Jump to content

புலம்பெயர் இளையோரைக் குறிவைத்து சிறிலங்காவின் புலனாய்வுத் துறையும் லைக்காவும்


Recommended Posts

புலம் பெயர் இளையோர் சிலரை லைக்கா குழுமத்தினூடாக சிறிலங்கா புலானாய்வுத் துறை உள் வாங்கி உள்ளது. வளர்ந்து வரும் இந்த இளையவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுப்பதாகாக் கூறி சிறிலங்கா இளையோர் அமைப்பு என்னும் அமைப்பை உருவாக்கி, லைக்கா குழுமத்தின் அனுசரனையுடன் நிகழ்ச்சிகளை சிறிலங்கா வெளியக புலாநாய்வுத் துறை நாடாத்தி வருகிறது.

 

இதன் தொடர்ச்சியாக அனுசூர்யா சச்சி என்னும் இவரை சிறிலங்காவின் புகழ் பாடி யுட்யிப்பில் காணொளி ஆக்கி இருக்கிறது. முகநூலில் இவரிடம் இது சுட்டிக் காட்டப்பட்ட போது இது கலை அரசியல் இல்லையாம். இதில் எத்தகைய அரசியல் இருக்கிறது என்பதைப் பாருங்கள்.இவர்களுக்கு புத்தி மதி சொல்லுங்கள் கேளாவிட்டால் புறக்கணியுங்கள்.

 

  https://www.youtube.com/watch?v=PZJMbC7V6SU#t=26

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது இளைஞர்களிடம்  வாங்கி  கட்டுவார்கள்................

Link to comment
Share on other sites

கருணைவை வைத்து பிழந்தது போல், புலத்திலும் இளையோர் இடையேயும்  பிரிவுகளை உண்டு பண்ணி விட்டார்கள்.   

Link to comment
Share on other sites

நன்றி இணைப்பிற்கு. நீங்கள் இணைத்த வீடியோ இதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது இளைஞர்களிடம்  வாங்கி  கட்டுவார்கள்................

 

 

அது அந்தக் காலம்.  இப்போது காற்று மாறீ வீசுகிறது.

Link to comment
Share on other sites

அனுசூரியாவின் உல்லாசப் பயனம்

அனுசூரியா சாச்சி, வேர்னன் சேகரம் என்ற பெயர்களைப் பலரும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். “நேரம் வந்திரிச்சு சிவ கூவிடிச்சு” (சேவல் என்பதே இங்கு சிவ) என ஒரு பாட்டை இவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். இந்தப் பாட்டின் தரத்தால் அன்றி – ஒரு பாட்டு போடுவதற்கு சிலர் என்ன அலை அலைகிறார்கள் என்பதற்காக இது பற்றிப் பேசவேண்டியிருக்கிறது. 

இந்தப் பாட்டைக் கேட்பவர்களுக்கு பழய ரூபவாகினி பாட்டுக்கள் சில ஞாபகம் வரலாம். மரத்தக் கட்டிப்பிடிச்சுக்கொண்டு நின்று – அல்லது தோட்டத்துக்குள்ள சிலோ மோசனில நடந்து கொண்டு சிலர் இழுக்கிற இழுவைகளைக் கேட்டு விழுந்து விழுந்து சிரிச்ச ஞாபகங்கள் கொஞ்சம் வயதானவர்களுக்கு ஞாபகத்துக்கு வரலாம். விலை உயர்ந்த கமராவில் எடுக்கப்பட்டிருக்கு என்பதைத் தவிர மேற்சொன்ன பாட்டுக்கும் ஏறத்தாள முப்பது வருசங்களுக்கு முன்பு வந்து பகிடிகளுக்கும் பெரிய வித்தியாசமில்லை. “நான்தான் குவெனி நான் லண்டனில இருந்து யாழ்ப்பானம் வந்திருக்கிறன்” – என அனுசூரியாவும் மரங்களச் சுத்திச் சுத்தி ஓடி –கஸ்டப்பட்டு கைகளை ஆட்டி ஆட்டி பாடியிருக்கிறா. பார்த்தால் கொஞ்சம் பாவமாகத்தான் இருக்கிறது. தம்பி வேர்னனும் கண்ட கண்ட உபகரனங்களை வைத்து கண்டபடிக்கு குத்தி முறிஞ்சிருக்கிறார். 

இது போன்ற குப்பையான பல முயற்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. புதிய பல கலைஞர்கள் தம்மாலான புதிய முயற்சிகளில் இறங்கியிருப்பது வரவேற்கப்படவேண்டியதே. இருப்பினும் வெறும் குப்பபைகளை வைத்து வியாபாரம் செய்வதும் - அதைப் பிரச்சாரித்து உருப்படியான கலைஞர்களை மூலைகளுக்குள் முடக்க அம்புலோதிப்படுவதும் விமர்சிக்கப்படவேண்டியதே. அதுவும் இன்று பல இளைஞர்கள் புதிய கலை எழுச்சி முயற்சிகளைச் செய்துகொண்டிருக்கும் நிலையில் காரசாரமான விமர்சனங்கள் தேவையே. இது போன்ற பாடடுகளைப் பார்த்த பிறகும் இன்சொல் கைவிட்டு இனிப்புப் பறைந்துகொண்டிருக்க முடியாதல்லவா. 
இது தவிர பல உறுதியான முயற்சிகள் பல நிகழ்வதை நாம் ஏற்கனவே பார்க்கத் தொடங்கியிருக்கிறோம். இந்தக் கலைஞர்கள் மத்தியில் அரசியல் ஊறிக்கிடப்பதையும் நாம் அவதானிக்கலாம். பலர் தமது அரசியலை முதன்மைப்படுத்தி பல கலை முயற்சிகள் செய்திருக்கிறார்கள். நாம் வாழும் காலத்தில் இது தவிர்க்க முடியாத ஒன்றே. இருப்பினும் இன்னுமொரு விசயத்தையும் இங்கு முக்கியமாக கவணிக்க வேண்டும். 

ஈழத்து இளம் கலைஞர்கள் - மற்றும் புலம் பெயர் கலைஞர்கள் மத்தியில் கலை வீரியத்தை உருக்கிச் செதுக்கிக் கொண்டிருப்பதன் முக்கிய காரணி சமீப காலத்து அரசியல்தான். உலகப் புகழ்பெற்ற மீயாவில் இருந்து பலர் சமகால ஈழ அரசியலால் பாதிக்கப்பட்டவர்கள் - அதனால் உந்தப் பட்டவர்கள். இந்தப் பாதிப்புகளும் புலம்பெயர் வாழ்வுச் சிக்கல்களும் இவர்கள் கலைகளை வளர்த்தெடுத்தும் செழுமைப்படுத்தியும் வருவதை தொடர்ந்து அவதானிக்கலாம். ஆனால் இக்கலைஞர்களிற் பெரும்பான்மையானவர்களுக்கு குறிப்பிடத்தக்க கவணம் இன்னும் கிடைக்கவில்லை. 

ஆனால் குறுக்குவழியில் பணம் புகழ் அடையவேண்டும் எனவும் சிலர் ஓடித்திரிகிறார்கள். அவர்களுக்கென்று இலங்கை அரசின் கடையும் திறந்து கிடக்கு. மற்றவர்களுடன் தொடர்புகள் எடுத்தல் - ஆளுக்காள் முதுகுசொறிந்து பிரச்சாரம் செய்தல் - என்பவற்றுக்கூடாக கலை பரப்புதல் செய்வதன் மூலம் ‘கலைஞர்களாக’ உருவாக முடியும் என்பது தான் இன்றய நிலையாக இருக்கிறது – நிலைக்கும் கலை படைத்தல் இரண்டாம் பட்சமாகி விடடது. இதையும் மீறி ஒரு கலைப் பூகம்பம் உருவாகிக்கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக கொழும்பில் மூலைக்கு மூலை பல்வேறு கலைக் குழுக்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றன. வெலிவாரிய கொலை தொடர்பாக தற்சமயம் எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் படம் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இதுபோன்ற முயற்சியில் ஈடுபடுபவர்கள் வியாபாரிகள் இல்லை. அதேபோல் புலம்பெயர் வியாபாரிகளுக்கு இந்த இலங்கை முற்போக்கு கலைஞர்களோடு எந்தத் தொடர்பும் இல்லை. அரசை நம்பி கலை விற்கத் திரிபவர்களுக்கு அது பற்றிய அக்கறையும் இல்லை. முhறாக அவர்களின் வியாபார நலனும் இலங்கை அரசின் பிரச்சார நலனும் நன்றாக பொருந்தி நிற்கிறது. 

அதனாற்தான் சீப்பான இலங்கை உல்லாசத்துறை விளம்பரங்கள் போல் குறுகி நிற்கின்றன இவர்கள் செய்யும் ‘கலைகள்’. “நீங்கள் பாத்திராத இந்த அழகிய இலங்கைக்கு என்னோட வாருங்கள். இந்த அழகிய இராஜ்யத்தில் என்னோடு தங்குங்கள்” என இங்கிலிஸ் சப் டைட்டிலோடு சிங்களத்தில் பாடி கையசைக்கிறார் அனுசூரியா. 
எரியிற வீட்டில புடுங்கிற சனம் எப்பவும் இருந்துகொண்டுதான் இருக்கும். ‘கலைஞர்கள்’ என்று சொல்லிக்கொண்டு சிலர் நசுக்கிடாம இந்த புடுங்கள் வேலைகள் செய்யப் பாக்கினம். அதை நாம் கண்டும் கானாமல் இருக்க முடியாது. ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் தொடங்கி இலங்கை அரசிற்கு வக்காலத்து வாங்கும் எழுத்தாளர்கள் பட்;டியல் ஒன்றிருக்கிறது. அன்மையில் புலம்பெயர் இலக்கியச் சந்திப்புக் குழு உடைந்ததும் - இலங்கையில் எதிர்ப்பிலக்கியம் செய்வாரோடு பலர் மோதிக்கொண்டதும் நிகழ்ந்ததை இலக்கிய ஆர்வலர்கள் அறிந்திருப்பர். 

இலங்கை அரசுக்கு சார்பாக உடைத்துக்கொண்டு நின்றவர்கள் பலர் புலி எதிர்ப்பை மையமாக வைத்து அரசியல் செய்து வருபவர்கள். பழய இயக்கப்பகை போன்ற பல்வேறு காரணங்களால் புலி எதிர்ப்பை முதன்மைப்படுத்தி இயங்கி வரும் இவர்கள் சிறு குழுவினர். தங்களை முதன்மைப்படுத்த தவித்துக்கொண்டிருந்த இவர்களுக்கு புலிகள் அழிக்கப்பட்டது ஒரு புதிய பாதையைத் திறந்து விட்டிருக்கிறது. விழுந்தடித்து இலங்கைக்கு ஓடிச்சென்ற இவர்களிற் பலர் ராஜபக்ச குடும்பத்தின் காலில் விழுந்துள்ளனர். ஒரு சில எலும்புத்துண்டுகளை தூக்கி எறிந்து இவர்களைக் கவணித்த போதும் இவர்களால் இலங்கை அரசுக்கு பெரும் லாபம் எதுவும் கிட்டவில்லை. ஏனெனில் இவர்கள் இலங்கைக்குள்ளோ வெளியிலோ எவ்வகை மக்கள் ஆதரவும் இல்லாதவர்கள். மக்கள் கலை- அரசியல் சம்மந்தப் படாதவர்கள். இவர்களை வாங்கியதில் இலங்கைக்கு வீண் செலவுதான். 

இதையும் மீறி புலம் பெயர் தமிழ் மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை வளர்க்க இலங்கை அரசு படாத பாடு பட்டு வருகிறது. இலங்கை தூதரகத்தார் பல்வேறு இலக்கியக் கூட்டங்களில் பங்கு பற்றுவது புதினமில்லை. அரசுசார் அரசியல் செய்வோரை வளர்த்தெடுக்கும் செயல்களை அவர்கள் செய்து வருவதும் பலரும் அறிந்ததே. அதே சமயம் அரச எதிர்ப்பாளர்களை முறியடிக்க ‘புலம்பெயர் புலிகள் இன்னும் இயங்குகிறார்கள்’ என்ற பயக்கெடுதியை முன்வைத்து அரசியற் செயற்பாட்டாளர்களை முற்றாக முடக்கும் செயல்களையும் அவர்கள் செய்து வருகிறார்கள். 
இந்த நடவடிக்கைகளுக்கு வலது சாரிய அரசுகளும் அரசியல்வாதிகளும் ஆதரவு கொடுப்பதையும் கவணிக்க வேண்டும். ‘இலங்கை அரசைத் தனிமைப்படுத்த வேண்டும் என யாராவது சொன்னால் அதை மறுத்து இணக்கம் செய்வதை வலியுறுத்த வேண்டும்’ என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் யூலி பிசப் அன்மையிற் சொல்லியிருந்தார். இங்கிலாந்தில் லியம் போக்ஸ், அலிஸ்டர் பேர்ட் முதலான கன்சவேட்டிவ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசு சார்பில் தொடர்ந்து வாதிட்டு வருபவர்கள். பாராளுமன்றத்தில் இலங்கையின் நன்பர்கள் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு இயங்கி வருகிறது. அன்மையில் காமென்வெல்த் மாநாடு சுகமாக நடந்தேற உதவி செய்தவர்களுக்கென நன்றிகூறும் ஒரு விருந்தை இலங்கை துதரகம் ஒழுங்கு செய்திருந்தது. பல வலதுசாரிகள் மற்றும் வியாபாரிகள் இந்த விருந்துபச்சாரத்தில் கலந்து கொண்டாடியிருந்தார்கள். 

இலங்கை அரசின் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பல்வேறு அமைப்புக்கள் இன்று இயங்கிவருகின்றன. சிறிலங்கா யுனைட்ஸ் (இலங்கை ஒன்றுபடுகிறது) என்ற பெயரிலும் ஒரு அமைப்பு இயங்கி வருகிறது. இலங்கை மேலான ‘தேசப்பற்றை’ வளர்ப்பது இவர்களது தலையாய நோக்காக இருக்கிறது. குறிப்பாக இளையோர் மத்தியில் ‘தேசப்பற்றை’ வளர்க்கவென இவர்கள் பாடுபட்டு வருகிறார்கள். இந்த அமைப்புக்கு இங்கிலாந்து அரசும் உதவி வழங்கியதா என்ற சந்தேகம் எமக்குண்டு. இவ்வமைப்பு கிளிநொச்சியிலும் ஒரு கிளை அமைத்து இயங்கி வருகிறது. அலிஸ்டர் பேர்ட் இலங்கை சென்றிருந்த பொழுது இந்தக் கிளைக்கு சென்று பேசியதும் கவனிக்கத் தக்கது. 

சிறிலங்கா யுனைட்ஸ் லன்டனிலும் பல கூட்டங்களை நடத்தியுள்ளது. இந்த அமைப்பு மூலம் இளையோர் பலரை இலங்கைத் தேசியப் பற்றை நோக்கி இழுக்க முயற்சிகள் நடந்து வருகிறது. ‘மீள் நிர்மானம்’ – ‘பகை மறப்பு’ – ‘வெறுப்பை ஒழி’ – போன்ற சொல்லாடல்கள் மூலம் நடந்து முடிந்த கொலைகள் நடக்கும் குற்றங்கள் அனைத்தும் குழி தோண்டிப் புதைக்கப்பட்டு வருகிறது. மறப்பு என்பதன்மூலம் மறைப்பு நிகழ்கிறது. 

அனுசூரியாவும் இந்த சிறிலங்கா யுனைட்ஸ் ல் ஒரு உறுப்பினராக இயங்கி வருகிறார் எனத் தெரியவருகிறது. அவர் தனக்கும் இந்த அபை;புக்குமான உறவு பற்றி வெளிப்படையாக பேசவேண்டும். தவிர இந்த இசை ஒளிப்படத்துக்கான பணம் யார் யாரிடம் இருந்து பெறப்பட்டது என்ற விபரத்தையும் அவர் சொல்ல வேண்டும். இவ்வாறு ஒரு கள்ள அரசியல் நோக்கத்தோடு இயங்கிக்கொண்டு இது என்ர தனிப்பட்ட விசயம் -நான் கலை செய்கிறேன் அரசியல் செய்யவில்லை எனத் தப்பி ஓடி விட முடியாது. நீங்கள் ‘கலை’ செய்து சாமியறையில் வைத்து கும்பிடுங்கள். நாம் ஏன் எண்றும் கேட்க மாட்டோம். ஆனால் கொடூர ஓடுக்குமுறை அரசியல் பக்கம் நின்றுகொண்டு மக்கள் மத்தியில் வரலாம் என நினைக்காதீர்கள். ஒடுக்கும் மக்கள் பக்கம் நிற்கும் எம்மிடம் அரசியற் தெனாவெட்டு மட்டுமல்ல, கலை வீரியமும் உண்டு. மோதமல் விடமாட்டோம்.

Tu Senan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.