Jump to content

காலத்தால் அழியா கனவுக் கலைஞர்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.வி.சகஸ்ரநாமம்.

 

இவரும்  கிட்டத்தட்ட  ரங்கராவ் போல

ஆனால் கொஞ்சம் முரட்டு முகம் இருக்கும்..

அற்புதமான நடிகர்

தொடருங்கள்......

உணமைதான் விசு..

 

தமிழ் படங்களில், தந்தை கதாபாத்திரத்திற்கு ஒரு கெளரவமான தகுதியை ஏற்படுத்தி, அன்றைய காலகட்டத்தின் கூட்டுக் குடும்ப முறையினை பாசப்பிணைப்போடு திரையில் காட்டிய மிக முக்கியமானவர்களில் ரங்காராவ், சக்ஸ்ரநாமம், நாகையா, மற்றும் எஸ்.வி.சுப்பையா போன்றோர். ஒவ்வொருவராக பார்ப்போமே?

இணையத்தில் அவர்கள் நடித்த பல படங்களின் புகைப்படங்களை தேடியெடுப்பதில் சற்று நேரம் கூடிய கடினமான வேலை. அதனால் தாமதமாகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீதிபதி(1955) படத்தில் எஸ்.வி.சகஸ்ரநாமம்

 

nqobva.jpg

 

16awuue.jpg

 

2la8qb6.jpg

 

2wr2c6e.jpg

 

 

சுவரொட்டி

f8a0d774-a5cf-4404-882a-9c4febc084a1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த கலைஞர், இவர் யாரென்று தெரிகிறதா?

 

KR_Ramasamy.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1954ல் வெளியான "சுகம் எங்கே?" என்ற படத்தில் வரும் இந்த அருமையான பாடலை சொந்தக் குரலில் ஜிக்கியுடன் பாடி சாவித்திரியுடன் தோன்றியுள்ளார்..

 

பாடலை ரசியுங்கள்..! One of the best golden song!

 

இலங்கை வானொலியில், மதியம் 2.30 மணிக்கு ஒலிபரப்பாகும் "மகளிர் கேட்டவை" நிகழ்ச்சியில் இந்தப் பாடலை அடிக்கடி கேட்டிருக்கிறேன்.

 

http://youtu.be/4xgvAsM2U-0

 

கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே..
கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே!
மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம் காதல் நெஞ்சின் சாட்சியே
மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம் காதல் நெஞ்சின் சாட்சியே !


தொல்லை மாந்தர் சூழும் நாட்டில் சுகம் எங்கே அடிமை வாழ்வில்!...
தொல்லை மாந்தர் சூழும் நாட்டில் சுகம் எங்கே ? அடிமை வாழ்வில்..

இல்லை என்பார் இல்லையென்னும் இன்ப நாளைக் காண்போமா?
கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணே உனது காட்சியே
மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம் காதல் நெஞ்சின் சாட்சியே !


உயர்ந்த எண்ணம் மலரும் நெஞ்சில் சிறிதும் இன்பம் இல்லையே
உயர்ந்த எண்ணம் மலரும் நெஞ்சில் சிறிதும் இன்பம் இல்லையே
கயவர் கூட்டம் உலவும் நாட்டில் காணும் யாவும் தொல்லையே
கயவர் கூட்டம் உலவும் நாட்டில் காணும் யாவும் தொல்லையே !


மனிதர் வாழ்வை, மனிதர் பறித்து வாழும் காலம் மாறுமா?
மனிதர் வாழ்வை மனிதர் பறித்து வாழும் காலம் மாறுமா ?
இனியும் நாட்டில் ஏழை, செல்வன் பேதம் யாவும் வாடுமா?

கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணே உனது காட்சியே
கயவர் கூட்டம் உலவும் நாட்டில் காணும் யாவும் தொல்லையே !


கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே !

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2qaoj7p.jpg

 

கே.ஆர்.ராமசாமி

 

கே.ஆர்.ராமசாமி, தமிழ் நாடக மற்றும் திரைப்பட நடிகரும், பாடகரும் ஆவார். நடிப்பிசைப் புலவர் என்றழைக்கப்பட்டவர். 1935 முதல் 1969 வரை திரைப்படங்களில் நடித்தவர். கதாநாயகனாகப் பல படங்களில் நடித்திருக்கிறார். அறிஞர் அண்ணாவின் "வேலைக்காரி" திரைப்படம் இவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது. எம்.ஜி.ஆரை விட 3 வயது மூத்தவர். 1914ம் ஆண்டு ஏப்ரல் 14ந்தேதி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிறந்தார்.

 

பெற்றோர்கள் ராமபத்ர செட்டியார் , குப்பம்மாள். சிறு வயதிலேயே படிப்பை விட நடிப்பே அவரை அதிகம் கவர்ந்தது. 7 வயதில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்தார். அங்கு 6 ஆண்டுகள் நடித்தார். பின்னர் அங்கிருந்து விலகி, டி.கே.எஸ்.சகோதரர்களின் நாடகக் குழுவில் சேர்ந்தார். டி.கே.எஸ். சகோதரர்களின் "குமாஸ்தாவின் பெண்" என்ற நாடகம், 1935ல் திரைப்படமாகியது.

 

அதில் கே.ஆர். ராமசாமி சிறு வேடத்தில் நடித்தார். அவருடைய முதல் படம் இதுதான்.   "குமாஸ்தாவின் பெண்" படத்தின் துணை இயக்குனர்களாகவும், எடிட்டர்களாகவும் இருந்த கிருஷ்ணன், பஞ்சு இரட்டையர்கள், "பூம்பாவை" என்ற படத்தை டைரக்ட் செய்தனர்.

 

அவர்களுடைய சிபாரிசின் பேரில் இந்தப் படத்தின் கதாநாயகன் வேடம் கே.ஆர்.ராமசாமிக்குக் கிடைத்தது. கதாநாயகியாக நடித்தவர் யூ.ஆர்.ஜீவரத்தினம். படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து, "தெய்வநீதி", "கிருஷ்ண பக்தி", "கங்கணம்" ஆகிய படங்களில் நடித்தார்.

 

"கிருஷ்ணன் நாடக சபா" என்ற பெயரில் சொந்தத்தில் நாடக குழுவை தொடங்கினார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மீது பேரன்பு கொண்டவர் கே.ஆர்.ராமசாமி. அதனால், தன் நாடகக் குழுவுக்கு அவர் பெயரை வைத்தார். திராவிட இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர், கே.ஆர். ராமசாமி. அதனால் அண்ணாவிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப்பெற்றார்.

 

கே.ஆர்.ராமசாமி நடிப்பதற்காகவே, "வேலைக்காரி", "ஓர் இரவு" ஆகிய நாடகங்களை எழுதிக் கொடுத்தார், அண்ணா. இந்த இரண்டு நாடகங்களும் பெரிய வெற்றி பெற்றன. புராணப் படங்களில் நடிக்க வந்த அழைப்புகளை, தி.மு.க. கொள்கையின் காரணமாக கே.ஆர்.ராமசாமி ஏற்க மறுத்து விட்டார்.   நாடகமாக வெற்றி பெற்ற "வேலைக்காரி"யை, ஜுபிடர் பிக்சர்சார் படமாகத் தயாரிக்க முடிவு செய்தனர்.

 

திரைக்கதை, வசனத்தை அண்ணா எழுதினார். படத்தை ஏ.எஸ்.ஏ.சாமி டைரக்ட் செய்தார். படத்தின் கதாநாயகன் கே.ஆர்.ராமசாமி. கதாநாயகி வி.என்.ஜானகி. மற்றும் டி.எஸ்.பாலையா, எம்.வி.ராஜம்மா, எம்.என்.நம்பியார், டி.பாலசுப்பிரமணியம், பி.கே.சரஸ்வதி ஆகியோர் நடித்தனர்.   

வேதாசல முதலியார் (டி.பாலசுப்பிரமணியம்) பெரிய பணக்காரர். அவர் செய்த கொடுமையால் ஆனந்தனின் (கே.ஆர். ராமசாமி) தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கிறார். இதற்குப் பழி வாங்க, ஆனந்தன் ஆள் மாறாட்டம் செய்து, வேதாசலத்தின் மகள் சரசாவை (வி.என்.ஜானகி) மணக்கிறான். அவளை கொடுமை செய்கிறான்.

 

பல திருப்பங்களுடன் கதை செல்கிறது. வேலைக்காரியை (எம்.வி.ராஜம்மா) காதலிக்கும் மூர்த்தி (எம்.என்.நம்பியார்) ஒரு போலிச்சாமியாரின் சுயரூபத்தை அம்பலப்படுத்துகிறான். போலிச்சாமியார் கொலை செய்யப்படுகிறார். கொலைக் குற்றம் சாட்டப்படும் மூர்த்தியை, வக்கீலாக வாதாடி விடுவிக்கிறான், ஆனந்தன். வேதாசல முதலியாரின் ஆணவம் அழிகிறது.  

 

25-02-1949ல் வெளியான "வேலைக்காரி" பெரிய வெற்றி பெற்றது. கே.ஆர்.ராமசாமியின் நடிப்பும் பாடல்களும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றன. குறிப்பாக, கோர்ட்டில் வக்கீலாக ஆஜராகி, "சட்டம் ஒரு இருட்டறை. அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு" என்று வாதாடும் காட்சியில் கைதட்டல் பெற்றார்.

 

பட்சிராஜா ஸ்டூடியோ தயாரித்த "காஞ்சனா"வில் (எழுத்தாளர் லட்சுமியின் நாவல்) கதாநாயகனாக நடித்தார். அவருடைய மனைவியாக லலிதாவும், காதலியாக பத்மினியும் நடித்தனர். 1954ல் வெளிவந்த "சொர்க்கவாசல்" படத்தின் கதை, வசனத்தை அண்ணா எழுதினார். கதாநாயகனாக கே.ஆர்.ராமசாமியும், வில்லனாக சிவாஜிகணேசனும் நடித்தனர்.

 

கே.ஆர். ராமசாமிக்கு ஜோடி பத்மினி. இந்தப் படத்தில் கே.ஆர்.ராமசாமி பாடிய "எங்கே சொர்க்கம்", "ஆகும் நெறி எது ஆகா நெறி எது", "கன்னித் தமிழ்ச் சாலை ஓரம்" முதலிய பாடல்கள் "ஹிட்"டாக அமைந்தன. ஆனால் படம் பெரிய வெற்றி பெறவில்லை. இதே ஆண்டில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "சுகம் எங்கே?" படத்தில் கே.ஆர்.ராமசாமியும், சாவித்திரியும் இணைந்து நடித்தனர்.

 

fa3e548a-b8d1-47e1-ac0b-66228d4e7ab2_S_s

 

இது வெற்றிப்படம். "தென்றல் அடிக்குது, என்னை மயக்குது" என்று கே.ஆர்.ராமசாமி பாடிய பாடலில் தென்றல் வீசியது. ஏ.வி.எம். தயாரித்த "ஓர் இரவு", "செல்லப்பிள்ளை" ஆகிய படங்களில் ராமசாமி கதாநாயகனாக நடித்தார். "ஓர் இரவு" கதை,வசனத்தை அண்ணா எழுதினார். நாடகம் அடைந்த வெற்றியை திரைப்படம் அடையவில்லை.

 

"செல்லப்பிள்ளை" சுமார் ரகம். இதில் கே.ஆர்.ராமசாமிக்கு ஜோடி சாவித்திரி. "நீதிபதி" என்ற படத்தில் கே.ஆர். ராமசாமியுடன் ஜெமினிகணேசன் இணைந்து நடித்தார். பின்னர் எஸ்.பாலசந்தர் டைரக்ஷனில் உருவான "அவன் அமரன்" என்ற படத்தில் கே.ஆர்.ராமசாமி நடித்தார். அவர் குரல் வளம் பாதிக்கப்பட்டதால், சீர்காழி கோவிந்தராஜன் பின்னணியில் பாடினார். இந்தப் படத்தில் கே.ஆர்.ராமசாமிக்கு ஜோடி ராஜசுலோசனா.

 

கே.ஆர்.ராமசாமி கடைசியாக நடித்த படம் "நம் நாடு". எம்.ஜி.ஆர். நடித்த இப்படத்தில் கவுரவ வேடத்தில் கே.ஆர். ராமசாமி நடித்தார்.   1960ல் தமிழ்நாடு மேல் சபை உறுப்பினராக சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர், கே.ஆர். ராமசாமி. நாடகத் துறையில் ஆற்றிய பணிக்காக, சங்கீத நாடக சங்கத்தின் (இயல்,இசை, நாடக மன்றம்) விருது பெற்றார்.    

 

57வது வயதில் கே.ஆர்.ராமசாமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உணவுக்குழாயில் சதை வளர்ச்சி ஏற்பட்டதால் அவதிப்பட்டு வந்த அவர், வேலூர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சில காலம் சிகிச்சை பெற்றார். பிறகு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கே.ஜே. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 1 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார்.

 

05-08-1971 அன்று அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாகியது. நள்ளிரவு 12 மணிக்கு மரணம் அடைந்தார்.   கே.ஆர்.ராமசாமியின் மனைவி பெயர் கே.ஆர்.கல்யாணி. இவர் பிற்காலத்தில் வாரிய தலைவராக இருந்தவர். இவர்களுக்கு 4 மகன்கள், ஒரு மகள்.

 

Thanks: Malaimalar.

 

 

இனி அவரின் திரைப்படங்களிலிருந்து பாடல்களும், படங்களும் இணைக்கிறேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/VBI1Ijd_DF8

"உள்ளம் தேடாதே என்று சொல்லுதே"

Link to comment
Share on other sites

நல்ல பாடல்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1955ல் வெளியான "செல்லப் பிள்ளை" படத்தில் சுதர்சனம் இசையில் வெளியான இப்பாடல், அக்காலத்தில் மிகப் பிரபலம்.. கே.ஆர்.ராமசாமி கதாநாயகனாகவும், சாவித்திரி வில்லியாகவும் நடித்திருப்பார்கள், டி.எஸ் பாலையா பாடலுக்கு டான்ஸ் ஆடி பார்த்ததுண்டா? :o

 

துப்பாக்கி முனையில், "ஆடு..ஆடு" என்று சாவித்திரியை மிரட்டி, கே.ஆர்.ராமசாமி வசனம் பேசி  ஆடவைப்பதை அக்கால இளசுகள் மிகவும் ரசித்துப் பார்த்தனர்.

 

நடித்திருக்கும் நடிகர்களின் இளமையான முகத்தை இதில் பார்க்கலாம்.

 

http://youtu.be/UHe09uIZJtI

 

மதனா எழில் ராஜா நீ வாராயோ..
பருவமிதே.. பயனிதுவே.. இன்பம் தாராயோ
என்னை போல ஒரு பெண்ணை
உன்னுடைய கண்ணால் கண்டதுண்டோ
இளமை பேரழகும் இனி என்றும் வாய்ப்பதுண்டோ
வாழ்வில் என்றும் வாய்ப்பதுண்டோ
தருணமிதுவே பாராயோ கருணை புரிந்து வாராயோ
தருணமிதுவே பாராயோ கருணை புரிந்து வாராயோ

 

பருவமிதே பயனிதுவே இன்பம் தாராயோ
மதனா எழில் ராஜா நீ வாராயோ
பருவமிதே பயனிதுவே இன்பம் தாராயோ

 

மின்னல் இடை அழகும்
அன்ன நடை அழகும் கண்டும் மறப்பதேனோ
உனையே நான் நினைந்தே மனம் உருகுதல் சரிதானோ
மனமும் உருகுதல் சரிதானோ
தருணமிதுவே பாராயோ கருணை புரிந்து வாராயோ
தருணமிதுவே பாராயோ கருணை புரிந்து வாராயோ
பருவமிதே பயனிதுவே இன்பம் தாராயோ

என்னை போல ஒரு பெண்ணை
உன்னுடைய கண்ணால் கண்டதுண்டோ
இளமை பேரழுகும் இனி என்றும் வாய்ப்பதுண்டோ
வாழ்வில் என்றும் வாய்ப்பதுண்டோ
மதனா எழில் ராஜா...

Link to comment
Share on other sites

இப்போதுதான் பார்த்தேன் .எனக்கு மிகவும் பிடித்த கறுப்பு வெள்ளை காலம் படங்களுடன் பார்க்க சந்தோசமாக இருக்கு ,முழுவதையும் வாசித்துவிட்டு கருத்து எழுதுகின்றேன் .

நீங்கள் தொடருங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதுதான் பார்த்தேன் .எனக்கு மிகவும் பிடித்த கறுப்பு வெள்ளை காலம் படங்களுடன் பார்க்க சந்தோசமாக இருக்கு..

 

நன்றி அர்ஜூன்.

 

கே.ஆர்.ராமசாமி பெண் வேடமிட்டு நடித்துள்ள "நீதிபதி" (1955) படத்தில் இப்பாடல்..

 

http://youtu.be/oTv8GKZ1ZPg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

s-17-3.jpg

 

குடும்பம்

:

டி.எஸ்.பாலையாவின் குடும்பம் மிகவும் பெரியது. இவருக்கு 3 மனைவிகள்.

 

முதல் மனைவி பெயர் பத்மாவதி. இவருக்கு சாய்பாபா, அரவிந்தன், சோனையா, ரகுராம், கணேஷ் ஆகிய 5 மகன்கள். துர்க்கா, தேவி என்ற 2 மகள்கள்.

 

2-வது மனைவி பெயர் லீலா (இவர் டி.எஸ்.பாலையா மரணம் அடைவதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.) அம்புஜம், பொன்னி, சிவகாமி, ரமா என்ற 4 மகள்கள். நாகராஜன், முனிபாலன் என்ற 2 மகன்கள்.

 

3-வது மனைவி பெயர் நவநீதம். இவர் நடிகை சந்திரகாந்தாவின் அக்காள். இவருக்கு மனோகரி என்ற மகள்.

 

61 வயதில் மரணம்:

 

சென்னை தி.நகரில் வசித்து வந்த டி.எஸ்.பாலையாவுக்கு, 61 வயது நிரம்பியபோது உடல்நிலை பாதிக்கப்பட்டது. நெஞ்சுவலி, மாரடைப்பு போன்றவற்றால் அவதிப்பட்டார். 20-12-1972 அன்று டி.எஸ்.பாலையாவுக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை வீடு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். என்றபோதிலும் மறுநாள் (21-ந்தேதி) அதிகாலை அவர் மரணம் அடைந்தார்.

 

மகனும் நடிகர்:

 

அவருக்கு பிறகு அவரது மகன் ஜுனியர் பாலையா என்ற பெயரில் சினிமா படங்களில் நடித்து வருகிறார். இவரது குரலும் பாலையா குரலாக எதிரொலிக்கிறது.

 

 

என்னெண்டப்பா எல்லாத்தையும் சமாளிச்சாங்கள்??  :lol:

Link to comment
Share on other sites

என்னெண்டப்பா எல்லாத்தையும் சமாளிச்சாங்கள்??  :lol:

தசரத மகாராசாவிற்கு அறுபதினாயிரம் பெண்டாட்டிகள் என்று சொல்லும்போது பாவம் பாலையாவுக்கு மூன்றுதானே. ஆனாலும் உங்கள் ஏக்கம் புரிகிறது. எதற்கும் ஒரு கொடுப்பனவு வேண்டும் ஐயா.!!! :blink::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி 2016க‌ளில் இருந்து 2021வ‌ரை ச‌ரியா க‌ணிச்ச‌ நீங்க‌ளா இல்லை தானே ஏன் இடையில் ஏன் தேவை இல்மாத‌ புல‌ம்ப‌ல்...................விஜேப்பி அண்ணாம‌லை சொன்ன‌து போல் 30ச‌த‌வீத‌ம் பெறுவோனம் என்று ஏதும் ராம‌ர் கோயிலுக்கு போய் சாத்திர‌ம் பார்த்து விட்டு சொன்னாறா அல்ல‌து தேர்த‌ல் ஆணைய‌ம் த‌ங்க‌ட‌ க‌ட்டு பாட்டில் இருக்கு பின் க‌த‌வால் போய் ச‌ரி செய்ய‌லாம் என்ற‌ நினைப்பில் சொன்னாறா நோட்டாவுக்கு கீழ‌ நின்ற‌ க‌ட்சி 30ச‌த‌வீத‌ம் வெல்வோம் என்று சொல்லும் போது புரிய‌ வில்லையா இவ‌ர்க‌ள் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ போகின‌ம் என்று த‌லைகீழ‌ நின்றாலும் வீஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு மிக‌ குறைவு........................ஆனால் ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் க‌ருத்து க‌ணிப்பு என்று போலி க‌ருத்து திணிப்பு................... நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஒவ்வொரு தேர்த‌ல்க‌ளிலும் வ‌ள‌ந்து கொண்டு வ‌ருது ஈவிம் மிசினில் இருந்து ஓட்டை திருடினால் விஜேப்பி கார‌ங்க‌ள் சொல்லுவாங்க‌ள் சீமானின் விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போச்சு அத‌னால் தான் ஓட்டும் குறைஞ்சு  போச்சு என்று பொய் குண்டை தூக்கி த‌லையில் போடுவாங்க‌ள் சீமானின் சின்ன‌ம் என்ன‌ என்று ம‌க்க‌ளுக்கு விழிப்புன‌ர்வு காட்ட‌ போன‌ மாச‌ ஆர‌ம்ப‌ ப‌குதியில் த‌மிழ‌க‌ம் எங்கும் நோடிஸ் ஒட்ட‌ ப‌ட்ட‌து மைக் சின்ன‌மும் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு சென்று விட்ட‌து அதுக்கு க‌ட்சி பிள்ளைக‌ள் க‌டின‌மாய் ப‌ணி செய்தவை அதோட‌ விஜேன்ட‌ பாட்டில் கூட‌ மைக் சின்ன‌ம் போஸ்ட் இணைய‌த்த‌ல் க‌ல‌க்கின‌து......................நாம் த‌மிழ‌ருக்கு 7/ 10 ச‌த‌வீத‌ ஓட்டு கிடைக்கும் 10த்தையும் தாண்ட‌ வாய்ப்பு இருக்கு..................யூன் 4 ச‌ந்திப்போம் இந்த‌ துரியில்🙏🥰................................  
    • நான் அறிந்த வரை காளியம்மாள் கிட்டதட்ட வெல்லும் நிலையாம்…. பயந்து போன தீம்கா….ஒரு வாக்குக்கு ஒரு கோடி வரை கொடுத்ததாம்🤣 🤣
    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.   கை காட்டலும் தொடரும்🤣
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.