Jump to content

ஞானியும் பணக்காரனும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஞானி ஒருவரை சந்தித்த பணக்காரன் ஒருவன் ” சுவாமி என்னிடம் நிறைய செல்வம் இருக்கிறது. விளை நிலங்களும் ஏராளம் உள்ளது, உடலும் ஆரோக்கியமாக இருக்கிறது. எனவே நான் யாரையும் சார்ந்து வாழ வேண்டிய அவசியம் இல்லை எவரிடமிருந்தும் எந்த உதவியையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை?” என பெருமையடித்துக்கொண்டான்.
புன்சிரிப்போடு கேட்ட ஞானி ” வா சற்று தூரம் நடந்து விட்டு வரலாம் ” என்றார். ” கடுமையான வெயிலில் போகவேண்டுமா? என தயங்கினாலும் ஞானி கூப்பிடும்போது மறுப்பது நன்றாக இருக்காது என்பதால் கிளம்பினான். சிறிது தூரம் சென்றதுமே வெப்பம் தாங்காமல் தவித்த செல்வந்தன் ஏதாவது நிழல் இருந்தால் சற்று ஒதுங்கலாமே என எண்ணி சுற்றும் முற்றும் பார்த்தான். எந்த நிழலும் தென்பட வில்லை ஞானி கேட்டார் ” என்ன தேடுகிறாய்?”
” நாம் சற்று இளைப்பாற ஏதாவது நிழல் இருக்கிறதா ” எனப் பார்த்தேன். ” ஏன் உன் நிழல் உள்ளதே அதில் நீ ஒதுங்கலாமே?” ” சுவாமி என் நிழலில் நான் எப்படி இளைப்பாற முடியும்?” ” என்னப்பா இது ,…………….நீ யாரையும் எதையும் சார்ந்து வாழத் தேவையில்லை உன் பொருளே உன்னைக் காப்பாற்றும் என சற்று முன் தானே சொன்னாய் ஆனால் இப்போது உன் நிழலே உனக்கு உதவவில்லை என்கிறாயே?” என்றார். உண்மையை உணர்ந்தான் செல்வந்தன்.

 

நன்றி முகப்புத்தகம்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழன் தன் உரிமையைப் பெறுவதற்கு தன்னை நம்பித்தானே போராடினான்!... யாருடைய உதவியையும் அவன் எதிர்பார்க்கவில்லையே.! இந்தியாதானே வலிய அதற்குள் உதவி செய்வதுபோல் நுளைந்து, தமிழனை அழித்துவிட்டு இன்று ஞானம் போதிக்கிறது.!!

இந்த ஞானியும் அப்படித்தானே! செல்வந்தன் கேட்டானா..? கடும் வெயிலுக்குள் தன்னை அழைத்துப் போகச்சொல்லி..! அழைத்துச் சென்றுவிட்டு ஞானம்போதிக்கும்படி..!!. <_<

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.