Jump to content

Im a ____ Citizen !!!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1506418_10202938663764616_1257816697_n.j

 

சொந்த நாட்டு  வீட்டுக்கு...
எப்பத்தான் நான் போவேன்?
என் சொந்தக்காரர் நாலுபேரை...
அப்பத்தான் நான் பாப்பேன்!
வந்த நாட்டை எண்டைக்கும்...
எந்தன் நாடாய் ஆக்கமாட்டேன்!
சொந்த நாட்டை மீட்குமட்டும்
நிம்மதியா தூங்கமாட்டேன்...!???

வல்லைவெளிக் காற்றாக....
மனம் எல்லைதாண்டிப் பறக்கிறது!
நெல்லுவயல் கதிர் பார்க்க....
தினம் எண்ணமெல்லாம் துடிக்கிறது!

முல்லை நில கடலோரம்....
அலை ஓயாமல் அடிக்கிறது!

ஓயாத அலை ஞாபகங்கள்....
மீண்டும்  நெஞ்சில் வந்து துளிர்க்கிறது!

ஓடக்கரை அப்பம் தோசை...
வாங்கி நல்லா தின்ன ஆசை!
பருத்தித்துறை வடையோட...
பங்குனிக் கள் அடிக்க ஆசை!
வல்வெட்டிதுறை எள்ளுப்பா...
வாய் இனிக்க கடிக்க ஆசை!

தப்பி ஓடி வந்த பாவியாகி...
தஞ்சம்  தேடி வந்த  அகதியாகி...
செல்வம் தேடி....வசதியாகி,

ஊரிலதான் பொம்பிளை...
நிறையச் சீதனமும் கையில...

 

புது வீடு வாங்கி குடிபூரல்,
புது மாப்பிள்ளையாய் கலியாணம்,

புதுக் காரிலதான் ஊர்வலம்

பின்.... குழந்தை குட்டி எல்லாரும்...
குடி மக்களாக   புகுந்த நாட்டில்!

விடிய விடிய... கனவு வருது!
அது கலைஞ்சு போய்,
நினைவும் வருது!
கண்கள் வழிய.... நீரும் வருது!
கதறி அழணும் போல...
அழுகை வருது!

 

என்னதான் செய்ய நானும்...!?

என்னால என்ன ஏலும்...?!

Im a _________ Citizen !!!

 

 

#  சில புலம்பெயர் நாடுகளில் உள்ள அந்நாட்டு தமிழ் சிட்டிஷன்களின் சிலரின் புலம்பல்களில் இருந்து... சில துளிகள் #

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஏக்கம் ! ஏக்கத்தில் வாழ்க்கை... இதுதான் யதார்த்தம்...!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் தமிழுக்கு எப்போது பஞ்சம் ஏற்பட்டது... :) 

 

 

எம் தாய்மொழியாம்.... செம்மொழியாம்.... தமிழுக்கா பஞ்சம்.....???!!! :rolleyes::)

 

அப்படியில்லை யாயினி....   இக்கவிதைக்கு இப்பிடியொரு தலைப்புத்தான் சில அர்த்தங்களை மறைமுகமாக புரியவைக்கும் என எண்ணினேன். அதற்காகத்தான் அப்படி ஆங்கிலத்தில் போட்டேன். :)

 

 

 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏக்கம் ! ஏக்கத்தில் வாழ்க்கை... இதுதான் யதார்த்தம்...!

 

உண்மைதான் சுவியண்ணை...! ஏக்கத்தில் வாழ்க்கையும் காலமும் கரைந்துவிடுகிறது.

ஏக்கமும் இயலாமையும் சேரும்போது இப்படியான புலம்பல்கள்தான் மிச்சம். என்ன செய்ய...? :(

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.