Jump to content

பின் ஜனநாயகத்துவம் (POST DEMOCRACTISM)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பின் ஜனநாயகத்துவம் (POST DEMOCRACTISM)

எச்.முஜீப் ரஹ்மான்

1992 ல் கம்யூனிசம் முடிவுக்கு வந்த போது வரலாற்றின் முடிவு என்று பூசியோமோவும், அண்மையில் மறைந்த செக்கொஸ்லவேக்கிய சிந்தனையாளர் வக்லாவ் ஹவெல் கம்யூனிசத்தின் வீழ்ச்சியோடு நவீன நாகரிகம் முழுவதுமாக முடிவுக்கு வந்து விட்டது என்ற சொல்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணங்களில் முதன்மையானது இதுதான்: நவீன நாகரிகத்தின் அடிப்படை நம்பிக்கை, அறிவியலால் உண்மையை அறிய முடியும் என்பதும் அப்படி நாம் அறிவியலைக் கொண்டு அறியும் உண்மை முழுமையானதாகவும் அதைக் கொண்டு உலகில் அனைத்தையும் நம்மால் கட்டுக்குள் கொண்டு வந்து ஆட்சி செய்ய முடியும் என்பதும்தான். இதன் உச்சம் கம்யூனிச சிந்தனை- ரஷ்யாவின் வீழ்ச்சி, அறிவியல் என்னும் ஒற்றை உண்மையின் குடைக்குள் உலகைக் கொண்டு வந்து விடலாம் என்ற நம்பிக்கையின் தோல்வியை நவீனத்துவத்தின் முடிவாய் ஹவெல் கருதுகிறார்- இனி அரசியல் “நடைமுறை அறமாக இருக்கும் (morality in practice)’ என்று சொல்கிறார் அவர்.எனினும் கம்யூனிசத்தின் வீழ்ச்சியை நான் நவீனத்துவத்தின் வீழ்ச்சியாகவே கருதுகிறேன். சுதந்திரம்,சமத்துவம்,சகோதரத்துவம் போன்ற சொல்லாடல்கள் நீர்த்து போய்யுள்ளது.நவீனத்துவத்தின் மாபெரும் கண்டுபிடிப்பான மக்களாட்சித்துவம் இன்றைய சூழலில் தோல்வியில் முடிந்துவிட்ட்தாகவே நான் கருதுகிறேன்.முந்தைய மக்களாட்சித்துவம் நவீன வடிவமாக பாராளுமன்ற ஜனநாயகமாக இருந்த்து.

பாராளுமன்ற ஜனநாயகத்துவத்தை கேள்விக்குட்படுத்திக்கொண்டு பின் ஜனநாயகத்துவம் என்ற கோட்பாடை நான் முன்மொழிகிறேன்.மக்களால்,மக்களுக்கு,மக்களே தேர்ந்தெடுக்கும் வாக்கு அடிப்படையிலான தேர்தல் முறை பணத்தால் தோல்வியை கண்டிருக்கிறது.வாக்கினை பணத்தால் வாங்குவது ஜனநாயகத்தின் அடிப்படைக்கு எதிரான ஒன்றாகும்.ஜனநாயகத்தின் அடித்தளத்தில் இருக்கிற அடித்தட்டு மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவது ஜனநாயகத்தின் குணாதிசயமாகும்.இந்தியாவின் வெகுஜனத்துவ கோட்பாடுகளான பெரியாரியம்,அம்பேத்காரியம் உள்ளிட்ட பிராந்திய த்த்துவங்கள் பாராளுமன்ற ஜனநாயகத்தை எதிர்கின்றன.பாராளுமன்ற ஜனநாயகத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை என்றே சொல்லப்பட்ட்து.ஆனால் 65 வருட்த்துக்கு மேலாக பாராளுமன்ற ஜனநாயகம் இந்த விமர்சன்ங்களை உள்வாங்கிக்கொண்டு வளர்ந்துள்ளதா என்றால் நிச்சயமாக இல்லை என்றே சொல்லமுடியும்.

மிக முக்கியமாக இந்துத்துவ சக்திகளால் பெரும்பான்மைவாதம் என்ற செயல்பாட்டுருவாக்கம் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலாகவே திகழ்கிறது.பாப்ரி மஜ்ஜித் இடிப்பு பாராளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக்குரியதாக ஆக்கியதும் ஒரு சார்பினர்களின் இருப்பு கேள்விக்குரியதாக மாறியதினாலும் பின் ஜனநாயகத்துவம் என்ற கோட்பாட்டின் முக்கியத்துவம் சூழலுக்குந்த்தாக இருக்கிறது.மேலும் நீதிமன்றத்தின் பாப்ரிமஜ்ஜித் குறித்த தீர்ப்பு ஜனநாயகத்து எதிரான ஒன்றாகவே இருக்கிறது.சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மும்பை,குஜராத் மற்றும் பல கலவரங்களால் உருவானது.இது சிறுபான்மையினருக்கு எதிராக அமைந்த்தோடு அல்லாமல் உண்மையான ஜனநாயகவாதிகள் அனைவரையும் ஜனநாயகத்தின் மீது அதிருப்தி நிலவுமாறு அமைந்த்து.ஆக சிறுபான்மையினர் வாழ உகந்த நிலை உருவாக்கப்படவேண்டும் என்பதே பின் ஜனநாயகத்துவத்தின் முக்கிய நிலைபாடாக இருக்கிறது.

வாக்கு அரசியலின் காலம் முடிந்து விட்ட்து.இதனால் எந்த பலனும் ஏற்படபோவதில்லை.வாக்கு அரசியல் ஜனநாயக கேலிக்கூத்தாக அமைந்துவிட்ட்தால் வாக்குசீட்டு அரசியல் மாற்றியமைக்கப்படவேண்டும்.தேர்தலுக்கு பலகோடி செலவு செய்து வாக்கை விலைக்கு வாங்குவதால் அதன் நோக்கம் சிதைந்துவிட்ட்து.மேலும் பெரும்பான்மைவாதம் என்ற வாக்கு அரசியல் ஜனநாயகத்துக்கு விரோதமானதாகவே இருக்கிறது.பின் ஜனநாயகத்துவம் இந்தியாவில் 3000 சமூகங்கள் இருக்கிறதென்றால் அனைத்து சமூகங்களுக்கான பிரதிநிதித்துவத்தை அரசியல்,பொருளாதாரம்,சமூகவியல் என்று அளிக்க கோருகிறது.இன்று சமூக வலைதளங்கள் அனைத்து மக்களுக்குமான கருத்து சுதந்திரத்தை முன்னெடுத்து செல்கையில் அரசியல் கட்சித்தலைவர்கள் இதை தடைசெய்யவேண்டும் என்று சொல்வது ஜனநாயகத்தின் தோல்விக்கு மற்றொரு சான்றாகும்.அது போல அடித்தளமக்களின் கருத்துசுதந்திரம் பாராளுமன்ற ஜனநாயகத்தால் புறக்கணிக்கப்படுகிறது.

ஒழுங்கு, சகிப்புத் தன்மை ஒத்துப்போவது போன்றவை ஜனநாயகத்தின் அடிப்படை தேவைகளாகும். ஜனநாயகத்தில், மாறுதல்கள் கூடிப் பேசுவதாலும், கோரிக்கைகள் மூலமாகவுந்தான் நிறைவேற்றப் படுகின்றனவே தவிர, வன்முறைச் செயல்கள் மூலமாக அல்ல.ஜனநாயகத்தின் பொருள் சகிப்புத் தன்மை என்பதாகும். நம்மோடு ஒத்துப் போகிறவர்களிடம் நாம் காட்டுகிற சகிப்புத் தன்மை அல்ல! நம்மோடு மாறுபடுகிற – அபிப்பிராய பேதம் கொள்கிறவர்களுடன், நாம் காட்டுகிற சகிப்பபுத் தன்மை: – அதற்குப் பெயர்தான் ஜனநாயகம் என்பது.ஜனநாயகம் வெற்றி பெற வேண்டுமானால், அதற்குப் பின்னணியாக மக்களின் நல்லெண்ணமும் பொறுப்புணர்ச்சியும் இருக்க வேண்டும்.

பாராளுமன்ற ஜனநாயக த்த்துவத்தின் மீது இயங்கி வரும் ஒரு அரசு நிச்சயம் ஒரு எதிர்க் கட்சி தேவை என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். தட்டிக் கேட்க ஆளில்லாத தனிமனிதன் எதேச்சாதிகாரி ஆகிவிடவதைப் போல – கண்டிக்க பலமான எதிர்க் கட்சி இல்லாத சர்க்க்காரும் சர்வாதிகாரித்தனம் பெற்று விடுகிறது.சாதாரண மனிதனின் தேவையை எந்த அரசாங்கமும் புறக்கணிக்க முடியாது. ஜனநாயகத்தின் அடிப்படைத் த்ததுவமே இந்தத் தேவையின் மீதுதான் உருவாக்கப்பட்டிருக்கிறது.சுதந்திரமும் ஜனநாயகமும் இன்று மரணப் படுக்கையில் கிடக்கின்றன. அவற்றின் பாதுகாவலர்கள் என்று சொல்லப் படுபவர்களாலேயே அவை மேலும பயங்கரமாகப பழி வாங்கப்படுகின்றன.இல்லாமையும், ஏழ்மையும், உயர்வும் தாழ்வும் இருக்கும் நாட்டில் எந்த விதமான ஜனநாயகம் நீண்ட நாள் பிழைத்திருக்க முடியாது.

ஜனநாயகத்தைப் பற்றி ஆயிரம் கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் சமுதாயத்தின் ஒழுங்கு – அதன் முக்கிய நோக்கம் என்பது நிச்சயம். எந்த அளவுக்கு ஒருசமுதாயத்தில் நிர்ப்பந்தமின்றி ஒழுங்கு முறை தானாக உருவாகிறதோ, அந்த அளவுக்கு அங்கே ஜனநாயகம் வளர்ச்சி பெறுகிறது மற்ற எல்லா வழிகளையும்விட ஜனநாயகம் ஒன்றுதான் மனித குலத்தை ஆளக்கூடிய மிக உயர்ந்த மார்க்கம் ஆகும்.வன்முறைச் செயல்களின் வாழ்வு முடிந்து விட்டதென்றோ, அடியோடு அழிந்து விடுமென்றோ சொல்வதற்கில்லை. என்றுமில்லா வேகத்தோடும், வலிவோடும் அது இன்று தலைவிரித்தாடுகிறது அது அழிக்கப்படவில்லை என்றால், உலகை அது அழித்துவிடும் என்பது நிச்சயம்.

ஜனநாயகம் என்ற சொல், இன்னும் வேறு எதையாவது குறிக்கிறது என்றால், அது குறிப்பது சமத்துவம் என்பதேயாகும். சமத்துவம் – எல்லாரும் வாக்குரிமை பெற்றிருப்பதிலே அல்ல – சமூக பொருளாதார அமைப்பில் எல்லாரும் பெற்றிருக்க ஏற்றத் தாழ்வற்ற நிலை – அதுதான் ஜனநாயகம் குறிக்கும் சமத்துவம் ஆகும்.வெறுப்பும் – பகையும், வன்முறைச் செயல்களுமே இன்றை நம் பலக்குறைவுக்குக் காரணமாகிவிட்டன. வன்முறைச் செயல்களைப் பின்பற்றுவகிறவர்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைக்க முடியாது.சுதந்திர ஜனநாயக நாடுகளால்தான் உலகில் சுதந்திரமும் ஜனநாயகமும் தழைக்கக உதவ முடியும்.சமத்துவம் இன்றேல் சுதந்திரமும், ஜனநாயகமும் அர்த்தமற்றவை ஆகிவிடும், சமத்துவமும், மூல பொருள்களின் உற்பத்ததி ஸ்தானமும் தனியுடமையாய் இருக்கும் வரை நிலைபெறச் செய்ய முடியாத்தாகி விடும்.

படை வலிமையும், சமாதானத்தையும்தங்கள் கைக்குள் வைத்துக் கொண்டிருப்பர்களை, பணிவோடும் நட்புரிமையோடும் அணுகி, சண்டையை அடியோடு தடுத்து நிறுத்த முடியாவிட்டாலும், கொஞ்ச நாட்களுக்குத் தள்ளிப் போடச் செய்யவாவது நமது வலிமையை நாம் பூரணமாக உபயோகித்தோமானால், இந்த இடைக்காலத்திலாவது ஒருவருக்கொருவர் கூட்டுறவோடு நெருங்கி வாழ்வதை உலகம் அறிந்து கொள்ள அது உதவி செய்யக்கூடும்.ஜனநாயகத்தின்உண்மை முகத்தை இலகுவாக புரிந்து கொள்ள முடியாத, மிகவும் சூக்குமமான ஒன்றாகவே உள்ளது. திரிந்து போன நிலையில், கற்பனையான போலியான பகட்டுத்தனத்தில் இது மிதக்கின்றது. பொதுவாக மனிதனின் உரிமை சார்ந்த ஒன்றாக புரிந்து கொள்வது நிகழ்கின்றது. ஆனால் அந்த உரிமை என்பது சூக்குமமாகிவிடுகின்றது. ஜனநாயகத்தின் அடிப்படையே சமூகத்துக்கு எதிரானதும், தனிமனிதனின் குறுகிய நலன்களுக்கும் உட்பட்டதே.

ஒரு சமூக அமைப்பில் ஜனநாயகம் உயிர்வாழ வேண்டுமென்றால், அங்கு ஜனநாயகம் மறுக்கப்பட்டு இருக்க வேண்டும். இந்த முரண்நிலையின்றி ஜனநாயகம் உயிர்வாழ முடியாது. அதாவது இதில் ஏதோ ஒன்றின்றி ஒன்று இருக்கமுடியாது. இதுவே சமூகத்துக்கு எதிரானதாகவும், தனிமனிதனுக்கு சார்பானதாகவும் மாறிவிடுகின்றது. அதாவது அனைவருக்கும் ஜனநாயகம் இருந்தால், ஜனநாயகம் என்ற கோரிக்கையும் இருக்காது. இது இயல்பில் இன்றைய ஜனநாயக பாராளுமன்றங்களைக் கூட இல்லாததாக்கிவிடும். இது ஒரு விசித்திரமான, ஆனால் நிர்வாணமான உண்மை. இன்றைய ஜனநாயக பாராளுமன்றங்கள் இருக்கும் வரை, ஜனநாயக மறுப்பும் இருந்து கொண்டே இருக்கும். ஜனநாயகத்தின் முரணற்ற உள்ளடக்கம் இதுதான். இன்றைய சமூக அமைப்பு நீடிக்கும் வரை, ஜனநாயகத்தை மறுப்பவன் இருக்க வேண்டும். அதேபோல் ஜனநாயகத்தை கோருபவன் இருக்க வேண்டும். இன்று உலகெங்கும் அனைத்து மனிதர்களுக்கும் ஜனநாயகம் வழங்கிய சமூக அமைப்பு எதுவுமே கிடையாது. ஜனநாயகத்தை இழந்தவனும், அதை மறுப்பவனைக் கொண்டதுமான ஜனநாயக உலகம் தான், இந்த சமூக அமைப்புகள். இந்த நாடாளுமன்றங்கள் அனைத்தும் இதை பாதுகாப்பதில் தான் உயிர் வாழ்கின்றது.

இதுவே மிகவும் உன்னதமான சமூக அமைப்பாக, ஜனநாயகமாக காட்டப்பட்டு போற்றப்படுகின்றது. ஆனால் மக்களுக்கு எதிரான மிகவும் மோசமான ஒரு அமைப்பாக, அதன் உள்ளடகத்திலேயே அது உள்ளது. அதாவது மறுக்கப்படுகின்ற ஒரு அமைப்பாகத் தான், ஜனநாயகம் உள்ளது. ஜனநாயகம் என்ற அடிப்படையிலும் சரி, சமூகத்தில் உள்ள எந்தக் கூறும் சரி, மறுப்பதும் அதை கோருவதையும் அடிப்படையாக கொண்ட ஒரு அமைப்பையே உயர்வானதாக காட்டுகின்றனர். இதற்கு பெயர் ஜனநாயகம். இதை நிலைநாட்டும் உரிமையைத் தான் சுதந்திரம் என்கின்றனர்.

இந்த ஜனநாயகம் என்பது தீர்மானமெடுக்கும் மக்களின் அதிகாரத்தையே மறுதலிக்கின்றது. மாறாக மக்கள் வாக்கு போடுவதையே ஜனநாயகமாக காட்டப்படுகின்றது. இதையே மக்களின் சொந்த தேர்வாக காட்டப்படுகின்றது. ஆனால் இந்த தேர்வு எப்படியானதாக இருந்த போதும், மக்கள் தாம் விரும்பும் ஒரு அமைப்பை இந்த ஜனநாயகம் வழங்குவதில்லை. மாறாக அவர்களை அடக்கியாளும் ஒன்றையே ஜனநாயகம் வழங்குகின்றது. இங்கு மக்கள் வாக்களிப்பது என்பது கூட ஒரு சடங்காக, அதன் மீது ஆதிக்கம் செலுத்த முடியாத ஒன்றாக மாறிவிடுகின்றது. வாக்கு போட்ட தேர்வை திருப்பிப் பெற முடியாத ஒன்றாகிவிடுகின்றது. தேர்வே அர்த்தமற்ற ஒன்றாகிறது. இது சொந்த அடிமைத்தனத்தையே அடிப்படையாக கொண்டதாக மாறிவிடுகின்றது.நாடாளுமன்ற ஜனநாயகம் உலக அளவில் தோல்வியை தழுவியிருக்கிறது.ஆனால் ஜனநாயகத்தில் மாற்று ஜனநாயகம் இருப்பதற்க்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது.எனவே பின் ஜனநாயகத்துவம் பேசுவதற்க்கான சூழலும் சாத்தியம் இப்போது தான் அமைந்திருக்கிறது.எனவே இது குறித்து விவாதிக்கவேண்டுவது ஜனநாயகத்தில் நம்பிக்கையுடையவர்களின் கடமையாகும்.

http://malaigal.com/?p=3958

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே? வாங்கோ என்னை வசைபாட எனவே வாழும் அகலிகை….சாரி யாழுக்கு வரும் கல்யாண். நான் கஜேஸ் கட்டுகாசு இழப்பார் என கூறவில்லை. நான் வெல்லமாட்டார்கள் என கூறிய அத்தனை தேர்தல்களிலும் அவர்கள் வெல்லவில்லை. கடந்த முறை சொன்னது போலவே யாழில் ஒரு சீட்டை எடுத்தார் பொன்னர். அம்பாறை மக்களை ஏமாற்றி அடுத்த சீட்டை 100 வாக்கு வித்தியாசத்தில் எடுத்தார் குதிரை கஜே.   நேற்று வைரவர் பூசை பலமோ?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
    • உங்களுக்கு மேலே இருப்பது என் பதில். இப்போ யார் கோமாளி🤣 இதுவும் சீமான் ப்ரோ விட்டா இன்னொரு அவிட்டா. இல்லை என்றால் இப்படி தேர்தல் ஆணையம் சொன்ன ஆதாரம் எங்கே? அண்ணன் சொல்வதை எல்லாம் மொக்கு தம்பிகள் நம்பலாம். எல்லாரும் நம்ப தேவையில்லை. நீங்கள் ஏலவே என்னை 200 உபி என பல இடங்களில் எழுதிவிட்டீர்களே. எனக்கு ஒரு நற்பெயர் மீதும் ஆர்வம் இல்லை. அப்படி புற இருக்கோ இல்லையோ இ டோண்ட் கேர். இருந்தாலும் - சீமான் முகத்திரையை கிழிக்காமல் அந்த பெயரை தக்கவைப்பதிலும் பார்க்க கெட்ட பெயரே மேல்🤣
    • 22 ம்திகதி இஸ்ரேல் தாக்குதலை தொடங்கும் என செய்திகள் கசிந்துள்ளது. ஈரானின் அணு ஆலைகள் தான் இஸ்ரேலுக்கு கண்ணுக்குள் குற்றிக்கொண்டு இருக்கிறது  நீண்ட நாட் களாக . தாக்குதல் இடமும் அவ்விடமாக  இருக்க நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு. ஆயுதங்களை அமெரிக்கா கட்டம் கட்டமாக அனுப்பி விட்டு ஈரானின் எண்ணையையும் களவாக பெற்று கொள்கிறது. (ஆதாரங்களை அமெரிக்க ஊடகங்களில் தேட வேண்டாம்)  
    • ஈவிம் மிசின் குள‌று ப‌டிக‌ள்😏.............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.