• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

வல்வை சகாறா

வா...என்னை வருடு!

Recommended Posts

வல்வை ஒரு தலை சிறந்த எழுத்தாளர், கவிஞர் !

 

எழுத வேண்டும் என்ற 'தாகம்' அவரிடம் நிறைய உண்டு !

 

ஆனால், அவர் தனது கற்பனைகளைக் காகிதத்தில் துப்ப நினைக்கும் போதெல்லாம், எதுவோ ஒன்று இடைஞ்சலாக வந்து தடுத்து விடுகின்றது!

 

அதற்கு, முள்ளிவாய்க்கால் சம்பவங்களும், நம்பியிருந்த 'இந்தியா' என்ற நந்தியின் செயல்பாடுகளும் காரணமாக இருக்கலாம்!

 

அதாவது அவரது எண்ணங்களுக்கு 'வடிகாலமைக்கும்' பேனா, நீண்ட காலமாகக் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது!

 

தனது ஏக்கங்களையும், தாகங்களையுமே 'பேனாவின்' மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது எனது கணிப்பு!

 

தோற்றுப்போனவனை விடவும் 'துவண்டு போனவனின்' மனநிலையே, அவரது கதை மூலம் வெளிப்படுகின்றது!

 

மீண்டு வாருங்கள், எங்கள் அபிமான கவிதாயினியே! :D

 

இதைத்தான்  பல  காலமாக சகாராவிடம் கூறி  வருகின்றேன்

ஆனால்  இதுவெல்லாம்  கணக்கே இல்லை

இன்னும் இருக்கு

ஆனால்...

வரணும்

வருவார்

Share this post


Link to post
Share on other sites

இதைத்தான்  பல  காலமாக சகாராவிடம் கூறி  வருகின்றேன்

ஆனால்  இதுவெல்லாம்  கணக்கே இல்லை

இன்னும் இருக்கு

ஆனால்...

வரணும்

வருவார்

 

விசுகு அண்ணா எதுவாக இருந்தாலும் தன்னால் கனிந்து வெளிப்படும்போதுதான் அதன் முழுமையை அனுபவிக்கமுடியும். அது எழுத்துத் துறைக்கும் விதிவிலக்கல்ல மற்றைய கலைகளைக்காட்டிலும் இலக்கியத்தில் அணைகள் போடவோ வட்டம் போட்டுக்கொண்டு எழுதகோல்களை ஒரே இடத்தில் நிறுத்தி வைப்பதோ இயலாத ஒன்று அப்படி நிறுத்தி எழுது என்னும்போது எழுதியும் நில் என்னும் போதும் நிறுத்தியும் எழுதினால் அந்த எழுதுகோலின் படைப்புகள் உயிர்ப்பைத் தொலைத்துவிடும். எழுத்து என்பது கிணறு அல்ல அது சுனையாக கசிந்து நதியாக மாறி, ஆறாகப் பெருகி கடலாகப்பரவவேண்டும். அத்தகைய எழுத்துகள் கிணறுகளுக்குள் அடங்காது தேவை என்னும்போது எடுக்கவும் தேவையில்லை என்றபோது சேமிக்கவும் இயல்பான எழுத்தாளனுக்குத் தெரியாது. மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக ஒரு எழுத்தாளனால் எழுதவும் முடியாது மற்றவர்கள் மறுக்கிறார்கள் என்பதற்காக ஒரு எழுத்தாளனால் முடங்கவும் முடியாது.

Share this post


Link to post
Share on other sites

என்னுடைய இந்த படைப்பை பற்றிய  விமர்சனங்கள யாழ் உறுப்பினர்கள் அல்லாத வெளியிடங்களிலும் நிறையவே எதிர் கொள்ள வேண்டிதாக இருக்கிறது. விமர்சனம் என்றால் அது அவரவர்களுடைய உணரும் தன்மையைச் சூழலை வைத்தே உருவாகிறது என்பதை இந்தப்படைப்பு எனக்கு நன்றாக இனம் காட்டியிருக்கிறது. இந்தச்சமயத்தில் நான் 90களின் முற்பகுதியில் வாசித்த கவிஞர் வைரமுத்துவின் ஒரு கவிதைப்படைப்பை இங்கு இணைப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தப்படைப்பை  கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதிய காலத்தில் மிகுந்த சர்ச்சைக்குரியதாக பேசப்பட்ட படைப்பு இது நீங்களும் அத்தகைய படைப்பை அறிந்து கொள்ளுங்கள். ஒரு கவிஞனுக்கு எதிராக பெண்கள் பக்கமிருந்து பெரும் போர்க்கொடியைத் தூக்கப்பண்ணிய படைப்பு என்று சொன்னாலும் மிகையாகாது.

 

 

இக்கவிதை கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பெய்யெனப் பெய்யும் மழை கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றது!

 

14-vairamuthu-1-300.jpg

 

அழைப்பு!

தயவுசெய்து
என்னை தொல்லைசெய்!

 

தயவுசெய்து
என்னை கொள்ளையடி

 

கழுத்தடியில்
ஒரு
செல்ல கடி கடி

 

கூந்தல் கலைத்து
பூக்களை உதிர்த்துவிடு

 

ஓடிப்பிடித்து
என்னை உருக்குலைத்து
போடு

 

குளித்துவரும்
என்னை மீண்டும்
அழுக்காக்கு

 

எதிர்பாரா இடத்தில்
என்னை தீண்டு

 

எவ்வளவு இயலுமோ
அவ்வளவு தழுவு

 

எங்கே என் உயிர் எண்டு
கண்டு பிடி

 

அதன்
இட வலம் தொடு

 

இது தான்
இது தான் நான் கேட்டது

 

உதட்டு எச்சிலால்
உடல் பூசு

 

முத்தமிட்டு
என் மூச்சை
நிறுத்து

 

இது ஒன்றும்
ஒரு வழிப்பாதையல்ல

என் பங்கு செலுத்த
எனக்கும் இடம் கொடு

 

அங்கங்கே பரவு

எலும்பின் மச்சைகளின்
ஊருடுவு

 

மார்பக பள்ளத்தில்
முகம் வைத்து மூச்சுவிடு

 

மேகங்களுக்கு இடையில்
நட்சத்திரம் தூங்கினாலும்

இலைகளுக்கு இடையில்
காற்று தூங்கினாலும்

என் கண்கள்உனக்காக
இரவெல்லாம்
விழித்திருக்கும்

உனக்கில்லாத உரிமையா?

 

பூனையின் பாதம்
பொருத்தி
பொசுக்கென்று வந்து
புடவையிழு!

 

தீவிரத்தால் என்னை
திணறவை

 

என்னை தீண்டி விட்டு
எங்கேனும் ஒழிந்து கொண்டு
நித்தம் ஒரு தடவை
என்னை அழவை

 

என் பெண்மையின்
பரிபூரணமே!

 

என்
வெற்றிடம் வழியே
நிறைந்த நிறைவே

 

தாழாத தணங்கள்
தாழ்ந்தன உனக்காக!

 

ஆகாய கங்கை
பாய்ந்தது
உனக்காக

வா

என்னை வலி செய்

உயிர் பருகி என்னை
ஒலிசெய்

 

என்னுயிர் பயிராகும்
நீ பதித்த பள்ளத்தில்

 

எனக்குள்ளே பூப்பொழியும்
நீ முட்டும் அதிர்வில்

 

உன் நகர்த்தலுக்காக
துடிக்குது என் ஆடை

 

உன் நகம்
கிழிக்க
வீங்குது என் மார்பு!

 

தொட்டுக்கொண்டுறங்கும்
சுகம் ஒண்டு கருதி
உடல் என்ற உலையில்
கொதிக்குது என்குருதி!

 

நீ தந்த சுகம் எல்லாம்
நெற்றியில் தீ எரியும்

தியானத்தில்
வந்ததில்லை

 

வில்லாய் விறைக்கும்
கலவியில் கண்டதில்லை

பிரசவம் முடிந்த
பெரு மூச்சில்
கண்டதில்லை

 

எங்கே
மீண்டும் ஒரு முறை
முந்தானைக்குள் புகுந்து
முயல் குட்டியாகு!

 

தட்டாதே
தாய் சொல்லை கேள்

பத்துமாதம்
என் வயிறு சுமந்த
பிஞ்சு பிரபஞ்சமே!

Share this post


Link to post
Share on other sites

இது மணிரத்தினத்தின் ஆயுத எழுத்து படம். பாடல் எழுதியது  வைரமுத்துவோ  சரியாய்த் தெரியவில்லை.

Share this post


Link to post
Share on other sites

எந்த எழுத்தாளனிடமும்  காமரசத்தை சற்ரே உரசிச் செல்லும் நெகிழ்வான பக்கம் உண்டு. அவற்ரை அப்பப்ப எவ்வளவு தெளிக்கின்றார்கள் என்பதில் தான் கவிஞ்ர்கள் வேறு படுகின்றனர்...! :)

 

புஸ்பா தங்கத்துரை, சாண்டில்யன் /  பிரபஞ்சன் , கல்கி போல...!

 

Share this post


Link to post
Share on other sites

கதைக்கு வாழ்த்துக்கள் சகாரா .

Share this post


Link to post
Share on other sites

மீளவும் பார்க்கும்போதுதான் நாம் யார் என்பதும் நமக்கான கொடை எது என்பதும் புரிபடுகிறது. வாழ்வியலின் பக்கங்கள் ஒவ்வொன்றும் கற்றுதரும் விடயங்கள் அளப்பெரியன. தொடர்வோம். எழுதுவோம்.

Share this post


Link to post
Share on other sites