• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

பெருமாள்

ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்?

Recommended Posts

2.jpg

ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்?

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?...

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக் கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன. நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.

இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குட முழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்? ஆச்சர்யம்தான்.

அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் எர்த் ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான். இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது. 

http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi/http://raone1news.blogspot.com/2014/02/blog-post_947.html

Share this post


Link to post
Share on other sites

இந்த தானிய கதை இடிக்குது...கோபுர கலசத்தில் மட்டும் வைக்கப்படும் தானியங்கள் என்னத்துக்கு காணும்? ஒரு குடும்பத்துக்கு சமைக்க கூட காணாது...இதில் எவ்வளவு பரப்பில் விதைக்கலாம்?

 

மற்றவிடயங்கள் சிலது ஓகே

Share this post


Link to post
Share on other sites

இந்த தானிய கதை இடிக்குது...கோபுர கலசத்தில் மட்டும் வைக்கப்படும் தானியங்கள் என்னத்துக்கு காணும்? ஒரு குடும்பத்துக்கு சமைக்க கூட காணாது...இதில் எவ்வளவு பரப்பில் விதைக்கலாம்?

மற்றவிடயங்கள் சிலது ஓகே

உண்மை, கலச விதை கால் ஏக்கருக்கும் காணாது.

Share this post


Link to post
Share on other sites

நான் யோசிப்பது அந்த காலத்தில் இப்படி உயர உயர கோபுரம் கட்டாமல் பத்து நூறு பல்கலை கட்டியிருந்தால்  சனம் முன்னேறி இருக்கும்

Share this post


Link to post
Share on other sites

கோ(அரசன்) இல்லம் பின் கோவில் ஆனது. கோவிலுக்குள் நூலகம், குளிப்பாடும் குளம், உணவு அறை, தோட்டம், விளையாட்டு அரங்கம், மண்டபம் என்று ஒரு அரசனுக்கு தேவையான எல்லாம் இருந்தது. இது தான் அரண்மனை, கோட்டை எல்லாம்.

கோவிலுக்குள் கடவுள் வழிபாட்டுக்கும் இடம் இருந்தது.

கோவில் கோபுரங்கள் கோட்டைக்கு நாலுபுறமும் இருந்தது.

யாராவது போர் தொடுத்து வந்தால் மூங்கிலால் கோபுரத்தை பாவித்து தளம் அமைப்பார்கள். இப்போது கட்டிடங்களில் செய்வது போல். பின் இந்த தளங்களில் ஈட்டி, வில் வித்தகர்கள் நிலையெடுத்து வாசல்களை காப்பார்கள்.

எம்மிடம் அடி வாங்கிய முகாலாயர்கள், வழிபாட்டு தளங்களுக்குள் புகுந்து எம் கோட்டைகளை பிடித்தார்கள்.

பின் அங்கிருந்த அரசனோ, இராணியோ இறக்கும் போது அவர்களை கடவுளாக்கி அப்படியே அமுக்கிவிட்டார்கள்.

அப்படித்தான் எமது இராய்ச்சியங்கள் வீழ்ந்து இப்போது பேரில் மட்டும் தமிழ் நாடு இருக்கிறது.

Tamils have so much knowledge but very little wisdom.

Share this post


Link to post
Share on other sites