Jump to content

சுவிசில் உள்ள எட்டப்பர் சிலரின் தமிழீழ விடுதலைக்கு எதிராண தி


Recommended Posts

வடிவேலு என் நண்பர்களிடம் விடயத்தை நன்றாக தெரிந்துகொண்டுவருவதற்குள் இங்கு நியைத் தவறான கருத்துக்களை கொட்டிவிட்டீர்கள். நீங்கள் நல்லபிள்ளையென்பதால் இந்த கருத்துக்களை திருப்பி பெறுங்கள். நீங்கள் சொன்னது தவறான விடயங்கள். கோவில் அதிகம் வருமானம் கூடியது என்பது உண்மைதான். மற்றது எல்லாம் தவறானவிடயங்கள். நான் நன்றாக விசாரித்ததில் கோவில் முழுக்க முழுக்கபுளொட் கேடிகளினால் உருவாக்கப்பட்டது. கோவிலின் உருவாக்கப்பட்டதை பார்த்துதான் சிவன் கோவில் முரளியினால் உருவாக்கப்பட்டது. ஐயரும் அந்த அமைப்பை சார்ந்தவர்தான். ஐயரூடாக கோவிலும் கோவிலூடாக ஐயரும் போட்டிபோட்டுக்கொண்டு வளர்ந்தனர். தேவைக்கதிகமான பணம் வந்ததும் ஐயருக்கு தன்னை ஒரு விடுதலை விரும்பியாக காட்டவேண்டிய சந்தர்ப்பம் வந்தது. அதனால் ஐயர் ஜெனிவாவில் இடம் பெற்ற ஊர்வலம் ஒன்றில் தேசியத்தலைவரை முருகனின் அவதாராம் என்றுபேச இந்த கேடிகள் ஜெகன் மற்றும் குமார்( இவர்கள் இருவரும் போராட்டத்துக்கு எதிரான சக்திகள் பல தடவைகள் போன்ற கூட்டிக் கொடுப்புக்களை செய்தவர்கள்) கொதித்தெழத்தான் நீங்கள் கூறிய கோவிலைவிட்டு ஐயரை துரத்தத முயன்ற சம்பவம் நடைபெற்றதாம்.

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியன் நீங்கள் உங்களிர்க்கு தெரிந்தவர்கள் மூலமாக அறிந்து கொண்டீர்கள். நான் எனக்கு தெரிந்தவர்கள் மூலமாக அறிந்து கொண்டேன்.

Link to comment
Share on other sites

வடிவேலு 007

பேசாமல் நீர் வெடிவேலு என்று பெயரை மாற்றி வைத்துக் கொள்ளலாம். என்னமாய் ரீல் எல்லாம் விடுகின்றீர்.

வன்னியன்

கோவிலைச் சிலர் நிருவாகத்திலிருந்த சிலரை வைத்து தமது கட்டப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்க அதற்கு ஐயரும் துணை போகவே ஐயர் வெளியேற்றப்பட்டார்.

Link to comment
Share on other sites

முதலில் வடிவேலு அவர்க்கு எனது நன்றிகளும் வணக்கங்களும் இவ்விடையத்தை இந்கு பதிந்தமைக்காக எனது விளக்கத்தை கூறகடைமைப்பட்டுள்ளேன் இவ்கருத்துக்கு பதில்கருத்தெளுதிய அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

பொதுவாக இப்படியான நிகழ்வுகள் சுவிஸ் ஊடகங்களிலில் வருடம் தோறும் வருவதுண்டு ஆனால் இவையனைத்தும் அவர்கள் சொந்தமாக செய்பவையில்லை இங்குள்ள இலங்கை காரியாலயமும் எனது கருத்தான எட்டப்பர்களும் காசு குடுத்து செய்பவையென்பது எத்தனை பேருக்கு தெரியும் இப்படியான தூண்டுதநினால் செய்தி தயாரிக்கப்பட்டாலும் கடைசியில் ஊடகங்களின் மனச்சாட்சியும் வேலைசெய்யும் இவ் விடயத்தின் தலைப்பே பயங்கரவாதிகளா? சுதந்திரபோராளிகளா? என்பதாகும். இது முளுக்கமுளுக்க சுவிஸ் மக்களுக்காக ஒளிபரப்பபட்டது சுவிஸ் மக்கள் எதையும் மேலோட்டமாக பார்பதில்லை தொலைநோக்கு பார்வையும் பலகோணங்களிலும் அலசிஆராயும் தன்மை கொண்டவர்கள் அவர்கட்கு தெரியும் இங்கு வாழும் தமிழர்களின் பொருளாதார வளமும் அதற்றுகான அடிப்படை அரசியல் காரணங்களும் முன்பைப்போல் இவை பெரியதாக்கத்தை ஏற்படுத்துமா என்பது கேள்வியே

Link to comment
Share on other sites

இந்த சாபக்கேடு உலகம் எல்லாம் எங்களுக்கு உள்ளது மெல்பேர்னிலும் இந்த போட்டி காரணமாக இன்னொரு கோயில் வந்த்ததுதான் அது மட்டும் மல்ல உந்த வழக்கு செலவு மட்டுமே AUS$200,000 மாம் என்ன செய்ய இது எங்கள் இனத்தின் சாபக்கேடு

Link to comment
Share on other sites

சாபக்கேடு அல்ல ஈழவன். நன்கு தெரிந்து விளங்கித்தான் செய்கின்றனர். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அவர்களை தேசிய ஆதரவாளர்களாக இனங்காட்டி செயற்பட வைக்கிறவைக்குத்தான் கொடுக்கனும் நல்ல பூசை..! இங்க கோயில்கள் எல்லாம் தேசிய ஆதரவுக் கோசத்தில தான் பிழைப்பே நடத்துகின்றன. சரி ஈழத்துக்கு பங்களிப்புச் செய்யினம் தானே என்று நோக்கினாலும் கூட எத்தினை சதவீதம். இங்க கோயில் திருவிழாக்களின் விளம்பரங்களில் கூட ஈழத்துக்கு 2000 அனுப்பினம் 3000 அனுப்பினம்...என்று அடியார்களை உசார்படுத்தினம்..அப்படிப் போகுது வியாபாரம்..! ஏதோ கொஞ்சமாவது ஈழத்துக்குப் போகுதே என்று திருப்திப்படுவதை விட என்ன செய்துவிட முடியும்..!

சனம் ஏன் போகுது..தேசியத்துக்கு பங்களிப்புச் செய்ய என்று மட்டும் நம்பிடாதேங்கோ...ஓசி பூட்..ஓசி..தரிசனம்...அதுதானப்பா.

.நம்ம பொடிசுகளுக்கு தரிசனம்..கிடைக்குதில்ல..அதால்.

என்ரரெயிண்ட்மெண்ட்..ரிக்கற் எடுக்காம என்ஜொய் பண்ணலாமெல்லோ..!

போய்க் கேட்டால்..நாங்கள் எவ்வளவு போட்டிக்குள்ள கோயில் நடத்திறம்..இந்தியாவில இருந்து ஆக்களைக் கூட்டிவராட்டா..கோயில் பேமஸ் ஆகாது..உதுகளுக்கு நிறையச் செலவாகும்..அத்தோடு..எங்கட குழந்தைகளுக்கு சைவசமயம் பற்றிச் சொல்லிக் கொடுக்கிறம்..தமிழ் படிப்பிக்கிறம்..டான்ஸ் படிப்பிக்கிறம் என்று அடிக்கிட்டே போயினம். உதில சிலதுகள் உண்மைதான் என்றாலும்..தமிழ் படிப்பிக்கிறவை கூட இலவசமாத்தான் சேவை வழங்கிறதாக் கேள்வி..அவை என்னத்துக்கு..புகழுக்குத்தான

Link to comment
Share on other sites

வடிவேலு 007

பேசாமல் நீர் வெடிவேலு என்று பெயரை மாற்றி வைத்துக் கொள்ளலாம். என்னமாய் ரீல் எல்லாம் விடுகின்றீர்.

வன்னியன்

கோவிலைச் சிலர் நிருவாகத்திலிருந்த சிலரை வைத்து தமது கட்டப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்க அதற்கு ஐயரும் துணை போகவே ஐயர் வெளியேற்றப்பட்டார்

வசம்பு ஆரம்ப காலத்தில் புலிகளுக்கு எதிரான பல அறிக்கைகள் ஐயர்மூலம்தான் வெளியாகியாது. புலிகள் பணம் சேர்ப்பதை பற்றியெல்லாம் பொலிசில் தகவல் கொடுத்திருக்கின்றார். காலப்போக்கில் அவர் ஏனோ தன்னை மாற்றிக்கொண்டுவிட்டார். நிர்வாக முரண்பாட்டுக்கு ஒரு காரணம் ஐயர் கோவிலில் அன்னதானம் கொடுப்பதைவிட பணத்தை சேர்த்து வன்னிக்கு அனுப்பி அங்கு அதைஅங்குள்ள அநாதை பிள்ளைகளுக்கு பயன்படுத்துவோம் என்று சொல்லி ஒரு உண்டியைலை கோவிலில் வைத்திருக்கின்றார். அதை குமார் ஜெகன் குழுவினர் தூக்கிச்சென்று பக்கத்திலிருந்த ரயில்நிலையத்தில் வைத்துவிட்டனராம். இதுவே ஐயர் விலகிச்செல்லவேண்டிய சூழ்நிலையை ஒருவாக்கிவிட்டது.

கோவிலின் வளர்ச்சியில் ஐயரின்பங்கு பிரதானமாக இருந்திருக்கின்றது. அந்தநேரத்தில் நிலம் வாங்கி கோவில் கட்டுவதற்கு முயற்சி செய்தனர்.

இந்து கோவில் மூலம் ஜெகன் குமார் குழுவினர் ஆட்கடத்தல் வேலை செய்கின்றனர். கோவில் திருவிழாவுக்கு என்று சொல்லி ஆட்களை பெருந்தொகை பணம் பெற்றுக்கொண்டு ஸ்பொன்சரில் சுவிசுக்கு வரவழைத்து பின் வேறுநாடுகளுக்கு அனுப்பி பெருந்தொகையான பணத்தை சம்பாதிக்கின்றனர்.

இவர்கள் புலிகளைப்பற்றி குறை கூறுகின்றனர்.

காலத்தின் கட்டாயத்தால் ஐயர் மனம் திருந்திவிட்டார். .ந:த பாவிகள் குமார் ஜெகன்கள் இன்னும் மாறவில்லை. பாவத்தின்மேல் பாவம் செய்கின்ற இவர்கள் ஒருபோதும் நல்லாக இருக்கமாட்டார்கள். :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முறையாக வருமானவரி கட்டாவிட்டாலே, அரசாங்கத்தினால் ஜெயில் என்றும், நாட்டுப்பரிபாலனத்திற்க்கென

Link to comment
Share on other sites

விது எழுதியது:

பொதுவாக இப்படியான நிகழ்வுகள் சுவிஸ் ஊடகங்களிலில் வருடம் தோறும் வருவதுண்டு ஆனால் இவையனைத்தும் அவர்கள் சொந்தமாக செய்பவையில்லை இங்குள்ள இலங்கை காரியாலயமும் எனது கருத்தான எட்டப்பர்களும் காசு குடுத்து செய்பவையென்பது எத்தனை பேருக்கு தெரியும் இப்படியான தூண்டுதநினால் செய்தி தயாரிக்கப்பட்டாலும் கடைசியில் ஊடகங்களின் மனச்சாட்சியும் வேலைசெய்யும் இவ் விடயத்தின் தலைப்பே பயங்கரவாதிகளா? சுதந்திரபோராளிகளா? என்பதாகும். இது முளுக்கமுளுக்க சுவிஸ் மக்களுக்காக ஒளிபரப்பபட்டது சுவிஸ் மக்கள் எதையும் மேலோட்டமாக பார்பதில்லை தொலைநோக்கு பார்வையும் பலகோணங்களிலும் அலசிஆராயும் தன்மை கொண்டவர்கள் அவர்கட்கு தெரியும் இங்கு வாழும் தமிழர்களின் பொருளாதார வளமும் அதற்றுகான அடிப்படை அரசியல் காரணங்களும் முன்பைப்போல் இவை பெரியதாக்கத்தை ஏற்படுத்துமா என்பது கேள்வியே

விது

உங்கள் வசதிகளுக்கு ஏற்றவாறு இப்படிப் பொய்யான பரப்புரைகளை மேற்கொள்ளாதீர்கள். இந்நிகழ்ச்சியை நடாத்தியது அரச ஊடகம். இது வருட நிகழ்ச்சியல்ல அல்ல ஒவ்வொரு கிழமையும் இடம்பெறும் நிகழ்ச்சி. இப்படி ஒவ்வொரு விடயத்தையும் அலசுவதே இந்நிகழ்ச்சியின் வழமையான விடயம். இது இங்குள்ள தமிழர்கள் எல்லோருக்கும் தெரியும். நீங்கள் ஏதோ இங்குள்ள தமிழர்களை முட்டாள்கள் ஆக்குவது போல உங்கள் கருத்தைத் எழுதியுள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

வன்னியன் எழுதியது:

இந்து கோவில் மூலம் ஜெகன் குமார் குழுவினர் ஆட்கடத்தல் வேலை செய்கின்றனர். கோவில் திருவிழாவுக்கு என்று சொல்லி ஆட்களை பெருந்தொகை பணம் பெற்றுக்கொண்டு ஸ்பொன்சரில் சுவிசுக்கு வரவழைத்து பின் வேறுநாடுகளுக்கு அனுப்பி பெருந்தொகையான பணத்தை சம்பாதிக்கின்றனர்.

வன்னியன்

நீங்கள் எந்த நாட்டிலிருந்து எழுதுகின்றீர்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இன்னொருவர் சொல்பவற்றைக் கேட்டே இங்கே எழுதுகின்றீர்கள். ஆனால் நான் சுவிசிலிருந்தே எழுதுகின்றேன். உங்களைவிட இவ்விடயம் பற்றி அதிகம் அறிந்தவன். நீங்கள் சொன்ன ஆட்கடத்தலை இங்கேயுள்ள பல கோவில்களும் செய்கின்றன. இதனால் பலனடைவது ஐயர்மாரே. கோவில் விசேட காலங்களுக்கு ஸ்பொன்சரில் வரும் ஐயர்களில் சிலர் இப்படி பலன் பெற்றுள்ளனர். நீங்கள் குறிப்பிட்ட கோவிலின் ஐயரும் தமது உறவினர்களுக்கு இப்படி உதவியுள்ளார். ஆனால் அவர் பணம் பெற்றுக் கொண்டே உதவியுள்ளது அறிந்ததுமே நிர்வாகம் அவருக்கு சில கட்டுப்பாடுகளைப் போட்டது. அதனால் நிர்வாகத்திற்கும் அவருக்கும் பிரைச்சினை உருவாகியது. அதனால்த் தான் அவர் நல்லபிள்ளையாக நடிக்கத் தொடங்கினார்.

Link to comment
Share on other sites

வன்னியன் எழுதியது:

இந்து கோவில் மூலம் ஜெகன் குமார் குழுவினர் ஆட்கடத்தல் வேலை செய்கின்றனர். கோவில் திருவிழாவுக்கு என்று சொல்லி ஆட்களை பெருந்தொகை பணம் பெற்றுக்கொண்டு ஸ்பொன்சரில் சுவிசுக்கு வரவழைத்து பின் வேறுநாடுகளுக்கு அனுப்பி பெருந்தொகையான பணத்தை சம்பாதிக்கின்றனர்.

வன்னியன்

நீங்கள் எந்த நாட்டிலிருந்து எழுதுகின்றீர்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இன்னொருவர் சொல்பவற்றைக் கேட்டே இங்கே எழுதுகின்றீர்கள். ஆனால் நான் சுவிசிலிருந்தே எழுதுகின்றேன். உங்களைவிட இவ்விடயம் பற்றி அதிகம் அறிந்தவன். நீங்கள் சொன்ன ஆட்கடத்தலை இங்கேயுள்ள பல கோவில்களும் செய்கின்றன. இதனால் பலனடைவது ஐயர்மாரே. கோவில் விசேட காலங்களுக்கு ஸ்பொன்சரில் வரும் ஐயர்களில் சிலர் இப்படி பலன் பெற்றுள்ளனர். நீங்கள் குறிப்பிட்ட கோவிலின் ஐயரும் தமது உறவினர்களுக்கு இப்படி உதவியுள்ளார். ஆனால் அவர் பணம் பெற்றுக் கொண்டே உதவியுள்ளது அறிந்ததுமே நிர்வாகம் அவருக்கு சில கட்டுப்பாடுகளைப் போட்டது. அதனால் நிர்வாகத்திற்கும் அவருக்கும் பிரைச்சினை உருவாகியது. அதனால்த் தான் அவர் நல்லபிள்ளையாக நடிக்கத் தொடங்கினார்.

வசம்பு எனக்கு யாரையும் குற்றம் சொல்ல விருப்பமில்லை. ஆனாலும் எனக்கு எப்படி தெரியுமென்று ஆராய்வதைவிட நான் கூறிய விடயம் எவ்வளவுதூரம் உண்மையென்று ஆராயுங்கள். ஐயர் ஆட்கடத்தல் முயற்சியில் ஈடுபட்டிருந்தால் அதை நிர்வாகம் ஏன் அனுமதித்தது? இப்போது வெளியேற்றிய(அடாவடியாக) ஏன் அப்போது நடவடிக்கை எடுக்கவில்லை.

ஜெகன்போன்ற துரோகிகள் ஐயரை பயன்படுத்திவிட்டு குடித்து முடித்துவிட்ட கோலா ரின்னை போல் துாக்கி எறிந்துவிட்டார்கள்.

அதை மறைப்பதற்காக துண்டுப்பிரசுரம் அடித்து தமிழ்வீடுகளின் தபால் பெட்டிகளில் போட்டுவிட்டார்களாம். நீங்கள் இவர்கள் வசிக்கும் பகுதிகளிலா வசிக்கின்றீர்கள்? அப்படியானால் நீங்களும் சூரிச்சா? இவர்களை உங்களுக்கு நன்கு தெரியுமா?

நீங்களும் புளொட்டா?

Link to comment
Share on other sites

வன்னியன்

ஐயர் ஸ்பொன்சரில் வந்த சில ஐயர்மாருக்கு உதவி செய்வதாகச் சொன்ன போதே நிர்வாகம் அதனை பெரிது படுத்தவில்லை. ஆனால் அவர் அதை பணம் பெற்றுக் கொண்டு தான் செய்கின்றார் என்ற உண்மை அறிந்ததும். நிர்வாகம் உடன் நடவடிக்கை எடுத்துத்தான் அவரது செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு விதித்ததுடன் அவரது ஒப்பத்தந்தையும் புதிப்பிக்காது விட்டது. அத்துடன் ஒருவரை வேலையால் நிற்பாட்டுவதென்றாலும் அவருக்கு குறிப்பிட்ட காலஅவகாசம் கொடுக்க வேண்டும். உடனடியாக நிற்பாட்டுவதென்றால் அதற்குரிய சரியான காரணம் காட்டப்பட வேண்டும். இந்த விடயத்தை காரணமாகக் காட்டி உடனடியாக நிற்பாட்டினால் இதுபற்றி ஐயர் நீதிமன்றம் சென்றால் இவ்விடயம் இங்கே நடக்கும் பல கோவில்களுக்கும் வீண் விளைவுகளை ஏற்படுத்தும். அதனாலேயே ஐயரின் ஒப்பந்த காலம் வரை அவரை வைத்திருந்தார்கள். இவ்விடயம் இங்கு கோவிலுக்கு வரும் எல்லாருக்கும் தெரியும். சிலர் தமது வசதிகளுக்கேற்றவாறு கதைகளை திரித்துச் சொல்வதால் நடந்தவை பொய்யாகிவிடப்போவதில்லை.

நீங்கள் நட்புரீதியாக கேட்டதால்தான் பொறுமையாக உங்களுக்கு பதிலளித்தேன். நான் இருப்பது பேர்ண் மாவட்டத்தில். நான் ஒரு இயக்கத்தை சார்ந்தவனாகவோ அல்லது அதற்கு ஆதரவாளனாகவோ இருந்தால் தாராளமாக அதைச் சொல்லத் தயங்க மாட்டேன். இங்கே எனக்கு எல்லா இயக்கத்தை சேர்ந்தவர்களிலும் நண்பர்களுண்டு. அதனாலேயே பலவிடயங்களையும் இலகுவாக அறிய முடிகின்றது.

Link to comment
Share on other sites

மொத்தமா எல்லா கோயில்களையும் இழுத்து சாத்தினால் எல்லாம் சரிவரும் எல்லா நாட்டிலையும் ஆளுக்கொரு கோயில் கட்டி சம்பாத்தியம் நடத்திறாங்கள் பாவம் கடவுள்தான் என்ன செய்யும் கோயிலை கட்டிவனுக்கு அருள்குடுக்கிறதா கும்பிடுறவனுக்கு அருள் குடுக்கிறதா எண்டு தெரியாமல் குழம்பி நிக்கிது. அதுக்கை பாவம் பிரான்சிலை உள்ள கடவுகளிற்கு ஒரு நிதந்தர விசா கூட இல்லை அவையும் அகதியா தான் பதிவு செய்து நிதந்தர கட்டிடம் இல்லாமல் அரசாங்கம் அலைய விடுது ஆனால் அதை நடத்திறவைக்கு மட்டும் பலவீடுகள் சின்னவீடுகள் என்று சொந்தமா இருக்கு

Link to comment
Share on other sites

அட நிரந்தர இடம் கிடைக்காவிட்டால் கிடைக்கிற காணியில் கட்டவுட்டிலேயே கோயில் வைத்து கும்பாபிகேஷம் செய்து சனத்தின்ரை காதிலேயே பூ வைக்கமாட்டமா என்ன ??? :roll: :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Vasampu எழுதியது:

நீங்கள் எந்த நாட்டிலிருந்து எழுதுகின்றீர்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இன்னொருவர் சொல்பவற்றைக் கேட்டே இங்கே எழுதுகின்றீர்கள். ஆனால் நான் சுவிசிலிருந்தே எழுதுகின்றேன். உங்களைவிட இவ்விடயம் பற்றி அதிகம் அறிந்தவன்.

அரோகரா....

இந்த வை.சி ... வசம்பார் உண்மையைத் தவிர சுவிஸிலிருந்து வேறொன்றையும் சொல்லாதவர்!!! அன்னார் வசம்பார், தூள்கிங் முஸ்தப்பா சிவிஸில் கம்பி எண்ணுவதற்காக பிடிபட்டபோது, ஆறுசனலானின் வானொலியில் வந்து "ராமராஜ், என்னத்துக்கு பிடிபட்டவர் என்பது ஒருதரும் தெரியாமல் சும்மா கதைக்கிறார்கள்!!! அறிந்து கதையுங்கள்" என்று அற்புதமாக திருவாய் மலர்ந்தவர்!!! அன்பின் வசம்பாரே! எங்கே இப்போதாவது உண்மையைச் சொல்லிங்கள்?????? சுவிஸில் இருக்கும் உங்களைத் தவிர ஒருவரும் இந்த உண்மையைச் சொல்ல முடியாது!!!!

சும்மா விட்டால் .... ந*குவதற்குரிய விசுவாசத்தை காட்டியபடி இருக்கிறீர்!!!

அரோகரா..... :lol::lol::lol:

Link to comment
Share on other sites

வசம்பாரே நான் எதையும் அறியாமல் கதைக்கவில்லை. அறிந்துதான் கதைக்கிறன். நான் எழுதுவது உண்மை. இந்த ஜெகன் குமாரை நீங்கள் ஏன் காப்பாற்ற முயல்கின்றீர்கள். அப்படியானால் நீங்கள் அவரின் உறவினரா?

நீங்கள் உடுப்பிட்டியை சேர்ந்தவரா?

Link to comment
Share on other sites

வன்னியன்

ஐயருக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் ஐயருக்கென்ன எடுபிடியா என்று கேட்பதற்கு எனக்கு எவ்வளவு நேரமெடுக்கும். எனவே கேட்பதை நாகரீகமாகக் கேட்கக் பாருங்கள். ஜெகனுக்கு வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் எனக்குமில்லை. நான் வக்காலத்து வேண்டிய நிலையில் அவருமில்லை.

இவ்விடயமாக சுவிசில் வாழும் மக்களுக்கு எல்லா உண்மைகளும் தெரியும். அதன்படி கோவில் விடயத்தில் எவருக்கு ஆதரவளிக்க வேண்டுமோ அவர்களுக்கு ஆதரவளிக்கின்றார்கள். எனவே இது விடயத்தில் நீங்களோ நானோ விவாதிப்பதில் ஒன்றும் மாறிவிடப் போவதில்லை.

Link to comment
Share on other sites

வசம்பாரே நான் ஐயருக்காக பேசவில்லை. இந்த ஜெகன்குமாரை தோலுரிக்கத்தான் முயல்கின்றேன். ஐயரை காப்பாற்றவேண்டிய அவசியமில்லை. ஆனால் ஜெகனையும் குமாரையும் காப்பாற்ற முயல்கின்றீர்கள். அது உங்கள் மனச்சாட்சி(இருந்தால்)தெரியும

Link to comment
Share on other sites

ஒவ்வொரு கும்பலுக்காக கோயில்கள் கட்டி, கடவுள் பெயர் சொல்லி ஏமாற்றி பிழைக்கும் மனிதசாதிகள் இவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது சரியான கருத்தாக எனக்கு படவில்லை.

அதாவது 1995ஆம் ஆண்டுகளில் சுவிசில் அகதி விண்ணப்பம் செய்தவர்களை திருப்பி அனுப்பும் பணியில் சுவிசிலுள்ள அரசாங்கம் முயற்சி எடுத்தது. ஆனால் திருப்பி அனுப்பப்படுபவர்களை இலங்கை அரசாங்கம் ஏற்க வேண்டும்.

இந்த நிலையில் இலங்கை அரசாங்கம் அவர்களை ஏற்க மறுத்தது. இலங்கை அரசாங்கத்தை திருப்தி படுத்துவதற்காக இங்கே ஏதாவது செய்தாக வேண்டும் என்பதற்காக சுவிசிலுள்ள புலிகளின் அலுவலகங்களை சோதனையிட்டு நிறை பணம் பறிமுதல் செய்தார்கள் (பின்பு திருப்பி கொடுக்கப்பட்டது.)

இது சுவிசில் உள்ள இலங்கை தூதுவராலயத்தின் ஆதரவுடனே நடைபெற்றது.

அதே போல் தான் இந்த தொலைக்காட்சி ஒளிபரப்பும். இது போன்றது வருடத்தில் ஒரு முறையாவது தொலைக்காட்சியிலோ அல்லது பத்திரிகையிலோ வரும்.

வருடா வருடம் இலங்கை அரசாங்கத்தை திருப்பதிப்படுத்த வேண்டிய கட்டாயம் இங்கே அரசாங்கத்திற்கு உள்ளது.

Link to comment
Share on other sites

சண்முகி

கடவுளே இல்லையென்பவர்களும் காசுக்காக கோயிலை நடத்துகின்றார்களே??? அதை என்ன சொல்லப் போகின்றீர்கள்???

Link to comment
Share on other sites

சண்முகி

கடவுளே இல்லையென்பவர்களும் காசுக்காக கோயிலை நடத்துகின்றார்களே??? அதை என்ன சொல்லப் போகின்றீர்கள்???

அவர்கள் பிழைக்கத் தெரிந்தவர்கள்...

Link to comment
Share on other sites

சா அப்படியாவது ஏமாத்துப்பட்டு கடவுள் இல்லை எண்டதை கடவுள் நம்பிக்கையில திரியிற கூட்டம் அறிய வேணும் தெளிவு பெறவேணும் என்ற உயரிய சமூகசேவையாக்கும் :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.