Jump to content

கனிமொழி விஷம் அருந்திய செய்தி உண்மை?


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்
கனிமொழி நலம் பெற வேண்டும்.
---------------------------------------------
விஷம் அருந்திய செய்தி உண்மைதான். ஆழ்வார் பேட்டையில் இருக்கும் தனியார் இருத்துவமனையில் இருக்கிறார். அண்ணன் தம்பிகள் அனைவரும் சென்று வந்தபடி உள்ளார்கள். அழகிரி நீலாங்கரையில்தான் இருக்கிறார். அவரும் வந்து பார்க்க இருக்கிறார்...இப்போது பரவாயில்லை.செய்தி வந்தபோது வதந்தியோ என்ற குழப்பம். அவருடைய செல்பேசி தொடர்புக்கே சென்றேன். பதிலில்லை.....

எப்படியிருந்தாலும் பத்திரிகையாள நண்பர்களிடம் நன்றாக பேசக்கூடியவர். நா...ன் எப்போது தொலைபேசி எடுத்தாலும் பதிலை தருவார். பேட்டி என்றால் அப்பாவை கேட்டு சொல்லட்டுமா என்பார். சொன்னபடி பதிலையும் தருவார். மற்றவர்களை போல் இருக்கவில்லை.....

எந்த பிரச்சனை என்றாலும் அது ஒரு புறமிருக்கட்டும்.
அவர் நலம்பெற வேண்டும்.......
 
 
Kanimozhi, DMK chief's daughter, admitted to hospital

South | Edited by Surabhi Malik | Updated: February 02, 2014 15:42 IST

 
{C}
reddit-btn.png
newmail.png?version1

T-Mobile Free SIMFree Pay As You Go Sim Cards On T-Mobile. Order Online Now!

www.t-mobile.co.uk/free-sim

kanimozhi-360x270_33.jpg
 
Chennai DMK chief M Karunanidhi's daughter Kanimozhi was today admitted to a hospital in Chennai.

Sources in her family said "she was feeling giddy" after long hours of work on a speech.  

More details are awaited.

http://www.ndtv.com/article/south/kanimozhi-dmk-chief-s-daughter-admitted-to-hospital-478407


திடீர் உடல் நலக்குறைவு: திமுக எம்.பி. கனிமொழி மருத்துவமனையில் அனுமதி
 
Posted by: Siva Updated: Sunday, February 2, 2014, 16:13 [iST] 
 
சென்னை: திமுக எம்.பி. கனிமொழி உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.திமுக தலைவர் கருணாநிதியின் மகளும் எம்.பி.யுமான கனிமொழிக்கு திடீர் என்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேச பல மணிநேரமாக ஓய்வின்றி பேச வேண்டியதை தயார் செய்தார். பல மணிநேரமாக வேலை பார்த்ததால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.இதையடுத்து தான் கனிமொழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அவரது குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் தெரிவித்த

Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/kanimozhi-dmk-chief-s-daughter-admitted-hospital-192662.html
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கனிமொழி இறுதி நாட்களில் தமிழருக்காக பேசியதால் சுதர்சனநாச்சியப்பன் போன்ற கேடிகளின் மேர்பார்வைக்கு கீழ்  இலங்கை சென்று ராஜபக்ஷாகளின் கால்களை கழுவும்படி காங்கிரசால் பணிக்கப்படார். அலைக்கற்றை வழக்கில் குறைந்த தொடர்பு இருந்த அவர் மட்டும் இலக்கு வைக்கப்பட்டார்.

 

கனிமொழி நலம் பெறவேண்டும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆதாரமற்று கற்பனையில் எழுந்தமாணத்திற்க்கு செய்திகளை உருவாக்கி அதில் சுகம் காணும் மனநிலை ஒருவகை மனவியாதி சும்மா கனிமொழியை பெரிதாக உருவகபடுத்தல் வேண்டாம் இங்கு சரி அப்பதான் அப்பிடி இப்பவாவது ஈழத்தமிழருக்கு ஏதாவது பரிகாரம் செய்துள்ளதா திமுக இனிமேலும் செய்யாது செய்யப்போவதும் கிடையாது ஜேஅம்மாவும் தாத்தாவும் ஓரே வண்டிலில் பூட்டிய மாடுகளே இவர்களிடம் இருந்து அதிகபட்சமாக எங்களுக்காக அறிக்கைகளும் தீர்மானங்களுமே போடமுடியும் இனியும் கனவில் புன்னைசொறிஞ்சு இன்பம் காண்பதை விட்டு நிகழ்காலத்திற்க்கு வாருங்கள். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எந்தகுடும்பத்தின் நலன்கருதி தன்னினம்அழியும்போது திருட்டுதனமாய் தமிழ்மக்களை ஏமாற்றி நாடகம் போட்டு தன் சுயநலகுடும்பத்தை காப்பாற்றினாரோ அக்குடும்பம் உடைஞ்சு அழியும் நேரம் நெருங்கிவிட்டது தமிழ் தமிழ் என்று பேய்காட்டல் எல்லாம் இனி எடுபடாது .

Link to post
Share on other sites

இவரது இளமைக்காலங்கள் மிகவும் அழகானவை, அடேங்கப்பா பணச்செழிப்பு, அப்போது எம்ஜிஆர் அவர்களது ஆட்சிக்காலம், சாராய உடையாரது வருவாய்த்துறைக்கு வராது சாராயத்தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் சரக்குகளில் எம்ஜிஆருக்குக் கொடுக்கப்படும் கணிசமான மாமூலுக்கு நிகராக கருனாநிதியும் பெற்றுக்கொள்வார். தவிர இதர வருமானகள் வேறு,  கருனாநிதி, பதவியில் இல்லதுவிட்டாலும் தனிக்காட்டு ராஜாவாக வலம்வந்த வேளை, கனிமொழியது இளமைக்காலங்கள் இருந்தன, அதன்பின்பு சிவகாசி பட்டாசுத்தொழிர்சாலை அதிபரும் பெரும்பண்க்காரருமான அதிபன்போஸ் அவர்களுடனான திருமணம் சென்னையே வியக்கும்வண்ணம் நடந்தது அதன்பின்பு கனிமொழிக்கு சரிவுகளே. உச்சத்தில் இருக்கவேண்டிய பெண் பங்காளிச் சண்டையால் இந்தநிலைக்கு வந்துவிட்டார். நான் சென்னையில் வாழ்ந்தகாலங்களில் என்போன்ற இளைஞர்களில் கனவுக்கன்னி ஆனால் கிட்டவே நெருங்கமுடியாத அளவுக்குக் காவல்கள் அச்சுறுத்தல்கள்.

 

கனிமொழி நலம்பெற இயற்கையை வேண்டுகிறேன்.

Link to post
Share on other sites

விஜய் டி.வி பார்த்துக் கொண்டிருந்தேன். Coffee with Anu - வின் பழைய நிகழ்ச்சிகளை டிட்பிட்ஸ் மாதிரி காட்டிக் கொண்டிருந்தார்கள். எவ்வளவு செலவளித்தும் மீதமாகிப் போன உற்சாகம் குறையாமல் பேசும் அனுஹாசன் ஆச்சரியமாகத் தெரிந்தார். வந்து போய்க் கொண்டிருந்த பிரபல முகங்களின் மத்தியில் சட்டென்று வந்தது கனிமொழியின் முகம். சாந்தம்நிதானம்அன்பு பொங்கிய பழைய முகம்! அதற்குக் கொஞ்ச நேரத்திற்கு முன் ஃபேஸ்புக்கில் பார்த்த, - கூட்டத்திற்கு நடுவில் சிக்கித் தவிக்கும் - கனிமொழியின் முகம்Kani-2.jpgஞாபகத்திற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. சில நொடிகள்சில நிமிடங்கள்,சில மணி நேரங்கள்சில நாட்களில் நம்மை முற்றிலுமாகப் புரட்டிப் போட்டுவிடும் வலிமை மிகுந்ததாக உள்ளன வாழ்க்கையின் இரும்புக் கரங்கள்.

அது 2000-களின் துவக்க ஆண்டுகளாக இருக்க வேண்டும். கனிமொழி தன் கணவர் அரவிந்தனோடுசிங்கப்பூரில் வசித்து வந்தார். சிங்கப்பூர் நிரந்தரவாசம் பெற்றுவிட்டதாகச் சொன்னார்கள். சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளேடான தமிழ்முரசில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்முரசில் வெளியாகும் கவிதைகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அவர் வசம்தான் இருந்தது. அவ்வப்போது நானும் கவிதைகளை அனுப்பிக் கொண்டிருந்தேன். சில கவிதைகள் வெளிவந்தன. ஒரு முறை தனது தந்தையார் கலைஞரைக் கனிமொழியே பேட்டி எடுக்கஅது தமிழ் முரசில் ஒருபக்க அளவில் வெளிவந்தது. அதைப் பற்றி ஒருவாசகர் கடிதம் எழுதினேன். அதை முரசில் வெளியிட்டார்கள். அந்த அளவில்தான் எனக்குக் கனிமொழியைத் தெரியும். சிங்கப்பூரில் நடந்த சில தமிழ் நிகழ்வுகளில் அவரைத் தொலைவில் இருந்து பார்த்ததோடு சரி. அதற்கு மேல் அவரை அணுக வேண்டிய அவசியம் இல்லாத நிலை. 

இப்படியாக வாழ்க்கைப் போய்க் கொண்டிருந்தபோது ஒருநாள்கனிமொழியின் கணவர் அரவிந்தன் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். "நாங்கள் 'சுவடி'என்றொரு நிகழ்ச்சியைச் சிங்கப்பூர்த் தொலைக்காட்சிக்காகத் தயாரித்துக் கொண்டிருக்கிறோம். அதில் ஒவ்வொரு வாரமும் ஓர் உள்ளூர்க் கவிஞரை அறிமுகப்படுத்துகிறோம். ஒருவாரம் உங்களை அறிமுகப்படுத்தலாம் என்று கனிமொழி சொன்னார். நீங்கள் எழுதிய கவிதைகளை எனக்கு அனுப்ப முடியுமா"என்று கேட்டார். நான் தயங்கினேன். அதுவரை ஒரு 10 - 20கவிதைகள்தான் எழுதி இருப்பேன். "பரவாயில்லை எழுதியதை அனுப்புங்கள்"என்றார் அரவிந்தன். அப்போது UTV-யில் இருந்த சுமிரத்னம் என்னைச் சைனீஸ் கார்டனுக்குக் கூட்டிக் கொண்டு போய் நடக்க, நிற்க, உட்காரபேசச் சொல்லி வீடியோ ஷூட் செய்தார். அந்த நிகழ்ச்சி, "அப்பாவிச் சோழன் என்ற புனை பெயரில் எழுதிக் கொண்டிருக்கும் பாலு மணிமாறனின் கவிதைகள் சற்று வித்தியாசமானவை" என்ற கனிமொழியின் அறிமுகவுரையோடு ஒளிபரப்பானது. இப்படியாகச்சிங்கப்பூரில் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் எனது தமிழ்ப் பணிக்குத் தெரிந்தோ, தெரியாமலோ அவரும் ஒரு தூண்டுதலாகிப் போனார். 

Kani-1.jpgஅதற்குப் பின் கனிமொழி தமிழ்முரசுப் பணியை விட்டு விட்டதாகவும்சிங்கப்பூருக்கும்,தமிழகத்திற்கும் இடையில் போய் வந்து கொண்டிருப்பதாகவும் சிலர் சொல்லக் கேட்டேன். அவர் சிங்கப்பூரில் மிக எளிமையாகவே இருந்ததாகப் பலரும் சொன்னார்கள். ஒரு பெரிய தலைவரின் பெண் என்ற எந்த ஒளிவட்டமும் இல்லாத இனிமையான பெண் என்றும் சொன்னார்கள். 2004-ம் ஆண்டு எனது திருமணத்திற்கு ஊருக்குப் போனபோதுகனிமொழி சென்னையில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். சென்னையில் சிலருக்குத் திருமண அழைப்பைக் கொடுத்துக் கொண்டிருந்தபோதுகனிமொழிக்கும் அழைப்பிதழ் கொடுக்கலாம் என்று தோன்றியது. கைத்தொலைபேசிக்கு அழைத்தேன். "இன்னைக்குக் கொஞ்சம் மீட்டிங்ஸ் இருக்கு. நாளைக்குக் கட்டாயம் பத்திரிகையோடு வீட்டுக்கு வாங்க"என்று மிகப் பணிவான குரலில் சொன்னார். அதில் மிகஅழுத்தமான மன்னிப்புக் கேட்கும் தொனி இருந்தது. அவர் சொன்ன அந்த 'நாளை', பாராளுமன்றத் தேர்தலில் - தி.மு.க கூட்டணி 40 - 0 என்று கிளீன் ஸ்வீப் அடித்த நாள். அந்த சந்தடியில் கனிமொழியைச் சந்திக்க முடியுமா என்ற சந்தேகத்தோடு ஃபோன் செய்தேன். அவர் பேசும்போது பின்புலத்தில் வேட்டுச் சத்தம் காதைக் கிழித்தது. "மிகவும் மன்னிக்கணும். இன்னைக்கு ஒரே கூட்டமா இருக்கு. இன்னும் இரண்டு நாள் கழித்து வரமுடியுமா" என்று கேட்டார். நான் அன்றே திருமணவேலைகளுக்காகக் கம்பம் செல்ல வேண்டிய நிலை இருப்பதைச் சொல்லிஎன் தம்பியிடம் அழைப்பிதழைக் கொடுத்து விட்டுச் சென்றேன். 40-0 என்ற வெற்றிச் சூழலில் அவனும் அழைப்பிதழைக் கொடுக்க முடியாமல் போனது. 

கனிமொழி அரசியலுக்கு வருவாராவரமாட்டாரா என்ற பேச்சு, தீவிரமாக இருந்த இன்னொரு சமயம். அவர் ஏன் அரசியலுக்கு வர வேண்டும் என்று 10புள்ளிகளைப் பட்டியலிட்டு எனது வலைப்பூவில் எழுதினேன். சிங்கப்பூரில் அதைப்படித்து விட்டுக்கனிமொழிக்குக் கொஞ்சம் நெருக்கமான ஒருவர் என்னிடம், "ஏன் வீணா எழுதிட்டு இருக்கீங்க. அவர் வரமாட்டார்" என்றார். "இந்தக் கட்டுரை என்ன கனிமொழிக்கு வைக்கப்பட்ட ஐஸா?" என்று சிரித்துக் கொண்டே சீரியஸாகக் கேட்டார். எதன் மீதுமான தனது கருத்தைச் சொல்கிற ஒரு சாமானியனின் உரிமைதான் அது என்று அவரிடம் விளக்கவில்லை. அமைதியாக இருந்து விட்டேன். ஆனால்-கனிமொழி அரசியலுக்கு வந்தார்.

அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று எழுதி விட்டாலும்முதலைகளும்,பாம்புகளும் நிறைந்த தமிழக அரசியலில், அடிப்படையில் மென்மையான் கனிமொழி தாக்குப் பிடிக்க முடியுமா என்று பலரையும் போல் எனக்குள்ளும் ஒரு சின்னச் சந்தேகம் எப்போதும் இருந்தது. தமிழகப் பத்திரிகைகள் அவர் அரசியலில் தேறிவிட்டார் என்றன. குழு அல்லது குடும்ப அரசியலில் கூட கனிமொKani-3.jpgழி கைத் தேர்ந்தவராகி விட்டார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால்வெறுப்பு,விருப்பின்றி வேடிக்கை பார்த்த என்னைப் போன்ற சாதாரண பார்வையாளர்களுக்கு அவர்,மென்மையான அரசியல் மற்றும் வன்மையான அரசியலுக்கும் இடையில் அல்லாடும் ஒருவராகத் தோற்றமளித்தார். பல மாற்றங்கள்ஏமாற்றங்களுக்குப் பிறகுஇன்று சி.பி.ஐ-யின் பிடியில் கனிமொழி!

தமிழக மக்களில் பலரும் கனிமொழிக்கு அலைக்கற்றைப் பிரச்சனையில் சம்பந்தமில்லை என்பதே உண்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த விருப்பத்தை, அரசியல் என்ற எல்லையைக் கடந்த அனுதாபம் எனச் கொள்ளலாம். விடுபட முடியாது என்பதைப் போன்ற தோற்றமளிக்கிற இந்த இடியாப்பச் சிக்கலில் இருந்து கனிமொழி விடுபடலாம் அல்லது விடுபட முடியாமல் போகலாம். ஆனால், சில நொடிகள்சில நிமிடங்கள்சில மணி நேரங்கள்சில நாட்களில் நம்மை முற்றிலுமாகப் புரட்டிப் போட்டுவிடும் வலிமை மிகுந்ததாக உள்ளன வாழ்க்கையின் இரும்புக் கரங்கள் என்பதை மறுபடிமறுபடி நமக்கு ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கின்றன கனிமொழியின் இந்த நிமிடங்கள்!

 

http://thangameen.com/Archieves/ContentDetails.aspx?tid=380&iid=38

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இவரது இளமைக்காலங்கள் மிகவும் அழகானவை, அடேங்கப்பா பணச்செழிப்பு, அப்போது எம்ஜிஆர் அவர்களது ஆட்சிக்காலம், சாராய உடையாரது வருவாய்த்துறைக்கு வராது சாராயத்தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் சரக்குகளில் எம்ஜிஆருக்குக் கொடுக்கப்படும் கணிசமான மாமூலுக்கு நிகராக கருனாநிதியும் பெற்றுக்கொள்வார். தவிர இதர வருமானகள் வேறு,  கருனாநிதி, பதவியில் இல்லதுவிட்டாலும் தனிக்காட்டு ராஜாவாக வலம்வந்த வேளை, கனிமொழியது இளமைக்காலங்கள் இருந்தன, அதன்பின்பு சிவகாசி பட்டாசுத்தொழிர்சாலை அதிபரும் பெரும்பண்க்காரருமான அதிபன்போஸ் அவர்களுடனான திருமணம் சென்னையே வியக்கும்வண்ணம் நடந்தது அதன்பின்பு கனிமொழிக்கு சரிவுகளே. உச்சத்தில் இருக்கவேண்டிய பெண் பங்காளிச் சண்டையால் இந்தநிலைக்கு வந்துவிட்டார். நான் சென்னையில் வாழ்ந்தகாலங்களில் என்போன்ற இளைஞர்களில் கனவுக்கன்னி ஆனால் கிட்டவே நெருங்கமுடியாத அளவுக்குக் காவல்கள் அச்சுறுத்தல்கள்.

 

கனிமொழி நலம்பெற இயற்கையை வேண்டுகிறேன்.

 

 

அவாவுக்கு  ஒன்றுமில்லை

நீங்கள் அமைதியாக இருங்கள் :lol:  :D  :D

Link to post
Share on other sites

இந்த செய்தியை பார்த்ததில் இருந்து எனக்கு தெரியும் இது ஒரு தொடர் நாடகத்தில் அங்கமென அதனால் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை, அப்படி உண்மையில் ஏதாவது நடந்தாலும் கவலைப்பட என் நெஞ்சில் இப்போது ஈரம் இல்லை காரணம் முள்ளிவாக்கால் இது எனது கருத்து மட்டுமல்ல அநேகமான ஈழ தமிழர்களின் கருத்துமாக இருக்கலாம் என நம்புகின்றேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆதாரமற்று கற்பனையில் எழுந்தமாணத்திற்க்கு செய்திகளை உருவாக்கி அதில் சுகம் காணும் மனநிலை ஒருவகை மனவியாதி சும்மா கனிமொழியை பெரிதாக உருவகபடுத்தல் வேண்டாம் இங்கு சரி அப்பதான் அப்பிடி இப்பவாவது ஈழத்தமிழருக்கு ஏதாவது பரிகாரம் செய்துள்ளதா திமுக இனிமேலும் செய்யாது செய்யப்போவதும் கிடையாது ஜேஅம்மாவும் தாத்தாவும் ஓரே வண்டிலில் பூட்டிய மாடுகளே இவர்களிடம் இருந்து அதிகபட்சமாக எங்களுக்காக அறிக்கைகளும் தீர்மானங்களுமே போடமுடியும் இனியும் கனவில் புன்னைசொறிஞ்சு இன்பம் காண்பதை விட்டு நிகழ்காலத்திற்க்கு வாருங்கள். 

 

கற்பனை இல்லாததால் தொடர்புகளை கண்டறியாது மோப்பத்தின் பின் போகும் ஜீவன்ங்கள். 

 

நாயும் நரியும் ஒன்று மாதிரி தோன்றும். ஆனால் நரி தான் நாய் இல்லை தன் அழுக்கேறிய மனத்தால் காட்டிக்கொடுத்துவிடும். அது நாய் மாதிரி தெரிந்தாலும் நரி. நாலாயிர திவ்விய பிரபந்தகங்களை தெரிந்த நடிக்கிறார்கள் சில பெரியாள்வார்கள். நன்றியறிவுள்ள விலங்கை நாயாக கண்டு கொள்வதுண்டு. ஆனால் கணனிக்கு முன்னால் குந்தியிருக்கும் சில செக்கென்ன சிவலிங்கம் என்ன நடந்து தாம் யார் என காட்டிக்கொள்கின்றன.

 

கனிமொழியை பற்றி எழுத இல்லாதால் அங்கொடையிருந்து வெளிக்கிட்டு ஓடியவர்கள் மாதிரி தொடர்பில்லாத தி.மு.க.வை இங்கே இழுக்கிறார்கள். இந்த திரிக்கும் தி.மு.க.வுக்கும் என்ன தொடர்பு?

 

 

http://www.yarl.com/forum3/?showtopic=47810

இது பிரச்சனை இனி திசை மாறாது எனக்கண்ட போது  யாழுக்கு பையன் தேடிக்கொணர்ந்து இணைத்த செய்தி.

 

கனி மொழியை சிறையில் அடைக்க காலாக இருந்த நிகழ்வுகள்.

 

http://gtmn.brandx.eu/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/23947/categoryId/3/language/ta-IN/--------.aspx

Link to post
Share on other sites

இதுவும் தி.மு.க வின் நாடகமாக இருக்கலாம். :unsure:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அது உண்மை. ஆனால் கலுகல்லை இரண்டு முறை நஞ்சருந்து சாவின் விழிம்புக்கு சென்று வந்த பின்னர் வைத்திய சாலைகள் உறவினரின் விருப்படி மறைத்தது போல இதை மறைக்க உதவிக்கு போகின்றன. 


ஏன் இந்த முயற்சி என்ற காரணம் புரியவில்லை. பா.ஜா.வந்தால் வழக்கு தொடரும். அது தொடர்பா அல்லது அழகிரி கருணாநிதிக்கு அடித்த சம்பவம் தொடர்பா..? அங்கே நிறைய இருக்கு.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
அழகிரி.. ஸ்ராலின்.. கலைஞர் மோதலின் வலுவை திசை திருப்ப.. கனிமொழிக்கு கலைஞர் அளித்த புரஜெக்டே.. கொஸ்பிற்றல் நாடகம். கலைஞருக்கு நாடகம் கை வந்த கலை. சரிந்து கிடக்கும் தி மு கவின் செல்வாக்கை நிமிர்த்த கலைஞர் தூக்கில் தொங்காததது தான் குறை. எதற்கும் சந்திரமுகி பார்த்து பழகினார் என்றால் நல்லது. எப்படி சாகாமல் தூக்கில் தொங்குவது என்று கற்றுக் கொள்ளலாம். :D :lol:
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியா கொக்கா???? நேரமறிந்து வேடம் போடுவதில் வல்லவர்.

 

lat-rajini.jpg anniyan026gq.jpg kani-karu-rasa.jpg

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தண்ணி , மலசல வசதியில்லாமல், மயிற பொசுக்கும் வெப்பத்தில் 12 மணித்தியாலம் கையப்புடித்து நிக்கும் மனிதச்சங்கிலி போராட்டத்தின் திட்டமிடலின் இவவின் பங்கு அளப்பெரியது..

அப்போதுசொல்லிக்கொண்டார்களாம்.... இனிமேல் ஆர்ப்பாட்டம், கூட்டம் எண்டால் சனம் தலை தெறிக்க ஓடும் எண்டு ...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கனிமொழி நிஜமாகவே மனக் கஸ்டப்பட்டு விசம் குடித்திருந்தால் ...அவ நலம்பெற்று வீடு வரட்டும்...!

 

எனது கவலையெல்லாம் மில்லியனர்,பில்லியனாராய் இருக்கும் கனிமொழியாலேயெ   கேவலம்  ஒரு  சுத்தமான  விசத்தைக் கூட வாங்க முடியாமல் இருக்கும்போது , பாவப்பட்ட ஏழைச் சனங்களின் நிலைமையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் மக்களே...!

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • குமாரசாமி அவர்கள் அதிக புள்ளிகள் எடுத்து முதலாமிடத்தில் இருக்கின்றார்....😎 புகைபிடித்தல் உடல்நலத்திற்கு கேடு.
  • சிலருக்கு வாய் நிறைய சோறு வேணுமெண்டால் பூனையையும் புலியாக்கி  பிழைத்துக்கொள்வார்கள்.
  • #CSKvsDC சிஎஸ்கேவை அசால்ட்டா ஊதித்தள்ளிய பிரித்வி ஷா, தவான்..! டெல்லி கேபிடள்ஸ் அபார வெற்றி ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் மோதின. மும்பையில் நடந்த இந்த போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட், ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி, சுரேஷ் ரெய்னாவின் அதிரடி அரைசதம் மற்றும் சாம் கரன், ஜடேஜாவின் கடைசி நேர அதிரடியால் 20 ஓவரில் 188 ரன்களை அடித்தது சிஎஸ்கே. சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் டுப்ளெசிஸ் ரன்னே அடிக்காமல் ஆவேஷ் கானின் பந்தில் 2வது ஓவரில் ஆட்டமிழக்க, அடுத்த ஓவரிலேயே ருதுராஜ் கெய்க்வாட்டை கிறிஸ் வோக்ஸ் 5 ரன்னில் வீழ்த்த, 7 ரன்னுக்கே சிஎஸ்கே அணி 2 விக்கெட்டை இழந்தது. கடந்த சீசனில் ஆடாமல், இந்த சீசனில் கம்பேக் கொடுத்த ரெய்னா, அதிரடியாக ஆடி செம கம்பேக் கொடுத்தார். ரெய்னாவும் மொயின் அலியும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். அஷ்வின் மற்றும் மிஷ்ராவின் ஸ்பின் பவுலிங்கை ரெய்னாவும் மொயின் அலியும் இணைந்து அடித்து நொறுக்கினர்.  பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி 3வது விக்கெட்டுக்கு 53 ரன்களை சேர்த்தனர். அதிரடியாக ஆடிய மொயின் அலி, அஷ்வின் பந்தில் 36 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து களத்திற்கு வந்த ராயுடுவும் ரெய்னாவுடன் இணைந்து அடித்து ஆடினார். ஆனால் அவரும் நிலைக்கவில்லை. அதிரடியாக ஆடிய ரெய்னா அரைசதம் அடித்து சிஎஸ்கே அணியில் செம கம்பேக் கொடுத்த வேளையில், ராயுடு 23 ரன்னில் ஆட்டமிழந்தார். ராயுடு விக்கெட்டுக்கு பின், ஜடேஜா ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்தார். 16வது ஓவரின் முதல் பந்தை ஜடேஜா ஆட, அதற்கு 2வது ரன் ஓட முயன்றபோது ஜடேஜா, பவுலர் ஆவேஷ் கான் மீது மோதியதால் 2வது ரன்னை ஓட முடியாமல் திரும்ப, பாதி பிட்ச்சுக்கு ஓடிவந்த ரெய்னாவால் க்ரீஸுக்கு திரும்ப முடியவில்லை. எனவே 54 ரன்னில் ஆட்டமிழந்தார். தோனி, அதேஓவரில் ஆவேஷ் கானின் பந்தில் டக் அவுட்டானார். இதையடுத்து டெத் ஓவர்களில் சாம் கரன் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் அடித்து ஆடி ஸ்கோரை உயர்த்தினர். சாம் கரன் 15 பந்தில் 34 ரன்களும், ஜடேஜா 17 பந்தில் 26 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 188 ரன்கள் அடித்தது. இதையடுத்து 189 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷாவும் ஷிகர் தவானும் அந்த இலக்கை எளிதானதாக்கினர். தொடக்கம் முதலே பிரித்வி ஷாவும் தவானும் அடித்து ஆடினர். தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், சாம் கரன் ஆகிய அனைவரின் பவுலிங்கையும் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி, பவர்ப்ளேயிலேயே 66 ரன்களை குவித்துவிட்டனர். அதன்பின்னர் மிடில் ஒவர்களிலும் அதிரடியாக ஆடினர். ரன் வேகம் கொஞ்சம் கூட குறையாமல் அபாரமாக அடித்து ஆடினர். பிரித்வி ஷா 27 பந்தில் அரைசதம் அடிக்க, அவரை தொடர்ந்து தவானும் அரைசதம் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு பிரித்வி ஷாவும் தவானும் இணைந்து 13.3 ஓவரில் 138 ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடிய பிரித்வி ஷா, 38 பந்தில் 72 ரன்கள் அடித்து பிராவோவின் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னரும் அதிரடியை தொடர்ந்த தவான்,  85 ரன்கள் அடித்த நிலையில், ஷர்துல் தாகூரின் பந்தில் தவான் ஆட்டமிழந்தார். தவான் 53 பந்தில் 85 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பிரித்வி ஷாவும் தவானும் இணைந்து வெற்றியை உறுதியாக்கிவிட்டதால், 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி கேபிடள்ஸ் அணி, இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.   https://tamil.asianetnews.com/sports-cricket/delhi-capitals-beat-csk-in-ipl-2021-qrczrr  
  • தாட்டான் வைட்டமின் டி அதிகம்  எடுக்கிறதாலை வேற லெவல்....
  • ஐயா குணா, நீங்கள் குறிப்பிடும் தரம் 1 உணவகங்கள் ஏற்கனவே கழிவறை வசதிகளுடன் தான் இயங்குகின்றன.  இங்கு பிரித்தானியாவில் council களால் எத்தனை பொதுக் கழிப்பிடங்கள் பராமரிக்கப்படுகின்றன ?  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.