Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தேவகிக்குத் தன்னை நினைக்கவே ஒருபுறம் சிரிப்பாகவும் மறுபுறம் பச்சாதாபத்துடன் கூடிய அழுகையும் வந்தது. வாற மாதம் வந்தால் இவ்வுலகில் எண்பது ஆண்டுகளைக் கழித்துவிட்ட நிறைவு. இன்னும் எத்தனை நாட்களோ மாதங்களோ வருடங்களோ யாரறிவார் என்னும் எண்ணம் தோன்றினாலும் நான் இன்னும் கொஞ்சக் காலம் இருப்பன். அவ்வளவு லேசில போயிடமாட்டன் என்னும் ஒரு நம்பிக்கையும் ஏற்பட்டு ஏனோதெரியவில்லை அதனூடே சிரிப்பும் வந்தது.

சிறிய வயதில் எல்லாம் தன் நாட்களை நினைத்துப் பார்த்தால் துன்பங்களும், நிறைவேறாத ஆசைகளும், போராட்டங்களுமாக வாழ்வின் இளமைக்காலம் கழிந்தது. பின்னர் வந்த காலங்களில் தன் முயற்சியில் மனம் சோராது போராடியிராவிடில்  இன்று இப்படி ஒரு நிலையினை அடையக்கூடியதாக இருந்திருக்குமா என்று மனம் பெருமையும் கொண்டது.

தான் இல்லாவிட்டால் தன் குடும்பம் மாத்திரமல்ல தன்  கணவர் கூட இந்த நிலையை அடைந்திருப்பாரா என்பது சந்தேகம்தான். ஆனால் அந்த மனிசனுக்குத்தான் அது விளங்குதில்லையே என மனதில் ஒரு ஆற்றாமையும் வந்து சேர கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

என் கணவருக்கு நான் என்ன குறை விட்டேன். என்னைத் தேய்த்து, என் முகம் வெளியே காட்டாது கணவரை இத்தனைதூரம் பேரும் புகழும் அடைய வைத்தும் எந்த வித நன்றியும் இன்றி ஆண் என்னும் மமதையில் என்னவெல்லாம் பேசிவிட்டார்.

சோமருக்கும் கொஞ்ச வயதில்லை. இன்னும் ஆறு மாதங்களில் எண்பத்தைந்தாகிவிடும். வயது போகப்  போக  பொறுமையும் அமைதியும் வந்துவிடுமென இவள் எண்ணியதற்கு மாறாக அவருக்கு சிறுசிறு விடயங்களுக்கெல்லாம் ஏற்படும் கோபங்களும் அதன் காரணமாக இவளை நோக்கி வீசப்படும் வார்த்தைகளும் வரவரத் தாங்கமுடியாது போய்விடுகிறது தேவகிக்கு.

எத்தனை தரன் சொன்னாலும் கேட்காது ஒவ்வொரு சின்னச் சின்ன விடயங்களுக்கெல்லாம் அவளை ஏவுவதும் உடனே செய்யாவிட்டால் வன்சொற்களால் வசைபாடுவதும் அவள் எதோ தனக்கு இட்ட பணிகளைச் செய்யவே வேலைக்கு அமர்த்தப்பட்டவள் போல் அவளை நடாத்துவதும் அவளால் தாங்கவே முடிவதில்லை.

இப்பிடிப் பாக்கப்போனால் வெள்ளைக்காரர் மாதிரி அவையவையே தன் தன் வேலை பார்த்திருந்தால் இந்த வயசுபோன காலத்தில எனக்கு இந்தக் கஷ்டம் வந்திருக்காது என எண்ணினாள்.எங்கட கலாச்சாரம் பண்பாடு என்று இப்ப நான் எல்லோ அவதிப்படுறன் என்று தனக்குள்ளேயே நினைத்தவளுக்குச் சிரிப்பு வந்தது.

அவள் சோமரைத் திருமணம் செய்து அறுபது ஆண்டுகள் ஓடிவிட்டன. இத்தனை ஆண்டுகள் கழித்து வெளிநாட்டில் வாழ்வதனால் இப்படிக்கூட எனக்கு எண்ணத் தோன்றுகிறதே. அப்ப எங்கட இளம் பிள்ளையளைக் குற்றம் சொல்லி என்ன என்றும் மனம் இவளைச் சாடியது.

பிள்ளைகள் தம்முடன் வந்து இருக்குமாறு எவ்வளவோ வற்புறுத்தியும் ஏனோ இவளுக்கு அவர்களைச் சார்ந்து இருப்பதர்ற்கு விருப்பம் இல்லை. இவளுக்கு மட்டுமல்ல சோமருக்கும் அதே கொள்கைதான். பென்சன் காசு வருது. நாங்கள் எங்கட பாட்டில இருக்கிறதுக்கு எதுக்கு மற்றவைக்குக் கரைச்சல் கொடுப்பான் என்று எண்ணியதும் ஒரு காரணம்தான்.

ஆனால் இப்ப கொஞ்சக் காலமாய் என்ன சமைக்கிறாய், ஆக ரண்டு கறிதான் வச்சனியோ, எனக்கு குளிசை போடவேணும் கெதியா சாப்பாட்டைத் தா, மத்தியானம் கட்டாயம் மூண்டு கறியாவது இருக்கவேணும் எண்டெல்லாம் சோமர் செய்யும் அட்டகாசத்துக்கு அளவே இல்லாமல் போனது. நான் மட்டும் என்ன குமரியே. எனக்கும் ஆரும் சமைச்சுத் தந்தால் சும்மா இருந்து சாப்பிட ஆசைதானே என எண்ணியவளுக்கு மனதெல்லாம் எதுவோ அடைத்தாற்போல் இருந்தது.

நேற்று சோமரின் பென்சன் கடிதம் ஒன்றைக் காணவில்லை என்று, இவள்தான் எங்கோ வைத்துவிட்டாள் என அவர் போட்ட கூச்சலில் இவளுக்கும் கோவம் வந்துவிட்டது. நான் ஒண்டும் உங் களுக்கு வேலைக்காரி இல்லை மரியாதையாக் கதையுங்கோ எண்டு இவளும் என்றுமில்லாதவாறு குரலை உயரத்தில் கத்த சோமருக்கு வந்த கண்மூடித்தனமான கோவத்தில் உன்னைச் சாக்காடிப் போடுவனடி என்று இவள் கழுத்தில் கையை வைத்துவிட்டார்.

ஒரு செக்கன்  இவளுக்கு மூச்சே வராமல் கழுத்தை அங்கும் இங்கும் ஆட்டி அவரிடமிருந்து விடுவித்துக்கொண்டு தன்னை அசுவாசப்படுத்தவே பெரும்பாடாகப் போய்விட்டது. தன்  அறைக்குள் போய் சின்னப்பிள்ளை போல் விக்கிவிக்கி அழுதபின் தான் அவள்மனம் ஆறுதல் கொண்டது. எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தால் என்ன ஆண்களின் அடக்கும் புத்தியை எண்ணி அவர்பால் ஒருவித வெறுப்பும் வந்தது.

இன்றுவரை அவருடன் பேசவுமில்லை. அவருக்கு எதுவும் செய்யவில்லை. மனதில் ஒரு கோபத்தோடு இனி நான் உவருக்கு ஒண்டும் செயிறேல்ல. தனிய எல்லாம் செய்தால்த்தான் விளங்கும் என்று மனதுள் கறு வியபடி காலையில் எழுந்து தனக்கு மட்டும் தேநீர் போட்டு பாணுக்கு சலாமி வச்சு தனியச் சாப்பிட்டு, நீர் இல்லா விட்டாலும் என்னால் எல்லாம் செய்ய முடியும் என்று காட்டுவதாய் அன்று முழுவதும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு காலம் கழித்தாள் தேவகி.  

மதியம் இரண்டுமணியாகியும் அவள் எழும்பவில்லை. அவளுக்குக் காலமை சாப்பிட்ட சாப்பாடு செமிக்கவும் இல்லை. சோமர் இரண்டு மூண்டு தடவை அவளைக் கடந்து போனார்தான். அவள் அவரை நிமிர்ந்தும் பார்க்கவுமில்லை. ஒரு பத்து நிமிடம் கழிஞ்சிருக்கும். என்னப்பா இண்டைக்கு ஒண்டும் சமைக்கேல்லையே. பசிக்குதப்பா என்று வெட்கம் கெட்டு சோமர் இவள்முன் வந்து நின்று கேட்கவும் இரண்டுநாட்களாக இருந்த கோபம் வெறுப்பு எல்லாம் எங்கோ ஓடிப்போக இன்னும் நீங்கள் சாப்பிடேல்லையே என்று எதுவும் நடக்காததுபோல் எழுந்து சமையலறைக்குச்  செல்கிறாள் தேவகி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னமோ இதற்கு ஆணின் மனது என்று பெயர் வைப்பதே பொருத்தமாகத் தோன்றுகிறது. காரணம் ஆண் அந்த நேரத்தோடு அதை மறந்து இயல்பானநிலைக்கு மீண்டதை கதை யதார்த்தமாக வெளிப்படுத்துகிறது.  :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னமோ இதற்கு ஆணின் மனது என்று பெயர் வைப்பதே பொருத்தமாகத் தோன்றுகிறது. காரணம் ஆண் அந்த நேரத்தோடு அதை மறந்து இயல்பானநிலைக்கு மீண்டதை கதை யதார்த்தமாக வெளிப்படுத்துகிறது.  :)

 

அதுதான் நீங்களும் அண்தானே. ஆணுக்குச் சார்பாக மனம் யோசிக்குது. என்னைப் பொறுத்தவரை அந்தப் பெண்தான் எல்லாம் மறந்து இயல்புக்கு வருகிறார் என எண்ணினேன்.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

என்பதுகளில் காதல் நன்றாக உள்ளது..., இது ஒரு சிறிய ஊடல்தான்...   ! :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுவி அண்ணா வரவுக்கு

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சோமரிட்டை சொல்லி வையுங்கோ என்னோடை முறைய்ச்சால் வண்டி வாடும் எண்டு. அவர் அதுக்கு இன்னும் எத்தனையோ ஆண்டுகள் கிடக்கென்பார். எனக்கும் அது தெரியும், ஆனாலும் ஞாபகப்படுத்தி வைக்கிறன் எண்டு பதில் சொல்லிப்போடுங்கோ! :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கதையை வாசிக்கச் சோமரில பொறாமையாக் கிடக்கு! :o

 

நமக்கு வாய்ச்சதெல்லாம்....ம்ம்....! :icon_mrgreen:

 

 

வேணாம், புங்கை... ரூ லேட்.....! :unsure:

 

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சோமரிட்டை சொல்லி வையுங்கோ என்னோடை முறைய்ச்சால் வண்டி வாடும் எண்டு. அவர் அதுக்கு இன்னும் எத்தனையோ ஆண்டுகள் கிடக்கென்பார். எனக்கும் அது தெரியும், ஆனாலும் ஞாபகப்படுத்தி வைக்கிறன் எண்டு பதில் சொல்லிப்போடுங்கோ! :D

 

உதுதான் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுறது எண்டு சொல்லுறது. :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கலியாணம் கட்டி இரண்டுவருசத்தில் உப்படி செய்திரிந்தால் சோமர் திரிந்தியிருப்பார்....கட்டையில போரவயசில் தேவகிக்கு உந்த வீராப்பு தேவையோ? :D கதைக்கு நன்றிகள் சுமே

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யாழ் வெறுத்து ஒதுங்கப்போன சுமேரியரை, யாழ் ''இஞ்சேரும்'' என்று கூப்பிட்டதும் அனைத்தையும் மறந்த அவர் ''என்னங்கோ'' என்று வாஞ்சையுடன்....!!  ஒரு அழகான குட்டிக்கதையும் பிறந்து விட்டது. வாழ்த்துக்கள்!!.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யாழ் வெறுத்து ஒதுங்கப்போன சுமேரியரை, யாழ் ''இஞ்சேரும்'' என்று கூப்பிட்டதும் அனைத்தையும் மறந்த அவர் ''என்னங்கோ'' என்று வாஞ்சையுடன்....!!  ஒரு அழகான குட்டிக்கதையும் பிறந்து விட்டது. வாழ்த்துக்கள்!!.

 

:D :D :D வரவுக்கு நன்றி

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆணின் கோபம் பெரும்பாலும் கொஞ்ச நேரம்தான் இருக்கும். ஆனால் இந்தப் பொண்ணுங்க அதை மனசிலயே

வச்சு கறுவிக்கொண்டு திரியிற ஆக்கள். ஆண்கள் தாங்கள் குடும்பத்துக்காக செய்யும் எதையுமே "தம் சாதனையாக" கருதுவதில்லை. அதை தம் கடமையாகச் செய்துவிட்டு தங்களின் பெருங்காரியங்கள் எல்லாவற்றையும் அப்பவே மறந்துவிடுவார்கள். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்  :)

 

இந்தப் பொண்ணுங்களே இப்பிடித்தான்.... ^_^  :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆணின் கோபம் பெரும்பாலும் கொஞ்ச நேரம்தான் இருக்கும். ஆனால் இந்தப் பொண்ணுங்க அதை மனசிலயே

வச்சு கறுவிக்கொண்டு திரியிற ஆக்கள். ஆண்கள் தாங்கள் குடும்பத்துக்காக செய்யும் எதையுமே "தம் சாதனையாக" கருதுவதில்லை. அதை தம் கடமையாகச் செய்துவிட்டு தங்களின் பெருங்காரியங்கள் எல்லாவற்றையும் அப்பவே மறந்துவிடுவார்கள். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்  :)

 

இந்தப் பொண்ணுங்களே இப்பிடித்தான்.... ^_^  :lol:

 

நல்ல கதைதான் :rolleyes:

 

கலியாணம் கட்டி இரண்டுவருசத்தில் உப்படி செய்திரிந்தால் சோமர் திரிந்தியிருப்பார்....கட்டையில போரவயசில் தேவகிக்கு உந்த வீராப்பு தேவையோ? :D கதைக்கு நன்றிகள் சுமே

 

சோமர் போல ஆட்கள் திருந்தாமல் இருக்கிறது தேவகி போல ஆட்களால்தான்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் குட்டிக்கதை  வா சித்த மகிழ்ச்சி ... வீட்டுக்கு வீடு வாசற்படி ..பாராட்டுக்கள். ........ :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எந்த வீட்டை பார்த்தாலும் சோமர் பொல்லாத குழ்ப்படி என்கிறார்களே. இதற்கென்ன் கோதாரி பண்ணுறதோ :D

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எந்த வீட்டை பார்த்தாலும் சோமர் பொல்லாத குழ்ப்படி என்கிறார்களே. இதற்கென்ன் கோதாரி பண்ணுறதோ :D

 

அதுதான் இனியாவது திருந்தப் பாருங்கோ :D

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வருகைதந்த உறவுகள் புத்தன் சுவி அண்ணா, யாயினி,அலை, மல்லை, இசை, கவிதை,நிலா அக்கா, புங்கை, பாஞ்ச, சோழியான், நவீனன் ஆகிய உறவுகளுக்கு நன்றி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வருகைதந்த உறவுகள் புத்தன் சுவி அண்ணா, யாயினி,அலை, மல்லை, இசை, கவிதை,நிலா அக்கா, புங்கை, பாஞ்ச, சோழியான், நவீனன் ஆகிய உறவுகளுக்கு நன்றி.

நான் கருத்து எழுதாவிட்டாலும் வாசித்துவிட்டேன் என்பதை அறிந்திருக்கிறீர்கள்.. :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எல்லாவீட்டிலும் உள்ளது தான்

ஆண்கள் சாதித்துவிட்டதாகவோ

வென்றுவிட்டதாகவோ பெருமைப்படலாம்

ஆனால்

அவளுக்கு எல்லாம் தெரியும்

கெஞ்சினால் மிஞ்சுவர்

மிஞ்சினால் கெஞ்சுவர்...

 

நன்றி  சுமே

தொடருங்கள்

 

Link to post
Share on other sites

சோமருக்கு விசர்... இனியாவது தன்னைப் பிடிச்சு வைச்சிருக்கிற பிசாசு விட்டு விடட்டும் என்று பேசாமல் இருந்திருக்கலாம்.60 வருடங்களாக ஒரே மனிசியின் தொல்லையை எப்படித்தான் சமாளிச்சாரோ தெரியவில்லை. இதுக்காகவே தேவகி நாள் பொழுதெல்லாம் மனுசன்ட காலைக் கழுவி விட்டு இருக்க வேண்டும்.

 

(அட...ஆர் கூப்பிடுறது....  இஞ்சரும்..நான் சும்மா கணணியில தட்டிக் கொண்டு இருக்கின்றன்..கோபப்ப்டாதையும்..பொறுமன்.. உமக்கு ஆனாலும் இப்பவெல்லாம் கோபம் முணுக்கென்று வருகுது..)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நிழலி தேவகியும் குழப்படி விடலாம் தானே என்கிறார். 

 

அப்ப சில வீடுகளிலை படி இல்லாமல் ஏறிப் போகினம் போலகிடக்கு.  :D

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வருகை தந்த உறவுகள் விசுகு அண்ணா,நிழலி ஆகியோருக்கு நன்றி.


சோமருக்கு விசர்... இனியாவது தன்னைப் பிடிச்சு வைச்சிருக்கிற பிசாசு விட்டு விடட்டும் என்று பேசாமல் இருந்திருக்கலாம்.60 வருடங்களாக ஒரே மனிசியின் தொல்லையை எப்படித்தான் சமாளிச்சாரோ தெரியவில்லை. இதுக்காகவே தேவகி நாள் பொழுதெல்லாம் மனுசன்ட காலைக் கழுவி விட்டு இருக்க வேண்டும்.

 

(அட...ஆர் கூப்பிடுறது....  இஞ்சரும்..நான் சும்மா கணணியில தட்டிக் கொண்டு இருக்கின்றன்..கோபப்ப்டாதையும்..பொறுமன்.. உமக்கு ஆனாலும் இப்பவெல்லாம் கோபம் முணுக்கென்று வருகுது..)

 

என்னதான் சொனாலும் இந்த ஆம்பிளையள் பெண்கள் இல்லாட்டா ஒண்டுமே இல்லை :D :D
 


நிழலி தேவகியும் குழப்படி விடலாம் தானே என்கிறார். 

 

அப்ப சில வீடுகளிலை படி இல்லாமல் ஏறிப் போகினம் போலகிடக்கு.  :D

 

அதுகும் உங்களுக்கு மட்டும் தெரியுது :lol:
 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வருகை தந்த உறவுகள் விசுகு அண்ணா,நிழலி ஆகியோருக்கு நன்றி.

 

என்னதான் சொனாலும் இந்த ஆம்பிளையள் பெண்கள் இல்லாட்டா ஒண்டுமே இல்லை :D :D

 

 

அதுகும் உங்களுக்கு மட்டும் தெரியுது :lol:

 

சத்தியமான வார்த்தையை உதிர்த்தீர்கள் சுமேரியர். எதுவுமே தெரியாதவர்கள்!. என்னதான் சொனாலும் இந்த ஆம்பிளையள் பெண்கள் இல்லாட்டா ஒண்டுக்குமே, நல்லது கெட்டது பண்ணப் போகவும் முடியாதவர்கள்!!. :o:D :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நானாக இருந்தால் சோறு வடித்தோ, கடையில் வாங்கியோ சாப்பிட்டுவிட்டு, அவளுக்கும் வாங்கி/சமைத்து வைத்து, கோபம் தணிய பேசாமல் காத்திருப்பேன்!

 

தம்பதியர் இருவரில் யாராவது ஒருவர் கோபமாக இருப்பின், மற்றவர் கோபத்தை உடனே தணித்து, அமைதியாக, பொறுமையுடன் இருப்பதே நன்று. :)

 

ஊடல் கதைக்கு நன்றி, மேரியம்மே.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

60 வருடமாக வாழ்ந்தும் இந்த மனுசிக்குப் புரியேல்லையோ...

 

எங்கள் வீட்டிலும் இந்தக் குய்யோ முறையோ இருக்கு.... சில இல்லை பல சமயங்களில் காரணமே இல்லாமல்  ஏச்சு வாங்குவேன்... கோபம் பொத்துக் கொண்டு வரும்.... சாதிப்பதில்லை... நம்மை விட்டா அவரும் யாரிடம் தன்னுடைய இயலாமையை கோபத்தை மனத்தாக்கங்களை கொட்டித் தீர்ப்பது...வேலை டென்சன் , பொருளாதார டென்சன், உறவுகள் டென்சன்...டென்சனுக்கே வாழ்க்கைப்பட்டுப் போன ஆட்களுக்கு உடலில் வருத்தங்களும் ஏறி உட்கார்ந்து அது வேறு டென்சன்.. எங்காவது வார்த்தையாகட்டும் அழுகையாகட்டும், குழப்பமாகட்டும் கொட்டித் தீர்த்துவிடவேண்டும்....என்ன அநேக குடும்பங்களில் மனைவியாக உள்ளவர்கள் இதனைத் தாங்கிக் கொள்ளவேண்டியவர்களாகி விடுகிறார்கள். சுமே உங்களின் எழுத்தும் எண்ணமும் கூர்மையடைந்து வருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை பேசா திருக்க வேண்டும் பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் பிடியா திருக்க வேண்டும் மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை மறவா திருக்க வேண்டும் மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற வாழ்வுனான் வாழ வேண்டும் தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர் தலமோங்கு கந்த வேளே தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி சண்முகத் தெய்வ மணியே  
  • இந்தியாவுக்குக் கொடுத்த வாக்குறுதியிலிருந்து ராஜபக்‌ஷ அரசு தப்ப முடியாது; சம்பந்தன்   அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றக் கோரும் இந்தியாவின் அழுங்குப் பிடியிலிருந்தும், அதை நிறைவேற்றுவோம் என்று இலங்கை அளித்துள்ள வாக்குறுதியிலிருந்தும் ராஜபக்ஷ அரசு தப்பவே முடியாது. இவ்வாறு எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்துமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான காணொலிக் கலந்துரையாடலில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் இரா.சம்பந்தனிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: – “இலங்கையும் இந்தியாவும் ஒருமித்துச் செயற்படுவதை நாங்கள் வரவேற்கின்றோம். பல துறைகளில் ஒருமித்துச் செயற்படுவதற்கு இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சம்மதமும் தெரிவித்திருக்கின்றார்கள். இதுவும் வரவேற்க வேண்டியவிடயம். விசேடமாக இரு நாட்டு மக்களுக்கிடையில் தொடர்புகளை ஏற்படுத்துவதற்குப் பல வசதிகளை இரு நாட்டு அரசுகளும் செய்துள்ளன. அதுவும் வரவேற்க வேண்டிய விடயம். இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பொறுத்த வரையில் நீதியின் அடிப்படையில் – சமத்துவத்தின் அடிப்படையில் – கெளரவத்தின் அடிப்படையில் – சமாதானத்தின் அடிப்படையில் – பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே இந்திய அரசின் தொடர்ச்சியான கருத்தாகவும் வலியுறுத்தலாகவும்உள்ளது. இந்தியாவின் இந்தக் கருத்தை தற்போதைய பாரதப் பிரதமரும் முன்னாள் பிரதமர்களும் தற்போதைய அரசும் முன்னாள் அரசுகளும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளன. இலங்கை தமிழ் மக்கள் தொடர்பில் இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை இலங்கை அரசு நிறைவேற்றியே ஆகவேண்டும். அதை நிறைவேற்றுவதற்கு நல்லிணக் கப் பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அதேவேளை, அரசமைப்பில் உள்ள சகல விடயங்களும் நிறைவேற்றப்பட வேண்டும். இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் பல விடயங்கள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. அவை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும். இதனூடாகத் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரமான – உறுதியான தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டியது மிகவும் அத்தியாவசியமானது. இதைப்பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அரசிடம் மீண்டும் இடித்துரைத்துள்ளார். அதேவேளை, இலங்கை அரசும் அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவோம் என்று இந்திய அரசிடம் மீண்டும் வாக்குறுதியளித்துள்ளது. எனவே, என்ன நடக்கப்போகின்றது என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார். http://www.ilakku.org/இந்தியாவுக்குக்-கொடுத்த/
  • 20 வது திருத்தத்துக்கு எதிராக நாடாளாவிய ரீதியில் பாரிய போராட்டம்; ராஜித சேனாரட்ண 20வது திருத்தத்துக்கு எதிரான அனைத்து சக்திகளும் இணைந்து பரந்துபட்ட ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளன என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நீதியான சமூகத்துக்கான தேசிய இயக்கத்தின் செய்தியாளர் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிதசேனாரட்ண இதனை தெரிவித்துள்ளார். மாதுளவாவே சோபித தேரரின் சிலைக்கு முன்னாள் உறுதிமொழி எடுத்த பின்னர் கட்சி 20வது திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஓக்டோபர் ஐந்தாம் திகதி நாடாளவியரீதியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் கறுப்புகொடி ஏற்றப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் 20வது திருத்தம் குறித்து மக்களுக்கு துண்டுபிரசுரத்தை விநியோகிக்கும் நடவடிக்கையும் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார். நாடாளாவியரீதியில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சிகளும தொழிற்சங்கங்களும் சிவில் அமைப்புகளும் கலந்துகொள்ளவுள்ள என அவர் தெரிவித்துள்ளார்.   http://www.ilakku.org/20-வது-திருத்தத்துக்கு-எதி/ 20’ க்கு திருத்தங்களை அரசாங்கம் முன்வைக்கும்; சட்டமா அதிபர் தெரிவிப்பு   அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவில் அரசு சில திருத்தங்களை முன்வைக்கவுள்ளது என சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா நேற்று உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் குழு நிலை விவாதத்தின்போது அந்தத் திருத்தங்களை முன் வைப்பதாக அரசு தெரிவித்துள்ளது. 20ஆவது திருத்தத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட் டுள்ள மனுக்கள் நேற்று உயர்நீதிமன் றத்தில் ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்குஎடுத்துக் கொள்ளப்பட்டபோதே சட்டமா அதிபர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று 7 மனுக்கள் மாத்திரமே ஆராயப்பட்டுள்ளன. மற்றைய மனுக்கள் இன்று ஆராயப்படவுள்ளன. http://www.ilakku.org/20-ஆவது-திருத்தத்துக்கு-தி/
  • பிள்ளையார் சுழி போட்டு  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.