Jump to content

கள்வனின் காதலி ( ; காமரசம் ;)


Recommended Posts

யார் வீட்டுப் பிள்ளை இவள்?

அடி பெருத்து...
இடை சிறுத்து...
வளர்ந்து நிற்பவளின்....
அழகு மேனியில் தெரிகிறது,
பருவ வளர்ச்சியின் படிமங்கள்!

அவளின் பருவக் குலையைப்
பார்க்கப் பார்க்க...
தாகம் எடுக்கிறது தானாக...!
தேகச்சூடு அடங்கும்வரை
பருகவேண்டும்

அவளின் இள நீரை!
வீசுகின்ற காற்றிலே அழகாய்
மெல்ல மெல்ல அசைகிறது
அவள் பச்சைக் கூந்தல்..!
இளங்குருத்தின் வாசம் வந்து
வெட்கத்தோடு அழைக்கிறது
ஏறி வா என்று...!

அவள் இடை அணைத்து...
அவளுடல் மீதேறி...
யாரோ கட்டியதை
திருட்டுத்தனமாய்...
மெல்ல அவிழ்த்திறக்கி
சத்தமின்றி  மொத்தத்தையும்
ரசித்து...குடித்து...வெறித்து....
திகட்டும் போதையில் திளைத்து,
பின் களைத்துப் போக.....
அவள் தோப்பில் அவளோடு,
கொஞ்ச நேரம் தூங்கினாலும்,
அதுவல்லோ   சுகம்...!!!

 

~~~~~       ~~~~~      ~~~~~      ~~~~~

 

குறிப்பு :

பல வருடங்களுக்கு முன்னர் நண்பர்களோடு திருட்டுத்தனமாக தென்னந்தோப்புகளில் இளநீரையும், யாரோ கட்டிவிட்ட முட்டியிறக்கி  தென்னங் கள்ளினையும்

குடித்து மகிழ்ந்த பழைய ஞாபகங்களோடு,    கொஞ்சம் காமரசம் கலந்து :wub: ..... கள்வனின் காதலியாக!!! :wub::lol:

 

coconuttreeone.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கத் தொடங்க இதென்ன எங்கள் கவிதையா இப்படி என்று ஒரு கேள்வி. முடிய எல்லாம் விளங்க்கீற்றுது அருமை உங்கள் கவிதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
விசுகின்ற காற்றிலே அழகாய்

 

 

ஒரு சின்ன எழுத்துப்பிழை. மற்றும்படி.. இளநீரோடு.. காமரசம் வழிந்தோடுகிறது. :):lol:

Link to comment
Share on other sites

நல்ல கற்பனை கவிதை.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டித் தழுவுதலால் கால்சேர ஏறுவதால்

எட்டிப் பன்னாடை இழுத்தலால் - முட்டப்போய்

ஆசைவாய்க் கள்ளை அருந்துதலால் அப்பனையும்

வேசையென லாமே விரைந்து

 

 

 

பாரத் தலைவிரிக்கும் பன்னாடை மேல் சுற்றும்

சோர இளநீர் சுமந்திருக்கும் - நேரேமேல்

ஏறி இறங்கவே இன்பமாம் தென்னை மரம்

கூறும் கணிகையென்றே கொள்.

 

-காளமேகப் புலவர்-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கற்பனை கவிதை...! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூ

இவ்வளவு தானா???

நானும்  முதல்வரிகளை  வாசித்து...

சூடேறி....

சீ............

 

ஏமாற்றிவிட்டாய் காண்........ :icon_mrgreen:

Link to comment
Share on other sites

அம்ம்மாடியோவ்.... தென்னையவே இப்புடி வர்ணிக்கிறியள்.., பெண் கிடைச்சா...! :D

கவிதை சூப்பர்... :)

Link to comment
Share on other sites

வாசிக்கத் தொடங்க இதென்ன எங்கள் கவிதையா இப்படி என்று ஒரு கேள்வி. முடிய எல்லாம் விளங்க்கீற்றுது அருமை உங்கள் கவிதை.

பெண்புத்தி பின் புத்தி என்பார்கள்.... :unsure:  ஆனால், எங்கள்  சுமே அக்காவா கொக்கா!? :)  அதுதானே பார்த்தன்.... கடைசியில கற்பூரம் மாதிரி பத்திக்கிச்சே! :lol:

 

நன்றி அக்கா! :)

Link to comment
Share on other sites

ஒரு சின்ன எழுத்துப்பிழை. மற்றும்படி.. இளநீரோடு.. காமரசம் வழிந்தோடுகிறது. :):lol:

 

மிக்க நன்றி நெடுக்ஸ்...!  எழுத்துப்பிழையை திருத்தியமைத்துள்ளேன்! :)

கொஞ்சம் இளநீர் + கொஞ்சம் தென்னங் கள் + கொஞ்சம் காமரசம்...... அவ்வளவுதான். :wub::lol:

Link to comment
Share on other sites

நல்ல கற்பனை கவிதை.. :D

 

இப்படியான கவிதைகள் இசைக்கு பிடிக்கும் என்பதை அறிவேன்.  :rolleyes:  (அதாவது.... இறுதியில் அட தென்னைமரத்தையா சொன்னான்...எனும் போது வரும் சிரிப்பைச் சொன்னேன். சத்தியமா 'காமம்' சம்மந்தப்பட எதுவுமில்லை.... நம்புங்கப்பா!!! ) :lol:

 

மிக்க நன்றி இசை :)

Link to comment
Share on other sites

கட்டித் தழுவுதலால் கால்சேர ஏறுவதால்

எட்டிப் பன்னாடை இழுத்தலால் - முட்டப்போய்

ஆசைவாய்க் கள்ளை அருந்துதலால் அப்பனையும்

வேசையென லாமே விரைந்து

 

 

 

பாரத் தலைவிரிக்கும் பன்னாடை மேல் சுற்றும்

சோர இளநீர் சுமந்திருக்கும் - நேரேமேல்

ஏறி இறங்கவே இன்பமாம் தென்னை மரம்

கூறும் கணிகையென்றே கொள்.

 

-காளமேகப் புலவர்-

 

அந்தக் காலத்து புலவர், கவிஞர் எல்லாரும் ஒன்றையும் விட்டுவைக்கவில்லை. எல்லாவற்றையும் பாடிவைத்துள்ளார்கள். :lol: ( நம்மளுக்கு எதையாவது விட்டுவச்சாங்களா... பாவிப்பயலுக! :huh::lol: )

 

தேடியெடுத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தீயா!

 

Link to comment
Share on other sites

நல்லதொரு கற்பனை கவிதை...! :D

 

 

மிக்க நன்றி சுவியண்ணை :)

 

Link to comment
Share on other sites

பூ

இவ்வளவு தானா???

நானும்  முதல்வரிகளை  வாசித்து...

சூடேறி....

சீ............

 

ஏமாற்றிவிட்டாய் காண்........ :icon_mrgreen:

 

 

பூ

இவ்வளவு தானா??? <_< 

 

சூடேறினா.....  'ரெண்டு இளநீர்' குடிங்க விசுகண்ணை! :wub::rolleyes:

கூலாயிடுவீங்க....! :rolleyes::D  வெறி சிம்பிள்.... இதுக்குபோய் ! :lol:

 

 

 

 

மிக்க நன்றி விசுகண்ணை! :)

Link to comment
Share on other sites

அம்ம்மாடியோவ்.... தென்னையவே இப்புடி வர்ணிக்கிறியள்.., பெண் கிடைச்சா...! :D

கவிதை சூப்பர்... :)

 

பெண் கிடைச்சா.................. :wub:

இப்பிடி வர்ணிச்சு எழுதிக்கொண்டிருக்க நேரம் கிடைக்காது. ^_^

எவ்ளோ முக்கியமான வேலை இருக்க...  :wub:  லூசுத்தனமா வர்ணிச்சு எழுதுக்கிட்டிருக்க முடியுமா...?! :lol:

"ஐ ஆம் ஸோ பிஸி"  ஆயிடுவனாக்கும்...  ஆ ஆ!! :lol: :lol:

Link to comment
Share on other sites

டயானா !!

 

பண்டைய கிரேக்க கற்பனைகளும் இப்படித்தான் இருந்ததோ ? 

 

 

artemis_ephesus_mus_tripoli1.JPG

 

கிரேக்கர்கள் மிகுந்த கலாரசனை உடையவர்கள். அதுமட்டுமல்ல.... 'அந்த விடயத்தில்'  :wub:  ரொம்ப ஆசைப்படுபவர்கள் என கேள்விப்பட்டிருக்கின்றேன்.

இந்த சிலையின் படத்தைப் பார்க்கும்போது புரிகிறது..... :icon_idea:

 

அவர்கள் 'அந்த விடயத்தில்' பேராசைக்காரர்கள் என்று.... :rolleyes::lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் கவிதை.ஆனலும் தென்னைக்கும் காமதுக்கும் னெருங்கிய தொடர்பு உன்டு. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைப்பு கம் என்றும்

கருத்து கும் என்றும் இருக்க வேண்டும்

அது தான் இறப்பிலும் சிறப்பு ...... :)

 

ஏமாற்றி விட்டாய் அண்ணா

கள்வனின் காதலி என்றதும்

ஓடி ஓடி வந்தேன்,

ம்ம்.. ஓரளவு சுகம் கண்டேன் ! ...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.