யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
SUNDHAL

பாலு மகேந்திரா மரணம்!: அதிர்ச்சியில் திரையுலகம்

Recommended Posts

சென்னை: மூத்த இயக்குநர், தமிழ் சினிமாவின் மிக முக்கிய படைப்பாளி பாலுமகேந்திரா உடல்நலக் குறைவு காரணமாக இன்று மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 74.

இலங்கையின் மட்டக்களப்பில் 1934-ல் பிறந்த தமிழரான பாலு மகேந்திரா ஒரு ஒளிப்பதிவாளராகத்தான் தன் வாழ்க்கையை ஆரம்பித்தார்.

பாலு மகேந்திரா

1977-ல் கோகிலா படம் மூலம் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார் பாலு மகேந்திரா. இது ஒரு கன்னடப் படம். இந்தப் படம் நேரடியாக தமிழகத்தில் வெளியாகி வெள்ளி விழா கண்டது. தமிழகத்தில் அத்தனை பெரிய வெற்றி பெற்ற கன்னடப் படம் இதுவாகத்தான் இருக்கும்.

தமிழில் அவர் இயக்கிய முதல் படம் அழியாத கோலங்கள். அந்தப் படத்தில் தொடங்கிய அவரது திரைப் பயணம் ஒரு அழகிய நதியைப் போல தெளிவாக இருந்தது. ஆர்ப்பாட்டமில்லாத, அழகிய வெற்றிகள் மூலம் இந்திய சினிமாவின் முக்கிய படைப்பாளியாக அடையாளம் காணப்பட்டார் பாலு மகேந்திரா.

சமீப நாட்களாக முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இருந்தும், அதை வென்று, தலைமுறைகள் என்ற படத்தை இயக்கி நடித்தார். அந்தப் படம் அனைவராலும் பாராட்டப்பட்டது. தமிழ் சினிமாவின் முக்கிய படமாகப் பார்க்கப்பட்டது.

தனது அடுத்த படத்தை விரைவில் தொடங்கப் போவதாகக் கூறிவந்தார் பாலு மகேந்திரா.

இந்த நிலையில் இன்று திடீரென்று அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி இறந்தார் பாலு மகேந்திரா.

பாலு மகேந்திராவுக்கு அகிலா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். நடிகை மௌனிகாவை பின்னர் தன் இரண்டாவது மனைவியாக உலகுக்கு அறிவித்தார் பாலு மகேந்திரா.

இயக்குநர்கள் பாலா, வெற்றிமாறன் என பாலு மகேந்திராவின் சீடர்கள் தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாளிகளாகத் திகழ்கிறார்கள்.

பாலுமகேந்திரா மரணம் தமிழ் சினிமாவைப் பொருத்தவரை நம்ப முடியாத, ஜீரணிக்க இயலாத ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.

தமிழ் திரையுலகமே தீராத அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.

Story first published: Thursday, February 13, 2014, 10:49 [iST]

- See more at: http://m.oneindia.in/tamil/movies/news/balu-mahendra-hospitalised-193433.html#sthash.jrX2UipD.dpuf

Share this post


Link to post
Share on other sites

தமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் பாலுமகேந்திரா, உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், கவலைக்கிடமான நிலையில் இன்று (13.2.2014) அதிகாலையில் சென்னை விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இயக்குநர்கள் பாலா, அமீர்இ ராம் உள்ளிட்டோர் மருத்துவமனை சென்று சிகிச்சை குறித்து விசாரித்தனர்.   உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.  இந்நிலையில் 11 மணியளவில் அவர் காலமானார்.

பாலுமகேந்திரா கடைசியா இயக்கிய படம், ''தலைமுறைகள்''.  இந்தப்படத்தில்,  அவரே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒளிப்பதிவாளர், இயக்குநர், எடிட்டர், நடிகர் என்று பண்முகம் கொண்டவர் பாலுமகேந்திரா.  1946 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி இலங்கையில்,மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தவர் பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா. இயற்பெயர்,மகேந்திரா. இலங்கையில் இவரது பக்கத்து வீட்டுக்காரர் கவிஞர் காசி ஆனந்தன்.

லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்தார். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்ற பாலு மகேந்திரா 1971இல் தங்கப்பதக்கம் பெற்றார்.

 'நெல்லு' மலையாள படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார். அப்படத்துக்கு 1972 இல் சிறந்த ஒளிப்பதிவுக்கு கேரள மாநில விருது பெற்றார். அதைத் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். கெ. எஸ். சேதுமாதவனின் 'சுக்கு'இ' ஜீவிக்கான் மறந்நு போய ஸ்தீரி' 'சட்டக்காரி' பி என் மேனோனின் 'பணிமுடக்கு' போன்றவை முக்கியமான படங்கள்.

ஒளிப்பதிவாளரான இவர் இயக்குநராகவும் மாறினார்.  1977இல் பாலு மகேந்திரா அவரது முதல் படமான 'கோகிலா'வை கன்னட மொழியில் இயக்கினார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்த முதல் தமிழ்படம் முள்ளும் மலரும் 1977ல் வெளியாயிற்று. 1978ல் தமிழில் அவரது முதல் படமான 'அழியாத கோலங்கள்' வெளியாயிற்று. பாலு மகேந்திரா மணிரத்தினம் போன்ற பல முக்கியமான இயக்குநர்களின் முதல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பாலு மகேந்திரா மூன்று முறை பெற்றுள்ளார் வீடு, சந்தியாராகம்இ வண்ண வண்ண பூக்கள். சிறந்த திரைக்கதைக்கு கோகிலா, அழியாத கோலங்கள் ஆகியவை விருது பெற்றன. ஜூலி கணபதி சிறந்த படத்தொகுப்புக்கான சாந்தாராம் விருது பெற்றது.

1983 ஆம் ஆண்டு கலவரத்தின் போது இடம்பெயர்ந்து இந்தியாவுக்கு சென்றிருந்த அவர், இவ்வருடத்திற்கு இலங்கைக்கு திரும்பி படமொன்றை இயக்கவிருப்பதாக தனக்கு நெருக்கமான இலங்கை நண்பர்களிடம் தெரிவித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/99976-2014-02-13-06-24-50.html

Share this post


Link to post
Share on other sites

அன்பே பாலுமகேந்திரா

காலம் சிலசமயம் காட்டுத்தனமான கட்டளையிடுகிறது

புகைப்படச் சுருள்களை

வாழ்க்கையாவும் அன்பின் படிப்பினையாகவும்

இவ்வுலகிற்கு விட்டுச்சென்றவனின்

தளர்வான உடலை வீர்யம்மிக்க ஆன்மாவை

கோடைக்கு முன்பே அழைத்துக்கொண்டது.

சினிமாவிலிருந்து ஒருநொடிகூட அச்சுப்பிசகாதவன்

தீரத் தீரக் கடைசி வரை

அவனது உயிர் கோப்பையில் சினிமா மட்டுமே பொங்கி வழிந்தது.

சிறந்தவைகளை பொங்கி பிரவாகமெடுக்கும்

இனிய சொற்களால் வியப்படைந்து பாராட்டுபவனே

அன்பே ஆசிரியனே

சினிமா இருக்கும்வரை இருக்கப்போகிறவனே

ஒரு வயலின் இசையைப்போலவே

இசைவானது உன்சினிமா

இடையில் தடைப்பட்டு நிற்கும்

இதயம் தளர்த்தும் ஆன்ம சங்கீதத்தை

உன் சினிமாவிலேயே தேடும் பாக்கியத்தை விட்டுச்சென்றிருக்கிறாய்

எப்போதும் கீழிறக்காத தொப்பியை

உன் வாழ்வின் மூச்சாக இருந்த சினிமாவிற்காகவே கீழிறங்கினாய்

இவ்வுலகில் என்றும் இறவா படைப்பினை விட்டுச்சென்றவனுக்கு

இடிகுமுறும் இதயத்துடன்

வழியனுப்பிவைக்கிறேன்

போய்வா அன்பே பாலுமகேந்திரா

-சந்திரா

Fb

Share this post


Link to post
Share on other sites

13-balu-mahendra-02-600.jpg?w=590

 

 

 

மூத்த இயக்குநர், தமிழ் சினிமாவின் மிக முக்கிய படைப்பாளி பாலுமகேந்திரா உடல்நலக் குறைவு காரணமாக இன்று மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 74. இலங்கையின் மட்டக்களப்பில் 1934-ல் பிறந்த தமிழரான பாலு மகேந்திரா ஒரு ஒளிப்பதிவாளராகத்தான் தன் வாழ்க்கையை ஆரம்பித்தார். பாலு மகேந்திரா   1977-ல் கோகிலா படம் மூலம் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார் பாலு மகேந்திரா. இது ஒரு கன்னடப் படம். இந்தப் படம் நேரடியாக தமிழகத்தில் வெளியாகி வெள்ளி விழா கண்டது. தமிழகத்தில் அத்தனை பெரிய வெற்றி பெற்ற கன்னடப் படம் இதுவாகத்தான் இருக்கும். தமிழில் அவர் இயக்கிய முதல் படம் அழியாத கோலங்கள். அந்தப் படத்தில் தொடங்கிய அவரது திரைப் பயணம் ஒரு அழகிய நதியைப் போல தெளிவாக இருந்தது. ஆர்ப்பாட்டமில்லாத, அழகிய வெற்றிகள் மூலம் இந்திய சினிமாவின் முக்கிய படைப்பாளியாக அடையாளம் காணப்பட்டார் பாலு மகேந்திரா. சமீப நாட்களாக முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இருந்தும், அதை வென்று, தலைமுறைகள் என்ற படத்தை இயக்கி நடித்தார். அந்தப் படம் அனைவராலும் பாராட்டப்பட்டது. தமிழ் சினிமாவின் முக்கிய படமாகப் பார்க்கப்பட்டது. தனது அடுத்த படத்தை விரைவில் தொடங்கப் போவதாகக் கூறிவந்தார் பாலு மகேந்திரா. இந்த நிலையில் இன்று திடீரென்று அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி இறந்தார் பாலு மகேந்திரா. பாலு மகேந்திராவுக்கு அகிலா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். நடிகை மௌனிகாவை பின்னர் தன் இரண்டாவது மனைவியாக உலகுக்கு அறிவித்தார் பாலு மகேந்திரா. இயக்குநர்கள் பாலா, வெற்றிமாறன் என பாலு மகேந்திராவின் சீடர்கள் தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாளிகளாகத் திகழ்கிறார்கள். பாலுமகேந்திரா மரணம் தமிழ் சினிமாவைப் பொருத்தவரை நம்ப முடியாத, ஜீரணிக்க இயலாத ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. தமிழ் திரையுலகமே தீராத அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.

http://tamil.oneindia.in/movies/news/

 

http://sivasinnapodi.wordpress.com/2014/02/13/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF/

 

இன்றைய காலை இனிமையாக விடியவில்லை . மனதில் வெற்றிடமும் பாரங்களும் ஒரேசேர அழுத்துகின்றன . தமிழ் உலகின் ஒப்பற்ற படைப்பாளியை இழந்து நிற்கின்றோம் . கால ஓட்டத்தில் வெற்றியாளர்கள் ஓவ்வரு சருகுகளாக உதிர்ந்து கொண்டே இருக்கின்றனர் . அந்த வெற்றிடங்கள் என்றுமே நிரப்ப முடியாதவை ." அப்பா " என்று அழைக்கப் படும் பாலுமகேந்திராவின் இழப்பும் அந்தவகையானதே .பாலுமகேந்திராவுக்கு எனது அஞ்சலிகள். அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் .அவரின் குடும்பத்தின் துயரிலும் பங்கு கொள்கின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

ஆழந்த இரங்கல்கள்.

 

தமிழக சினிமா இருந்தும்.. எங்களின் விடிவுக்காக நிறைய செய்திருக்கலாம். ஏதோ தவறவிட்ட குறை இருக்கிறது. இருந்தாலும்.. நிறைகளோடு.. ஆத்மா சாந்தி அடையட்டும்.

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்!

Share this post


Link to post
Share on other sites

ஒரு ஈழத்தவராக இருந்து கொண்டு ஈழத்தின் துயரை ஏன் படமாக்கவில்லை என்று பாலுமகேந்திராவிடம் கேட்ட பொழுது அவர் சொன்னது....

தமிழ்நாட்டில் இருந்து கொண்டு அதை நேர்மையாக நீதியாக அழுத்தங்கள் தனிக்கைகளுக்கு மத்தியில் படமாக்க முடியாது என்று.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

பாலுமகேந்திரா மகோன்னதமான மனிதன் , முள்ளையும் மலராக்கியவன் ...!

அண்ணாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்...!

Share this post


Link to post
Share on other sites

ஒரு ஈழத்தவராக இருந்து கொண்டு ஈழத்தின் துயரை ஏன் படமாக்கவில்லை என்று பாலுமகேந்திராவிடம் கேட்ட பொழுது அவர் சொன்னது....

தமிழ்நாட்டில் இருந்து கொண்டு அதை நேர்மையாக நீதியாக அழுத்தங்கள் தனிக்கைகளுக்கு மத்தியில் படமாக்க முடியாது என்று.

 

ஆழ்ந்த அஞ்சலிகள்!!

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்..!

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்..!

Share this post


Link to post
Share on other sites

பாலுமகேந்திரவின் இழப்பு தமிழ் சினிமாவிற்கும் தமிழ்கூறும் நல்லுகிற்கும் குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கும் பேரிழப்பாகும். கோடம்பாக்கம் சினிமாவில் ஈழத்தமிழனின் கால்களையும் பதிப்பதில் முன்னோடியாகவிருந்த பாலுமகேந்திரா என்னும் அற்புதக் கலைஞனின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு அவரை இழந்து தவிக்கும் அவரது உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழந்த அனுதாதாபங்களைத் தெரிவிக்கின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

அன்னாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரை இழந்து துடிக்கும் அனைத்து இதயங்களுடனும் துயர்பகிர்வோம். (குறிப்பு: பாலு மகேந்திரா அவர்கள் 1939 ஆம் ஆன்டில் பிறந்தார், 1934 என்று எழுதியிருப்பது தவறு))

Share this post


Link to post
Share on other sites

1656220_667048136665776_1774790512_n.jpg


http://youtu.be/u4wejlulxHo

 

 

காலத்தால் அழியாத கலைஞனுக்கு எனது அஞ்சலிகள் .

Share this post


Link to post
Share on other sites

திரையுலகம் நல்லதொரு கலைஞனை இழந்து விட்டது. 

 

 

படைப்பாளிகளின்  இழப்பு .பெரும் .சோகம்

Share this post


Link to post
Share on other sites
படப்பிடிப்பு கலையில் தொழில்நுட்பம் அவ்வளவாக இல்லாத வேளையில் கூட  இப்படியும் படம் பிடிக்கலாம் என ஒரு புரட்சியை ஏற்படுத்திய கலைஞன்.தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கிய கலைஞன் என்றால் மிகையாகாது.
 
ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share this post


Link to post
Share on other sites
பூனே திரைப்பட கல்லூரியின் ஒளிப்பதிவு துறையில் என் மூன்று வருட படிப்பை 1969-ல் முடித்துக் கொள்கிறேன். எவரிடமும் உதவி ஒளிப்பதிவாளராக வேலை பார்க்காமலே 1971-ல் ஒளிப்பதிவாளராக பணியாற்றத் துவங்குகிறேன். பணியாற்றிய முதல் படம் “நெல்லு”   இது மலையாளப்படம். இதன் இயக்குனர் ராமு கரியத். முதல் படத்திலேயே கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது எனக்குக் கிடைக்கிறது. 71 -முதல் 75 வரை ஐந்து வருடங்கள் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறேன்.
kokila.jpg
பெரும்பாலானவை மலையாளப் படங்கள். இந்த ஐந்து வருடங்ளுக்குள்  மூன்று தடவைகள் கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது எனக்குத் தரப்படுகிறது. சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆந்திர அரசின் விருதும் இரண்டு தடவைகள் என்னை வந்தடைகிறது. ஐந்து வருடங்களில் 21-படங்ளுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிவிட்டு 1976-ல் எனது இயக்கத்தில் வந்த முதல் படமான கோகிலா-வைத் தொடங்குகிறேன். கோகிலாவின் கதை, திரைக்கதை, உரையாடல், இயக்கம், ஒளிப்பதிவு மற்றும் படத் தொகுப்பு ஆகியவற்றை நானே செய்கிறேன். கோகிலா கன்னட மொழிப் படம். கமலஹாசன், ஷோபா மற்றும் ரோஜாரமணி ஆகியோர் இதில் நடித்திருந்தனர். பிற்காலத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமாகிய மோகன் என்ற கன்னட இளைஞரை  இதில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக அறிமுகப்படுத்துகிறேன். அப்பொழுது மோகன் பங்களூர் வங்கி ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
318551_136473483115534_735632200_n.jpg
இந்தப் படத்தின் இசை இந்தியாவின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவரான சலீல் செளத்ரி. கோகிலா படத்தின் மூலம் சிறந்த திரைக்கதையாளருக்கான கர்னாடக அரசின் விருதும், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதும் எனக்குக் கிடைக்கிறது. கோகிலா கன்னட மொழியிலேயே சென்னையில் 150-நாட்கள் ஓடிச் சாதனை படைக்கிறது. கோகிலாவை அடுத்து நான் ஒரு தமிழ்ப் படம் செய்ய விரும்பினேன். என் இயக்கத்தில் வரும் முதல் தமிழ்ப் படத்தில் எனது பால்யத்தை பதிவு பண்ணுவதென்று முடிவு பண்ணுகிறேன். என் நெஞ்சில் பசுமையாக  இருந்த ஞாபகங்கள் என்பதால் எனது முதல் தமிழ் படத்துக்கு“அழியாத கோலங்கள்” என்று பெயர் வைத்து படத்திற்கான ஆரம்ப வேலைகளிலும் இறங்குகிறேன். இந்த சமயத்தில்தான் மகேந்திரன் என்ற இளைஞர் என்னை அணுகி அவர் இயக்க இருக்கும் அவரது முதல் படத்திற்கு நான் ஒளிப்பதிவு செய்யவேண்டும் என்று என்னைக் கேட்கிறார்.  இந்தப் படத்தை நான் ஒத்துக்கொள்ளவேண்டும் என்று என்னைக் கேட்கிறார். இந்தப் படத்தை நான் ஒத்துக்கொள்ளவேண்டும் என்று எனது நண்பர் கமலும் விரும்பினார். கல்கியில் வெளிவந்த உமா சந்திரனின் முள்ளும் மலரும் என்ற நாவலைத் தான் மகேந்திரன் படமாக்க விரும்புவதாகவும் சொல்கிறார்.
-
அந்த நாவலை கல்கியில் வெளியானபோதே நான் படித்திருந்தேன். அண்ணன் தங்கை உறவை உணர்வு பூர்வமாகச் சொன்ன நல்ல நாவல். இந்தக் கதையில் வரும் அண்ணனாக நண்பர் ரஜினிகாந்தும், அவரது தங்கையாக எனது ஷோபாவும் நடிப்பதென்று முடிவாகிறது.
-
கோகிலாவைத் தொடர்ந்து நான் எடுக்க இருந்த எனது முதல் தமிழ் படத்திலும் ஷோபா இருக்கவேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் அந்தப் படம் பதின்வயதுகளின் முற்பகுதியில் இருக்கும் மூன்று விடலைப் பையன்களைப் பற்றிய படம்.  அந்த மூன்று விடலைகளும்தான் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள். ஷோபாவுக்கு அழியாத கோலங்கள் படத்தில் ஸ்கூல் டீச்சராக ஒரு சிறிய ரோல்தான் வைத்திருந்தேன். ஆனால் முள்ளும் மலரும் படத்தில் அவளுக்கு முக்கியமான ரோல். அதுவும் ரஜினிகாந்த் என்ற பெரிய நடிகருடன். எனது ஒளிப்பதிவில் ரஜினி தங்கையாக  அவள் தமிழில் அறிமுகமாவதே நல்லது என்று படுகிறது.
எனவே எனது அழியாத கோலங்கள் படத்தை தள்ளிப்போடுகிறேன். மகேந்திரன் இயக்கத்திலான முள்ளும் மலரும் படத்தில் முழுமையாக ஈடுபடுகிறேன். மகேந்திரனுக்கு இது முதல் படம். வசனகர்த்தாவான அவர் அதற்குமுன் உதவி இயக்குனராகப் பணியாற்றியோ அல்லது ஒரு திரைப்படப் பள்ளியில் பயின்றோ திரைப்பட இயக்கத்தைக் கற்றவரல்ல. எனவே அவரது முதல் படத்தின் ஒளிப்பதிவாளர் என்ற வகையில் எனது பொறுப்பு, (Responsibility)  மிக அதிகமானது. ஒரு படத்தின் ஒளிப்பதிவாளர் என்ற எல்லைக்குள் இருந்துகொண்டே முள்ளும் மலரும்  படத்தின் திரைக்கதை அமைப்பிலும் உரையாடலிலும் திரைப்பட இயக்கத்திற்கு உட்பட்ட லென்சிங், ஷாட் டிவிஷன்ஸ், கேமராக்  கோணங்கள் தேர்வுசெய்வது, நடிகர்களைக் கதாபாத்திரங்களாக மாற்றுவது போன்ற அனைத்துப் பணிகளிலும் நான் என்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொள்கிறேன். படப்பிடிப்பின் பின் படத் தொகுப்பிலும் நான் கூடவே இருக்கிறேன்.
-
இந்தப் படத்தில் எனது பங்கேற்புகள் அனைத்துமே மகேந்திரனின் விருப்பத்தின்படி நடந்தவைதான். மகேன் ஒரு நல்ல எழுத்தாளர். ஒரு நல்ல ரசிகர். அவருக்கும் எனக்குமான உறவு அமோகமாக இருந்தது. நாங்கள் இருவரும் ஒரே அலைவரிசையில் இயங்கியதை நீங்கள் முள்ளும் மலரும் படத்தில் உணர்ந்திருப்பீர்கள்.
mullummalarumfront.jpg
–நன்றி http://ilayaraja.forumms.net/
முள்ளும் மலரும் படம் 1978- ஆகஸ்ட்15-ம் திகதி வெளியாகிறது.  முதல் இரண்டு வாரங்கள் சுமார் என்ற நிலையில்தான் அதன் வசூல் இருந்தது. மூன்றாவது வாரத்தில் இருந்து வரலாறு காணாத வெற்றி. எனது முதல் தமிழ்ப் படமான அழியாத கோலங்கள் 79-ல் தான் வெளியானது. முள்ளும் மலரும் படத்தில் ஷோபாவுக்கும் சரத்பாபுவுக்குமான காதல் உணர்வுகளை மகேந்திரன் ஒரு பாடல் மூலம் காண்பிக்கலாம் என்று முடிவு பண்ணியிருந்தார். “செந்தாழம் பூவில்” என்ற
அந்தப் பாடலை இளையராஜா அற்புதமாக அமைத்துக் கொடுத்திருந்தார். பாடியது யேசுதாஸ். இன்று வரை இளையராஜாவின் மிகச் சிறந்த பாடல்கள் வரிசையில் அந்தப் பாடல் இடம்பெற்று வருகிறது…
இந்தப் பாடலை சரத்பாபு பாடுவதாக எடுப்பது என்றுதான் முடிவுபண்ணப்பட்டிருந்தது. இரண்டொரு வரிகளை மட்டும் சரத்பாபு பாடுவதாக வைத்துவிட்டு மிகுதிப் பாடலை நான் எனது கோகிலா படத்தில் தொடங்கியிருந்த மொண்டாஜ் (Montage) உத்தியில் எடுத்தால் பொருத்தமாக இருக்கும் என்று எனக்கு பட்டது. இதை மகேந்திரனிடம்  சொன்னேன். அவரும் ஒத்துக் கொண்டார். ஆனால் நடிகர் சரத்பாபுவுக்குத்தான் தன்னுடைய வாய் அசைவில் மொத்தப் பாடலும் இல்லையே என்பதில் வருத்தம் இருந்ததாக ஞாபகம்.
-
1976-ல் எனது முதல் படமான கோகிலாவில் நான் ஆரம்பித்த இந்த லவ் மொண்டாஜ் என்ற உத்தியை இன்றய இளம் இயக்குனர்கள் பலர் அழகாக உபயோகப் படுத்துகிறார்கள் என்பதில் எனக்குப் பரம சந்தோஷம்.கதையின் நகர்வு, கதாபாத்திரங்களின் தோற்றம் அவர்களின்  உரையாடல்கள் மற்றும் செயல்பாடுகள், படத்தின் ஒளிப்பதிவு, அரங்க அமைப்பு போன்ற அத்தனை விஷயங்களிலும் யதார்த்தம், இயல்புதன்மை என்று பார்த்து பார்த்துச் செய்துவிட்டு பாடல் காட்சிகளில் இந்த யதார்த்தத்தை, இந்த இயல்புத்தன்மையை நாம் பண்டு முதல் கோட்டை விட்டே வந்திருக்கிறோம். தாலாட்டையும், ஒப்பாரியையும், மேடைப் பாடலையும்   இன்னும் இரண்டொரு பாடல் சந்தர்ப்பங்களையும் தவிர பெரும்பாலான பாடல் காட்சிகள் இயல்புத்தன்மைக்கு புறம்பானவை. அபத்தமானவை என்பது நமக்குத் தெரியும்.
mullummalarumback.jpg
–நன்றி http://ilayaraja.forumms.net/
முள்ளும் மலரும்  படம் மகேந்திரனை மிக நுட்பமான இயக்குனர் என்று அடையாளம் காட்டியது. சினிமா இயக்கம் என்ற ராஜபாட்டையில் மகேந்திரன் எடுத்துவைத்த முதல் அடியின்போது அவருடன் நான் இருந்தேன் என்பதில் எனக்கு சந்தோஷம் உண்டு. எனது ஷோபா, படாபட் ஜெயலட்சுமி, தயாரிப்பாளர் வேணு செட்டியார், ஆர்ட் டைரக்டர் ராமசாமி ..என  முள்ளும் மலரும் படத்தில் பணியாற்றிய பலர் இன்று இல்லை. நாட்களை எண்ணியபடி நானும் மகேந்திரனும், இளையராஜாவும் இன்னும் சிலரும். ஆனால் ஒன்று.. எங்களுக்குப் பின்னும் தமிழ் சினிமாவில்  முள்ளும் மலரும் தொடரும். உன்னதமான படைப்புகளுக்கு அந்த சக்தி உண்டு. எனது படைப்புகள் மூலம் நானும், மகேந்திரனின் படைப்புகள் மூலம் மகேந்திரனும் இளையராஜாவின் இசை மூலம் இளையராஜாவும் எஙகள் மரணத்தின் பின்பும் தொடர்ந்து வாழ்ந்து கொண்டுதான் இருப்போம். மரணிக்கப் போவது எங்கள் உடல்கள். நாங்களல்ல!

Share this post


Link to post
Share on other sites

காதலையும் காமத்தினையும் அழகியலாக தமிழ் சினிமாவில் அள்ளி அள்ளி பருகத் தந்த உன்னத கலைஞன் பாலுமகேந்திராவுக்கு என் இதயபூர்வமான அஞ்சலிகள்.

 

ஜீவ நதியாக பிரவகித்த ஒரு கலைஞன் தன் கரையை கடந்து விட்டான்!

Share this post


Link to post
Share on other sites

"எழுத்தில் இருந்து சினிமாவிற்கு" இயக்குனர் பாலுமகேந்திரா வழங்கும் ஒலிப்பகிர்வு

 
balu.png

கிழக்குப் பதிப்பகம் வழங்கி வரும் மொட்டை மாடிக் கூட்டத்தில் நேற்று இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார் என்ற செய்தி வந்தபோது அந்த நிகழ்வு சென்று கொண்டிருக்கும் நேரம் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரக்குக் கூட்டுத்தாபனத்தில் எனது வானொலி நிகழ்ச்சியும் சமகாலத்தில் இடம்பெறுவதால் ஒரு புதுமுயற்சியாக நேரஞ்சல் செய்வோமே என்று நினைத்தபோது கிழக்குப் பதிப்பகமும், நண்பர் ஹரன் பிரசன்னாவும் முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். எனது நேயர்களோடு நேரடி உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே மறுமுனையில் ஒலித்தரம் குறித்த பரிசோதனையை ஹரன்பிரசன்னா முழு அர்ப்பணிப்போடு செய்து உதவினார் ;-) 

50 நிமிடங்கள் வரை சென்ற இந்த நேரடி இந்த நிகழ்வை வெற்றிபெறச் செய்ய மறுமுனையில் இருந்து உதவிய நண்பர் ஹரன்பிரசன்னாவுக்கு இந்த வேளையில் எனது நன்றிகள். இந்த முயற்சியை சென்னையில் இருந்து சிட்னி, ஐரோப்பா வரை நேரடியாகக் கேட்டு மகிழ்ந்த நேயர்கள் பலர்.

"எழுத்தில் இருந்து சினிமாவிற்கு" (from writing to cinema) இதுதான் இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் எடுத்துக் கொண்ட கருப்பொருள். இதனை வைத்துக் கொண்டு கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் மூன்று மாதங்களுக்குப் போதுமான சினிமாப் பாடத்தையே எடுத்து முடித்து விட்டார் இந்தக் கருத்தரங்கில். எழுத்து வடிவம் கொண்ட ஒரு படைப்பு எப்படி சினிமாவாக் மாற்றம் காண்கின்றது என்பதை பல்வேறு நடைமுறை உதாரணங்களையும் வாழ்வியல் அனுபவங்களையும் இணைத்து அவர் பேசுகின்றார். உண்மையில் சினிமாவை நேசிப்போருக்கும், முனைப்பில் இருப்போருக்கும் இந்தப் பேச்சு கண்டிப்பாகப் பயனளிக்கும். எனவே இங்கே ஒலிப்பகிர்வாகத் தருகின்றேன்.

நேரடியாகக் கேட்க

அங்கம் 1
 

அங்கம் 2

 

நன்றி: http://www.radiospathy.com/2011/03/blog-post_19.html

 

 
 
Edited by sOliyAn

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு