யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
வல்வை சகாறா

வா...என்னை வருடு!

Recommended Posts

வா…… என்னை வருடு!

AsiaLadyPen.jpg

 

குளிர் பூச்சியத்திற்கு கீழே 15 ஆக இருந்தது. காற்று தாறுமாறாக வீசிக்கொண்டிருந்தது. அக்காற்றில் அலைக்கழியும் பனிப்பூக்கள் பூமியைத் தொட நிமிடங்களைக் கரைத்தன. அறையின் யன்னல் ஓரமாக எவ்வளவு நேரத்திற்குத்தான் இவற்றை இரசிப்பது? எனக்கு அலுத்து விட்டது. வீட்டில் எல்லோரும் படுக்கைக்குச் சென்று விட்டார்கள் அவள் மட்டும் இன்னும் சமையல் கட்டில் பாத்திரங்களைக் கழுவி அடுக்கும் ஓசை கேட்டுக் கொண்டிருந்தது. அவள் கரங்களின் தொடுகைக்காக மனதிற்குள் ஏக்கங்கள் குமைந்து கொண்டிருந்தன. அவளின் பாராமுகமும் அலட்சியமும் என்னைத் தினம் தினம் அவமானப்படுத்துகிறது. அடி போடீ என்று வெறுக்கும் சக்தியை இன்னும் உயிர்மை கொடுக்கவில்லை.

அந்தக்கரங்களுக்குள் கட்டுண்டு கிடக்கும் கதகதப்பிற்காக ஒவ்வொரு மணித்துளியும் எதிர்பார்ப்புடன் கரைகின்றன. இன்றாவது அவளின் வருடல் கிட்டாதா?...ம்… சமையல் அறையில் விளக்குகள் அணைக்கும் ஒலி கேட்கிறது..வருகிறாள்…..என்னுடைய பார்வையை தீனமாக வைத்துக் கொள்கிறேன்…தன்னுடைய பூரண திருப்திக்காகவே தேடி என்னைத் தேர்ந்தெடுத்தவள்… அவளின் அதரங்களுக்குள் எத்தனை தடவைகள் அலைமோதியிருப்பேன்…

ஏன்?....ஏன்? என்னை அவள் தள்ளி வைக்கிறாள்? ஊமையின் வேதனைபோல உள்ளுக்குள்ளேயே எண்ணங்கள் குமைந்தன. அவளின் தொடுகை மட்டுமே என்னை உயிர்ப்பிக்கும்.முன்பெல்லாம் என்னை வருடும் அந்த நீண்ட வெண்டைக்காய் போன்ற விரல்களின் கதகதப்பில் போதையேறி என்னை மறந்து எத்தனை இலாவகமாக அவளோடு அவளின் இழுப்பிற்கும் இறுக்கமான பிடிப்பிற்குள்ளும் கட்டுண்டு கிடந்திருக்கிறேன்…. இப்போது மட்டும் அவளுக்கு என்ன ஆயிற்று? அவள் என்னை நெருங்காத அளவிற்கு அப்படி என்ன தவறு செய்து விட்டேன்?

…….என் தேவதை வருகிறாள் அவளின் வருகையை என் மனம் உணர்கிறது. படுக்கை அறைக்கதவைச் சாத்தியவள் என்னைக் கவனியாததுபோல குளியல் அறைக்குள் புகுந்து தாழிட்டுக் கொண்டாள்…..குளிக்கிறாள் போலும்..குளித்து வரட்டும். ஈரம் சொட்டச் சொட்ட அந்த அழகான கூந்தலை  இரவின் மெல்லிய ஆடையில், அவள் அள்ளி முடிந்திருப்பதை இரசிப்பதே தனி சுகந்தான்….ம் வந்து விட்டாள் நான் என்னைத் தயாராக்கிக் கொண்டேன்.   “வா…. என்னை வருடு.” அவளின் தொடுகைக்காக கசியத் தொடங்கினேன். அவள் துளியேனும் கவனிப்பதாகத் தெரியவில்லை. அவள் தொட்டால் நான் சிலிர்ப்பேன்…அவள் தொட்டால் நான் துளிர்ப்பேன். அவள் தொட்டால் நான் நிமிர்வேன் அவள் தொடுகை என்னை வீரியமாக்கும். அந்த விரல்களின் வருடல் எவ்வளவு சுகமானது……. சந்தன சோப்பின் வாசனை மிக மிக அருகில் அவளின் மெல்லிய மூச்சின் வெப்பம் சிறிதாக என்னில் பரவியது. எனக்குள் பல்லாயிரம் பட்டாம்பூச்சிகள் படபடத்தன…. அவளின் கூரிய விழிகளில் இருந்து தீர்க்கமான ஒரு பார்வை என்னைக் குறிவைத்து இறங்குகிறது……… மெல்லக்கண்களை  மூடிக்கொள்கிறாள்..எட்டி இழுத்து அவளை அணைக்கலாமா என்று தோன்றியது முடியவில்லை அசைவற்று நிற்கிறேன். சாளரங்களின் திரைச்சீலைகளை இழுத்து மூடிவிட்டு அவள் கட்டிலில் படுத்திருந்த துணைவனின் மார்போடு அணைந்து கொண்டாள். நான் மட்டும் தனித்தபடி அவளுக்காக, அவளின் தொடுகைக்காக ஏக்கத்தோடு காயத் தொடங்குகிறேன்.

  • Like 16

Share this post


Link to post
Share on other sites

நானும் என்னமோ நடக்கப் போகுதெண்டு... தெண்டத்துக்கு ஏமாந்ததுதான் மிச்சம்..!!

 

வல்வை... தாயகத்தில் இந்திய சஞ்சிகைகளில் இப்படியான உத்திகளில் அமைந்த கதைகளை வாசித்திருந்தாலும்...

ஈழத்து எழுத்துலகில் இப்படியான முயற்சிகள் அரிது... 

 

பாராட்டுகள்! தொடருங்கள்!!  :D

Share this post


Link to post
Share on other sites

நன்றி சோழியன் அண்ணா.... :lol: சும்மா பம்பலா ஏதாவது எழுதுவம் என்று வெளிக்கிட்டு ஒரு முப்பரிமாணக்கதையும் இந்தக்கதையும் ஒரே நேரத்தில் எழுதி முடித்துவிட்டேன் முப்பரிமாணத்திற்கு இன்னும் கொஞ்சம் திருத்தங்கள் வடிவமைப்புகள் என்று செய்யவேண்டி இருந்ததா.. இது அப்படியே குட்டியா இருந்தது உடன தூக்கிப் போட்டுட்டன்....

 

அதோடு பச்சைப்புள்ளிகளை உடனடியாக அள்ளி வழங்கிய வள்ளல்களுக்கும் நன்றிகள். :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

மினைக்கெட்டிருந்து கிளுகிளுப்பாய் வாசிச்சன்.....கடைசியிலை உள்ள கிளுகிளுப்பும் சிலிர்ப்பும் பாதாளத்துக்கே போட்டுது...அதுசரி மிச்சம் எப்பவரும்??? :D

Share this post


Link to post
Share on other sites

மினைக்கெட்டிருந்து கிளுகிளுப்பாய் வாசிச்சன்.....கடைசியிலை உள்ள கிளுகிளுப்பும் சிலிர்ப்பும் பாதாளத்துக்கே போட்டுது...அதுசரி மிச்சம் எப்பவரும்??? :D

 

figure_laughing_pointing_md_wm.gif

Share this post


Link to post
Share on other sites

யார் நினைப்பதாக புனையப்பட்டுள்ளது?? :huh:

Share this post


Link to post
Share on other sites

உண்மையிலேயே விளங்கேல்லையோ?????? :o


மேல இரண்டுபேர் கருத்து எழுதி இருக்கிறார்கள் அவர்களும் விளங்கித்தான் எழுதினார்களே இல்லையோ தெரியேல்லையே!!! :o  :o  :unsure:

Share this post


Link to post
Share on other sites

திரைச்சீலையா இருக்குமோ என்று ஒரு சந்தேகம்.. :huh:

Share this post


Link to post
Share on other sites

திரைச்சீலையா இருக்குமோ என்று ஒரு சந்தேகம்.. :huh:

1237811334_crying-in-the-audience.gif

 

திரைச்சீலையையும் தொட்டுட்டாப்பா என்னை மட்டும் தொடவில்லை 

 

 

 சாளரங்களின் திரைச்சீலைகளை இழுத்து மூடிவிட்டு அவள் கட்டிலில் படுத்திருந்த துணைவனின் மார்போடு அணைந்து கொண்டாள். நான் மட்டும் தனித்தபடி அவளுக்காக, அவளின் தொடுகைக்காக ஏக்கத்தோடு காயத் தொடங்குகிறேன்.

Share this post


Link to post
Share on other sites

திரைச்சீலையா இருக்குமோ என்று ஒரு சந்தேகம்.. :huh:

திரைச்சீலையை ஆராவது 'உதட்டில' வைப்பாங்களா" ? :D

 

ஏதாவது ' கிழு கிழுப்பான' கதைப் புத்தகமாய் இருக்கும்! :o

Share this post


Link to post
Share on other sites

அவளின் தொடுகைக்காக கசியத் தொடங்கினேன். அவள் துளியேனும் கவனிப்பதாகத் தெரியவில்லை. அவள் தொட்டால் நான் சிலிர்ப்பேன்…அவள் தொட்டால் நான் துளிர்ப்பேன். அவள் தொட்டால் நான் நிமிர்வேன் அவள் தொடுகை என்னை வீரியமாக்கும். அந்த விரல்களின் வருடல் எவ்வளவு சுகமானது……. சந்தன சோப்பின் வாசனை மிக மிக அருகில் அவளின் மெல்லிய மூச்சின் வெப்பம் சிறிதாக என்னில் பரவியது. எனக்குள் பல்லாயிரம் பட்டாம்பூச்சிகள் படபடத்தன…. அவளின் கூரிய விழிகளில் இருந்து தீர்க்கமான ஒரு பார்வை என்னைக் குறிவைத்து இறங்குகிறது……… மெல்லக்கண்களை  மூடிக்கொள்கிறாள்..எட்டி இழுத்து அவளை அணைக்கலாமா என்று தோன்றியது முடியவில்லை அசைவற்று நிற்கிறேன். சாளரங்களின் திரைச்சீலைகளை இழுத்து மூடிவிட்டு அவள் கட்டிலில் படுத்திருந்த துணைவனின் மார்போடு அணைந்து கொண்டாள். நான் மட்டும் தனித்தபடி அவளுக்காக, அவளின் தொடுகைக்காக ஏக்கத்தோடு காயத் தொடங்குகிறேன்.

 

 

சென்ட் பொட்டில்?

கதை எழுதும் பேனா?

Share this post


Link to post
Share on other sites

சகாறா அக்காவின் வாயில் இருக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் .

படத்தை பார்த்தாலே புரியல . :icon_mrgreen:

Share this post


Link to post
Share on other sites

சகாறா அக்காவின் வாயில் இருக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் .

படத்தை பார்த்தாலே புரியல . :icon_mrgreen:

புரிஞ்சுது, அர்ஜுன்! :lol:

 

ஆனால், ஆராவது இந்தக்காலத்தில, 'கசியிற' பேனை, அதுவும் படுக்கையறையிலை....! :o

 

அவனவன் விசைப்பலகையில தட்டிக்கொண்டிருக்கிறான்! 

 

இவ மட்டும்...! :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

சகாறா அக்காவின் வாயில் இருக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் .

படத்தை பார்த்தாலே புரியல . :icon_mrgreen:

புரிகிறது அருச்சுன். அதுவும் பொருத்தம் போல இருக்கு. அறையில் யன்னல் ஒரம் இருக்கும் ஒரு பூ கண்ரு கூட அந்த விபரங்களுக்கு பொருந்தும் போலிருக்கு.  

 

மேலும் மனத்தில் பல கேல்விகள். எழும். அவ்ற்றுக்கெல்லாம் பதில் வேண்டும். வல்வை கதை எழுதிய பிறக்கு அதற்க்கு ஏன் இந்தக் கவலை?

மேலும் இசை கதையைக்கிழப்பும் வரைக்கும் யாருக்கும் சிந்திக்கவும் தோன்றவில்லைப்போலிருக்கு.

Share this post


Link to post
Share on other sites

உப்படியும் கதை எழுதலாமோ? அட சீ எனக்கு தெரியாம போயிற்று ...:D

Share this post


Link to post
Share on other sites

அந்தப் பெரிய படத்தைப் பார்த்துவிட்டும்....! அந்த அந்தரங்கத்துக்குள் அலைமோதியதை அறிவதற்கு உறவுகள் படும் பாடு.....!!. அவள் பூத்தகாலம் தொட்டுக் காத்திருந்தவன் துணைவனாகிக் கட்டிலில்...! அவள் துணையின்றி அவன் தூங்கவும் அவள்தான் விடுவாளா..!! :wub:.  விட்டுவிட்டுத் தன் கற்பனை ஊற்றை வடிக்க உன்னைத் தேடுவாளா...? இறக்கையின் வாரிசுவே..?? :o:D

Share this post


Link to post
Share on other sites

மினைக்கெட்டிருந்து கிளுகிளுப்பாய் வாசிச்சன்.....கடைசியிலை உள்ள கிளுகிளுப்பும் சிலிர்ப்பும் பாதாளத்துக்கே போட்டுது...அதுசரி மிச்சம் எப்பவரும்??? :D

 

கதையைப் படிச்சுட்டு பேசாமல் போயிருக்கலாம் , நாங்கள் எல்லாம் போகலை...!  இப்ப பாருங்கள் அவ கைதட்டிச் சிரிக்கிறா ...! :D

 

இதுக்குள்ள இனியென்ன மிச்சம் கிடக்கு...!

 

Share this post


Link to post
Share on other sites

உங்களுக்காக இப்படி ஏங்கும் அதனை இப்படி தவிக்கவிடலாமா அக்கா???  :wub::D

அதை திருப்திப்படுத்தினால்தான் எங்களுக்கும் திருப்தியாய் இருக்கும்...! :icon_idea:

புனைவு அருமை!  நிறைய எழுதுங்கோ..... அக்கா! :)

 

 

Share this post


Link to post
Share on other sites

எனக்கு கொஞ்சம் வாசிக்கவே விளங்கிவிட்டுது. நன்றாக இருந்தது வாசிக்க.

Share this post


Link to post
Share on other sites

கதையைப் படிச்சுட்டு பேசாமல் போயிருக்கலாம் , நாங்கள் எல்லாம் போகலை...!  இப்ப பாருங்கள் அவ கைதட்டிச் சிரிக்கிறா ...! :D

 

இதுக்குள்ள இனியென்ன மிச்சம் கிடக்கு...!

 

சாளரங்களின் திரைச்சீலைகளை இழுத்து மூடிவிட்டு அவள் கட்டிலில் படுத்திருந்த துணைவனின் மார்போடு அணைந்து கொண்டாள். நான் மட்டும் தனித்தபடி அவளுக்காக, அவளின் தொடுகைக்காக ஏக்கத்தோடு காயத் தொடங்குகிறேன்.

 

 

இவ்வளவத்தையும் ஏக்கத்தோடை சொன்ன பேனை அங்காலை நடந்த மிச்சத்தையும் சொல்லாதோ எண்டொரு நப்பாசைதான்..... :lol:  :D

Share this post


Link to post
Share on other sites

ஒரு எழுத்தாளனின் ..பேனா  மெளனமாய் கண்ணீர் விட்டால் இப்படிதான் இருக்குமோ ..? புனைவு அபாரம் .

Share this post


Link to post
Share on other sites

இவ்வளவத்தையும் ஏக்கத்தோடை சொன்ன பேனை அங்காலை நடந்த மிச்சத்தையும் சொல்லாதோ எண்டொரு நப்பாசைதான்..... :lol:  :D

 

இதே ஆசைதான் எனக்கும்... :icon_mrgreen:

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு