Jump to content

இரணைமடு தண்ணீரை யாழ். குடாநாட்டுக்கு கொடுக்கவே கூடாது; திட்டத்தை நிறுத்துங்கள் என்கின்றனர் விவசாயிகள்


Recommended Posts

..எங்கே என் சொம்பு

 

இரணைமாடு குளத்தை அதன் பாட்டிலேயே விட்டுவிட்டு யாழ்மக்கள் யாழுக்குள்ளேயே தீர்வை தேடுவது தான் நல்லது அது தான் நீண்டகாலத்துக்கு தன்னிறைவை கொடுக்கும்....மற்றும் யாழ்மக்களும் நீரை அளவோடு பாவிக்க பழகுவார்கள்....

 

இது தான் எனது தீர்ப்பு..

Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply

இரணைமடுல தண்ணி இருந்தா அதை தானே கேட்க முடியும் ...... அதுவும் நிறைய இருந்து சும்மா வீணாகுது

இங்கே ஒன்று தெளிவாக தெரிகிறது, வன்னி விவசாயிகள் தண்ணி அனுப்புவதை விருமபவில்லை அப்படியானால் ஏன் வற்புற்த்தி தண்ணி அனுப்ப வேண்டும், யாழில் தண்ணி பிரச்சனை என்றால் அதுக்கு வேறு வழி பார்க்கலாம்,ஆனால் இங்கெ நடப்பது என்ன்வென்றால் இரணைமடு தண்ணி தான் வேண்டு என்று அடம் பிடிப்பதைப் பார்த்தால் இது அரசியல் நகர்வாகவே தெரிகிறது

Link to comment
Share on other sites

இரணைமடுல தண்ணி இருந்தா அதை தானே கேட்க முடியும் ...... அதுவும் நிறைய இருந்து சும்மா வீணாகுது

 

உங்களது வங்கி கணக்கில் சும்மா இருக்கும் $5000 எனக்கு தாருங்கள் (இல்லை என்றால் ஏதாவது அநாதை ஆசிரமத்துக்கு கொடுங்கள்) please.....

Link to comment
Share on other sites

..எங்கே என் சொம்பு

 

இரணைமாடு குளத்தை அதன் பாட்டிலேயே விட்டுவிட்டு யாழ்மக்கள் யாழுக்குள்ளேயே தீர்வை தேடுவது தான் நல்லது அது தான் நீண்டகாலத்துக்கு தன்னிறைவை கொடுக்கும்....மற்றும் யாழ்மக்களும் நீரை அளவோடு பாவிக்க பழகுவார்கள்....

 

இது தான் எனது தீர்ப்பு..

இது சரியான தீர்ப்பு நாட்டாமை..

நன்னீர் உவர் நீராக மாறுது.. நிலத்தடி நீரில் சாக்கடை கலக்குது.. இதுக்கெல்லாம் தீர்வு தேடாமல் வன்னியில் இருந்து கொண்டுவருவோம் என்றால் அது சரியாக சிந்தித்து எடுத்த முடிவாக இருக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அளவெட்டியில் தண்ணிப் பிரச்சினையா சுண்டல்?? :wub::rolleyes:

மூண்று கண்ணுடன் கன்றுக்குட்டி,மனித தலையுடன் ஆட்டுக்குட்டி ஏதோ இருக்கும் போலதான் இருக்கு
Link to comment
Share on other sites

இது சரியான தீர்ப்பு நாட்டாமை..

நன்னீர் உவர் நீராக மாறுது.. நிலத்தடி நீரில் சாக்கடை கலக்குது.. இதுக்கெல்லாம் தீர்வு தேடாமல் வன்னியில் இருந்து கொண்டுவருவோம் என்றால் அது சரியாக சிந்தித்து எடுத்த முடிவாக இருக்க முடியாது.

 

இது ஏதோ construction companyயும் water boardஉம் (if any) காசு அடிக்கும் திட்டம்....

பின் யாழ்மக்களும் வாழ் நாள் முழுவதும் இவர்களுக்கு bill கட்டியே சாவார்கள்...

 

சும்மா இருக்கும் தண்ணியை காசு பார்க்க பார்கிறார்கள்...

பின் 15 வருடத்தில் மழையும் இல்லை...இரணை மடுவில் தண்ணியும் இல்லை என்று... வன்னி மக்களும் யாழ் மக்களும் ஒருவரின் தாடியை மற்றவர் சொறியவேண்டியது தான்...

Link to comment
Share on other sites

இது ஏதோ construction companyயும் water boardஉம் (if any) காசு அடிக்கும் திட்டம்....

பின் யாழ்மக்களும் வாழ் நாள் முழுவதும் இவர்களுக்கு bill கட்டியே சாவார்கள்...

 

சும்மா இருக்கும் தண்ணியை காசு பார்க்க பார்கிறார்கள்...

பின் 15 வருடத்தில் மழையும் இல்லை...இரணை மடுவில் தண்ணியும் இல்லை என்று... வன்னி மக்களும் யாழ் மக்களும் ஒருவரின் தாடியை மற்றவர் சொறியவேண்டியது தான்...

 

அது தான் நடக்கும்

Link to comment
Share on other sites

மொதல்ல இந்த குளம் கட்டினதே சிங்கள மன்னன் என்று google ஆண்டவர் சொல்லுறார் :D

Link to comment
Share on other sites

3. Historical name of Iranamadu called RANAMADU. During the period of 5th century the rule of the country was KING DHATUSENA. He was constructed four tanks in the northern areas, KANAKARAYANKULAM Tank, MUTHIYANKATTU Tank, JAYANT Tank and IRANAMADU Tank. After passing several centuries the tank was abandoned.

Link to comment
Share on other sites

கிளிநொச்சி ஒரு குடியேற்றவாசிகளின் மாவட்டம். யாழ்ப்பாணத்திலிருந்தும், மலையகத்திலிருந்தும் நாட்டின் பிற பாகங்களிலிருந்தும் குடியேறியவர்களால் கட்டியெழுப்பட்ட ஒரு சமூகம் அது. அங்கிருந்து கொண்டு பிரதேச வாதம் கதைப்பது என்பது ஒன்றில் முந்திவந்த யாழ்ப்பாணத்தவர்கள் பிந்தி வந்த யாழ்ப்பாணத்தவர்களை பகைப்பதைப் போன்றது அல்லது கிளிநொச்சிக்கு வந்த யாழ்ப்பாணத்தவர்கள் கிளிநொச்சிக்கு வராத யாழ்ப்பாணத்தவர்களைப் பகைப்பதைப் போன்றது. இது தன்னைத் தானே தின்னும் ஒரு தொற்று நோய்.:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
The government of the democratic Socialist republic of Sri Lanka has received financing from the Asian Development Bank and Agence Française de Development (the French Development Agency) towards the cost of the Jaffna Kilinochchi Water Supply and Sanitation Project. Agence française de Development’s Part of this financing will be used for payments under the contract named above. 2. The Chairman, Standing Cabinet Appointed Procurement Committee (SCAPC), on behalf of the Ministry of Water Supply and Drainage now invites sealed bids from eligible bidders through International Competitive Bidding on Single Stage – Two Envelope procedure for the above mentioned contract, the scope of which is briefly described below. • Raw water intake of capacity 42,500 M3/day at Iranamadu Irrigation Tank at Kilinochchi, Kilinochchi District, Northern Province • Raw water transmission line of approximate length 31 km from intake at Iranamadu to treatment plant at Palai, Jaffna District, Northern Province. • Treatment Plant at Palai, of capacity 35,000 M3/day • Construction of Administrative and Quarters buildings, Laboratories, Workshops etc. • Procurement of Vehicles and Equipment The above scope is to be completed in two parts. Part 1 consisting of Raw Water Intake at Iranaimadu, Raw Water Transmission Main, and one Train of Treatment Plant at Palai to supply 9,000 m3/day treated water, to be completed in 22 months. Part 2 consisting of all the balance works of the scope to be completed in 27 months. 3. Only eligible bidders with the following key qualifications, along with the other requirements given in the bidding document should participate in this bidding. • The bidder shall have minimum average annual construction turnover of EUR 22 million calculated as total certified payments received Contract in progress or completed, within last Three (03) years. • Participation in at least two (02) Contracts, within the last Ten (10)years that have been successfully of substantially completed and that are similar to the proposed works, where the value of Bidder’s participation exceeds EUR 26 million. The similarity of the Bidder’s participation shall be based on the physical size nature of works, complexity of methods, technology or other characteristics described in Section V of the Bidding Document (Employer’s Requirements). • The Bidder must demonstrate access to, or availability of, liquid assets, lines of creditor other financial resources, (other than any contractual advance payments) to meet the Bidder’s financial resources requirement of EUR 4.8 million for the subject contract. 4. Interested bidders may obtain further information from Assistant General Manager,(Tenders and Contracts),National Water Supply & Drainage Board (NWSDB), Galle Road,Ratmalana over the telephone,number 011-2605328 or 011-2638999 Ext.1750 or facsimile number 011-2635885 (E-mail: agmtenders@waterboard.lk)and bidding documents may be inspected free of charge at the office of the Assistant General Manager,(Tenders and Contracts), NWSDB,Galle Road, Ratmalana,Sri Lanka. 5. A complete set of Bidding Document in English language may be purchased by interested bidders on the submission of a written application on a business Letter Head to the Assistant General Manager (Tenders and Contracts), NWSDB,GalleRoad, Ratmalana, until 24/11/2013 between 09:00 hours to15:00 hours on normal working days. The bidding document shall be obtained upon payment of a non-refundable fee of SLRs.20, 000.00 plus12%VAT in cash or EUR 130.00 (inclusive of VAT) in cash or Bank Draft in favor of National Water Supply and Drainage Board. 6. The NWSDB will promptly dispatch the documents by registered airmail or by courier service on request, with an additional payment of EUR 150.00. However under no circumstances will the NWSDB be held responsible for late delivery or loss of documents so sent out. Payment could be made on Swift Transfer. Swift Code–BCEYLKLX IBAN –7010-051-1994324 Bank of Ceylon,Dehiwala Branch, Sri Lanka 7. Bids shall be delivered to the Office of the Director (Procurement), Ministry of Water Supply and Drainage,“Lakdiya Medura”,No 35, Sunil Mawatha, Pelawatta, Battaramulla,Sri Lanka,to receive on or before 10.00 hours on 25/11/2013 together with a Bid Security in the amount and manner as specified in the Bidding Document (Data Sheet). Late Bids will be rejected. Bids will be opened immediately after the above dead line, in the presence of the bidders’ representatives who choose to attend. 8. The National Water Supply and Drainage Board will not be responsible for any costs or expenses incurred by bidders in connection with the preparation, attending pre-bid meeting and delivery of bids. Chairman National Water Supply & Drainage Board
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

some comments from shingelese about this project

  1. Thanks Susantha.
  2. A small correction. There were 20,500 Sinhalese in Jaffna district in 1971. Allowing their natural growth, it would be much higher. All of them with their children must be resettled and in addition there is land in the north for all landless people in the north.
  3. If we develop the north without changing its ethnic composition, we will have a developed electaores that vote for TNA. That’s not what the country needs.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏலவே சிங்களக்குடியேற்றம் நடக்கிறது. இந்தத்திட்டத்தோடும்நீர்வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் பராமரிப்பு என்ற போர்வையில்  ஒரு சிங்களக் குடியிருப்புப் பளையில் ஏற்படுத்தப்படும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்குடாநாட்டுக்கு வன்னியின் இரணைமடுக்குளத்துநீரை பண்கிடுவதை நான் எதிர்க்கிறேன். காரணம் இது அவசரத்தில் அள்ளித் தெளித்தகோலம். ஆசிய அபிவிருத்திவங்கி காசு தருகுது என்பதற்காக பொலிடோலை குடிக்கச்சொல்லி வன்னி மக்களுக்கு அறிவுரை கூறமுடியாது. மெத்தப்படித்தவர்கள் அதிகம் வாழும் பிரதேசம் யாழ்குடாநாடு என்கிறோம், அந்த மெத்தப்படிச்சகூட்டம் தங்களது பிரச்சனையை தாங்களே தீர்த்துக்கொள்ளும் வழிமுறையை ஏன் முயலவில்லை? மெத்தப்படித்தவர்கள் அடுத்தவன் மடியில் கைவைப்பது நியாயமோ. உபரியாக இருக்கு அல்லது இல்லை, வடமாகாணத்துக்குள் வன்னி நிலப்பரப்பு வந்துவிட்டது என்பதற்காக அடிமடியில் கைவைக்கக்கூடாது.

 

முதலில் குடாநாட்டின் தண்ணீரை பாதுகாப்பதில் கரிசனை எடுங்கள், காலப்போக்கில் தேவைகள் இருபுறமும் அதிகரித்தால் என்ன செய்வது?

 

தீவுப்பகுதிக்குத் தண்ணீர் தேவை இருக்கின்றது எனில், யுத்தத்துக்கு முன்பு தீவுப்பகுதியில் அரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் குடியிருந்தார்கள் அவ்வேளையில் அவர்கள் தங்கள் குடிநீத்தேவையை எப்படிப் பூர்த்திசெய்தனர்?

 

இப்போது அங்கு குடியிருக்கும் மக்கள்தொகை என்ன? ஒருசில பத்தாயிரங்களே ஆக யுத்தத்துக்குமுன்பு அவர்கள் நுகர்வுசெய்த குடிநீரை இப்போது பகிர்ந்தால் அது மிகுதியாக இருக்குமே?

 

அப்போ தீவுப்பகுதில் இருக்கும் அன்றேல் குடியேறப்போகும் யாருக்கு இப்போ மேலதிகமாக நீர்?

 

யாழ்குட்டாவில் தீவுப்பகுதியில் இருந்த கிட்டத்தட்ட அறுபது சதவீதமானவர்கள் புலம்பெயர்து வெளிநாடுகள் வாழ்கிறார்கள் மிகுதி இருப்பவர்கள் இடம்பெயர்ந்த இடங்களிலும் கொழும்பிலும் வன்னியிலும் நிரந்தரமாகத் தங்கிவிட்டார்கள் அவர்களது இரண்டாவதுசந்ததிக்கு தீவுப்பகுதியைபற்றிய அறிவோ அன்றெல் அம்மண்ணின் தனித்த வாழ்வுபற்றிய அறிவோ சிறிதேனும் தெரியாது.

 

சரி உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தவர்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் திரும்பவும் தீவுப்பகுதிக்குப் போனாலும், தண்ணீர்வசதி கிடைக்கப்போகும் ஏனைய பிரதேசங்களில் யார்போய் குடியேறுவார்கள்?

 

சாத்சாத் விக்னேஸ்வரன் அவர்களது சம்பந்தபகுதிதான் இப்போது பூனைக்குட்டி வெளியில வந்திட்டுது யாருக்காக இவர்கள் எல்லோரும் பெருத்த குரலெடுத்து ஓலமிடுகிறார்கள் என.

 

உங்களுக்குத் தெரியுமா தற்போது நியூயோர்க் நகரத்தில் இருக்கும் மன்ஹற்றன் பகுதி ஒருகாலத்தில் யாராலும் சீண்டப்படாது எமது தீவுப்பகுதிபோல் காட்சியளித்த இடமென்பது. ஆம் எமது யாழ்குடாநாட்டின் தீவுப்பகுதிகள் அனைத்துமே பலநூறு மன்ஹற்ரன் பிரதேசத்துக்கு ஈடானவை வசதியும் வாய்ப்பும் வந்தால் செல்வம்கொளிக்கும் பூமியாகவும் தமிழீழத்தின் கேந்திர முக்கியத்துவம்வாய்ந்த வர்த்தகத் தலைநகராகவும் மாற்றிவிடக்கூடிய பிரதேசம் இதை சிங்களவனது கைகளுக்குள் விழவைக்கப்படுவதற்கான முதற்படியே இரணைமடுக்குளத்து நீரை குடாநாட்டுக்குத் திருப்பிவிடும் திட்டமதற்கு யாழ்கள உறவுகள் சாமரம் வீசுவது உவப்பானதல்ல.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  1. Tamil sangham has big accounts, now the US government is investigating how did these people get these billoions of dollars. The man who wote a letter to the president and gave his name as Mahindha and said this name is the same as the president. He belongs to the same sangham as Sara. No one could see why this man or woman want to Dismental a Bridge? I think this bridge is a vital link for the military. What the Tamil Sanghams want is to become INGOs so that they can coverup where their Sangham money is going. Lets hope the President sends a reply with our comments. As for the Talagoya, hope police will take action using the current law. Chintha is correct. Read the fish story, India think Northern Province is their property.

Having said that, the Sri Lankans who lived in the North and the East must take responsibility for the utter destruction and murder caused to your own people and to their livelihood, with the help of the Church and the West. It started in 1975 (not in 1983) with the brutal murder of Alfred Duraiappa, and the subsequent purge of other Sri Lankans who are culturally different but shared some common bond through Hinduism and Buddhism, for you to bully the central government. Also do not forget how the some of the southern Sri Lnakans students who were studying at Jaffna University were sent packing to South after de-bowelling them!!!! If you can get hold of a copy of the Sansoni Commission report or the day to day new items of that era, you will realise what I am talking about. Neither your Church nor the West showed any mercy for those poor students.

Remember the time you guys ruled the Sr Lankan State, in customs, immigrations, administration etc, north and the east had at par high level of development in the country, yet all you wanted was more and more, and the demands became threats.

Now, go to the recent past. Church and the West carved up a place in Sri Lanka called Eelam under the so called ‘Peace Agreement’ with much fanfare, for those who were suffering from this minority/inferiority complex, in 2002. And billions of dollars and Kroners were poured in for development through the Church and the west funded INGOs and NGOs. Please tell me where this money gone!!! What we saw (not the west and the church), were Tiger (pussy cat) ‘army’, ‘navy’, ‘air force’, ‘judiciary’, ‘police’, ‘tax’, purge of different cultural and religious groups, human bombs, mortars, satellite phones with direct links to the west. This went on for more than five years!!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு மகாவலியைக் கொண்டுவந்து இரணைமடுவுக்குள் விடப்போரன் என்டார்கள், அது இப்ப எங்க நிக்குதோ தெரியேல்ல. அது வாற வழிலதான் மல்வத்து ஒயாவும் ஓடுது, இரண்டையும் கொண்டுவந்து இரணைக்குள்ள விட்டால் மல்லாகம், மாவிட்டபுரம் என்டு நீர் வினியோகம் செய்யலாம்.

நல்ல கோடையில் இரணைக்குள்ளேயே அரணை ஓடித்திரியும்.

 

70க்கு முன்பெல்லாம் யாழில் பள்ளக்காணிகளில் இந்தமாரிக்கு பெய்யும் மழைநீர் அடுத்தமாரிவரை சேறாகத் தேங்கி நிக்கும். இப்ப பள்ளங்கள் நிரவி வீடுகளாகி விட்டது. அதுக்கான விலையை குடுத்துத்தானாக வேண்டும்.

 

 

Link to comment
Share on other sites

3. Historical name of Iranamadu called RANAMADU. During the period of 5th century the rule of the country was KING DHATUSENA. He was constructed four tanks in the northern areas, KANAKARAYANKULAM Tank, MUTHIYANKATTU Tank, JAYANT Tank and IRANAMADU Tank. After passing several centuries the tank was abandoned.

கண்டியை ஆண்ட ராஜசிங்கனை சிங்களப்படுத்தி ராஜசிங்க என்பது சிங்களவனின் விளையாட்டு.. இதில் தட்டுசேன என்பவன் யாரோ?? :D

நிற்க.. சிங்களவன் கட்டியதாக இருந்தால் அருந்தமிழில் கனகராயன் குளம் என்று பெயர் வைத்தது ஏனோ??!! யாழ்ப்பாணமும் சிங்களவருக்கு உரியது என்பதற்கு அவர்கள் ஒரு கதை வைத்துள்ளார்கள்.. அதன்படி பார்த்தால் யாழ்குடாநாட்டின் குடிநீர்ப் பஞ்சத்தை நீக்கும் பொறுப்பு சுண்டலுக்கு கிடையாது.. :D அதுவும் சிங்களவருக்கே சொந்தம்.. :o

பி.கு: இணைத்த ஆங்கில மூலத்தின் இலக்கணத் தவறில் இருந்தே தெரியுது யாரோ சிங்கள பல்லா ஓவர்டைம் போட்டு விக்கிபீடியாவில் எழுதினது எண்டு.. :D

Link to comment
Share on other sites

இலங்கை அரசும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் தான் நிதி உதவி செய்கின்றார்கள்.....

சரி இப்போ நிலாந்தன் எழுதிய ஒரு கட்டுரையை இணைக்கின்றேன்

இரணைமடு நீர்: யாருக்கு யாரால் யாருக்காக?

December 28th, 2013 அன்று பிரசுரிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களிற்கு முன்பு யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் சில இளைஞர்கள் வீடு வீடாகச் சென்று ஒரு கணக்கெடுப்பு நடத்தினார்கள். அதில் இரணைமடுத் தண்ணீர் உங்களுக்கு வேண்டுமா? இல்லையா? என்று கேட்கப்பட்டது.

இது நடந்து சில நாட்களுக்குப் பின் ஒரு மூத்த பிரஜை என்னிடம் கேட்டார், ”யாழ்ப்பாணத்தில் யார் இரணைமடு நீரைக் கேட்டது’ எங்களைக் கேட்காமலே முடிவுகளை எடுத்துவிட்டு இப்பொழுது ஏன் கணக்கெடுப்பு நடாத்தப்படுகின்றது? யாழ்ப்பாணத்திற்கு நீர் தேவைதான். ஆனால், அது இரணைமடு நீராகத்தான் இருக்கவேண்டும் என்று யார் கேட்டது? என்று…

இதையே தான் மறுவளமாக கிளிநொச்சி விவசாயிகளும் கேட்கிறார்கள். ”எங்களைக் கேட்காமல் ஏன் முடிவெடுக்க முயல்கின்றார்கள்’ என்று.

இரணைமடுதான் இலங்கையின் முதலாவது திட்டமிடப்பட்ட நீர்ப்பாசனத் திட்டமாகும். 1920 களில் உருவாக்கப்பட்ட காலத்தில் அதன் நோக்கம் ”யாழ்ப்பாணத்திற்கான உணவுப் பாதுகாப்பு’ என்பதாகவே இருந்தது. இப்படியாக ஒற்றை நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட ஒரு திட்டம் பல நோக்குடையதாக மாற்றப்பட்டபோது தங்களை ஏன் போதிளயவு கலந்தாலோசிக்கவில்லை என்று விவசாயிகள் கேட்கிறார்கள்.

திட்டம் உருவாக்கப்பட்டதிலிருந்து 94 ஆண்டுகளாகிவிட்டன. இந்த 94 ஆண்டுக் காலத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய குடித்தொகைப் பெருக்கத்தின் அடிப்படையில்தான் எந்த முடிவும் எடுக்கப்படவேண்டும் என்றுமவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

குளக்கட்டை உயர்த்தி குளத்தின் கொள்ளளவை அதிகரிப்பதன் மூலம் பெறப்படும் மேலதிக நீரானது மாவட்டத்திற்கு வெளியே கொண்டு செல்லப்படுவதற்குப் பதிலாக குளத்தை ஏற்கனவே நம்பியிருக்கும் ஒரு மக்கள் திரளின் குடித் தொகைப் பெருக்கத்திற்கேற்ப அதிகரித்த தேவைகளை ஈடுசெய்வதற்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்றுமவர்கள் கூறிவருகிறார்கள்.

வான் பாயாத காலங்களில் வரும் வரட்சியைக் கருத்தில் எடுத்துத் திட்டம் வரையப்படவில்லை என்றுமவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

கடந்த ஆண்டு இதே காலப் பகுதியில் வான் பாய்ந்து கொண்டிருந்த குளத்தின் நீர்மட்டம் இந்த ஆண்டு இக்கட்டுரை எழுதப்படும் டிசம்பர் 27ஆம் திகதியன்று ஏறக்குறைய 12 அடிக்கு கீழிறங்கிவிட்டதாகவும், குளத்திற்கு மழை வேண்டி, இரணைமடு, கனகாம்பிகை அம்மன் கோயிலில் விவசாயிகள் பொங்கிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தகையதொரு பின்னணியில் சுமார் 94ஆண்டு வயதுடைய இரணைமடுக் குளத்தின் நீர் தொடர்பாக கடந்த சில மாதங்களாக கேட்கப்பட்டுவரும் கேள்விகள் அவற்றுக்கான பதில்கள் மற்றும் சந்தேகங்கள், அச்சங்கள் ஊகங்கள் என்வற்றின் தொகுப்பாக இன்று இக்கட்டுரை வருகின்றது.

முதலாவது கேள்வி: ஏற்கனவே, முன்சொன்ன மூத்த பிரஜை கேட்டதுதான். யாழ்ப்பாணத்தில் யார் இரணைமடு நீரைக் கேட்டது?

இக்கேள்விக்கு மேற்படி மூத்த பிரஜையே ஓரு பதிலும் சொன்னார். வடகிழக்கில் 2009 மே க்குப் பின்னரான நவதாராளவாத பொருளாதார அலையின் எழுச்சி காரணமாக யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் சேவைத்துறை வளர்ச்சிகளையொட்டி, அதிகரிக்கக்கூடிய குடிநீருக்கான தேவையை ஈடுசெய்யவா இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது? என்று.

ஆனால், இத்திட்டத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் வேறுவிதமாகக் கூறுகிறார்கள். யாழ்ப்பாணத்துக்கான நீர்த் தேவை பற்றிய உரையாடல்கள் கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளாக இடம்பெற்று வருவதாகவும், நிலத்தடி நீர் மாசாவது பற்றி எச்சரிக்கைகள் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருவதாகவும், எனவே, இது ஒரு புதிய பிரச்சினையல்ல என்பதோடு, இரணைமடு நீர்த் திட்டமானது 2009 மேக்கு முன்பே, அதாவது 2005இலேயெ முன்மொழியப்பட்ட ஒரு திட்டம் தான் என்றுமவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், இந்தப் பதில்களின் மீதும் கேள்விகள் உண்டு. யாழ்ப்பாணத்துக்கான நீர் விநியோகத்தைப் பொறுத்த வரை சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் உட்பட அநேகரால் விதந்துரைக்கப்பட்ட திட்டம் எந்திரி ஆறுமுகத்தின் திட்டமாகும். ஒப்பீட்டளவில் இரணைமடுத் திட்டத்தை விடவும் செலவு குறைந்த திட்டம் அதுவென்று தற்பொழுது சிட்னியில் வசிக்கும் ஆறுமுகத்தின் மகன் எழுதிய கடிதம் ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குளத்திலிருந்து வெளிச் செல்லும் நீர் விநியோகக் குழாய்களுக்காக கிட்டத்தட்ட ஆறு மில்லியன் டொலர்கள் செலவாகும் என்றும் ஆறுமுகம் திட்டத்தில் இது இல்லை என்றும் அறுமுகத்தின் மகன் கூறுகிறார். இது தொடர்பில் தான் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு எழுதிய கடிதத்திற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் எழுதியுள்ளார். எனவே, செலவு குறைந்ததும், நீடித்து நிலைத்திருக்கக் கூடிய விளைவுகளைத் தரவல்லதுமாகிய ஒரு திட்டத்தை எடுக்காமல், செலவு கூடிய ஒரு திட்டத்தை ஏன் எடுக்க வேண்டும் என்பது இரண்டாவது கேள்வி.

அடுத்த கேள்வி: ஒரு விவாதத்துக்காக இரணைமடு நீர் யாழ்ப்பாணத்துக்கு வருகிறது என்று வைத்துக் கொண்டால், வரட்சியான காலங்களில் நீருக்கு எங்கே போவது? என்பது. விவசாயிகள் தரும் தகவல்களின்படி, இரணைமடுக்குளம் சராசரியாக 7ஆண்டுகளுக்கு ஒரு முறை வற்றுகிறது என்று கூறப்படுகிறது. இவ் ஏழு ஆண்டுச் சுழற்சிக்குள் சராசரியாக இரண்டு ஆண்டுகள் அது வான் பாய்கிறது. மூன்று ஆண்டுகள் வான்பாயாவிட்டாலும் அடியொட்ட வற்றாது சுமாராக நீர் நிறைந்து காணப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. ஆயின் ஏழாண்டுகளிற்கு ஒரு முறை அல்லது இரு முறை வரக்கூடிய வரட்சியின்போது நீருக்கு எங்கே போவது? மேற்படி நீரிற்குப் பழக்கப்பட்ட மக்களிற்கு வேறெங்கிருந்து நீரைப் பெற்றுக் கொடுப்பது?

இக்கேள்விகளிற்கு விடை தேடிச் சென்றால், இத்திட்டத்தின் பின்னாலிருக்கக்கூடிய சூதான உள்நோக்கங்களைக் கண்டுபிடிக்க முடியும் என்று சில தரப்பு அவதானிகள் சுட்டிக்காட்டுகிறார்கள். அதன்படி வற்றாத காலங்களில் யாழ்ப்பாணத்துக்கான நீர் விநியோகம் என்ற கவர்ச்சியான மனிதாபிமான இலக்கை முன்வைத்துக் கொண்டு மாவலி ஆற்றின் நீரை இரணைமடுவுக்குக் கொண்டு வர அரசாங்கம் முயற்சிப்பதாக அவர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றார்கள். அப்படி மாவலி ஆற்றுடன் இரணைமடு இணைக்கப்பட்டால் அது மாகாண சபையிடமிருந்து பறிக்கப்பட்டுவிடும் என்றுமவர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

ஏனெனில், மாவலி அதிகார சபை எனப்படுவது மத்திய அரசின் கீழ் வருகிறது. மாவலி அதிகார சபையின் கட்டுப்பாட்டிற்குள் வடக்கின் மிகப்பெரிய குளமும், மாகாண சபைகளிடம் உள்ள குளங்களில் பெரியதுமாகிய இரணைமடு வருமாயிருந்தால், வடக்கை ஊடுருவிக்கொண்டு மாவலி அதிகார சபையின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் விரிவடையும் என்றும் அது அதன் தர்க்கபூர்வ விளைவாக புதிய குடியேற்றங்களை உருவாக்குவதில் போய்முடியக்கூடும் என்றுமவர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

ஆனால், இத்திட்டத்தை ஆதரிப்பவர்கள் கூறுகிறார்கள், இது ஒரு ஊக நிலைப்பட்ட அச்சம் என்று. இரணைமடுவைச் சாட்டிக்கொண்டு மாவலி ஆற்றை வன்னிப் பெருநிலத்திற்குள் கொண்டு வரவேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லையென்றும், இப்பொழுது அரசாங்கம் நினைத்தால் வேறு ஏதும் ஒரு திட்டத்தை முன்வைத்து அதைச் சுலபமாகச் செய்து முடிக்கலாம் என்றும்.

ஆனால், திட்டத்தை எதிர்ப்பவர்கள் மேற்படி பதிலால் திருப்திப்படுவதாக இல்லை. அவர்கள் கூறுகிறார்கள், யாழ்ப்பாணத்துக்கான நீர் என்பது ஒரு கவர்ச்சியான மனிதாபிமானக் காரணம் என்று. இப்படி ஒரு மனிதாபிமானக் காரணத்தைக் கூறிக்கொண்டு மாவலி ஆற்றை வடக்கிற்குள் கொண்டுவரும்போது அனைத்துலக சமூகம் அதை ஒரு விவகாரமாக எடுக்காது என்று.

இனி நாலாவது கேள்வி, இத்திட்டத்தை ஆதரிப்பவர்கள் கூறுகிறார்கள் இது விடுதலைப்புலிகள் இயக்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு திட்டம் என்று. அதிலும் குறிப்பாக, சமாதானம் சோதனைக்குள்ளாகத் தொடங்கிய ஒரு பின்னணியிற்தான் இது ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று. ஆயின் விடுதலைப்புலிகள் இயக்கம் மேற்படி திட்டத்தை ஏன் ஏற்றுக்கொண்டது? அப்படி அத்திட்டத்தை ஏற்றுக்கொள்ள முன்பு இது தொடர்பாக விவசாயிகளுடன் இப்போது நடப்பது போன்ற உரையாடல்கள், வாதப்பிரதி வாதங்கள் ஏன் அப்பொழுது நடக்கவில்லை?

இது தொடர்பில் விடுதலைப் புலிகளின் காலத்தில் குறிப்பாகச் சமாதான முன்னெடுப்புக்களின்போது ”சிரான்’ அமைப்பின் பணிப்பாளராக இருந்த ம. செல்வின், புலம்பெயர் இணையம் ஒன்றுக்கு ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். மேற்படி திட்டத்தை ஆதரிக்கும் அக்கட்டுரையில் அவர் விவசாயிகளின் சம்மதம் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், விவசாயிகள் இதை மறுக்கிறார்கள். தங்களுடன் போதியளவு கலந்தாலோசிக்கப்படாமலேயே திட்டம் முன் நகர்தப்பட்டதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். இது தொடர்பில் கிளிநொச்சியில் கச்சேரி மட்டத்தில் நடந்த விவசாயிகளுக்கான சந்திப்புகளின்போது தாம் எதிர்ப்புக் காட்டியதாகவும் ஆனால், தமது எதிர்ப்பையும் மீறித் திட்டம் செயற்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

இது தொடர்பில் விடுதலைப்புலிகளின் காலத்திலும் போதியளவு வெளிப்படைத் தன்மை பேணப்படவில்லை. இப்பொழுதும் இல்லை என்று அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். புலிகள் இயக்கம் இத்திட்டத்தை ஏற்றுக் கொண்ட போது சமாதானம் சோதனைக்குள்ளாகத் தொடங்கிவிட்டது. எனவே, திட்டம் இடையில் நிறுத்தப்படும் என்ற ஊகங்களின் மத்தியிற்தான் புலிகள் இயக்கம் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டிருந்திருக்க வேண்டும்.

மேலும் தமது கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு குளம் தொடர்பில் தாமே இறுதி முடிவு எடுக்கப் போவதால் எதிர்காலத்தில் உருவாகக்கூடிய எந்தவொரு நிலைமையையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என்றும் அந்த இயக்கம் நம்பியதா? சமாதானம் முறிக்கப்பட்டு திட்டம் இடை நிறுத்தப்படுமாயிருந்தால் அது வரையிலுமாவது திட்டத்தால் கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பெறுவது என்றும் அவர்கள் சிந்தித்ததாக எடுத்துக்கொள்ளலாமா?

ஆனால், திட்டத்தை ஆதரிப்பவர்கள் கேட்கிறார்கள் புலிகளின் காலத்தில் காட்டப்படாத அளவுக்கு எதிர்ப்பு இப்பொழுது மட்டும் ஏன் காட்டப்படுகிறது? என்று. இது ஐந்தாவது கேள்வி?

இக்கேள்வியைக் கேட்பவர்கள் மேலும் ஒரு கேள்வியையும் கேட்கிறார்கள். புலிகளின் காலத்தில் ஒப்பீட்டளவில் அமைதியாகக் காணப்பட்ட விவசாயிகளை இப்பொழுது யாரும் அரசியல் வாதிகள் பின்னிருந்து தூண்டுகிறார்களா? என்பதே அது.

கட்சிக்குள் தமது பேரம் பேசும் சக்தியை பலப்படுத்த முற்படும் அரசியல்வாதிகள் பிரதேசவாதத்தைத் தூண்டவல்ல உணர்ச்சிகரமான இந்தப் பிரச்சினையைக் கையிலெடுத்திருக்கிறார்களா? என்றுமவர்கள் கேட்கிறார்கள்.

இரணைமடுக் குளம் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்திருக்கவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இக்குளம் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருக்கிறது.

இதற்கான நீர் வவுனியா மாவட்டத்திலிருந்து அதாவது கனகராயன் ஆற்றின் மூலம் கிடைக்கிறது. ஆனால், அந்த நீரை கிளிநொச்சி மாவட்டம் பயன்படுத்துகிறது.

எனவே, இரணைமடுக்குளம் எனப்படுவது மூன்று மாவட்டங்களுக்குச் சொந்தமானது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

மூன்று மாவட்டங்களிற்குச் சொந்தமான ஒரு குளத்தை மற்றொரு மாவட்டத்திற்கும் பகிர்ந்தளிப்பதை எப்படி ஒரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் எதிர்க்க முடியும் என்றுமவர்கள் கேட்கிறார்கள்.

இக்கேள்விகள் ஆழமாக ஆராயப்படவேண்டியவை. இனம் கடந்து மொழி கடந்து, பிரதேச, தேசிய எல்லைகளைக் கடந்து முழு மானுட குலத்துக்குமான ஒரு பெரும் பரப்பினுள் வைத்து விவாதிக்கப்பட வேண்டியவை.

பேரியற்கைக்கு ஒரு இனமோ அல்லது பிரதேசமோ மட்டும் சொந்தம் கொண்டாடமுடியாது என்பது ஒரு கோட்பாட்டு விளக்கம்தான்.

ஆனால், பேரியற்கையை எப்பொழுதும் அரசியல் எல்லைகள் கட்டுப்படுத்துகின்றன என்பதே சமூக அரசியல் பொருளாதார யதார்த்தமாகும்.

ஒரு நாட்டில் உற்பத்தியாகும் ஆறு பெரும்போது வேறொரு நாட்டில் அழிவுகளை ஏற்படுத்துகிறது. எங்கேயோ மலைச் சிகரங்களில் உருகும் பனிப் படிவங்கள் எங்கேயோ பட்டினங்களையும், கிராமங்களையும் அடித்துச் சென்று விடுகின்றன.

எங்கேயோ கடலுக்கடியில் ஏற்படும் நிலநடுக்கத்தால் தூண்டப்படும் ஆழிப்பேரலைகள் எங்கேயோ கடலோரக் கிராமங்களையும் பட்டினங்களையும் அள்ளிச் சென்றுவிடுகின்றன.

எனவே, பேரியற்கையின் அழிவுகளுக்கும், தேசிய எல்லைகள் இல்லை. ஆக்கத்திற்கும் தேசிய எல்லைகள் இல்லை. ஆனால் இது ஒரு தூய கோட்பாடு தான். நடைமுறையில் பேரியற்கையை நுகரும் மனிதர்களின் நோக்கு நிலையின் பாற்பட்டு அதற்கு அரசியல் எல்லைகள் வகுக்கப்பட்டு விடுகின்றன.

பேரியற்கையின் ஏதோ ஒரு அம்சத்தை அது கடலோ, நதியோ, குளமோ எதுவானாலும் அதைத் தொடக்கத்திலிருந்து தலைமுறை தலைமுறையாகத் தொடர்ச்சியாக நுகர்ந்துவரும் ஒரு மக்கள் கூட்டம் அதற்குச் சொந்தம் கொண்டாடுவதே உலக வழமையாகக் காணப்படுகிறது. இந்தியாவில் நதி நீர் பங்கீடு தொடர்பான எல்லாச் சர்ச்சைகளும் இதன் பாற்பட்டவைதான்.

எனவே, பேரியற்கையின் எதோ ஒரு பகுதியை தொடர்ச்சியாக நுகர்ந்துவரும் ஒரு மக்கள் கூட்டத்தின் கவலைகளையும் கோபத்தையும் அச்சத்தையும் புறக்கணித்துவிட்டு முடிவுகளை எடுக்க முடியாத ஒரு அரசியல் யதார்த்தமே உலகம் முழுவதும் காணப்படுகிறது.

இதில் உள்ளுர் அரசியல் எந்தளவுக்குப் பிரதி பலிக்கிறது என்பதைப் பொறுத்து பிரச்சினையின் தீவிரம் அதிகரிக்கிறது. இப்படிப் பார்த்தால் இரணைமடு நீர்ப் பிரச்சினை எனப்படுவது வெறும் நீர்ப் பிரச்சினையல்ல.

அது ஒரு அரசியல் பிரச்சினைதான். ஒரு கட்சியின் உட்கட்சிப் பிரச்சினை இப்பொழுது இதில் அதிகம் பிரதிபலிக்கிறது என்பதும் ஒரு பகுதி உண்மைதான். அதாவது, இங்கு அரசியல் வாதிகள் பிரச்சினையை உருவாக்கவில்லை. ஏற்கனவே, இருந்த ஒரு பிரச்சினையை அவர்கள் கையாள முற்படுகிறார்கள் என்பதே சரி.

உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வந்த சோதனையே இது. கட்சித் தலைமையானது தனது கிளிநொச்சி மாவட்டப் பிரதிநிதிகளைக் கையாள்வதில் ஏற்பட்ட தோல்வியையும் இந்தப் பிரச்சினை பிரதிபலிக்கிறது என்று கூறலாம்.

இரணைமடுக்குளத்தை நுகரும் விவசாயியைப் பொறுத்தவரை அது வெறும் நீர் மட்டும் அல்ல. அது ஒரு உயிர்த் தண்ணீர். அது சம்பந்தப்பட்ட எந்தவொரு பிரச்சினையும் அதிகம் உணர்ச்சிகரமான பின் விளைவுகளையே ஏற்படுத்தும்.

அப்படிப்பட்ட ஓர் உணர்ச்சிகரமான பின்னணியில் பிரதேசப் பற்றை பிரதேச வாதமாக மாற்றுவது இலகுவானதாகிவிடும்.

பிரதேசப் பற்று வேறு. பிரதேச வாதம் வேறு. பிரதேசப் பற்றெனப்படுவது ஒருவர் தனது பிரதேசத்தின் மீது கொள்ளும் பேரன்பாகும். ஆனால், பிரதேச வாதமெனப்படுவது ஒருவர் தனது பிரதேசத்தின் மீது கொள்ளும் பேரன்பானது ஏனைய பிரதேசங்களின் மீதான வெறுப்பாக மாற்றமடைந்த ஒரு நிலையாகும். அதாவது பிரதேசப்பற்று ஒரு விரிவு.

பிரதேசவாதம் ஒரு குறுக்கம். பிரதேசப்பற்று இருக்கத்தான் வேண்டும். அது ஆக்கபூர்வமானது. ஒரு பிரதேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஊக்க சக்தி அது. பிரதேசப் பற்று அதன் முழு மலர்வின் போது தேசப்பற்றாகிறது.

எனவே, பிரதேசப் பற்றெனப்படுவது தேசியத் தன்மை மிக்கது. அது பல்வகைமைகளை ஏற்றுக்கொள்வது.

ஆனால், பிரதேசவாதம் குருட்டுத்தனமானது. அது பல்வகைமைகளை ஏற்றுக்கொள்வதில்லை. எனவே, தேசியத் தன்மைக்கு எதிரானது. பிரதேசப் பற்று வெளிவிரிவது பிரதேசவாதம் உட் சுருங்குவது. அது எல்லா விதத்திலும் ஒரு குறுக்கம் தான்.

எனவே, இரணைமடு தொடர்பில் பிரதேசப் பற்றானது பிரதேச வாதமாக குறுகிவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு அப்பகுதி அரசியல் வாதிகளுக்கும் சமூகச் செயற்பாட்டாளர்களுக்கும், விவசாயிகள், கல்விமான்கள், அறிவுஜீவிகள், படைப்பாளிகள், ஊடகக்காரார்கள் எல்லாருக்கும் உரியது.

கிளிநொச்சி ஒரு குடியேற்றவாசிகளின் மாவட்டம். யாழ்ப்பாணத்திலிருந்தும், மலையகத்திலிருந்தும் நாட்டின் பிற பாகங்களிலிருந்தும் குடியேறியவர்களால் கட்டியெழுப்பட்ட ஒரு சமூகம் அது. அங்கிருந்து கொண்டு பிரதேச வாதம் கதைப்பது என்பது ஒன்றில் முந்திவந்த யாழ்ப்பாணத்தவர்கள் பிந்தி வந்த யாழ்ப்பாணத்தவர்களை பகைப்பதைப் போன்றது அல்லது கிளிநொச்சிக்கு வந்த யாழ்ப்பாணத்தவர்கள் கிளிநொச்சிக்கு வராத யாழ்ப்பாணத்தவர்களைப் பகைப்பதைப் போன்றது. இது தன்னைத் தானே தின்னும் ஒரு தொற்று நோய்.

கூட்டமைப்பின் உயர்பீடம் இதில் என்ன முடிவெடுக்கப்போகிறது என்பது இங்கு முக்கியமானது. ஏனெனில், பிரதேச வாதத்திற்குத் தலைமை தாங்கும் எவரும் சுலபமாக உடனடி வெற்றிகளைப் பெற்றுவிடக்கூடிய உணர்ச்சிகரமான ஒரு சூழல் அது.

அப்படியொரு நிலை வந்தால் இதில் முதற் பலியாகப் போவது கூட்டமைப்பின் ஐக்கியம்தான். இறுதிப் பலியாகப் போவது தமிழ்த் தேசியத்தின் அடித்தளம்தான். இதில் முதலும் கடைசியுமாக வெற்றி பெறப்போவது இரண்டு மாவட்டங்களையும் மோதவிட்டுப் பார்க்க முற்படும் தரப்புகள்தான்.

எனவே, அதன் இறுதி விளைவைக் கருதிக் கூறின், இரணைமடு நீர்ப்பிரச்சினை எனப்படுவது கூட்டமைப்புக்கு வந்திருக்கும் சோதனை மட்டுமல்ல. வயதால் மிக இளைய வடமாகாண சபைக்கு வந்திருக்கும் சோதனை மட்டுமல்ல, தமிழ்த் தேசிய உருவாக்கத்துக்கு வந்திருக்கும் சோதனையும் தான்.

நிலாந்தன்-

Link to comment
Share on other sites

எதோ எழுத என்று எழுதுகிறார்கள். மையாவத விக்கி கொண்டுவந்ததது என்கிறார்கள்(அந்த மனிதருக்கு இன்னமும் ஒரு காரியதரசி கிடைக்கவில்லை. அந்தாள் பொறிநுட்ப வரைபடங்களை எல்லாம் கீறி கடனை பெற்றதாக படப்பாயம் அடிக்கிறார்கள்). பொலிடோல் குடிக்கவும் ஆசிய அபிவிருத்தி வங்கி கடன் கொடுக்கும் என்றும் எழுதுகிறார்கள். ஆசிய அபிவிருத்தி வங்கி எதறகு கடன் கொடுக்கும் என்றது தெரியாவிட்டால் வலையில் ஒருதடவை தேடிப்பார்த்தால் என்ன?இவர்களில் ஒருவர் தன்னும் சீனா நுரைச் சோலைக்கு கொடுத்த கடனை பற்றி எழுதவில்லை. அதில் தமிழ்ர்கள் கட்ட வேண்டிய பாகம் இல்லையாம். ஆனால் ஆசியன் அபிவிருத்தி கொடுக்கும் கடன் யாழ்ப்பாணத்தவர் மட்டும்தான் திருப்பி தரவேண்டும் என்றுதான் ஒப்பந்தம் எழுதிக்கடன் கொடுக்குமாம்.

 

சீனாவில் கடன் வேண்டி நெடுந்தெரு போட்டு ஆமிக்கு பாதை போடும் போதும் சிங்கள குடியேற்றம் வருகிறதாம். ஆனால் அதை தங்களால் கேட்க முடியாதாம். அல்ல்து கேடக விருப்பமில்லையாம். அல்லது கோளைகளான தாம் அதை எப்படி கேட்க முடியும் எங்கிறார்களோகூட சொல்ல முடியவில்லை. ஆனால் தமிழருக்கு தண்ணி கொடுக்கும் திட்டம் வந்தல் அதிலும் சிங்கள குடியேற்றம் வருமாம். அதை எப்படியும் மல்லுக்கட்டி தடுக்கத்தக்க அளவு வீராதி வீரா சூராதி சூரகளாம் தாங்கள் என்று மார் தட்டுகிறார்கள். சுத்த புயத்தல்கள்.

 

மொத்தத்தில் யாழ்ப்பணத்து கிணற்று நீரைப் பாவிப்பதால் வரும் சமுதாய, பொருளாதாரசெலவு, கிளிநொச்சியில் பயிர்களை எரியவைத்து வரும் நட்டம் திட்டிகளுடன் சேர்த்து வாய்க்கால்கள், அணைகள் மதகுகள் கட்டி தண்ணீரை அங்கே திருப்புவதை விட கூட என்று காட்டினால் மட்டும்தான் ஆசிய அபிவிருத்தி வங்கி அது நிச்சயம் செய்து முடிக்க வேண்டிய கட்டுமாணப்பணி என்று கூறி கடன் கொடுக்கும். அறியாமல் புயத்துவதை நிறுத்த வேண்டும். கிளிநொச்சியில் இன்று இருக்கும் சாகுபடியை விட சாகுபடியை கூட்டுவது, அல்லது தரிசு நிலங்களுக்கு தண்ணி பாச்சி புதிதாக விளநிலங்களாகுவது எல்லாமே பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள். அத்தகைய கடன்களில் தனியார் முதலிட முன்வருவார்கள் என்பதால் ஆசிய அபிவிருத்து வங்கி முன் வராது. அதற்கு சில NGOகலையும் தேடிப்பிடிக்கலாம். இதில் திட்டமிட்டு கைவிடப்பட்ட இரணை மடுக்குளத்தை திருத்த ஆசியன் அபிவிருத்தி வங்கி முன் வருகிறதே என்றாதால் எழுப்பிவிட்ட போட்டி. குழ்ப்பி அடித்தால் ஆசியன் அபிவிருத்தி வங்கி சிங்கள் கேட்கும் இன்னொரு சமூக நல திட்டத்திற்கு கடன் கொடுக்கும். இரணை மடு இன்னும் சீரளிந்து போகும். பதியுதினோ விஜயலசுமியோ, கீதாஞ்சலியோ இரணைமடுவை திருத்து அயல் அட்டை பயிர் செய்ய தண்ணீர் கொடுக்க போவத்தில்லை. தங்கள் கண்ண்களை குத்துவதில் மன்னர்கள் அதையும் செய்யத்தான் வேண்டும்.

Link to comment
Share on other sites

விடுங்க மல்லை எல்லாத்தையும் அரசியலா பாக்கிற ஆக்கள் இவங்க பொது அறிவு ரொம்ப கம்மி அது தான் பிரச்சனை......ஆசியஅபிவிருத்திவங்கியின் செயல்ப்பாடுகள் திட்டங்கள் எல்லாம் தெரியாத பசங்க சும்மா கத்திட்டு இருக்கட்டும்......

Link to comment
Share on other sites

இந்த திட்டத்தின் report யாரிடமும் இருந்த ஒருக்கா தங்கோ படிச்சுட்டு தாரன்...

Link to comment
Share on other sites

நடக்க முடியாதவற்றை நடக்கும் என்பதும், நடக்கக்கூடியதை நடக்காது என்று சொல்வதையும் வளர்ந்துவிட்ட கனடாவிலேயே செய்கிறோம் (feasibility study) என்கிற பெயரில்.. :D இந்த ஆசிய வங்கி எம்மாத்திரம்..?? :wub: எமக்கு ஆதாயம் இருக்குமானால் ஆர்கடிக் வட்டத்திற்குள்ளும் வேலைத்திட்டங்கள் செய்வோம்.. இரண்டு உதாரணங்கள் தருகிறேன்..

1) ஒன்ராரியோவின் ஓக்வில்லில் சாதக பாதக அறிக்கை எல்லாம் முடித்து எரிவாயு மின் உற்பத்தி நிலையம் கட்ட ஆரம்பித்தார்கள்.. 500 மில்லியன் டாலர்களின் முடிவில் இது சரிப்படாது என்று அப்படியே கைவிட்டுவிட்டார்கள்.. :huh:

2) 2008 இல் சட்பரியில் கிட்டத்தட்ட ஓரு பில்லியன் டாலர்கள் செலவில் ஒரு கனிம வளாகம் கட்ட ஆரம்பித்தோம் ஒரு முதலாளிக்காக.. ஓராண்டு மற்றும் நூறு மில்லியன் செலவுக்குப் பின் முதலாளி அந்தத் திட்டம் தேவையில்லை என்றுவிட்டார்.. :wub: சாதக, பாதக அறிக்கை எல்லாம் அந்தமாதிரி எழுதி பண ஒழுங்குகளும் செய்துதான் வேலைத்திட்டம் தொடங்கப்பட்டது..

ஆனானப்பட்ட கனடாவிலேயே இதுதான் நிலைமை.. சுண்டலின் அவுஸ் கூட இப்படித்தான்.. :D இதுக்குள் இலங்கை அறிக்கை கொடுத்து அதை ஆசிய வங்கி சரிபார்த்து காசு குடுத்திட்டாங்களாம்.. :D றோட் போடவே சீனாக்காரன்தான் வரவேண்டி இருக்கு.. ட்ரெயின் விட இந்தியன் வரவேண்டி இருக்கு.. :huh: மன்னாரில் எண்ணை ஆராய்ச்சிக்கு இந்தியனையும், சீனனையும் வைத்திருப்பவன்தான் சிங்களவன்.. :D

Link to comment
Share on other sites

ஆமா சீனனும் ஜப்பான் காரனும் வந்து தானே மகாவலி கங்கை திட்டங்களா செயல்படுத்தினது சும்மா காமடி பண்ணாதிங்க இசை அண்ணா

:D

Link to comment
Share on other sites

30 வருடங்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நாடு தொழிநுட்ப ரீதியில் பின்தங்கி இருப்பதும் மற்ற நாடுகளின் உதவியை நாடுவது ஒன்றும் உலக அதிசியம் கிடையாது :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.