Jump to content

2014 ICC World Twenty20 துடுப்பாட்ட போட்டி………செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்


Recommended Posts

  • Replies 212
  • Created
  • Last Reply

1975029_636266683112175_877247460_n.jpg
 


பழைய பகையை இலங்கை தீர்த்துக்கொண்டது மிகவும் சந்தோசம். 2012 இல உண்மையாகவே மிகவும் கவலைப்பட்டேன்.

Link to comment
Share on other sites

இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இலங்கை: டக்வோர்த் -லூயிஸ் முறையில் 27 ஓட்டங்களால் வெற்றி

 

SL-won-183003_0_zps6a8934b0.jpg

ஐ.சி.சி.யின் 5 ஆவது இருபது-20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்குள் முதலாவதாக நுழைவது யார் என்பதை தீர்மானிக்கும் தீர்க்கமான அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி டக்வோர்த் லூயிஸ் முறையில் 27 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

ஐ.சி.சி.யின் 5 ஆவது இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடர் பங்களாதேஷில் நடைபெற்று வருகின்றது. 16 அணிகள் களமிங்கிய இத் தொடரின் இறுதியில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்திய பிரதான சுற்று இறுதிக்கட்டத்தை அண்மித்துள்ளது.
சுப்பர் 10 சுற்றில் 10 அணிகள் விளையாடின. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டு இருந்தது. பிரிவு 1 இல் இருந்து இலங்கை, தென்னாபிரிக்கா அணிகளும், பிரிவு 2 இல் இருந்து இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளும் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.

போட்டித் தொடரின் முதல் அரை இறுதி ஆட்டம் இன்று மிர்பூரில் இடம்பெற்றது. இதில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள்  மோதுதின.

இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும் மழையின் குறுக்கீடால் போட்டி பாதியில் இடைநிறுத்தப்பட்டது.
World-T20-semi-final_zpsdecab7b6.jpg
இப்போட்டியில் தினேஷ் சந்திமால் தானாக விலகி கொண்டதையடுத்து அணிக்கு தலைமை தாங்கிய லசித்த மாலிங்க நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.
அந்த வகையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய குசல் பெரேரா (26), டில்ஷான் (39) ஓரளவு கைகொடுத்தனர். மஹேல ஜயவர்தன (0), சங்ககரா (1) அதிர்ச்சியளித்தனர். திரிமனே (44) அரை சத வாய்ப்பை இழந்தார். ஏஞ்சலோ மெத்தியூஸ் 40 ஓட்டங்களுடனும் சீக்குகே பிரசன்ன 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.


இதனையடுத்து இலங்கை அணி 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 160 ஓட்டங்களை எடுத்தது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சில் சன்டோக்கி 2 விக்கெட்டுகளையும், ரசல் மற்றும் சேம்வேல் பத்ரி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 13.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 80 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது.

இதனால் இலங்கை டக்வொர்த் லூவிஸ் முறையில் வெற்றி பெற்றுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ஸ்மித் 17, கெயில் 3 ஓட்டங்கள் என மாலிங்கவின் பந்து வீச்சில் அரங்கு திரும்பினர்.

இதனையடுத்து களமிறங்கிய சயிமன்ஸ் 4, பிராவோ 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க சேம்வேல்ஸ் 18 ஓட்டங்களுடனும் சமி எவ்வித ஓட்டமும் பெறாது களத்தில் இருந்தனர்.

தொடர்ந்து மழைபெய்தால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டு பின்னர் டக்வொர்த் லூயிஸ் முறையில் இலங்கைக்கு வெற்றிக்கு வழங்கப்பட்டது.
இலங்கை அணியின் பந்து வீச்சில் மாலிங்க இரு விக்கெட்டுகளையும் குலசேகர மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக ஏஞ்சலோ மெத்தியூஸ் தெரிவு செய்யப்பட்டார்.

 

http://www.virakesari.lk/articles/2014/04/03/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-27-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D

Link to comment
Share on other sites

சிங்களத்தின் முண்ணனி வீரர்கள் மேற்கிந்திய வீரர்களின் பந்துகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து கொண்டிருக்கிறார்கள், தற்பொழுது 3 விக்கேட் இழப்புக்கு 58 ஓட்டங்களை சிங்களம் பெற்றிருக்கிறது.

 

வணக்கம் அண்ணா T 20 விளையாட்டு ஒட்டுமொத்தமாக வித்தியாசமான விளையாட்டு. மேற்கிந்தியர்கள் போனதடவை இலங்கையை வென்றது பிச்சின் தன்மை மாறியதால் தான்.

 

Link to comment
Share on other sites

சிங்களவன் ஆரம்பத்தில விட்டு விட்டு கடைசியில் வெளுத்தெறிவான்.

Link to comment
Share on other sites

மேற்கிந்தியத்தீவுகளைப் பழி தீர்த்த இலங்கை; T20 உலகக் கிண்ண இறுதிக்குள் நுழைந்தது!

Lasith%2520Malinga.jpg

 

பங்களாதேஷில் நடைபெற்று வரும் இருபதுக்கு20 உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டிகளின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் முன்னாள் சம்பியனான மேற்கிந்தியத்தீவுகளை 27 ஓட்டங்களினால் வெற்றி கொண்டு இலங்கை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. 

 

மீர்பூரில் இன்று வியாழக்கிழமை மாலை 07 மணிக்கு ஆரம்பித்த முதலாவது அரையிறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவரான லசித் மலிங்க முதலில் துடுப்பாடத் தீர்மானித்தார்.

 

அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி குசல் ஜனித் பெரேராவின்(26) அதிரடியான துடுப்பாட்டத்தோடு பரபரப்பாக ஆடியது. ஆனாலும், இடைநிலை விக்கட்டுக்கள் சடுதியாக வீழ்த்தப்பட்டதன் காரணமாக ஓட்ட வேகம் தடைப்பட்டது. எனினும், இறுதியில் லகிரு திரிமன்னே(44), அஞ்சலோ மத்தியூஸ்(40) ஆகியோரின் ஆட்டத்தின் உதவியோடு இலங்கை 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

 

161 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்கோடு பதிலாடிய மேற்கிந்தியத்தீவுகளின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் லசித் மலிங்கவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து திரும்பினர். பின்னர் ஆட வந்தவர்களும் சரியான ஓட்ட வேகத்தை தக்க வைத்துக் கொள்ள தடுமாறினர். அத்தோடு, இடைக்கிடை விக்கட்டுக்களும் இழக்கப்பட்டது.

 

இந்த நிலையில், ஒரு கட்டத்தில் 6 ஓவர்களில் 81 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றிபெறலாம் என்ற நிலை மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஏற்பட்டது. அப்போது மழை குறுக்கிட்டால் ஆட்டம் தடைப்பட்டது. இதனால், போட்டியின் முடிவு டர்க்வேர்த்-லூயிஸ் விதிகளின் படி தீர்மானிக்கப்பட்டது. அதன்பிரகாரம், இலங்கை அணி 27 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

 

இலங்கையில் 2012ஆம் ஆண்டு நடைபெற்ற இருபதுக்கு20 உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டிகளின் இறுதிப் போட்டியில் இலங்கையும், மேற்கிந்தியத்தீவுகளுமே மோதின. அதில், டெரன் சாமி தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் வெற்றி பெற்று கிண்ணத்தைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தற்போதைய உலகக் கிண்ணப் போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகளை இலங்கை பழிதீர்த்துள்ளது.

 

இதனிடையே, நாளை வெள்ளிக்கிழமை இரண்டாவது அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி, எதிர்வரும் 06ஆம் திகதி இலங்கை அணியோடு இறுதிப் போட்டியில் விளையாடும். 

http://kalapam.ca/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/

  •  

 

சிங்களவன் ஆரம்பத்தில விட்டு விட்டு கடைசியில் வெளுத்தெறிவான்.

 

 

2012 ல் மேற்கிந்தியத்தீவுகளிடம் சொந்த மண்ணில் வாங்கிக்கட்டியது உங்கள் கூற்றுக்கு முரணானது.

Link to comment
Share on other sites

இந்திய சுழலை சமாளிக்குமா தென் ஆப்ரிக்கா

மிர்புர்: ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் இன்று நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன.

வங்கதேசத்தில், 5வது ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. மிர்புரில் இன்று நடக்கும் இரண்டாவது அரையிறுதியில், இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன.

லீக் சுற்றில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஆஸ்திரேலியா அணிகளை வீழ்த்தி 100 சதவீத வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறிய உற்சாகத்தில் இந்திய அணி உள்ளது. முக்கியமான நேரத்தில் ‘ஆல்–ரவுண்டர்’ யுவராஜ் சிங் காயமடைந்திருப்பது பின்னடைவு. துவக்க வீரராக யாரை தேர்வு செய்வது என்ற குழப்பம் உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய அஜின்கியா ரகானேவுக்கு மீண்டும் லெவன் அணியில் இடம் கிடைக்கலாம். ‘பார்மின்றி’ தவிக்கும் ஷிகர் தவானின் இடம் சந்தேகம். காயம் காரணமாக யுவராஜ் நீக்கப்படும் பட்சத்தில், ரகானே, ஷிகர் தவானுக்கு இடம் கிடைக்கும்.

‘பார்மில்’ உள்ள விராத் கோஹ்லி (170 ரன்கள்), ரோகித் சர்மாவின் (147) ரன் வேட்டை இன்றும் தொடரலாம். ‘மிடில்–ஆர்டரில்’ கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜா அதிரடி காட்டினால் வலுவான இலக்கை பதிவு செய்யலாம்.

‘சுழலில்’ அமித் மிஸ்ரா (9 விக்.,), அஷ்வின் (7 விக்.,) நம்பிக்கை அளிக்கின்றனர். ரவிந்திர ஜடேஜா (5 விக்.,) ரன் வழங்குவதை கட்டுப்படுத்தி, விக்கெட் வீழ்த்த முயற்சித்தால் நல்லது. வேகப்பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் ஆறுதல் அளிக்கிறார். மீண்டும் முகமது ஷமி நீக்கப்பட்டு மோகித் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

ஸ்டைன் நம்பிக்கை:

லீக் சுற்றில் இலங்கையிடம் வீழ்ந்த தென் ஆப்ரிக்க அணி, நியூசிலாந்து, நெதர்லாந்து, இங்கிலாந்து அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. தென் ஆப்ரிக்க அணியின் பேட்டிங்கில் ஆம்லா (163 ரன்கள்), டுமினி (142), டிவிலியர்ஸ் (119) நம்பிக்கை அளிக்கின்றனர். குயின்டன் டி காக் எழுச்சி கண்டு சிறந்த துவக்கம் கொடுத்தால் நல்லது. கேப்டன் டுபிளசி, டேவிட் மில்லர், ஆல்பி மார்கல் அதிரடி காட்டினால் நல்ல ஸ்கோரை பெறலாம்.

வேகப்பந்துவீச்சில் ஸ்டைன் (9 விக்.,) அசத்துகிறார். இவருக்கு டிசாட்சொபே ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மார்னே மார்கல் முழு உடற்தகுதி பெற்றால் வேகப்பந்துவீச்சின் பலம் அதிகரிக்கும். ‘சுழலில்’ இம்ரான் தாகிர் மிரட்டுகிறார். இதுவரை 11 விக்கெட் கைப்பற்றிய இவர், இன்று இந்திய பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை தரலாம்.

பேட்டிங், பவுலிங்கில் சமபலபத்தில் உள்ள இரு அணிகள் மோத இருப்பதால், இன்றைய போட்டியின் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது.

இதுவரை இவ்விரு அணிகள்

சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில், இந்தியா–தென் ஆப்ரிக்கா அணிகள் இதுவரை 7 முறை மோதின. இதில் இந்தியா 5, தென் ஆப்ரிக்கா 2 போட்டியில் வெற்றி பெற்றன.

* ‘டுவென்டி–20’ உலக கோப்பை வரலாற்றில், இவ்விரு அணிகள் 4 முறை மோதின. இதில் இந்தியா 3, தென் ஆப்ரிக்கா ஒரு போட்டியில் வென்றன.

தோனியிடம் பாடம்

தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டுபிளசி கூறுகையில், ‘‘மூன்று ஆண்டுகளாக பிரிமியர் லீக் தொடரில், சென்னை அணிக்காக விளையாடிய போது, சிறந்த கேப்டனாக எப்படி செயல்படுவது என்பதை தோனியிடம் இருந்து கற்றுக் கொண்டேன். இவர் சிறந்த கேப்டன் என்பதை, இவரது சாதனைகள் உணர்த்தும். இந்திய அணிக்காக நிறைய வெற்றிகள் பெற்றுத் தந்துள்ளார். இருப்பினும் எனது கேப்டன் ‘ஸ்டைல்’, தோனியிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இத்தொடரில் தோல்வி அடையாத அணியாக வலம் வரும் இந்தியாவுக்கு எதிராக எளிதில் வெற்றி பெற முடியாது. லீக் சுற்றுப் போட்டிகளை சிட்டகாங்கில் விளையாடினோம்.

முதன்முறையாக மிர்புரில் விளையாட உள்ளோம். இந்திய அணி, லீக் போட்டிகளை தொடர்ந்து அரையிறுதி போட்டியையும் மிர்புரில் விளையாட இருப்பது சாதகம்,’’ என்றார்.

மழை வருமா

இன்று போட்டி நடக்கும் மிர்புரில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் மற்றும் இரவில் இடியுடன் கூடிய மழை வர 80 சதவீத வாய்ப்புள்ளது.

http://sports.dinamalar.com/2014/04/1396540360/ashwinmishraindia.html

Link to comment
Share on other sites

சிங்கங்களுடன் மோதப்போவது யார்? இந்தியா- தென்னாபிரிக்கா இன்று பலப்பரீட்சை

 

ஐ.சி.சி.யின் 5 ஆவது இருபதுக்கு -20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியுடன் மோதப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் தீர்க்கமான அரையிறுதிப் போட்டியில் இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
பங்களாதேஷில் இடம்பெற்று வரும் 5 ஆவது உலகக் கிண்ண இருபதுக்கு-20 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

சுப்பர் 10 லீக் சுற்றின் முடிவில், முதல் பிரிவில் இருந்து இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா, 2ஆவது பிரிவில் இருந்து இந்தியா, நடப்பு சம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் அரை இறுதிக்கு முன்னேறின.

முதலாவது அரை இறுதியில் இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதிய நிலையில், இந்த அரையிறுதி ஆட்டத்தில் மழை குறுக்கிட இலங்கை அணி டக்வேர்த் லூயிஸ் முறையில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவானது.

இந்நிலையில் இந்தியா மற்றுமு; தென்னாபிரிக்க அணிகள் மோதும் 2ஆவது அரை இறுதி ஆட்டம் இன்று மிர்பூர், தேசிய ஸ்டேடியத்தில் அடம்பெறவுள்ளது.

டோனி தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 4 லீக் ஆட்டத்திலும் வென்று அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது.

நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணி என்ற பெருமை இருந்தாலும், நொக் அவுட் சுற்றில் சிறிய தவறுக்கு கூட இடமில்லை என்பதை இந்திய வீரர்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

உலக கிண்ணப் போட்டித் தொடர்களில் தென்னாபிரிக்கா சாதித்ததில்லை என்பது இந்தியாவுக்கு சாதகமான அம்சம். பயிற்சியில் காயம் அடைந்த யுவராஜ் முழு உடல்தகுதியுடன் விளையாட தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கம் போல அஷ்வின், மிஷ்ரா, ஜடேஜா சுழல் கூட்டணி அசத்தும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ரோகித், கோலி, ரெய்னா, டோனி நல்ல தகுதியில் இருப்பதும் இந்திய அணிக்கு பலமே.
தென்னாபிரிக்கா, நியூசிலாந்து தொடர்களிலும், ஆசிய கிண்ணத் தொடரிலும் ஏமாற்றம் அளித்த இந்தியா, இருபதுக்கு -20 உலகக் கிண்ணத்தை 2ஆவது முறையாக வென்று இழந்த பெருமையை மீட்கும் முனைப்புடன் உள்ளது.

அதே சமயம், டுப்ளெஸ்சிஸ் தலைமையிலான தென்னாபிரிக்க அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் உத்வேகத்துடன் உள்ளது.

ஸ்டெய்ன் வேகமும், தாஹிர் சுழலும் இந்திய அணியின் துடுப்பாட்டக்காரர்களுக்கு நெருக்கடி கொடுக்கும். அம்லா, டுமினி, டிவில்லியர்ஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் நிலையை ஸ்திரப்படுத்துவர். எல்லா வகையிலும் சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இன்றைய அரை இறுதி ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இது வரை இரு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற 7 இருபதுக்கு -20 போட்டிகளில் இந்திய அணி 5 போட்டிகளிலும் அதன்னாபிரிக்கா 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

இதேவேளை, உலகக் கிண்ண இருபதுக்கு - 20 போட்டிகளில் இரு அணிகளும் 4 முறை மோதியுள்ளன. இதில் இந்திய அணி 3 வெற்றிகளை பெற்றுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் இறுதிப் போடடியில் இலங்கை அணியுடன் மோதப்போவது யார் என்பதை அனைத்து ரசிகர்களும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

 

http://www.virakesari.lk/articles/2014/04/04/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அணி வென்றால் சிங்களவன் அரசியல் வியாபாரம் ஆக்கி விடுவான். கிரிக்கெட் ஐ பொறுத்தவரை மிக திறமையான உலக தர வீரர்களை இலங்கை கொண்டுள்ளது. ஜெயவர்த்தனா ஒரு சிறந்த நடத்துனரும் துடுப்பாட்ட வீரரும் ஆவார். பல இளம் ஆங்கிலேயே பிள்ளைகள் இவரை பின் பற்றியே கிரிக்கெட் பழகுகிறார்கள். எனது மகன் கூட. இந்தியா ஸ்ரீ லங்கா இறுதி போட்டிக்கு வந்தால், எனது ஆதரவு ஸ்ரீ லங்காவுக்குதான். ஆட்டை அறுத்தவனை விட பிடிச்சு கொடுத்தவன் மோசம்.

என்ன இருந்தாலும் கிரிக்கெட் வெல்ல வேண்டும்

Link to comment
Share on other sites

சங்கா, மஹேல கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்பது இறைவனின் விருப்பம்: தோல்வி குறித்து டெரன் சமி

 

5ஆவது இருபது-20 உலக கிண்ணத்தை இலங்கை அணியின் சரித்திர நாயகர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் வெற்றி கொள்ள வேண்டும் என எல்லாம் வல்ல இறைவன் நினைக்கிறார். எனவே தான் இறைவன் எமக்கெதிரான போட்டியில் அவர்களை வெற்றி கொள்ள செய்து இறுதிப்போட்டிக்கு தெரிவாக்கியுள்ளார் என மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் டெரன் சமி தெரிவித்துள்ளார்.

 

almighty-wants-sangakkara-mahela-to-win-
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இருபது-20 தொடரின் நேற்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் இலங்கை அணி டக்வோர்த் லூயிஸ் முறையில் 27 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இந்த வெற்றியினையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் டெரன் சமி கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இலங்கை அணி இம்முறை கிண்ணத்தை வெல்வதற்கு எல்லாம்வல்ல இறைவன் அருள்புரிந்துள்ளார். ஏனெனில் இருபதுக்கு -20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ள கிரிக்கெட்டின் இரண்டு சரித்திர நாயகர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் வெற்றி கிண்ணத்துடன் ஓய்வு பெற வேண்டும் என்பது கடவுளின் விருப்பம். அதுவே அவர்களை இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

இலங்கை அணி சிறப்பாக செயற்பட்டு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நாம் ஏமாற்ற மடைந்தாலும் எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள இருபதுக்கு-20 உலகக் கிண்ணத்தை கைப்பற்ற மீண்டும் புத்துயிர் பெறுவோம்.

மேலும் இறுதிப்போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் அதேவேளை ஏனைய மூன்று அணிகளுக்கும் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இத்தொடருடன் ஓய்வு பெறப்போகும் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்தன ஆகியோருக்கு இது ஒரு சர்வதேச நிகழ்வாக அமையும் என்றார்.

என் வாழ்க்கையில் இவ்வாறான பனிமழையை பார்த்ததே இல்லை. போட்டியின் இடைநடுவில் ரசிகர்கள்  எம்மீது கற்களை  வீசுகின்றனர் என்றே நான் நினைத்தேன் என நகைச்சுவையாகவும் அவர் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/articles/2014/04/04/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81

 

Link to comment
Share on other sites

ஒருநாள், இருபது-20 அணித் தலைமையிலிருந்து ஹபீஸ் ஓய்வு

இருபது 20 உலக கிண்ணத் தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று பாகிஸ்தான் அணித்தலைவர் முகமது ஹபீஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இருபது 20 உலக கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி சூப்பர் 10 சுற்றுடன் வெளியேற்றப்பட்டது.
அதிலும் இறுதி லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக வெறும் 82 ஓட்டங்களில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது.

இருபது 20 உலக கிண்ண வரலாற்றில் பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை பறிகொடுத்தது இதுவே முதல் முறையாகும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நிர்வாகிகளை நேற்று சந்தித்து பேசிய அவர் 20 ஓவர் கிரிக்கெட்டுக்கான அணித்தலைவர் மற்றும் ஒரு நாள் போட்டி துணைத்தலைவர் பதவி ஆகியவற்றில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

எந்த அணித் தலைவரின் கீழும் தொடர்ந்து விளையாட தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் அணிக்கு, அடுத்த இருபது-20 ஓவர் போட்டி 6 மாதங்கள் கழித்து வருவதால் இருபது-20  அணியின் புதிய அணித்தலைவரை நியமிப்பதில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அவசரம் காட்டாது என்று தெரிகிறது.

இதற்கிடையே, ஆசிய கிண்ணம் மற்றும் இருபது-20  உலக கிண்ண போட்டிக்கு மாத்திரம்  பாகிஸ்தானின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட மொயின் கான், அந்த பொறுப்பில் தொடருவார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கூறியுள்ளது.

 

http://www.virakesari.lk/articles/2014/04/04/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-20-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81

Link to comment
Share on other sites

உலக கோப்பை டுவென்டி-20 கிரிக்கெட்: இறுதிபோட்டிக்கு இந்தியா தகுதி

 

 

மிர்புர்: உலக கோப்பை டுவென்டி-20 கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் களமிறங்கியது. தென் ஆப்ரிக்கா அணி 20 ஓவரில் 172 ரன்கள் எடுத்தது. பிளஸ்சிஸ் 58 ரன்கள் எடுத்தார். இதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.விராத் கோலி ஆட்டமிழக்காமல் 72 ரன் எடுத்தார். ஞாயிறன்று நடக்கும் இறுதி போட்டியில் இலங்கையுடன் இந்தியா மோதுகிறது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=948131

Link to comment
Share on other sites

இறுதிபோட்டி 6 ஏப்ரல்  15.௦௦  ஐரோப்பிய  நேரம்.

 

ஸ்ரீலங்கா  எதிர்  இந்தியா

 

இந்த நாளில் வானிலை அல்லது வேறு எதாவது காரணங்களால் போட்டி தொடர்ந்து நடைபெறமுடியாமல் போனால் 7 ம் திகதி போட்டியை தொடர்வதுக்கு அந்த நாளும் ஒதுக்கபட்டு இருக்கு.

 

Final - India v Sri Lanka (Reserve Day 7th April)
Shere Bangla National Stadium, Mirpur

 

http://www.espncricinfo.com/world-t20/content/series/628368.html?template=fixtures

Link to comment
Share on other sites

இரண்டு அணிகளில் எதுக்கு ஆதரவு தரலாம்? :huh:

 

ஒரேயடியாக மழை பெய்து போட்டி நிண்டுபோனால் நல்லம்.. :wub:  :icon_idea:


ஓ.. அப்ப ஏழாம் திகதிக்கும் பழை வேணும்..  :huh:

Link to comment
Share on other sites

மகிந்தா அல்லது சோனியாதான் . :icon_mrgreen:

திகதியை பாருங்கோ . :huh: .

அரசியலில் மட்டும் இல்லை ஸ்போட்சிலும் கணிப்பு தப்பாது . :icon_idea:

Link to comment
Share on other sites

உலக T20 கிண்ணம் 2014: அதிரடிகள், ஆச்சரியங்கள், அசத்தல்கள்... இப்போது அரையிறுதிகள்
வியாழக்கிழமை, 03 ஏப்ரல் 2014

tmsp11_zpsaf095b26.jpg

 

32 போட்டிகள் எவ்வாறு இத்தனை விரைவாகப் பறந்து முடிந்தன என்று யோசித்து முடிக்க முதலே, அரையிறுதிப் போட்டிகள் வந்துவிட்டன.

16 அணிகளோடு ஆரம்பித்த இந்த 20 ஓவர்கள் பரபர யுத்தத்தில் பலவான் அணிகள், அந்தந்தக் கணங்களின் பலமான தருணங்களை சாதகமாகப் பயன்படுத்திய 4 முக்கிய அணிகள் இப்போது அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன.

 

பங்களாதேஷ் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான தகுதிகாண் போட்டியுடன் ஆரம்பித்த முதல் கட்டத்தின் கடைசிப் போட்டி தந்த விறுவிறுப்பும் நெதர்லாந்து அணி அடித்த நெருப்படியும் அடுத்த சுற்றின் சரவெடி போட்டிகளுக்கு கட்டியம் கூறுவதாக அமைந்தது.

ஐந்து, ஐந்து அணிகளாக இரு பிரிவுகளிலும் விளையாடிய 10 அணிகளுமே தங்கள் Super Ten தெரிவுகளை நியாயப்படுத்தி ஒவ்வொரு போட்டியையுமே உயிராய்க் கொண்டு விளையாடியிருந்தன.

 

ஒரு போட்டியில் தோற்றாலும் அரையிறுதி இடம் ஊசலாடும் என்பதால் மிகக் கவனமாக விளையாடிய அணிகள் நான்கு, கஷ்டமான கண்டம் தாண்டி அரையிறுதிக் கட்டங்களுக்கு வந்துள்ளன.
பெரிதாய் எதிர்பார்த்த, ஆனால் எதிர்பார்த்த 'பெரிய' அளவுக்கு சோபிக்காத அணிகள் மூட்டை, முடிச்சுக்களோடு பயணம் தொடங்கியுள்ளன.

முன்னைய எனது விரிவான அலசலில் அதிக வாய்ப்புள்ள அணிகளில் நான் குறிப்பிட்ட ஒரேயொரு அணி எல்லோரையும் ஏமாற்றி அதிர்ச்சித் தோல்விகளோடு வெளியேறியுள்ளது. அது அவுஸ்திரேலியா.

 

அவுஸ்திரேலியா பற்றி, "இம்முறை உலக Twenty 20 கிண்ணம் வென்றெடுக்க அதிக வாய்ப்புள்ள இரு அணிகளில் மற்றையது. இதுவரை வெல்லாத ஒரு கிண்ணம் என்பதுவும், Twenty 20 போட்டிகளில் அவுஸ்திரேலியா தரப்படுத்தல்களிலும் கீழே கிடப்பதாலும் உத்வேகத்தோடு அரையிறுதியில் நிச்சயம் இடம்பிடிக்கும்” என்று குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால், பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இரு மிக நெருக்கமான தோல்விகளும், இந்தியாவுக்கு எதிராக மிக மோசமாக விளையாடியதும் வாய்ப்புள்ள அணியாக இருந்த அணியை ஐந்தாவது தடவையாகவும் வெறும் கையோடே அனுப்பிவைத்து விட்டது.

tmsp2_zps8b832443.jpg

 

இறுதியாக இடம்பெற்ற போட்டி வரை அரையிறுதி வாய்ப்பைத் தன் வசம் வைத்திருந்த பாகிஸ்தான், இவ்வணி பற்றி எலோருமே வைத்துள்ள அபிப்பிராயம் போலவே, எந்த நேரத்தில் எப்படி விளையாடும் என்பதை ஊகிக்க முடியாதவாறே மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 82 ஓட்டங்களுக்கு சுருண்டு வெளியேறியது.

இதற்கு முன்னர் நடைபெற்ற நான்கு உலக T20 போட்டிகளினதும் அரையிறுதிகளில் இடம்பிடித்த பாகிஸ்தான் இம்முறை வெளியே.

"ஒருநாள் பார்த்தால் உலகின் மிகச் சிறந்த Twenty 20 அணி. இன்னொரு நாள் அதே வீரர்கள் இருந்தாலும் நம்ம ஊரில் விளையாடும் பையன்களின் சிறு அணியிடம் கூட தோற்கும் அளவுக்கு மோசமாக விளையாடுவார்கள். இது தான் பாகிஸ்தானின் மாற்ற முடியாத இயல்பு. இந்த அணியைப் பார்க்கையில் இறுதிவரை பயணிக்கும் என்று சொல்லத் தோன்றினாலும் ஏதோ ஒன்று தடுக்கிறது" என்று பாகிஸ்தான் பற்றி எனது முன்னைய அலசலில் குறிப்பிட்டிருந்தேன்.

சொன்னது போலவே சொதப்பியது முக்கிய கணங்களில் பாகிஸ்தான்.

 

மற்றைய பிரிவில் குறிப்பிடத்தக்க, பலபேர் எதிர்பார்த்த அணியாக விளங்கிய நியூஸிலாந்து பற்றி, "இதுவரை வெல்லாத ஒரு கிண்ணம் என்பதுவும், Twenty 20 போட்டிகளில் அவுஸ்திரேலியா தரப்படுத்தல்களிலும் கீழே கிடப்பதாலும் உத்வேகத்தோடு அரையிறுதியில் நிச்சயம் இடம்பிடிக்கும். பெயர்களைத் தாண்டி பெறுபேறுகள் பேசுவதே நியூஸிலாந்துக்கு பெரிய உதவியாகும்" என்று குறிப்பிட்டிருந்தேன்.

tmsp7_zpsec29cd3b.jpg

டேல் ஸ்டெய்ன் இறுதி ஓவரில் தட்டிப்பறித்த வெற்றியும் இலங்கை அணியின் ரங்கன ஹேரத் சுழற்றித் தள்ளிய போட்டியும் இந்த அபாயகரமான அணியை அம்போ ஆக்கிவிட்டது. அரையிறுதி உறுதி என்று ஆரம்பம் முதலே சொல்லி வைத்த மூன்று அணிகளோடு தென் ஆபிரிக்காவும் சேர்ந்துள்ளது.

பிரிவு 1இலிருந்து இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா ஆகிய அணிகளும், பிரிவு 2இலிருந்து இந்தியா மற்றும் நடப்புச் சம்பியன் மேற்கிந்தியத் தீவுகளும் அரையிறுதிக்குத் தெரிவாகியுள்ளன.

 

இதுவரைக்கும் நடந்த நான்கு உலக Twenty 20 தொடர்களிலுமே நான்கு சம்பியன்கள்.

ஏற்கெனவே கிண்ணம் வென்றுள்ள இரு அணிகளோடு இதுவரை கிண்ணம் வெல்லாத இலங்கையும் தென் ஆபிரிக்காவும்.

கடந்த இரு வாரங்களாக நடந்த போட்டிகள், பெறுபேறுகள், வீரர்களின் விளையாட்டுக்களை வைத்துப் பார்க்கும்போது சுழல் பந்துவீச்சாளர்களும் அதிவேகமாக அடித்தாடக் கூடிய துடுப்பாட்ட வீரர்களும் கிண்ணம் யாருக்கு என்பதை இறுதியாகத் தீர்மானிப்பார்கள் என்று தோன்றுகிறது.

-------

முதல் சுற்றின் 12 தகுதிகாண் போட்டிகளுக்குப் பிறகு இரு பிரிவுகளாக நடந்த 20 Super 10 போட்டிகளில் தான் எத்தனை விறுவிறுப்பு. எத்தனை பேரை மாரடைப்பு வரை கொண்டுபோயிருக்குமோ?

7 போட்டிகள் இறுதி ஓவரில் முடிந்தன.

இன்னும் 3 போட்டிகள் 18ஆவது ஓவரில் இன்னும் பதற்றமாக முடிந்தன.

ஆனால், இவை இந்தப் போட்டித்தொடரை நெருக்கமான ஒரு தொடராகக் காட்டினால் போட்டித் தொடரின் அத்தனை போட்டிகளையும் தொடர்ந்து அவதானித்தவர்கள் நகைப்பார்கள். காரணம், சிலபோட்டிகளில் சில அணிகள், அவற்றில் சில 'பெரிய' அணிகளும் கூட, நூறு ஓட்டங்களுக்குள்ளேயே சில்லறை ஓட்டங்களுக்குள் சுருண்டு போயிருந்தன.

tmsp5_zpseb621446.jpg

தகுதிகாண் சுற்றில் அயர்லாந்து, சிம்பாப்வே அணிகளையே தாண்டி உள் வந்த நெதர்லாந்து, இலங்கை அணியிடம் 39 ஓட்டங்கள் என்ற சர்வதேச Twenty 20 போட்டிகளின் குறைந்த ஓட்ட எண்ணிக்கைக்கு சுருண்டது.

பின்னர், நியூஸிலாந்து வாழ்வா சாவா என்ற நிலையில் இலங்கையை சந்தித்த முக்கிய போட்டியில் 60 ஓட்டங்களுக்கு உருட்டப்பட்டது.

இந்தியாவுக்கு எதிராக அவுஸ்திரேலியா 86.

இதை விட அதிர்ச்சியாக நெதர்லாந்து அணியினால் இங்கிலாந்து 88 ஓட்டங்களுக்கு மடக்கப்பட்டு மிகப்பெரிய அவமானத்தோடு நாடு திரும்பியது தான் இத்தொடர் பற்றி இனி வரும் காலத்திலும் ஞாபக அடையாளமாக இருக்கப்போகிறது.

இறுதியாக பாகிஸ்தானின் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 82 ஓட்ட சரணடைவு.

இந்திய அணி

tmsp3_zpsaec0b4f5.jpg

இத்தொடர் ஆரம்பிக்கும் நேரம் தடுமாறக்கூடிய அணியென்று கருதப்பட்ட இந்தியா, அனைத்துப் போட்டிகளையும் வென்று அசத்தல் அணியாக நிற்கிறது. (ஆனால் உலக T20 வரலாறின் படி, முதல் சுற்றில் அனைத்துப் போட்டிகளையும் வென்று அரையிறுதிகளுக்குள் நுழையும் எந்த அணியும் இதுவரை கிண்ணம் வென்றதில்லை... உதாரணம், இலங்கை 2009, தென் ஆபிரிக்கா 2009, அவுஸ்திரேலியா 2010, அவுஸ்திரேலியா 2012. தோனி தலைமை தாங்கும் இந்தியா, வரலாறுகளை மாற்றும் அணி தான்... இம்முறை?)

ஏனைய மூன்று அரையிறுதி அணிகளும் தலா 3 போட்டிகளை வென்றுள்ளன.

இந்த நான்கு அணிகளிலும் உள்ள முக்கிய பலம் இவ்வணிகளின் சுழல் பந்துவீச்சாளர்கள் தான்.

இந்திய, மேற்கிந்தியத் தீவுகளின் அணித்தலைவர்கள் உறுதியாகத் தெரிய, தென் ஆபிரிக்காவின் பஃப் டூ ப்ளேசிஸ் ஒரு போட்டித் தடைக்குள்ளானார்.

அவருக்குப் பதிலாகத் தலைமை தாங்கிய டீ வில்லியர்ஸ் கலக்கியிருந்தார்.

இலங்கை அணியின் தலைவர் சந்திமால் துடுப்பாட்டத்தில் தடுமாறும் அதேவேளை, ஒரு போட்டித் தடை லசித் மாலிங்கவை திடீர் - பெயரளவுத் தலைவராக மாற்றியிருந்தது. (ஆனால் இறுதியாக நடந்த போட்டியில் மஹேல ஜெயவர்த்தன தான் ஆடுகளத்தில் தலைவராக செயற்பட்டார் என்பது ஒன்றும் மூடுமந்திரமில்லை).

இதே நிலை தான் அரையிறுதியிலும் நடக்கப்போகிறதா என்று ஆர்வத்துடன் அனைவரும் எதிர்பார்த்திருக்க, அப்படி நடப்பது இலங்கை அணியின் நன்மைக்கே என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.

 

சிலவேளைகளில் விடயத்தை இலகுவாக்கவும் எதிர்காலத்துக்கான நிரந்தர மாற்றமாகவும் இலங்கை அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கு இப்போது தலைமை தாங்கும் மத்தியூசை இன்று (முதல்) தலைவராக மாற்றினாலும் ஆச்சரியமில்லை.

இந்தவேளையில், இலங்கையில் 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற உலக T20 தொடரிலும் இதேபோல சாமர்த்தியமாக இலங்கை அணி தலைமைத்துவ மாற்றங்களை மஹேல - சங்கக்காரவுக்கு இடையில் பரிமாற்றியது உங்களுக்கும் நினைவிருக்கலாம்.

இவை ஒரு பக்கம் இருக்க, இந்தத் தொடரில் இதுவரை எந்த அணியும் 200 ஓட்டங்களைப் பெறவில்லை. எனினும் 6 தரம் 180 ஓட்டங்கள் தாண்டப்பட்டன.

இந்த ஓட்ட எண்ணிக்கைகளுக்குள் அடிக்கப்பட்ட மொத்த சிக்ஸர்கள் இருநூறை விட அதிகம்.

கோளி, சமி, நெதர்லாந்தின் மைபேர்க், மக்ஸ்வெல், ஹேல்ஸ், அம்லா, டீ வில்லியர்ஸ், ஷெசாட் என்று ஓட்டக் குவிப்பாளர்கள் மத்தியில் மேற்கிந்தியத்தீவுகளின் தலைவர் டரன் சமி உச்ச பட்ச தன்னம்பிக்கையுடன் அடித்தாடக்கூடிய ஆபத்தான துடுப்பாட்ட வீரராகத் தெரிகிறார்.

tmsp1_zpsb122ff64.jpg

சமி போன்ற சில வீரர்கள் ஒரு சில பந்துகளில் போட்டிகளின் போக்கை மாற்றிக் காட்டிய அதிரடி வீரர்கள்.

மறுபக்கம் பந்துவீச்சாளர்களில் தகுதிகாண் தொடர் முதல் கலக்கி வந்த நெதர்லாந்தின் மிதவேகப் பந்துவீச்சாளர்களான அஹ்சான் மாலிக், குட்டன், பங்களாதேஷின் அல்அமின் தவிர, தனித்துப் பிரகாசித்து விக்கெட்டுக்களையும் சரித்து, எதிரணிகளைத் தடுமாறவைத்த டேல் ஸ்டெய்ன் மற்றும் நுவான் குலசேகர ஆகியோர் மட்டுமே பங்களாதேஷின் ஆடுகளங்களில் பிரகாசித்த வேக, மிதவேகப் பந்துவீச்சாளர்கள்.

இந்தியாவின் புவனேஷ்குமார் மிகக் குறைவான ஓட்டங்களையே கொடுத்த சிக்கனமான இன்னொரு வேகப்பந்துவீச்சாளர்.

மற்றும்படி இத்தொடர் முழுவதும் சுழல்பந்து வீச்சாளர்களின் ராஜாங்கம் தான்...

அதிலும் இரட்டையராகவே கலக்கிய வீரர்கள் அதிகம்...

இந்தியாவுக்கு அஷ்வின், மிஷ்ரா - இருவரும் நான்கு போட்டிகளில் தலா இவ்விரு போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதுகளை வென்றுள்ளார்கள். போதாக்குறைக்கு ஜடேஜா & ரெய்னா.

 

இலங்கைக்கு ஹேரத் & சச்சித்ர சேனநாயக்க - மென்டிஸ் கிடைத்த வாய்ப்புக்களைக் கோட்டைவிட்டு இடத்தை நிரந்தரமாக இழந்துள்ளார்.

டில்ஷான் இத்தொடரில் இதுவரை பந்துவீச அழைக்கப்படவில்லை.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு நரைன் & பத்ரீ. இதில் எதிர்பார்த்ததற்கு மாறாக பத்ரீ தான் நரைனை விட அதிக விக்கெட்டுக்களை எடுத்திருக்கிறார் என்பது இன்னொரு ஆச்சரியம். மேலதிகமாக சாமுவேல்சும் இருப்பது மேற்கிந்தியத் தீவுகளை மேலும் பலப்படுத்துகிறது.

தென் ஆபிரிக்காவுக்கு இவ்வாறு இரட்டையர் என்று இல்லாவிட்டாலும் இம்ரான் தாகிர் தான் இப்போது அதிக விக்கெட்டுக்களை எடுத்துள்ளார். (தகுதிகாண் சுற்று இல்லாமல்). தேவையான பொழுதில் டுமினியும் சுழற்றக் கூடியவர்.

எனவே நான்கு அணிகளுமே சுழல் வியூகம் வகுக்கத் தேவையான இரட்டைச் சுழலை வைத்துள்ளன.

ஆனால், அடித்தாடும் வீரர்களின் அசகாய பலத்தில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இந்தியா மற்ற இரு அணிகளையும் விஞ்சி மேலோங்கி நிற்பதாகப்படுகிறது.

இந்திய அணியின் துடுப்பாட்டமும் பலமாகவும் தொடர்ச்சியான ஓட்டக் குவிப்பில் இருந்துவந்தாலும் ஆரம்பத் துடுப்பாட்டம் தடுமாறுகிறது.

கோளி, ரெய்னா, ரோஹித் ஷர்மா ஆகியோரின் தொடர் பெறுபேறுகளுடன் யுவராஜ் சிங் போர்முக்குத் திரும்பியிருப்பது இந்தியாவின் பெரும் பலம்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கோ சராசரியாக ஒன்று முதல் ஏழு வரை துடுப்பாட்ட வரிசை உறுதி. அதிலும் தலைவர் சமியின் இறுதிக்கட்ட அதிரடி அவர்களின் துரும்புச் சீட்டு.

தென் ஆபிரிக்காவின் டீ வில்லியர்சின் சாகச அதிரடியும் தனித்துப் போட்டியை மாற்றும் திறனும் அனைவரும் அறிந்த விடயமாக இருந்தாலும், டுமினி, அம்லா போன்ற தரமான துடுப்பாட்ட வீரர்கள் இருந்தாலும் கூட அரையிறுதிகள் போன்ற முக்கிய கணங்களில் அவர்கள் சொதப்புவதும், சுழல் பந்துவீச்சுக்கள் அவர்களை சோதிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

இலங்கை அணி
மீண்டும் ஓர் அரையிறுதி. கடந்த முறை இதே போன்றதொரு இக்கட்டான தருணத்தில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியைக் கடக்க ஹேரத்தை துரும்புச் சீட்டாக மஹேல பயன்படுத்தியிருந்தார். இம்முறை மேற்கிந்தியத் தீவுகளிடம் ஹேரத் மந்திரம் எடுபடுமா? இலங்கையின் துடுப்பாட்டம் நம்பகமான தொடர்ச்சியானதாக இல்லை.

அதிரடியாக ஆடும் குசல் ஜனித் பெரேராவுக்கு இரண்டு போட்டிகளில் தவறான ஆட்டமிழப்பு வழங்கப்பட்ட துரதிர்ஷ்டம். (நல்ல காலம் அரையிறுதியில் அலீம் டார் நடுவரில்லை).

டில்ஷான், மஹேல, சங்கா ஆகிய மூன்று சிரேஷ்ட வீரர்களின் ஓட்டக் குவிப்பிலும், மத்தியூஸ், திசர பெரேரா ஆகியோரின் இறுதிக்கட்ட அதிரடியிலும் வெகுவாகத் தங்கியுள்ளது.

சந்திமால் தொடர்ந்து ஓய்விலேயே இருக்க, தொடர்ந்து ஓட்டங்கள் பெற்றுவரும் திரிமன்னே அணியில் இருப்பது நல்லது என்று தோன்றுகிறது.

இதுவரை இலங்கையும் மேற்கிந்தியத் தீவுகளும் விளையாடியுள்ள 5 Twenty 20 சர்வதேசப் போட்டிகளில் முதல் நான்கில் இலங்கை அணி வென்றது. ஆனால் மிக முக்கியமான 2012 இறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வென்றிருந்தது.

இம்முறை தொடர் ஆரம்பிக்கும் முன்னர் இடம்பெற்ற பயிற்சிப் போட்டியிலும் மேற்கிந்தியத் தீவுகளே வென்றுள்ளது.

எனவே இது இன்றைய முதலாவது அரையிறுதியிலும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு உளவியல் ரீதியில் அதிக வாய்ப்பை இலங்கையை விட மேலோங்கி நிற்கும் உற்சாகத்தை வழங்கும்.

இலங்கை அணிக்கு இறுதிப் போட்டிக்கு செல்வதோடு, T20 தரப்படுத்தலில் இந்தியாவை முந்த ஒரு வாய்ப்பையும் இன்றைய வெற்றி வழங்கும்.

இவையெல்லாவற்றையும் விட பங்களாதேஷின் பனி பல போட்டிகளிலும் இரண்டாவதாகப் பந்துவீசும் அணிகளுக்கு சிரமம் கொடுத்ததைக் கண்டிருக்கிறோம்.

எனவே, இனி வரும் முக்கியமான இந்த மூன்று போட்டிகளுக்கும் நாணய சுழற்சியும் மிக முக்கியமான ஒரு காரணியாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

tmsp8_zpsd43d7966.jpg

 

தென் ஆபிரிக்காவின் துடுப்பாட்ட சவாலை இந்தியா நாளை தன் சுழல் வித்தை மூலம் மிக இலகுவாக முறியடிக்கும் என்று பெரும்பாலோனோர் நம்பியிருக்க, தென் ஆபிரிக்காவின் லெக் ஸ்பின் பந்துவீசும் தாஹீரும், அதிவேகப் பந்துவீசும் ஸ்டெய்ன் மற்றும் அவர்களது அசராத அதிரடி துடுப்பாட்டமும், மிக முக்கியமாகக் களத்தடுப்பும் இந்தியாவை தென் ஆபிரிக்கா அதிர்ச்சியுடன் வெற்றிகொள்ள உதவும் என்று சிலராவது நம்புகிறார்கள்.

இதுவரை வென்ற அணிகள் இரண்டில் ஒன்றா அல்லது புதிய வெற்றியாளர்களா என்பதை இன்றும் நாளையும் நடக்கும் அரையிறுதிகள் சொல்லும்..

---இதுவரை நடந்த திருப்பங்கள் தாண்டி இனி இந்தப் போட்டிகள் கொண்டுவரப்போகின்ற த்ரில்லுக்காகக் காத்திருப்போம்.
----

மகளிர் உலக T20 போட்டிகள்

அவுஸ்திரேலிய - மேற்கிந்தியத்தீவுகள் மகளிர் முதலாவது போட்டியிலும், இங்கிலாந்து - தென் ஆபிரிக்கா இரண்டாவது போட்டியிலும் இதே நாட்களில் விளையாடவுள்ளன.

அவுஸ்திரேலிய மகளிரும் இங்கிலாந்து மகளிரும் உறுதியான அணிகளாகத் தெரிவதால், ஒரு மினி ஆஷஸ் இறுதிப்போட்டி மகளிர் பிரிவில் இடம்பெறலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/vilaiyattu-katturaikal/105602--t20-2014-.html

Link to comment
Share on other sites

நாளைக்கு நண்பர்களுடன் சேர்ந்து எனது வீட்டில் மாட்ச் பார்க்க ஏற்பாடு பண்ணியாச்சு . :icon_mrgreen:

ஒரு மனவருத்தம் காலையில் மாட்ச் என்பதால் முக்கிய விடயம் இருக்காது .சுட சுட அப்பம் ஏற்பாடு பண்ணியிருக்கு . :lol:

இலங்கை அணி வெல்ல வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

ம்ம் ஐந்தாவது தரமாவது சிறிலங்கா வெல்கின்றதா என பார்ப்போம். சொந்த மண்ணிலேயே  தோற்ற ஆட்கள்... பார்க்கலாம். 

 

 

Link to comment
Share on other sites

உலக T20 கிண்ண இறுதி: இலங்கை எதிர் இந்தியா; விரிவான அலசல்
சனிக்கிழமை, 05 ஏப்ரல் 2014

indiavssrilank_zps494ff23f.jpg

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு ஆனால் கிட்டத்தட்ட வெற்றிபெற்ற அணிகளாலே இலகுவாக வெல்லப்பட்ட இரண்டு அரையிறுதிகள் முடிந்து, புதிய வெற்றியாளர் யார் என்பதைத் தீர்மானிக்கும் இறுதி 40 ஓவர்களை ஞாயிறு இரவு தரப்போகிறது.

மீண்டும் ஓர் இலங்கை எதிர் இந்தியா போட்டி...

மீண்டும் ஓர் இறுதி...

dhonimalinga_zpscdcca33a.jpg
அதிலும் மீண்டும் 2011 (50 ஓவர்கள்) உலகக் கிண்ணத்தின் இறுதி ஆட்டத்தை ஞாபகப்படுத்தும் இன்னொரு இறுதிப்போட்டி.

டெஸ்ட் போட்டிகள் தவிர அண்மைக்காலத்தில் இவ்விரு அண்டை நாடுகளும் சந்தித்துக்கொண்ட அளவுக்கு வேறெந்த அணிகளும் அதிகளவில் விளையாடியதில்லை.

அதிலும் ஒருநாள் போட்டிகள், இனிமேல் இவ்விரு அணிகளும் சந்திக்கவே கூடாது என்னும் அளவுக்கு அத்தனை அதிகம். மொத்தமாக 144 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள்.

ஆனால், என்ன அதிசயமோ T20 போட்டிகள் மட்டும் இவ்விரு அணிகளும் ஐந்தே ஐந்து தடவைகள் தான் மோதியுள்ளன. அதிலே மூன்றில் இந்தியாவுக்கு வெற்றி, இரண்டில் இலங்கை வென்றுள்ளது.

 

 

ஆனால், நாளை நடைபெறவுள்ள இந்த ஆறாவது போட்டி அளவுக்கு முக்கியத்துவமான போட்டியில் இதுவரை இவ்விரு அணிகளும் விளையாடவில்லை.

இறுதியாக இவ்விரு அணிகளும் சந்தித்துக்கொண்ட T20 சர்வதேசப் போட்டி, ஆச்சரியப்படும் விதத்தில் கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்கு முன்பு 2012ஆம் ஆண்டு கண்டி, பல்லேகலையில் இடம்பெற்றது. இந்தியா அந்தப் போட்டியில் வெற்றி ஈட்டியிருந்தது.

kohliteam_zpsb371f4a7.jpg
IPL, Champions League என்று ஆண்டுக்கொருமுறை T20 உள்ளகப் போட்டிகள் நிரம்பி வழிவதால் T20 சர்வதேசப் போட்டிகளில் இந்தியா அதிகளவு அக்கறை காட்டுவதில்லை.

இதற்கு முன்னதாக 2010இல் மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெற்ற உலக T20 போட்டிகளின் பிரிவு ரீதியிலான போட்டியொன்றில் இந்தியாவை இலங்கை வென்றிருந்தது.

எனவே, உலக T20 போட்டியில் இப்போது தான் இரண்டாவது தடவையாக இவ்விரு அணிகளும் சந்திக்கின்றன.

அடிக்கடி T20 வகைப் போட்டிகளில் இவ்விரு அணிகளும் சந்தித்திராவிட்டாலும் கூட, இரு அணிகளினதும் ஒவ்வொரு வீரர் பற்றியும், அணிகளின் பலம், பலவீனம் பற்றியுமே இரு பக்கமும் கொஞ்சமேனும் சந்தேகம் இல்லாமல் தெரியும்.

இந்த 2014 உலக T20 கிண்ணம் ஆரம்பிக்க முன்னர் இலங்கை, இந்திய அணிகள் மோதிய பயிற்சி ஆட்டத்தில் இலங்கை வென்றிருந்தது.

1878894778_zps171950c3.jpg

ஆனாலும் இலங்கை அணி 2007ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ICC கிண்ணத்தின் இறுதிப் போட்டிக்குத் தெரிவாவதும் கிண்ணத்தை வெல்லாமல் தோற்பதும் (2007, 2011 உலகக் கிண்ணங்கள், 2009, 2012 உலக T20 கிண்ணங்கள் )தென் ஆபிரிக்காவின் அரையிறுதி வெளியேற்றம் போல வாடிக்கையான விஷயங்கள் ஆகியிருப்பதும், தோனியின் தலைமையிலான இந்திய அணி இதுவரை தாம் தெரிவான ICC கிண்ணங்களின் இறுதிப் போட்டிகள் எவற்றிலும் தோற்கவில்லை (2007 - உலக T20 , 2011 - உலகக் கிண்ணம்  2013 - சம்பியன்ஸ் கிண்ணம்) என்பதும், ஏனைய இரு ICC கிண்ணங்களின் நடப்புச் சம்பியனாகத் திகழும் இந்தியா, மூன்றாவது மகுடத்தையும் ஒரே நேரத்தில் தாங்கும் பெருமையைக் குறிவைப்பதும், நாளைய இறுதிப்போட்டியை மேலும் விசேடத்துவம் மிக்கதாக மாற்றுகின்றன.

அத்துடன், நாளை வெல்கின்ற அணிக்கு உலக T20 கிண்ணம் மட்டுமில்லாமல், சர்வதேச T20 தரப்படுத்தலின் முதலாமிடமும் கிடைக்கவுள்ளது.

இந்தத் தரப்படுத்தல் முதலிடத்துக்கான நெருக்கமான போட்டியானது உலகின் மிகச் சிறந்த T20 அணிகள் இரண்டுமே இறுதிப் போட்டிக்கு வந்திருப்பதை உறுதிப்படுத்தி நிற்கிறது.

----------------------

அரையிறுதி 1

WestIndies_zps7d1bb9d4.jpg

இலங்கை அணி இன்னொரு இறுதிப்போட்டிக்குச் செல்வதற்கு அசுர வேகத்தில் வென்று வந்த மேற்கிந்தியத் தீவுகள் என்ற தடையைத் தாண்டவேண்டி இருந்தது.

டரன் சமியின் அணியானது அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற அணிகளை வீழ்த்திய formஇல் எந்தவொரு அணியினாலும் அதை வீழ்த்த முடியுமா என்ற சந்தேகம் எல்லோருக்குமே இருந்தது.

நாணய சுழற்சியின் அதிர்ஷ்டமும் அங்கே தேவைப்பட்டது.

ஓட்டங்கள் பெறமுடியாத இக்கட்டான நிலையிலிருந்த சந்திமால் மீண்டும் ஒதுங்கிக்கொள்ள லசித் மாலிங்கவின் ராசி, நாணய சுழற்சியில் கைகொடுத்தது.

​இதேவேளை மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக மாலிங்க சரித்த இரு விக்கெட்டுக்களும் - லசித் மாலிங்கவை, உலக T20 போட்டிகளில் அதிக விக்கெட்டுக்கள் பெற்றிருந்த அஜ்மலின் சாதனையை முந்த வைத்துள்ளன.

Malinga22_zps9957c4ab.jpg

ஆனால், குசலின் ஆரம்ப அதிரடியைத் தொடர்ந்து இந்த உலக T20யுடன் ஓய்வுபெறவுள்ள இரு சிரேஷ்டர்களும் பூஜ்ஜியம் மற்றும் 1 என்று ஆட்டமிழக்க, தடுமாறிய இலங்கையை டில்ஷான், மத்தியூஸ் மற்றும் முக்கியமாக கிடைக்கும் வாய்ப்புக்களில் எல்லாம் அணிக்குள் தன்னை நிரந்தரமாக்கி வரும் லஹிரு திரிமான்னே ஆகியோரின் பெறுமதியான ஓட்ட சேர்ப்புக்கள் மூலம் இவ்வாடுகளத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சவால் விடும் ஓட்ட எண்ணிக்கையை எட்ட உதவியிருந்தன.

முன்னரே நான் எதிர்வு கூறியிருந்ததைப் போலவே மேற்கிந்தியத் தீவுகளின் சுழல்பந்து வீச்சு இரட்டையர்களும் மார்லன் சாமுவேல்சும் இலங்கையின் ஓட்ட வேகத்தை மட்டுப்படுத்தி இருந்தார்கள்.

 

எனினும், உபாதைகள் மற்றும் உறுதியின்மை காரணமாக வழமையாக விக்கெட்டுக்கள் எடுக்கின்ற மேற்கிந்திய மிதவேகப் பந்துவீச்சாளர்கள் சமி, பிராவோ, ஸ்மித் ஆகியோர் ஓர் ஓவரைத் தானும் வீசவில்லை.

மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாட்டம் ஆரம்பித்த முதல் இரு பந்துகளில் 10 ஓட்டங்கள், குலசேகரவின் முதல் ஓவரில் 17 ஓட்டங்கள். ஆனாலும் இதே வேகத்தைத் தொடர்ச்சியாகக் கொண்டு செல்ல முடியாமல் இலங்கை அணியின் பந்துவீச்சு கட்டிப்போட்டது.

கிறிஸ் கெயில், இலங்கை அணியுடன் எப்போதும் போலவே இம்முறையும் ஓட்டங்கள் பெறுவதில் திணறியிருந்தார்.

ஆடுகளத் தன்மையும் இந்தத் தொடரின் முன்னைய போட்டிகளின் முடிவுகளினதும் படி இலங்கை அணி, திசர பெரேராவுக்குப் பதிலாக சுழல்பந்து வீசும் சகலதுறை வீரர் சீக்குகே பிரசன்னாவை அணிக்குள்ளே எடுத்திருந்தது.

மாலிங்கவின் முதல் ஓவரிலேயே இரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களும் ஆட்டமிழக்க, சீக்குகே தனது முதல் பந்திலேயே விக்கெட் ஒன்றைப் பெற்றிருந்தார்.

கெயில், சாமுவேல்ஸ் ஆகியோரின் தடுமாற்றகரமான துடுப்பாட்டம், மேற்கிந்தியத் தீவுகளுக்குத் தந்த அழுத்தத்தை தனது அடிப்பிரயோகங்கள் மூலமாக ட்வெய்ன் பிராவோ மாற்றியமைக்க முற்பட, அவரது ஆட்டமிழப்போடு போட்டி மீண்டும் இலங்கையின் பக்கமாக மாறியது.

அந்தவேளையில் யாரும் எதிர்பாராத இயற்கையின் குறுக்கீடு...

 

ஆலங்கட்டி மழையும் அடை மழையும்


மழையின் குறுக்கீடு இல்லாவிட்டாலும் இலங்கை வென்றிருக்கக் கூடிய ஒரு நிலை தான்.

37 பந்துகளில் 81 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், இலங்கையின் துரும்புச் சீட்டுக்களான மாலிங்கவிடமும் சச்சித்ர சேனநாயக்கவிடமும் தலா இவ்விரு ஓவர்கள் இருந்ததானது மேற்கிந்தியத் தீவுகள் எப்படியும் சுருண்டிருக்கும் என்பதை உறுதியாக சொன்னது.

கொட்டும் மழை கோரத் தாண்டவம் ஆடி போட்டியை மழை விதியோடு முடித்து, இலங்கையை இறுதிப்போட்டிக்கு அனுப்பிவைத்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளின் அணித்தலைவர் சமி, "மஹேல, சங்கக்கார ஆகிய இரு பெரும் கனவான் கிரிக்கெட் வீரர்கள். தங்கள் இறுதி T20 போட்டியை கிண்ணத்தோடு நிறைவு செய்யவேண்டும் என்று இறைவன் விரும்புகிறார் போலும்" என்று தனது வழமையான விளையாட்டுக் கனவான் தன்மையுடன் தெரிவித்திருப்பது இலங்கைக்கு கிடைத்துள்ள மற்றொரு தகுந்த வாழ்த்தாகும்.

முன்பிருந்தே இலங்கை கடைப்பிடித்துவரும் ஆடுகளத் தன்மைகள், எதிரணியின் பலம் - பலவீனங்களுக்கான வியூகங்கள், அதேபோல் மழை வரலாம் என்று அனுமானித்து, மேற்கிந்தியத் தீவுகளின் ஓட்ட வேகத்தை மட்டுப்படுத்திய தந்திரம் ஆகியன இம்முறையும் இலங்கைக்குக் கை கொடுத்துள்ளன.

அண்மைக்காலமாக போட்டிகளை மிக சிறப்பாக முடித்து வைக்கின்ற ஆற்றல் பொருந்தியவராக (finisher) மாறிவரும் மத்தியூஸ், போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.
-------------------

அரையிறுதி 2

viratk_zpsa1286f4c.jpg

இலங்கைக்கு மத்தியூஸ் என்றால் இந்தியாவுக்கு கோளி...

இளைய இந்தியக் கட்டமைப்பிலிருந்து தேசிய அணிக்கு விளையாட ஆரம்பித்த காலம் முதல் கடந்த நான்கு வருடங்களாகவே அனேக தடவைகள் இந்தியாவுக்கு தனித்து நோன்று வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்துவரும், அதிலும் பெரிய இலக்குகளைத் துரத்தியடிப்பதில் கில்லாடியான கோளி இருக்கும்வரை எந்த அணியையும் இந்தியா பந்தாடிவிடும் போலத் தெரிகிறது.

நேற்றைய அரையிறுதி வெற்றியானது T20 சர்வதேசப் போட்டிகளில் இந்தியா தொடர்ச்சியாகப் பெற்ற 7ஆவது வெற்றி. இது இந்தியாவின் தொடர் வெற்றிகளில் பெரியது.

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக எந்தவொரு அணியும் இப்படியொரு பெரிய இலக்கைத் துரத்திப் பெற்றதில்லை.

கோளியே தனது மிகச் சிறந்த T20 சர்வதேச இன்னிங்ஸ் என்று நேற்றைய ஆட்டமிழக்காத 72ஐக் கூறுகிறார்.

Duplessi_zpsf0e18e0c.jpg

கொஞ்சம் விட்டால் 200 தாண்டக்கூடிய இலக்கைப் பெற்றுவிடும் பலம் வாய்ந்த தென் ஆபிரிக்காவிடம், நேற்று இத்தொடர் முழுதும் கலக்கிய மிஷ்ராவின் மாயாஜாலம் எடுபடவில்லை.

ஆனால், அஷ்வின் 3 முக்கிய விக்கெட்டுக்களை எடுத்து மடக்கிவிட்டார்.

அவுஸ்திரேலியாவை தன் 4 விக்கெட்டுக்கள் மூலம் மடக்கியவர், தென் ஆபிரிக்காவை சுழலுக்குள் சிக்க வைத்திருந்தார். இப்போது இத்தொடரில் பத்ரிக்கு அடுத்தபடியாக கூடுதல் விக்கெட்டுக்கள் பெற்றவர் அஷ்வின் தான்.

தென் ஆபிரிக்க அணியின் தலைவர் டூ ப்ளேசிஸ் மற்றும் டுமினி ஆகியோரின் பங்களிப்புடன் தென் ஆபிரிக்கா பெற்ற 172 ஸ்டெய்ன், தாஹிர் ஆகியோரின் பந்துவீச்சோடு இந்தியாவை வீழ்த்த போதுமாக இருக்கும் என்று அநேகர் நம்பியிருக்க, ரோஹித் ஷர்மா, ரஹானே (இலங்கையின் திரிமான்னே போல வாய்ப்புக்களை எல்லாம் வலுவாகப் பிடித்துக் கொள்கிறார்) ஆகியோரின் ஆரம்பத்தின் பின், முழுக்க முழுக்க கோளியின் கொண்டாட்டம் தான்.

திட்டமிட்டு தாக்கி ஓட்ட வேகத்தை கட்டுக்குள்ளே வைத்து இலக்கை அடைந்தார்.

ஓர் ஓட்டம் மட்டும் தேவைப்படும் நிலையில் அப்போது ஆடுகளம் வந்த இந்திய அணித்தலைவர் டோனி, தான் அந்த ஓட்டத்தைப் பெறாமல் கோளிக்கே அந்த பெருமையை வழங்கியது இன்னொரு மறக்க முடியாத அம்சம்.

எனவே, இந்தியா பழக்கமான இறுதிப்போட்டி ஒன்றுக்குள் வெற்றிநடை போடா, தென் ஆபிரிக்கா 90கள் முதல் தங்கள் வழக்கமான அரையிறுதியோடு வெறுங்கையுடன் வெளியேறுகிறது.

12 தடவைகளில் 10 தடவைகள் knock out போட்டிகளில் தோற்றுள்ள தென் ஆபிரிக்கா, இறுதியாக இவ்வாறான ஒரு ICC அரையிறுதி தாண்டியபோது கிண்ணம் வென்றது. அது 1998இல் அப்போதைய ICC Knock Out கிண்ணம்.

இப்போதைய தோல்வியானது தென் ஆபிரிக்க அணியுடன் ஒட்டிக்கொண்ட Chokers பட்டத்தைத் தொடர்ந்தே வைத்திருக்கும் அவமானச் சின்னம் ஆக்கியுள்ளது.

இந்தியா துரத்தியடித்த பெரிய இலக்குடன் இறுதிக்குள் செல்வதால், மிகுந்த நம்பிக்கை கிடைத்துள்ளது இலங்கையை விட.
----

இலங்கை எதிர் இந்தியா

181887_zpsfd1b22f4.jpg
உலகம் முழுதும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் ஒரு மோதல். சுழல் பந்துவீச்சுக்கு இடையிலான மோதல்.

அரையிறுதியில் சச்சித்திரவும் அஷ்வினும் பிரகாசித்தாலும் ஹேரத்தும் மிஷ்ராவும் சோடை போனார்கள். எனவே, மீண்டும் ஒரு சுவாரஸ்ய மோதல் காத்துள்ளது சுழல்களுக்கிடையில்.

மீண்டும் ஒரு மாலிங்க - கோளி மோதல்
அதிலும் இறுதிப் போட்டியிலும் மாலிங்கவே தலைவர் என்று உறுதியாகியுள்ள நிலையில், அண்மைக்காலமாக தனக்கெதிராக ஓங்கியுள்ள கோளியின் துடுப்பாட்டத்தை இம்முறை ஒடுக்க எப்படியாகிலும் பார்ப்பார்.

ஆனால், கோளி உலகின் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரராகத் தெரிகிறார். அவராகவே ஆட்டமிழந்தால் ஒழிய, அவரைத் தடுப்பது இலங்கைக்கு பெரும்பாடாகவே இருக்கும்.

இரு அணிகளின் துடுப்பாட்டப் பலமும் அனுபவமும் ஆழமும் நிறைந்தது.

ஆனால், இத்தொடரில் இலங்கையின் துடுப்பாட்டத்தை விட, இந்தியாவின் துடுப்பாட்டம் சற்று உறுதியாகத் தெரிகிறது.

கோளி (இப்போது இவ்வாண்டு தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்) மட்டுமன்றி ரெய்னா, யுவராஜ், ரோஹித் ஷர்மா போன்றோரும் கூட...

இலங்கை இன்னமும் மத்தியூஸ், குசல் ஆகியோரைத் தான் வேகமாக ஓட்டங்கள் குவிக்க நம்பியுள்ளது.

டில்ஷான் தனது தடுமாற்றத்தைத் தெளிவாக்கிக் கொள்ளும் பட்சத்திலும், தங்கள் இறுதி T20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடப் போகும் இலங்கையின் இரு பெரும் நட்சத்திரங்கள் மஹேல, சங்கா தங்கள் முத்திரைப் பெறுபேறுகளை வழங்கி, இதுவரை காலமும் இவ்விருவருக்கும் கிடைக்காத ICC கிண்ணம் ஒன்றோடு விடைபெற்றால் அது இலங்கை கிரிக்கெட்டுக்கும் பெரும் பாக்கியமே.

இலங்கை கிரிக்கெட்டுக்கு தசாப்த காலத்துக்கு மேல் அற்புதமான சேவையாற்றி தங்கள் கிரிக்கெட்டின் அந்திம காலத்தை அடைந்துள்ள இவ்விருவரும் தங்கள் T20 சர்வதேசப் போட்டி ஓய்வில் கிண்ணத்தோடு செல்லாமல் விடைபெற்றால் அது பூரணமில்லையே.

இந்தியாவோடு எப்போதுமே பிரகாசிக்கும் திசர பெரேரா, நாளைய போட்டியில் மீண்டும் அணியில் இடம்பெறுவார் என நம்பலாம்.

இந்திய அணியின் ஒரேயொரு குறையாக இருக்கப் போவது அவர்களது வேகப்பந்துவீச்சாளர்கள் தான். எனினும் இந்தத் தொடரில் புவனேஷ்குமார் ஓரளவுக்கு சிறப்பாகவே செய்துள்ளார்.

விட்டுக்கொடுக்காமல் விளையாடும் அணிகளின் வெற்றி வாய்ப்புக்களை சிலவேளை தீர்மானிக்கும் சக்தியாக தலைமைத்துவம் திகழும் நேரத்தில் டோனியின் சாணக்கியத்துக்கு, தலைவராக மூன்றாவது போட்டியில் பங்கெடுக்கும் மாலிங்கவின் அனுபவக் குறைவுக்கு மஹேல, சங்கக்காரவின் அனுபவங்கள் கைகொடுக்கும்.

தற்செயலாக நாளை மழையினால் போட்டி முற்றாகக் கை விடப்பட்டால், 2002 ICC Champions Trophy போல கிண்ணம் பகிரப்படும்.

சுருங்கக் கூறின் நாளைய நாளில் ஆடுகளம், களநிலை ஆகியவற்றுக்கு ஏற்ப எந்த அணி சிறப்பாக விளையாடுகிறதோ அந்த அணி கிண்ணம் ஏந்தும்...

இலங்கை வென்றால் ஐந்தாவது உலக T20 கிண்ணம், ஐந்தாவது சாம்பியன்.

இந்தியா வென்றால் இந்தியாவுக்கு இரண்டாவது கிண்ணம், அதேபோல் அனைத்து ICC கிண்ணங்களையும் ஒரே நேரத்தில் வைத்துள்ள ஒரே அணி.

ஆனால், இன்னொரு சுவாரஸ்ய கோலமும் கிடைத்தது.

2009 முதல்...
2009இல் வெற்றியாளர் - பாகிஸ்தான்                 நடத்திய நாடு  - இங்கிலாந்து
2010இல் வெற்றியாளர் - இங்கிலாந்து               நடத்திய நாடு  - மேற்கிந்தியத்தீவுகள்
2012இல் வெற்றியாளர் - மேற்கிந்தியத்தீவுகள்  நடத்திய நாடு  - இலங்கை
2014இல் வெற்றியாளர் - ??                                    நடத்திய நாடு  - பங்களாதேஷ்

பார்க்கலாம் நாளை....
-------------------

மகளிர் கிண்ணத்தின் இறுதியில் மீண்டும் நடப்புச் சம்பியன் அவுஸ்திரேலியா...

அதிக வாய்ப்புக்கள் இந்த Southern Stars எனப்படும் மஞ்சள் மகளிருக்குத் தெரிந்தாலும், இங்கிலாந்து மகளிரும் இலேசுப்பட்ட அணியில்லை.

கடந்த முறை இறுதிப்போட்டி அவுஸ்திரேலிய மகளிருக்கு இலகுவாகிப் போனது மேற்கிந்தியத்தீவுகளின் மகளிருடன்.

இம்முறை மகளிர் ஆஷஸ் தொடர் போல விறுவிறுப்பாக இருக்கும் என நம்பலாம்.

ஆடவர் இறுதிப்போட்டி நடைபெறுமுன், மகளிர் போட்டி இடம்பெறவுள்ளது.

கிண்ணங்கள் வென்ற அணிகளுக்கான வாழ்த்துக்களோடு மீண்டும் சந்திப்போம்.

IMG_31727962500164_zps3126d59e.jpg

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/vilaiyattu-katturaikal/105946--t20--------.html

Link to comment
Share on other sites

இருபதுக்கு - 20 உலகக் கிண்ணம் : இலங்கை அணியின் சாதனைகள்

 

 

இருபது ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2007ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வருகிறது. தற்போது நடைபெறுவது 5ஆவது இருபதுக்கு -20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியாகும்.

இதுவரை இடம்பெற்ற இருபதுக்கு-20 உலகக் கிண்ணத்தை முறையே இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள் ஆகிய அணிகள் கைப்பற்றியுள்ளன.

இந்நிலையில் இந்த இருபதுக்கு -20 உலகக் கிண்ண போட்டிகளில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அந்த வகையில் பல சாதனைகளுக்கு சொந்தமாக இலங்கை அணியும் அணி வீரர்களும் காணப்படுகின்றனர்.

இதன்படி நோக்கும் போது இருபது ஓவர் உலகக் கிண்ண போட்டியில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர், அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற பெருமையை இலங்கை அணி வீரர்களே பெற்றுள்ளனர்.

அந்த வகையில் மஹேல ஜெயவர்தன தற்போது 4ஆவது உலகக் கிண்ண போட்டியில் விளையாடி வருகிறார்.

இதுவரை 30 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 992 ஓட்டங்களை குவித்துள்ளார். இதுவே இருபதுக்கு -20 உலகக் கிண்ண போட்டியில்  ஒரு வீரரின் அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும். இதில் ஒரு சதம், 6 அரைசதங்கள் அடங்குகின்றன.

இதற்கு அடுத்தபடியாக மேற்கிந்தியத்தீவுகளின் கிறிஸ் கெயில் 23 போட்டிகளில் பங்கேற்று 807 ஓட்டங்களை எடுத்துள்ளார். இதில் ஒரு சதம், 7 அரைச்சதங்கள் அடங்கும்.

இதேவேளை, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இலங்கையின் லசித் மலிங்க முதலிடத்திலுள்ளார். 30 போட்டிகளில் விளையாடி 38 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சயிட் அஜ்மல் உள்ளார். இவர் 23 போட்டிகளில் பங்கேற்று 36 விக்கெட்டுகளை எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.

அணிகளின் சாதனையிலும் இலங்கை முதலிடம் பெற்றுள்ளது. 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற இருபதுக்கு-20 உலகக் கிண்ணப் போட்டியில் அதிகபட்சமாக அந்த 6 விக்கெட் இழப்புக்கு 260 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இச் சாதனையை கென்யா அணிக்கு எதிராக இலங்கை அணி படைத்தது.

இருபதுக்கு -20 உலகக் கிண்ண போட்டியில்  மிகக் குறைந்த ஓட்டங்கள் எடுத்த மோசமான சாதனை இந்த உலகக் கிண்ணத்தில் தான் படைக்கப்பட்டுள்ளது. அதனையும் இலங்கை அணியே நிகழ்த்தியிருந்தது.

நெதர்லாந்து அணி இலங்கை அணிக்கு எதிராக 10.3 ஓவர்களில் 39 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததே மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கை ஆகும்.

இதற்கு அடுத்தபடியாக இலங்கைக்கு எதிராக நியூஸிலாந்து 15.3 ஓவர்களில் 60 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தமையாகும்.

 

http://www.virakesari.lk/articles/2014/04/05/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-20-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

Link to comment
Share on other sites

வரலாறு படைக்குமா இந்தியா:டுவென்டி–20 உலக கோப்பையில்...
ஏப்ரல் 05, 2014.

 

மிர்புர்: ‘டுவென்டி–20’ உலக கோப்பை பைனலில், இன்று இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில், இந்தியா அசத்தும்பட்சத்தில் இரண்டாவது முறையாக கோப்பை வென்ற முதல் அணி என்ற வரலாறு படைக்கலாம்.

 

வங்கதேசத்தில் ஐந்தாவது ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இன்று நடக்கும் பைனலில், இந்தியா அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.

ஏழு ஆண்டுகளுக்குப் பின், தோனி தலைமையிலான இந்திய அணி, இரண்டாவது முறையாக பைனலுக்கு முன்னேறி உள்ளது. இதற்கு, இத்தொடரில் அதிக ரன்கள் (242) எடுத்துள்ள இளம் வீரர் விராத் கோஹ்லியின் பங்கு அதிகம்.

 

தவிர, ரோகித் சர்மா (171 ரன்கள்), ரகானே ஜோடியின் சிறப்பான துவக்கம், ‘மிடில் ஆர்டரில்’ ரெய்னா, யுவராஜ் ஆறுதல் தருவது என, பேட்டிங்கும் முக்கிய காரணமாக உள்ளது. பின் வரிசையில் கேப்டன் தோனி, ஜடேஜாவும் உள்ளது கூடுதல் பலம்.

 

மோகித் இடம்:

பவுலிங்கில், சுழற் பந்துவீச்சாளர் அஷ்வின் (10 விக்.,), முக்கிய துருப்பு சீட்டாக உள்ளார். அரையிறுதியில் ஏமாற்றிய அமித் மிஸ்ரா (9 விக்.,) இன்று, எழுச்சி பெறலாம்.

2007, பைனலில், அரியானாவின் ஜோகிந்தர் சர்மா அசத்திய போல, மோகித் சர்மா (அரியானா) கைகொடுக்கலாம் என்பதால், ‘வேகத்தில்’ புவனேஷ்வருடன், இவர் தொடர்வது உறுதி.

கடைசி போட்டி:

இலங்கை அணி 2009, 2012க்குப் பின், மூன்றாவது முறையாக பைனலுக்கு முன்னேறியது. இப்போட்டியுடன் அனுபவ சங்ககரா, ஜெயவர்தனா ஆகியோர் ‘டுவென்டி–20’ அரங்கில் இருந்து விடைபெறுவதால், சாதிக்க முயற்சிப்பர்.

துவக்க வீரர் குசல் பெரேரா, மாத்யூஸ், திரிமான்னே, தில்ஷன் கைகொடுக்க காத்திருக்கின்றனர்.

 

 

மலிங்கா பலம்:

பவுலிங்கை பொறுத்தவரையில் ‘யார்க்கர்’ மலிங்கா, பெரும் பலமாக உள்ளார். கேப்டன் பணியில் இவர் தொடர்வதால், சண்டிமால் இன்றும் களமிறங்கப் போவதில்லை.

தவிர, 2011, உலக கோப்பை பைனலில், தோனி அடித்த ‘ஹெலிகாப்டர்’ சிக்சரை மறக்காத குலசேகரா, தொல்லை தருவார் எனத் தெரிகிறது. சுழலில் ஹெராத், சேனநாயகே இடம் பெறுவதால், அஜந்தா மெண்டிசிற்கு வாய்ப்பு கிடைக்காது.

கோப்பை யாருக்கு:

இரு அணிகளிலும் தரமான சுழற்பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இருப்பினும், பைனலில் வெற்றி பெறும் உத்தி கேப்டன் தோனிக்கு தான் நன்கு தெரியும். இதனால், இந்திய அணி மீண்டும் சாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

அம்பயர்கள் யார்

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரின் இன்றைய பைனலில், அம்பயர்களாக இங்கிலாந்தின் இயான் கோல்டு, ரிச்சர்டு கெட்டில்பரோ செயல்பட உள்ளனர். மூன்றாவது அம்பயராக ஆஸ்திரேலியாவின் ராடு டக்கர் உள்ளார்.

 

மழை வருமா

இன்று போட்டி நடக்கும் மிர்புரில், வானம் இரவில் மேகமூட்டத்துடன் காணப்படும். பகலில் இடியுடன் கூடிய மழை வர 40 சதவீத வாய்ப்புள்ளது.

* ஒருவேளை மழை காரணமாக போட்டி இன்று ரத்தானால், நாளை போட்டி மீண்டும் நடக்கும்.

இவர்களுக்கு கடைசி

இலங்கை அணியின் சீனியர் வீரர்கள் சங்ககரா, 36, ஜெயவர்தனா, 36. இருவரும் இந்த ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருடன், இவ்வகை போட்டியில் இருந்து விடைபெறுவதாக அறிவித்தனர். இதனால், இன்று கோப்பை வெல்ல முயற்சிக்கலாம்.

அதேநேரம், பெரும்பாலான சீனியர் வீரர்களின் கடைசி போட்டி, சோகமாகத்தான் முடிந்துள்ளது. இது வரலாறு. கடந்த 2011 உலக கோப்பை தொடருடன் விடை பெறுவதாக அறிவித்தார் இலங்கை அணியின் சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன்.

இப்போட்டியில் இந்திய அணி கோப்பை வென்றது. இதுபோல, இன்று நடக்கும் என, நம்புவோம்.

 

பைனல் ‘பயம்’

தென் ஆப்ரிக்க அணிக்கு அரையிறுதி ‘அலர்ஜி’ என்றால், இலங்கை அணிக்கு பைனல் என்றாலே பயம் தான். கடந்த 1996 உலக கோப்பை தொடரில் மட்டும் கோப்பை வென்றது.

இதன் பின், கடந்த 7 ஆண்டுகளில் 2007, 2011 உலக கோப்பை, 2009, 2012ல் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறியது. இவை அனைத்திலும் தோற்று கோப்பை இழந்தது.

* 2002, சாம்பியன்ஸ் டிராபி (மினி உலக கோப்பை) பைனலில், அடுத்தடுத்து இரு நாட்கள் பெய்த மழை காரணமாக, இந்தியா–இலங்கை அணிகள் கோப்பை பகிர்ந்து கொண்டன.

காத்திருக்கும் சாதனைகள்

 

கடந்த 2007ல் தோனி தலைமையிலான இந்திய அணி ‘டுவென்டி–20’ உலக கோப்பை வென்றது. இம்முறை அசத்தினால், இரண்டு முறை கோப்பை வென்ற முதல் அணி என்ற சாதனை படைக்கலாம். 

* 2011ல் 50 ஓவர் உலக கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி அடுத்து, 2014ல் ‘டுவென்டி–20’ உலக கோப்பை என, மூன்றிலும் ஒரே நேரத்தில் சாம்பியனாக இருக்கும் முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெறலாம்.

 

முதல் கேப்டன்

இன்று இந்தியா வெற்றி பெற்றால், மூன்று உலக கோப்பை வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை தோனி பெறலாம். இவர் தலைமையில் ஏற்கனவே 2007(20 ஓவர்), 2011(50 ஓவர்) உலக கோப்பையை இந்தியா வென்றுள்ளது. இதற்கு முன் வெஸ்ட் இண்டீசின் கிளைவ் லாய்டு(1975, 1979), ஆஸ்திரேலியாவின் பாண்டிங்(2003, 2007) ஆகியோர் இரு முறை உலக கோப்பை வென்றுள்ளனர்.

மூன்று ஆண்டு, மூன்று நாட்கள்

கடந்த 2011, ஏப்., 2ல் இந்தியா, இலங்கை அணிகள், உலக கோப்பை (50 ஓவர்) தொடர் பைனலில் மோதின. இதில் இந்தியா கோப்பை வென்றது.

சரியாக மூன்று ஆண்டுகள், மூன்று நாட்கள் கழித்து, 2014, ஏப்.,6ல்  இரு அணிகள் மீண்டும் மற்றொரு உலக கோப்பை (‘டுவென்டி–20’) தொடர் பைனலில் மோதுகின்றன.

சர்ச்சைகள் சகஜம்

 

இந்திய அணி கேப்டன் தோனி கூறுகையில்,‘‘ இந்திய கிரிக்கெட்டில் சர்ச்சைகள் எப்போதும், பெரும் பங்கு வகித்து வருகின்றன. அணியின் கேப்டனாக இருந்த இத்தனை ஆண்டுகளில், இவை எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன். தவிர, இந்திய கிரிக்கெட்டில் நடக்கும் எந்த நல்லது, கெட்டது என்றாலும், அதில் எனது பெயர் இல்லாமல் இருக்காது என்ற செய்தி கடினமானது. நீண்ட ஆண்டுகள் விளையாடும் சங்ககரா, ஜெயவர்தனா ஓய்வு பெறுவது, இலங்கை அணிக்கு பெரும் இழப்பு தான்,’’ என்றார்.

ஆதிக்கம் செலுத்துவது யார்

சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில், இதுவரை இந்தியா–இலங்கை அணிகள் 5 முறை மோதின. இதில் இந்தியா 3, இலங்கை 2 போட்டியில் வெற்றி பெற்றன.

* ‘டுவென்டி–20’ உலக கோப்பை வரலாற்றில், இவ்விரு அணிகள் 4 முறை மோதின. இதில் இந்தியா 3, இலங்கை ஒரு போட்டியில் வெற்றி பெற்றன.

* ‘டுவென்டி–20’ உலக கோப்பை பைனலில் இவ்விரு அணிகள் மோதுவது இதுவே முதன்முறை. ஆனால் ஒட்டுமொத்த உலக கோப்பை (50 ஓவர், டுவென்டி–20) பைனலில், இந்த அணிகள் இரண்டாவது முறையாக மோத உள்ளன. முன்னதாக 2011ல் மும்பையில் நடந்த உலக கோப்பை (50 ஓவர்) பைனலில், இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

 

முதலிடம் யாருக்கு

ஐ.சி.சி., சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட சர்வதேச ‘டுவென்டி–20’ ரேங்கிங்கில் (தரவரிசை), முதலிரண்டு இடங்களில் இந்தியா (132 புள்ளி), இலங்கை (131) அணிகள் உள்ளன. இன்றைய பைனலில், இந்திய அணி வெற்றி பெற்றால் 135 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ளும். இலங்கை அணி 129 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கும். ஒருவேளை இலங்கை அணி வென்றால், 133 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறும். இந்திய அணி 130 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு தள்ளப்படும்.

 

http://sports.dinamalar.com/2014/04/1396713332/dhonicup.html

Link to comment
Share on other sites

 
4 ஆவது மளிர் உலக இருபது–20 தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸி.– இங்கிலாந்து மோதல்


தென் ஆபி­ரிக்க மகளிர் அணிக்கு எதி­ராக மிர்பூர் ஷியரே பங்ளா தேசிய விளை­யாட்­ட­ரங்கில் நேற்றுப் பிற்­பகல் நடை­பெற்ற மகளிர் உலக இரு­ப­துக்கு 20 இரண்­டா­வது அரை இறுதிப் போட்­டியில் 9 விக்கெட்டுக்­களால் மிக இல­கு­வாக வெற்­றி­பெற்ற இங்­கி­லாந்து இறுதி ஆட்­டத்தில் விளை­யாட தகு­தி­பெற்­றுக்­கொண்­டது.

மேற்­கிந்­தியத் தீவுகள் மகளிர் அணியை நேற்­று­முன்­தினம் அவுஸ்­தி­ரே­லிய மகளிர் அணி வெற்­றி­கொண்டு இறுதி ஆட்­டத்தில் விளை­யாட தகு­தி­பெற்­றி­ருந்­தது.

இதன் பிர­காரம் கொழும்பில் 2012 இல் விளை­யா­டிய அதே நாடு­களே இம் முறையும் மகளிர் உலக இரு­ப­து– 20 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்­டத்தில் நாளை விளை­யா­ட­வுள்­ளன.

இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தாட அழைக்­கப்­பட்ட தென் ஆபி­ரிக்க மகளிர் அணி 19.5 ஓவர்­களில் சகல விக்­கெட்­க­ளையும் இழந்து 101 ஓட்­டங்­களை மாத்­தி­ரமே பெற்­றது.
தென்னாபி­ரிக்க மகளிர் அணி சார்­பாக க்ளோ ட்ரைஒன் (40 ஓட்­டங்கள்)இ ஓவர்­களில் அணித் தலைவி மினோன் டு ப்ரீஸ் (23) ஆகிய இரு­வரே இரட்டை இலக்க எண்­ணிக்­கை­களைப் பெற்­றனர்.

பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய இங்­கி­லாந்து மகளிர் அணி 16.5 ஓவர்­களில் ஒரு விக்­கட்டை மாத்­திரம் இழந்து 102 ஓட்­டங்­களைப் பெற்று 9 விக்­கட்­களால் வெற்­றி­யீட்­டி­யது.

சாரா டெய்லர் (44 ஆ.இ.), அணித் தலைவி சார்ளட் எட்வேர்ட்ஸ் (36) ஆகிய இரு­வரும் ஆரம்ப விக்­கட்டில் 67 ஓட்­டங்­களைப் பகிர்ந்து இங்­கி­லாந்து மகளிர் அணியின் வெற்­றியை இல­கு­ப­டுத்­தினர். தொடர்ந்து ஹீதர் நைட் (21 ஆ.இ.), எட்வேர்ட்ஸ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத இரண்டாவது விக்கட்டில் 35 ஓட்டங்களைப் பகி ர்ந்து வெற்றியை உறுதி செய்தனர். ஆட்டநாயகி: அனியா ஷ்ரப்சோல்.

http://www.virakesari.lk/articles/2014/04/05/4-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E2%80%9320-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF%E2%80%93-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Link to comment
Share on other sites

கிரிக்கெட் விளையாட்டு சூடாய் போக்கப் போகுது நாளைக்கு..கொஞ்ச நாளாக பையன் தம்பியின் சிலமனை காணும் ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.