்சத்திரங்களின் நகர்ச்சிகளை ஆராயும் போதே இதற்கு அடிக்கல் நாட்டப் பட்டு விட்டது. எனினும் விஞ்ஞானிகளால் இதை ஊர்ஜிதம் செய்ய இவ்வளவு காலம் (78 வருடங்கள்) சென்றமை அறிவியல் முன்னேற்றத்தில் ஒரு சிறிய பின்னடைவு என்றே கூற வேண்டும்.

இந்த அறிஞரின் யூகம் என்னவென்றால் நமது பால்வெளி அண்டம் போல் பல்லாயிரக் கணக்கான அண்டங்கள் இப் பிரபஞ்சத்தில் காணப் படுகின்றன. மேலும் இவை தமக்கிடையே ஆட்டு மந்தைகள் போல் ஒன்றாய்க் கூடி நகர்வதுடன் (Clusters) இவை பிசகி விடாமல் செல்வதற்கு இவற்றின் மத்தியில் அதிகளவு திணிவுடைய பொருள் காணப்பட வேண்டும் எனவும் கூறிய அவர் இத் திணிவே நட்சத்திரங்கள் அண்டங்களில் இருந்து தப்பி விடாமலும் ஈர்ப்பு விசையால் பாதிப்புற்று அண்டத்தின் மையத்தை சுற்றி ஓர் ஒழுக்கில் வரும் தன்மையைப் பெறுவதாகவும் இவர் கருதினார்.

இவர் தான் கண்டு பிடித்த திணிவுடைய பொருளை கரும் பொருள் என்று குறிப்பிடா விட்டாலும் இப்பொருள் சூரியனில் உள்ள திணிவை விட மூன்று மடங்கு அதிகம் எனக் கூறியிருந்தார். இத்திணிவுடைய பொருளே பின்னாளில் அறியப் பட்ட கரும் பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபஞ்சத்தின் கட்டமைப்பு, அதன் தோற்றம், மற்றும் எதிர்காலம் என்பவற்றை நிர்ணயிக்கும் கரும் பொருள் பற்றி மூன்று அடிப்படை வினாக்கள் எழுகின்றன. அவையாவன :

1.கரும் பொருள் பிரபஞ்சத்தில் எங்கே உள்ளது?
2.பிரபஞ்சத்தில் கண்ணுக்குத் தெரியும் சூரிய மண்டலம், கோள்கள் போல் கண்ணுக்குத் தெரியாத கரும் பொருள் எத்தனை மடங்கு அதிகமாக உள்ளது?
3.கரும் பொருளில் உள்ள உட்பொருட்கள் என்ன?


sj%252020%2520-%25203.jpgகரும் பொருள் பற்றிய கவிதை
 

இவற்றுக்கான விடையை ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.

1.கரும் பொருள் அண்டங்களின் (Galaxies) உட்பகுதியிலும், எல்லைகளில் அல்லது இடைப் பகுதியிலும் காணப் படுகின்றது.

2.அண்டங்களில் காணப்படும் கண்ணுக்குத் தெரியும் சடப்பொருட்களை விட கரும் பொருள் குறைந்த பட்சம் 10 மடங்கு அதிகம் உள்ளது. அதாவது சடப் பொருள் : கரும்பொருள்
வீதம் - 1:10 அதிக பட்சம் - 1:100. (இவ்விகிதம் தேர்வு செய்யப் பட்ட ஆயிரம் அண்டங்களில் ஐதரசன் வாயுப் படலம் சுழலும் வேகத்தையும் அவற்றிலுள்ள வாயுப் படலத்தின் வெப்பத்தினையும் அளவிட்டு கண்டு பிடிக்கப் பட்டது.)

3.கண்ணுக்குத் தெரியாத கரும் பொருளின் கணணி மாடல்களை நோக்கும் போது பின்வரும் மூலக்கூறுகளில் ஒன்று அதில் காணப்படலாம் என ஊகங்கள் உள்ளன.
1.இயங்கும் வலுவற்ற திணிவுடைய துகள்கள் (Weekly Interacting Massive Particles - WIMPS) எனும் பரமாணுக்கள் (Sub-atomic Stuff)
2.திணிவுடைய வான் இயற்பியல் திணிப்பு சடம் (Massive Astrophsyical Compact Objects - MACHO) எனும் சாதாரண சடப் பொருள். இப்பொருள் கதிர்வீச்சோ ஒளிவீச்சோ இல்லாதது.sj20%2520-%25202.jpgகரும்பொருள் கணனி மாடல்
 

இதுவரை நவீன யுகத்தில் அதிகம் ஆராயப்பட வேண்டிய தேவையைக் கொண்டிருக்கும் கரும் பொருள் பற்றிய அடிப்படைத் தகவல்கள் சிலவற்றைப் பார்த்தோம். அடுத்த தொடரில் கரும் பொருள் பற்றிய மேலதிக தகவல்களுடன் கூடிய இதன் தொடர்ச்சியை எதிர்பாருங்கள். 

 

http://www.4tamilmedia.com/knowledge/essays/6996-cosmolgy-part-3

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நட்சத்திரப் பயணங்கள் 21 : பிரபஞ்சவியல் 4 (கரும் பொருள் II)

 

 

sj%252021-3.jpg

நட்சத்திரப் பயணங்கள் தொடரின் புதிய அத்தியாயமான பிரபஞ்சவியலில் (Cosmology) தற்போது பிரபஞ்சத்தின் முக்கிய அம்சங்களான கரும் சக்தி மற்றும் கரும் பொருள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம்.

 

சென்ற தொடரில் கரும் பொருள் பற்றிய அடிப்படைத் தகவல்களைப் பார்த்தோம். இன்று இது பற்றிய மேலதிக தகவல்களையும் இதன் சிறப்புக்களையும் பார்ப்போம்.sj%252021-4.jpg

 

பால்வெளி அண்டத்திலுள்ள கரும்பொருள் (The Amount of Dark Matter Inside Milkyway Galaxy)
 

பிரபஞ்சத்தில் கரும் பொருள் சாதாரண கண்ணுக்குத் தெரியும் சடப் பொருளை விட 5 மடங்கு அதிகம் உள்ளது என்பது ஏற்கனவே கூறப்பட்ட விடயம். இக்கரும்பொருளின் இருப்பு இரு அண்டங்கள் (Galaxies) தமக்கிடையே மோதிக் கொள்வதை சக்தி வாய்ந்த விண் தொலைகாட்டி மூலம் நோக்கி உறுதிப் படுத்தப்பட்டது. உதாரணமாக விஞ்ஞானிகள் சந்திரா எக்ஸ்-ரே தொலைநோக்கியைப் பயன்படுத்தி இரு அண்டங்கள் மோதிக் கொள்ளும் போது அவற்றுக்கிடையே உள்ள வாயுப் படலத்திலிருந்து வரும் எக்ஸ்-ரே கதிர்களை ஆய்வு செய்ததில் இவை இணைந்து சுமார் மில்லியன் Km/h வேகத்தில் புதிய அண்டத்தை உருவாக்கிய போதும் அவற்றுக்கிடையேயான கரும் பொருளின் நகர்ச்சி வேகம் குறையாது அவற்றை ஊடுருவிச் சென்று கொண்டிருந்ததை அறிய முடிந்தது.

கரும் பொருள் இயங்கும் வேகம் அண்டங்கள் (Galaxies) மோதும் போது மெதுவாகுவதில்லை என்னும் இந்த அவதானம் கரும் பொருளில் உள்ள பிரதான அணுக்கள் ஈர்ப்பாற்றலால் இழுக்கப் பட்ட போதும் இவை ஒன்றுடன் ஒன்று கலந்து இயங்குவதில்லை எனும் கண்டு பிடிப்புக்குக் காரணமாக உள்ளது.

கரும் பொருள் ஓளியையோ அல்லது கதிர் வீச்சுக்களையோ வெளிப்படுத்தாத காரணத்தால் அவற்றை விண்வெளியில் கண்டு உளவுவது கடினம். இது மூன்று வகைப் படுத்தப் படுகின்றது. அவையாவன, பாரியானிக் கரும் பொருள் (Baryonic Matter), வெப்பக் கரும் பொருள் (HDM : Hot  Dark Matter), குளிர்ப்புக் கரும் பொருள் (CDM : Cold Dark Matter).

நாம் சென்ற தொடரில் பார்த்த திணிவுடைய வான் இயற்பியல் திணிப்பு சடம் எனப்படும் (சுருக்கமாக மாக்கோ MACHO) மங்கிய ஒளி வீசும் இளம் விண்மீன்களில் காணப்படும் சடப்பொருளே பாரியானிக் கரும் பொருள் எனப்படுகின்றது. இது சாதாரண கண்ணுக்குத் தெரியும் பொருளை விட 10 மடங்கு அதிகம். பாரியானிக்கற்ற பொருள் CDM மற்றும் HDM என இரு வகைப் படும்.

HDM எனப்படும் வெப்பக் கரும் பொருள் துணிக்கைகள் ஒளி வேகத்தில் செல்லும் ஒப்புமைத் துகள்களாகும். (Relativistic Particles). பிரபஞ்சம் தோன்றிய புதிதில் வெளி முழுவதும் கரும் பொருள் நிறைந்து மிகுந்த அடர்த்தியாக இருந்தது. இதனால் கரும் பொருள் ஒளியைக் கடந்து செல்ல விடவில்லை. அதனால் அப்போது காணப்பட்ட கரும் பொருள் பெரும்பாலும் ஒப்புமையில்லாத குளிர்ப்புக் கரும் பொருள் (Non-Relativistic Particles) அல்லது வலுவிலாது இயங்கும் திணிவுடைய துகள்கள் (Weakly Interacting Massive Particles - WIMPS) என அழைக்கப்பட்டது.

அண்டங்களின் தொகுதிகளை (Clusters of Galaxies) வானியல் தொலைகாட்டிகளால் அவதானித்த போது தற்காலத்தில் குளிர்ப்பு கரும் பொருளே (CDM) பிரபஞ்சத்தில் அதிகம் காணப்படுவதாக அறியப்பட்டுள்ளது.


sj%252021-3.jpg

 

புள்ளெட் அண்டங்களின் தொகுதி (Bullet Clusters)
 

எனினும் எந்த வகை கரும் பொருளாக இருந்தாலும் அவை கொண்டிருக்கும் அடிப்படை மூலக்கூறுகள் எவை என்பது குறித்து இன்றைய விஞ்ஞானிகளால் கூட அறிய முடியாமலேயே இருக்கின்றது. அதாவது கரும் பொருள் ஆக்கப் பட்டிருக்கும் துணை அணுத் துணிக்கைகள் (Subatomic particle) எவை என்பதை அறிவதே இன்றைய துகள் இயற்பியல் (Particle physics) இன் முக்கிய பணியாக உள்ளது.

பிரபஞ்சவியலில் (Cosmology) அண்டங்களுக்கு இடையே உள்ள வெளியை நிரப்பும் மர்மப் பொருளாக கரும் பொருள் சித்தரிக்கப் பட்டு பிரபஞ்சம் குறித்த ஆய்வுகள் தற்காலத்தில் பெருமளவு மேற்கொள்ளப் பட்ட போதும் கரும் பொருள் கொள்கைக்குப் பதிலாக ஒழுங்கீனமுடைய வேறு கொள்கைகளும் வானியலாளர்களால் முன் வைக்கப் பட்டுள்ளன.

எனினும் பிரபஞ்சவியலில் பெரிதும் ஒத்துக் கொள்ளப்பட்ட கரும் சக்தி அல்லது கரும் பொருள் கொள்கையில் கரும் பொருள் என்பது பொதுவாக எவற்றைச் சுட்டி நிற்கிறது என்றால்  பிரபஞ்சத்தில் உள்ள ஒளியை வெளிவிடவோ பிரதிபலிக்கவோ செய்யாத அனைத்துப் பொருட்களையும் ஆகும். அதாவது அணுக்கள், மூலக்கூறுகள், துணை அணுத் துணிக்கைகள் (Subatomic particles) மட்டுமல்லாது இக்கட்டுரையை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்கள், நான் உட்பட பூமியில் உள்ள அனைத்துப் பொருட்களும் கிரகங்கள், பிரவுன் டிவார்ஃப் நட்சத்திரங்கள், மற்றும் கருந்துளைகள் அனைத்துமே கரும் பொருட்கள் தான்.

இக் கரும் பொருள் இருப்பதை ஈர்ப்புவிசையின் விளைவினாலும் அல்லது ஈர்ப்பு விசையின் ஒளிப் பிரதி விளைவினாலும் (Gravitational-lensing) மட்டுமல்லாது HDM எனும் வெப்பக் கரும் பொருளிலிருந்து வெளிவரும் எக்ஸ்-ரே கதிர்களை அளவிட்டுமே ஊகிக்க முடிகின்றது.sj%252021-1.jpg

 

ஈர்ப்பு விசையின் ஒளிப் பிரதி விளைவு
 

sj%252021-2.jpg

 

அண்டங்களுக்கிடையே ஒளிப் பிரதி விளைவு
 

கரும்பொருள் குறித்த இன்னும் மேலதிக தகவல்களை அடுத்த தொடரிலும் எதிர் பாருங்கள்....

நன்றி - தகவல் உதவி - ஜெயபாரதன்

 

http://4tamilmedia.com/knowledge/essays/7218-cosmolgy-part-4

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • கவலையில்லாத மனிதன்               சந்திரபாபு அவர்கள் முக்கியக்  கதாபாத்திரமாக நடித்து 1960 ம் வருடம் வெளியான படத்தின் தலைப்பு. இத்தலைப்புக்கு முழுத்தகுதியான ஒரு மனிதரை நெடுங்காலம் எனக்கு மிக அருகிலேயே பார்த்திருக்கிறேன். எனது அடுத்த வீட்டின் உரிமையாளரும் அங்கேயே நீண்ட காலம் வசித்தவருமான திரு. ரங்கசாமிதான் அவர். அந்தக் குடியிருப்புப் பகுதியில் 1982ல் முதலில் வீடு கட்டி வந்தவர் அவர்தான். 12 வருடங்கள் கழித்து அவருக்கு அண்டை வீட்டுக்காரனாகும் பேறு பெற்றவன் நான். அவர் உயர்ந்த கொள்கை பிடிப்புள்ளவர் என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை. ஆனால் அவரிடமிருந்து எனக்குக் கிடைத்த விஷயங்கள் ஒன்றிரண்டு உண்டு. அதனால் அவர் சில விஷயங்களில் எனக்கு முன்மாதிரி என்றே இன்றளவும் வைத்துள்ளேன்.               நான் அங்கு குடிவந்தபோதே அவரது ஐந்து பிள்ளைகளும் வேலையிலோ திருமண பந்தத்திலோ கட்டுண்டதால், அவரும் அவரது மனைவியும் மட்டுமே அவ்வீட்டில். பிள்ளைகளும் பேரன் பேத்திகளும் அவ்வப்போது வந்து போவார்கள். அவரும் அவரது மனைவியும் அரசுப் பணியில் இருந்தார்கள் அப்போது. துணைவியார் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகவும் நமது கதாநாயகர் வருவாயித்துறையில் இளநிலை உதவியாளராகவும் இருந்தனர். “முப்பத்தி மூணு வருஷ சர்வீஸ்” என்று அவர் பெருமையாகக் கூறியதும் நான் தயங்கியபடி கேட்டேன், “சார், உங்கள் துறையில் இத்தனை வருஷமாகவா பதவி உயர்வு தராமல் Junior Assistant ஆகவே வைத்திருப்பார்கள்?” பொதுவாக ஒருவரின் பதவி நிலை, பணி உயர்வு போன்ற தனிப்பட்ட விஷயங்களுக்குள் போவது அநாகரிகம் என்று நினைக்கும் நானே அடக்கமாட்டாமல் கேட்டு விட்டேன். முப்பத்து மூன்று வருடங்கள், ஆரம்ப நிலையான இளநிலை உதவியாளர் என்னும் கொடுமையை என்னாலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் மனிதர் ஒரு மந்தகாசச் சிரிப்புடன் அக்கேள்வியைக் கடந்து சென்றார் பாருங்கள், “தம்பி, நான் அந்த நேரத்தில் நியமனம் ஆன முறைப்படி (ஏதோ 10A1, வழக்கு, கோர்ட் தீர்ப்பு என்றெல்லாம் சொன்னார்) Junior Assistant தான் எனக்கு கியாரண்டி. அடுத்த நிலைக்குச் செல்ல ஏதோ டெஸ்ட் எழுதணுமாம். அதெல்லாம் படிக்க எனக்குப் பொறுமையில்லை; சரக்குமில்லை. அப்புறாம் பதவி உயர்வு கொடுத்து இடமாற்றம் வேற பண்ணுவான். போதும் தம்பி ! நமக்கு என்ன குறை?” என் தந்தை இதே துறையைச் சார்ந்தவர். இவரைப் போலவே இளநிலை உதவியாளராய்ச் சேர்ந்து படிகள் சில கடந்து அப்போது வட்டாட்சியராய் இருந்தார்கள். அவர்கள் சொன்னது, “ஒரு முறை அலுவலக நண்பர்கள் ரங்கசாமியை வலுக்கட்டாயமாகத் தேர்வு எழுத வைத்து, புத்தகங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து, காபி டிபனெல்லாம் வாங்கி வந்து எழுத வைத்தார்கள். மனிதர் சாவகாசமாய் அமர்ந்து அவற்றையெல்லாம் சாப்பிட்டு விட்டு, “வே! உங்களையெல்லாம் மறக்க முடியாது வே!” என்று உணர்ச்சிப்பூர்வமாக நன்றி சொல்லி, விடைத்தாளில் ஏதோ கிறுக்கிவிட்டுச் சென்று விட்டார். நான் அதுகுறித்துக் கேட்டேன். “தம்பி ! அந்தப் புத்தகங்களில் விடை எங்கே இருக்கிறது என்று எவனுக்குத் தெரியும்? அவற்றைக் கொண்டு வந்த நம்ம ஃப்ரெண்ட்ஸ்கே தெரியல!”. பொதுவாக இப்படிப்பட்டவரை ‘சோம்பேறி’ என்றுதான் உலகம் விளிக்கும். அவரை அருகிலிருந்தே பார்ப்பதால் எனக்கு என்னவோ அப்படித் தோன்றவில்லை. பதவி உயர்வுகளை உரிய நேரத்தில் பெற்ற என் தந்தையாரை விட அவர் மகிழ்ச்சியாகவே தோன்றினார். பணியில் சேர்ந்த நாள் முதல் ‘Enterprising’, ‘Active’ என்ற பெயரில் எதையோ விரட்டிக் கொண்டே திரியும் நிம்மதியிழந்த ஜீவன்களை விட அவர் ஒரு உயிர்ப்புள்ள மனிதராகவே தெரிந்தார். சரி, இதிலிருந்து கிடைத்த பாடம்? பணி மேம்பாடு பக்கமே போகாமல் நானும் சித்தராகத் திரிந்தேனா? அவ்வளவு நான் முத்தி அடையவில்லை. அடுத்த நிலைக்கான சிறிய முயற்சியை மேற்கொள்ளாமல் இல்லை. ஆனால் அதையே நினைத்து வாழ்க்கையை வீணாக்காமல் தப்பினேன். ஒரு விரிவுரையாளனாய்ப் பணியில் சேர்ந்த நான் அதே நிலையில் ஓய்வு பெறும் மனநிலை பெற்றேன். அதையும் மீறி வந்த உயர்வினை ‘இலாபம்’ என்று எழுதினேன். அலுவலகம் எனும் உலகில் அமைதியான வாழ்வைப் பெற்றேன். உபயம் : உயர்திரு. ரங்கசாமி அவர்கள். பயன் : அதிகார வர்க்கத்திடம் தேவையில்லாமல் நான் சமசரம் செய்ததில்லை; மனநிறைவுடன் ஒரு தொழிற்சங்கவாதியாய் வாழ்ந்தேன். இளைய தலைமுறைக்கும் இத்தாரக மந்திரத்தைக் கடத்த முற்பட்டேன். அதன் பொருள் புரிந்தோர் பேறு பெற்றோர்.               சரி. மீண்டும் புகைப்படக் கருவியை (Camera) ரங்கசாமியின் பக்கம் திருப்புவோம். பிரச்சினையே இல்லாத மனிதன்தான் கவலையில்லாத மனிதனாய் வாழ முடியும் என்று நீங்கள் நம்பினால், ஒரு நொடி உங்களைக் கண்ணாடியில் பார்த்து நீங்களே சிரித்து விட்டுத்  தொடருங்கள். இல்லறம் நல்லறமாய் அமையாத துர்பாக்கியசாலி அவர். அதற்கு அவரும் காரணமாய் இருந்திருக்கலாமே! இருக்கலாம். இல்லை என்று தீர்ப்பு வழங்க நான் நீதிமான் இல்லை. எது எப்படியாயினும் அது அவருக்கும் துன்பம்தானே ?               இங்கு ஒரு நிகழ்வைப் பதிவு செய்ய விழைகிறேன். அவர்கள் வீட்டில் தென்னை நன்றாகக் காய்த்து என் வீட்டு மாடியில் தண்ணீர்த்தொட்டியின் குழாயை அவ்வப்போது பதம் பார்த்தது. ஒரு நாள் முற்றத்தில் நின்று கொண்டிருந்த அந்த அம்மாவிடம் சொன்னேன். உடனே சீற்றத்துடன், “நீங்கள் புதுசு புதுசா ரூம் எடுப்பீர்கள். எங்களுக்கு வேறு வேலையில்லையா?” என்றார் அந்த அம்மா. “என்னது, சம்பந்தமில்லாமல் பேசுகிறார்?” என்று யோசித்த பின்தான் தெரிந்தது; என் வீட்டில் அந்தப் புதிய தண்ணீர்த் தொட்டியே மாடியில் புதிய அறை கட்டியதால்தானே வந்தது ! பின்னர் ரங்கசாமி ஆளை அழைத்து வந்து தேங்காய்  பறிக்கச் செய்தார். என்னிடம் சொன்னார், “தம்பி ! அவளிடம் பேசி உங்கள் மரியாதையைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். என்னிடம் சொல்லுங்கள்”. இந்த நிகழ்வை நான் இப்போது சொன்னது, வாசிக்கும் உங்கள் நியாயத் தராசு ஒரு பக்கமாய்ச் சாயட்டுமே என்ற எனது அரசியலாக இருக்கலாம்.               24x7 அந்த அம்மா கரித்துக் கொட்டுவதைச் சட்டை செய்யாமல், தேய்த்து வாங்கிய சட்டையை மடிப்புக் குலையாமல் எடுத்து அணிவார். சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட வாசனைத் திரவியத்தை அள்ளித் தெளித்து, தினமும் சவரம் செய்து பளபளப்பாக வைத்திருக்கும் முகத்தில் பவுடரால் (அதுவும் வாசனையுடன்) மெருகேற்றிக் கிளம்பி விடுவார். அது அலுவலகத்திற்கு அல்லது கடைத்தெருவில் நட்பு வட்டத்துடன் அரட்டையடிக்கும் தேநீர்க் கடைக்காக இருக்கலாம். அவருக்கு மகிழ்ச்சி எங்கே கிடைக்கிறதோ அங்கேதானே போக முடியும்! வெளியே செல்ல முடியாத நேரமாயிருந்தால் அவரும் குரலை உயர்த்துவார். கவலையில்லாத மனிதர் ஒருவரை சந்திக்கக் கிடைத்தது எனக்கு வாய்த்த பேறு என்றால், தினமும் அவர்களுக்கு இடையில் பரிமாறப்படும் வசவுகள் என் காதில் விழுவது நான் செய்த பாவம். பிள்ளைகள், பேரன், பேத்தி எல்லாம் ஏற்படுவதற்கு மனதளவில் கணவன் - மனைவி  ஆக வேண்டிய அவசியமில்லை என்பதை அவர்களிடம் தெரிந்து கொண்டேன். எல்லா வீடுகளிலும் கோப தாபங்கள் எல்லாம் சகஜம்தானே என்று நீங்கள் கேட்கலாம். ஹலோ ! உங்கள் வீட்டில் ஏற்படும் அந்த நிகழ்வுக்குப் பெயர் ஊடல். அது உளவியல் அறிவியல் சார்ந்தது. இவர்கள் வீட்டில் நடப்பதற்குப் பெயர் யுத்த காண்டம்; வெகு சில வீடுகளிலேயே இது அரங்கேறும்.               கொதி நிலை என்ற ஒன்று உண்டே ! இருவரும் பணி ஓய்வு பெற்றபின் விவாகரத்து வழக்கு நீதிமன்றம் சென்றது. ஒரு மகள் மட்டும் அவர் பக்கமும், மூன்று பிள்ளைகள் தாயின் பக்கமும், ஒரு மகள் நடுநிலை வகித்தும் குடும்பம் சின்னா பின்னமாகியது. வீட்டின் மீது உரிமை கோரும் வழக்கும் பதிவானது. வழக்கு முடியும் வரை தம் பக்கம் நின்ற மகள் வீட்டோடு சென்றார் ரங்கசாமி. அந்த அம்மா மட்டும் இவ்வீட்டில். அவருக்கு யாருடனும் ஒத்துவராது என்று அவரே சொல்லிக் கொள்வார். ஆகையால் மற்ற பிள்ளைகள் அவரவர் வீட்டில். ஒரு நாள் திடீரென்று இரவில் மாரடைப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்; அந்த அம்மா நீள்துயில் கொண்டார். அண்டை வீடு என்பதால் முதலில் கண்டுபிடித்த துர்பாக்கியசாலி நானேதான். அந்த அம்மாவைச் சார்ந்து நின்ற பிள்ளைகளுக்குத் தகவல் கொடுத்தேன். வந்தார்கள். வீட்டுக் கதவை உடைக்கத் தயங்கினார்கள். அப்பா போலீஸில் பொய் வழக்குக் கொடுத்துத் தங்களுக்குப் பிரச்சனை ஏற்படுத்துவார் என்று பேச ஆரம்பித்தார்கள். நான் அவரிடம் சென்று பேசினேன். ‘அக்கம் பக்கத்தார் சாட்சியாக உங்கள் முன்தான் கதவு உடைக்கப்பட்டது என்று இருக்கட்டும்’ என்று அழைத்தேன். “தம்பி ! நீங்கள் வந்து அழைப்பதால் வருகிறேன். மற்றபடி அந்த உறவெல்லாம் எனக்கு முடிந்துவிட்டது. அவளுடன் வாழ்ந்து வாழ்க்கையின் பெரும்பகுதியைத் தொலைத்தது போதும்” என்று கிளம்பினார். சுமார் முப்பத்தைந்து வருடங்கள் வாழ்ந்த வாழ்க்கைக்காக இல்லாமல், ‘அவருக்கு யாரோ’ எனும் நான் அழைத்ததால் வந்தார் என்பது அவர்களுக்கு இடையில் உள்ள வெறுப்பின் குறியீடு. கதவை உடைத்த பின் அவர் வீட்டின் உள்ளேயே செல்லாமல் போய் விட்டார். “இனி இந்தப் பயலுக என்னை அநாகரிகமாகப் பேச ஆரம்பிப்பானுக. நான் போறேன், தம்பி!” என்று மட்டும் சொன்னார்.               வீடு அவருக்கே உரியது என நீதிமன்றத்தில் தீர்ப்பானது. சில நாட்களில் வீட்டை விற்றுவிட்டார். அப்புறம் எங்கே சென்றார் என்று எனக்குத் தெரியாது. சுமார் மூன்று வருடங்கள் கழித்து ஒரு நாள் சந்தடி மிகுந்த சாலையில் நான் நடந்து செல்லும் போது ஒரு கார் என்னருகில் வந்து நின்றதை உணர்ந்தேன். அதிலிருந்து முன்பு போல் ‘மேக்-அப்புடன்’ நம் கதாநாயகர் இறங்கினார். “தம்பி, நல்லா இருக்கீங்களா?” என்று கை குலுக்கினார். சில வருடங்கள் கழித்துப் பார்த்த மகிழ்ச்சியை நானும் வெளிப்படுத்தினேன். “ஏய் ! கொஞ்சம் இறங்கு” என்று காரில் அமர்ந்திருந்த சுமார் 55-60 வயது மதிக்கத்தக்க அம்மணியிடம் கூறினார். அந்த அம்மா இறங்கி எனக்கு வணக்கம் தெரிவிக்க, நானும் புன்னகையுடன் வணக்கம் சொன்னேன். “தம்பி! இவள் என் மனைவி. நாங்கள் திருமணம் செய்து ஒரு வருஷம் ஆகுது. இவளும் டீச்சர்தான். இன்னும் ரெண்டு வருஷம் சர்வீஸ் இருக்கு.” நான் அவர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தேன். அந்த அம்மாவிடம் சொன்னேன், “நீங்கள் கொடுத்து வைத்தவர். இந்த உலகில் மிக சந்தோஷமான மனிதரைக் கல்யாணம் பண்ணி இருக்கிறீர்கள்”.                                                                                                      - சுப. சோமசுந்தரம்                           
  • நான் இறந்தால் சீமானை சிக்க வைக்க திட்டம் போட்டு இருக்கிறார்கள் -விஜயலஷ்மி பகீர் வாக்குமூலம்.    
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.