Sign in to follow this  
அபிராம்

மரணத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்னால்

Recommended Posts

கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.

 

வானத்திலே வெடித்து ஒளியை பாச்சிய பரா வெளிச்ச குண்டுகள் மங்கலாக தெரிய தொடங்கியது. சிங்கள குரல்கள் கிட்டவாக கேட்கிறது. இன்னும் ஒரு நிமிடத்துக்காவது எனது உடலில் பலத்தை கொடு என்று நான் என்றைக்குமே கும்பிடாத இறைவனிடம் கேட்கிறேன்.

 

அதிகாலை இரண்டுமணிக்கு அண்ணளவாக தொடங்கிய சண்டை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழரின் விடிவுக்கான வாழ்வா சாவா நந்திக்கடலின் சேற்றுப் பகுதியில் ஈச்சமுட்களுக்கு நடுவிலே தீர்மானிக்கபட போகிறது என்று யாருமே கணித்திருக்க முடியாது.

 

தலைவனை பாதுகாப்பாக வெளியேற்றினால் மட்டுமே இனி தமிழரின் எதிர்காலம் என்ற தலையாய இலக்கு. 
 
ஒரு படகில் கட்டப்பட்ட மிதவைகளுடன் அந்த நந்திகடலை தாண்டும்போதே எதிரிக்கு திகைப்பு ஏற்பட எந்த சந்தர்பமும் இல்லை. எங்கள் வருகைக்காக அவர்கள் காத்திருந்தார்கள். 
 
நடுக்கடலிலேயே பரா வெளிச்ச குண்டுகளுக்கு மத்தியில் சண்டை தொடங்கிவிட்டது, மிதவை கவிழ்ந்து போக முதுகிலே முப்பது கிலோ பொருட்களுடன் இரண்டுகைகளிலும் துப்பாக்கிகளுடன் அந்த கடலின் கரையை அடையவே அரைமணித்தியாலம் போய்விட்டது. சேற்றினுள் வைத்த வெறும் காலை கூட வெளியே எடுக்கமுடியாத முதுகுபாரம்.
 
கடுமையாக மோதினோம். எந்த பின்புல ஆதரவும் இல்லாமல், எந்த உணர்வுகளுமே இல்லாமல், சாவை மட்டுமே எதிர் கொண்டு கடுமையாக மோதினோம். என் தோழர்கள் ஒவ்வொன்றாக வீழும்போதும் எங்கள் சூட்டின் வேகம் தணியவில்லை. இதோ எனது ஆயுத வெடிபொருட்கள் எல்லாம் முடிந்து , நேற்று இரவு கடித்த அந்த பிஞ்சு மாங்காய் இற்கான பலம் எல்லாம் முடிந்து அந்த சேற்று மண்ணில் வீழ்ந்து கிடக்கிறேன்.
 
எனக்கும் மரணத்துக்கும் இன்னும் சில நிமிட தூரங்களே இருக்கின்றன. கடந்த மாவீர தினத்துக்கு தான் அவசரமாக அளவெடுத்து தைத்த சீருடையின் பைக்குள்ளே இருந்த சண்டை வரைபடத்தையும் குறியீட்டு தாளையும் எடுத்து வாயிலே சப்புகிறேன்.
 
அது தந்த கொஞ்ச தெம்பில் , என் மரணத்தை பற்றி கொஞ்சம் சிந்திக்க நேரம் கிடைத்தது. நான் சாகப்போகிறேன். இதை யாருக்காவது சொல்ல வேண்டும் போல இருந்தது.  
 
என் நெஞ்சிலே செருகி இருந்த செய்மதி தொலைபேசியில் புலம்பெயர் நாட்டில் இருந்த அண்ணாவுக்கு அடித்தேன். எங்கோ ஒரு வீதியை மறித்து போராடி கொண்டிருந்த அண்ணாவுக்கு, சண்டை வெடி சத்தங்களுக்கு நடுவே  நான் சொல்லுவது தெளிவாக கேட்கவில்லை. இருந்தாலும் நான் சொல்ல வேண்டியதை சொன்ன ஒரு திருப்தி எனக்கு கிடைத்தது.
 
அம்மாவையும் தங்கச்சியையும் கவனமாக பார்த்து கொள், அம்மாவுக்கு நான் இல்லை என்று சொல்லிவிடாதே, அவவின் காலம் முழுக்க நான் இருப்பேன் என்று தேடட்டும். அது தான் நான் அவவுக்கு கடைசியாக கொடுக்க கூடிய ஒரே சந்தோசம். நன்றி. வணக்கம். 
 
அதன் சிம் காட்டையும் வாயிலே சப்பி விழுங்கினேன். இன்னும் இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் தான் மரணத்துக்கு.
 
நிமிர்ந்து படுத்தபடி வானத்தை பார்க்கிறேன், என் வாழ்விலே நடந்த சந்தோசங்கள், கவலைகள், வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள், நண்பர்கள், எதிரிகள், ஆசிரியர்கள், உறவினர்கள், அம்மா, அப்பா, சகோதரங்கள், வீடு, விளையாடிய வீதிகள், ஏறிய மரங்கள், காதலி,வாகனம், துப்பாக்கி, தலைவர், தளபதிகள், தோழர்கள் இன்னும் பல ஒரு சில செக்கன்களில் கண்ணுக்கு முன்னே படங்களாக காட்சிகளாக ஒரு விரைவு Rewind ஓடியது போல ஓடி முடிந்துவிட்டது. அது உணர்வு எனக்கு எப்படி சொல்லுவது என்று தெரியவில்லை. செத்தால் மாட்டுமே புரியும் என்று நினைக்கிறேன். 
 
சிங்கள குரல்கள் எனக்கு மிக அருகில் கேட்க தொடங்கிவிட்டது. எனக்கு இன்னும் ஒரு நிமிடம் தான் இருக்கிறது சாக. குப்பியா, வெடிமருந்து சக்கை உடையா என்றபோது வெடிமருந்து சக்கை உடையை தெரிந்து எடுத்தவன். 
 
சாவுக்கு என்றுமே அஞ்சியதில்லை என்றாலும் செத்து அனுபவமில்லை. இப்போ முதன்முதலாக சாகப்போகிறேன்.
 
சரி சாவதுக்கு முதலில் ஆசையை பூச்சியம் ஆக்கவேண்டும் என்று நினைத்து கொண்டேன். எல்லா ஆசைகளையும் இனிமேலே என் வாழ்வில் நிறைவேறுவதற்கான வழி எதுவுமே இல்லை  என்ற ஒற்றை நினைப்பை மூளையுள் திணித்து நடுநிலையாக்கினேன்.
 
சில ஆசைகள் மறைய மறுத்தன. வலிந்து எண்ணங்களை திணித்து பூச்சியம் ஆக்கினேன்.
 
இப்போ நான் தயார்.
 
மிக அருகில் வரட்டும் என்று காத்திருந்தேன். சக்கையை வெடிக்க வைப்பதற்கான இழுவையை இறுகப்பற்றினேன்.
 
சேறு நிரம்பிய சப்பாத்தால் என்னை அவன் பிரட்டியபோது, எனது விரல்கள் தங்களின் முழுப்பலத்தையும் கொண்டு வெடிமருந்து சக்கை அங்கியின் இழுவையை இழுத்துவிட்டன.
 
Edited by அபிராம்
 • Like 7

Share this post


Link to post
Share on other sites

வாசிக்கவே கனதியாக உள்ள பதிவு. :unsure:

Share this post


Link to post
Share on other sites

அந்த வெடியோசையும் கடைசியாக அவனது ஆசைகளின் புதைவும் கண்ணுகள் தெறிக்கிறது காட்சிப்பதிவாக.....இப்படி எத்தனைபேரை எத்தனை உயிர்களை இழந்தோம்.....அத்தனை இழப்பின் ஒட்டுமொத்த வடிவாக இந்தக்கதையின் முடிவும் அவனும்.....

Share this post


Link to post
Share on other sites

எத்தனை வருடங்கள் போனாலும் மறையாத சோகங்களும், மறக்க முடியாத தியாகங்களும்.

Share this post


Link to post
Share on other sites

முதலாமவர் வெடித்து ஒளி பிழம்பாகியதை கண்ணால் பார்த்தவன்.

இவர்களுக்குள் இருக்கும் உறுதியில் ஒரு விகிதம் என்னிடம் இருந்திருந்தால் எங்கேயோ போயிருப்பன்.

Share this post


Link to post
Share on other sites

மனுநீதிச் சோழன் கதைபடித்த அறிவுடன், தன் தசையைத் தானே அறுக்கும் ஒருவனின் உள உரத்தைப் பார்க்கிறேன், பற்றை மறைவில் பதுங்கியிருந்து. சிறு முள் குத்திய வேதனை தாங்கமுடியாது!. நானும் தமிழனா...???? 

Share this post


Link to post
Share on other sites

கன காலத்துக்குப் பிறகு, களத்துக்கு 'அபிராம்' வந்திருக்கிறார் எண்டு ஓடிவந்து வாசிச்சால், அபிராம் மனத்தை ஒரேயடியாக உருக்கிப் போட்டார்!

 

எத்தனை சொல்லப்படாத, சொல்ல முடியாத 'அனுபவங்களை' தமிழனாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக, எமது இனம் அனுபவித்துத் தொலைத்திருக்கின்றது!

 

அதை விடத் துயரம் என்னவெனில், இதற்கொரு விடிவோ அல்லது முடிவோ தெரியாமல் இன்னும் தொடர்ந்து எமது இனம் பயணிப்பது தான்! :o

Share this post


Link to post
Share on other sites

என்ன சொவது என்றே தெரியவில்லை.

Share this post


Link to post
Share on other sites

எவ்வளவு இழப்புக்கள்...மிகவும் கனதியான பதிவு....அபிராம்....

Share this post


Link to post
Share on other sites

ம் .......!

 

அபிராம் ! மனம் கனக்கிறது !

Share this post


Link to post
Share on other sites

மறையாத சோகங்களும், மறக்க முடியாத தியாகங்களும்.

 

காலத்தால் அலையாத  நினைவுகள்.

Share this post


Link to post
Share on other sites

கருத்திட்ட இசைக்கலைஞன், சாந்தி, அகஸ்தியன், விவசாயி விக், பெருமாள், பாஞ், புன்கையூரான், சுமேரியர், புத்தன் ,சுவி, நிலாமதி  அவர்களுக்கும் விருப்பமளித்த கவிதை அவர்களுக்கும் இந்த கதையை தொடரும் கோமகன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.   

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

நிமிர்ந்து படுத்தபடி வானத்தை பார்க்கிறேன், என் வாழ்விலே நடந்த சந்தோசங்கள், கவலைகள், வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள், நண்பர்கள், எதிரிகள், ஆசிரியர்கள், உறவினர்கள், அம்மா, அப்பா, சகோதரங்கள், வீடு, விளையாடிய வீதிகள், ஏறிய மரங்கள், காதலி,வாகனம், துப்பாக்கி, தலைவர், தளபதிகள், தோழர்கள் இன்னும் பல ஒரு சில செக்கன்களில் கண்ணுக்கு முன்னே படங்களாக காட்சிகளாக ஒரு விரைவு Rewind ஓடியது போல ஓடி முடிந்துவிட்டது. அது உணர்வு எனக்கு எப்படி சொல்லுவது என்று தெரியவில்லை. செத்தால் மாட்டுமே புரியும் என்று நினைக்கிறேன்.  ///

 

கதைக்கு மிக்க நன்றி அபிராம்.

Share this post


Link to post
Share on other sites

கருத்திட்ட கோமகன் மற்றும் கந்தப்புவுக்கு நன்றிகள்.

காலங்கள் உணர்வுகளை மழுங்கடிக்க கூடிய வல்லமை படைத்தவை அல்ல.

மாறாக உணர்வுடன் கூடிய நினைவுகள் காலத்தை கடத்த வல்லன.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

காலங்கள் உணர்வுகளை மழுங்கடிக்க கூடிய வல்லமை படைத்தவை அல்ல.

மாறாக உணர்வுடன் கூடிய நினைவுகள் காலத்தை கடத்த வல்லன.

காலமெல்லாம் தொடர்வது நினைவுகள் மட்டுமே. அவை காலத்தை வெல்லும் சாதனைகளைப் படைக்கும் வல்லமை மிக்கவைவும் கூட.

Share this post


Link to post
Share on other sites

நன்றிகள் சாந்தி மற்றும் உடையார். உங்கள் வருகைக்கும் கருத்திற்கும். 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • எங்களுக்கு அறிவில்லைத்தான் நாலு எழுத்து படிக்கவில்லை உங்களை போல் ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பில் சுமத்திரன்ய் பின்கதவால் கொண்டு வந்தபோது நாங்கள் சொன்னதுதான் இதுவரைக்கும் நடந்து இருக்கு இங்கும் Elugnajiru சொன்ன கருத்துக்கு உங்களால் பதில் சொல்லமுடியாமல் என்னுடன் அதான் உங்கள் பாசையில் வெறிகாரனுடன் தனவல் முடிந்தால் அவர்களின் கருத்துகளுக்கு உங்களின் பதில் கருத்துக்களை வையுங்கள் அறிவு குறைந்த எங்களுடன் ஏன் கொள்ளுப்பாடு உங்களால் அவர்களுடன் ஆக்கபூர்வமாக கருத்தாட முடியாது ஏனெனில் உங்கள் இரத்தம் மனியடிச்சால் ஓடிபோய் உங்கள் கடமையை  செய்ய பழக்கபட்டு இருக்கு  . ( அந்தகால அரசர்கள் காலைகடனை  கதிரையில் வட்டமாக வெட்டிய பகுதியில் இருந்து கழிப்பது உண்டு எல்லாம் முடிந்தபின் அவர்கள் தங்கள் கைகளை உபயோகிப்பதில்லை பதிலாக மணியை அடிப்பார்கள் உடனே அடிமைகள் போட்டி போட்டுகொண்டு வந்து மிருதுவான பஞ்சினால் துடைத்து கிளீன் பண்ணி விடுவார்களாம் சில ராஜ்யிங்களில் அப்படி சரியாக துடைத்த அடிமைக்கு வெகுமதியும் அளிப்பது உண்டாம் )
  • ஆறு வாரங்களுக்கு முன் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு ஏற்பட்டுள்ள எண்ணற்ற உயிரிழப்புகள் குறித்தும், அதன் காரணங்கள் குறித்தும் பல முரண்பட்ட தகவல்கள் உள்ளன இந்த சூழலில் பிபிசி செய்தியாளர் யோகிதா லிமாயி ஸ்ரீநகரில் நடைபெற்ற சில சம்பவங்கள் தொடர்பாகப் பார்வையிட்டார்.       இந்திய துணை ராணுவப் படை சுட்டது ஆகஸ்டு 6ஆம் தேதி 17 வயதான அஸ்ரர் கானுக்கு, நான்கு வாரங்களில் தனது உயிரைப் பறித்துக் கொண்ட காயம் ஏற்பட்டபோது அவர், தனது வீட்டுக்கு வெளியே தெருவில் நின்று கொண்டிருந்தார். கெட்டிக்கார மாணவனாகவும், விளையாட்டில் ஆர்வமானவனாகவும், அறியப்பட்ட அஸ்ரர் கானின் உயிரிழப்பு ஏற்கனவே பதற்றத்திலிருந்த சூழலில், மீண்டும் ஒரு சர்ச்சையாக மாறியுள்ளது. அஸ்ரர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, நெற்றியில் புகைக்குண்டின் சிலிண்டரும் உலோக பெல்லட் குண்டுகளும் அஸ்ரர் கானின் நெற்றியில் பட்டதாகக் குற்றம் சுமத்துகிறார் ஃபிர்தூஸ் அகமது கான். அஸ்ரருடன் விளையாடிக் கொண்டிருந்த அவனின் நண்பன் இந்திய துணை ராணுவப் படை அவனை சுட்டதாக தெரிவிக்கிறான்.   மறுக்கும் ராணுவம் அஸ்ரரின் மருத்துவ அறிக்கை அவர் பெல்லட் குண்டுகளாலும், கண்ணீர் புகைக்குண்டு வெடித்ததாலும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கிறது. ஆனால் காஷ்மீரில் உள்ள இந்தியாவின் உயர் ராணுவ கமாண்டர், லெஃப்டினட் ஜெனரல் கே.ஜே.எஸ்.தில்லான், காஷ்மீர் போராட்டக்காரர்கள் ஆயுதப்படைகள் மீது எறிந்த கற்கள் அஸ்ரர் மீது பட்டதாகத் தெரிவித்துள்ளார். Image caption அஸ்ரர் மருத்துவ அறிக்கை பிபிசியிடம் பேசிய காஷ்மீர் போலிஸாரும் இதையே தெரிவித்தனர். மருத்துவமனை அறிக்கை தெளிவற்றதாக இருப்பதாகவும், அதுகுறித்து மேலும் விசாரணைகள் தேவை என்றும் தெரிவிக்கின்றனர். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கி, அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து இந்தியா அறிவிப்பு வெளியிட்ட நாளில்தான், இந்த சம்பவம் நடைபெற்றது. எதிர்பாராத இந்த அறிவிப்பு வெளியான நாளுக்கு முன்பாக, தொடர்ந்து சில நாட்களாக பல்லாயிரக் கணக்கான இந்தியத் துருப்புக்கள் அந்த பகுதியில் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டனர். இந்துக்களின் புனித யாத்திரை ஒன்று ரத்து செய்யப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து கிளம்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். தொலைபேசி மற்றும் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டன. மேலும் இந்த பிராந்தியத்தைச் சேர்ந்த பல அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.   94 சதவீதம் மதிப்பெண் உயிரிழந்த அஸ்ரர் தனது 10-வது வகுப்புத் தேர்வில் 94 சதவீதம் மதிப்பெண் பெற்றதைக் காட்டும் ஒரு ரேங்க் கார்ட்டும், கிரிக்கெட் கோப்பையுடன் அவரின் புகைப்படம் உள்ள ஒரு செய்தித்தாளும்தான் தற்போது அவரின் குடும்பத்துக்கு விலைமதிப்பில்லா பொக்கிஷங்கள். Image caption அஸ்ரர் பெற்ற மதிப்பெண் ''இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி எனது வலியை அறிவாரா? இதற்கு அவர் மன்னிப்பு கேட்டாரா? இது குறித்து அவர் கண்டனம் தெரிவித்தாரா?'' என்று அஸ்ரரின் தந்தை பிபிசியிடம் வினவினார். ''நாளை உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம். இன்றைய காஷ்மீரில் யாரும் எதற்கும் பொறுப்பேற்பதில்லை'' என்று அவர் மேலும் கூறினார். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையால் ஒரு உயிரிழப்பு கூட நடக்கவில்லை என்று இந்திய அரசு தெரிவித்தது. ஆனால், அரசு எதிர்ப்பு போராட்டங்களில் எறியப்பட்ட கற்களால் தாக்கப்பட்டு அஸ்ரார் உள்பட இரண்டு பேர் இறந்ததாக அரசு கூறுகிறது. ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியாளர்களால் மேலும் மூவர் இறந்ததாக அரசு தெரிவித்துள்ளது.   குலாமை சுட்டது யார்? கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதியன்று, 60 வயதான குலாம் முகமது என்ற கடைக்காரர் கடையின் உள்ளே தனது மனைவியுடன் அமர்ந்திருந்தபோது மோட்டார் பைக்கில் வந்த மூன்று பேர் அவரை சுட்டு விட்டுத் தப்பியோடியுள்ளனர். கடையைத் திறக்கக்கூடாது என்ற தீவிரவாத குழுக்களின் எச்சரிக்கையை மீறி கடையைத் திறந்ததால் குலாம் முகமது கொல்லப்பட்டிருக்கலாம் என்ற யூகம் நிலவுகிறது. குலாம் முஹமதின் குடும்பத்தினரை பிபிசி சந்தித்தபோது, அவர்கள் இது குறித்துப் பேச அச்சப்பட்டனர். குலாம் கொலை செய்யப்பட்டதன் உள்நோக்கம் குறித்து தாங்கள் விசாரணை செய்து வருவதாக போலீசார் பிபிசியிடம் தெரிவித்தனர். ஆனால், அண்மைய நாட்களில் இறந்த தங்களின் உறவுகள், நண்பர்களின் எண்ணிக்கைக்கும், அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கைக்கும் வேறுபாடு உள்ளதாகப் பலர் கூறுகின்றனர்.   பானுவின் கதை அதில் ஒருவர் ரஃபிக் ஷாகூ. ஸ்ரீநகரில் உள்ள பெமினா பகுதியில் ஆகஸ்டு 9ஆம் தேதி, தனது மனைவி ஃபெமீடா பானுவுடன் தனது இரண்டடுக்கு மாடிக் கொண்ட வீட்டில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே உள்ள பகுதியில் மோதல் வெடித்ததாக பிபிசியிடம் தெரிவித்தார். போராட்டக்காரர்களைக் கலைக்கப் பாதுகாக்கப் படைகளால் பயன்படுத்தப்படும் கண்ணீர்ப் புகை தனது வீட்டைச் சூழ்ந்து கொண்டதாகவும், 34 வயதான ஃபெமீடா அதனால் மூச்சு திணறியதாகவும் தெரிவிக்கிறார். மூச்சு விடுவதில் சிக்கல் இருப்பதாக அவள் என்னிடம் தெரிவித்தாள். எனவே அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அவள் தொடர்ந்து என்னிடம் தனக்கு என்ன நடக்கிறது என்று கேட்டுக் கொண்டே இருந்தாள். மிகவும் பயந்துவிட்டாள். மருத்துவர்கள் அவளைக் காப்பாற்ற பெரிதும் முயன்றனர். ஆனால் அவளைக் காப்பாற்ற முடியவில்லை. பானுவின் மருத்துவ அறிக்கை அவர் விஷவாயுவை சுவாசித்தால் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கிறது. தற்போது பானுவின் கணவர் தனது மனைவியின் இறப்பு குறித்து விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் போவதாகத் தெரிவிக்கிறார். பானுவை போன்ற கதைதான் ஸ்ரீ நகரில் உள்ள சஃபகடல் பகுதியைச் சேர்ந்த 60 வயது முகமது அயூப் கானின் கதையும். ஆகஸ்டு 7ஆம் தேதி இந்த போராட்டம் வெடித்த போது அந்த பகுதியை அயூப் கான் கடந்து சென்றதாக அவரின் நண்பர் ஃபயஸ் அகமது கான் தெரிவிக்கிறார். கானின் காலுக்கடியில் இரண்டு கண்ணீர் புகைக் குண்டுகள் வந்து விழுந்ததாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார். உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுவரை அவரின் இறப்பு குறித்து அவரின் குடும்பத்திற்கு எந்த ஓர் அறிக்கையும் தரப்படவில்லை. ஆனால் கான் கண்ணீர் புகையைச் சுவாசித்ததால்தான் உயிரிழந்தார் என்று கூறுவது வதந்தி என போலீஸார் தெரிவிக்கின்றனர்.   தகவல் தர மறுக்கும் போலீஸார் அந்த பகுதியில் முழு அடைப்பு நடைபெற்று வந்தாலும், தடை உத்தரவு மீண்டும் மீண்டும் அமலில் இருந்தபோதும், அங்கு போராட்டக்காரர்கள், அரசுக்கும், பாதுகாப்புப் படைக்கும் எதிராகப் போராட்டங்கள் நடத்துகின்றனர். அது வன்முறையாகவும் மாறி வருகிறது. படத்தின் காப்புரிமை Getty Images இதுவரை எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்து மருத்துவமனைகள் எந்த தகவலையும் தர மறுக்கின்றன. காயமடைந்த பலர் தங்களின் காயங்களுக்கு முறையான சிகிச்சை பெற மருத்துவமனைக்குச் செல்ல விரும்புவதில்லை. ஏனென்றால் அவர்கள் கைது செய்யப்படலாம் என அஞ்சுகின்றனர். ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள், உள்ளூர் அரசியல்வாதிகள், மற்றும் வணிகர்கள் ஆகியோரை அரசு தடுத்து வைத்திருக்கிறது என நம்பப்படுகிறது. இதில் பலர் உள்ளூர் சிறையிலிருந்து நகரத்தின் வெளியே உள்ள பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். இதில் எத்தனை பேர் இறந்துள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என அறிவது கடினமாக இருந்தாலும், ஒரு விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அதாவது காஷ்மீர் இதற்கு முன்னால் எதிர்கொண்ட அமைதியின்மையைவிட ஒப்பீட்டளவில் இது சிறியது. காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக், "2008, 2010 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் அதிகளவிலான மக்கள் உயிரிழந்தனர்." என்கிறார். "பாதுகாப்புப் படை இரவும், பகலும் அயராது உழைத்து, எந்த தனி மனிதரையும் காயப்படுத்தாமல் அமைதியை உறுதிப்படுத்தி உள்ளனர்" என்று தெரிவிக்கிறார். தொலைத்தொடர்பு துண்டிப்பு, ராணுவ நடவடிக்கை காரணமாகத்தான் உண்மையான நிலவரம் இன்னும் முழுமையாக வெளியே தெரியவில்லை எனப் பலர் கூறுகின்றனர். காஷ்மீரில் நடைமுறையில் உள்ள பல தடைகள் எப்போது முடிவுக்கு வரும், அப்படி முடிவுக்கு வரும்பட்சத்தில் என்ன நடக்கும் என முழுமையாகத் தெரியவில்லை. https://www.bbc.com/tamil/india-49714631
  • பல நாடுகள் ஏற்கனவே பாகிஸ்தானுடன் மத்திய கிழக்கு நாடுகளில் தான் விளையாடுகின்றன. இலங்கையும் அவ்வாறு செய்யலாம். இவரும் இம்ரான்கான் போன்று அரசியலில் இறங்க உள்ளார் போல் தெரிகின்றது.  🙂 🙂 
  • இந்த கட்டுரையாளர் என்ன நோக்கத்திற்காக எழுக தமிழ் நடந்தது என்பதை விளங்காமல் எழுதினாரா இல்லை விளங்கியும் வேறு நோக்கத்துடன் எழுதினாரா? என்ற கேள்வி எழுகின்றது. காரணம், இங்கே இவர் எழுப்பும் கேள்விகள் நியாயமானவை,. ஆனால், எழுப்பிய நேரமும் இடமும் தவறானவை.