Jump to content

Eurostar இல் ஒரு பயணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முக்கிய அலுவல் காரணமாக இரண்டு நாட்கள் பிரான்சுக்குப் போக வேண்டி இருந்தது. மற்றும்நேரம் வேறு ஆட்களுடன் சேர்ந்தோ அல்லது எமது வாகனத்திலோ ரணல் வழியாக பலதடவை போயிருக்கிறேன். ஆனால் அதிவேகத் தொடருந்தில் செல்வது இதுதான் முதற்தடவை.

 

இம்முறை கோமகனையும் சுசீலாவையும் சந்தித்துவிட்டு வருவோமா என்று ஒரு எண்ணம் எழுந்தாலும், இரண்டு நாட்கள் நின்மதியாக இருப்பதை விட்டு கோவிடம் போய் நெருப்புப் பிடிச்ச கதையையும் எப்பிடி எத்தனை மணித்தியாலம் பல்கனியில் நின்றோம் என்பதையும், எத்தனை வாகனங்கள் எத்தனை மணிநேரம் அங்கு நின்றன, யார் யார் போன் செய்தார்கள் என்னும் விபரங்களைக் கேட்க மனம் வராததால் அங்கு போவதில்லை என்று முடிவெடுத்தேன்.

 

பயண நேரம் இரு மணித்தியாலங்களும் பதினைந்து நிமிடங்களும். டிக்கெட் புக் செய்யும் போது இரண்டு மணி நேரத்துக்கு முன்பே போடிங் என்று போட்டிருந்ததால் வெள்ளணப் போய், வாற போறவையை ஆவெண்டு பார்த்துக்கொண்டே இருந்ததில நேரம் போட்டுது.

 

இருபது நிமிடம் இருக்க எல்லோரும் ஏறும்படி அறிவிப்பு வந்தது. எனக்கு வாகனம் ஓடும் பக்கம் இருந்தால் தான் பிரச்சனை இல்லை. எந்த சீட் வருதோ என்று தேடிக்கொண்டே போக நான்குபேர் இருக்கும் நடு இருக்கையில் இடம் கிடைச்சிட்டுது. அதிலும் மேலே குத்துமதிப்பா இலக்கத்தைப் போட்டிருக்கே ஒழிய எந்த இருக்கைக்கு எந்த இலக்கம் என்று இல்லை. என்ன செய்வது. எனக்கு யன்னல் கரையோரம் இருக்கத்தான் ஆசை. ஆனால் யாராவது வந்து எழும்பச் சொன்னால் என்ன செய்வது என்று எண்ணி அடுத்த பக்கம் இருந்த ஒரு கிழவனை இதில் எப்படி எனது சீற்றைக் கண்டுபிடிப்பது என்று கேட்டேன்.

 

உனது இலக்கம் உள்ள மின்குமிழ் அழுத்தியில் அழுத்து. எந்த இருக்கைக்கு வெளிச்சம் விழுகிறதோ அதுதான் உன் இருக்கை என்றார். அழுத்தியவுடன் யன்னலோட இருக்கையில் வெளிச்சம் விழுந்தது.பெரியதொரு மன நின்மதியுடன் எனது பொருட்களை தலைக்கு மேல உள்ள தட்டில் வைத்துவிட்டுக் கைப்பையை மட்டும் மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்தேன்.

 

சிறிது நேரத்தில் ஒரு வயதுபோன பெண் எனக்குப் பக்கத்தில் வந்தார். என்னை மேலும் கீழும் ஒருமாதிரிப் பார்த்துவிட்டு எனது பொருட்களுக்குப் பக்கத்தில் தனது பொருட்களை வைத்துவிட்டு அமர்ந்தார். அமர்ந்தவுடன் அங்கால் திரும்புவதும் இங்கால் திரும்புவதுமாக சிறிது நேரம் நெளிந்தார். எனக்குப் பக்கத்தில் இருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை என்று தெரிந்தது. நான் என் பாட்டில் அமர்ந்திருந்து அவரின் செயல்களைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். மீண்டும் சிறிது நேரத்தில் தன் கைகள் இரண்டையும் பக்காவாட்டில் அகட்டி எனக்கு கைகளால் இடிப்பதுபோல் அழுத்துவதும் நெளிவதுமாக, எனக்குக் கோபம் ஏற்படத் தொடங்கியது.

 

சுமே இன்னும் மெலியவில்லை அதுதான் இருவருக்கும் இடம் போதவில்லை என்று நீங்கள் எண்ணுவது புரிகிறது. இடம் தாராளமாகப் போதும். எதோ ஒரு துவேசத்தில் அவர் அப்படிச் செய்கிறார் என்று புரிந்தது. நானும் ஒரு பத்து நிமிடங்கள் பொறுத்துப் பார்த்தேன். அவரின் குரங்குச் சேட்டை தாங்க முடியவில்லை. அவர் பக்கம் திரும்பி உனக்கு என்ன பிரச்சனை என்றதும் அந்தப் பெண் அதை எதிர்பார்க்காதது அவரின் பதட்டமான செயற்பாடுகளில் தெரிந்தது. உனக்கு எனக்குப் பக்கத்தில் இருக்க விருப்பம் இல்லை என்றால் எழுந்து சென்று வேறு இடத்தில் இருந்துகொள் என்று கூறியவுடன் எமக்கு முன்னால் இருந்த ஒரு கறுப்பினப் பெண் சிரிக்கத் தொடங்கிவிட்டாள். அதன் பின் அந்தக் கிழவி  பேசாமல் நல்ல பிள்ளைபோல் வந்திது.

 

அதன்பின்தான் நான் பார்த்தேன் தொடருந்து கிளம்பிச் சென்றுகொண்டிருந்ததை. கையோடு கொண்டு சென்ற கதைப்புத்தகத்தைத் திறந்து வாசிக்கத் தொடங்கினேன். கதை மிகச் சுவாரசியமாகப் போய்க்கொண்டு இருந்தது. நான் நிமிர்ந்து பார்க்கும் நேரம் எல்லாம் வயல்வெளிதான் தெரிந்தது. இன்னும் நிலக்கீழ் பாலம் வரவில்லையே??? எவ்வளவு நேரம் நிலத்துக்குக் கீழே ஓடும் என்ற கேள்விகள் எல்லாம் என்னுள் எழ, சரி வரும்போது பார்ப்போம் என்று மீண்டும் புத்தகத்துள் புதைந்தேன்.

 

கதைப் புத்தகம் வாசித்து முடிந்து நிமிர்ந்தால், இனி என்ன செய்வது வெளியேதான் புதினம் பார்க்க வேண்டும் என்று எண்ணி பார்த்துக்கொண்டே இருக்கிறேன் பாலம் வரவே இல்லை. முன்னுக்கு இருக்கும் கறுப்பி நட்புணர்வுடன் காணபட்டதால், பாலம் எப்போது வரும் என்றேன் அவளைப் பார்த்து. பாலம் கடந்து நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆகிவிட்டது. இன்னும் பதினைந்து நிமிடத்தில் கார்டிநோரில் நிக்கும் என்ற பின்தான் நேரத்தைப் பார்த்தால் நேரம் எனக்குத் தெரியாமல் ஒன்றரை மணி ஓடி இருந்தது.

 

தரிப்பிடத்தில் இறங்கி வெளியே வர எனது நண்பியும் நண்பனும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் நின்றிருந்தனர். அவர்களுடன் உரையாடியபடியே நண்பியின் வீட்டுக்குச் சென்று உணவருந்தி, அரட்டை அடித்து அன்றைய பொழுது போனது.

 

அடுத்தநாள் காலை வெள்ளனவே எழுந்து வந்த அலுவலைப் பார்க்கப் புறப்பட்டு, மீண்டும் லண்டன் நோக்கிய பயணம். ஒரு சக ஆசிரியை என்னைக் கொண்டுவந்து தொடருந்து நிலையத்தில் விட்டுவிட்டுப் போய் விட்டார். அங்கே மதிய உணவு உண்டதுதான் ஆனாலும் உணவைப் பார்த்ததும் ஆசை எழுந்தது,

 

சரி ஒரு மணிக்குச் சாப்பிட்டது. எப்பிடியும் வீட்டை போக ஆறுமணி ஆகும் ஏதாவது வாங்குவம் எண்டு கடையில் வரிசையில் நின்று காம் (Ham) தக்காளி, சலாட் எல்லாம் வைத்துப் பார்ப்பதற்கு அழகாக இருந்த ஒரு பகற் (Baghuette) தண்ணீர், மற்றும் சொக்ளற் பெட்டி வாங்கிக் கொண்டு வந்து தொடருந்தில் ஏறியாச்சு. திரும்பவும் புத்தகத்தைத் திறந்து வைத்துக்கொண்டு அதில் மூழ்கிப்போனேன்.

 

எனக்குப் பக்கத்தில் இம்முறை இருந்தது ஒரு இளம் பெண். அவரின் நான்கு பிள்ளைகளும் அக்கம் பக்கத்தில். ஒரே சந்தைக்கடை. தொடருந்து புறப்பட்டு நாற்பது நிமிடம் ஓடியிருந்தது. பிள்ளைகளும் அம்மாவும் போட்டி போட்டுக்கொண்டு கடைபரப்பி வைத்துக்கொண்டு விதவிதமாக வயிற்றுக்குள் எல்லாவற்றையும் போட்டுக்கொண்டிருந்தனர்.

 

எமது உணவு போல் வாசனையாக இல்லாவிட்டாலும் உணவின் மணம் மூக்கின் வழியாக உள்ளே சென்று என்னை நின்மதி இழக்கச் செய்துகொண்டிருந்தது. பொறுத்துப் பார்த்து தண்ணீர் குடித்துப்பார்த்தும் சரிவரவில்லை. சரி இதைச் சாப்பிட்டு ஒரு கிலோ கூடப்போறனோ என்று எண்ணியபடி பகற்றை (Baghuette) எடுத்து உண்ணத் தொடங்கினேன்.

 

புத்தகத்தை வாசித்தபடியே எவ்வளவு மெதுவாக உண்ண முடியுமோ உண்டு முடித்து குப்பையைப் போட்டு முடிய ஏதோவொரு வித்தியாசம் என்னால் உணர முடிந்தது. இரண்டு அலகுகளும் உள்பக்கமாக வீங்கி வாயைத் திறப்பதற்கு சிரமமாக இருந்தது. பயம் பிடித்துக்கொண்டதனால் உடனே எனது பாரிஸ் நண்பிக்குத் தொடர்புகொண்டு விபரத்தைக் கூறினேன்.

 

அவரும் என்ன நீர் தேவையில்லாமல் உதுகளை வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டு என்று சொல்ல முதலே போனின் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. என்னடா என்று பார்த்தால் தொடருந்து நிலக்கீழ் பாலத்துள் செல்லத் தொடங்கியிருந்தது. வரவர தொண்டை எங்கும் வீங்கி என்ன செய்வது என்று தெரியவில்லை. மூச்சு முட்டுவதுபோல் ஒரு நினைவா உண்மையா என்று தெரியாத நிலை. எதற்கும் முன்நெச்சரிக்கையாக இருக்கட்டும் எனப் பக்கத்தில் இருந்த பெண்ணிடம் விடயத்தைக் கூறினேன்.

அவர் உடனே பயப்பிட வேண்டாம். நன்றாகத் தண்ணீரைக் குடி என்றார்.

 

தண்ணீரைக் குடித்துவிட்டு கண்களை மூடியபடியே பின்னால்ச் சார்ந்து அமர்ந்து கொண்டேன்.

 

இத்தனைக்கும் அன்றுமுழுவதும் எனது இடது கண் துடித்தபடியே இருந்தது. எனக்கு ஒன்றும் ஆபத்தில்லை என மனம் சொல்ல என்னை அறியாமலே தூங்கத் தொடங்கினேன். எனது தொலைபேசியில் மணி அடிக்க எழுந்து பார்த்தால் இன்னும் பத்து நிமிடங்களில் தரிப்பிடம் வந்துவிடும் என்று அறிவிப்புக் கேட்டது.

Link to comment
Share on other sites

போற இடமெல்லாம் சோதனைதான்.. :wub:

பின்குறிப்பு:

உங்களை சுமே என்று பலரும் அழைத்தாலும் நாங்கள் அன்புடன் சுமோ அக்கா என்றுதான் அழைப்போம்.. :D அத‌ற்கான பெரிய‌ காரணம் இந்தியாவில் உள்ளது.. :blink:

 

Spoiler
tata-sumo.jpg:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம், திரு, திருமதி கோவும் நாமும் தப்பிவிட்டோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இசை, நாத முனி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு ஏதோ ஒரு உணவில் ஒவ்வாமை (allergy) இருக்கிறது. எப்படி தண்ணீரோடு தப்பினீர்கள் என்பது தான் புரியவில்லை! சிலருக்கு அனாபைலாக்ஸிஸ் எனும் ஆபத்தான நிலை வருவதுண்டு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பத்தான் மிச்சமும் வாசித்தேன்.

இலங்கையில் கூட, பெரியவர்கள் சொல்வார்கள்: உடனடியாக திரும்பி வந்து பிரச்சனை தராத பிரயாணிகளை, வந்தார், வரத்தாரை இலக்கு வைத்து சுத்த, சுகாதாரம் இல்லா உணவுப் பொருட்களை ரயில், பஸ் நிலையங்களில் விற்பதற்காக சிலர் கடை வைத்து இருக்கிறார்கள். அவர்களிடன் வாங்கிப் போடாதீங்க.

அப்படி ஒரு இடத்தில வாங்கிப் போட்டியளோ? அல்லது வெள்ளை கிழவியின் சாபமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணவகம் சுத்தமாகத்தான் இருந்தது. சிலவேளைகளில் ஹம் ஏதாவது பிரச்சனையோ தெரியவில்லை.

எனக்கு யாரின் சாபமும் ஒன்றும் செய்யாது. :D


உங்களுக்கு ஏதோ ஒரு உணவில் ஒவ்வாமை (allergy) இருக்கிறது. எப்படி தண்ணீரோடு தப்பினீர்கள் என்பது தான் புரியவில்லை! சிலருக்கு அனாபைலாக்ஸிஸ் எனும் ஆபத்தான நிலை வருவதுண்டு!

 

எனக்கு எந்த உணவுக்கும் இதுவரை ஒவ்வாமை இருந்ததில்லை. அனைத்தையுமே உண்பேன். இதுதான் முதற் தடவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணவகம் சுத்தமாகத்தான் இருந்தது. சிலவேளைகளில் ஹம் ஏதாவது பிரச்சனையோ தெரியவில்லை.

எனக்கு யாரின் சாபமும் ஒன்றும் செய்யாது. :D

 

இங்க வெளியில எல்லாம் அந்த மாதிரி தான் இருக்கும். அவயளுக்கு டெலிவரி செய்த கம்பெனி கிட்சின் போய் பார்த்தால் தெரியும்; நரகம்.
 
லண்டனிலேயே, சுத்த சுகாதார குறைவு என பல உணவு நிலையங்கள் இழுத்து மூடப் படுகின்றன.
 
எனினும், வேற நாடுகள் போகும் போது, வெளியே சாப்பிட நேர்ந்தால் (முக்கியமாக இலங்கை , இந்திய  வீதி ஒர உணவு நிலையங்கள் கட்டாயம் தவிர்த்து) முடிந்த வரை சைவமாக இருப்பது நல்லது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு சுமோஅக்கா சிலசமயம் கார் ஓட பஞ்சியில் இயுரோ எடுப்பதுன்டு நம்மவேலை ஒரு பகல் பொழுது காணும் மிகுதி நேரம் லாச்சப்பலை சுட சுட ரீ குடித்தபடி பராக்குபார்ப்பது ஆகவும் மிஞ்சி போனால் ஐந்து தெருவுக்குள் தமிழ் ஆட்களின் வியாபாரம் அடங்கிவிடும் அவ்வளவுதான் பிரான்ஸ் தமிழ் மார்க்கெட்.

Link to comment
Share on other sites

உங்கட சிறுகதை புத்தகத்தில இந்த கதை எல்லாம் வருமா?

அப்பிடினா

உங்க சிறுகதை புத்தகத்துக்கு பேர்

சுமேயும் மொக்கைகளும்

என்று பேர் வைக்கவும் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகுந்தலை ஆச்சிரமத்தில் தோழியர்களுடன் அமர்ந்திக்கிறாள்!

 

அப்போது அவள் 'வலக்கண்' துடிக்கிறது!

 

கலவரப்பட்டவள் தோழிகளுடன், தனது கண் துடிப்பைப் பகிர்ந்து கொள்கிறாள்.

 

நல்ல காரியம் நடப்பதற்கான 'அறிகுறி' இது என்று தோழியர்கள் கூற, 'சீ போங்கடி' என்றவாறு அவள் அதை அப்படியே மறந்து போகிறாள்!

 

சிறிது நேரத்தில், துஷ்யந்தன் என்ற அரசன், வேட்டை முடிந்து வரும் வழியில், ஆச்சிரமொன்றைக் கண்டு, அதனுள் நுழைகிறான்!

 

விளைவு, 'காளிதாசனின் காவியம்" :D

 

உங்கள் அனுபவப் பகிர்வுகளைத் தொடருங்கள்! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கு நன்றி பெருமாள், சுண்டல், புங்கை


எனக்கே இதை ஏன் போட்டன் எண்டு கிடக்கு :lol:


நல்லதொரு பதிவு சுமோஅக்கா சிலசமயம் கார் ஓட பஞ்சியில் இயுரோ எடுப்பதுன்டு நம்மவேலை ஒரு பகல் பொழுது காணும் மிகுதி நேரம் லாச்சப்பலை சுட சுட ரீ குடித்தபடி பராக்குபார்ப்பது ஆகவும் மிஞ்சி போனால் ஐந்து தெருவுக்குள் தமிழ் ஆட்களின் வியாபாரம் அடங்கிவிடும் அவ்வளவுதான் பிரான்ஸ் தமிழ் மார்க்கெட்.

 

அப்ப பெருமாளும் லண்டனோ????
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கு நன்றி பெருமாள், சுண்டல், புங்கை

எனக்கே இதை ஏன் போட்டன் எண்டு கிடக்கு :lol:

 

அப்ப பெருமாளும் லண்டனோ????

 

 

நீங்கள் எழுதுங்கோ நாங்கள் வாசிப்போமல்ல...:D

Link to comment
Share on other sites

சகுந்தலை ஆச்சிரமத்தில் தோழியர்களுடன் அமர்ந்திக்கிறாள்!

 

அப்போது அவள் 'வலக்கண்' துடிக்கிறது!

 

கலவரப்பட்டவள் தோழிகளுடன், தனது கண் துடிப்பைப் பகிர்ந்து கொள்கிறாள்.

 

நல்ல காரியம் நடப்பதற்கான 'அறிகுறி' இது என்று தோழியர்கள் கூற, 'சீ போங்கடி' என்றவாறு அவள் அதை அப்படியே மறந்து போகிறாள்!

 

சிறிது நேரத்தில், துஷ்யந்தன் என்ற அரசன், வேட்டை முடிந்து வரும் வழியில், ஆச்சிரமொன்றைக் கண்டு, அதனுள் நுழைகிறான்!

 

விளைவு, 'காளிதாசனின் காவியம்" :D

 

உங்கள் அனுபவப் பகிர்வுகளைத் தொடருங்கள்! :icon_idea:

 

இப்ப என்ன சொல்லவாறியல் :icon_mrgreen::o

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி புத்தன் நவீனன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரயிலில் அல்லது விமானத்தில் பயணிக்கும்போது நடு சீற்றில் இருப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கையை வைத்து செளகரியமாக இருப்பதற்கு பக்கத்தில் இருப்பவர்களுடன் போட்டிபோடவேண்டும். அழகிய நங்கை என்றெல்லாம் விட்டுக் கொடுக்கலாம். மற்றவர்களை எல்லாம் வெருட்டிவிட வேண்டும். இதுதான் எனது கொள்கை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

. அழகிய நங்கை என்றெல்லாம் விட்டுக் கொடுக்கலாம். மற்றவர்களை எல்லாம் வெருட்டிவிட வேண்டும். இதுதான் எனது கொள்கை!

 

சுமாரான நங்கை என்றாலும் ok...:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரவுக்கு நன்றி பெருமாள், சுண்டல், புங்கை

எனக்கே இதை ஏன் போட்டன் எண்டு கிடக்கு :lol:

 

அப்ப பெருமாளும் லண்டனோ????

 

மூன்று நேரமும் இலவச சாப்பாடு போட்டு சைவமும் தமிழும் (வயிறும்)வளர்க்கும் சைவ கோயில்கள் உள்ள லண்டனில்தான் அடியேனும் வாழ்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரயிலில் அல்லது விமானத்தில் பயணிக்கும்போது நடு சீற்றில் இருப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கையை வைத்து செளகரியமாக இருப்பதற்கு பக்கத்தில் இருப்பவர்களுடன் போட்டிபோடவேண்டும். அழகிய நங்கை என்றெல்லாம் விட்டுக் கொடுக்கலாம். மற்றவர்களை எல்லாம் வெருட்டிவிட வேண்டும். இதுதான் எனது கொள்கை!

 

உங்களைக் கொண்டுபோய் பெண்களே இல்லாத காட்டில் ஒருவருடம் சிறை வைக்க வேண்டும்.

 

மூன்று நேரமும் இலவச சாப்பாடு போட்டு சைவமும் தமிழும் (வயிறும்)வளர்க்கும் சைவ கோயில்கள் உள்ள லண்டனில்தான் அடியேனும் வாழ்கிறேன்.

 

சரி அப்ப லண்டனில் ஒரு சந்திப்பு சமரில் வைக்கவேண்டியதுதான் :D

 

சுமாரான நங்கை என்றாலும் ok... :D

 

உங்களுக்குத் தெரியுது. வயது போன பிறகு சுமாரானதுதான் கவனிக்கும் எண்டு :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது  போன்ற சிறுசிறு  பொறிகள்  தான் கதைகளாகின்றன

இங்கு எவ்வளவு தான் கல்லெறி  வாங்கினாலும்

தனது இலக்கு சார்ந்து

மீண்டும் மீண்டும் ஏறத்துடிக்கும் சுமேயின் முயற்சி  போற்றுதலுக்குரியது

அது தனது  இலக்கை  அடைந்தே தீரும் என்பதுதான் அதற்கான சன்மானமாக  இருக்கமுடியும்

 

தொடருங்கள் சுமே............

Link to comment
Share on other sites

எல்லாருக்கும் தங்களைப் பற்றி அதீத நினைப்பு. நினைப்புத்தானே பிழைப்பைக் கெடுக்கிறது :lol:

 

 

 

 

1800223_10152076244222886_1804882736_n_z

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே....

சின்னப்பயணம் என்றாலும் அனுபவ பகிர்வாகத் தந்திருக்கிறீர்கள்....

 

அது சரி தரிப்பிடம் வரும்போது அலகு அசைக்கக்கூடியதாக இருந்ததா? வீக்கம் குறைந்து விட்டதா? அல்லது எல்லாம் மனப்பிரமையா? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயணத்தின் முதல் பாதியில் பக்கத்தில் இருந்து நெளிந்தது வெள்ளைகாரி. ஆனால் நட்புப் பாராட்டியது கறுப்பி.

 

என்ன தான் நாங்கள் வெள்ளை வெள்ளை என்று வழிஞ்சுருகினாலும்.. பந்தாவா காட்டிக்கிட்டாலும்.. நம்ம கறுப்புக்கு கறுப்பி கூடத்தான் ஒட்டும் உறவும் வரும். :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன புத்தன் இப்படி இறங்கி போகீறிர்கள் :o:lol:

 

எல்லாருக்கும் தங்களைப் பற்றி அதீத நினைப்பு. நினைப்புத்தானே பிழைப்பைக் கெடுக்கிறது :lol:

 

பயணத்தின் முதல் பாதியில் பக்கத்தில் இருந்து நெளிந்தது வெள்ளைகாரி. ஆனால் நட்புப் பாராட்டியது கறுப்பி.

 

என்ன தான் நாங்கள் வெள்ளை வெள்ளை என்று வழிஞ்சுருகினாலும்.. பந்தாவா காட்டிக்கிட்டாலும்.. நம்ம கறுப்புக்கு கறுப்பி கூடத்தான் ஒட்டும் உறவும் வரும். :lol::D

 

நாங்கள் ஒண்டும் உங்களைப்போல் வெள்ளைத்தோலுக்கு அலைவதில்லை.

 

இது  போன்ற சிறுசிறு  பொறிகள்  தான் கதைகளாகின்றன

இங்கு எவ்வளவு தான் கல்லெறி  வாங்கினாலும்

தனது இலக்கு சார்ந்து

மீண்டும் மீண்டும் ஏறத்துடிக்கும் சுமேயின் முயற்சி  போற்றுதலுக்குரியது

அது தனது  இலக்கை  அடைந்தே தீரும் என்பதுதான் அதற்கான சன்மானமாக  இருக்கமுடியும்

 

தொடருங்கள் சுமே............

 

விழவிழ எழுவோம் சோர்வின்றி :lol:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.