Jump to content

திரிபதாதி விளம்புவீரே !!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குடுமி  ......................எனது ஊகம் தவறு

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
22 minutes ago, நிலாமதி said:

குடுமி  ......................எனது ஊகம் தவறு

தவறுதான் நிலாமதி அக்கா

முயற்ச்சி செய்யுங்கள் உங்களால் கண்டுபிடிக்க முடியும்

Link to comment
Share on other sites

2 hours ago, வாதவூரான் said:

சுவடு

முயற்சிக்கு பாராட்டுக்கள். விடை தவறு

ஒரு சின்ன குளு: விடைக்கு கிட்ட வந்துவிட்டீர்கள் :)

Link to comment
Share on other sites

3 minutes ago, ஜெகதா துரை said:

குவடு

வடு =  காயம் வந்தால் வரும்.
 குடு = சடுகுடு

சரியான பதில்!

வாழ்த்துக்கள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விளையாட்டுக்கு எல்லாம் வாறதில்லை!😆

ஆனால் கனபேர் கஷ்டப்படுகிறதைப் பார்க்கத் தாங்கேலாமல் இருந்தது😬

மலை என்றால் பர்வதம் என்று சொல்லலாம். ஆனால் அது மலையுச்சி இல்லை!

சிகரம் என்றால் அதில் மூன்றெழுத்து இல்லை.

உச்சி என்றால் அது ஏற்கனவே கேள்வியில் இருக்கு

முகடு என்பது சரி! ஆனால் முதல் எழுத்தை விட்டால் “கடு” - இது வயதுக்கு வருவதன் அறிகுறி. காயம் வந்தால் வராது!!!😃 “கடுக்கண்ட ஆட்டின் புடுக்கண வால்” என்ற உவமைத் தொடரைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்😜😂🤣

காயம் வந்தால் நோ வரும்!  வலி வரும்!!. இரத்தம் வரும்! 

காயம் மாறினால் தழும்பு வரும். ஆனால் இது இரண்டெழுத்து இல்லை.

தழும்பை மறு என்றும் சொல்லலாம். இரண்டு  எழுத்தானாலும் மறு என்று முடியும் மூன்றெழுத்துச் சொல்லில் மலையுச்சி வராது.

தழும்பை வடு என்றும் சொல்லலாம். வடுமாங்காய் என்றால் பிஞ்சு மாங்காய். ஆனால் அது காயம் ஆறி வருவதில்லை!

ஆகவே வடு என்று முடியும் மூன்று எழுத்துச் சொல்தான் விடை! இதை வாதவூரனுக்கு தமிழினி சொன்ன க்ளூவிலிருந்தும் கண்டுகொள்ளலாம்.😃

247 எழுத்துத்தானே தமிழில் உள்ளது. அதில் மெய்யெழுத்துக்களைத் தவிர்க்கலாம். இலக்கண விதிப்படி மேலும் பல எழுத்துக்கள் முதல் எழுத்தாக வராது. ஞ, ங, ட வரிசையில் உயிர்மெய் எழுத்துக்களையும் தவிர்க்கலாம். இப்படியே வடிகட்டிக்கொண்டுபோனால் வந்து சேருவது நூறுக்குள் வரும்.

 

ஆகவே விடையை கண்டுபிடிப்பது கடினம் இல்லை...

இப்படியெல்லாம் நேரத்தை செலவழிக்காமல் இரண்டு நிமிடங்களில் நான் கண்டுபிடித்த  விடை..

 

.

 

.

.

 

.

 

 

 

 

 

 

 

குவடு

முதல் எழுத்தை எடுத்தால் காயம் வந்தால் வரும் வடு!

இடையெழுத்தை விட்டால் சடுகுடு விளையாட்டில் பாதி!

 

 

 

8 minutes ago, ஜெகதா துரை said:

குவடு

வடு =  காயம் வந்தால் வரும்.
 குடு = சடுகுடு

நான் விலாவாரியாக எழுத வெளிக்கிட்டுப் பிந்திவிட்டேன்😂🤣

Link to comment
Share on other sites

பணத்துக்கும் இதற்கும் தொடர்புள்ளது.

முதலில்லாமல் போனால் பல மரங்களாகும்
இடையில்லாமல் போனால் ஒரு பொழுதாகும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தமிழினி said:

பணத்துக்கும் இதற்கும் தொடர்புள்ளது.

முதலில்லாமல் போனால் பல மரங்களாகும்
இடையில்லாமல் போனால் ஒரு பொழுதாகும்

இதுக்கு ஒருத்தரையும் முந்த விடக்கூடாது

காசோலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழினி said:

திரிபதாதியை யாரும் விளம்பலாம்.

கிருபன் அண்ணா நீங்கள் ஒரு கேள்வியை கேட்கலாமே

போட்டி என்றால் நான் சூரப்புலி! 🐯 

கேள்வி கேட்கலாம். ஆனால் விடையை வேகமாகச் சொன்னால் மிச்சக் கேள்விக்கு எங்கு போவது என்று யோசிக்கின்றேன்!

Link to comment
Share on other sites

8 minutes ago, கிருபன் said:

போட்டி என்றால் நான் சூரப்புலி! 🐯 

கேள்வி கேட்கலாம். ஆனால் விடையை வேகமாகச் சொன்னால் மிச்சக் கேள்விக்கு எங்கு போவது என்று யோசிக்கின்றேன்!

சூரப்புலிக்கு கேள்வி  தயார் செய்வது கஸ்டமா என்ன?

ஒன்றை எடுத்து விடுங்கள் அடுத்தடுத்து தானாய் வரும் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி ஒரு திரிபதாதியைக் கேட்டால் போச்சு!

 

ஒரு திடகாத்திரமான மிருகம்

முதலில்லாவிட்டால் பளீரென்ற பிரகாசமானவன்

இடையில்லாவிட்டால் பெருவெடிப்பில் தோன்றி பரந்து விரிந்த காலவீதியில் உள்ளவற்றில் உன்னதமானது

Link to comment
Share on other sites

27 minutes ago, கிருபன் said:

சரி ஒரு திரிபதாதியைக் கேட்டால் போச்சு!

 

ஒரு திடகாத்திரமான மிருகம்

முதலில்லாவிட்டால் பளீரென்ற பிரகாசமானவன்

இடையில்லாவிட்டால் பெருவெடிப்பில் தோன்றி பரந்து விரிந்த காலவீதியில் உள்ளவற்றில் உன்னதமானது

புரவி

ரவி

புவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தமிழினி said:

புரவி

ரவி

புவி

சுத்தி வளைச்சுப் போட்டாலும் மூன்று எழுத்தென்பதால் இலகுவாக இருக்கு!

இன்னும் சுத்தத்தான் இருக்கு😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தாமரை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 மூன்று எழுத்து சொல்

முதல் எழுத்து நீங்கினால்  ...மறைப்பு என் பொருள் படும்  

  நடு  எழுத்து  நீங்கினால்  எல்லை என்று பொருள் படும்

 

Link to comment
Share on other sites

20 minutes ago, நிலாமதி said:

 மூன்று எழுத்து சொல்

முதல் எழுத்து நீங்கினால்  ...மறைப்பு என் பொருள் படும்  

  நடு  எழுத்து  நீங்கினால்  எல்லை என்று பொருள் படும்

 

கதிரை

திரை

கரை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னோர் திரிபதாதி

ஊர்க்கோழிக்குஞ்சுகளின் பெருவிருப்பத்துரியது.. குசேலர் கண்ணபிரானைக் காணச்சென்றபோது அவலை எடுத்துச் செல்ல உபயோகித்தது இன்னொரு பொருளாகவும் வரும்!

முதல் நீங்கினால் பழந்தமிழரில் வலிமையானவர் ஆநிரையைக் கவரச் செல்லும்போது அலங்கரிப்பது

இடை நீங்கினால் பிரமிக்கவைக்கும் ரதிதேவி வடிவானது😃

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.