Jump to content

இரு குழந்தைகள் கதறக்! கதற! தாயாரை இலங்கைக்கு நாடு கடத்தியது கனடிய குடிவரவுத்துறை:


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Cancda_tamil-mother-deported-200-seithy.

2008 டிசம்பர் மாதம் அகதியாக கனடாவிற்கு வந்து கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த பெண்ணொருவரின் அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் நேற்று சிறிலங்காவிற்கு குடிவரவு அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்டுள்ளார். இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் ராஜினி சுப்பிரமணியம் இவரின் கணவர் ராசையா ராஜ் மனோகர். இத்தம்பதியினருக்கு நீதுஷா ராஜ் மனோகர், அமிர்தா என இரு குழந்தைகள்.

  

நேற்று ராஜினி சுப்பிரமணியம் சிறிலங்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட போது விமான நிலையம் வந்திருந்த சுற்றத்தார் அனைவரும் கண்ணீர் வடிக்க குழந்தைகளையும் , கணவரையும் பார்த்து அந்தப் பெண்மணி கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாய் அமைந்திருந்தது.

நேற்று இரவில் இந்தப் பெண் நாடு கடத்தப்படவுள்ள தகவல் கிடைத்தவுடன் விமான நிலையம் விரைந்து. இது தொடர்பில் பெண்மணியிடம் பேசிய போது 2008 இல் தனது அகதியாக கனடா வந்ததாகவும்,, அகதி கோரிக்கை மனு தொடர்பான வழக்கு தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளதால் தான் தற்போது திரும்ப அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இரு பெண் குழந்தைகளில் ஒருவர் பெண்மணி இந்தியாவில் இருந்த சமயத்திலும் , இளைய குழந்தை கனடா வந்த பின்னரும் பிறந்துள்ளது. குழந்தைகளுக்கும் , பெண்மணியின் கணவருக்கும் கனடிய குடியுரிமை உள்ளது. கனடாவில் பல தசாப்தங்களுக்கும் மேல் வாழ்ந்து வரும் தமிழ் சமூக மக்களிடையே இது போன்ற விடயங்களில் போதிய விழிப்புணர்வு இன்னமும், இல்லாமல் இருப்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.

தமிழர்களுக்காக குரல் கொடுக்க எத்தனையோ பொதுவான அமைப்புகளும், மனித உரிமை சட்டத்தரணிகளும் இருக்கின்ற போது முன் கூட்டியே இது தொடர்பான ஆலோசனைகளை யாரிடமும் கேட்காமல் இறுதி நேரத்தில் ஒட்டு மொத்த குடும்பமும் கண்ணீர் வடித்து நின்ற கொடுமையை எப்படி சொல்வதென்று தெரியவில்லை.

அகதி கோரிக்கை நிராகரிக்கபப்ட்டவர்கள் நாட்டுக்குத் திரும்பி அனுப்பபபடுவதென்பது கனடாவில் அரிதான கடைப்பிடிக்கப்படும் ஒரு விடயமே. இருப்பினும் சம்பந்தப்பட்ட இந்தத் தம்பதியினர் இது தொடர்பிலான தகவல்களை ஊடகங்களுக்கும் , பொது அமைப்புக்களுக்கும், தமிழ் அகதி மக்களின் விடயத்தில் உதவி புரியத் தயாராக இருக்கும் சட்டத்தரணிகளுக்கும் முன்னரே தெரியப்படுத்தியிருந்தால் நிச்சயமாக விடயம் பெரிதுபடுத்தப்பட்டிருப்பதுடன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடனும் , பிரதமர் அலுவலகத்துடனும் பேச ஒரு வாய்ப்புக் கிட்டியிருக்கும்.

போதிய விழிப்புணர்வின்றி மெத்தனமாக இறுதி நேரம் வரை இருந்து விட்டதால் இது தொடர்பில் பிறர் பொதுவான முயற்சிகள் எடுப்பதும் கை நழுவிப் போய் விட்டது என்றே சொல்ல வேண்டும். இன்னொரு முக்கிய விடயம். திரும்பி அனுப்பப்படும் இந்தப் பெண் அங்கே யார் கைகளில் ஒப்படைக்கப்பட உள்ளார் என்பதே.

அங்கே பெண்ணின் சகோதரன் இருப்பதால் அவரிடம் ராஜினியை ஒப்படைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்கச் சொல்லி சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அதற்கு அதிகாரிகளும் இசைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பிலான மேலதிக சட்ட ஆலோசனை சம்பந்தபப்ட்ட விடயங்களிலும் தொடர்ந்து பெண்ணின் கணவர் ராசையா ராஜ் மனோகருக்கு உதவி வருகிறோம்.பெண்மணியை மீண்டும் கனடாவிற்கு எடுத்து வருவதற்கான முயற்சிகளை தமிழ் ஊடகங்களும், அமைப்புக்களும் செய்யுமாறு அவரின் கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தி- கனடாமிறர்

 

Cancda_tamil-mother-deported-300-002.jpg

 

 

Cancda_tamil-mother-deported-300-003.jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=102348&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

குடும்பத்தினை பிரிவது என்பது மிகவும் கவலையான விடயம். பாவம்.

 

ஆனால் கணவருக்கு குடியுரிமை இருக்கும் போது மனைவி ஏன் அகதி அந்தஸ்துக் கோரி விண்ணப்பித்தார் என்று புரியவில்லை. கணவரால் இலகுவாக ஸ்பொன்ஸர் பண்ண முடிந்து இருக்குமே? சில விடயங்களை மறைக்கின்றனர் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும்  கவலையான  செய்தி....


ஒரு பக்கம் ஆள் எடுக்கின்றேன்

வேண்டும் என்கின்ற அரசு

இது   போல் மனிதாபிமானமில்லாதும் நடந்து கொள்கிறது :(  :(  :(

Link to comment
Share on other sites

சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. உலகில் அம்மாவிடமிருந்து பிள்ளைகள் பிரிக்கப்படுதல் கொடுமையானது. கணவர் குடியுரிமை உள்ளவராக இருந்த போது மனைவி ஏன் அகதி அந்தஸ்த்து கோரினார் என்பது தெரியவில்லை. சரியான தெளிவின்மையே இவரது திருப்பியனுப்பலுக்கான காரணமாகலாம்.

Link to comment
Share on other sites

கவலையான செய்தி..

ஒன்றுக்கொன்று முரணான தகவல்களை வழங்கியிருந்தால், பாரபட்சம் பாராமல் திருப்பி அனுப்பிவிடுவார்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை எனக்கு மிகவும் நன்றாகத் தெரியும். நினைக்கவே கவலையாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகளை பார்ப்பதற்கு மிகவும் கவலையாக இருக்கிறது...கனடாவில் பிறந்த பிள்ளையும் இருக்கிறது என்றபடியால் நன்கு வாதாடி இருக்கலாம்...மொழிப் பிரச்சனை என்றால் அதற்கு உரிய நடவடிக்கைகளில் இறங்கி இருக்கலாம்...ம்ம்ம்.....உண்மையாக எதனால் இப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்று புரியாமல் இருக்கிறது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோர்களைப் பிரிந்து குழந்தைகள் வாழ்வதும், குழந்தைகளைப் பிரிந்து தாயார் வாழ்வதும் எவ்வளவு கொடுமையான விடயம்.

Link to comment
Share on other sites

மிக கொடுமையான விடயம் .உண்மையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை .

இப்போ திருப்பி அனுப்பபட்டாலும் மீண்டும் இணைவதற்கு பல வழி முறைகள் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வுகள் எனும் போது மிகவும் வருத்தமடைகின்றேன்.....

 

ஆனால் பிரஜாவுரிமை பெற்ற கணவன்? கனடாவில் பிறந்த குழந்தை ஒன்று? எல்லாவற்றையும் மீறி ஒரு தாய் நாடு கடத்தப்படுகின்றார்!!!!

அளவிற்கு அதிகமாக ஆசைப்பட்டுவிட்டார்கள் போலிருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும்  கவலையான விடயம். தந்தை முதலில் வந்து   விட்டார்.   முறைப்படி ச்பொன்செர் செய்து இருக்க வேண்டும். தாயார் தனியே  நாட்டுக்குள் வந்து விண்ணபித்து இருக்கிறார் . இருவரது file ஒன்றாக்கி இருந்தால் கிடைத்திருக்கும் . ஆனால் தந்தை சிடிசன் ஆகி விட்டார்  நாட்டுக்குள் வைத்து sponser செய்ய முடியாது . மனைவியை ..இனியும் முறைப்படி மீண்டும் வர sponser மூலம்  விண்ணபிக்கலாம். .கவன ஈனமாக் அல்லது போதிய விளக்கம் இல்லாது இருந்து விடார்கள்.  தந்தை தான் தாயும் தந்தையுமா இ ருந்துபார்க்க் வேண்டும்.சற்றுக் காலம் எடுக்கும்.  குடும்பம் இணைய என் பிரார்த்தனைகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்க கனடாவில இப்படி கனக்க விடையங்கள் ஏறுக்குமாறா நடக்குது எனக் கேள்விப்பட்டன். முதலாவது விடையம், இப்படியான விடையங்களைக் கையாள எம்மவர் மத்தியில் சேவை நோக்கிலான துறைசார் வல்லுனர்கள் தேவை. அனால் அதைக் கண்டுபிடிப்பது கனடாவிலும் பிரித்தானியாவிலும் மிகவும் சிரமமான விடையம், காரணம் அனைவருக்கும் தேவையானது பணம் அதை என்னவிதத்திலும் சேர்த்துக்குவித்துவிடவேண்டுமென்பதில் மிகப்பெரிய முடிவுறாத இலக்கு நிர்ணயிக்கப்படாத ஓட்டுப்பந்தயம். காலாகாலமாக அனேகமானவர்கள் தாங்கள் வாழும் புலம்பெயர்தேசங்களிலேயே நிரந்தரமாகத் தங்கிவிடப்போகிறார்கள். புலத்தில் பாலாறும் தேனாறும் ஓடினாலும் அவர்களில் அனேகர் திரும்பிப்போய்விடப்போவதில்லை. அவர்கள் இரவுபகலாகச் தேடிச் சேர்த்துவைத்த பணமோ சொத்தோ அவர்களது மூன்றாம் சந்ததிக்கு எந்தவிதத்திலும் பயன்படப்போவதில்லை.

 

பின்பு எதற்காக எம்மை இம்மாதிரியான விடையங்களில் வலுப்படுத்தாது வேறுஎதையோ துரத்துகிறோம். தமிழ்ச்சமூகத்துக்கு இது ஒரு நல்ல உதாரணமே "ஆத்தை இல்லாதுவிட்டால் அப்பன் சித்தப்பன்" இது நடைமுறையில் உண்மை.இதில் துயரத்துக்கும் பரிதாபத்துக்கும் உரியவர்கள் சிறுவர்கள். அக்குடும்பத்துக்கு நல்லது நடக்கும் விரைவில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயையும் பிள்ளையையும் எக்காரணம் கொண்டும் சட்டம் பிரிக்காது... இவர்கள் தொடர்பான விடயங்கள் முன்னுக்குப் பின் முரணான செய்திகளை வெளிப்படுத்தி இருக்கிறது. உண்மையான நிலவரம் தெரியாமல் கருத்தை வெளியிடுவதும் தவறு. ஆனால் இவ்வளவு தூரம் இங்கு பிறந்த பிள்ளையையும் விட்டு பிரித்து தாயை மாத்திரம் அனுப்புகிறார்கள் என்றால் கனடாவைப் பொறுத்தவரை அதன் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்திருந்தாலே இப்படியான கிடுங்கிப் பிடியை போடுவார்கள். பொது அமைப்புகள் மூலமான உதவிக்கு அவர்கள் செல்லவில்லையா..... எதுவாக இருந்தாலும் அவர்கள் தெளிவாக வெளிப்படுத்தினால்தான் உண்டு மற்றப்படி ஊகங்களின் அடிப்படையில் நாம் எதனையும் கதைக்கலாம்.

 

பிள்ளையை இங்கு அனுமதித்த அளவில் மீளவும் அவர் கனடா வந்திணைய வாய்ப்புகள் சட்ட ரீதியாக வழங்கப்படும் உன்று நினைக்கிறேன்

 

Link to comment
Share on other sites

உண்மையில் வேதனைப்பட வேண்டிய ஒரு நிகழ்வு ...............அந்த குழந்தைகளை நினைக்க எனது மகளின் உருவமே என்னை வந்து கொல்கிறது................விரைவில் இவர்கள் வாழ்வில் மீண்டும் வசந்தம் வீச இறைவன் அருள் பொழியட்டும் .
 
உண்மையில் எனக்கு ஒன்று புரியவில்லை .என் வீட்டில் கூட ஒரு தாய் ,இரண்டு குழந்தைகள் என பதிவிட்டு ................தமதுவீட்டில் கணவருடன்  குடும்பமாக வாழுகின்ற உறவை நினைத்து .எனக்குள்ளேயே பரிகசிப்பேன் /பணம் பணம் பணம் .................முழு வாழ்க்கையையும் தொலைத்து நிற்கும் மானிடரை பார்க்கிறேன் /...............உண்மையில் எனக்கு இப்பிடியான பதிவுகளுக்கு உடன்பட விருப்பமில்லை ..........ஆனால் துணைவியின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க .....ஆமா சொன்னேன் ................எனக்கு சொந்த வீடு [mortgage    நிரந்தர வேலை என்ற படியினால் ஓகே பண்ணினேன் .ஆனால் அவர்களுக்கும் இதே சூழல் .என்னால் முடியாது ...அனால் அவர்களால் முடிகிறது ...........பயங்கர கெட்டிக்காரங்கள் .....God bless you
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்க கனடாவில இப்படி கனக்க விடையங்கள் ஏறுக்குமாறா நடக்குது எனக் கேள்விப்பட்டன். முதலாவது விடையம், இப்படியான விடையங்களைக் கையாள எம்மவர் மத்தியில் சேவை நோக்கிலான துறைசார் வல்லுனர்கள் தேவை. அனால் அதைக் கண்டுபிடிப்பது கனடாவிலும் பிரித்தானியாவிலும் மிகவும் சிரமமான விடையம், காரணம் அனைவருக்கும் தேவையானது பணம் அதை என்னவிதத்திலும் சேர்த்துக்குவித்துவிடவேண்டுமென்பதில் மிகப்பெரிய முடிவுறாத இலக்கு நிர்ணயிக்கப்படாத ஓட்டுப்பந்தயம். காலாகாலமாக அனேகமானவர்கள் தாங்கள் வாழும் புலம்பெயர்தேசங்களிலேயே நிரந்தரமாகத் தங்கிவிடப்போகிறார்கள். புலத்தில் பாலாறும் தேனாறும் ஓடினாலும் அவர்களில் அனேகர் திரும்பிப்போய்விடப்போவதில்லை. அவர்கள் இரவுபகலாகச் தேடிச் சேர்த்துவைத்த பணமோ சொத்தோ அவர்களது மூன்றாம் சந்ததிக்கு எந்தவிதத்திலும் பயன்படப்போவதில்லை.

 

பின்பு எதற்காக எம்மை இம்மாதிரியான விடையங்களில் வலுப்படுத்தாது வேறுஎதையோ துரத்துகிறோம். தமிழ்ச்சமூகத்துக்கு இது ஒரு நல்ல உதாரணமே "ஆத்தை இல்லாதுவிட்டால் அப்பன் சித்தப்பன்" இது நடைமுறையில் உண்மை.இதில் துயரத்துக்கும் பரிதாபத்துக்கும் உரியவர்கள் சிறுவர்கள். அக்குடும்பத்துக்கு நல்லது நடக்கும் விரைவில்.

 

 

கனடாவில், அதிலும் முக்கியமாக ரொறன்ரோவில் வீதிக்கு வீதி குடிவரவாளர்களுக்கு உதவும் நிலையங்கள் பல உள்ளன.  அனைத்துமே தமிழ் மூலம் உரையாடக் கூடியவையே.    இவர்கள் ஏதோ பாரதூரமான விடயத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாகவே தெரிகிறது.   நான்கு இலட்சத்திற்கும் அதிகமாக தமிழர்கள் வாழும் ரொறன்ரோவில், இவர்களுக்கு உதவ மட்டும் ஒருவரும் இல்லையாக்கும்?

 

எல்லாவற்றிற்கும் மற்றவர்களைக் குறை சொல்வதிலிலேயே நில்லுங்கள்.  யார் பக்கம் பிழை இருக்கலாம் என்று யோசிக்க முனைய மாட்டீர்கள்.  இதுதான் தமிழனின் குணம்.

Link to comment
Share on other sites

உங்க கனடாவில இப்படி கனக்க விடையங்கள் ஏறுக்குமாறா நடக்குது எனக் கேள்விப்பட்டன். முதலாவது விடையம், இப்படியான விடையங்களைக் கையாள எம்மவர் மத்தியில் சேவை நோக்கிலான துறைசார் வல்லுனர்கள் தேவை. அனால் அதைக் கண்டுபிடிப்பது கனடாவிலும் பிரித்தானியாவிலும் மிகவும் சிரமமான விடையம், காரணம் அனைவருக்கும் தேவையானது பணம் அதை என்னவிதத்திலும் சேர்த்துக்குவித்துவிடவேண்டுமென்பதில் மிகப்பெரிய முடிவுறாத இலக்கு நிர்ணயிக்கப்படாத ஓட்டுப்பந்தயம். காலாகாலமாக அனேகமானவர்கள் தாங்கள் வாழும் புலம்பெயர்தேசங்களிலேயே நிரந்தரமாகத் தங்கிவிடப்போகிறார்கள். புலத்தில் பாலாறும் தேனாறும் ஓடினாலும் அவர்களில் அனேகர் திரும்பிப்போய்விடப்போவதில்லை. அவர்கள் இரவுபகலாகச் தேடிச் சேர்த்துவைத்த பணமோ சொத்தோ அவர்களது மூன்றாம் சந்ததிக்கு எந்தவிதத்திலும் பயன்படப்போவதில்லை.

பின்பு எதற்காக எம்மை இம்மாதிரியான விடையங்களில் வலுப்படுத்தாது வேறுஎதையோ துரத்துகிறோம். தமிழ்ச்சமூகத்துக்கு இது ஒரு நல்ல உதாரணமே "ஆத்தை இல்லாதுவிட்டால் அப்பன் சித்தப்பன்" இது நடைமுறையில் உண்மை.இதில் துயரத்துக்கும் பரிதாபத்துக்கும் உரியவர்கள் சிறுவர்கள். அக்குடும்பத்துக்கு நல்லது நடக்கும் விரைவில்.

எங்கட துறை சார் வல்லுனர்கள் சொதப்பியே இங்கு பலர் நொந்து பின் கனடிய வழக்கறிஞ்சர்களுக்கு காசை கொட்டி சரி பண்ண பார்க்கிறார்கள்.

மீண்டும் இவர் நாட்டுக்குள் வரலாம்.

இங்கு கணவன் ஒரு பொய் சொன்னதற்காகவே 8 வருடமா ஸ்பொன்சர் குடுக்கவில்லை. இவ்வளவிற்கும் பெண் கனடிய குடியுரிமையுடன் இருக்கிறார். அந்த தாய்க்கு மாற்றுதிறன் கொண்ட கனடிய குழந்தை இருந்தும் இழுதடிக்கபடுகிறது.

Link to comment
Share on other sites

கவலையான செய்தி..

ஒன்றுக்கொன்று முரணான தகவல்களை வழங்கியிருந்தால், பாரபட்சம் பாராமல் திருப்பி அனுப்பிவிடுவார்கள்..

 

இது நடந்திருப்பதற்கு தான் அதிக chance இருக்கு...

என்னத்தை செய்து கூளாம்பாணி ஆக்கினார்களோ தெரியாது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கன விடையங்கள் ஏறுக்குமாறாய் நடக்குது என்று முதல்வசனத்தில் தெரிவித்ததன் அர்த்தமே, இவர்கள் செய்யும் குழறுபடிகளைத்தான். பல பல திணுசான போக்குள்ளவர்கள் இப்போது புலம்பெயர் தேசமெங்கும் பரவிக்கிடக்கிறார்கள். நாங்கள் ஏதாவது சொல்லப்போனால் எங்களுக்கே போக்குக்காட்டுகிறார்கள். இவற்றை நாணையம் கருது முதலாவது கருத்தில் தவிர்தேன். மேலும் துறைசார் வல்லுனர்கள் எனக்கூறுனே தவிர துறைசார் வல்லுனர்கள்போல் பாசாங்குசெய்யும் ஏமாற்றுக்காரர்களை அணுகச்சொல்லவில்லை.

 

 

Link to comment
Share on other sites

கனடாவில் புதிதாக குடியேறியவர்களையும் அரசையும் ஏமாற்றும் வல்லுனர்கள் தான் அதிகம்....

 

கப்பலில் வந்தவர்களில் சிலருக்கு மொழிமாற்ற என்று போன மூதேவி பிழையான தகவலை கொடுத்து ஒரு முடிவும் இல்லாமல் அவர்களது வழக்கை குழப்பியது தான் மிச்சம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரு குழந்தைகளின் தாய் நாடுகடத்தப்பட்ட விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்ன – சட்ட நிபுணர்களுடன் குருவியார் அலசல் !!

 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இகுருவியில் வெளியான செய்தி இன்று சர்வதேச ஊடகங்கள் அனைத்திலும் பரபரப்பாக பேசப்படும் ஒரு பொருளாக மாறியுள்ளது. இரு குழந்தைகளின் தாயான ராஜினி சுப்பிரமணியம் தனது இரு குழந்தைகளையும் கனடாவில் விட்டு விட்டு கண்ணீருடன் வெளியேற வேண்டிய நிர்பந்தம். இரவு 9 மணிக்கு அந்தப் பெண்மணி அனுப்பப்படவுள்ளதான செய்தி 7 மணிக்குத் தான் குருவியாரின் காதுகளை எட்டியது.

 

அதன் பின்னர் கொட்டும் பனியில் மிகுந்த சிரமப்பட்டு அதிவேகமாக நெடுஞ்சாலை 407 இல் காரை ஓட்டி , பல இன்னல்களையும் கடந்தே விமான நிலையம் அடைந்து செய்தியை சேகரித்து சம்பந்தப்பட்டவர்களிடமும் பேசி அவற்றை வழங்கினோம். குருவியில் இந்த செய்தி வெளியானவுடனேயே இரு தினங்களாக கனடா மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் பேசப்படும் ஒரு விடயமாகி இருக்கிறது இந்த நாடு கடத்தல் சமாச்சாரம்.

 

சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்த இச்செய்தியை விவாதிக்க போட்டி போட்டுக் கொண்டு செய்தியை தங்கள் ஊடகங்களில் பகிர்ந்து கொண்ட செய்தி ஊடகங்களுக்கும் , பேஸ்புக் நண்பர்களுக்கும் , முகவரியின்றி இதனை பகிர்ந்து கொண்ட பலருக்கும் இகுருவி நன்றி கூற கடமைப்பட்டுள்ளது.

 

இறுதி நேரத்தில் இரு குழந்தைகளின் தாயான ராஜினி சுப்பிரமணியத்தை நாடு கடத்தியதை யாராலும் தடுக்க முடியவில்லை என்ற போதிலும் கூட இவர் விவகாரத்தில் அப்படி என்ன நடந்தது என்பது குறித்து பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் சமூக வலைகளில் விவாதிக்கப்பட்டன. அதே நேரத்தில் செய்தியை வாசகர்களுக்கு வழங்கிய கையோடு குருவி ஆசிரியர் குழு இது தொடர்பில் சட்ட நிபுணர்களுடனும் , சம்பந்தப்பட்ட தரப்பினருடனும், உயர் மட்ட அரசியல் தலைவர்களுடனும் எங்களால் இயன்ற வகையில் நடவடிக்கை எடுத்து பெண்மணியை மீண்டும் கனடா கொண்டு வருவதற்கான வழி வகைகளை ஆராய்ந்தும் அதற்காக தொடர்ந்து முழு வீச்சில் போராடியும் வருகிறோம்.

 

இது தொடர்பில் சட்ட நிபுணர்களிடம் பேசிய போது சில விடயங்கள் எமக்குத் தெரிய வந்துள்ளன. சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் ராஜ் மனோகர் ஏற்கனவே ஒரு பெண்ணை 2000 ஆம் ஆண்டில் திருமணம் செய்துள்ளார். அந்தப் பெண் திருமணம் முடித்த பின்னர் தன குடும்பத்தைச் சேர்ந்த நால்வரை கனடா கொண்டு வருவதற்கு ராஜ் மனோகர் உறுதுணையாக கையெழுத்திட்டுள்ளார். இதன் பின்னர் 20003 ஆம் வருடத்தில் ராஜ் மனோகருக்கும் , முன்னாள் மனைவிக்கும் விவாகரத்து நிகழ்ந்துள்ளது.

 

அதன் பின்னரே 2006 இல் ராஜினியை இந்தியாவில் வைத்து திருமணம் செய்துள்ளார் ராஜ் மனோகர். இவர்களின் முதல் குழந்தையும் இந்தியாவிலேயே பிறந்துள்ளது. எப்படியாவது தன மனைவியை கனடா அழைத்து வர வேண்டும் என ராஜ் மனோகர் நினைத்த போதும் கூட ஏற்கனவே முன்னாள் மனைவியின் உறவினர்கள் பலருக்கு ஸ்பான்சர்ஷிப்பில் கையெழுத்திட்டு விட்டதால் மீண்டும் உடனடியாக வேறு யாரையும் ஸ்பொன்சர் செய்ய முடியாத நிர்பந்தம்.

 

இந்த நிலையில் தான் கணவருடன் சேர்ந்து வாழ விரும்பிய ராஜினி வேறு வழியின்றி 2008 இல் அகதியாக கனடாவிற்கு வந்து சேர்ந்துள்ளார். இருவரும் இணைந்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். அப்போது தான் இரண்டாவது குழந்தை கனடாவில் பிறந்து இங்கேயே வளர்ந்துள்ளது.

 

கனடிய குடிவரவு சட்ட விதிமுறைகளின் படி அகதிகயாக வந்த ஒருவரின் கோரிக்கையை குடிவரவுத் துறை பரிசீலித்து அதன் பின்னரே அவர்களை அகதிகளாக ஏற்பதா வேண்டாமா என்பது தீர்மானிக்கப்படும். இந்த நடைமுறை ஓரிரு நாட்களில் முடிந்து விடக் கூடியதல்ல. பல வருடங்கள் தொடரக் கூடிய ஒன்று என்பதை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

 

IMG_1177-XL.jpg

 

 

அதன்படி 2008 ஆம் ஆண்டில் ராஜினி அகதியாக கனடா அழைத்து வரப்பட்ட போது சமர்பித்திருந்த கோரிக்கையை ஜூன் 2, 2013 அன்று அரசு நிராகரித்துள்ளது. அதன் பின்னர் மீண்டும் ஜூலை 5 , 2013 இல் மேல் முறையீடும் இவர்களால் செய்யப்பட்டு ஒக்டோபர் 9 , 2013 இல் இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

இது போன்ற சில வழக்குகளில் ராஜினி மட்டுமல்ல , அகதிகளாக வந்து குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள் சிலர் இப்படியான பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு நாடு திரும்ப வேண்டிய கட்டாய சூழலுக்கு தள்ளப்படுவதும், உடனடியாக சுதாரித்துக் கொள்ளும் அவர்கள் மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களை சட்டத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்து நிவாரணம் பெறுவதும் கனடாவில் ஏற்கனவே நடந்துள்ள விடயமே.

 

ஏற்கனவே ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கான ஸ்பொன்சர்ஷிப்பில் ராஜ் மனோகர் கையெழுத்திட்டுள்ளார். உறவினர்களை ஸ்பொன்சர்ஷிப் மூலம் கனடா கொண்டு வரும் போது அவர்ககுக்கான முழுச் செலவையும் சம்பந்தபப்ட்டவர்களே ஏற்க வேண்டும். அரசின் உதவிகளை ஸ்பொன்சர்ஷிப்பில் வந்தவர்கள் நாட முடியாது. அப்படியான ஒரு நிலை வந்து விடுமானால் ஸ்பொன்சர்ஷிப்பில் கை சாத்திட்ட சம்பந்தப்பட்ட நபர்கள் குறிப்பிட்ட ஆண்டுகள் வரை மீண்டும் யாரையும் ஸ்பொன்சர் செய்ய முடியாது.அதையும் மீறி செய்ய விரும்புவோர் அதற்கான அபராதத்தை அரசுக்குக் கட்ட வேண்டும்.

 

இது தான் ராஜினியை ஸ்பொன்சர் செய்ய முடியாமல் போனதற்கான காரணம் என்பதை சம்பந்தப்பட்டவர்களுடன் பேசியதன் மூலம் அறிந்து கொண்டோம். இது தொடர்பில் மேலும் சட்ட நிபுணர்களிடம் தொடர்ந்து பேசிய போது நிலைமை இவ்வாறு இருப்பினும் கூட வழக்கின் இறுதித் தீர்ப்பு ஒக்டோபர் 9 , 2013 இல் வெளிவந்த பின்னராவது உடனடியாக மனித உரிமைகளையும் , இரு குழந்தைகள் இருக்கின்ற என்பதையும் காரணம் காட்டி ராஜ் மனோகர் தரப்பில் ஸ்பொன்சர்ஷிப் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். எத்தனையோ இது போன்ற வழக்குகளில் உடனடியாக இப்படி முடிவுகளை சட்ட நிபுணரின் உதவியுடன் எடுத்ததால் பலர் நாடு கடத்தப்படுவது தடுக்கபப்ட்டிருக்கின்றது என்கின்றனர் சட்ட நிபுணர்கள்.

 

இதில் சற்று அலட்சியமாக காலம் கடந்து டிசம்பர் 20 ஆம் திகதியே ராஜ் மனோகர் தரப்பில் ஸ்பொன்சர்ஷிப் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதனாலேயே ராஜினி நாடு கடத்தப்படுவதை இறுதி நேரத்தில் தவிர்க்க முடியாமல் போய் விட்டதாகவும், இது போன்ற குடிவரவு மற்றும் மனித உரிமை சட்ட விவகாரங்களில் நம்மவர்கள் சிலரிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் போவதே தாமதமாக சட்ட நிபுணர்களை அணுகுவதற்கு காரணமாகி விடுவதாகவும் கூறுகின்றனர் சட்டத்தரணிகள்.

 

சரி. இவையெல்லாம் காரணங்கள். எப்படியும் பெண்மணி திரும்பி அனுப்பபப்ட்டு விட்டார். அவரை மீண்டும் விரைவில் கனடா கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகள் என்ன என்பதைப் பற்றியும் நிபுணர்களிடம் பேசினோம். நாட்டிற்குள் அவர் இருக்கும் போதே ஒருவருக்கு ஸ்பொன்சர்ஷிப் ( In Land Sponsorship ) விண்ணப்பம் செய்து அவரைத் தக்க வைப்பதற்கும் , திரும்பி அனுப்பப்பட்ட பின்னர் ஸ்பொன்சர்ஷிப் செய்வதற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளதையும் , பெண்மணி ஏற்கனவே திரும்பி அனுப்பபப்ட்டு விட்டதால் தற்போது ஸ்பொன்சர்ஷிப் விண்ணப்பித்தால் கூட எப்படியும் அனுமதி கிடைக்க குறைந்த பட்சம் 3 ஆண்டுகளாவது ஆகும். அதற்கு முன் நடக்க வேண்டுமென்றால் இந்தப் பிரச்சினையில் ஏதாவது மாயாஜாலம் நிகழ்ந்தால் தான் உண்டு என்பதே சட்டத்தரணிகளின் கருத்தாக உள்ளது.

 

இருப்பினும் பொறுப்புள்ள ஒரு ஊடகமாக எம்மால் முடிந்த வரையிலும் பெண்மணியை விரைந்து கனடாவிற்கு கொண்டு வருவதற்கான வழி வகைகளை குருவி தொடர்ந்தும் ஆராய்ந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மார்க்கம் கல்விச் சபை உறுப்பினர் ஜூனிடா நாதன் உதவியுடன் இந்தப் பிரச்சினை குடிவரவு அமைச்சர் கிறிஸ் அலெக்சாண்டரின் பார்வைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தொடர்ந்தும் நமது பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபை ஈசனிடமும் தொடர்பு கொண்டு அரசியல் உயர் மட்டத்தில் உள்ளோருக்கும் கொண்டு செல்வதற்கான பணிகளையும் மும்முரமாக செய்து வருகிறோம்.

 

இந்த செய்தியை இகுருவியில் பார்த்த பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபை ஈசன் அவர்கள் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை அழைத்துப் பேசியுள்ளதுடன். பெண்மணியை மீண்டும் கனடா கொண்டு வருவதற்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.

IMG_1169-L.jpg

 

கனடாவின் அனைத்து தரப்பு மக்களும் இந்தக் காணொளியை யூடியூப்பில் பார்த்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்ற போதிலும் கூட அவர்களில் பெரும்பான்மையானோர் ஆங்கிலம் பேசக் கூடிய கனடிய மக்களாக இருப்பதால் கனடிய பிரதான ஆங்கில நாளேடுகளில் இந்த செய்தி வெளியாகும் வரையிலும் பிரச்சினையின் தன்மையை சரியாக விளங்கிக் கொள்வதென்பது அவர்களால் இயலாத ஒன்றாகவே உள்ளது. சிலர் இச்செய்தியினை ஆங்கிலத்தில் வெளியிடுமாறும் தொடர்ந்து குருவியை கேட்டு வருகின்றனர்.

 

 

http://ekuruvi.com/mother-deported-from-canada-toronto-pearson-airport-26/

 

 

 

Link to comment
Share on other sites

இதில் கனேடிய அரசாங்கம் செய்ததில் என்ன தவறு உள்ளது.. ஐந்து பேருக்கு ஸ்பான்சர் செய்வதற்கு $200,000 வருட வருமானம் காட்ட வேண்டி இருக்கலாம் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த செய்தியை இகுருவியில் பார்த்த பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபை ஈசன் அவர்கள் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை அழைத்துப் பேசியுள்ளதுடன். பெண்மணியை மீண்டும் கனடா கொண்டு வருவதற்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.

 

நிச்சயம் ராதிகா செய்வார் நம்பியிருங்கள் :D

Link to comment
Share on other sites

ஒரு ஸ்பான்சர் செய்தால் பத்து வருடங்களுக்கு ஒரு கடப்பாடு இருக்கும். அதாவது ஸ்பான்சர் செய்யப்பட்டவரின் தேவைகளைப் பூர்த்தி செய்வேன் என்கிற உறுதிமொழியை வழங்கியிருக்க வேண்டும்.

இவர் 2003 இல் விவாகரத்து பெற்றிருந்தால் அதற்குப் பிறகு முன்னாள் மனைவியின் உறவினர்களுக்கு ஸ்பான்சர் செய்திருக்க வாய்ப்பில்லை. அப்படிப் பார்த்தால் அவருடைய கடப்பாடுகள் கூடியபட்சம் இந்த வருடத்துடன் நிறைவுக்கு வரவேண்டும். அதன்பிறகு தனது மனைவியை அழைத்துக் கொள்ள வழி இருக்கலாம்.

Link to comment
Share on other sites

முதலாவது மனைவியின் விவாகரத்து இன்னும் முடியவில்லை.அதற்குள்ளே இவர் இந்தியா சென்று விவாகரத்தை மறைத்து திருமணம் செய்து பிள்ளைக்கும் தாயாக்கி உள்ளார்(இந்தியாவிலேயெ). பின்னர் கனடாவுக்கு களவாக கூப்பிட்டுள்ளார்.(single mother) உதவிப்பணமும் எடுத்துள்ளார்.

 

முதலாவது விவாகரத்து இன்னும் முடியாததால் இவரினால் ஸ்பொன்சர் செய்ய முடியவில்லை என இவர்களுக்கு நெருக்கியவர் கூறினார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.