-
Tell a friend
-
Topics
-
Posts
-
By ஈழப்பிரியன் · Posted
இது ராசுக்குட்டி மாத்திரமல்ல தமிழர்களின் பழக்கவழக்கங்களில் ஒன்று. ராசுக்குட்டி விதிவிலக்கா என்ன? -
நன்றி கதைக்கு?? தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் (அவருக்கு பரிசோதனையை செய்த பெண்ணுக்கு ஒரு 25 வயது தான் இருக்கும் என்றும், வடிவான பெட்டை என்றும், வேறு ஒரு வயதான பெண் வராமல் இந்த இளம் பெண் இன்று தனக்கு ஸ்கான் பண்ண வந்தது தன் அதிஷ்டம் என்றும் நினைக்க தவறவில்லை. நிச்சயமாக இந்த ராசுக்குட்டி என் தம்பியாகத்தான் இருக்கணும்😜)
-
இறுதிப்பகுதி. சாலை எங்கும் பனிக்காலத்தின் முடிவுரையை சிறு சிறு பனித்துளிகள் எழுதி கொண்டு இருந்தன. காற்று கடுமையாக வீசி குளிர்காலத்தினை அகற்றி அந்த இடத்தில் இலையுதிர்காலத்தை விதைத்துக் கொண்டு இருந்தது. இனி கொஞ்ச காலத்துக்கு காற்று பெரிசாக வீசாது. இலைகளை உதிர்த்து கொட்ட வைப்பதற்காக செப்ரம்பர் இறுதியில் மீண்டும் வரும். குளிர் மறை இரண்டில் இருந்தது. ராசுக்குட்டி ஸ்கார்புரோவில் எல்ஸ்மியார் எனும் வீதியில் இருக்கும் ஆஸ்பத்திரியின் வரிசையில் நின்று கொண்டு இருந்தார். இந்த ஆஸ்பத்திரிக்கு தமிழர்கள் பலர் இணைந்து பெரியளவு கொடை கொடுத்து இருப்பதால் மனசுக்குள் ஒரு மிதப்புடன் தான் நின்று கொண்டு இருந்தார். கொரனா காலம் என்பதால் ஒவ்வொருவராக விசாரித்தே உள்ளே அனுமதித்துக் கொண்டு இருந்தனர். குளிர் காற்று வேகமாக வீசி முகத்தில் அறைய, மூக்கு விறைத்தவாறு நின்று கொண்டு இருக்கும் போது அவர் முறையும் வந்தது. முன்னுக்கு இருந்த தாதி ராசுக்குட்டியிடம், "நீ எப்ப கடைசியாக வெளிநாடு போனாய், காச்சல் இருக்கா, கொரனா வந்த எவருடனாவது தொடர்பில் இருந்தாயா" போன்ற கேள்விகளை கேட்டு விட்டு "இந்த முககவசத்தை அணிந்து கொண்டு உள் பகுதிக்கு செல்" என்று ஒரு முகக்கவசத்தை கொடுத்தார். ராசுக்குட்டி ஏற்கனவே வீட்டில் இருந்து முகக்கவசம் ஒன்றை கொண்டு சென்று இருந்தாலும், ஓசியாக கிடைக்கும் எதையும் மறுத்து பழக்கமில்லாத அற்(ப)புத குணத்தால் அந்த முக்கவசத்தை வேண்டாம் என்று சொல்லாமல் அதை வாங்கி அணிந்து கொண்டு உள்ளே சென்றார். போன கிழமையும் இதைத்தான் செய்தவர். ஏற்கனவே முதல் கிழமையும் இங்கு வந்திருந்தார். அல்றா ஸ்கானிங்கில் சிறுநீரகப் பாதையில் கல்லு கில்லு இல்லையென்று ரிசல்ட் வந்த பின்னர், சிறு நீரகத்தில் வேறு ஏதும் பிரச்சனை இருக்கா என்ரு பார்க்க CT scan எடுக்க வந்திருந்தார். வெறு வயிற்றில் போனவரை மூன்று கிளாஸ் தண்ணீர் கொடுத்து விட்டு, மல்லாக்க படுக்க வைத்து, ஒரு உருளை வடிவ ஸ்கானருக்குள் அனுப்பும் போது விழி பிதுங்கி, நெஞ்செல்லாம் பாரமாக, ஆள் பயந்து கொண்டு தான் உள்ளே போனவர். அந்த பயத்திலும் கூட அவருக்கு பரிசோதனையை செய்த பெண்ணுக்கு ஒரு 25 வயது தான் இருக்கும் என்றும், வடிவான பெட்டை என்றும், வேறு ஒரு வயதான பெண் வராமல் இந்த இளம் பெண் இன்று தனக்கு ஸ்கான் பண்ண வந்தது தன் அதிஷ்டம் என்றும் நினைக்க தவறவில்லை. CT scan முடிந்த பின் "எப்ப ரிசல்ட்ஸ்" வரும் என்று கேட்க அந்த அழகி, "அடுத்த கிழமை உனக்கு இருக்கும் மற்ற டெஸ்ட் இன் பின் தான் டொக்டர் இதன் முடிவையும் சொல்லுவார்" என்று அனுப்பி வைத்தார். மீண்டும் அந்த இறுதி பரிசோதனைக்கு வந்திருக்கின்றார். இன்று அப்படி எந்தப் பெண்ணுமே அறைக்குள் இருக்க கூடாது, எல்லாரும் ஆண்களாக இருந்து விட்டால் நல்லா இருக்கும் என்று மனசுக்குள் என்ணியபடி வரவேற்பறையில் இருந்த பெண் குறிப்பிட்ட அறைக்குள் சென்றார் ராசுக்குட்டி. ஆனால் அங்கு 25 வயது மதிக்கத்தக்க செக்கச் சிவந்த வேறு ஒரு பெண் நின்று கொண்டு இருந்தார். ராசுக்குட்டிக்கு கொஞ்சமே கொஞ்சமாக வெட்கம் எட்டிப் பார்த்தது. ராசுக்குட்டியின் மனவோட்டத்தை புரிந்து கொண்ட அந்த தாதி நான் தான் டொக்டருக்கு உதவப் போகின்ற பிரதான தாதி என்று சொல்லி, பக்கத்தில் இருக்கும் ஆண் தாதியைக் காட்டி இவர் உதவியாளர் என்று அறிமுகப்படுத்தி வைத்தார். ராசுக்குட்டி வந்திருப்பது cystoscopy எனும் பரிசோதனைக்கு. அது எப்படி இருக்கும் எந்தளவுக்கு வலி இருக்கும் என்பதை மூன்று நாட்களாக வாசிச்சு வாசிச்சு மனசுக்குள் தன்னை தயார்படுத்தி வைத்திருந்தார். இந்த பிரச்சனை ஆரம்பிக்கும் போது இருந்த பயத்தின் அளவு நல்லா குறைந்து இருந்தது ராசுக்குட்டிக்கு. மனுச மனம் எப்பவுமே இப்படித்தான். என்ன ஏது நோய் என்று அறிய முதல் போது பயந்து சாகும், பிறகு மெல்ல மெல்ல பயத்தில் இருந்து வெளியே வரப் பார்க்கும், பின் எது வந்தாலும் சரி என்று ஏற்கத் தொடங்கி தன்னை தயார்படுத்தி வைக்கும். ராசுக்குட்டிக்கும் கொஞ்சம் தைரியம் இந்த 4 மாதங்களுக்குள் வந்து இருந்தது. என்ன நடந்தாலும் குடும்பம் பாதிக்கப்பட கூடாது என்று நினைத்து இடைப்பட்ட காலத்தில் தன் ஆயுள்காப்புறுதி தொகையையும் கூட்டி விட்டிருந்தார். ஒருவிதமான அமைதியும் மனசுக்குள் குடிவந்து இருந்தது அவருக்கு. prostate இல், Bladder இல், சிறு நீரக பாதையில் (urethra ) புற்றுநோய் உள்ளதா அல்லது வேறு ஏதும் பிரச்சனை உள்ளதா என அறிவதற்காகவே cystoscopy செய்வினம். ராசுக்குட்டிக்கு ஏற்கனவே செய்த பரிசோதனைகளில் பிரச்சனை ஏதும் இல்லை என முடிவு வந்தமையால் இறுதிப் பரிசோதனையாக cystoscopy செய்யச் சொல்லியிருக்கினம். சின்னஞ் சிறு கமரா, அந்த. கமராவுக்கு வெளிச்சம் பாச்ச சிறு லைட்டுகள், இவை எல்லாவற்றையும் கொண்ட ஒரு சிறு டியூப். ஆணுக்கு எனில் அந்த சிறு டியூப்பை ஆண்குறியின் சின்னஞ் சிறு துவாரதின் வழியே உள்ளே சிறுக சிறுக Bladder வரைக்கும் அனுப்பி கமராவின் மூலம் அதை வீடியோ எடுத்து டியூப்பின் மறுமுனையில் இணைக்கப்பட்டு இருக்கும் திரையில் டொக்டர் பார்ப்பார். இதன் மூலம் அவரால் பிரச்சனை ஏதும் இருப்பின் கண்டு பிடிக்க முடியும். அத்துடன் biopsy செய்வதற்காக உள்ளே அனுப்பிய டியூப்பில் பொருத்தி உள்ள கருவி மூலம் சின்னஞ் சிறு பகுதி (துணிக்கை) ஒன்றை ஒன்றை கிள்ளி பின் அதை வெளியே எடுத்து பரிசோதித்து பார்ப்பர். "இப்படித்தான் மச்சான் நடக்கப் போகுது எனக்கு நாளைக்கு" என்று ராசுக்குட்டி தன் நண்பனுக்கு முதல் நாள் சொல்லும் போதே அவனுக்கு வேர்த்து விட்டது. "எப்படியடா...அதுவும் அந்த சின்ன துவாரத்துக்குள் கமரா எல்லாம் அனுப்பி...செரியாக வலிக்க போகுது பார் " என்று அவன் திருப்பி திருப்பி அதையே ரிப்பீட் மோட்டில் ராசுக்குட்டியிடம் கேட்டுக் கொண்டே இருந்தான். ராசுக்குட்டியை சிறு கட்டிலில் (வாங்கில்) மல்லாக்க படுக்க வைத்த பின் டொக்டர் ஆரம்பிக்க முன்னரே, "என்னால் உனக்கு வலி ஏற்படுவதற்கு முதலில் என்னை மன்னித்துக் கொள், இது ஆளை மயக்கி செய்யும் பரிசோதனை அல்ல... கொஞ்சம் வலிக்கும்.. முக்கியமாக Bladder இனை டியூப் சென்று அடைந்த பின் சிறு பகுதியை கிள்ளி எடுக்கும் போது வலி கூடியளவு இருக்கும், ஆனால் தாங்க கூடியது... என்னை மன்னித்துக் கொள்" என்று கூறியபின் தான் பரிசோதனையை ஆரம்பித்தார். "இவ்வளவு படிச்ச மனுசன்... எவ்வளவு தன்மையா கதைக்கின்றார்..அதுவும் மன்னிப்பெல்லாம் கேட்கின்றார்" என்று எண்ணிய ராசுக்குட்டி 'என்ன வலி வந்தாலும் தாங்கத்தான் வேண்டும்... அழுது கிழுது பக்கத்தில் நிற்கும் பெண் தாதி தன்னை ஒரு கோழை என்று நினைக்க வைக்க கூடாது என்பதில் உறுதியாக கிடந்தார். அவருக்கு இந்த ரணகளத்திலும் அருகில் நிற்கும் பெண்ணிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற நினைப்பு. டொக்டர் சொன்னது போலவே, நண்பன் அரண்டது போலவே ராசுக்குட்டிக்கு வலி இருந்தது. முதலில் உள்ளே நுழைக்கும் போது, உடனடியாக எழும்பி சுச்சு போக வேண்டும் போல உணர்வு வந்தது அவருக்கும் பின் வலி மெது மெதுவாக ஆரம்பித்து உச்சத்துக்கு போனது.அதுவும் Bladder இனை அந்த டியூப் அடைந்த அந்தக்கணமும் கிள்ளி எடுத்த வினாடியும் அவரை அறியாமலே இரண்டு சொட்டு கண்ணீர் துளி கடைக்கண்ணால் வழியுமளவுக்கு வலி வந்து போனது. பதினைந்து நிமிடங்கள் டியூப் அங்கும்மிங்கும் அலைந்து திரிந்தது. இது வரைக்கும் உடலில் ஒரு போதுமே தொடுகை உணரப்படாத இடத்தில் எல்லாம் நின்று நிதானித்து தொடுகையை உணர்த்திச் சென்றது. அந்த டியூபின் பின்னாலேயே ராசுக்குட்டியின் தன்னுணர்வும் பின் தொடர்ந்தது. அதன் கமரா பார்க்கும் இடமெல்லாம் ராசுகுட்டியின் மனமும் தொட்டுப் பார்த்தது. இதுவரைக்கும் இந்த இடமெல்லாம் தன் உடலில் உள்ளதா என்பதையே அறியாத மனம் அந்த டியூபின் வழி சென்று அறிந்து கொண்டது. வலியும் தன்னை அறியும் உணர்வும் ஒன்றுடன் ஒன்று கலந்தும் மேவியும் உரசியும் சமாந்தரமாகவும் சென்றன. எல்லாவற்றிலும் புதினம் பார்க்கும் ராசுக்குட்டியின் மனசும், எல்லாவற்றையும் அனுபவித்தே சாகும் என்ற ராசிக்குட்டியின் இயல்பும் அந்த டியூபின் வழி பயணித்து களித்தது. மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே என்ற பாடலை திடீரென ராசுக்குட்டியின் மனசு பாடியது எல்லாம் முடிந்த பின் டொக்டர் "உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. எல்லாமே மிக நல்லா இருக்கு.. உன் CT scan முடிவிலும் ஒரு பிரச்சனையும் இல்லை." என்று சொல்லும் போது "அப்படியென்றால் ஏன் டொக்டர் அன்று கொஞ்சம் இரத்தம் வந்தது...அதன் பின் மூன்று நாட்கள் கழிந்த பின்னும் ஏன் மீண்டும் வந்தது" என்று ராசுக்குட்டி கேட்க.. "சிலருக்கு எப்பவாவது ஒரு நாள், சில நாட்கள் இப்படி வரும். சிவப்பாக இருப்பினும் அது இரத்தம் அல்ல. சிறு நீரில் எத்தனையோ விசயம் வெளிவரும், அதில் சிலது இப்படி மங்கலான சிவப்பு நிறத்திலும் இருக்கும்" என்றார். டொக்டருக்கு நன்றி சொல்லி வெளியே வந்த ராசுக்குட்டி முதலில் மனுசிக்கு போன் போட்டார். "எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை" "நான் அன்றைக்கே சொன்னனான் தானே...நீங்கள் தான் எல்லாத்துக்கும் கூகிளை நோண்டி தேவையில்லாமல் பயப்பிடுகின்றீர்கள்... " என்று சொன்ன அவரது மனிசி மேலும் "ஆஸ்பத்திரியில் இருந்து வரும் போது அதுக்கு கிட்ட இருக்கின்ற இரா சுப்பர் மார்கெட்டில் புளியும் சின்ன வெங்காயமும், உள்ளியும் வாங்கிட்டு வாங்கோ: என்று சொல்ல, ராசுக்குட்டி தன் காரை இரா சுப்பர் மார்க்கெட் பக்கம் திருப்ப, அவரது இந்தக் கதையும் இத்துடன் முடிகின்றது.
-
அது அப்பவே தெரிஞ்ச விசயமாச்சே....இனவாதமும் இனக்கொலைகளும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு அவசியமானதொன்று.
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.