Jump to content

இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1(3900).jpg

நவரத்தினம் கபில்நாத்

'கண்விழியுங்கள் இந்துக்களே, இந்து சமயம் அழிந்தால் அழியட்டும் என்ற எண்ணம் கொண்ட இந்து சமயத்தவரா நீங்கள்? ஆம் என்றால் இதை தொடர்ந்து வாசிக்காதீர்கள்' என்ற தலைப்புடன் வவுனியா முழுவதும் துண்டு பிரசுரங்கள் வெள்ளிக்கிழமை இரவு போடப்பட்டுள்ளன.

சிவசேனா, (பிற மதத்தவரின் கருத்தில் சாத்தானின் பிள்ளைகள்) என உரிமைகோரப்பட்டுள்ள இத் துண்டு பிரசுரத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'இந்துக்கள் யாரும் மற்ற மதத்தினரை இந்து மதத்திற்கு மாற்ற முயற்சிப்பது இல்லை. இந்துக்கள் மற்ற மதத்தவரின் பழக்கவழக்கங்களை தரகுறைவாக பேசுவதும் இல்லை. இந்துக்கள் பிற மத கடவுள்களை தீய சக்திகளாக (சாத்தான்களாக) சித்தரிப்பதில்லை. உலகின் பழமையான மதமாக இருந்தாலும் பெரும்பான்மையான மதமாக இல்லாதற்கு காரணம் நாம் படையெடுத்து சென்ற போதும் கட்டாய மதமாற்றம் செய்யாதது, இருந்தும் எம்மை படையெடுத்து வந்த அந்நியர்கள் எம்மை கட்டாய மதமாற்றம் செய்தனர். 

இன்றும் கூட எம்மை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகின்றனர். இந்துமதம் எமக்கு தந்த சுதந்திரத்தை வேற்று மதத்தவர்கள் ஏன் எம்மவர்களை கொஞ்சம் கொஞ்சமாக வேட்டையாடி வருகின்றார்கள். இதே நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் நாம் பிற மதங்களின் சின்னங்களையே அணிந்திருப்போம்.

நாம் ஒன்றும் மற்ற மதத்தவர் போன்று மூளைச்சலவை செய்து மதம் மாற்றும் கொள்கையுடைய ஈனப்பிறவிகள் அல்ல. எமக்கு வெளிநாட்டிலிருந்து மத அழிப்பிற்கென பண உதவியோ பொருளுதவியோ கிடைப்பதில்லை. காதல் எனும் வலை விரித்து திருமணமெனும் ஆயுதத்தால் எம்மவரை மதம் மாற்றுவோர் நாமில்லை.

இனியும் நாமிதை சுட்டி காட்டாதிருந்தால் நாம் கடவுளுக்கு செய்யும் துரோகமாகும்' என்றும் அந்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 
 
 
Link to comment
Share on other sites

  • Replies 254
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

தமிழ்சூரியன்

கிறிஸ்தவன் [கத்தோலிக்கன்  ] என்ற முறையில் இந்துப்பெண்ணை திருமணம் செய்து கொண்டவன் என்ற முறையில் ...................நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்ற வகையில் ................இப்போ நான் மதத்தால் கிறிஸ்தவன்

சண்டமாருதன்

நல்ல உதாரணம் ஒன்றை சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.   தாம் இந்து என்பதை இந்திய இந்துத்துவம் ஒருபோதும் ஏற்றதும் இல்லை இனிமேலும் ஏற்கப்போவதில்லை என்பதை இவர்கள் உணரப்போவதில்லை.   ஒரு இந்தியப் பார்ப்பனனு

சண்டமாருதன்

சாதி என்னும் சாத்தானை இந்து மதம் ஆணிவேராகக் கொண்டிருப்பதால்தான் அது சாத்தான் ஆகின்றது. இலங்கையில் பேரினவாதம் தமிழர்களின் கோவணத்தை அவிட்டு அம்மணமாக விட்டிருக்கும் நிலையில் சிவசேனை ஒரு கேடா? மூஞ்சசூற

33 கோடி தேவர்கள் இருப்பதாக கூறப்படும் இந்து-சைவ மதத்திலிருந்து பிரிந்து சென்று இன்னொரு கடவுளை வழிபட ஆன்மீக தேவை எழுவதற்கிடமில்லை. இது 33 கோடி + 1 ஒன்றாக் அமைந்தாலும், சனாதன மதமான இந்து மதத்தில் அந்த தத்துவமும் உள்ளடங்கியிருக்கு. சகல மத தத்துவங்களை மட்டும் அல்ல மதமில்லா தத்துவங்களையும் நாஸ்திகஸ்தையும் உள்ளடக்கியது இந்துமதம். நம்பிக்கைதான் மதம் என்பதால் கடவுள் இல்லை என்று நம்புவானின் நமபிக்கையையும் ஏற்று அவனையும் இந்துவாக வைத்துக் கணித்துக்கொள்வது இந்துமதம் மட்டுமே. மற்ற எந்த மதத்திலும் நாஸ்திகன் ஒரு பாகமாக இருக்க முடியது. 

 

இளங்கோ, வள்ளுவன், திருநாவுக்கரசர், ஜே.கிருஸ்ணமூர்த்தி, தமோதரம் பிள்ளை, ஆறுமுக நாவ்லர், விபுலானந்தர் போன்று இளமையில் மதம் மாற்றப்பட்டு பின்னர் திரும்பி வந்தோர் மற்றையைய மதங்களை தெரிந்துதான் திரும்பி வந்தனர். இவர்களின் அகன்ற கண்களில் கண்டது, எல்லோருக்கும் அவர் அவர் மதங்களை பின்பற்ற அரசியல் உரிமை இருக்க வேண்டும் என்ற வறட்டு சட்டவிவாதம் மட்டும் அல்ல, எந்த மதத்தில் இருப்பவனுக்கும் எல்லா மதத்தையும் பின் பற்றவும் உரிமை வேண்டும் என்ற தனி மதம்னித உரிமையையை போதிக்கும் சனாதனதர்ம மான இந்து மதமே.

 

பரம் கம்சர் சில் காலங்களில் பெண்களை போல உடுத்துவார். அன்னை சாராதவை மத்தியில் நிறுத்தி பூசை செய்வார். பாதிரிகள் போல நடந்து கொள்வார். குல்லா கூட போடுவார். தான் முகமதியத்தை,கிறிஸ்தவத்தை பின்பற்றி அந்த அந்த கடவுள்களை கண்டத்தாக சீஸ்சர்களுக்கு கூறின்னர். (இன்று ஆராச்சிகளால் கூறப்படும், வெள்ளையான, மூக்கு நீண்ட, நேர்த்தலைமயிர் உருவம் யேசுபிரானது அல்ல என்றதை பரம கம்சர் தான் கண்ட ஜேசு, சுருள்தலையரும், சப்பை மூக்கும் உள்ளவர் என்று-சரியான ஜேசு காலத்து மத்திய கிழக்காரின் உருவம்-சொன்னத்தை மகாநாத குப்த்தா 100 வருடங்களுக்கு முன்னர் தனது வரலாற்றில் காட்டியுள்ளார்).எந்த கடவுளையும் இந்து மதத்திலிருந்தே இராமகிருஸ்னர் தேடிக்காண்பித்திருக்க மதம் மாறிக் கடவுளை தேடுவதென்பது இராமகிருஸ்னரை விட ஆன்மிகதேவை உள்ளவராக தன்னைத்தான் காட்டும் முயற்சி.

 

இந்து மதத்திற்குள் சாதியை திணித்தவர்கள் ஆரிய மேற்கத்தியர் பின்பற்றும் மதங்களும், ஆரியருமே. அது அவவாறு இருக்க இந்து மதத்திலிருந்து மதம் மாறி ஆன்மிகத்தை காண்போம் என்று கூறுவோரின் கதை குடிசை வீட்டில் ரோச்சை தொலைத்த கிழவியின் கதை போன்றது. வீட்டுக்காறி இரவில் குழந்தைகளின் தேவைக்காக ரோச்சை எப்போதும் ஒரே இடத்தில் வைப்பாள். கிழவிக்கு பகலிலும் சரியாக கண் தெரியாது. இரவு எங்கோவோ ரோச்சை எடுத்து சென்ற கிழவி தடுமாற்றத்தால் ரோச்சை விட்டு விட்டு வந்து விட்டது. மறுநாள் பகல் ரோச்சை வைத்த இடத்தில் இடத்தில் காணாததால் வீட்டுக்காறி கிழவி மீது பாய்ந்தாள். கிழவி "இப்போது வெளிச்சமாக இருக்கிறது, எனக்கு கண் தெரியாது, இரவு வந்தால் நான் அந்த இடத்துக்கு நேராக போய் எடுத்து வந்துவிடுவேன் என்றதாம். ஆனால் தான் ஏன் ரோச்சை எடுத்து சென்றது என்ற சின்ன விளக்கம் கிழவிக்கு இல்லை. அதாவது இந்து மத்த்தில் இருந்த போதே குருடர்களாக வாழ்ந்து இந்து மதத்தை தெரிந்து கொள்ளாத முட்டாள்கள் மற்றைய மதத்தையும் அறிந்து ஒப்புவமைகண்டு விட்டதாக துள்ளிக்குதிப்பது கோணங்கித்தனம். இருட்டின் போது வெளிசசத்திற்காக ரோச்சை எடுத்து சென்று தொலைத்த தடுமாற்றம் பிடித்த கிழவி இருட்டுவந்தால் ரோச்சை கண்டு பிடித்துவிடலாம் என்று போதிப்பது நகைச்சுவை. , 

 

இந்து மதத்தில் இருந்து மதம் மாறுவது தமது சட்டப்படியான உரிமை என்றதை நிர்ணயம் செய்துகொள்ள மாறுகிறார்களாயின் அது வேறு. சாதிப் பாகுபாடு இருப்பதால் இந்து மதத்தில் கடவுள் இல்லை என்று விதண்டவாதம் வைக்க முயல்வது வேறு. அதிலும் சாதிப்பகுபாட்டு ஏற்பட காரணமாக் இருந்த மதத்தினர் அதை வைப்பது துரோகம். முகமதிய, கிறிஸ்துவ, யூத மதங்களை பின்பற்றும் ஆரியரால் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழருக்குள் திணிக்கப்பட்டது தான் சாதியம். அதை அறியாதவர்கள் போல அந்த இருட்டுக்குள் திரும்ப சென்றால் தொலைத்த ரோச்சை கண்டுவிடுவோம் என்று தடுமாற்றக்கார கிழவி மாதிரி பேசுவது ஏமாற்றுத்தந்திரம்.

 

அமெரிக்காவில் படித்தவர்கள் மதம் சாரா அரசியல் அமைப்பை உலகத்திற்கு ஆக்கி காட்டி சாதனை ஏற்படுத்தியது, அவர்கள் கிறிஸ்த்தவ மதம் ஆட்சி பீடம் ஏறாமல் இருக்க செய்த மாபெரும் சாதனையே அது.   அமெரிக்க கிறிஸ்தவத்தில் கறுப்பர்கள், செவ்விந்தியர்கள் அடிமைகளாக காணபட்டமையாலேயே அவர்கள் அதை செய்தார்கள். இந்தியாவில் மட்டு மல்ல முகமதியர் ஆண்ட இடமெங்கும் இஸ்லாமியர் வரி கொடுக்காதிருக்கும் போது ஆளப்படும் மதங்கள் மட்டும் வரி கொடுக்க வேண்டும் என்று தண்டம் இறுத்தமைதான் இஸ்லாமியரின் சரித்திரம். மதத்தை திருத்த முடியாவிட்டாலும்  மேற்கு நாட்டு கிறிஸ்த்தவர்கள் ஜனநாயக முறைகளை ஆட்சி முறையில் ஏற்றுக்கொண்டுவிட்டதால் பணம், இருப்பிடம், வேலை கொடுத்து மதம் மாற்றுவதுதான் அவர்களின் நடத்தை. ஆனால் மத்திய கிழக்கில் இந்து பெண் மொட்டாக்கு போடாமல் பொட்டு வைத்து செல்ல முடியாது. அந்த மத்தை பின்பற்றுவோர் இந்து மத்தை பற்றி பேசும் பேசுவது தடுமாற்ற கிழவின் பேச்சை விட நகைப்பானது. 

 

சுத்த மத வெறியர்கள் சனாதன மத்தினரான இந்துக்களின் அடிப்படை சைவ சித்தாங்கள் என்ன மாதிரியான மதமொன்றை பற்றி சொல்கின்றான என்ற எள்ளவும் தெரியாத தங்களை அறிவை காட்டுவதுதான் இந்துக்களில் ஏர்ஹு ஒருவைகை இனம் காணமுடியாத ஒரு வெறி இருப்பதாக காட்ட முயலும் குதர்க்க கதை. அப்படி இனம் காண முடியாத உண்மை வெறி இங்கே என்ன என்றால் மதம் மாறாவிட்டால் பெண் கொடுக்க மறுக்கும் மதம் மீது குற்றம் காண முடியாமல் பொய் சொல்லி தன் மதத்தை இழிவு படுத்துவோரை ஏற்கமறுப்போறை வெறியகளாக காட்ட முயலும், தனினத்தை தூற்றும் ஒரு துரோகத்தன வெறிதான் அவர்களால் தங்களுக்குள் இனம் காண முடியாமல் இருக்கிறது.   

 

 

Link to comment
Share on other sites

"அது அவவாறு இருக்க இந்து மதத்திலிருந்து மதம் மாறி ஆன்மிகத்தை காண்போம் என்று கூறுவோரின் கதை குடிசை வீட்டில் ரோச்சை தொலைத்த கிழவியின் கதை போன்றது"

அண்ணா,

எந்த கோவிலில் தமிழிலில் போதனை நடக்கிறது. எப்பவோ செத்துப்போன பாரசீக சமக்கிருதத்தில் போதனை செய்தால் யாருக்கு தான் ஆன்மீகம் விளங்கும்?

ஏசுவிற்கும், அல்லாவிற்கும் தமிழ் விளங்குகிறது ஆனால் தமிழர் கடவுளுக்கு பிடிக்காதாம்.

சும்மா மணி அடித்து தட்சிணை சேர்ப்பதில் மட்டும் குறியாக இருக்காமல் சைவ சமைய போதனைகளை, ஆன்மீக உரையாடல்களை கூட்டவேண்டும்.

எங்கள் அம்மை, அப்பனின் மொழி தமிழ்!!

Link to comment
Share on other sites

விவசாயி:

 

சைவசித்தாந்தம் முழுவதும் தமிழ் நூல்கள்தான். தனிய சங்கரர் மட்டும்தான் சமஸ்கிருதத்தில் சைவசித்தாந்த கருத்துக்களை எழுதினார்.  பெரும்பாலான பிரமணருக்கும் சைவ சித்தாந்த நூல்களில் சொல்லப்படும் தத்துவங்கள் தெரியாது. அவர்கள் வேதங்களை உருப் போட்டவர்களே. 

 

சைவ சிந்தாந்த நூல்கள் வெளிவர முன்னரே வேற்று தாயிடம் பால் குடித்ததற்கு தந்தையிடம் அடிவாங்கிய பிராமண சிறுவனின் வசனம்தான் "வேதம் நான்கிலும் மெய்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே" - (ஒரே ஒரு தமிழ் மந்திரம்) என்றது. அந்தக்காலத்தில் பிராமணர்கள் கூட பூசையையும், வேத மந்திரங்களையும் சைவ சித்தாந்த கோட்பாடுகளில் திணிக்க முயவில்லை என்பதுதான் அதன் கருத்து. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கோ, வள்ளுவன், திருநாவுக்கரசர், ஜே.கிருஸ்ணமூர்த்தி, தமோதரம் பிள்ளை, ஆறுமுக நாவ்லர், விபுலானந்தர் போன்று இளமையில் மதம் மாற்றப்பட்டு பின்னர் திரும்பி வந்தோர் மற்றையைய மதங்களை தெரிந்துதான் திரும்பி வந்தனர். 

 

இளங்கோவும் வள்ளுவனும் ஆதியிலே இந்து மதத்தவர்கள் என்பதற்கும் மதம் மாறி பின்னர் இந்து மதத்துக்குப் திரும்பி வந்தனர் என்பதற்கும் தக்க சான்றுகள் தங்களால் காண்பிக்க முடியுமா?

 

இளங்கோவும் வள்ளுவனும் சமண சமயத்தவரே. திருநாவுக்கரசர் இவ்விருவருக்கும் காலத்தால் பெரிதும் பிந்தியவர். கி.பி 7ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர். அவர் காலத்தில் தமிழகத்தில் ஆரியம் வேரூண்டி விட்டிருந்தது.

Link to comment
Share on other sites

இளங்கோவும் வள்ளுவனும் ஆதியிலே இந்து மதத்தவர்கள் என்பதற்கும் மதம் மாறி பின்னர் இந்து மதத்துக்குப் திரும்பி வந்தனர் என்பதற்கும் தக்க சான்றுகள் தங்களால் காண்பிக்க முடியுமா?

 

இளங்கோவும் வள்ளுவனும் சமண சமயத்தவரே. திருநாவுக்கரசர் இவ்விருவருக்கும் காலத்தால் பெரிதும் பிந்தியவர். கி.பி 7ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர். அவர் காலத்தில் தமிழகத்தில் ஆரியம் வேரூண்டி விட்டிருந்தது.

 

கேட்டால் இளங்கோவும், வள்ளுவனும் வாழ்ந்ததற்கே கொடுக்க சான்றுகள் இல்லை.

 

ஆதி என்ற புலைச்சி  சிறுமி தான் உண்டுகொண்டிருந்த போது எட்டி பார்த்து தனது சப்பாட்டை கண்டாதால் கோபம் கொண்ட பிரமணான பகவன் புலைச்சியை தன் கையிலிருந்த அகப்பையால் அடித்தார் என்றும் அவள் தலை பிளந்து சிறுமி துடிதுடித்தாள் என்றும், பின்னர் அந்த புலைச்சி வேறு ஓரிடம்  சென்று வளர்ந்து அழகிய குமரியான போது அவளை அறியாமல் பகவன் அவள் மீது காதலில் விழுந்தான் என்றும், திருமண சடங்கில் ஆதியின் தலையில் பால் வைக்கும் போது கண்ட பாரிய தழும்பை பற்றி பகவன் விசாரித்த போது கள்ளமில்லாமல் அந்த குமரி தனது காதலனுக்கு தனக்கு சிறு வயதில் நடந்த கொடூரத்தை பற்றி சொன்னாள் என்றும், அவளை புலைச்சியாக அடையாளம் கண்ட பவகந் திருமணத்துக்கு மறுக்க அவள் அவன் காலில் விழுந்து வேண்டி தனக்கு பிறக்கும் பிள்ளைகளை பிறந்த இடத்தில் விடுவத்ற்கு சம்மதித்து திருமணத்தை முடித்தாள் என்றும், முதல் பிள்ளையாக சூரியனையும் மிஞ்சும் ஒளியுடன் பிறந்த  பிள்ளையான வள்ளுவனை அவள் விட்டு பிரிய மனம் இல்லாமல் அந்த இடத்தில் அழுது வேதனைப்பட வள்ளுவன் வாய் திறந்து, "அம்மா நீ கொடுத்த வாக்கை காப்பாற்று, நானும் எனக்கு பிறகு பிறக்க போகும் சகோதரர்களும் எங்களை காப்பாற்றிக்கொள்வோம், நீ இந்த இடத்தை விட்டு போ" என்று கூறினான் என்றும் ஒரு கர்ணபரம்பரைக கதை  உண்டு. இதனால் வள்ளுவன், ஔவை, அதிகமான் போன்ற எழுவரும் பிறந்த இடத்தில் விடப்பட்ட அனாதைகள். இதில் வள்ளுவளின் மதம் பற்றிய அடிபாடுகள் இன்று உண்டு; மற்றய அறுவரும் பிரச்சனை இல்லாத இந்துக்கள். எனவே வள்ளுவனையும் இந்துவாகவே கொள்வார்கள். இந்த கரண்பரமபரை கதையை விட வள்ளுவரின் குறள்கள் எல்லாம் நாலடியார் போன்ற சமண மத நீதி நூல்களை ஒத்திருப்பத்தால் அவர் சமணத்தை அறிந்திருந்தார் என்பது தெளிவு. அந்தணரையும், இந்திரன், தேவர்களையும் பற்றி பேசுவதால் பிற்காலம் இந்துவாக இருந்தார் என்பதும் தெளிவு. எனவே இடைக்காலத்தில் சமண மத பள்ளியில் படித்திருந்தார் என்பது தேற்றம்.

 

இங்கோ தனது தமையான சேரன் செங்குடுவனின் அரண்மையில் முதல்மந்திரி போன்ற தானத்தில் இருந்தார். கண்ணகிக்கு சிலை எடுக்க போரை எற்று விவாத்தித்தார் என்பது சிலப்பதிகாரத்தால் அறியக்கிடக்கிறது. கர்ணபரம்பரை கதைப்படி அரசிக்கு மிகவும் நம்பிக்கையான சோதிடர் சேரர் பரம்பரையில் நடககாத குழப்பம் செங்குட்டுவனுக்கும், இயங்கோவுக்கும் இடையில் ஏற்படலாம் ஏன்று கூறினாராம். இளங்கோவின் கிர நிலைகள் செங்குட்டுவனினதை விட புகழ் ஏணியில் ஏற்றும் வல்லமை உள்ளதால் இளங்கோ செங்குட்டுவனை ஆளவிடமாட்டான் என்று சோதிடம் கூறினார். செங்குட்டுவன் வெகுண்டெழுந்து வாளை உருவிக்கொண்டு கோளையும் நசியலுமானா உன்னால் முடியுமானால் இப்போதே போருக்கு வா என்று அழைத்தானாம். இளங்கோ தன் வாளை உறையோடு கழற்றி தமையனிடம் கொடுத்துவிட்டு, "அரசு உனதே, என் உயிர் உள்ள்வரைக்கும் வேறு எதுவும் நடக்காது" என்று கூறிவிட்டு அரண்மனையை விட்டு சென்றுவிட்டான். 

 

அரச இலட்சணங்களுக்கும் மேலாக ஒளி சுடர் விட்டு பிரகாசிக்கும் சிறுவன் தலை நகர் வீதில் அழுக்கான உடைகளுடன் பசிக்களையுடன் அலைவதைக்கண்ட சமணத்துறவிகள் அவனை அணுகி அவன் கதையை கேட்டனர். சிறுவனின் பேச்சில் அவனின் கல்வியின், கலைகளின் ஆழத்தைகண்ட அவர்கள் அவனை அரண்மனைகு திரும்ப விடாமல் தங்கள் பள்ளிக்கு எடுத்து சென்று ஒழித்து விட்டார்கள். பிற்காலம் வளர்ந்து தான் அரசனான பின்னர் தன் தம்பியை தேடி அலைந்த செங்குட்டுவன் இறுதில் பள்ளி ஒன்றில் துறவியாக கண்டான். அவனை வற்புறுத்தி அழைத்து வந்து அரசில் பாதியை கொடுக்க துறவியான இளங்கோ ஏற்றுக்கொள்ளவில்ல. ஆனால் செங்க்குட்டுவன் அதன் பின்னர் இளங்கோவை பள்ளி செல்ல அனுமதிக்க வில்லை. இதனால் அண்ணனின் அரண்மனையில் இளங்கோ முதன் மந்திரியாக அரண்மனையை நடத்தும் பொறுப்பை நிர்வகித்தார். 

 

சிலபதிகாரம் முழுவதிலும் வைத்து இளங்கோவின் தலைமறைவான கால வாழ்க்கையின் சுவடுகள் அறியப்பட்டிருக்கின்றன. 

 

திருநாவுக்கரசர் 7 ம் நூற்றாண்டு என்பது சிலரின் விவாதம் ஆனால் அவர் பல்லவர்களின் காலத்தவர். நிச்சயமாக 7 ம் நூற்றாண்டுக்கு எவ்வளவோ முன்னராக இவரதுகாலம் போடப்பட வேண்டும். களபிரயர் முடிய பல்லவர் எழுச்சி அடைந்துவிட்டார்கள்.  இவரின் சக காலத்தில் திருஞான சம்பந்தர் எழுச்சி அடைந்து வந்து கொண்டிருந்த பாண்டியருடன் தொடர்புகள் வைத்திருந்தார். 

 

அந்தணர் தங்களை உயர்வானவர்களாகவும், தேடி மட்டும் திருமணம் செய்வதும் சிந்து வெளியில் இருந்து வருகிறது. ஆனால் சாதியம் என்ற இன்றைய பாகு பாடு இருக்கவில்லை. நான் படித்த ஒரு அமெரிக்கரின் சிந்து வெளி குயவரின் கட்டுரைப்படி இவர்கள் தான் சிந்து வெளியின் மொழியை களிமண் தட்டுக்களிலும், முத்திரைகளிலும் எழுதியவர்கள். எனவே இவர்கள்தான் பலர் அந்த நேரத்தில் பிராமணர் என்ற தரம் பெற்றவர்கள். ஆரியம் ஆரிய மதங்களான சமணம், புத்தம் போன்ற்வற்றுடன்தான்முதன் முதல் தமிழ் நாட்டுக்கு வரத்தொடங்கியது.  பாளியையையும், சமஸ்கிருத்த்தையும் இவர்கள்தான் களப்பிரயர் காலத்தில் தமிழ் நாட்டில் திணித்தவர்கள். 

Link to comment
Share on other sites

சாதி என்னும் சாத்தானை இந்து மதம் ஆணிவேராகக் கொண்டிருப்பதால்தான் அது சாத்தான் ஆகின்றது.

இலங்கையில் பேரினவாதம் தமிழர்களின் கோவணத்தை அவிட்டு அம்மணமாக விட்டிருக்கும் நிலையில் சிவசேனை ஒரு கேடா? மூஞ்சசூறு தான் போக வழியைக் காணாதபோது விழக்குமாத்தை காவிக்கொண்ட போக நினைப்பதுபோல் தமிழர்கள் சிங்கள அடிமைத்தனத்தில் இருந்த விடுபட முடியாத நிலையில் மத எழுச்சி ஒரு கேடா?

சிங்களம் அடுத்த கட்ட இனவழிப்புக்கும் சுத்திகரிப்பிற்கும் பிரிவினைவாதத்திற்கும் வழிகோலுகின்றது. மதவெறியை தூண்டிவிட்டு இஸ்லாமியர் கிறிஸ்த்தவர் இருந்து என்று மோதலை ஏற்படுத்தி எஞ்சியுள்ள தமிழர்களை காவுவாங்க நினைப்பதற்கு இந்து மத வெறியர்களும் காரணமாகின்றனர். புலிக்கு விசிலடித்ததுபோல் இந்து மத எழுச்சிக்கு புலம்பெயர் நாட்டில் இருந்த விசிலடிக்கட்டும். வறுமைப்பட்ட மக்கள் கழுத்தறுபட்ட சாகநேரிடும். என்னுமொரு முள்ளிவாய்க்கால் மத அடிப்படையில் உருவானால் அது ஆச்சரியமான விசயம் கிடையாது.

ஒருவேளை மதவெறியின் பிரகாரம் இலங்கையில் இந்துக்கள் அழிக்கப்பட்டால் இந்திய இந்துத்தவம் ஒருபோதும் காப்பாற்ற வராது. கடந்த காலத்தில் சிங்களப்பேரினவாதத்தை ஊக்குவித்ததுபோல் தமிழர்களின் அழிவுக்கு அது என்னும் வழிகோலும்.

எந்த ஒருவன் இந்துதுவா என்று ஈழத்தில் ஆரம்பிக்கின்றானோ அவன் தமிழர்களை அழிக்கக் கங்கணம் கட்டுகின்றான் என்று பொருள்.

உனது மதம் சதி பேதங்களற்று நன்னெறியுடனும் மனிதாபிமானத்துடனும் இருந்தால் ஏன் அடுத்த மதத்திற்கு போகப்போகின்றார்க்கள்? நீங்களே சமண பௌத்த மதங்களில் இருந்து சைவத்துக்கும் சைவத்தில் இருந்த இந்துவுக்கு மதம் மாறியவர்கள்தான். உங்களுக்கே நீங்கள் யார் என்ற அடிப்படைக்கு அர்த்தம் தெரியாதநிலையில் மத மாற்றத்திற்கு குய்யோ முறையோ என்று கூச்சலிடுகின்றீர்கள்.

திருவள்ளுவர் சமண மதத்தவர். அவர் ஒருபோதும் மதத்தை தமது எழுத்தில் முன்வைத்ததில்லை. இளங்கோ அடிகள் பௌத்தத்தை சார்ந்தவர்.அவர் படைத்த இலக்கியங்கள் அது சார்ந்தது. தீண்டத்தகாத சமூகத்தைச் சேர்ந்த திருவள்ளுவருக்கு புனூலைப்போட்டு இந்துவாக்கிவிட்டீர்கள். அதற்கு நியாயப்படுத்தல்கள் வேறு ! அயிரக்கணக்கான பௌத்த சமணர்களை கழுவேற்றிய கிரிமினல்கள் பின்னர் நாயன்மார்களாகிவிட்டனர். சைவ இந்து மத வரலாற்றில் எந்த உண்மையோ நியாயமோ அறமோ மனிதாபிமானமோ கிடையாது. அதை கிண்டக் கிண்ட நாறும். இரத்தம் மணக்கும். அதற்கு வக்காலத்து வாங்க முடியாது.

Link to comment
Share on other sites

"இந்துக்களின்" இடங்களில் விகாரைகள் கட்டப்படுவது பற்றி இந்தத் துண்டுப்பிரசுரம் ஏன் கேள்வி எழுப்பவில்லை? தங்களின் வீரத்தை அங்கே காட்டலாமே?!

Link to comment
Share on other sites

"இந்துக்களின்" இடங்களில் விகாரைகள் கட்டப்படுவது பற்றி இந்தத் துண்டுப்பிரசுரம் ஏன் கேள்வி எழுப்பவில்லை? தங்களின் வீரத்தை அங்கே காட்டலாமே?!

 

பின்னாளில் புத்தர எடுத்துவிட்டு முருகனை வைக்கலாம் சுகமா என்பதால் கேள்வி கேட்கவில்லை போலும் அமைச்சே .. :D :D

Link to comment
Share on other sites

வள்ளுவர் சமணர், இளங்கோ பௌத்தர் என்பதற்கு யாரும் சான்றுகளை தரலாமே?

 

எல்லாமே ஒரு அனுமானம் தான் --அதுவும் இந்துமதத்தை வெறுப்பவர்களால் பரப்பப்பட்டது....

 

இந்துமதத்திற்கு இன்னொரு மறுமலர்ச்சி தேவை...கொசு (கிறித்துவ, இஸ்லாமிய) தொல்லைகள் அதிகமாகிவிட்டது....

Link to comment
Share on other sites

உனது மதம் சதி பேதங்களற்று நன்னெறியுடனும் மனிதாபிமானத்துடனும் இருந்தால் ஏன் அடுத்த மதத்திற்கு போகப்போகின்றார்க்கள்? நீங்களே சமண பௌத்த மதங்களில் இருந்து சைவத்துக்கும் சைவத்தில் இருந்த இந்துவுக்கு மதம் மாறியவர்கள்தான். உங்களுக்கே நீங்கள் யார் என்ற அடிப்படைக்கு அர்த்தம் தெரியாதநிலையில் மத மாற்றத்திற்கு குய்யோ முறையோ என்று கூச்சலிடுகின்றீர்கள்.

 

எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனாலும் இதை இங்கு எழுதுகிறேன்.

 

சில சைவ சமயத்தவர்கள் கிறிஸ்தவர்களை திருமணம் செய்யும் போது திருமணத்துக்காக மதம் மாறியுள்ளார்கள். (மாற்ற வைக்கப்பட்டுள்ளார்கள்). அதிகளவில் காதல் திருமணத்தில் தான் இது நடைபெறும். காதலித்து விட்டு மதம் மாறினால் தான் திருமணம் செய்வேன் என கூறி மதம் மாற்றி திருமணம் செய்தவர்கள் பலர் உள்ளார்கள்.

 

அண்மையில் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவர்கள் குடும்பத்தை சேர்ந்த ஆண் ஒருவருக்கு பெண் பார்த்தார்கள். பெண் சைவ சமயம். இருவருக்கும் திருமணம் செய்வதற்கு எல்லாம் பேசி ஓகே என்றாகி விட்டது. உறவினர்களுக்கும் சொல்லியாயிற்று. கடைசியில் அப்பெண்ணை கிறிஸ்தவத்துக்கு மதம் மாறுமாறு கேட்டார்கள். அதற்கு பெண் மறுத்து விட்டார். கிறிஸ்தவரை திருமணம் செய்வதில் தனக்கு பிரச்சினை இல்லை. ஆனால் மதம் மாற மாட்டேன் என குறிப்பிட்டார். பின்னர் அப்பெண்ணை வேண்டாம் என கூறி விட்டு வேறு பெண்ணை பார்க்கிறார்கள். அவர்கள் கூறிய காரணம் தாம் கத்தோலிக்க மதமாம். அதனால் வேறு மதத்தவர் என்றால் தமது மதத்துக்கு மாற வேண்டுமாம். :unsure: (ஆண் பிரான்சிலுள்ளார். பெண் இலங்கையிலா பிரான்சிலா என தெரியவில்லை.)

 

இது சரியான செயலா? (இந்த பெண் மதம் மாற மாட்டேன் என கூறியுள்ளார். ஆனால் பேசியாயிற்று. உறவினர்கள் பலருக்கு கூறியாயிற்று. இனி என்ன செய்வது, திருமணத்தை குழப்ப கூடாது என்பதற்காக வேறு வழியில்லாமல் மதம் மாறுபவர்களும் உண்டு.)

 

பத்தாக்குறைக்கு இன்னுமொரு வீட்டில் தமது சொந்தத்திலுள்ள ஒரு ஆணை நான் தமது மதத்துக்கு மாறி திருமணம் செய்வேனா என என்னிடம் கேட்டார்கள். (கொடுமை :)) எனக்கு தான் கடவுள் பக்தியே இல்லையே. மதம் மாறுவதில் பிரச்சினை இல்லை தானே எனவும் கூறி கேட்டார்கள். :o நான் அந்த நபரை திருமணம் செய்ய போறதில்லை. :wub: ஆனால் அவர்கள் கேட்டது பிழை என்பதை குறிப்பிடவே இங்கு இச்சம்பவத்தை கூறுகிறேன். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை கூட மதம் மாற வேண்டும் என கேட்பது சரியா? :unsure:

 

இஸ்லாமியர்களும் திருமணம் செய்வதானால் தமது மதத்துக்கு மாற வேண்டும் என கூறுவதுண்டு.

 

மத ஒற்றுமையை குலைப்பது போலிருந்தால் நிர்வாகம் இக்கருத்தை நீக்கி விடுங்கள். :rolleyes:

Link to comment
Share on other sites

"இந்துக்களின்" இடங்களில் விகாரைகள் கட்டப்படுவது பற்றி இந்தத் துண்டுப்பிரசுரம் ஏன் கேள்வி எழுப்பவில்லை? தங்களின் வீரத்தை அங்கே காட்டலாமே?!

அந்த வீரத்தை  கேட்டவர்களை தானே நடு றோட்டில் கொண்டு வந்து எல்லாரும் விட்டு விட்டோம்.

Link to comment
Share on other sites

கிறிஸ்தவன் [கத்தோலிக்கன்  ] என்ற முறையில் இந்துப்பெண்ணை திருமணம் செய்து கொண்டவன் என்ற முறையில் ...................நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்ற வகையில் ................இப்போ நான் மதத்தால் கிறிஸ்தவன் = இந்து ...................எள்ளு எண்ணெய் எரிப்பவன் .............அதே வேளை தேவநற்கருணை எடுப்பதில் இடைவெளி கொடாதவன் .....................ஆனால் மகிழ்ச்சியாய் வாழ்பவன் .............................மனிதனாக வாழ நினைப்பவன் ................. :)

Link to comment
Share on other sites

இலங்கையில் தமிழரை அழிக்க இரவு பகலாக தமிழருக்கும் முஸ்லீம்களுக்கும் ஆப்பிறுக்களில் இறங்கி முஸ்லீம்களை வெற்றிகரமாக ஒதுங்க வைத்தவர்கள் இலங்கையில் இந்து மதம் அழிக்கபடும் போது அதை காக்க இந்திய மதவெறியர்கள் வருவார்களா என்று கேட்கிறார்கள். கொமேடிதான். ஒநாய் ஒன்று ஆட்டுக்காக அழுததைவிட கண்ணிர் மலகத்தக்க துன்பியல் கதை.

 

புத்தமதம் இலங்கையில் பரவேண்டும் என்ற இந்த கூட்டம் யாழில் வாதிட்ட போது ஆங்கில பத்திரிகைக்களில் இலங்கையின் மகாநாம புத்தத்தால்தான் அழிவு; அதை சிங்கள மக்கள் கைவிட வேண்டும் எறு விவாத்திதார்கள். (இலங்கையில் சிங்கத்தை புணர்ந்ததால் தமக்கு தொடர்ந்து இரத்தம் வேண்டும் என்று மகா வம்சத்தில் எழுதி வைத்துக்கொண்டு தமிழ நாட்டு சரித்திரம் தெரியாமல் கதை எழுதுகிறார்கள். இலங்கையின் மகாவம்சத்தை தன்னும் படித்திருந்தால் பண்டியனின் அரன்மனையில் திருஞான சம்பந்தருக்கு நடந்தது தெரிந்திருக்க வேண்டியதேவை இல்லை. மாகாவம்சத்தில் புத்தர் இலங்கையை புத்தமத நாடாக்க வேண்டும் என்று கேட்டதற்காக இலங்கையை புத்தமாக்கும் போது கக்கீமும் அசாத்சாலியும் பிளாடிக் சேஜறிக்குத்தான் போக வேண்டும்  ) இதை வட மாகாண முதல்வரே பார்த்துவிட்டு படித்த சிங்களவர்கள் சொலவது போல  இங்கையின் சரித்திரம் மதவெறியர்களால் அல்லாமல் அறிஞர்களால் திருமப எழுத பட வேண்டும் என்று கோரிக்கை விட்டார். அதற்கு கூடத்தான் படித்தவர்களிடம் வரவேற்பு கிடைத்தது.

 

அழியப் போவது இந்துமதம் அல்ல. இப்போது அவலப்படுவது தமிழரல்ல. கோத்தாவின் கூத்துக்கள் தமக்கு போக இடம் கிடையாமல் போக போகிறதே என்ற்தை உணர்ந்து பலதடவைகள் தங்கள் தமிழ் மக்களுக்கிடயிலான ஆப்பிறுகளை திசை மாற்றுகிறார்கள். ஈழத்தமிழரின் தாலித்துக்கள், இந்த ஆப்பிறுக்கல்களின் கதை கேட்டு ஏமாந்து கூட்டமைப்பிடம் கொழுவிகொண்ட மு.கா மாதிரி இல்லாமல் விக்கிலேஸ்வரனுக்கு 95% தொடக்கம் 100 % வாகுக்களையும் போட்டுவிட்டு வடமாகாண அதிகாரத்தை கைப்பற்றி வந்து தமக்கு நீதி பெற்றுத்தரட்டும் என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஈழத்தின் தேர்தல் சரித்திரத்தில் என்றுமே குலம் குறைந்த மக்கள் ஆபிறுக்கல்களை கேட்டு தமிழரசுக்கட்சியையோ கூட்டணியையோ, கூட்டமைப்ப்யோ விட்டு பிரிந்து போனது கிடையாது. ஆப்பிறுகல்களை கேட்டு அதன் படி ஒழுகிய முஸ்லீம் தலைமைகள் இன்று காலில் விழ பொதுபல சேனா கூட இல்லாமல் தவிக்கிறார்கள்.

 

பௌசி என்ற கோமாளி மத்தியகிழக்கில் பிச்சைக்கு போய் நிற்கிறது. கக்கீம் என்ற தறுதலை "மகிந்தாவை விழுத்த மட்டும்தான் போர்க்குற்ற விசாரணை அமெரிக்கா கேட்கிறது" என்று ரஸ்சிய வெளிவிவகார ராஜதந்திரிக்கு சொல்கிறது. (இது எந்த ஆங்கில செய்தியிலும் வந்ததையும் நான் காணவில்லை.) அவமானகரமாக அசாத் சாலி மகிந்தாவிடம் காலில் விழாத குறையாக 20,000 முஸ்லீம்களை கொன்றிருக்கிறார்கள் புலிகள்; எங்களுக்கு நீதி வேண்டும் என்று புலம்பியிருக்கிருக்கிறார்.(இதை தமிழில் காணவில்லை). இந்த கக்கீம் தான் சாதி திமிர் பிடித்த இராமாயன கதையை தமிழருக்கு படிப்பிக்க கனடா வர முயன்றார் என்பதையும் நினைவில் வைக்க வேண்டும். இருந்த எதிர்ப்பால் தான் அங்கேயே நின்றார்.

 

1915 ல் முதலாம் உலகமாக யுத்ததில் தன் உயிரை பணயம் வைத்து இராமநாதன் இங்கிலாந்து சென்றது சிங்கள் மக்கள காப்பாற்ற என்றில்லை. முஸ்லீம்கள் இலகுவில் ஆப்பிறுக்கல் சங்கீதங்களுக்கு காவடி ஆடுபவர்கள் என்பதாலேயே. அன்று அவர்கள் வெள்ளைகளுடன் சேர்ந்து சிங்கள்வர்களை அடித்தார்கள். இராமநாதன்தான் உயிரை பணயம் வைத்து தலையிட்டு இன ஐக்கியத்தை கொண்டுவந்தார். ஆனால் அவர் தலையிடாமல், முஸ்லீம்கள் வெள்ளைகளின் அனுசரனையுடன் தொடர்ந்து சிங்களவர்களை தாக்கியிருந்திருந்தால், சுதந்திரம் கிடத்தவுடன் முஸ்லீம்கள் ஓடிப்போய் பாய இந்து சமுத்திரத்தை கூட சிங்களவர்கள் மிச்சம் விட்டிருந்திருக்க மாட்டார்கள். ஆனால் அன்று இன ஐக்கியத்துக்கு இராமநாதன் பாடுபட்டதால், முஸ்லீம்களின் இருப்பை வரும் மார்சு வரையும் அவர் உறுதி செய்தார். அதன் பிறகு அவர்களை காக்க யாரும் இருக்கப் போவதில்லை.  தனியத்தான் சிங்களவர்களிடம் அலகில் வாங்குவார்கள். 


"இந்துக்களின்" இடங்களில் விகாரைகள் கட்டப்படுவது பற்றி இந்தத் துண்டுப்பிரசுரம் ஏன் கேள்வி எழுப்பவில்லை? தங்களின் வீரத்தை அங்கே காட்டலாமே?!

அவர்தான் எழுப்ப வேண்டுமா? அப்படி எழுப்புவது சரியாயின் நீங்கள் அதை செய்தால் உங்களுக்கு தோசமா? 

Link to comment
Share on other sites

தமிழ்சூரியன் நீங்கள் ஆயரத்தில் ஒருத்தர்...மற்ற 999 பேரும் மேலே துளசி  சொன்னது மாதிரி தான்....

Link to comment
Share on other sites

திருமண விவகாரத்தில் அவர்கள் எடுத்துக்கொள்ளும் முடிவு அவர்களுக்கானது. ஆனால் இலங்கையில் இருக்கும் மகாவம்சத்தில் சொல்லியிருக்கும் கொலைகளை அறியாமல் தமிழ் நாட்டு சரித்திரத்தை பொய் பிரட்டாக எழுதும் கோமாளித்தனத்தை என்ன என்பது. மகாவம்சத்தில் விஜயன் செய்த்த அநியாயங்களின் தோசத்தை போக்க முத்துமாரி அம்மன் கோவிலில் சிங்களவர்கள் இராணி குவேனிக்கு கோவில் கட்டி சிலை எடுத்திருக்கிறார்கள். இந்த கோத்தாவின் கூத்தாடிகள் தமிழ் நாட்டு சரித்திரத்தை திருப்பி எழுத முதல் இந்த செய்திகளை படித்திருக்கலாமே.  அதன் பின்னர் விக்கினேஸ்வரன் கேட்டது போல இலங்கை சரித்திரத்தை திருப்பி எழுதலாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எல்லோரும் எங்களை 'இந்து' என்று குறிப்பிடுகிறார்களோ தெரியவில்லை! நாங்கள் 'இந்துக்கள்' இல்லை!

 

இதை நான் சொல்லவில்லை! காலஞ்சென்ற இந்தியப்பிரதமர் 'ராஜீவ்' காந்தியே சொல்லியிருக்கின்றார்!

 

இந்திய இராணுவம் வந்த காலத்தில், இந்திய இராணுவத்தின் ஒரு பகுதியினர், தாங்கள் 'சக' இந்துக்களைக் கொலை செய்ய வேண்டியுள்ளதே என்று ஆதங்கப்பட்டார்களாம்!

 

அப்போது அவர், உண்மையான இந்துக்கள் 'வைரவ சூலத்தை' வணங்குவதில்லை!

 

எனவே நாங்கள் 'இந்துக்கள்' அல்ல! அவரது கருத்துப்படி 'அசுரர்கள்" ! அழிக்கப்படவேண்டியவர்கள்! :wub:

 

இதுவே இன்று வரை, இந்திய ஆழும் வர்க்கத்தின் பார்வை!

 

மற்றும்படிக்குச் சண்டமாருதனதும், யாழ் வாலியினதும் கருத்துக்களுடன் உடன்படுகின்றேன்!  

Link to comment
Share on other sites

உனது மதம் சதி பேதங்களற்று நன்னெறியுடனும் மனிதாபிமானத்துடனும் இருந்தால் ஏன் அடுத்த மதத்திற்கு போகப்போகின்றார்க்கள்? நீங்களே சமண பௌத்த மதங்களில் இருந்து சைவத்துக்கும் சைவத்தில் இருந்த இந்துவுக்கு மதம் மாறியவர்கள்தான். உங்களுக்கே நீங்கள் யார் என்ற அடிப்படைக்கு அர்த்தம் தெரியாதநிலையில் மத மாற்றத்திற்கு குய்யோ முறையோ என்று கூச்சலிடுகின்றீர்கள்

 

தங்கள் மதம் சரியில்லை என்றதை தெரிந்தவர்கள் தங்கள் மதத்தினருடன் திருமணம் செய்யும் போது அதற்கு மாறவேண்டும் என்று நிர்ப்பந்திப்பார்கள். மணமக்களின் முடிவாக இருக்க விட மாட்டார்கள். சாப்பாட்டுக்கு உழைக்க போக நேரம் இல்லாவிட்டாலும் தமது மதத்தை வெறித்தனமாக ஐந்துநேரம் தொழாவிட்டால் கல்லால் எறிந்து கொல்வார்கள். இந்த நடத்தைகள் மதத்தில் இருக்கும் பிர்ரசனையை எடுத்துக்காட்டுவது. அதே நேரம் ஆப்பிறுக்கல்களை கேட்டு கக்கீம், அஸ்வார், அசாத சாலி மாதிரி தாளம் போடுவோர் புலிகள் 20,000 முஸ்லீம்களை கொண்டுவிட்டார்கள் என்றகணக்குடன் மகிந்தா காலில் விழவேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

தமிழ்சூரியன் நீங்கள் ஆயரத்தில் ஒருத்தர்...மற்ற 999 பேரும் மேலே துளசி  சொன்னது மாதிரி தான்....

சகோதரா துளசி சொன்னது ஒரு சம்பவம் .....ஆனால் நான் சொன்னது யதார்த்தம் .................நான் வாழ்வது அவர்கள் சாயலில் ..............அவர்கள் எத்தனை பேர்கள் என்று சொன்னால் இங்கே ....................நான் பேசுவது மனிதர்களைப்பற்றி .............. :)  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"இந்துக்களின்" இடங்களில் விகாரைகள் கட்டப்படுவது பற்றி இந்தத் துண்டுப்பிரசுரம் ஏன் கேள்வி எழுப்பவில்லை? தங்களின் வீரத்தை அங்கே காட்டலாமே?!

 

அருமை... அருமை... எங்களிடம் வீரம் இல்லைத் தான். நீங்கள் வீரமானவர் தானே உங்களின் வீரத்தை முசுலீம்களிடம் காட்டுங்களேன். நான்கு விதமாக கதைக்கின்ற நாத்திகத்தை அல்லாவை வைத்து எழுதுங்கள். வீரம் எங்களுக்கு இப்படித் தான் காட்டமுடியும். அதனால் விட்டு விடுங்கள்....

உண்மையில் இந்துக்கள் ஒற்றுமை மட்டுமல்லாமல் சீர்திருத்தங்கள் என்பதும் தேவையான ஒன்று. உலகம் உறுண்டை என்று சொன்னதற்காக பலரைக் கொலை செய்த கிறித்தவம் பிற்பாடு எல்லாவற்றையும் மதப்பிரச்சாரம் என்பதினூடாக வழியைத் தெரிவு செய்த பிற்பாடு" இப்போதும் மூடநம்பிக்கைகளை ஏந்திக் கொண்டு சில செயற்கைகளூடாக இந்து மதம் இருப்பதை முதலில் மாற்ற வேண்டும். வெறி என்பது அவசியம். அப்படிப்பட்ட வெறிதான் எங்களின் அடையாளங்களை இழக்க வைக்காதிருக்கும். இனவெறி என்பதும் அவ்வகையானதே அதனால் தான் இன்றுவரை என் அடையாளங்களைத் தொலைக்கவில்லை. அந்தவெறியை எப்படிப் பாவிக்கின்றோம் என்பதில் தான் எங்களின் வெற்றி இருக்கின்றது

 

சகோதரா துளசி சொன்னது ஒரு சம்பவம் .....ஆனால் நான் சொன்னது யதார்த்தம் .................நான் வாழ்வது அவர்கள் சாயலில் ..............அவர்கள் எத்தனை பேர்கள் என்று சொன்னால் இங்கே ....................நான் பேசுவது மனிதர்களைப்பற்றி .............. :)  :icon_idea:

 

நடிகர் வியய்யின் தந்தை கிறித்தவர். அவர் சோபானாவைத் திருமணம் செய்யும்போது அவர் இந்து. பிற்பாடு அதைத் தழுவினார். யோசப் வியய் பிற்பாடு திருமணம் செய்தது இந்து. அவர் கிறித்தவர் ஆகி இரண்டு பிள்ளைகளும் கிறித்தவர் ஆனார். இது சரி தவறா என்று சொல்லவரவில்லை. பொதுவாகவே நான் அறிந்தது தேவாலயங்களில் மதம் மாறவில்லை எனில் திருமணம் செய்து வைக்கமாட்டார்கள் என்பது.

Link to comment
Share on other sites

 

 

 

நடிகர் வியய்யின் தந்தை கிறித்தவர். அவர் சோபானாவைத் திருமணம் செய்யும்போது அவர் இந்து. பிற்பாடு அதைத் தழுவினார். யோசப் வியய் பிற்பாடு திருமணம் செய்தது இந்து. அவர் கிறித்தவர் ஆகி இரண்டு பிள்ளைகளும் கிறித்தவர் ஆனார். இது சரி தவறா என்று சொல்லவரவில்லை. பொதுவாகவே நான் அறிந்தது தேவாலயங்களில் மதம் மாறவில்லை எனில் திருமணம் செய்து வைக்கமாட்டார்கள் என்பது.

 

உண்மை தூயவன் .............உண்மையில் என் வாலிப நிலையில் எல்லாம் தோல்வியுற்ற நிலையில் என் திருமண வாழ்வை என் தந்தை பொறுப்பேற்றார் ,,,,,,,,,சேயின் குணம் தாய் அறியும் என்பதிற்கிணங்க அவரே என் மனைவியை எனக்கு தேர்ந்தெடுத்தார் ...............ஆயிரம் சொந்தங்கள் இருந்தும் ................நானோ என் குடும்பமோ எந்த வித தாக்கமும் செலுத்தாத விதத்திலேயே என் மனைவி கிறிஸ்தவ மதமாக மாறினார் .......................திருமண சம்பிரதாயத்திர்கமைய ........இயேசுவை விற்கும் திருச்சபையின் கொடூர சிந்தனைக்கமைய ..........எந்த மாற்றுக்கருத்தும் அல்ல .உண்மை அதுதான் ..................ஆனால் இன்று வரை என் மனைவியின் மதம் சம்பந்தமான உணர்வை ...........அவருடைய உணர்ச்சிகளை அதற்கு எந்த விதத்திலும் தாக்கம் ஏற்படாதவாறு எமது குடும்பம் நகர்கிறது .மகிழ்ச்சியாக ,,,,,,,,,,யதார்த்தமாக .....................நிறைய எழுத விரும்பவில்லை ..................மதம் என்பது ................உண்மை ,நீதி ,நியாயம் ..அன்பு ,பாசம் ....................இவை அதற்குள் அடங்காவிடின் ,அது மதம் .....................[வெறி ] 

Link to comment
Share on other sites

சகோதரா துளசி சொன்னது ஒரு சம்பவம் .....ஆனால் நான் சொன்னது யதார்த்தம் .................நான் வாழ்வது அவர்கள் சாயலில் ..............அவர்கள் எத்தனை பேர்கள் என்று சொன்னால் இங்கே ....................நான் பேசுவது மனிதர்களைப்பற்றி .............. :)  :icon_idea:

 

நீங்கள் சொல்வது தான் ஒரு சில. நான் சொல்வது தான் யதார்த்தம். :)

 

 

நானோ என் குடும்பமோ எந்த வித தாக்கமும் செலுத்தாத விதத்திலேயே என் மனைவி கிறிஸ்தவ மதமாக மாறினார் .......................திருமண சம்பிரதாயத்திர்கமைய ........இயேசுவை விற்கும் திருச்சபையின் கொடூர சிந்தனைக்கமைய ..........எந்த மாற்றுக்கருத்தும் அல்ல .உண்மை அதுதான் ..................

 

எப்படியோ மதம் மாறி விட்டார் தானே? இதை தான் இங்கு பலரும் கூறுகிறோம். ஒருவேளை அவர் மதம் மாற விரும்பியிருக்காவிட்டால்? :unsure:

 

ஊரிலும் சரி இங்கும் சரி எனக்கு நண்பர்களாக வருபவர்களில் முக்கால்வாசி பேர் கத்தோலிக்க சமயத்தவர்கள். அவர்கள் வீடுகளில் நடைபெறும் திருமண நடவடிக்கைகள் பல எனக்கு தெரியும். இன்னும் பலவும் நான் கேள்விப்பட்டுள்ளேன்.

 

காதலித்து விட்டு திருமணத்துக்காக மதம் மாறியவர்கள் கூட நான் பழகுவோரில் அடங்கும். அதில் வேறு.... தமது திருமணத்துக்கு வீட்டில் மதம் பிரச்சினையாகி விடக்கூடாது என கூறி தனது காதலன்/காதலி தனது மதத்துக்கு மாற வேண்டுமென தாங்கள் யேசுவிடம் பிரார்த்தனை செய்ததாக கூட சிலர் கூறியுள்ளார்கள். :D அதை விட தனது காதலன்/காதலியை மதம் மாறும்படி தொடர்ந்து கேட்டு மாற சம்மதித்த பின்னர் திருமணம் செய்ததாகவும் கூறி கேள்விப்பட்டுள்ளேன். :huh:

Link to comment
Share on other sites

காதல் ஒட்டு மொத்தத்தில் நீங்கள் இன்னும் மனிதர்களை சந்திக்கல ...............
 
விரைவில் உங்களை சந்திக்கிறேன் ....................ஆனால் கீதையோடோ.......பைபிலோடோ அல்ல .....................குறானுடன்.......................... :D  :D  :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சந்தர்ப்பத்தில் தான் இந்தக் கதையைச் சொல்ல முடியும் என்று நினைக்கின்றேன். நான் இரண்டு குழந்தைகளை 2009ம் ஆண்டு யுத்தத்தின் பிற்பாடு தத்தெடுப்பாக உறுதி செய்து, ஒரு தேவாலயம் ஊடாகச செய்து வந்தேன். இரண்டு குழந்தையில் ஒன்றுக்கு பெற்றோர் உறவினர் இல்லை. மற்றவரின் தாய் போராளி என்பதால் சிங்கள அரசு புனர்வாழ்வு என்ற பெயரில் வைத்திருந்தது. எனக்கு அவர்களின் மீதான அன்பு ஏதோ என் குழந்தைகளாகவோ, சகோதரங்களாக இருந்தால் எப்படி ஒரு உணர்வைத் தருமோ, அது போன்றதொரு பாசத்தை உருவாக்கியது. எனக்குத் திருமணம் ஆகாததால் தத்தெடுக்கமுடியாது, மற்றும் கனடா கொண்டு வரமுடியாது என்பதாலும், குழந்தைப் பாக்கியம் இல்லாத உறவினர் ஊடாக அவர்களிருவரையும் வளர்ப்பதற்காக முயன்றபோது, அதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. விசாரித்தபோது இரு குழந்தைகளும் மதம் மாற்றப்பட்டிருந்தனர். எனக்கு உள்ள வருத்தம் என்னவெனில், குழந்தைகளிடம் ஏன் மதமாற்றத்தைத் திணிக்க வேண்டும்? அதற்கான வயதா அவர்கள்? இத்தனைக்கும் என்னிடம் இருந்து உதவி பெறும்போதாகட்டும், அந்தக் குழந்தைளாகட்டும், இடையில் நின்ற தரகர்கள் அவர்கள் அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றி முடிவெடுக்கும்போது சுயநலவாதிகளாகவே என் கண்ணில் தெரிந்தார்கள். இப்படி நான் தத்தெடுக்கும் விடயம் பற்றிய சிந்தனையை வெளிப்படுத்தியதுடன், என்னிடமான தொடர்பு தூண்டித்தார்கள்.

உண்மையில் சொல்கின்றேன். ஒரு காலத்தில் அன்னை திரேசா மீது நான் கொண்டிருந்த மரியாதை இதற்குப் பிற்பாடு உடைந்து போனது. அவர் தொழுநோயாளர்களைக் கவனித்த சேவை பெரிதாயினும், அதன் பின்ணனியில் மதமாற்றம் என்ற ஒரு வியாபாரமும் இல்லாமல் இருந்திருந்தால் உயர்வாகவே இருந்திருப்பார்கள். ஆனால் அவர் கடவுள் என்பதைப் பண்டமாற்றுச் செய்து தானே அவர்களைப் பார்த்துக் கொண்டார்....

Link to comment
Share on other sites

 

காதல் ஒட்டு மொத்தத்தில் நீங்கள் இன்னும் மனிதர்களை சந்திக்கல ...............
 
விரைவில் உங்களை சந்திக்கிறேன் ....................ஆனால் கீதையோடோ.......பைபிலோடோ அல்ல .....................குறானுடன்.......................... :D  :D  :D

 

 

வாங்கோ வாங்கோ, மனைவியுடன் வந்தால் உங்களுடன் நீண்ட நேரம் மினக்கடுவன். தனியாக வந்தால் கொஞ்ச நேரம் கதைத்து விட்டு போய்விடுவேன். :)

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.