• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • இயற்கை விவசாயத்திற்கு உதவியாக இந்திய இன வாத்துக்களை இங்கு வளர்க்க ஆரம்பித்துள்ளனர். இந்த வாத்துக்களைத் தோட்டத்தினுள் உலாவ விட்டால் அவை பூச்சிகளை உண்பதோடு செடிகளுக்கிடையே ஓடித் திரிவதால் களைகள் முளைப்பதும் தடுக்கப்படுகிறது. இவற்றின் எச்சமும் பசளையாகிறது. 
    • யாழ்கள நண்பர்களே இந்த பிரச்சினையின் வரலாற்றுப் பின்னணி என்ன? சாதியா? சுற்றுப்புற சூழல் மாசடைதலை தடுத்தலா? தயவு செய்து பின்னணி தகவல் அறிய உதவுங்கள்
    • Image caption தாஹிர் ஹுசேன் (இடது) மற்றும் கொலை செய்யப்பட்ட அங்கித் சர்மா (வலது) டெல்லி மதக் கலவரத்தில் இந்திய உளவுத் துறையில் பணியாற்றும் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தாஹிர் ஹுசேன் என்பவர் மீது கொலை மற்றும் வன்முறையில் தீவைத்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தாஹிர் ஹுசேன் கிழக்கு டெல்லி மாநகராட்சி உறுப்பினராக உள்ளார். உளவுத் துறையில் பணியாற்றிய அங்கித் சர்மா என்பவர் கலவரத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ஜாஃப்ராபாத் எனும் இடத்தில் உள்ள சாக்கடை ஒன்றில் செவ்வாய் இரவு பிணமாக மீட்கப்பட்டார். அவர் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியபோது கும்பல் ஒன்றால் அவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. தாஹிர் ஹுசேன் தலைமையிலான கும்பல் ஒன்று கற்கள், தடிகள் மற்றும் ஆயுதங்களுடன் சென்று தாக்கியதால்தான் அங்கித் சர்மா உயிரிழந்தார் என்று பாரதிய ஜனதா கட்சியின் கபில் மிஸ்ரா குற்றம் சாட்டியிருந்தார் அங்கித் சர்மாவின் தந்தை ரவீந்தர் சர்மாவும் உளவுத் துறையில் பணியாற்றுகிறார். அவரும் தாஹிர் ஹுசேன் ஆதரவாளர்களே தனது மகனை கொலை செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார். ரவீந்தர் சர்மா அளித்த புகாரின் அடிப்படையிலேயே டெல்லி காவல்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. தாம் தாக்குதலில் ஈடுபடவில்லை என்றும் தாமே தாக்குதலுக்கு உள்ளதாகவும் தாஹிர் ஹுசேன் கூறியிருந்தார். அவர் தடிகள் மற்றும் ஆயுதங்களுடன் கும்பல் ஒன்றுடன் செல்வதாக கூறப்படும் காணொளி ஒன்றும் சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சாந்த் பாக், ஜாஃப்ராபாத் உள்ளிட்ட பகுதிகளில் போராடுபவர்கள் அப்புறப்படுத்தப்படாவிட்டால் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று கடந்த ஞாயிறன்று பாரதிய ஜனதா கட்சியின் கபில் மிஸ்ரா பேசியது கலவரத்தின் தொடக்கமாக இருந்தது என்று குற்றச்சாட்டு நிலவுகிறது. ஞாயிறு மாலை ஜாஃப்ராபாத் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரானவர்கள் மற்றும் ஆதரவானவர்கள் இடையே உண்டான மோதல் வடகிழக்கு டெல்லியின் பிற பகுதிகளுக்கும் பரவியதால் மதக் கலவரம் உண்டானது. இதுவரை இந்த மதக் கலவரத்தால் குறைந்தது 33 பேர் உயிரிழந்துள்ளனர். எந்தக் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் வன்முறையில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் கூறியிருந்தார். https://www.bbc.com/tamil/india-51659279  
    • என் பிள்ளைகள் இருவரும் மிக சரளமாக தமிழ் கதைப்பார்கள். கனடாவில் இருக்கும் யாழ் கள உறவுகளுக்கும் இது தெரியும். ஊருக்கு போயிருக்கும் போதும் மகள் எல்லாரிடமும் தமிழில் கதைத்தமையால் பல உறவுகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது. நிற்க, ஆனால் அவர்களை நாம் தமிழ் படிக்க அனுப்பும் போது ஏற்பட்ட அனுபவங்களின் பின் அவர்கள் போக மாட்டேன் என கூறியபோது கட்டாயப்படுத்தி அனுப்பி வைக்க எண்ணவில்லை. அப்படி கட்டாயப்படுத்தி வைக்க வேண்டிய அளவுக்கு தமிழ் படிப்பது கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் அளவுக்கு முக்கியமான விடயமாக நான் கருதாமையும் முக்கிய காரணம். அத்துடன் தமிழ் கலாச்சாரங்களை ஒட்டிய நடனம், கலை, இசை போன்வற்றையும் பிள்ளைகளுக்கு கற்பிக்க விரும்பவில்லை. சாதியத்தையும், வர்க்க வேறுபாடுகளையும், மத நம்பிக்கைகளையும் வலிந்து ஊட்டும் இவற்றை என் பிள்ளைகள் கற்காமல் இருப்பதே உத்தமம்.