Jump to content

ஏன் இவங்க இப்படி ..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காலை வேலையை முடிச்சிட்டு மெட்ரோவில் பப்பரக்கா என்று முன்சீட்டு வரை காலை நீட்டி இருந்தது வந்தேன் ஒரு இடத்தில ஒரு அண்ணை ஏறினாறு அப்படியே வந்து என் முன்னாடி இருந்தாரு நானு காலை மடிச்சு மரியாதையா இருந்தேன் ..

காரணம் ஏறினவர் நல்ல அழகா உடை அணித்து  ஒரு உயர்தர வேலைக்கான மிடுக்குடன் அவ்வளவு அழகா இருந்தார் சிறிய புன்னைகையை தவழவிட்டபடி ..
ஒரு சிறிய அமைதியின் பின் பேச்சு கொடுத்தார் தம்பி நீங்க தமிழா நான் மனதில் (படிச்சபயல் நம்மகூட பேசுது )நினைத்தபடி ஆமா அண்ணே என்று சொல்லிட்டு இருக்க சொன...்னாரு உலகத்தில வன்முறை ;பயங்கரவாதம் தலை தூக்கி ஆடுது (ஒருவேளை இவன் ரகசிய போலீஸோ) இதில இருந்து மீள ஒருவழிதான் இருக்கு ..

நான் ஆவலா என்ன வழி அண்ணே நீங்கள்எல்லோரும் ஆண்டவரிடம் சரண் அடையவேணும் (இதுக்கு கோத்தா பருவாயில்லை )என்று தொடங்கி இந்தினையாவது அதிகாரத்தில் அவர் சொல்லுறார் பாவம் செய்யாமல் இருங்க என்று (என்னை கொடுமை படுத்துவது பாவம் இல்லையா )அன்பு செலுத்த சொல்லி ....

இப்படி உபதேசம் நீண்டு போகுது (இதுக்குத்தான் வெள்ளையும் சொள்ளையுமா உடுப்பு எவண்டா வேண்டி கொடுக்கிறான் ) நானு பொறுமை கடந்து ஆரம்பிச்சான் ஞானசம்மந்தர் முன்று வயதில் தேவாரம் பாடி இறைவனை தனது அன்பால் கட்டிபோட்டார் என்று தொடங்க ...அவரு சொன்னார் உமக்குள் சாத்தான் இருக்கு அது இப்படிதான் பேசசொல்லும் ஒருநாள் வந்து ஆண்டவரின் ஆசீர்வாதம் கிடைத்தா சாத்தான் உங்களை விட்டு அகன்று நீங்கள் ஒரு மறு பிறவி காணலாம் ...

நல்லூர் கந்தா அந்த வேல் இங்கின தா இவன் வாயில விட்டு சுத்தணும் போல இருக்கு எனக்கு ..அடபாவிகள் ஒரு அப்பத்துக்கும் வையினுக்கும் நான் உன்கூட வருவான் என்று நீ எப்படி முடிவு எடுப்ப ஒரு பீர் வாங்கித்தாறன் வாறியா என்றால் போயிருப்பன் என்ர கதிரமலையனே என் இப்படியானவை எல்லாம் என் கண்ணுல காட்டுற ,கண்ணை மூடிட்டு திறந்து பார்த்தா பின்சீட்டில ஒருத்தனுக்கு புத்தம் கொடுத்திக்கொண்டு நிக்கிறார் அவன் பாவம் யாரு பெத்த பிள்ளையோ ...

Link to post
Share on other sites

கிறிஸ்தவமும்.. இஸ்லாமும் தான் ஆட்களை வற்புறுத்தி மத மாற்றம் செய்ய அதிக பணம் செலவழிக்கிற மதங்கள். பெளத்தம் அடி தடி... அது வேற.

 

உப்பிடித்தான்.. ஒருவர்.. வீட்டு வாசலில வந்து நின்று தட்டினார். எவண்டா.. அதுன்னு பார்த்தா.. உதில ஒராள் தான்.

 

ஆளைக் கண்ட உடனவே தொடங்கினார்.. கடவுள் அதுஇதென்று. நான் கொஞ்சம் நேரம்..சத்தப்படாமல் நின்றிட்டு சொன்னன்.. கடவுளை நீங்க சொல்லி நான் நம்பிறதா இல்ல. ஐ லைக் டார்வின் எண்டு. அந்தாளுக்கு வந்திச்சே கோபம்.. அவன் இவன்.. டார்வின்.. குரங்கு.. என்று ஒரு துள்ளு.. துள்ளிப் போட்டு அவரவே வாறன் என்று போயிட்டார்.

 

அப்புறம் தான் அறிஞ்சன்.. உப்படியானவைக்கு... டார்வின்.. கூர்ப்பு.. தான் மூத்த சாத்தான் என்று. அதுகளை ஏவி விட்டா.. உவை ஆட்கள்.. சூரியனைக் கண்ட மூட்டைப் பூச்சி மாதிரி ஓடி ஒளிச்சிடுவினமாம். :lol::D

Link to post
Share on other sites

முன்பு ஒரு வேலை அலுவலகத்தில் கூட வேலை செய்த ஒரு தமிழர் பைபிளை கொடுத்துவிட்டார்.. தன்னுடைய தேவாலயத்திற்கும் வரும்படி கேட்பார்.. நான் போகவில்லை.. அதனால் என்னுள் சாத்தான் குடிகொண்டுவிட்டது.. :(

அனுபவப் பகிர்வுக்கு நன்றி அஞ்ச்.. :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அண்ணைமாரே  வரவுக்கு . :)

Link to post
Share on other sites

சாத்தான்கள் பல முகமூடிகளில் திரிகின்றன . நீங்கள்தான் அவதானமாக இருக்க வேண்டும் . குறுங்கதைக்குப் பாராட்டுக்கள்  :)  :)  .

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.