மெசொபொத்தேமியா சுமேரியர்

யாழில் ஒரு காதல் - யாழ்கள உறவுகள் இணைந்து எழுதும் தொடர்

Recommended Posts

தொடர் 24

ஆத்தைப்பிள்ளை ஆச்சியின் கணவர்தான் யாக்குறு. இருவரின் மண வாழ்க்கைக்கு சாட்சியாக ஒரு மகள் அம்பிகா. அவளுக்கு ஒரு மகன் நாகேந்திரன். கட்டிளம் காளை. படிப்பு ஏறாததால், சொந்தமாக உள்ள காணிகளில் வெங்காயம் மிளகாய் என்று தோட்டம் செய்து கொண்டிருந்தான்.

மணல் தரப்பான அந்த ஒழுங்கையின் இரு மருங்கிலும் பனையோலையினாலான வேலிகளிடையே பூவரசமரம் வளர்ந்திருந்தது .புளுனிக்குஞ்சுகள் இரை தேடியபடியே சங்கீதம் இசைத்தது.

" அப்பு நாகி இங்க வாராசா...உந்த வேலியெல்லாத்தையும் கறையான் அரிச்சு போட்டுது அடுத்த கிழமை வேலி அடைக்கவேணும் அவன் கனகனை வரச்சொல்லு, என அப்பு அந்த மண்வெட்டியை கொண்டுவந்து இந்த கறையான் புற்றை யும் கொத்திவிடு கோழிகள் தின்னட்டும்.."நாகேந்திரன் ஆச்சி என்ன சொன்னாலும் செய்வான். ஆச்சி அவனுக்கு என்று விசேடமாக விரும்பிய உணவுகள் எல்லாம் செய்து கொடுப்பாள்.

நாகேந்திரனின் தோட்டத்திற்கு நிலாவின் வீட்டை தாண்டித்தான் போகவேணும். நிலாவுக்கும் நாகிக்கும் பதினைந்து வயது வித்தியாசம் இருந்தும் ஆத்திபிள்ளை ஆச்சிக்கு நிலாவை நாகேந்திரனுக்கு கலியாணம்கட்டி வைக்கிற யோசனை இருந்தது. யாராவது பெடியள் அந்த ஒழுங்கைக்குள் வந்தால் மனிசி ஒழுங்கை முகப்புக்கு வந்து காவல் காத்தபடி நிற்கிறவ. நிலா மேற்படிப்பு படிக்கிறது ஆத்தைப்பிள்ளை ஆச்சிக்கு அறவே விருப்பமில்லை.

நிலா வெளிநாட்டுக்கு படிக்க போனது ஆச்சிக்கு பெரிய ஏமாற்றமாகி போய்விட்டது , பொன்னம்மாவை கண்டால் இரண்டு திட்டுத்திட்டவேணும் என எண்ணிக்கொண்டாள். பொன்னம்மாவும் இவள் கண்ணில் படாமல் தவித்துவந்தாள்.

ஆச்சி காலை கடனை முடிச்சுப்போட்டு பிலாஇலை குத்துற கம்பியை எடுத்து கொண்டு ஒழுங்கை முகப்பில இருக்கிற ஆயிரம் காச்சி பிலாவடியிலிருந்து பழுத்துவிழுந்த இலைகளை குத்த தொடங்கினாள்.

பொன்னம்மா பாண் வாங்கிகொண்டு திரும்பி வரும் பொழுது ,ஆத்திபிள்ளை ஆச்சி வேண்டுமென்றே ஒழுங்கையின் முகப்பில் நின்றபடி "என்ன பெடிச்சியை சீமைக்கு அனுப்பி போட்டியாம்,எங்களுக்கு சொன்னால் நாங்களும் வந்திடுவோம் என்ற பயந்திட்டியள் போல அதுதான் சொல்லாமல் போனீயளோ "

"இல்லையேன ஆச்சி போயிட்டு எல்லாம் சரி வந்த பின்பு சொல்லுவம் என்று இருந்தானான் ,பிறகு உங்களோட கதைக்கிறேன்" ஆத்தைபில்ளையின் அடுத்த கேள்வியை தவிர்த்து விரைந்தாள் வீட்டுக்கு.

உவளவையள் ஊருக்குள்ள சிலிப்புகாட்டிப்போட்டு, இப்ப சீமையில போய் சிலிப்புகாட்டப்போறளவையள்,என புறுபுறுத்தபடியே பிலாஇலையை ஒங்கி குத்தினாள்.கடைசியாக குத்தின இலையை மேலே தள்ளிவிட்டு , ஆட்டுக்கொட்டிலடிக்கு சென்று,கொட்டிலின் மூலையில் பிலாஇலையுடன் கம்பியை தொங்கவிட்டாள்.

நேற்று போட்ட இலை அப்படியே கிடக்கு , உதுள கிடக்கிறதை முதலில் சாப்பிடு சும்மா இப்ப ஏன் கத்துறாய் , நிலா சீமைக்கு போன ஆத்திரத்தை ஆட்டின் மீது கத்தி தீர்த்தாள்.புண்ணாக்கு தண்ணியை கரைத்து வைத்துவிட்டு , பால் கறப்பதற்காக வீட்டினுள் சென்று செம்பை எடுத்தபடியே டேய் நாகி எழும்படா தோட்டத்திற்கு இறைப்புக்கு போகவேணுமல்லோ...உவள் நிலா சீமைக்கு போனது உண்மைதான்டா ,தாய்காரியிட்ட கேட்டனான்.

ஆச்சி விடியவெள்ளன விடுப்பு கதைக்காமல் பாலை கறந்து போட்டு ஒரு கோப்பியை போடென.நான் கோப்பியை போடுறன் நீ பசையை போட்டு பல்லை மினுக்கு.

கிணற்றடியில் பல்லை மினுக்கியபடியே பொன்னம்மாவீட்டை எட்டிப்பார்த்தான். பொன்னமக்காவின் அழகில் மயங்கியதுண்டு.தோட்டது மரக்கறிகளை கொடுத்து பொன்னம்மாவை ரசித்தான்.அவளுக்கு எதுவும் தெரியாது.அவன் பொன்னமாவை ரசிக்க ஆச்சி நிலாவை நாகியுடன் இணைத்து ரசித்திருந்திருக்கிறாள்.

பின்னேரம் பட்டையை கட்டி முன்னால இருக்கிற பாண்டி மாம்பழத்தை புடுங்க வேணும், இந்த முறை தான் அதை பழுக்க விட்டாங்கள்.வழமையாக அந்த மூன்று வானரபடைகளும் உவள் நிலாவை பார்க்க வரும் பொழுது எல்லாத்தையும் புடுங்கி பச்சையாக சாப்பிட்டு போட்டு படிக்கிற பெட்டைகளுக்கு கொண்டுபோய் கொடுத்துபோடுவாங்கள்.அவங்களும் அவளும் இல்லாதது ஒரு விதத்தில் நல்லம்தான் ,என்றபடி கோப்பியை நாகியிடம் கொடுத்தாள்.

என ஆச்சி யாராவது பாண்டி மாம்பழத்தை பழுக்கவைச்சு சாப்பிடுவினமே,பின்னால இருக்கிற கறுத்தகொழும்பானை முதலில் பட்டையை கட்டி புடுங்குவோம், கூறியபடியே கோப்பியை குடித்து முடித்தான்.

---------------------------------------------------------------------------------------------------------------

கண்ணன் சொல்லும் சில விடயங்களில் உண்மைத்தன்மை இருப்பதில்லை.அவன் சீராணியுடன் நெருக்கமாக இருந்ததாக சொன்னகதையை சுரேஸால் நம்பமுடியவில்லை. இவன் புளுகிறான் என்று எண்ணியபடி,நேரம் போய்விட்டது படுப்போம் நாளைக்கு காலையில் பூங்காவை பார்த்துவிட்டு பின்னேரம் பஸ்ஸில் கொழும்புக்கு போகவேண்டும் என கூறி உறங்கிவிட்டான்.

இருவரும் காலையில் எழுந்து குளித்துவிட்டு பூங்காவை சுற்றி பார்ப்பதற்கு சென்றார்கள். எனக்கு உந்த பூங்காவை சுற்றிபார்த்துபார்த்து அலுத்துவிட்டது, என்றவன் தூரத்தில் சீராணி வருவதை கண்டுவிட்டான் ,வாடா கெதியா சீராணி அதில போறாள் அவளுடன் கதைச்சு கதைச்சு நடந்து போவம் .அவளுடன் கதைச்சுகொண்டு நடந்தால் உனக்கு நல்லம் எனக்கு என்னடா பிரயோசனம் என்ற சுரேசிடம், நீயும் சும்மா பம்பலுக்கு கதையன்டா என்றான்.

இரண்டு மணித்தியாலம் அந்த பூங்காவை மூவரும் சுற்றிபார்த்து நடந்து கொண்டிருந்தனர் .சீராணியின் கையை பிடித்தபடியே கண்ணன் அந்த பூங்கா முழுவதும் வலம் வந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் உரசியபடி நடந்தார்கள்.பல காதல் ஜோடிகள் அங்கு இருந்ததை பார்த்து , இதில் எத்தனை கரை சேரும் என்று எண்ணியபடியே நடந்தான் சுரேஸ் .

கல்விக்கும் காதலுக்கும் ஏற்ற இடமாக அது இருந்தது.மழை வருவது போல இருந்தாலும் மழை வரவில்லை.மப்பும் மந்தாரமாகவும் இருந்தது. மச்சான் நீ கொஞ்ச நேரம் வீட்டுக்கு முன்னாள் இருக்கிற கடையில் டீ குடித்து கொண்டிரு நான் சீராணியுடன் என்ட ரூமுக்கு போய்யிட்டு வந்து உன்னை கூப்பிடுகிறேன் என்று கூறியவன் அந்த தேனீர் கடை முதலாளியிடம்

"அய்யே மினியாட்ட தே தென்ட மம பஸ்ஸெ அவில பொனவா"

அரை மணி நேரம் கழித்து கண்ணன் வந்து சுரேஸுடன் இருந்து தேனீர் அருந்தி ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தான். சுரேஸுக்கு புரிந்துவிட்டது அவன் புளுகவில்லை என்று.

"மச்சான் இனி கொழும்புக்கு போறது அவ்வளவு நல்லமில்லை நாளைக்கு விடிய போடா "

"ஒம்மடா நானும் அப்படிதான் ஜோசிச்சனான்"

இருவரும் உறங்கி சிறிது நேரத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்டது. வெளியே பொலிஸ்காரர்கள் நின்றார்கள்.திடிரேன உள்ளே புகுந்த இரு பொலிஸ்காரர்கள் அடையாள அட்டைகளை கேட்டனர்.

"கம கோயத"

"யவ்னா"

கண்ணனிடம் பல்கலைகழக அடையாளட்டை இருந்தபடியால் குறுக்கு விசாரணை குறைவாக இருந்தது. சுரேஸிடம் அங்கு தங்குவதற்கான தகுந்த ஆதாரம் இல்லையேன கைது செய்தார்கள்.கண்ணன் அந்த வீட்டுக்காரரின் உதவியுடன் பொலிஸ் உயரதிகாரியுடன் கதைத்து அவனை உடனே விடுதலை செய்தான்.கொழும்பில் குண்டு வெடித்தபடியால் இங்கு தெடுதல் நடத்துவதாக பொலிஸ் உயரதிகாரி கூறினான். தொடரும்........................................................................................ மெகா சீறியல் மாதிரி இழுக்கிறனோ.....சும்மா பம்பல் தானே ... :D

Edited by putthan
 • Like 5

Share this post


Link to post
Share on other sites

தொடர்25

அடுத்த நாள் காலை சுரேஸ் கொழும்புக்கு புறப்பட தயாரானான். மச்சான் போனவுடனே ஒரு போஸ்கார்ட் வாங்கி போட்டுவிடடா என சொல்லி வழியனுப்பிவைத்தான் கண்ணன்.

சுரேஸின் மாமா குடும்பத்தோடு கொழும்பில் இருந்தபடியால் அவனுக்கு கொழும்பில் தங்குவது ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை.மாமா அவனுக்கு கொழும்பில் ஒடிட் கொம்பனியில் பயிற்சி கணக்காளராக சம்பளமற்ற ஒரு உத்தியோகத்தை எடுத்து கொடுத்திருந்தார்.அத்துடன் அவன் ஐ.சி.எம்.ஏ என்ற லண்டன் பரீட்சைக்கு தன்னை தயார்படுத்தி கொண்டிருந்தான்.மதுரனிடமிருந்து சுரேஸுக்கு கடிதம் வந்திருந்தது.தான் சான்ட்விஜ் கொர்ஸ் செய்வதாக எழுதியிருந்தான் .சுரேஸுக்கு சான்ட்விஜ் கொர்ஸ் என்று மதுரன் எழுதியது புரியவில்லை.இங்கிருந்து லண்டன் போய் சான்ட்விஜ் செய்ய பழகிறானோ என மனதில் எண்ணியவன், தான் ஐ.சி.எம்.ஏ இரண்டாம் பகுதி எடுத்து சித்தியடைந்துவிட்டதாகவும் உதவிக்கணக்காளராக வேலை செய்வதாகவும் பதில் போட்டிருந்தான்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சிராணி அழுதபடியே வந்தாள்.இதை கண்ட கண்ணனுக்கு பயம் பற்றிகொண்டது.வழமையாக மிகவும் ஜாலியாக பழகுபவள் இன்று ஏன் இப்படியிருக்கிறாள் என நினைத்தபடி அவளிடம் சென்று அழுவதற்கான காரணத்தை கேட்டான்.ஆனால் அவள் அழுகையை நிறுத்தாமல் தொடர்ந்து அழுதுகொண்டிருந்தாள்.கண்ணனின் பயம் மேலும் அதிகமானது.எல்லோரும் பார்க்கின்றார்கள் தயவுசெய்து அழுகையை நிறுத்து என கெஞ்சி கேட்டான்.

இவ்வளவு எச்சரிக்கையாக நடந்தும் இசகு பிசகு ஆக எதாவது நடந்திட்டுதோ என எண்ணியவனுக்கு

"அனே கண்ணன்! என்னுடைய அண்ணா ஆர்மி கப்டனாக இருக்கிறான்,அவனை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி போட்டார்கள் எனக்கு பயமாயிருக்கு"......என சொன்னபின்புதான் அவனுக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது.

அவளை இல்லாத பொய்யெல்லாம் சொல்லி சமாதானப்படுத்தினான்.

"அடுத்த வருடம் எங்களுடைய படிப்பு முடிவடைகிறது, இந்த விடுமுறைக்கு நீ எங்களுடைய வீட்டை குருநாகலுக்கு வா உன்னை எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். என்னுடைய அக்காவும் தமிழனைதான் கலியாணம் செய்திருக்கிறாள் .அவரின்ட ஊர் வடுகொட என்று நினைக்கிறேன்"

"வடுகொட இல்லை வட்டுகோட்டை"

"என்ட தாத்தா டி.ஐ.ஜி யாக இருந்து ரிட்டையராகிட்டார் மூத்த அண்ண கேணலாக கொழும்பில் வேலை செய்கிறார் ,இரண்டாம் அண்ண கப்டன் அவனைதான் யவ்னாவுக்கு அனுப்பி போட்டாங்கள் " என்று சொன்னவள் மீண்டும் அழத்தொடங்கினாள்.

நான் விளையாட்டாக இவளுடன் பழகியது இப்ப கலியாணத்தில வந்து நிற்கின்றது .இவளை காய் வெட்டஏலாது போல இருக்கு.நடப்பது நடக்கட்டும் இன்னும் ஒருவருடம் படிப்பை முடித்த பின்பு மற்றதை யோசிப்போம்.

சிராணியின் அம்மா இருவரையும் வரவேற்றார்.முதன்முதலாக சிராணியின் வீட்டை செல்லுகின்றான் சிறிது பயமாக இருந்தாலும் வருவது வரட்டும் என்ற துணிவை மனதில் வரவழைத்து கொண்டு உள்ளே சென்றான் .வரவேற்பறை எங்கும் பொலிஸ்,மற்றும் இராணுவ உடைகளுடன் சகோதரங்களினதும் தந்தையினதும் படங்கள் காட்சி வைக்கப்படிருந்தன.சிவில் உடையில் ஒருத்தர் பெண்ணுக்கு பக்கத்தில் நின்றார் பார்த்தவுடன் ஒறிஜினல் யாழ்ப்பாணத்து முகம் போலவே இருந்தது.

"இவரா உனது அக்காவின் கணவன் "

"யெஸ்"

" handsome like me "

இறுதியாண்டு படிப்பதால்,

இப்பொழுதெல்லாம் இருவரும் ஆங்கிலத்தில்தான் உரையாடினார்கள்.தந்தையார் சந்தையால் வந்திருந்தார் வேலையாட்கள் ஒடிபோய் அவருக்கு பணிவிடை செய்தார்கள். உள்ளே வந்தவுடன் சிராணி தந்தைக்கு கண்ணனை அறிமுக செய்து வைத்தாள்.முதலே தந்தையிடம் எல்லாம் சொல்லி வைத்துவிட்டாள்.

அதனால் தந்தை ஆச்சரியப்படவில்லை.கண்ணனுக்கு கையை கொடுத்தார்.ஒரு சில கேள்விகளை கேட்டார் அவனும் பதிலளித்தான்.எல்லோரும் மதிய சாப்பாட்டுக்கு தயாரானார்கள்.

உணவை உண்டபின்பு சிராணி அவனை தனது தோட்டத்தை காட்ட அழைத்துச்சென்றாள். வீட்டை சூழ தென்னச் சோலைகள் .வேலையாட்கள் தென்னை ஒலையை சேகரித்தபடியும் ,சிலர் தேங்காய்களை உரித்து குவியலாக்கிக் கொண்டிருந்தனர்.வயது போன பெண்மணிகள் தங்களது மார்பகங்கள் தெரியும்படி குனிந்திருந்து கிடுகு பின்னிகொண்டிருந்தனர்.

வேலையாட்கள் இவர்களை கண்டவுடன் புன்னகைத்தனர். நோனா எப்ப வந்தீங்கள்?.மாத்தையா யார் ? என்ற கேள்விகளை கேட்டனர்.ஒரு தோட்டத்து இளைஞன் மட்டும்

"நோனா! மாத்தையா டமிழ் எக்கனெக்த?" என்றான்.அவள் ஓம் என்றும் சொல்லவில்லை இல்லை என்றும் சொல்லவில்லை சிரித்தபடியே நடந்தாள் .

மாலை பன்சலைக்கு அழைத்து சென்றாள்.அவர்களது தோட்டத்தின் மூலையில் ஒரு சிறிய குன்று ,அதன் உச்சில் விகாரை இருந்தது அதனுள் புத்தர் சிலையு டன் ஒர் பிள்ளையார் சிலையும் அம்மன் சிலையுமிருந்தது தங்களது தாத்த கட்டிய பன்சல என்று கூறினாள். பன்சலவை சூழ அழகிய பூந்தோட்டம் ,சில பூக்களை பறித்தாள் அவனின் கையை பிடித்து உள்ளே அழைத்து சென்று கொண்டு சென்ற பூக்களை கையில் ஏந்தியபடி முழங்காலில் இருக்கும் படி சொன்னாள். சிறிது நேரம் அமைதியாக கண்ணை மூடிக்கொண்டிருந்தவள் ,எழுந்து பூக்களை புத்தரின் பாதத்தில் போட் டு,கண்ணனையும் போடும் படி சொன்னாள்.இருவரும் அமைதியாக கைகொர்த்தபடியே வெளியேறினார்கள்.

வீட்டின் முன்னறையில் தூங்கிகொண்டிருந்தவனுக்கு இராணுவ ஜீப் வந்து வீட்டின் போர்டிக்கோவில் கீறிச் சென்று பிரேக் போட்டு நிற்க திடுக்கேட்டு எழுந்தான்.பூட்ஸ் கால் சத்தம் அவனருகில் கேட்க மனது படபடக்கத்தொடங்கியது.சிறிது நேரத்தில் வீட்டின் சகல மின் விளக்குகளும் பிரகாசித்தது.

வீட்டினுள் எல்லோரும் சிரித்து கதைப்பதை கேட்டபின்புதான் அவன் நிம்மதிப்பெருமூச்சு விட்டான்.சிராணி அவனது அறை கதை தட்டி ,சகோதரனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.வவுனியாவுக்கு இராணுவ நடவடிக்கை ஒன்றுக்கு செல்லவதாக கூறினான்.

கலியாணம் கட்டியபின்பு தொடர்ந்து சிறிலங்காவில் இருக்க வேண்டாம்,எதாவது வெளிநாட்டுக்கு போகும்படி அறிவுரை கூறியவன் உங்களின்ட ஆட்கள் அநேகர் வெளிநாட்டிலிருக்கிறார்கள் என சொன்னவன் அங்கு போய் என்னையுயம் குடும்பத்தோடு கூப்பிடுங்கோ என சிரித்தபடியே சொல்லியபடியே விடை பெற்றான். அடுத்த நாள் இருவரும் பல்கலைக்கழகம் செல்வதற்காக பஸ்ஸில் சென்று கொண்டிருந்தார்கள்.திடிரென ஒரு கும்பல் பஸ்சை மறித்தார்கள் தடி,பொல்லுகளுடன் ஏறியவர்கள் தெமிளு மினிசு இன்னவதா என கேட்டபடியே உள்ளே வந்தார்கள்.

யாழில் கடமையாற்றிய இராணுவசிப்பாய் அந்த கிராமத்தில் இறந்துவிட்டானாம் அதற்காக பழிவாங்க தமிழர்களை தேடிகொண்டிருந்தது அந்த கும்பல். வந்த கும்பல்,கண்ணனின் தோலில் சாய்ந்துபடுத்தபடியே இருந்த சிராணியை பார்த்து சிங்களத்தில் கதைக்கும்படி கேட்டது அவளின் சிங்களத்தை கேட்ட கும்பல் அவள் சிங்களத்தி என்று உறுதிப்படுத்தியவுடன் அந்த இடத்தைவிட்டு அகன்றார்கள்.

வாசகர்களே புத்தனின் கிறுக்கல் தான் இனி உங்களை அறுத்தெடுக்கப்போகிறது மன்னிக்கவும்

 • Like 6

Share this post


Link to post
Share on other sites

தொடர் 26

 

 

தாரிணி,  நான் மயூரணச் சந்தித்து விட்டேன்
எப்படி இத்தனை சீக்கிரம் நடந்தது எண்டு நம்ப முடியாமல் இருக்குது
தற்செயலாக நான் தங்கியிருக்கும் வீட்டின் தொலைபேசியில் மதுரனின் குரல் கேட்டேன்;தயங்கினேன்;  மயங்கினேன்; இன்று அவனுடன் லண்டன் முழுவதும் சுற்றித் திரிந்தேன் இப்பத்தான் வீட்ட வந்தனான்
உடனே உனக்குச் சொல்ல வேணும் எண்டு ரெலிபோன் அடிச்சனான்
விடாமல் சொல்லி முடிச்ச் நிலாவுக்கு மூச்சு இழுத்தது.

 

தொலைபேசியின் மறுமுனையில் தாரிணிக்கு ஆச்சரியம் ஒருபக்கம் எரிச்சல் மறுபக்கமாக இருந்தது.
இதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை . லண்டன் சென்ற மதுரன் எப்படியும் நிலாவை மறந்துவிடுவான் அதன் பின்னர் தனது காதலை சுரேஸ் மூலம் மதுரனுக்குத் தெரியப்படுத்தலாம் எண்ட முடிவைச் சுரேசும் அவளும் யாருக்கும் தெரியாமல் தங்களுக்குள்ளேயே வைத்திருந்தார்கள்.

 

காதல் என்பது எப்படி வரும் யார் மீது எப்போது வரும் என்பது யாராலும் முற்கூட்டியே சொல்ல முடியாது
அப்படித்தான் சுரேஸ் நிலா காதலும் தாரிணி மதுரன் காதலும் இருந்தது.
நிலா மதுரனைக் காதலிப்பது சுரேஸுக்குத் தெரிந்தும் அவனால் நிலாவின் இழப்பைத் தாங்க முடியவில்லை. தாரிணிக்கும் இதே நிலைதான். தன தோழியை மதுரன் காதலித்தாலும் அவளால் இலகுவில் மதுரனை மறக்க முடியவில்லை.

எப்படி இருந்தாலும் மதுரனும் நிலாவும் சந்தித்ததை உடனடியாக சுரேசுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என நினைத்த தாரிணி சுரேசின் நம்மபருக்குத் தொடர்புகளை ஏற்படுத்தினாள்
சுரேஸ், நிலா இப்பத்தான் கதைத்தவள் அவள் மதுரனை லண்டனிலை சந்தித்துவிட்டாளாம். இரண்டு பேரும் லண்டன் முழுவதும் சுற்றிப் பார்த்தவையாம் எனக்கெண்டால் பயமாயிருக்கு என்ன செய்யலாம்
ஏதாவது ஐடியா உன்னட்டை இருக்கா எண்டு பட்டபடப்புடன் சொல்லி முடித்தாள்
சுரேசும் இதை எதிர்பார்க்கவில்லை அவனுக்கும் மனம் இருண்டுவிட்டது.அடுத்து என்ன செய்வது என்டு தெரியாமல் தாரிணியையும் குழப்பாமல் எதுக்கும் நான் யோசிச்சுவிட்டு உன்னுடன் தொடர்பு கொள்ளுறன் எண்டு சொல்லிக் கட்பண்ணிப் போட்டான்.

ஒரு சிகரெட்டுடன் கதிரையில் அமர்ந்த சுரேஸிற்கு சடக்கெண்டு ஒரு மின்னல் தோன்றின மாதிரி மதுரனின் அண்ணையின் முகம் நினைவுக்கு வந்தது.கடைசியாக அவர் ஊருக்கு வந்தபோது கொடுத்த தொலைபேசி நம்பர் மறக்காமல் இருக்க எங்கேயோ எழுதி வைத்திருந்தவன் எங்கே என்பது தெரியாமல் அறை முழுக்க சல்லடை போட்டு ஒரு மாதிரிக் கண்டுவிட்டான்.

கலோ நான் மதுரனின் நண்பன் சுரேஸ் கதைக்கிறன் குகன் அண்ணை
எப்படிச் சுகமாக இருக்கிறீங்களோ ;ஓமோம் நான் நல்ல சுகமாய் இருக்கிறன் நீர் எப்படி இருக்கிறீர் என நயமாக விசாரித்த குகனுக்கு சின்ன கோபம் சுரேசின் மேலை இருந்தது. அமானியின் மதுரனுடனான தொடர்பைக் கட்டாயம் சுரேஸ் அறிஞ்சிருப்பான் எண்டுதான் குகன் நினைச்சிருந்தவர். இதுவரை தனக்கு அறிவிக்கவில்லை எண்ட கோபம் தான் அது, சுரேசின் குரலைக் கேட்டதும் அமானியின் விடயத்தைப் பற்றி விசாரிக்காமல் இருக்க முடியவில்லை.
சுரேஸ் என் தம்பி மதுரன்ரை  விஷயத்தை எனக்கு மறைச்சனீங்கள்
அவன் லண்டனிலை பெட்டையோடை  சுத்திறான் . தெரிஞ்ச நீங்கள் எனக்கு அறிவிச்சிருக்கலாம்தானே. நாங்கள் உங்களோடை தம்பி மதுறனைப் பழக விட்டது  நீங்கள் நல்ல  பிள்ளையள் எண்டபடியால்த் தான். இப்படிச் செய்து போட்டியளே எண்டு குகன் முடிக்க சுரேசும் கோவிக்காதேங்கோ குகன்  அண்ணை எனக்கு இப்பத்தான் இந்த விஷயம் காதிலை எட்டிச்சுது அதான் உடனே உங்களுக்குப் போன் போட்டனான் எண்டு முடித்தான் நிலாவை மனதில் நினைத்தபடியே

யுனியில் இப்போது மதுரன் நல்ல பிள்ளையாக மாறியது போல ஒரு தோற்றம் இருந்தாலும் அமாணியைக் கண்டதும் எல்லாவற்றையும் மறந்து விடுவான். அல்லது அமானி அவனை சகலதையும் மறக்கச் செய்து விடுவாள் அமானியின் காதல் சரசங்களில் மூழ்கிய மதுரனுக்கு நிலாவை ஏன் காதலித்தேன் எனவும் சில வேளைகளில் தோன்றும். எப்படியாவது அவளின் தொடர்புகளைத் தவிர்க்க வேண்டும் எனவும் சிலவேளைகளில் எண்ணுவான். அமானியின் அணைப்பில் இருந்து விடுபட்ட பின்னர் நான் என் இப்படி நிலாவுக்குத் துரோகம் செய்தேன் என தன்னையே தனக்குள் ஏசிக்கொள்வான்.

 

தான் செய்வது எல்லாம் சரியா தப்பா என ஒரு முடிவு செய்ய முடியாமல் அமானிக்கும் நிலாவுக்கும் இடையில் மனதை அலையவிட்டுக் கொண்டிருந்தான்.
இந்த நிலையில் சுரேசிடமிருந்து ஒரு நாள் தொலைபேசி அழைப்பு வந்தது.பல காலம் தொடர்பு இல்லாமல் இருந்த சுரேசிடமிருந்து அழைப்பு வந்ததால் மதுரனுக்கு ஒரே மகிழ்ச்சி,
ஓடிச் சென்று அழைப்பை ஏற்றவனுக்கு சுரேசின் குரலில் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

(உங்களுக்குப் பிடிச்சிருந்தால்) :D
தொடரும்

 • Like 6

Share this post


Link to post
Share on other sites

தொடர் 27

 

 

மதுரன் ஆனந்தமாக சொல்லுடா மச்சான் எண்டு முடிக்க முதல்
சுரேஸ் அழுத குரலில் டேய் மதுரன் எங்கடை கண்ணன் எங்களை விட்டுப் போயிட்டானடா எண்டு கனத்த குரலில் கூறினான்.
இதைக்கேட்ட மதுரன்  ஒரு கணம் திகைத்தவனாகித்  தன்னைச் சுதாகரித்துக்  கொண்டு என்னடா நடந்தது எண்டு விசாரித்தான்.

கண்ணன் சிராணியின் முகத்தைத் தன் தோளில்  சாய்த்தபடி  யன்னல்  வழியே வந்த இதமான காற்றைச் சுவாசித்துக் கொண்டிருந்தான்.
காலை  நேரக்காற்று அருகில் இதமாக சிராணி எனக்  கண்ணன் காதல் இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான். இடைக்கிடை சிராணியிடம் சில்லறைச் சீண்டல்களையும் விட்டுவைக்கவில்லை.
சகபயணிகளின் கண்கள் காதல்ஜோடிகளின் மேல் அடிக்கடி திரும்பி விடுவதால் கண்ணன் அடக்கி வாசித்தான்.

திடீரென்று பஸ் வண்டி காட்டுப்ப்பாதையொன்றில் மறிக்கப்பட்டது.
பல சிங்களக் காடையர்கள் பஸ்ஸினுள் நுழைந்து சிங்களப்பாசையில் தமிழர்  யாரும் இருந்தால் உடனே பஸ்ஸை விட்டு இறங்குங்கடா எண்டு கத்தினார்கள் .சிராணி உடனே கண்ணனை நித்திரைபோல் நடிக்கச் சொல்லிவிட்டு பின்னும் முன்னும் பார்த்தாள் ஒருவரும் எதுவும் சொல்லவில்லை. சிராணியிடம் சிங்களம் தெரியுமா எனக் கேட்டவர்களுக்குச் சிங்களத்தில் பதில் சொல்ல அவர்கள் இறங்கிச் சென்றுவிட்டனர்.ஆழ்ந்த பெருமூச்சுடன் சிராணியும் கண்ணனும் தங்களைத் தழுவிக் கொண்டார்கள்.

பஸ் வண்டியும் புறப்படத் தயாரான வேளையில் பின்வரிசையில்
இருந்த ஒருவன் கண்ணாடி வழியாக சிங்களத்தில் பலமாகக் கத்தினான். இதக் கேட்ட சிங்களக் காடையர்கள் திரும்பவும்  பாய்ந்து வந்து பஸ்சினில் ஏறிக் கண்ணனை தலையில் பிடித்துத் தரதரவென இழுத்துச் சென்றார்கள். இன்னொரு காடையன் கட்டிக் கொடுத்தவனின் முதுகில்  தட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றான்.

வண்டியை விட்டு இறக்கப்பட்ட கண்ணன் சிங்களக் காடைக் கும்பலால் பலமாகத் தாக்கப்பட்டான். சிராணி கண்ணன் தன் காதலன் எனச் சிங்களத்தில் கத்தியும் யாரும் அவளுக்கு உதவி செய்யவில்லை.
தமிழன் யாழ்ப்பணத்தில் எங்களை அழிக்கிறான் நீ ஒரு தமிழனைக் காதலிக்கிறாயா என் ஒரு காடையன் சிராணியிடம் கத்தினான்.
அருகில் வந்த காடையனை சிராணி அடையாளம் கண்டுகொண்டாள் .
இவன் என் அண்ணனுடைய நண்பன் அல்லவா என யோசிக்கவும் அவன் கண்ணனின் தலையில் பொல்லால் அடிக்கவும் சரியாக இருந்தது. கண்ணன் அந்த  இடத்திலேயே  இறந்தான். சிங்கள மக்களைக் காரணம் காட்டி இனக் கலவரம் என்ற போர்வையில்  தன் சொந்த விருப்பத்தை நிறைவேற்றிய அண்ணனை நினைத்து சிராணி வெக்கமடைந்தாள்.

இத்தனையும் தனக்குச் சிராணி கூறியதகச் சொன்ன சுரேஸ் அழுகையை நிறுத்தவில்லை.நல்ல நண்பனை நாங்கள் இழந்துவிட்டோம் எனப் புலம்பியபடியே இருந்தான்.
மதுரன் அவனைச் சமாதானப்படுத்தினான்.கண்ணனின் இறுதிச் சடங்கில் தான் முன்னின்று சகலதும் செய்ததாகக் கூறினான்.
இறுதியில் தான் குகன் அண்ணையுடன் கதைத்த விடையத்தையும்
குகன் அண்ணை விசாரித்ததையும் அவன் காதில் போட்டுவைத்தான்.
 

கண்ணனின் இழப்பிலிருந்து ஒருவாறு மீண்டாலும் மதுரனது  நினைவில் கண்ணன் சிராணியின் காதலும் அவர்களின் அன்னியோன்யமும் வந்து அவனின் மனத்தைக் குழப்பியது.
அமானியுடன் தான் வைத்திருக்கும் உறவையும் நிலாவின் காதலையும் கண்ணனின் நிலையையும் ஒப்பிட்ட மதுரனுக்கு
அமானியின் உறவினால் தனக்கு ஏதும் ஆபத்து வந்துவிடுமோ என எண்ணி மேலும் குழப்பமடைந்தான்.

குகன் அண்ணை தன்னைக் காண வந்தபோது அமானியையும் கண்டுவிட்டார். இப்ப நிலாவும் வந்துவிட்டது தெரிந்துவிட்டது, நான் எப்படி அவரிடமிருந்து தப்புவது என ஆழமாக யோசித்தவனுக்கு
நிலாவையும் அமானியையும் கொஞ்ச நாளைக்குச் சந்திக்காமல் விடுவதே நல்லது எனவும் ஒரு கிழமை நல்லவேடம் போட்டுப் பிரான்ஸ் சென்று குகன் அண்ணையை எப்படியாவது சமாதானப் படுத்தி விடவேண்டும் என்ற யோசனை தோன்ற பிரான்சுக்கு ஒரு பயணச் சீட்டை வாங்கிக் கொண்டான்

தொடரும் .
 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

பகுதி 28

 

முன்பென்றால் மதுரனுக்கு குகன் அண்ணாவைக் காண ஆவல் மேலோங்கும். இப்போதோ நிலாவிடமிருந்தும் அமானியிடமிருந்தும் தப்புவதற்காக அவரிடம் வந்தது மனதுக்கு முழு நின்மதியையோ சந்தோசத்தையுமோ கொடுக்கவில்லை. ஆனாலும் அண்ணனைக் கண்டபின் ஒரு சந்தோசம் ஏற்படவே செய்தது. ஆனால் மதுரனின் முகத்தை வைத்தே அவன் எதோ சஞ்சலத்துடன் தான் தன்னிடம் வந்திருக்கிறான் என்பதைக் குகன் கண்டுகொண்டார். காடினோர் தொடருந்து நிலையத்திலிருந்து அவனை முதலில் லாசெப்பலுக்கு அழைத்துச் சென்று ஒரு தமிழரின் உணவு விடுதியில் இருவரும் அமர்ந்து உணவருந்தினர்.

 

மதுரனுக்கு எதுவுமே இரசிக்கவில்லை. லண்டனிலும் நிறையத் தமிழர் இருக்கின்றனர் தான். ஆனால் இங்கு குப்பையாகத் தமிழர்கள் இருப்பதுபோல் அவனுக்குப் பட்டது. அதை வாய் விட்டே அண்ணனிடம் கூறினான். என்னடா செய்யிறது லண்டனிலும் அதிக சனம் இங்க. எங்களுக்கும் வேற வழியில்லை. எதோ எங்கட சனங்களைப் பார்த்தாவது ஊரின்ர உதற முடியாத நினைவுகளையும் ஆசைகளையும் தீர்த்துக் கொள்ளுறம் என்று கூறிப் பெருமூச்சு விட்டதுமல்லாமல் உனக்கு என்னடா பிரச்சனை. நீ எதோ குழப்பத்தில இருக்கிறாய். என்னெண்டு சொல்லன் எண்டதுக்கு ஒண்டும் இல்லை அண்ணை எண்டு அவசரமாக மறுத்தான் மதுரன். அவனின் மறுப்பே அவன் இப்ப தன் பிரச்சனையைச் சொல்ல விரும்பேல்ல எண்டதை உணர்த்த, குகன் சரி என்னை உன் நண்பனா நினைச்சு எப்ப சொல்லவேணுமோ சொல்லு. நான் உன்னைக் கட்டாயப் படுத்தேல்லை என்று விட்டுத் தேநீரையும் அருந்தி முடித்துவிட்டு எழுந்தார்.

 

என்ன இருந்தாலும் அண்ணன் கெட்டிக்காரன் தான். என் முகத்தைப் பார்த்தே பிரச்சனை எனக்கு எண்டு புரிஞ்சு கொண்டிட்டார். பாப்பம். போக முதல் அண்ணாவிடம்   கதைச்சுப் பாப்பம் என்று தன் மனதுள் தீர்மானித்துக் கொண்டான். பின்னர் தொடருந்தில் ஏறி குகன் இருக்கும் வீட்டுக்குச் சென்றனர். அங்கே இன்னும் மூன்று பெடியள் இருந்தார்கள். அதற்குள் குகன் தான் வயதில் மூத்ததாகக் காணப்பட்டார். மற்றவர்கள் அவரிலும் வயதில் முகக் குறைந்தவர்களாகக் காணப்பட்டனர். எல்லோரும் மதுரனை நன்றாக வரவேற்றார்கள். அவர்களின் வரவேற்பிலேயே அவர்கள் குகனிடம்  வைத்திருக்கும் மதிப்புத் தெரிந்தது.

 

குகன் இவனது பையை வாங்கிக் கொண்டு போய் ஒரு அறையுள் வைத்தார். அதைவிட ஒரு அறையும் குசினியும் இருந்தது. எல்லாரும் இங்கேயோ இருக்கிறவை என்று இவன் தமையனைக் கேட்டான். வரவேற்பறையிலும் இரண்டு படுக்கைகள் சாத்தி வைக்கப்பட்டிருந்தன. ஓம் இங்க எல்லாமா ஆறு பேர் இருக்கிறம் என்றதும் ஆறு பேரா என்று இவன் வாயைப் பிளந்தான். ஏன் லண்டனில மட்டும் என்ன. ஒவ்வொரு அறையிலும் இரண்டு மூன்று பேர் எண்டு இங்கத்தே வாழ்கை மாதிரித்தானே என்று குகன் இவனைப் பார்த்துச் சிரித்தார். நான் இருக்கிற வீட்டில எனக்கு தனியறை என்று எதோ தான் பெரிய வில்லாவில் இருப்பதுபோல் கூறியதைப் பார்த்து என்ன புறாக் கூடு மாதிரி அறை என்று கூறிச் சிரித்தவர், மற்றவர் முன் விருந்தாளியாக வந்த தம்பியை மனம் நோக வைத்துவிட்டோம் என்று எண்ணியவராய், எங்கட விதியடா அந்தப் பெரிய வீடுகளை ஆரோ இருக்க விட்டுட்டு இங்க இப்பிடிக் கூட்டுக்கை அடைபட்டு இருக்கவேண்டும் என்று கூறிச் சிரித்தபடி நிலைமையை இலகுவாக்கினார். அவனுக்கு தமையனின் கதை தானே ஏறி புறாக் கூட்டுக்குள் இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் சிரிப்பை வர வைத்தது. 

 

அப்ப இவை ஒருத்தரும் வேலைக்குப் போறேல்லையோ என்று இவனும் மற்றவர்களைப் பார்த்துக் கேட்டான். ஏன் நாங்கள் போறேல்ல. இவங்கள் ரண்டு பேருக்கும் இரவு வேலை. நான் இன்னும் கொஞ்ச நேரத்தில இறங்கப் போறன். வேலை இல்லாமல் இந்த நாட்டில இருக்க ஏலுமே என்று சிரித்தபடி எழுந்தான். மதுரனும் இயல்பாகி மற்றவர்களுடன் லண்டன் பற்றி அவர்கள் கேட்டதுக்கு  பதில் கூறியபடியே இருந்தான்.

 

இரவு குகனும் மதுரனும் இடது பக்க அறையில் தூங்கச் சென்றனர். அண்ணனும் தம்பியுமாக ஊர் உலகக் கதையெல்லாம் கதைச்சு முடிய, .... எங்க முடிஞ்சது. குகன் இடையில் எங்கே இடைவெளி வரும் என்று காத்திருந்தது போல், சரி இப்ப உன்ர கதையைச் சொல்லு எண்டதும் ஒரு நிமிடம் மதுரன் என்ன சொல்வது என்று தெரியாமல் விளித்ததுமல்லாமல் மனதுள்ளே அண்ணாவுக்குச் சொல்வோமா விடுவோமா என்று பட்டிமன்றம் நடத்தி முடிவில் அண்ணனிடம் சொன்னால் அவர் ஏதும் நல்லதாகச் சொல்லக் கூடும் என்று நிலா இப்ப லண்டன் வந்திட்டா என்றுவிட்டு நிறுத்தினான். ஓ ....... அதுதான் பயந்து இங்க ஓடி வந்தனியோ என்று அண்ணன் கேட்ட நக்கல் கேள்விக்கு எந்தப் பதிலும் கூறாமல் இருக்க, அப்ப முந்தி ஒருத்தியோட திரிஞ்சனி எல்லே. அவளை இப்ப விட்டிட்டியோ என்றான் குகன்.

 

இல்லை அண்ணா அவளையும் என்னால விட முடியுதில்லை. நிலாவைப் பாத்த பிறகு திரும்ப நிலாட்டைப் போக வேணும் போல கிடக்கு. என்ன செய்யிறது எண்டே தெரியேல்லை அண்ணா. குழப்பத்தில தான் இங்க வந்தனான் என்று இழுத்து நிறுத்தினான். தம்பி நான் சொல்லுறன் எண்டு கோவிக்காதை நீ ஒருத்தியையும் உண்மையாக் காதலிக்கேல்ல. சும்மா பொழுது போக்குக்கு அவையளோட திரியிறாய். என்னைப் பார் இத்தனை வயதுக்கும் எனக்கு ஒருத்தியிலையும் ஆசை வரேல்ல. அதுக்காக எனக்கு கலியாணம் செய்ய ஆசை இல்லை எண்டு நினைச்சிடாதை. எனக்கும் மற்றவைக்கு இருக்கிற ஆசை எல்லாமே இருக்கு. ஆனால் எங்கட குடும்பத்தை நினைச்சு நான் என்ர அசைகளை எல்லாம் அடக்கிட்டன். ஆனா இப்ப காலம் கடந்து போச்சு. இனி எனக்கு காதலிக்கிற வயதும் இல்லை. நீ கடைசிப் பெடியன் எண்டதால செல்லமா வளந்திட்டாய். அதால உனக்குக் குடும்பப் பொறுப்பும் இல்லை. என்ர படிப்புத்தான் குழம்பிப் போச்சு. நீயாவது படிச்சு நல்ல நிலைக்கு வருவாய் என்று பார்த்தன். நீயும் குழப்படியோடை திரியிறாய். எங்களுக்கெண்டு ஒரு கட்டுப்பாடு இருக்க வேணும். ஆசையால் ஆருக்குத்தான் இல்லை. ஆசைப்படுற எல்லாத்தையும் அடைய நினைக்கிறதும் தப்பு. உன்னை மற்றப் பெட்டியோட கண்டிட்டு சரி நிலாவோட உன்ர நட்பு முறிஞ்சிட்டுது எண்டு நினைச்சன். ஆனா இப்ப தடுமாறிக் கொண்டு இருக்கிறாய். அவள் எந்த நாட்டவள் எண்டு நான் கேட்கப் போறதில்லை. ஆனால் நிலா எங்கட ஊர் பேட்டை. நல்ல அமைதியான பெட்டையும். இரண்டு பேர்ல நிலாதான் உனக்குப் பொருத்தமா இருப்பாள் எண்டு நான் நினைக்கிறான். மற்றவளைப் பார்க்க எல்லாருக்கும் ஆசை வரும். அப்பிடியான அழகு ஆபத்தில தான் முடியும். இப்ப அவள் உன்னோட திரியிறாள். ஒரு கட்டத்தில விட்டுட்டுப் போனால் கஸ்ரம் உனக்குத்தான். அதுக்குப் பிறகு என்ன செய்வாய். பொம்பிளையளின்ர விசயத்தில ஒண்டுதான் நான் சொல்லுவன். அம்பிளையளுக்குப் பாக்கிற எல்லாரிலையும் ஆசை வாறது இயல்புதான். அதுக்காக மனதை அலைபாய விட்டி எண்டால் கடைசியில ஒண்டும் மிஞ்சாது. நான் உன்ர நன்மைக்குத்தான் சொல்லுறன். இப்பவே ஒரு நல்ல முடிவை எடு. இரண்டுக்கும் ஆசைப்படாமல் எது உனக்கு நன்மையையும் சந்தோசமும் தரும் என்று வடிவா அலசி தீர்மானம் எடுத்து அதில மாறாமல் இரு. ஆர் உனக்குப் பொருத்தமானவள் எண்டு நீ தான் தீர்மானிக்கவேணும். தீர்மானிச்ச பிறகு தீர்மானத்தில மாறாமல் இருக்க வேணும். சரி மிச்சத்தை நாளைக்குக் கதைப்பம் என்றுவிட்டு குகன் திரும்பிப் படுத்தார். அவர் படுத்த சிறுது நேரத்திலேயே அவரின் குறட்டை ஒலி அவர் நல்ல உறக்கத்துக்குச் சென்றுவிட்டார் என்று சொல்லியது. மதுரன் தான் தூக்கம் வராது என்ன முடிவை எடுப்பது என்றும் தெரியாது காலைவரை புரண்டு புரண்டு படுத்து ஒரு முடிவுக்கும் வந்துவிட்டான்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
 • Like 2

Share this post


Link to post
Share on other sites

பகுதி 29

 

கொழும்பு

 

இந்த இரவில் நான் பாடும் பாடல்

என் இளைய நெஞ்சத்தின் தேடல்
இந்த இரவில் நான் பாடும் பாடல்
என் இளைய நெஞ்சத்தின் தேடல்

உந்தன் உறவை நாடும் எந்தன் மேனி
நான் உணவை தேடும் ஒரு தேனி
பருவ ராகம் கொண்டு பாடி
என் பக்கம் பறந்து வாடி
 

இந்த இரவில் நான் பாடும் பாடல்
என் இளைய நெஞ்சத்தின் தேடல்
கண்ணே என்று உன்னை அழைக்க
ஒரு காலம் வருமோடி அணைக்க
கண்ணே என்று உன்னை அழைக்க
ஒரு காலம் வருமோடி அணைக்க

பெண்ணே பூவை உனை நினைத்து
படும் பாட்டை எங்கு நான் உறைக்க

இந்த இரவில் நான் பாடும் பாடல்
என் இளைய நெஞ்சத்தின் தேடல்
இந்த இரவில் நான் பாடும் பாடல்
என் இளைய நெஞ்சத்தின் தேடல்
உந்தன் உறவை நாடும் எந்தன் மேனி
நான் உணவை தேடும் ஒரு தேனி
பருவ ராகம் கொண்டு பாடி
என் பக்கம் பறந்து வாடி
 

தொட்டால் சுடுவதிந்த நெருப்பு
நீர் பட்டால் அணைந்துவிடும் அமைப்பு
தொட்டால் அடங்குமென் கொதிப்பு
நீ ..தொட்டால் அடங்குமென் கொதிப்பு
அடி தோழி இன்னுமேன் மிதப்பு
அடி தோழி இன்னுமேன் மிதப்பு

இந்த இரவில் நான் பாடும் பாடல்
என் இளைய நெஞ்சத்தின் தேடல்

நேயம் வைத்தவனை நெஞ்சில் வைத்துவிடு
நெஞ்சம் இல்லை எனில் நஞ்சை வைத்துவிடு
நேயம் வைத்தவனை நெஞ்சில் வைத்துவிடு
நெஞ்சம் இல்லை எனில் நஞ்சை வைத்துவிடு
காயம் அழிவதற்குள் கண்ணே

உன் அழகை கண்கள் பார்த்து வந்த காயம் போக்கிவிடு

இந்தப்பாட்டையே திரும்பத் திரும்பக் கேட்ட சுரேசின் மனம்

ஏன் நிலா என்னை விட்டு மதுரனை காதலித்தவள்

மதுரனைவிட நான் எந்த வகையில் குறைந்தவன்

என்ரை படிப்பும் வசதியும் மதுரனை விடக் கூடியது இருந்தும் நிலா மதுனில் மயங்கினது ஏன் ஏன் எண்டு அவனை விசரனாக்கியது. நிலா மதுரன் காதலை எப்படி எப்படி உடைக்கலாம் என்பதிலேயே குறியாக இருந்தது. குகன் அண்ணையிட்டை போட்டுக் குடுத்தாச்சுது. எப்பிடியும் குகன் அண்ணை மதுரன் காதலை ஒரு வழி பண்ணித்தான் விடுவார் எண்டு நினைச்சவன் எதுக்கும் அவருக்கு ஒரு போன் போட்டு நிலைமையை அறிவோம் எண்டு நினைச்சுக் கொண்டு வெளிக்கிட்டான்.

 

கலோ நான் சுரேஸ் கதைக்கிறன் அண்ணை எண்டதும்

குகனும் கலோ சுரேஸ் எப்படி இருக்கிறீர், நீர் செய்த உதவிக்கு மெத்த நன்றி தம்பி,

மதுரன் இப்ப இஞ்சை தான் நிக்கிறான் தெரியுமோ?

நீர் சொன்ன மாதிரி அமானி மேலை அவனுக்குக் காதல் ஒண்டும் இல்லை சும்மா ரைம் பாசிங் தானாம்.

கொஞ்ச நாள் அவளோடை சுத்தினவன் தான் இப்ப நிலா வந்தததும் அவன் திருந்தியிட்டான் அதான் கொஞ்ச நாளைக்கு என்னோடை இருந்தால் பழசுகள மறக்கலாம் எண்டு வந்திருக்கிறான்

எண்டு ரெயில் எஞ்சின் புகை விட்ட மாதிரி எல்லாத்தையும் ஊதித் தள்ளிப் போட்டு நிப்பாட்ட

சுரேசுக்குத் திக்கெண்டிச்சுது.

என்னது மதுரனுக்கு லண்டனிலை வேறை ஒரு பெட்டையும் இருக்கோ எண்டு நினைச்சவனை

குகனின் கலோ தம்பி லைனிலை நிக்கிறியளோ எண்ட குரல் திருப்பி விட ஓம் அண்ணை சொல்லுங்கோ

மதுரன் நல்லாயிருந்தால் சரி அண்ணை மதுரனோடை ஒருக்காக் கதைக்கலாமோ எண்டான், இல்லைத் தம்பி இப்பதான் பிள்ளையள் அவனோடை இறங்கியிட்டினம் பின்னேரம் தான் வருவினம் ஊர் சுத்திப் பாக்கப் போயிட்டினம் எண்டதும் சரி அன்னை நான் பிறகு கதைக்கிறன் எண்டு வைச்சுட்டான்.

 

இந்த விஷயம் காணும் எனக்கு மதுரனையும் நிலாவை பிரிக்க எண்டு சந்தோசப்பட்ட சுரேஷ் அடுத்தகட்ட காய் நகர்த்தளுக்குத் தயாரானான்

நிலா எனக்குத்தான் எண்டு அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.மதுரன் இவ்வளவு அமசடக்கியாக இருப்பான் எண்டு அவன் நினைக்கவில்லை. எதுவாக இருந்தாலும் தனக்கு நல்லதே நடப்பதாக எண்ணிக்கொண்டான். இந்த விசயத்தைத் தாரிணிக்குச் சொல்லலாமா விடலாமா எண்டு யோசித்துக்கொண்டு ஒரு சிகரெட்டைப் பத்த வைத்தான்.

 

லண்டன்

லண்டன் பனி மூட்டத்தில் விடிந்து கொண்டிருந்தது.வீதியெங்கும் மக்கள் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தார்கள். நிலாவும் கல்லூரி செல்லத் தன்னைத் தயாராக்கிக் கொண்டிருந்தாள்.

கண்ணாடி முன் நின்று தலைவாரிப் போட்டு வைத்து தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். இடையிடையே பின் முன் திரும்பித் தன அழகையும் ரசித்துக் கொண்டிருந்தாள்.ஊரில் இருந்து லண்டன் வந்ததும் தன அழகு மெருகேறி இருப்பதை உணர்ந்து கொண்டாள்.

 

நிலா இப்போதெல்லாம் நீ ஊரில் இருந்த அழகைவிட இன்னும் அழகாகிவிட்டாய். உன் அழகிய நிலா முகம் அந்த நிலாவை மீறிய அழகு தெரியுமா என்று அன்று மதுரன் கூறியது நினைவில் வந்து போனதும் மதுரன் தன்னை இன்று எங்கு சந்திப்பான் கல்லூரிக்கு வருவானா அல்லது கல்லூரிக்கு அழைத்துச் செல்ல வருவானா

அல்லது நேற்று வராமல் விட்டது போல இன்றும் வரமாட்டானா என்று அவள் மனம் ஏங்கியது.என் நேற்று அவன் என்னைச் சந்திக்கவில்லை

ரெலிபோனும் அடிக்கவில்லை என்ன நடந்திருக்கும் என்று அறியாமல் தவித்தாள்

 

 

ஊர்ப்பக்கம்

நாகேந்திரம் இப்ப ஆளே மாறிவிட்டான் , முந்தினமாதிரி ஊத்தை உடுப்புடன் வெளியே வருவதில்லை அதுவும் பொன்னம்மா அக்கா வீட்டுப் பக்கம் வருவது எண்டால் மைனர் மாதிரித்தான் வெளிக்கிட்டு வருவான் . எல்லாத்துக்கும் காரணம் பொன்னம்மா அக்கா அவன்மேல் காட்டிய அன்பும் உபசரிப்பும் தான். பொன்னம்மா அக்கா நிலாவையும் நாகேந்தியையும் மனசிலை வைச்சுக் கட்டின கோட்டை நாகேந்திக்குத் தெரியாது.நாகேந்தி அடிக்கடி பொன்னம்மா அக்காவைக் கனவு காண ஆரம்பிச்சுக் கனகாலம் ஆச்சுது. ஏன் பொன்னம்மா அக்கா குளிக்கும் நேரம் பாத்து வீட்டை வாறதும் ஏதாவது உதவி வேணுமா அக்கா எண்டு கேக்கிற சாட்டிலை தட்டி வேலிக்கிள்ளாலை பொன்னம்மா அக்கா குளிக்கும் அழகை ரசிக்கும் வரையும் வந்துவிட்டது. பொன்னம்மா அக்கா எதையும் மனசிலை வைக்காமல் நாகேந்தியைத் தன் மகன் போலவே பார்த்து வந்தா. நாகேந்திக்குப் பொன்னம்மாவை ஒரு தடைவையாவது தன்னோடை சேர்த்துக் கோயில் குளம் எண்டு கூட்டிப் போகும் ஆசையும் மனசிலை வந்தது. எப்பிடி இதைப் பொன்னம்மா அக்கட்டைக் கேக்கிறது எண்டு தெரியாமல் நாகேந்தியின் மனம் அலைந்துகொண்டிருந்த்தது.

 

இத்தனைக்கும் நாகேந்திக்கும் பொன்னம்மாக்காவுக்கும் எட்டு வயது வித்தியாசம். அந்த வயது வித்தியாசம் எல்லாம் நாகேந்திக்கு பெரிய விசயமாகப் படவில்லை. பொன்னம்மா அக்காவின் மேலை நாகேந்திக்கு வந்த ஆசை இதையெல்லாம் பின் தள்ளி அவனை பொன்னம்மா அக்காவுக்குக் கிட்ட நெருங்கவைத்தது.

 

பொன்னம்மா அக்கா விஷயம் ஒண்டும் தெரியாமல் எடுத்ததுக்கெல்லாம் நாகேந்தி நாகேந்தி எண்டு அவனைத்தான் உதவிக்குக் கூப்பிடுவா.இப்ப கூட நிலாவோடை ரெலிபோன் கதைக்கிறது எண்டாலும் நாகேந்திதான் மெயின் ரோட்டிலை ஆனந்தன்ரை ரெலிக்கொம்மிலை போய் நிலாவின்ரை நம்பருக்கு சிக்கனால் கொடுத்துப் போட்டு ரெலிபோனைக் கையோடை கொண்டு வந்து பொன்ன்ம்ம்மா அக்க்கட்டைக் கொடுப்பான். நிலாவின்ரை அழைப்பு வந்ததும் பொன்னம்மா அக்கா மணிக்கணக்காப் பேச நாகேந்தியும் பொன்னம்மா அக்காவின் அழகை ரசிசுக் கொண்டிருப்பான்.

 

கொழும்பு

நாகேந்தியின் நிலைமை இப்படி இருக்க சுரேஸ் மதுரன் நிலா காதலை எப்படி முறிக்கலாம் எண்டு தீவிர யோசனையில் இருந்தான்.

ஊருக்குப் போகேக்கை பொன்னம்மா அக்கான்ரை காதிலை இந்த விசயத்தைத் தெரிய வாறமாதிரிச் செய்யவேணும்.

அதுக்கு இன்னும் நாலு நாள் கிடக்குது.

தாரிணியிட்டை இந்த விசயத்தைச் சொன்னால் நம்புவாளா??

அவள் மதுரன் மேலை நல்ல நம்பிக்கை வைசிருக்கிறாள்

நான் இதை அவளிட்டைச் சொன்னா அவள் என்னோடை தான் சண்டைக்கு வருவாள். ஏற்கனவே ஒரு விஷயத்தை ஆச்சிப்பிள்ளயிட்டைப் போட்டுக் கொடுத்ததுக்கே தாரிணி என்னோடை எரிஞ்சு விழுந்தவள் . அப்படியெண்டால் என்ன செய்யலாம்??

நானே நிலாவுக்குப் போன் போட்டுச் சொல்லலாமா??

நிலா என்னை நம்புவாளா?? நான் நிலாவைப் பாக்கிற பார்வையே அவளுக்குப் பிடிக்கிறேல்லை ஆச்சிப் பிள்ளையிட்டை நான் தான் முதலும் போட்டுக்கொடுத்தது எண்டு அவளுக்கும் தெரியும்.

அதனாலை எதுக்கும் நாலு நாள் பொறுத்தால் ஊர்ப்பக்கம் போகேக்கை பொன்னம்மா அக்காவிட்டையே இந்த விஷயத்தை சொல்லலாம் எண்டு முடிவெடுத்தான்.

 

தொடரும்

 

 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

பகுதி 30

 

இன்று இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. மதுரனிடம் இருந்து எந்த அழைப்பும் இல்லை. வந்து நிலாவைப் பார்க்கவும் இல்லை. நிலாவுக்கு மனம் கிடந்தது அடித்துக்கொண்டது. மதுரனுக்கு ஏதும் ஆகிவிட்டதோ??? எப்படி அறிவது என்று கூட அவளுக்குத் தெரியவில்லை. அவனது போன் நம்பர் கூட வேலை செய்யவில்லை. அடிக்கொருதரம் அதற்கு அடித்துப் பார்த்தும் சுவிச் ஆப் ஆகியிருந்தது மட்டும் விளங்கியது. என்ன இவன் இப்பிடிச் செய்கிறான் என எண்ணியபடி அறையுள் படுத்துக் கிடந்தாள். அவனாக தன்னுடன் தொடர்பு கொண்டால் ஒழிய தானாக ஒன்றும் செய்ய முடியாது என்று எண்ணியவள் புரண்டு புரண்டு கட்டிலில் படுத்தும் முடியாது எழுந்தாள்.

 

இனி ஒண்டும் செய்ய ஏலாது. அபி அக்காவிடம் விஷயம் முழுவதையும் சொல்லீட வேண்டியதுதான். அவவால மட்டும் தான் மதுரனைப் பற்றி அறிய முடியும் என எண்ணியவள் படிகளில் கடகடவென இறங்கி வரவேற்பறைக்குச் சென்றாள். அபி தொலைக்காட்சியில் இருந்து கண்களைத் திருப்பி வாங்கோ நிலா என்றுவிட்டு என்ன இரவு தூக்கம் இல்லையோ ??கண்ணெல்லாம் சிவந்து கிடக்கு என்றுவிட்டு இவள் கண்களை பார்த்தாள்.

 

ஓமக்கா நீங்கள் ப்ரீ எண்டா நான் உங்களோட கொஞ்சம் கதைக்க வேணும் என்றவுடன் தொலைக்காட்சியின் சத்தத்தைச் சிறிது குறைத்துவிட்டு சொல்லுங்கோ என்றார் அபி. மதுரன் இரண்டு நாளா போன் எடுக்கிறார் இல்லை. எனக்கு என்ன செய்யிறதெண்டு தெரியேல்லை அக்கா. நீங்கள் தான் எனக்கு அறிந்து சொல்லவேணும் என்றவுடன் மதுரனை உங்களுக்கு முன்னமே தெரியுமோ என்று ஆச்சரியத்தோடு பார்த்தார் நிலாவை. நிலா மடை திறந்த வெள்ளமாய் தன் பிரச்சனை முழுவதையும் அபியிடம் கொட்டித் தீர்த்துவிட்டு நிமிர்ந்தாள். பூனை மாதிரி இருந்துகொண்டு இத்தனை விடயங்கள் இருக்கே என்றபடி எழுந்து தனது கைத்தொலை பேசியை எடுத்து மதுரனின் பெயரைத் தேடி எடுத்து அழுத்த மறுபக்கத்தில் தொலைபேசியை  நிப்பாடி வைத்திருப்பது தெரிந்தது. உடனே இன்னொரு இலக்கத்துக்கு அழுத்த அங்கே மணி ஒலிப்பது கேட்டது.

 

மதுரன் நிக்கிறானே என்று அபி கேட்க மற்றப்பக்கத்தில் எதோ சொல்வது தெரிந்தது. தொலைபேசியை வைத்துவிட்டு மதுரன் இங்க இல்லையாம். தமையனிடம் பிரான்சுக்குப் போவிட்டானம். இன்னும் நாலு நாள் செல்லுமாம் வர என்று கூற முதலே நிலாவின் அழுகை கரைபுரண்டது. முந்தநாள் என்னைச் சந்திச்சவர். அப்பா கூட என்னட்டை அங்க போறான் எண்டு சொல்லேல்லை அக்கா. ஏன் இப்பிடிச் செய்கிறார் என்று கேட்டுவிட்டுத் தொடர்ந்து அழும் நிலாவைப் பார்க்க பாவமாக இருக்க, நிலா நீங்கள் அழுது உடனடியா ஒண்டுமே நடக்கப் போறேல்ல. மதுரன் வரும் வரை பொறுமையாத்தான் இருக்கவேணும். அவன் வந்த பிறகுதான் ஏதும் கேட்கலாம் என்றுவிட்டு நான் படம் பாக்கப் போறன். நீரும் இருந்து பாரும் என்று நிலாவின் பதிலை எதிர் பார்க்காது தொலைக்காட்சியின் சத்தத்தைக் கூட்டினார்.

 

நிலாவுக்குப் படம் பார்க்கும் மனநிலை இல்லையாயினும் மேலே போனால் மனம் இன்னும் மதுரனை நினைத்து வேகும் என்பதால் ஒன்றும் சொல்லாமல் அபியுடன் இருந்து படத்தைப் பார்க்கத் தொடங்கினாள்.

 

அபி நிலாவின் முன் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. பாவம் சின்னப் பெட்டை வந்து காலூன்ற முதலே காதலும் கத்தரிக்காயும் என்று மனதில் எண்ணியபடி அடுத்த நாள் மதுரனின் நண்பனைச் சந்தித்து அவனைப் பற்றி  விசாரிக்க வேண்டும் எனவும் எண்ணிக் கொண்டார்.

 

படம் பார்த்து முடிய அபி எழுந்து தேத்தண்ணி போடுறன் குடியும் என்று கூற ஒன்றும் சொல்லாமல் தலையாட்டியபடி சம்மதம் சொன்னவள், தேநீர் வரக் குடித்துவிட்டு மதுறனைப் பற்றி அபி ஏதும் கதை எடுப்பாளோ என்று பார்த்தவள், அபி ஒன்றும் கூறாது கதைப் புத்தகம் ஒன்றை எடுத்து விரிக்க, சரி அக்கா நான் மேல போறன் என்று விட்டுப் படிகளில் தொய்ந்த மனதோடு கால்கள் வைக்க முடியாதனவாகக் கனக்க ஒருவாறு தன் அறையை அடைந்தாள்.

 

நிலா தன் அறைக்குச் சென்று விட்டாள் என்று நிட்சயித்துக் கொண்ட அபி, தன்  கைத்தொலைபேசியை எடுத்து மதுரனின் நண்பனுக்கு அழுத்தினாள். பத்து நிமிடங்களாக அவனுடன் கதைத்தவள் கனத்த மனதுடன் தொலைபேசியை நிப்பாட்டிவிட்டு, எதுக்கும் நாலு நாள் பொறுக்கத்தான் வேணும். மதுரன் வந்த பிறகுதான் அவனோட கதைச்சிட்டு இதுக்கு ஒரு முடிவு கட்டவேணும் என எண்ணியபடி தன் அலுவலைப் பார்க்கச் சென்றாள் அபி.

 

 

 

 

 

 

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

சுரேஸ் கொழும்பில் பட்டயக்கணக்காளர் பரீட்சை,மற்றும் ஐ.சி.எம். ஏ போன்ற பரீட்சைகள் எல்லாம் சித்தியடைந்து தனியார் கொம்பனியொன்றில் பிரதமகணக்காளராக பணியாற்றிக்கொண்டிருந்தான்.ஊர் திருவிழா என்றால் தவறாமல் செல்ல முயற்சிப்பான் .காலப்போக்கில் போக்குவரத்து சீராக இல்லாத படியால் ஊருக்கு செல்ல முடியாமல் போய்விட்டது. இறுதியாக ஊருக்கு . மூன்று வருடங்களுக்கு முன்பு ஊர்திருவிழாவிற்கு சென்றிருந்தான். "ஏன் தம்பி கடிதம் போடவில்லை திருவிழாவுக்கு வருவாய் என்று தெரியும் என்றாலும் ஒரு கடிதத்தை போட்டுப்போட்டு வந்திருக்கலாம் காலம் கெட்டுக்கிடக்கு" "கடிதம் போட்டனான் அப்பா , கிடைக்கவில்லையோ" "நீ திறும்பி கொழும்புக்கு போனபின்புதான் கிடைக்கும்,,சரி சரி குளிச்சு போட்டு கோயிலடிக்கு போயிட்டுவா" " இப்பதானே வந்திருக்கிறான் உடனே ஏன் கோவிலுக்கு கலைக்கிறீயள்,சாப்பிட்டிட்டு போகட்டும்" "இனி கொம்மா நீ திரும்பி போகமட்டும் ஒரே விருந்தா இருக்கும்,எனக்கும் நல்ல சாப்பாடு கிடைக்கும்" "இல்லாட்டி உங்களை பட்டினிதானே போடுறனான்..சும்மா என்ட வாயை கிளறாதீங்கோஉவரின்ட உந்த நொட்டைகதைக்கு ஒரு குறைச்சலுமில்லை நீ போய் குளிச்சிட்டுவா , சாப்பிட்டுபோட்டு கோவிலுக்கு போவம் ,நானும் வாரன் " இருவருமாக கோவிலுக்கு புறப்பட்டார்கள்.கோவிலில் அடுத்தநாள் தேர்திருவிழாவுக்கு ஏற்பாடுகள் நடைபெற்றுகொண்டிருந்தன.தேர்முட்டியடியில் இளைஞர்கள் தேரை அலங்காரம் செய்துகொண்டிருந்தனர். ஆத்தைப்பிள்ளை ஆச்சி கோவில் முன்மண்டபத்தின் தூணில் சாய்ந்திருந்தபடி வாரபோர ஆடகளுடன் விடுப்பு கதைத்துகொண்டிருந்தாள். கிணற்றடியில் காலை கழுவிவிட்டு உள்ளே செல்ல போனவனை, " உதுல ஆத்தைபிள்ளை ஆச்சி குந்தி கொண்டிருக்குது உன்னை பார்த்தா எதாவது விடுப்பு கதைக்கும் ,அதின்ட கண்ணில் பாடாமல் உள்ள போய் கூம்பிட்டுவிட்டு வா" .

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

பகுதி 32

 

நேற்றுத்தான் மதுரன் பிரான்சிலிருந்து வந்தது. தமையனை விட்டு வந்தது மனதுக்கு கவலையைக் கொடுத்ததுதான். எப்படி என்றாலும் கூடப் பிறந்த உறவு. ஒரு நெருக்கம் விட்டுப் போகாது என்று நினைத்துக் கொண்டான். அண்ணனிடம் போனதும் நல்லதாகப் போய்விட்டது. கலங்கி இருந்த மனதுக்கு தெளிவு வந்திட்டுது என்று எண்ணியவன் தான் நிலாவுக்குச் சொல்லாமல் போனது நினைவில் வர என்ன நினைத்தாளோ என்று மனதில் ஒரு கலக்கம் தோன்ற அவளுக்கு போன் செய்ய தொலைபேசியை எடுத்தான். இவன் இலக்கங்களை அழுத்த முன்னர் அபியின் தொலைபேசி எண்களுடன் தொலைபேசி ஒலிக்கும் சத்தம் வர போனைக் காதுக்குள் வைத்தான்.
 
மதுரன் உம்மோட அவசரமாக் கதைக்கவேணும். எப்ப நீர் பிரீ என்று அபி கேட்க மதுரனுக்குள் யோசனை ஓடியது. என்ன அபி அக்கா இப்பிடிக் கேட்க மாட்டாவே என்னவாக இருக்கும் என எண்ணியவாறே இண்டைக்குப் பின்னேரம் நான் அங்க வாறன் அக்கா என்றவுடன் இங்க வேண்டாம் எதுக்கும் எங்கட வீட்டுக்குப் பக்கத்தில இருக்கிற பாக்குக்கு வாங்கோ மதுரன் பின்னேரம் நாலு மணிக்கு என்றுவிட்டு அபி போனை வைக்க, வீட்டுக்கு ஏன் வர வேண்டாம் என்றவ அபி அக்கா என்று குழப்பம் மேலோங்க நிலாவுக்கு போன் செய்வதையே மறந்து போனான் மதுரன்.
 
மாலை நான்குமணிக்கு முன்னமேயே பாக்கில் போய் காவலிருந்தவனைக் காக்க வைக்காது வந்து சேர்ந்த அபி முதல் கேட்டதே நீர் ஆரையாச்சும் காதலிக்கிறீரோ என்றுதான். அவனுக்கு முகத்தில் லேசான அதிர்ச்சி ஏற்பட்டாலும் காட்டிக் கொள்ளாமல் ஏனக்கா இப்பிடிக் கேட்கிறியள் என்றான். நான் கேட்டதுக்குப் பதில் சொல்லுங்கோ மதுரன் என்ற அபியின் முகத்தில் தெரிந்த கடுமை மதுரனைத் தலையாட்ட வைத்தது. தலையாட்டியதுடன் நிக்காது ஓமக்கா நான் உங்கட வீட்டில இருக்கிற நிலாவைக் காதலிக்கிறன். அவளைத்ஹான் கலியாணம் கட்டுறதா நினைச்சிருக்கிறன் என்றுவிட்டு அபியை நிமிர்ந்து பார்த்தவன், அப்போதும் அவரின் முகத்தில் தெரிந்த கடுமையினால் குழப்பம் அடைந்தவனாக நான் உங்களுக்குச் சொல்லத்தான் இருந்தனான் எப்ன்று இழுத்தான்.
 
அப்ப அமானி எண்டது யார் மதுரன் என்று அபி கேட்கத் திடுக்கிட்ட மதுரன் உடனே சமாளித்துக்கொண்டு அவள் என்னோட படிக்கிற பெட்டை என்று கூறியபடி தலை குனிந்தான். எப்பிடி இவவுக்குத் தெரிந்தது என்று ஒருவித அவமான உணர்வும் வந்து சூழ்ந்து கொள்ள ஆரக்கா உங்களுக்குச் சொன்னது என்று குரல் சோரக் கேட்டான். எனக்கு எல்லாம் தெரியும் மதுரன் நிலா பாவம். உம்மில உண்மையான அன்பு வச்சிருக்குது. நீர் அதுக்கு ஒண்டும் சொல்லாமல் போட்டீர். வேற வழி இல்லாமல் பயந்து என்னட்டை வந்து உங்கள் விசயத்தைச் சொல்லி அழுகுது. அப்பத்தான் நான் உம்மைப்பற்றி அறிய முடிஞ்சுது. ஆனால் நீங்கள் உப்பிடி விளையாட்டுப் பிள்ளையாய் இருப்பியள் எண்டு எதிர் பார்க்கேல்ல.அமானி எண்டதும் பாவம் தானே. ஏன் இப்பிடிச் செய்யிறியள் என்று கூர்ந்து மதுரனைப் பார்த்தாள் அபி.
 

அக்கா ஆரோ உங்களுக்கு என்னைப்பற்றிக் கொள் மூட்டிப் போட்டினம். நான் நிலாவைத்தான் கலியாணம் கட்ட நினைச்சிருக்கிறன் என்று மீண்டும் வலியுறுத்துவது போல் மதுரன் கூற, அப்ப இப்பவே பதிவுத் திருமணம் செய்யும் நிலாவை என்று அபி கேட்டதில் ஆடித்தான் போனான் மதுரன். இப்ப எப்பிடி அக்கா?? இன்னும் படிப்பு முடியேல்ல இரண்டு பேருக்கும் என்று இழுத்தான். அது ஒண்டும் பிரச்சனை இல்லையே மதுரன். இந்த நாட்டில கலியாணம் கட்டின பிறகு மட்டுமில்லை குழந்தை குட்டி பெத்தாக்கூடப் படிக்கலாம். உம்மையே நம்பிக்கொண்டிருக்கு நிலா. நல்ல பிள்ளையும் தானே. இரண்டு பெரும் சேர்ந்து சுத்தியிருக்கிரியள். பொம்பிளைப் பிள்ளையின் வாழ்க்கை மதுரன். இதுக்கு மிஞ்சி நான் ஒண்டும் சொல்ல ஏலாது உங்கட விருப்பம் என்றுவிட்டு நிறுத்தினாள்.

அக்கா நான் நிலாவைக் கடைசிவரை ஏமாத்த மாட்டன். அண்ணா இன்னும் கலியாணம் கட்டேல்ல. நான் முதல் கட்டுறது சரியே அக்கா என கேட்டு நிறுத்தினான். உங்கட அன்னையோட கதையுங்கோ. அவருக்கு விளங்கும். ஊரிலேயே இப்ப தமக்கை இருக்க தங்கச்சி கட்டுறது தானே. நீங்கள் கலியாணம் எண்டு பெரிசா செய்யத் தேவை இல்லை. எழுத்தை மாத்திரம் எழுதுங்கோ. அல்லது அந்தப் பிள்ளையை இப்பவே விட்டுட்டுப் போவிடுங்கோ என்று கூறிய வார்த்தைகளில் தெரிந்த கண்டிப்பு மதுரனைச் சிந்திக்க வைத்தது. அக்கா நான் நாளைக்கு உங்களுக்குச் சொல்லுறன் என்று அந்தக் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தவாறு விடைபெற்றான் மதுரன்.

 • Like 5

Share this post


Link to post
Share on other sites

இப்பிடிக் கனபேர் சேர்ந்து கதையெல்லாம் எழுதியிருக்கிறம் எண்டது மறந்தே போச்சு எனக்கு.

Share this post


Link to post
Share on other sites

இத்தொடரை ஒரு நூலாக்குவது தொடர்பான  உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள் உறவுகளே.

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் சகோதரி, இந்தக் கதையே இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை ஐந்து வருடங்களுக்கு மேலாகி விட்டது.முதலில் கதை முடிவுக்கு வரவேண்டும். பின் நீங்கள்  நிர்வாகத்துடன் கலந்தாலோசிப்பதுதான்  நல்லது என்பது எனது அபிப்பிராயம்........!  

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

நான்  நேற்று  வாசித்திருந்தேன் . நான் இதில் எழுதியதையே மறந்து விடடிருந்தேன். ஐந்து வருடங்களாகி விடடதல்லவா ...எனக்கு ஆடசேபனை   இல்லை  இதன் முடிவு   எழுதப்பட்டு விட்ட்தா ? அப்படியானால் மீளவும் ஒரு கதையாக   பதிந்தபின் ...சரி பிழை பார்த்து ...வெளியிடலாம். 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

நன்றி....சுமே...!

அட.....நானெல்லாம்.....இப்படியெல்லாம் எழுதியிருக்கின்றேனா?

எனக்குள்ளிருந்து....விடை பெற்றுப் போன...எதுவோ ஒன்று.....மீண்டும் வந்து குடியேற வேண்டும் என்ற ஏக்கம் மட்டுமே மிஞ்சி நிற்கின்றது!

நிர்வாகத்துடன் கதையுங்கள்...!

மூலஸ்தானத்துக்குள்....முடங்கிப் போயிருக்கும்.....சிலைகள்....வீதிக்கு வருவது...மிகவும் மகிழ்ச்சியே...!

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
20 hours ago, suvy said:

வணக்கம் சகோதரி, இந்தக் கதையே இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை ஐந்து வருடங்களுக்கு மேலாகி விட்டது.முதலில் கதை முடிவுக்கு வரவேண்டும். பின் நீங்கள்  நிர்வாகத்துடன் கலந்தாலோசிப்பதுதான்  நல்லது என்பது எனது அபிப்பிராயம்........!  

நான் கதை முடிந்துவிட்டது என நினைத்துக்கொண்டிருக்கிறேன். இரண்டு நாட்களின் பின் ஆறுதலாக மீண்டும் வாசித்துப் பார்க்கிறேன். உங்களுக்கு நேரம் இருந்தால் நீங்கள் கூட முடிவை எழுதலாம் அண்ணா.

14 hours ago, புங்கையூரன் said:

நன்றி....சுமே...!

அட.....நானெல்லாம்.....இப்படியெல்லாம் எழுதியிருக்கின்றேனா?

எனக்குள்ளிருந்து....விடை பெற்றுப் போன...எதுவோ ஒன்று.....மீண்டும் வந்து குடியேற வேண்டும் என்ற ஏக்கம் மட்டுமே மிஞ்சி நிற்கின்றது!

நிர்வாகத்துடன் கதையுங்கள்...!

மூலஸ்தானத்துக்குள்....முடங்கிப் போயிருக்கும்.....சிலைகள்....வீதிக்கு வருவது...மிகவும் மகிழ்ச்சியே...!

எல்லாருக்கும் பஞ்சி வந்திட்டிது அதுதான்.

20 hours ago, நிலாமதி said:

நான்  நேற்று  வாசித்திருந்தேன் . நான் இதில் எழுதியதையே மறந்து விடடிருந்தேன். ஐந்து வருடங்களாகி விடடதல்லவா ...எனக்கு ஆடசேபனை   இல்லை  இதன் முடிவு   எழுதப்பட்டு விட்ட்தா ? அப்படியானால் மீளவும் ஒரு கதையாக   பதிந்தபின் ...சரி பிழை பார்த்து ...வெளியிடலாம். 

தொடர்ந்து என்ன செய்யலாம் என்று பார்ப்போம் அக்கா. 

Share this post


Link to post
Share on other sites
16 hours ago, புங்கையூரன் said:

அட.....நானெல்லாம்.....இப்படியெல்லாம் எழுதியிருக்கின்றேனா?

எனக்குள்ளிருந்து....விடை பெற்றுப் போன...எதுவோ ஒன்று.....மீண்டும் வந்து குடியேற வேண்டும் என்ற ஏக்கம் மட்டுமே மிஞ்சி நிற்கின்றது!

இந்த ஏக்கம் என்னையும் ஆட்கொண்டுள்ளது. இதை நானா எழுதினேன் என்று இன்று வியக்கிறேன். 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
On 10/10/2019 at 4:05 PM, Paanch said:

இந்த ஏக்கம் என்னையும் ஆட்கொண்டுள்ளது. இதை நானா எழுதினேன் என்று இன்று வியக்கிறேன். 

பாஞ்ச் அண்ணா உங்களுக்கு நேரம் இருந்தால் கதையை எழுதி முடித்துவிடுங்களன்.

Share this post


Link to post
Share on other sites
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பாஞ்ச் அண்ணா உங்களுக்கு நேரம் இருந்தால் கதையை எழுதி முடித்துவிடுங்களன்.

பணி செய்யும்போது கிடைத்த நேரம், பணி ஓய்வுபெற்றபின் கிடைப்பது கடினமாக உள்ளது.

ஓய்வு காலத்தில், கணனியில் மணிக்கணக்காக உட்கார்ந்திருந்தால் ஆயுள் குறைந்துவிடுமாம், யாரோ அதி புத்திசாலி எழுதியதை என் பாச உறவுகளும் படித்துவிட்டார்கள். அதனால் அவர்கள் போட்ட வேலியைத் தாண்ட முடியவில்லை, தாண்டினால், என் கதையும் விரைவில் முடிந்துவிடும் என்ற பயம் அவர்களுக்கு. இருந்தும் உங்கள் வேண்டுதல் புதிய உற்சாகத்தை மனதில் ஏற்படுத்தியுள்ளது, பார்க்கலாம். 

உருளைக் கிழங்கு சீவி, வெங்காயம் உரித்து, மிக்சியில் மா அரைத்துப் புட்டுக் குத்தினாலும்  ஆயுள் குறைந்துவிடும் என்று யாராவது எழுதினால் மிக்க மகிழ்ச்சியடைவேன். 🙏  

 

Edited by Paanch

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, Paanch said:

பணி செய்யும்போது கிடைத்த நேரம், பணி ஓய்வுபெற்றபின் கிடைப்பது கடினமாக உள்ளது.

ஓய்வு காலத்தில், கணனியில் மணிக்கணக்காக உட்கார்ந்திருந்தால் ஆயுள் குறைந்துவிடுமாம், யாரோ அதி புத்திசாலி எழுதியதை என் பாச உறவுகளும் படித்துவிட்டார்கள். அதனால் அவர்கள் போட்ட வேலியைத் தாண்ட முடியவில்லை, தாண்டினால், என் கதையும் விரைவில் முடிந்துவிடும் என்ற பயம் அவர்களுக்கு. இருந்தும் உங்கள் வேண்டுதல் புதிய உற்சாகத்தை மனதில் ஏற்படுத்தியுள்ளது, பார்க்கலாம். 

உருளைக் கிழங்கு சீவி, வெங்காயம் உரித்து, மிக்சியில் மா அரைத்துப் புட்டுக் குத்தினாலும்  ஆயுள் குறைந்துவிடும் என்று யாராவது எழுதினால் மிக்க மகிழ்ச்சியடைவேன். 🙏  

 

கதை எழுதி முடியும் மட்டும் பாஞ்ச் அண்ணாவை மா அரிக்கவோ அன்றி வெங்காயம் உரிக்கவோ யாரும் கூப்பிட் டால் பிச்சுப் போடுவன் பிச்சு. நீங்கள் தைரியமா வெங்காயம் உரிக்காமல் கதையை எழுதி முடியுங்கண்ணா  😎

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கதை எழுதி முடியும் மட்டும் பாஞ்ச் அண்ணாவை மா அரிக்கவோ அன்றி வெங்காயம் உரிக்கவோ யாரும் கூப்பிட் டால் பிச்சுப் போடுவன் பிச்சு. நீங்கள் தைரியமா வெங்காயம் உரிக்காமல் கதையை எழுதி முடியுங்கண்ணா  😎

நல்லகாலம் அன்றி என்பதற்குப் பதிலாக அன்ரி என்று வந்திருந்தால் நீங்கள் அவ்வளவுதான்.😲😂

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
32 minutes ago, Paanch said:

நல்லகாலம் அன்றி என்பதற்குப் பதிலாக அன்ரி என்று வந்திருந்தால் நீங்கள் அவ்வளவுதான்.😲😂

  movieposter.jpg

திரு.பாஞ், உங்களுக்கான படம்..! 😜😍

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

பகுதி 33

உங்கட அம்மாவோட கதையுங்கோ. பெரிசா செய்யத் தேவை இல்லை. எழுத்தை மாத்திரம் எழுதிவிடலாம் இப்படி அபி சொல்லிவிட்டாள் என்றாலும்... அவளால் அதனைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மனம் ஒரு நிலைகொள்ளாது தவித்தது. துக்கமும், கோபமும் ஒன்றுசேர்ந்து அவளை வாட்டியது. என் அன்புக்குரிய இனிய மதுரன் இனி எனக்குக் கிடைக்காமல் போவதற்கு நானே வழிவகுத்துவிட்டேன். என்தலையில் நானே மண்ணைவாரிக் கொட்டிவிட்டேனா! என்று மனம் குமுற வீட்டிற்கு வந்தவள், எதுவும் செய்யப் பிடிக்காது முன்னால் இருந்த ரீவியின் பட்டனை அழுத்திச் தமிழ்சனலில் புகுந்தாள், கல்யாணகுமார் அங்கு சோகத்துடன் எங்கிருந்தாலும் வாழ்க பாடலைப் பாடிக்கொண்டிருந்தார். சற்று நிமிர்ந்தவள் ஆமாம் நான் உண்மையில் மதுரனை விரும்பிக் காதலித்திருந்தால்... அவனுக்காக உயிரையும் கொடுக்கத் தயாராகும் நிலையில்தான் நான் இருக்கவேண்டும். அவன் விரும்புவதைத்தானே அவனுக்கு நான் அளிக்கவேண்டும். அவன் இன்பமே எனது இன்பமாக இருக்கவேண்டும், அபியின் மனம் சற்று அமைதிகொண்டது. மதுரன் எங்கிருந்தாலும் வாழ்க! அவள் அடிமனதில் எழுந்த எண்ணம் அவளை சாந்தப்படுத்தியது.

அபி சுரேசுடன் தொடர்புகொண்டபோது... என்ன அபி மதுரன் உனக்குக் கிடைத்துவிட்டானா?” என்று தொடர்ந்தான். நான் உன்னிடம் ஒன்று கேட்பேன் மறுக்காமல் செய்வாயா?” என்று கேட்டாள் அபி. என்னவென்று சொல்லு கட்டாயம் உனக்காக நான் செய்வேன் என்றான். சுரேசு. மதுரமும் நிலாவும் ஒன்றுசேர எந்த இடையூறும் செய்யாமல் இருப்பாயா...?” அபியின் கேள்வி சுரேசுக்கு திகைப்பாக இருந்தது. அபி நடந்தது எல்லாவற்றையும் கூறினாள். நீ உண்மையில் இதயசுத்தியோடு நிலாவைக் காதலித்திருந்தால்... அவள் உன்னோடு வாழ்வதற்குக் கொடுத்துவைக்காது விட்டாலும் அவள் எங்கிருந்தாலும் நன்றாக வாழவேண்டும் என்றுதானே உன் மனமும் என்னைப்போல் வாழ்த்தும் என்று எண்ணித்தான் உன்னிடம் கேட்டேன். நான் அத்தனை கெட்டவனில்லை அபி, நானும் ஆசா பாசங்களுடன் கூடிய மனிதன்தானே, ஏமாற்றங்களைத் தாங்கிக்கொள்வது சற்றுச் சிரமம்தான், அவகாசம் கொடு நான் உன்னைத் தொடர்புகொள்கிறேன் என்றான் சுரேசு.

சுரேசு அந்த நிறுவனத்தில் தலைமைக் கணக்காளர் பணியை ஏற்ற சிலநாட்களிள் அதிசயிக்கத்தக்க வகையில் அந்த நிறுவனம் வளர்ச்சிகண்டது. உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் அதன் பெயர் பரவியது. நிறுவனம் எதிர்பார்த்ததை விடவும் அதிக இலாபம் கண்டது. அதன் தலைவர் நந்தபால அவனை முகாமையாளராகப் பதவி உயர்த்தினார். அதுமட்டுமல்ல அங்கு பணிசெய்த அனைவருக்கும் ஊதிய உயர்வுகிடைக்க அவன் காரணமானான். அவர்கள் அவனை அன்புடனும் மரியாதையுடனும் அணுக முயன்றனர். இத்தகய மதிப்புமிக்க உயர்வினால் அவனிடம் இருந்த கோபதாபம், பொறாமை, பழிவாங்கும் உணர்ச்சிகள் அனைத்தும் அற்றுப்போய் மனிதநேயம் அவன் உள்ளத்தில் மலரத்தொடங்கிய நேரத்தில்தான் அபி மதுரன் நிலா விடயமாக அவனைத் தொடர்புகொண்டாள்.

தன்னைப் பார்க்கவந்த தனது சகோதரர்கள் இருவரிடம் அமானி மதுரனை அறிமுகப்படுத்தினாள். மதுரனின் அறிவுத் திறமைகளை அறிந்ததோடு அவன் அழகையும்கண்டு அவர்களுக்கும் மதுரனைப் பிடித்துவிட்டது. வரும் விடுமுறையில் மதுரனையும் ஈரானுக்கு அழைத்துவரும்படி அமானியை வேண்டினார்கள் என்பதைவிடவும் கட்டளையிட்டார்கள் என்பதையே அவர்கள் தொனி வெளிக்காட்டியது. மதுரன் சென்றபின் தொடர்ந்த அவர்களுடைய உரையாடல்களை, தற்செயலாக அவர்கள் அறையைக் கடக்கநேர்ந்த மதுரனின் நண்பன் டேவிட்டால் கேட்கமுடிந்தது. தங்கள் மொழி இங்கு யாருக்குத் தெரியும் என்ற அலட்சியத்தில், அமானியும் அவன் சதோதரர்களும் வெளியே பிறருக்குக் கேட்டுவிடுமோ என்ற தயக்கமும் இன்றி சற்று உரக்கவே பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசியதைக் கேட்டு அதிர்ந்துபோனான் டேவிட். டேவிட் பூர்வீக லண்டன்காரன். ஈரான் மொழி உட்படப் பல மொழிகளில் தேர்ச்சிபெற்றவன், அத்துடன்  ஈரானிய மொழிகள் என்பன, இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் ஒரு பிரிவும் ஆகும். அதனால் அவர்கள் பேசியது அவனுக்குத் தெளிவாகவே புரிந்ததால் திகைத்தான், தன் நண்பனுக்கு வரப்போகும் ஆபத்தை எண்ணிக் கலங்கினான். டேவிட்டுக்குத் தெரிந்த மொழிகளில், தமிழ்மொழியின்பால் அவன்கொண்ட பற்றுமட்டும் ஆழமானது. மதுரனின் திறமையை அறிந்ததோடு அவனும் ஒரு தமிழன் என்று அறிந்ததும், டேவிட் தானாகவே வலியவந்து மதுரனை தனது நண்பனாக்கிக் கொண்டவன். அப்படிப்பட்டவன் தன் நண்பனுக்கு ஒரு கேடுவருவதை தாங்கிக் கொள்வானா? சகோதரர்களோடு நடைபெற்ற அமானியின் உரையாடல் அனைத்தையும் அவன் மதுரனிடம் கூறிவிட்டான். 

அமானி கூறினாள்... நான் இங்கு படிக்கவந்தபின் இங்குள்ள தமிழர்களோடும் பழகி அவர்கள்பற்றி நிறைய அறிந்துள்ளேன். அவர்கள் எங்களைப்போல் அல்ல எங்கள் சமூகத்திலிருந்து யாராவது மதம் மாறினால் நாங்கள் கொதித்தெழுந்து மாறியவர்களை உண்டு இல்லையென்று ஆக்கிவிடுமோம். ஆனால் அவர்கள் அப்படியல்ல. யாராவது மதம்மாறினாலும் அவர்கள் சமூகம் அதனைப் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. ஆகவேதான் நான் சொல்கிறேன் மதுரனை மதம்மாற்றி நான் அவரை மணப்பதில் சிரமமிருக்காது. அவர் அப்படி மறுக்க முனைந்தாலும் எங்கள் நாட்டில் அது நடவாது. ஒரு தமிழனை வன்முறையால் மாற்றித் திருமணம் செய்து வைத்துவிட்டாலும், மனைவியென்று வந்தவளைத் தனது ஆயுட்காலம்வரை விட்டுப் பிரியாது வாழும் பண்பு தமிழரிடம் உள்ளது. மதுரனும் ஒரு தமிழன் அப்படித்தான் இருப்பார் நம்பலாம். சரி அமானி, நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். மதுரனை அங்கு அழைத்துவருவது உன்பொறுப்பு மற்றவைகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். சகோதரர்கள் கூறினார்கள்.

டேவிட்மூலம் அமானியும் அவளின் சகோதரர்களின் உரையாடல்களை அறிந்த மதுரன் கதிகலங்கிப்போனான். வகுப்பறையில் அமானிக்கு அருகே இருந்த இருக்கை இடம்மாறியது. அவளின் நிழல்கூட தன்மீது படியாமல் பார்த்துக்கொண்டான். டேவிட்டுக்கு மதுரன் நன்றி சொல்லியபோது அவன் கேட்டான், ஏன் மதுரன் நீங்கள் தமிழர்கள்…. பல மதங்களைப் பின்பற்றி வாழ்கிறீர்கள், உங்கள் தாய்மதம் என்ன.?” என்றான். பிற இனங்களையும் ஆராயும் அவன் ஆர்வத்தை வியந்த மதுரன் பதில் கூறினான், தமிழர்களுக்கு மதமில்லை இயற்கைதான் அவர்கள் கடவுள். ஆனாலும் சைவம் என்ற சமயமே அங்கு தோன்றி மக்கள் நலமுடன் வாழ வழிகாட்டியது. அதன்பின் தமிழர்களை ஆண்ட, அடிமைகொண்ட அரசுகளின் மதங்களுக்கு சிலர் நிரப்பந்தத்தினாலும், அரசுகளின் செல்வாக்கைப் பெறுவதற்காகவும் மாறினார்கள். அப்படி மாறியவர்கள்தான், பின்நாளில் தாய்மதத்தை மறந்தது தவறென்ற குற்ற உணர்வுகொண்டு அதனைத் தவிர்ப்பதற்கு தவறான காரணங்களைத் தேடுகின்றனர். தாய்மதத்தில் உள்ள, இக்காலத்திற்கு ஒவ்வாத புனைக்கதைகளை, புராணங்களைக் கிளறி எடுத்துத் தாங்கள் முன்னோரும் மதம்மாறியது சரியே என்று தங்களைத் தாங்களே சமாதானப்படுத்தி ஏனையோரையும் ஏமாற்ற முயல்கின்றனர் என்றான் மதுரன். ஆமாம் மதுரா உங்கள் சைவ சமயத்தைப்பறறியும், ஆரியம் அதற்குள் புகுந்து தனது மொழியாலும் மதத்தாலும் உங்களைக் குழப்பியுள்ளதையும் நான் அறிவேன். எங்கள் மதமும் உங்கள்மேல் சவாரிசெய்வதையும் அறிந்துள்ளேன். என்று கூறிய டேவிட்டைத் தொடர்ந்தான் மதுரன்,

மதங்கள் கடவுளால் படைக்கப்பட்டதல்ல, நல்வாழ்கையை மனித இனம் மேற்கொள்வதற்காக மனிதர்களே அவற்றைப் படைத்தார்கள். அதனை மனிதர்களுக்கு உணர்த்த எடுத்த உதாரணங்களைத்தான் புரிந்துகொள்ளாது தவறென்கிறார்கள். உண்மையில் கடவுள் என்றால் முதலில் உன் உள்ளத்தைக்கட என்பதாகத்தான் பொருள்கொள்ள வேண்டும். அதனைவிடுத்துக் கடவுள் என்றால்... கடவுளே இல்லையென்று நாத்திகம்பேசி, கடவுளைக் காட்ட முடியுமா?” என்று சண்டைக்கும் வருகிறார்கள், ஆன்றோர்கள் சொன்னதை எல்லாம் நம்பவேண்டாம் நம்பினால் அது மூடநம்பிக்கை என்கிறார்கள். இவர்களுள் அறிஞர்களும் அடங்கியிருப்பதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உண்மைதான் நண்பா! நான் இதுபற்றி ஒரு கட்டுரை எழுதி இங்குள்ள ஒரு பிரபலமான பத்திரிகைக்குக் கொடுப்பதாக உள்ளேன் என்றான் டேவிட்.

அபி மதுரனுடன் பேசியதை பேச்சுடன் நிறுத்தவில்லை மதுரனுடனும் நிலாவுடனும் நீண்டநேரம் உரையாடி, அவர்களைப் பதிவுத் திருமணத்துக்குச் சம்மதிக்கவைத்தும் அல்லாமல் மதுரனின் அண்ணன்மார் குகனுடனும், பெரியண்ணனுடனும் தொடர்புகொண்டு அவர்களையும் சம்மதிக்க வைத்துவிட்டாள். குகன் தான் அங்குவந்து சாட்சிக் கைழுத்துப் போடுவதாகவும், ஊரில் அம்மா அப்பா மற்றும் சொந்தபந்தங்கள் முன்னிலையில் மதுரன் நிலா கல்யாணத்தை நடாத்தவிருப்பதாக தெரிவித்து அவர்களைச் சமாதானப்படுத்தி சம்மதம் பெற்றுவிடுவதாகவும் உறுதியளித்தார். அவன் விரும்பினால் நான் தடையில்லை என்று பெரியண்ணன் பட்டும் படாமலும் ஒதுங்கிவிட்டார். இதுவரையில் அனைத்து ஏற்பாடுகளும் அபியின் எண்ணப்படி நிறேவேறி வந்தாலும் எதிர்பாராதவிதமாக நிலாவின் சம்மதத்தில் மாற்றம் ஏற்பட்டு அனைவரையும் கலங்கடித்தது. நிலாவின் அம்மா தான் கலந்துகொள்ள முடியாவிட்டாலும், பதிவுத் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனாலும் பிரச்சனை வேறுவடிவில் தோன்றியது. அம்மா அருகே இல்லாமல் நான் எதுவும் செய்யப்போவதில்லை என்று நிலா உறுதியாகச் சொல்லிவிட்டாள். இது அனைவரையும் அதிருப்தி அடைய வைத்தாலும், அவளுடைய தாயன்பு மனதை உருக்கி இரக்கம்கொள்ளவே வைத்தது

அபி செய்வதறியாது திகைத்தாலும் சுரேசின் ஞாபகம்வரவே அவனுக்குப் போன் செய்தாள். நடந்தது, நடப்பவை அனைத்தையும் அபி சொல்லக்கேட்ட சுரேசின் மனம் கவலையுறத்தான் செய்தது. அவன் இப்போது பிறர் கவலையையும் தன் கவலையாகக் கொள்ளும் பெரிய மனதைக் கொண்டவன் அல்லவா. பதவி வரும்போது பணிவு வரவேண்டும். ஆனால் பணிவோடு பாசமும் அன்பும் சுரேசிடம் குடிகொண்டது அதிசயம்தான்.

அன்று தனது நிறுவனத்துக்கு வருகைதந்த தலைவர் நந்தபால, சுரேசின் வாடியமுகம் கண்டு என்னவென்று ஆதரவாக வினவினார். அவர் அன்புக்குக் கட்டுப்பட்ட சுரேசு அபி சொன்ன அத்தனையும் விலாவாரியாக ஒப்பித்தான். தனது ஆத்மார்த்தமான நண்பர்கள் மதுரன் நிலாவுக்குச் செய்யவேண்டிய கடமையாக அவர்களது பெற்றோர்களை லண்டனுக்கு அனுப்ப எடுத்த முயற்சி தோல்விகண்டதாக கவலையோடு தெரிவித்தான். சற்று நிதானித்த நந்தபால, அவர்களுக்குரிய ஆவணங்களுடன் அவர்கள் படங்களையும் எனக்குத் தரமுடியுமா?” என்று கேட்டார். கேட்ட அனைத்தும் சுரேசிடம் இருந்ததால் உடனே எடுத்துக் கொடுத்தான்.     

மதுரன் நிலா பதிவுத்திருமணம், மதுரனின் பெற்றோர், நிலாவின் அம்மா முன்னிலையில், அபி, சுரேசுவின் சாட்சிக் கைழுத்துடன் மற்றும் உறவுகள் நண்பர்கள் சூழ லண்டன் பதிவுக் கந்தோரில் இனிதே நடந்தேறியது. நடைபெற்ற விருந்துபசாரத்தின் போது சுரேசும் அபியும் அருகருகே இருந்து பேசிக்கொண்டிருந்தார்கள். எப்படி மதுரன்! அபியின் பெற்றோர்கள் இத்தனை விரைவில் எந்தத் தடங்கலுமின்றி லண்டன்வர முடிந்தது..?” அபி ஆச்சரியமாகக் கேட்டாள். அவளை அன்புடன் நோக்கிய சுரேசு... எங்கள் நிறுவனத்தின் தலைவர் உள்துறை மந்திரியின் நெருங்கிய உறவினர் என்பது தனக்கு பின்புதான் தெரிந்தது என்றான்.அங்கு கூடியிருந்த அனைவரும் சுரேசைப் பாராட்டி வாழ்த்தினார்கள். நீங்கள் எல்லோரும் இன்று வாழ்த்தவேண்டியது புதுமணத் தம்பதிகளை, என்னையல்ல என்ற சுரேசின் புத்திசாலித்தனமான பேச்சைக்கேட்டு எல்லோரும் சிரித்தார்கள். ஆமாம் அம்மா! ஊர் எப்படி இருக்கிறது? எல்லோரும் நலமா?” என்று தாயை விசாரித்தான் மதுரன். நலம்தான், ஆனால் ஆச்சிப்பிள்ளை ஆச்சிதான் பாவம் என்றார் மதுரனின் தாய். மதுரன் நிலா உட்பட அபியும் பதற்றமாக அவருக்கு என்ன நடந்தது?” என்றார்கள். மதுரனின் தாயும் தந்தையும் நடந்ததைக் கூறினார்கள்.....

ஆத்தைப்பிள்ளை ஆச்சி ஐயோ! குறுக்காலை போவான்கள்! நாசமாய்ப் போவான்கள்!” என்றும், பல காதுகொடுத்துக் கேட்கமுடியாத திட்டுக்களையும், ஒப்பாரிப் பாடல்களையும் அவள் வீடுதாண்டி அப்பாலுள்ள வீடுகளுக்கும் கேட்கும்படி புலம்பிய குரல் கேட்டு, என்னவோ ஏதோ என்று ஓடிவந்தவர்கள் திகைத்து நின்றார்கள்…! நாகேந்திரன் தலையில் தீவட்டிப் பந்தம்போல் பெரிய துணிச் சுற்றலுடன், கைகள், கால்களில் இரத்தக் காயங்களுடனும்….! ஆத்தைப்பிள்ளை ஆச்சி விசிறிகொண்டு விசிற, அவள் மடியில் படுத்திருந்தான். என்ரை பிள்ளையை யாரோ இடிவிழுந்து சாவான்கள் இருட்டில் வைத்து பொல்லால் அடித்துப்போட்டாங்கள் ஏன்? எதுக்கென்று பிள்ளைக்கும் தெரியாதாம்.!” ஆச்சி புலம்பியதைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அவன் எல்லோருக்கும் உதவிசெய்யும் நல்லவனாயிற்றே அவனை யார் அடித்திருப்பார்கள்?” என்று மதுரன் கேட்டான். நாகேந்திரன் பற்றிய பேச்சுவந்ததும், நிலாவின் அம்மாவின் முகம் கடுப்பானதையும் அதனைமறைக்க அவர் பாத்றூமுக்கு எழுந்து சென்றதையும் யாரும் கவனிக்கவில்லை. என்ன நடந்திருக்கும்.....? யாழ்கள உறவுகள், மற்றும் வாசகர்களால் இதுபற்றி யூகிக்கமுடியுமா....?? நானும் முயற்சிசெய்கிறேன்.

சுபம்.

Edited by Paanch
 • Like 6

Share this post


Link to post
Share on other sites

மிக்க நன்றி பாஞ்ச் அண்ணா.


இன்னும் விசுகு அண்ணா நூலாக்கம் பற்றி எதுவும் கருத்துக் கூறவில்லை. விரைவில் வந்து கூறினால் நல்லது அண்ணா. மேற்கொண்டு மற்ற அலுவல்களை ஆரம்பிக்கலாம்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மிக்க நன்றி பாஞ்ச் அண்ணா.


இன்னும் விசுகு அண்ணா நூலாக்கம் பற்றி எதுவும் கருத்துக் கூறவில்லை. விரைவில் வந்து கூறினால் நல்லது அண்ணா. மேற்கொண்டு மற்ற அலுவல்களை ஆரம்பிக்கலாம்.

விசுகு அவர்கள் கருத்துக்கூற என்றும் பின்நிற்பதில்லை. இருந்தும் நான் கருதியது சரி என்றே படுகிறது சுமேரியரே.

இங்கு பல உறவுகள் பதிவிட்டவர்களுக்கும், கருத்திட்டவர்களுக்கும் பின்னூட்டம் இடும்போது 'அண்ணா' 'அண்ணா' என்றே விளித்துத் தங்களை இளமையாகக் காட்டிக்கொள்ள முயல்வதைக் காணலாம். அதுதான் பிரச்சனையோ...😂🤣 

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, Paanch said:

விசுகு அவர்கள் கருத்துக்கூற என்றும் பின்நிற்பதில்லை. இருந்தும் நான் கருதியது சரி என்றே படுகிறது சுமேரியரே.

இங்கு பல உறவுகள் பதிவிட்டவர்களுக்கும், கருத்திட்டவர்களுக்கும் பின்னூட்டம் இடும்போது 'அண்ணா' 'அண்ணா' என்றே விளித்துத் தங்களை இளமையாகக் காட்டிக்கொள்ள முயல்வதைக் காணலாம். அதுதான் பிரச்சனையோ...😂🤣 

அண்ணா என்னும் தமிழ் வார்த்தை.....வயதில் மூத்தவர்களைப் பொதுவாக விழித்தாலும்....அது மரியாதையின் நிமித்தம்....வயதில் குறைந்தவர்களை விழிப்பதற்கும் உப்யோகிக்கப் படலாம் என்று நினைக்கிறேன்!

என்னை விடவும் வயதில் குறைந்தவர்கள் ...என்னை அண்ணா என்று அழைக்கும் போது மனதுக்கு மிகவும் சங்கடமாக உணர்வதுண்டு!  தலை மயிருக்கு....மை பூசும் பழக்கம் அறவே...இல்லாததால்...அவ்வாறு அழைக்கிறார்களோ என்று நினப்பதும் உண்டு! இருந்தாலும்  அவர்கள் அவ்வாறு என்னை அழைக்கும் போது....சில நிமிடங்கள் மகிழ்ச்சி அடைவார்களெனின்......நானும் மகிழ்ச்சியடைவேன்!

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Posts

  • ஆம், க்ஸி ஜின்பிங் இன் முழு அறிக்கையையும் நீங்கள் புரிந்து  கொண்டு,   விளக்கம்  கொடுத்ததாக நான் கருதிக் கொண்டேன். அப்போதும் சிந்தித்தேன், port city பற்றி அறிக்கையில் இல்லை, நானும் port சிட்டி ஐ பற்றியொன்றும் எழுதவில்லை, ஏன் அது உங்கள் கருத்தில் வருகிறது என்று. ஆம், இப்பொது புரிந்து கொண்டேன், அவரவர் அவர்களுக்கு  தெரிந்தவற்றை  கொண்டு,   க்ஸி ஜின்பிங் இன் அறிக்கையில் இருந்து  தனக்கேற்றவாறு புரிந்தவற்றை பற்றி   கருத்து சொல்லி  இருக்கிறார்கள் என்று.   நீங்கள் அறிந்தவற்றை கொண்டு, black-and -white ஆக  ஏற்ப்படுத்திக்கொண்டிருக்கும் விளக்கத்தை, ஏற்கனவே வாசகர்ளிடம் விட்டுவிட்டேன்.  
  • ‘‘சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினரை அடையாளம் காண, நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும்’’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று அதிரடி அறிவிப்பை  வெளியிட்டார். கடந்த 1971ம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் போர் மற்றும் வங்கதேச விடுதலைப் போரைத் தொடர்ந்து, வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து ஏராளமானோர் சட்டவிரோதமாக அசாம் மாநிலத்தில் குடியேறினர். இதனால்,  கடந்த 1971 மார்ச் 25ம் தேதிக்குப் பிறகு சட்டவிரோதமாக குடியேறியவர்களை கணக்கெடுக்க தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) புதுப்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.  கடந்தாண்டு வெளியான இதன் வரைவு அறிக்கையில் 40 லட்சம்  பேரின் பெயர் விடுபட்டதால் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.குறிப்பிட்ட மதத்தினரை குறிவைத்து மத்தியில் ஆளும் பாஜ அரசு, லட்சக்கணக்கானோர் பெயரை நீக்கியிருப்பதாக மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன. பின்னர் பெயர் விடுபட்டவர்கள் உரிய ஆவணம் கொடுத்து  பெயரை பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதன் இறுதி அறிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. இதில் 19 லட்சம் பேரின் பெயர் விடுபட்டுள்ளது.இதற்கிடையே, அசாமைப்போல் நாடு முழுவதும் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினரை அடையாளம் காண, தேசிய குடிமக்கள் பதிவேடு பராமரிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா நாடாளுமன்றத்தில் நேற்று அதிரடியாக வெளியிட்டார். சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பிறகு காஷ்மீர் சூழல் குறித்து மாநிலங்களவையில் விளக்கம் அளித்த அவர் பேசியதாவது:அசாம் போலவே நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும். இந்தியர்கள் என்பதற்கான ஆவணங்களை கொடுத்து பதிவு செய்வதற்கான சாதாரண நடைமுறையே இது. உச்ச நீதிமன்ற மேற்பார்வையின் கீழ், பதிவுகள்  மேற்கொள்ளப்படும். எனவே யாரும், எந்த மதத்தினரும் அச்சப்பட வேண்டியதில்லை. நாடு முழுவதும் என்ஆர்சி பதிவு மேற்கொள்ளப்படும் போது, அந்த சமயத்தில் அசாமிலும் அதற்கான பணிகள் நடைபெறும். பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்றப்பட மாட்டார்கள். அவர்கள் சட்ட ரீதியான  தீர்வை பெற அசாம் முழுவதிலும் தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு உரிய ஆவணங்களுடன்  பதிவு செய்துக் கொள்ளலாம். தேசிய குடிமக்கள் பதிவேடு மத அடிப்படையிலானது அல்ல. இதற்கும், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கும் சம்மந்தமில்லை. குடியுரிமைச் சட்டமானது, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் மத ரீதியாக துன்புறுத்தல்களை  சந்தித்து வரும் சிறுபான்மையினர்களான இந்து, புத்த, ஜெயின், கிறிஸ்தவ, சீக்கியர், பார்சி அகதிகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான சட்டமாகும். இந்த மசோதாவின் மூலம், அகதிகளாக வந்த  அனைவருக்கும் இந்திய குடியுரிமை கிடைக்கப்பெறும்.இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவையின் நிலைக்குழுவும் அனுமதி வழங்கிய நிலையில், 16வது மக்களவை காலாவதி ஆனது. எனவே மீண்டும் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில்  நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.அமைதியை சீர்குலைப்பதா?மம்தா உடனடி எதிர்ப்புஅசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் லட்சக்கணக்கானோர் பெயர் விடுபட்டதற்கே கடுமையாக கொந்தளித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நாடு முழுவதும் என்சிஆர் அமல்படுத்தப்படும் என்ற அமித்ஷாவின் அறிவிப்புக்கு  உடனடி எதிர்ப்பை தெரிவித்துள்ளார். சாகர்திகியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா, ‘‘என்சிஆர் என்ற பெயரில் மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்க சிலர் சதி செய்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றை தெளிவுப்படுத்திக்  கொள்கிறேன். மேற்கு வங்கத்தில் என்சிஆர்-ஐ நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இங்கு எவரது குடியுரிமையையும் பறித்து, அகதியாக மாற்ற விட மாட்டோம். மத அடிப்படையில் எங்களை பிரிக்க முடியாது’’ என்றார். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=542536
  • கடஞ்சா, இந்த எம்.சி.சி. இனை இதுவரை பெற்ற நாடுகள் பற்றி தெரியுமா? அந்தந்த நாடுகளில் என்னமாதிரியான அரசியல் ஆதரவு/எதிர்ப்புக்கள் இருந்தன? அங்கும் சீனாவின் தாக்கங்கள் இருந்தனவா?  நன்றி 
  • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் கூடி, மேயரை தேர்ந்தெடுக்க வகை செய்யும் மறைமுக தேர்தலுக்கு தமிழக அரசு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது. இது ஜனநாயக விரோதமானது என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.  தமிழகத்தில் உள்ளாட்சி மன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதன் மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், தலைவர்கள், மேயர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்பட உள்ளன.  உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழக அமைச்சரவை நேற்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டது. அப்போது, மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகின. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.  மறைமுக தேர்தல் முறையில் நேரடியாக மக்கள் அல்லாமல் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மேயர், தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும். இதில் குதிரை பேரம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சிகள் பிரச்னை எழுப்பின. இந்த சூழலில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தலை நடத்த வழி செய்யும் அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும் ஒப்புதல் அளித்திருக்கிறார்.  தமிழக அரசின் நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்துள்ள மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், 'ஜனநாயகத்தில் மறைமுகத் தேர்தலுக்கும் அனுமதி இருக்கிறது. இது சட்டத்திற்கு விரோதமான செயல் அல்ல. திமுக ஆட்சிக் காலத்திலும் மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டிருக்கிறது' என்று கூறியுள்ளார்.  https://www.ndtv.com/tamil/tamilnadu-localbody-election-indirect-election-for-mayor-panchayat-president-post-tn-government-ordi-2135825?pfrom=home-tamil_bigstory