Jump to content

தண்ணி


putthan

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவனை நான் முதலில் சந்திக்கும் பொழுது எட்டு வயது இருக்கும்.பெடியன் நல்ல கொளு கொளு என்று இருப்பான்.பார்த்தவுடனே கன்னத்தில் கிள்ள வேண்டும் போல இருக்கும்.அவனது அப்பா குகன் எனது நெருங்கிய நண்பன்,வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தான். குடும்ப சகிதமாக சென்றிருந்தேன்.போகும் பொழுது சும்மா போகக்கூடாது எதாவது கொண்டு போகவேணும் என மனிசி நச்சரிக்க மலிவுவிலையில் வாங்கிய சொக்லட் பெட்டியை ரப்பிங்க் பெப்பரில் சுற்றி எடுத்து சென்று, குகனின் மகனிடம் கொடுத்தேன்.thank you uncle.. என்று கூறிய படியே நான் கொடுத்த பார்சலை பிரித்து பார்த்தான்.vow can I eat it now ammaa என்று கூறியபடியே என தாயிடம் அனுமதி கேட்டான்.not now darling latter...மறுப்பு தெரிவிக்க முகத்தை தொங்க போட்டபடியே உள்ளே சென்றுவிட்டான்.

மச்சான் கொட்டா ,கொல்டா என குகன் கேட்டான்.ஒன்றும் வேண்டாம் மச்சான் என்றேன்.

"என்ன தண்ணியை விட்டிட்டியோ?ஊரில நீ அடிக்காத தண்ணியா"

"இல்லை மச்சான் ஊரில போத்தல் கணக்கில கள்ளடிச்ச எங்களுக்கு,இங்க உவங்கள் அல்ககோல் வீதாசாரம் போட்டு பயப்படுத்துகிறாங்கள் அதுதான் "

"அரைப்போத்தல் கள்ளுக்கு உவங்கன்ட மூன்று போத்தல் பியர் அடிச்சா வாற வெறி வரும், பயப்படாமல் அடிடா"

இருவரும் உட்சாகபாணத்தை அருந்தி கொண்டிருக்கும் பொழுது சாய்நேஸ் ஒடிவந்தான் அவனுக்கு கொஞ்சம் கோக்கை ஊற்றிகொடுத்தேன் .சிரித்த படியே வாங்கி குடித்து விட்டு உள்ளே சென்று பெரிய ஏப்பம் விட்டான். "யாரப்பா இவனுக்கு கோக் கொடுத்தது" என உள்ளே இருந்து திருமதி குகன் குரல் கொடுத்தாள்.

"சுரேஸ்தான் கொஞ்சம் கொடுத்தவன்"

"சுரேஸ்! நாங்கள் இவனுக்கு கோக் கொடுக்கிறதில்லை , கோக் குடிச்சான் என்றால் ஒரே கைபர் அக்டிவ் "என்றாள். கொஞ்சம் கோபமாக சொன்னாள்.எனக்கு தலை சுற்றியது மாறிக்கிறி பியரை ஊத்தி கொடுத்து போட்டேனோ என, அவனுக்கு கொடுத்த கிளாசை மனந்து பார்த்தேன் கிளாஸில் கோக்தான் மனந்தது.

மனிசி அவனுக்கு கோக் கொடுக்கிறதில்லை அதுதான் கொஞ்சம் டென்சன் ஆகிவிட்டாள் என்ற குகன் you carry on மச்சான் என்றான்.எனக்கு ஏறிய வெறி படக்கென்று இறங்கிவிட்டது.பிறகு இரண்டு கிளாஸ் அடிச்ச பின்பு மீண்டும் ஒரு பதமான நிலைக்கு வந்தேன்.இந்த சம்பவத்திற்க்கு பிறகு ஒருத்தருக்கும் நான் கோக் கொடுப்பத்தில்லை.

வீட்டை திரும்பி போகும்பொழுது மனிசி திட்டிக்கொண்டே வந்தாள்.

"ஏன் சாய் நேஸ்க்கு கோக் கொடுத்தனீங்கள்"

"என்னப்பா பியரை கொடுத்தமாதிரி கத்துகின்றாய்"பியர் அடிச்ச துணிவில் நானும் கத்தினேன் மனிசி அடங்கி போயிட்டாள்.இரண்டுநாள் கதைக்காமல் இருந்தவள் சொன்னாள் இஞ்சபாருங்கோ அப்பா இந்த நாட்டில யாரும் வீட்டை வந்தால் கூட தேனீரா,கொப்பியா,கூல் டிரிங்கோ வேணும் ,தேனீருக்கோ,கோபிக்கோ எத்தனை சீனி போடவேணும் என கேட்டுத்தான் கொடுக்க வேணும் ஊரில் கொடுக்கிறமாதிரி நங்கள் விரும்பிய தேனீரை நல்லா சீனியை போட்டு கரைச்சு கொடுக்ககூடாது.

அட விருந்துக்கு வந்தவர்களுக்கு கொடுக்கும் தேனீரில் இவ்வளவு ஜனநாயகம் எங்கன்ட சனம் பார்க்குது என்றால் நிச்சயம் சதாரணவாழ்க்கையிலும் கடைப்பிடிக்கும் என மனதில் எண்ணிக்கொண்டேன்.

"இஞ்சாரும் எனக்கு இந்த கோக் விசயத்தில் இன்னும் சந்தேகம்"

"என்ன சந்தேகம்"

"கோக் குடிக்கச்சொல்லி விளம்பரம் போடுறாங்கள் ,மக்டொனாலில் கோக் கொடுக்கிறாங்கள் .கைபர் அக்டிவ் வந்திடும் என்றால் ஏன் கடைகளில் எல்லாம் விற்கிறாங்கள்....அது சரி கைபர் அக்டிவ் (hyperactive )என்றால் என்ன ?எதாவது வருத்தமா?"

"சீ சீ வருத்தம் கிருத்தம் இல்லை குழப்படி செய்து கொண்டிருப்பாங்கள் பெடியளை கொன்றால் பண்ண முடியாது"

"அட குழப்படி செய்வாங்கள் என்றபடியாளொ கோக் கொடுக்க கூடாது.குழப்படி செய்வது பெடி,பெட்டையளின்ட குணம்,சிலருக்கு உது பரம்பரையாக வரும்.சின்னவயசில நானும் குகனும் செய்யாத குழப்படியே,அப்பனின் குணம் அவனுக்கு வந்திருக்கும் ஏன் அவனின்ட அம்மா கொய்யா மரத்தில ஏறி விழுந்தெழும்பினது எல்லாம் குழப்படிதானே"

"உதுகளைப்பற்றி நீங்கள் ஆராச்சி செய்யாமல் இனிமேல் சின்னபிள்ளைகளுக்கு கோக் கொடுக்கும் பொழுது தாய் தெகப்பன்மாரிட்ட கேட்டுபோட்டு கொடுங்கோ"

"ம்ம்ம்ம்"

சாய்நேஸ் நாள்ளொரு மேனி பொழுதொரு வண்ணமாக ஆக வளர்ந்து கொண்டிருந்தான்.அதேபோல எங்களது உற்சாகபாண பலவித பரிணாம வளர்ச்சியடைந்து சென்றுகொண்டிருந்தது .அதாவது பியர்,சிவப்பு,கறுப்பு என முன்னேறிக்கொண்டிருந்தது.

சிட்னியில் பாருங்கோ உவங்க உந்த வெள்ளைகள் கண்டதையும் கண்ட இடத்தில செய்ய விடமாட்டாங்கள் சட்டத்தை போட்டு கட்டுபடுத்தி வைச்சிருக்கிறாங்கள்.சுதந்திரமாக திரிந்த எங்களுக்கு சரிவராது . சட்டங்களை உச்சிப்போட்டு எங்கன்ட சுதந்திரத்தை அனுபவிப்பதில் நாங்கள் கில்லாடிகள் என வெள்ளைகளுக்கு தெரியாது.சில மண்டபங்கள்,சில வீதிகளில் அல்ககோல் பிரி சோன் என்று பெயர்பலகை போட்டிருப்பாங்கள். நாங்கள் என்ன செய்வோம் என்றால் கோக் கானுக்குள் உற்சாக பாணத்தை கலந்து வெள்ளைகளின் சட்டத்தை பேய்காட்டியிருக்கிறோம்.

சில சமயங்களில் சாய்நேஸும் கோக் கானுடன் நிற்பதை கண்டிருக்கிறேன் .அப்பன் வெள்ளைகளை பேய்காட்ட மகன் அப்பனை பேய்காட்டுகிறானோ தெரியவில்லை.எல்லாம் அந்த உற்சாக பாணத்திற்கே வெளிச்சம்....

குடிவகையில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சி போல் எங்களுடைய மது அருந்தும் இடமும் பரிணாம வளர்ச்சி யடைந்திருந்தது. ஆரம்பத்தில் வீட்டின் வெளியே பின் விறாந்தை,கார் டிக்கி போன்றவற்றிலிருந்து மது அருந்திய நாங்கள் இன்று வீட்டின் மைய பகுதியில் பார் ஒன்றை நிரந்தரமாக உருவாக்கி மது அருந்த கூடியவசதியுடன் இருக்கின்றோம் .அப்படியான வசதியுடையதுதான் குகனின் வீடு.சாய்நெஸும் வேலைக்கு செல்ல தொடங்கிவிட்டான் அதனால் குகனுக்கு பணம் ஒரு பெரிய பிரச்சனயாக இருக்கவில்லை என்பது அவனது வாழ்க்கை முறையில் தெரிந்தது.

கைத்தொலைபேசி அலரியது .பெயரை பார்த்தேன் குகன் ...வழமையாக தொலை பேசி வந்தால் யாருடைய கோல் என்று பார்த்துதான் எடுப்பேன்.குகனின் கோல் வந்தால் அநேகமாக பதில் அளிப்பேன்.

"`ஹலோ மச்சான் எப்ப வந்தனீ"

"அங்கிள் தி ஸ் சாய்நேஸ்....அப்பா சனிக்கிழமை தான் வருகின்றார் ...I am going to propose to a girl on saturday ...it is a suprise party..அன்ரியையும் கூட்டிக்கொண்டு வாங்கோ"

"who is that lucky girl............."

"எங்கன்ட பிள்ளையோ அல்லது"

"ஒம் அங்கிள் சிறிலங்கன்"

".....சமரசிங்கே"

"Thanks for calling. I will be there. Bye

"

என்று கூறி டெலிபோனை துண்டித்தேன்.

சமரசிங்கே என்கன்ட ஆள் ...ம்ம்ம்..அப்பன் தமிழ்தேசிய தூண்....மகனுக்கு சமரசிங்கேயும் பொன்சேகாவும் எங்கன்ட ஆள் என்று சொல்லி வளர்த்திருக்கிறான்.

"இஞ்சாரும் உவன் சாய் நேஸ் சனிக்கிழமை ப்ரொபோஸ் பண்ணப்போறானாம்"

"யார் அந்த சிங்கள பெட்டையையோ"

"ஓம்மோம் உமக்கு முதலெ தெரியுமோ"

"ஒம் தாய்காரி ஒருதடவை சும்மா சொன்னவ அவையளுக்கு பெரிசா விருப்பமில்லை,பெடியன் ஒற்றை காலில் நிற்கிறானாம்"

"விசர் பெடியன் ஒரு எங்கன்ட பெட்டையை கட்டியிருக்கலாம்"

"இஞ்ச அப்பா நாங்கள் உதுகளைப்பற்றி கதைக்கூடாது எங்களுக்கும் பிள்ளைகள் இருக்கு..."

"அது சரி .....எதோ பெட்டையை புரப்போஸ் பண்ணியிருக்கிறான் என்று சந்தோசப்படுவோம்..." "

சமரசிங்கே என்கன்ட ஆள் ...ம்ம்ம்..அப்பன் தமிழ்தேசிய தூண்....மகனுக்கு சமரசிங்கேயும் பொன்சேகாவும் எங்கன்ட ஆள் என்று சொல்லி வளர்த்திருக்கிறான்.

சனிக்கிழமை பின்னேரம் குகனின் வீட்டுக்கு சென்றிருந்தோம்..இன்னும் சிலர் வந்திருந்தனர்.எல்லாமாக 20 பேர் கூடியிருப்போம் .குகனும் அப்பொழுதுதான் வந்திருந்தான்.அவனிடம் சுகம் விசாரித்துவிட்டு எல்லோரும் கூடி கதைத்துகொண்டிருந்தோம்.குகன் எல்லோரையும் பாரின் முன் வரச்சொன்னான்.சாய் நேஸ் பார் அட்டன்டன்டனாக உள்ளே நின்றான்.

"அங்கிள் வைன்,பியர்,ஸ்கொட்ச்"பெடிக்கு எட்டு வயசில கொக் கொடுத்தபொழுது கைபர் அக்டிவ் என்றாங்கள் பெடி இப்ப ஸ்கொட்ச் அடிக்குது எல்லாம் காலம்தான்டா என மனதில் எண்ணிகொண்டேன்.

"ஸ்கோட்ச் வித் கோக்"என்றேன்.பக்கத்தில் நின்ற லண்டன் காய் ஒன்று ஸ்கோட்ச் ஒன் த றோக் என்றார்.

என்னடா இந்த மனுசன் ஒன் த றொக் என்று சொல்லுறார் என கடக்கண்ணால் பார்த்தேன்.சாய்நேஸ் ஐஸ்கட்டியை போட்டு ஸ்கோட்ச்சை ஊத்தினான்.அப்ப தான் விளங்கிச்சு ஒன் தறொக்ஸ் என்றால் நடுத்தர வர்க்க குடிவகயை ஐஸ்கட்டியினுள் ஊத்தி குடிப்பது என்று.

எனக்கு இப்ப ரெட் லெபிள் அடிச்சா தலை இடி வருகுது நான் புளு லேபிள்தான் இனி பாவிக்க போறான் அந்தமாதிரி ஏறும் ஆனால் அடிச்ச மாதிரியே இருக்காது.வரும் பொழுது டுயுட்டி விரியில் எடுத்தனான் இருங்கோ கொண்டுவாரன் என உயர் சாதி குடியை அறிமுகம் செய்தான் குகன்.

ஒவ்வொரு குடி வகைக்கும் தனியாக கிளாஸ்கள் இருந்தன.ஸ்கோட்ச்சுக்கு தனியான கிளாஸ்,பியர் குடிப்பதற்கு தனியானது,வைன் மற்றும் கொக்டெயில் குடிப்பதற்கென தனிரகம்.அதாவது சாதி பிரிக்கப்பட்டிருந்தது.கிளாசில் மட்டுமல்ல குடிவகையிலும் பிரிக்கப்படிருந்தது.ஒரே இன குடிவகையாக இருந்தாலும் வர்க்க வேறுபாடு இருந்தது.கொல்ட் லெபிள்,புளு லெபில்,கிரீன் லெபிள்,பிளக் லெபிள்,ரெட் லெபிள் என வர்க்க வேறுபாடு காணப்பட்டது. ஜொனி வோக்கர் இனம்,சிவாஸ் இனம் போன்ற இனங்களின் நடுத்தர வர்க்க குடிவகைகள் அதிகமாக காணப்பட்டது.

ஒரு குடிவகையை இந்த கிளாசில்தான் ஊத்தி அடிக்க வேண்டும் என்ற வர்க்க வேறுபாட்டு சிந்தனை எனக்கு எதோ குடிவகையில் மையவாத சிந்தனை போல் இருந்தது.உடனே பக்கதில் இருந்த வைன் கிளாசை எடுத்து கொஞ்சம் ஸ்கொட்ச்,கொஞ்சம் பியர்,சிரிதளவு வைன் ஊத்தி கொக்டெயிலா அடித்தேன்........குடிவகையில் வர்க்க வேறுபாடு தெரியவே இல்லை..... வெறி ஏறுவதற்கு தான் எல்லோரும் குடிக்கின்றனர் பிறகு ஏன் இந்த கிளாஸுக்குள் இந்த குடிவகைதான் ஊத்தி குடிக்க வேணும் என்று சட்டம் வைச்சிருக்கிறாங்கள்.இந்த குடிகார மையவாத சிந்தனையை ஒரு புரட்சி மூலம் ஒழிக்க வேண்டும் என எண்ணியபடியே மீண்டும் வைன் கிளாசில் ஸ்கொட்சை ஊத்தினேன்....விரும்பிய கிளாசில் விரும்பினதை அடிக்க வேணும் அதுதான் ஜனநாயகம் என்று புலம்பத் தொடங்கினேன்....

யாவும் கலப்படமற்ற சுத்த கற்பனை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன், இந்த முறை நல்லா அனுபவிச்சுத் தான், கதையெழுதி இருக்கிறார் போல உள்ளது!

 

எனக்கும் ஒரு நண்பர் கூட்டம் இருக்குது! ஆனால், வீட்டுக்குள்ள 'பார்' வைச்சிருக்கிற லெவலிலை ஒருத்தரும் இல்லை! :o

 

எல்லாரும் பேர்கோலாவுக்கிள்ள  பிளாஸ்டிக் கதிரையடுக்கிற 'லெவல்' தான்! ஆனால், அதில தான், திரில்லும் இருக்கு என நினைக்கிறேன்!

 

கதை கற்பனை தானெண்டு, உங்கட தலையிலை அடிச்சுச் சொல்லுவன்! :icon_idea:

 

ஏனென்டால், விடை கடைசிப் பந்தியில கிடக்கு!

 

நன்றிகள் புத்ஸ்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர்  கதைக்கு நன்றி....

தண்ணி  பற்றி  தெரியாது

ஆனால் தேசியக்காறனது பிள்ளை..............?? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கற்பனை நல்லாய் இருக்கு , நிஜமென்றாலும் சோ வாட்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் அண்ணா நன்றாக எழுதியிருக்கிறீர்கள். படித்தேன் கதையில் ஒன்ற்றிப்போனேன். நன்றியும் வாழ்த்தும் உரித்தாகட்டும். :)


புத்தர்  கதைக்கு நன்றி....

தண்ணி  பற்றி  தெரியாது

ஆனால் தேசியக்காறனது பிள்ளை..............?? :lol:

 

சிங்களப் பெட்டையக் கட்டினால் தேசியம் அல்லது தேசியம் பற்றிய எண்ணக் கரு சிதைந்து விடுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தன் அண்ணா நன்றாக எழுதியிருக்கிறீர்கள். படித்தேன் கதையில் ஒன்ற்றிப்போனேன். நன்றியும் வாழ்த்தும் உரித்தாகட்டும். :)

 

சிங்களப் பெட்டையக் கட்டினால் தேசியம் அல்லது தேசியம் பற்றிய எண்ணக் கரு சிதைந்து விடுமா?

 

திருமதி நடேசன் சிங்களம்தானே?

Link to comment
Share on other sites

கலந்து அடித்த தலையிடியில் எழுதிஇருக்கின்றீர்கள் போலிருக்கு . :icon_mrgreen:

ஆண்களை விட பெண்கள் தான் பாட்டிகளில் அதிகம் உந்த விளையாட்டுகள் காட்டுகின்றார்கள் .

மீண்டும் ஒரு நல்ல கிறுக்கல்.

Link to comment
Share on other sites

புத்தனின் கிறுக்கல் நல்லாய் இருக்கு!

 

 

சிங்களப் பெட்டையக் கட்டினால் தேசியம் அல்லது தேசியம் பற்றிய எண்ணக் கரு சிதைந்து விடுமா?

 

பரம்பரை சிங்களமாகப் போய்விடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை கற்பனை அல்ல எண்டு தெரியுது புத்தன்.


புத்தன் அண்ணா நன்றாக எழுதியிருக்கிறீர்கள். படித்தேன் கதையில் ஒன்ற்றிப்போனேன். நன்றியும் வாழ்த்தும் உரித்தாகட்டும். :)


 

சிங்களப் பெட்டையக் கட்டினால் தேசியம் அல்லது தேசியம் பற்றிய எண்ணக் கரு சிதைந்து விடுமா?

 

முற்றிலும் சிதையாவிட்டாலும் நிட்சயம் முழுமூச்சோடு இருக்காது இந்தக் காலத்தில் ஏனெனில் தோற்றுப் போனவர் நாமாக இருப்பதால்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேட்டுக்குடியினரிடம் பணம் தாராளமாகப் புரள்வதால் உயர்வர்க்கக் கலாச்சாரத்தைத் தெரிந்து, அதைப் பின்பற்றி அதற்கு ஏற்ப உணவு, குடிப் பழக்கங்கள், அவற்றைப் பரிமாற வேண்டிய பல்வேறு நூதனமான பண்ட பாத்திரங்கள் எல்லாம் வாங்கி அவற்றை எவ்வாறு பாவிக்க வேண்டும் என்று அறிந்து தாம் உண்மையிலேயே உயர்வர்க்கம் ஆகிவிட்டோம் என்று நம்புகின்றனர்.

தண்ணி அடிப்பதில் ஜனநாயகம் வேண்டுவோர் மத்தியதர வர்க்கத்தினரே. இவர்களுக்கு ஒரு கிளாஸும் அல்ஹகோல் இருக்கும் என்ன குடிபானமும் இருந்தால் போதும். அதிலும் யாராவது இலவசமாகக் கொடுத்தால் எல்லாவற்றையும் கொக்ரையிலாகக் கலந்து குடித்து சத்தி எடுத்து விழுந்தெழும்பி வருவார்கள்!

அடிமட்டத் தொழிலாளிகள் உடல் நோவை மறக்க கிடைப்பதைக் குடித்து சந்தோசமாக இருப்பார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைத்தொலைபேசி அலரியது .பெயரை பார்த்தேன் குகன் ...வழமையாக தொலை பேசி வந்தால் யாருடைய கோல் என்று பார்த்துதான் எடுப்பேன்.குகனின் கோல் வந்தால் அநேகமாக பதில் அளிப்பேன்.

 

இப்ப விளங்குது. நான் தொலைபேசியில கூப்பிட்டால் ஏன் பதில் அளிக்கிறதில்லை என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன், இந்த முறை நல்லா அனுபவிச்சுத் தான், கதையெழுதி இருக்கிறார் போல உள்ளது!

 

எனக்கும் ஒரு நண்பர் கூட்டம் இருக்குது! ஆனால், வீட்டுக்குள்ள 'பார்' வைச்சிருக்கிற லெவலிலை ஒருத்தரும் இல்லை! :o

 

எல்லாரும் பேர்கோலாவுக்கிள்ள  பிளாஸ்டிக் கதிரையடுக்கிற 'லெவல்' தான்! ஆனால், அதில தான், திரில்லும் இருக்கு என நினைக்கிறேன்!

 

கதை கற்பனை தானெண்டு, உங்கட தலையிலை அடிச்சுச் சொல்லுவன்! :icon_idea:

 

ஏனென்டால், விடை கடைசிப் பந்தியில கிடக்கு!

 

நன்றிகள் புத்ஸ்!

 

எனக்கும் பார் வைச்சிருக்கிற நணபர்கள் இல்லை ...சும்மா ஒரு கற்பனைதான்... :D வருகைக்கும் கருத்துப்கிர்வுக்கும் நன்றிகள்

புத்தர்  கதைக்கு நன்றி....

தண்ணி  பற்றி  தெரியாது

ஆனால் தேசியக்காறனது பிள்ளை..............?? :lol:

 

நன்றிகள் விசுகு...சிட்னியில் பலர் சிங்கள பிள்ளைகளை திருமணம் செய்கின்றார்கள்..இது பற்றி ஒரு கிறுக்கல் வெகுவிரைவில் யாழில்....

கற்பனை நல்லாய் இருக்கு , நிஜமென்றாலும் சோ வாட்...! :)

 

நன்றிகள் சுவே... அதுதானே நிஜம் என்றாலும் சோ வாட்...!

புத்தன் அண்ணா நன்றாக எழுதியிருக்கிறீர்கள். படித்தேன் கதையில் ஒன்ற்றிப்போனேன். நன்றியும் வாழ்த்தும் உரித்தாகட்டும். :)

 

சிங்களப் பெட்டையக் கட்டினால் தேசியம் அல்லது தேசியம் பற்றிய எண்ணக் கரு சிதைந்து விடுமா?

 

நன்றிகள் யாழ்வாலி ....தமிழ்தேசியம் இல்லாமல் போய்விடும்.....சிறிலங்கா தேசியம் நிலைத்து நிற்க்கும்....

திருமதி நடேசன் சிங்களம்தானே?

 

நன்றிகள் காவியன் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்...திருமதி சிங்களம் என்றால் ஒரளவு தமிழ்தேசியத்தை கடைப்பிடிக்கலாம் ஆனால் வாரிசுகள் நிச்சமாக தமிழ்தேசியத்தை கடைப்பிடிக்காது.....

திருமதி நடேசன் சிங்களம்தானே?

 

நன்றிகள் காவியன் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்...திருமதி சிங்களம் என்றால் ஒரளவு தமிழ்தேசியத்தை கடைப்பிடிக்கலாம் ஆனால் வாரிசுகள் நிச்சமாக தமிழ்தேசியத்தை கடைப்பிடிக்காது.....

கலந்து அடித்த தலையிடியில் எழுதிஇருக்கின்றீர்கள் போலிருக்கு . :icon_mrgreen:

ஆண்களை விட பெண்கள் தான் பாட்டிகளில் அதிகம் உந்த விளையாட்டுகள் காட்டுகின்றார்கள் .

மீண்டும் ஒரு நல்ல கிறுக்கல்.

 

நன்றிகள் அர்ஜுன்....வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

புத்தனின் கிறுக்கல் நல்லாய் இருக்கு!

 

 

பரம்பரை சிங்களமாகப் போய்விடும். 

 

நன்றிகள் அலைமகள் வருகைக்கும் ..கருத்து பகிர்வுக்கும்

கதை கற்பனை அல்ல எண்டு தெரியுது புத்தன்.

 

முற்றிலும் சிதையாவிட்டாலும் நிட்சயம் முழுமூச்சோடு இருக்காது இந்தக் காலத்தில் ஏனெனில் தோற்றுப் போனவர் நாமாக இருப்பதால்.

 

 

நன்றிகள் சுமே....நிச்சமாக பரம்பரை சிங்களமாக மாறும்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொக்ரையிலாகக் கலந்து குடித்து சத்தி எடுத்து விழுந்தெழும்பி வருவார்கள்!

அடிமட்டத் தொழிலாளிகள் உடல் நோவை மறக்க கிடைப்பதைக் குடித்து சந்தோசமாக இருப்பார்கள்!

 

நன்றிகள் கிருபன் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்.......சத்தியமா சத்தி எடுக்கிற நிலைக்கு இன்னும் போகவில்லை...நாங்களும் உடம்பு நோவுக்கு கொஞ்சம் எடுப்போம்...... :D

இப்ப விளங்குது. நான் தொலைபேசியில கூப்பிட்டால் ஏன் பதில் அளிக்கிறதில்லை என்று

 

நன்றிகள் அப்பு...நீங்கள் அடிக்கும் பொழுது பற்றி வீக்காகி சார்ஜ் இல்லாம் போயிருக்கும் அதுதான் எடுக்கிறதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றும் வாசித்து பச்சை புள்ளிகள் வழங்கிய தும்பளையான்,தமிழ்சிறி,ரதி,உடையார்.ஈசன் ஆகியோருக்கும்நன்றிகள்

Link to comment
Share on other sites

நானும் வாசித்துவிட்டேன்.. :D இதுபோன்று வேறு விடயங்களில் எனக்கும் சொந்த அனுபவங்கள் உள்ளன. :huh: ஒருவரை எடைபோட பாவிக்கப்படும் அளவுகோல் காலத்துக்கேற்ப மாறுபடும் என்பது எல்லோரும் அறிந்ததே.. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வாசித்துவிட்டேன்.. :D இதுபோன்று வேறு விடயங்களில் எனக்கும் சொந்த அனுபவங்கள் உள்ளன. :huh: ஒருவரை எடைபோட பாவிக்கப்படும் அளவுகோல் காலத்துக்கேற்ப மாறுபடும் என்பது எல்லோரும் அறிந்ததே
நன்றிகள் இசை....புத்தனையும் எடை போட இந்த அளவுகோலை பாவிக்கிறீங்களோ?:D
Link to comment
Share on other sites

சமரசிங்கே என்கன்ட ஆள் ...ம்ம்ம்..அப்பன் தமிழ்தேசிய தூண்....மகனுக்கு சமரசிங்கேயும் பொன்சேகாவும் எங்கன்ட ஆள் என்று சொல்லி வளர்த்திருக்கிறான். //////////  இதை வாசிக்கும் பொழுது , " ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி பெண்ணே "  என்றும் தனக்குத் தனக்கு என்று வரும்பொழுது சுளகு படக்கு படக்கு என்று அடிக்குமாம் என்ற சொலவடையுமே நினைவுக்கு வருகின்றன :lol: :D .

ஒவ்வொரு குடி வகைக்கும் தனியாக கிளாஸ்கள் இருந்தன.ஸ்கோட்ச்சுக்கு தனியான கிளாஸ்,பியர் குடிப்பதற்கு தனியானது,வைன் மற்றும் கொக்டெயில் குடிப்பதற்கென தனிரகம்.அதாவது சாதி பிரிக்கப்பட்டிருந்தது.கிளாசில் மட்டுமல்ல குடிவகையிலும் பிரிக்கப்படிருந்தது.ஒரே இன குடிவகையாக இருந்தாலும் வர்க்க வேறுபாடு இருந்தது.கொல்ட் லெபிள்,புளு லெபில்,கிரீன் லெபிள்,பிளக் லெபிள்,ரெட் லெபிள் என வர்க்க வேறுபாடு காணப்பட்டது. ஜொனி வோக்கர் இனம்,சிவாஸ் இனம் போன்ற இனங்களின் நடுத்தர வர்க்க குடிவகைகள் அதிகமாக காணப்பட்டது.

ஒரு குடிவகையை இந்த கிளாசில்தான் ஊத்தி அடிக்க வேண்டும் என்ற வர்க்க வேறுபாட்டு சிந்தனை எனக்கு எதோ குடிவகையில் மையவாத சிந்தனை போல் இருந்தது.உடனே பக்கதில் இருந்த வைன் கிளாசை எடுத்து கொஞ்சம் ஸ்கொட்ச்,கொஞ்சம் பியர்,சிரிதளவு வைன் ஊத்தி கொக்டெயிலா அடித்தேன்........குடிவகையில் வர்க்க வேறுபாடு தெரியவே இல்லை..... வெறி ஏறுவதற்கு தான் எல்லோரும் குடிக்கின்றனர் பிறகு ஏன் இந்த கிளாஸுக்குள் இந்த குடிவகைதான் ஊத்தி குடிக்க வேணும் என்று சட்டம் வைச்சிருக்கிறாங்கள்.இந்த குடிகார மையவாத சிந்தனையை ஒரு புரட்சி மூலம் ஒழிக்க வேண்டும் என எண்ணியபடியே மீண்டும் வைன் கிளாசில் ஸ்கொட்சை ஊத்தினேன்....விரும்பிய கிளாசில் விரும்பினதை அடிக்க வேணும் அதுதான் ஜனநாயகம் என்று புலம்பத் தொடங்கினேன்..../////  

இங்கைதான் மேல் குடிமக்களின்  மையவாத சிந்தனை கொடிகட்டிப் பறக்குது . ஒரு பெக் கிலை இவ்வளவு சிந்தனையள் இருக்கு எண்டு இண்டைக்குத்தான் தெரியுது  :wub:  :lol:  . இந்த போத்தில் பாட்டியளிட்டை ஒரு குணம் இருக்கு . என்னதான் வெட்டு கொத்து எண்டாலும் ஒரு பெக்கிலை கட்டிபிடிச்சு ஐக்கியமாகிடுவாங்கள் :D . இடையிலை நிண்டு பஞ்சாயத்து பண்ணுறாக்கள் மூக்குடைபட வேண்டியதுதான் :( :( . படைப்புக்கு
வாழ்த்துக்கள் புத்தா :) .

Link to comment
Share on other sites

நன்றிகள் இசை....புத்தனையும் எடை போட இந்த அளவுகோலை பாவிக்கிறீங்களோ?:D

புத்தபிரானை மையவாதம் பேசும் சாதாரண மக்கள் எடைபோட முடியுமே?? :D

Link to comment
Share on other sites

உண்மையை எழுதீட்டு தப்பிக்கொள்ள கடைசீல யாவும் கற்பனையில்லாமல் முடிச்சிட்டீங்கள் புத்தன். ஆனால் இருட்டடி கட்டாயம் இருக்கு. எதுக்கும் முருகன் கோவிலில நூலொண்டு வேண்டிக் கட்டுங்கோ. :lol:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கைதான் மேல் குடிமக்களின் மையவாத சிந்தனை கொடிகட்டிப் பறக்குது . ஒரு பெக் கிலை இவ்வளவு சிந்தனையள் இருக்கு எண்டு இண்டைக்குத்தான் தெரியுது :wub::lol: . இந்த போத்தில் பாட்டியளிட்டை ஒரு குணம் இருக்கு . என்னதான் வெட்டு கொத்து எண்டாலும் ஒரு பெக்கிலை கட்டிபிடிச்சு ஐக்கியமாகிடுவாங்கள் :D . இடையிலை நிண்டு பஞ்சாயத்து பண்ணுறாக்கள் மூக்குடைபட வேண்டியதுதான் :( :( . படைப்புக்கு வாழ்த்துக்கள் புத்தா :) .
நன்றிகள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்...

உண்மையை எழுதீட்டு தப்பிக்கொள்ள கடைசீல யாவும் கற்பனையில்லாமல் முடிச்சிட்டீங்கள் புத்தன். ஆனால் இருட்டடி கட்டாயம் இருக்கு. எதுக்கும் முருகன் கோவிலில நூலொண்டு வேண்டிக் கட்டுங்கோ. :lol:

 

நூல் விளையாட்டு சிட்னியில் சரிவராது...சிலுவை தான் சரிவரும்

Link to comment
Share on other sites

புத்தன்.... இந்தக் கதை நிச்சயமா கற்பனை அல்ல. என் கண் முன்னால்கூட இப்பவும் நடந்துகொண்டிருக்கு. வேற எங்கையும் இல்லை.... என்னுடைய அன்ரி  வீட்டிலயே! :lol:  சிட்னியில் மட்டுமல்ல... மெல்பேர்ணிலும் அதே நிலைமைதான்...!  இத்தனைக்கும் அனிரியும்  பிள்ளைகளும் அவுஸ்ரேலியாவில் பிறக்கவில்லை. இங்கு வந்து 8 வருசம்தான் ஆகுது. :rolleyes::D

 

அந்தக் கொடுமையை எங்க சொல்லி அழ... என்றிருக்க, நீங்கள் எழுதியிருக்கிறியள். :lol:

 

கதை மிக யதார்த்தம்.... பாராட்டுக்கள்! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்.... இந்தக் கதை நிச்சயமா கற்பனை அல்ல. என் கண் முன்னால்கூட இப்பவும் நடந்துகொண்டிருக்கு. வேற எங்கையும் இல்லை.... என்னுடைய அன்ரி  வீட்டிலயே! :lol:  சிட்னியில் மட்டுமல்ல... மெல்பேர்ணிலும் அதே நிலைமைதான்...!  இத்தனைக்கும் அனிரியும்  பிள்ளைகளும் அவுஸ்ரேலியாவில் பிறக்கவில்லை. இங்கு வந்து 8 வருசம்தான் ஆகுது. :rolleyes::D

 

அந்தக் கொடுமையை எங்க சொல்லி அழ... என்றிருக்க, நீங்கள் எழுதியிருக்கிறியள். :lol:

 

கதை மிக யதார்த்தம்.... பாராட்டுக்கள்! :)

 

நன்றிகள் கவிதை வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சன்ரைசர்ஸ் அணி ப‌ல‌ ஜ‌பிஎல்ல‌ சுத‌ப்பின‌து.................இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகின‌ம்.................வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ருக்கு ஒரு விளையாட்டில் விளையாட‌ வாய்ப்பு கிடைச்ச‌து அதுக்கு பிற‌க்கு கூப்பில‌ உக்க‌ரா வைச்சிட்டின‌ம்...................ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ம‌ற்றும் ஒரு நாள் தொட‌ர் ரெஸ் விளையாட்டி நிலைத்து நின்று ஆட‌க் கூடிய‌ இள‌ம் வீர‌ர்🙏🥰....................................    
    • வ‌ங்கிளாதேஸ்ச‌ சொந்த‌ ம‌ண்ணில் வெல்வ‌து க‌டின‌ம் ஆனால் 20 ஓவ‌ர் தொட‌ரில் இல‌ங்கை வெற்றி ஒரு நாள் தொட‌ரில் வ‌ங்க‌ளாதேஸ் வெற்றி 5நாள் தொட‌ரில் இல‌ங்கை அமோக‌ வெற்றி....................... இப்ப‌ எல்லாம் 5 நாள் விளையாட்டு சீக்கிர‌ம் முடிந்து விடுது  விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிய‌னும் என்றால் ம‌ழை வ‌ந்தால் தான் இல்லையேன் ஏதோ ஒரு அணி வெல்லும் இதே 20வ‌ருட‌த்தை முன்னோக்கி பார்த்தா நிறைய‌ விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடியும்.....................20 ஓவ‌ர் வ‌ந்தாப் பிற‌க்கு ஜ‌ந்து நாள் விளையாட்டை கூட‌ 20ஓவ‌ர் விளையாட்டு போல் அடிச்சு ஆடுகின‌ம்😁.................................
    • சுனில் ந‌ர‌ன் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகிறார்🙏🥰.......................
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் மிஸ்ர‌ர் க‌ட்ட‌த்துரை🙏🥰...........................
    • 😔 ம்ம்ம்ம் குதிரையை குளம் வரை கூட்டிப்போகலாம், நீரை அதுதான் குடிக்க வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.