Jump to content

யாழில் ஒரு காதல் - கருத்துக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.  கதை சுற்றிச் சுற்றி வருவது போல் ஒரு எண்ணம் எழுகிறது. தயவு செய்து இனி எழுதுபவர்கள் திரியில் நான் இன்று எழுதுகிறேன் என்னும் செய்தியைப் போட்டுவிட்டு எழுதுங்கள். ஏனெனில் ஒருவர் ஒன்றை எழுத இன்னொருவர் வேறோருவிதமாக நகர்த்தும் போது, முதல் எழுதியவர் மீண்டும் எழுத வேண்டி ஏற்பட்டதாக முறைப்பாடு ஒன்று வந்துள்ளது.

 

எல்லோரும் ஆர்வமாக எழுதுவது மகிழ்ச்சியைத் தந்தாலும், எழுதாமல் தட்டிக்கழிக்கும் உறவுகளை நினைக்க மனவருத்தம் தான் விஞ்சுகிறது.

 

பச்சை போடாமைக்கு மன்னியுங்கள் உறவுகளே. :D  பச்சை எனக்கு ஒன்று போட்ட உடனேயே முடிந்துவிட்டது என்று வருகிறது.

சுமே, நீங்கள் ஆரம்பித்த கதைத்தொடர், நன்றாகவே நகர்ந்து செல்கின்றது..என்றே நினைக்கிறேன்!

 

ஒரு 'கவியரங்கைப் போல' கட்டில்லாத 'சுதந்திரத்துடன்' அது நகர்ந்து செல்வதே அதன் 'அழகு' !

 

ஒருவர், முன்பு எழுதிய கதைகளின் சம்பவங்களைக் கோர்த்து எழுதும் போது, இடையில் புதிய 'அத்தியாயம்' ஒரு எதிர்பாராமல் தோன்றினால், ஏற்கெனவே எழுதிய அத்தியாயத்தை மாற்ற வேண்டி வரும் என்பது உண்மை தான். :o

 

எனினும், முன்னைய கதையை எழுதிப் பதிவதற்கு ,'ஆயத்தமாக' வைத்திருந்தவர், இதை ஒரு 'சவாலாக' எடுத்துக்கொண்டு, தனது அத்தியாயத்தை மாற்றுவதற்குக் கதையின், 'நெகிழ்வுத்தன்மை' பரந்ததாகவே உள்ளது என நினைக்கிறேன்!

 

எனக்கென்னவோ, கட்டுப்படுத்தப்பட்ட 'நீச்சல் குளத்தில்' நீந்துவதை விட, அலைகடலில் நீந்துவதே பிடிக்கும்! :D

Link to comment
Share on other sites

  • Replies 256
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுமே, நீங்கள் ஆரம்பித்த கதைத்தொடர், நன்றாகவே நகர்ந்து செல்கின்றது..என்றே நினைக்கிறேன்!

 

ஒரு 'கவியரங்கைப் போல' கட்டில்லாத 'சுதந்திரத்துடன்' அது நகர்ந்து செல்வதே அதன் 'அழகு' !

 

ஒருவர், முன்பு எழுதிய கதைகளின் சம்பவங்களைக் கோர்த்து எழுதும் போது, இடையில் புதிய 'அத்தியாயம்' ஒரு எதிர்பாராமல் தோன்றினால், ஏற்கெனவே எழுதிய அத்தியாயத்தை மாற்ற வேண்டி வரும் என்பது உண்மை தான். :o

 

எனினும், முன்னைய கதையை எழுதிப் பதிவதற்கு ,'ஆயத்தமாக' வைத்திருந்தவர், இதை ஒரு 'சவாலாக' எடுத்துக்கொண்டு, தனது அத்தியாயத்தை மாற்றுவதற்குக் கதையின், 'நெகிழ்வுத்தன்மை' பரந்ததாகவே உள்ளது என நினைக்கிறேன்!

 

எனக்கென்னவோ, கட்டுப்படுத்தப்பட்ட 'நீச்சல் குளத்தில்' நீந்துவதை விட, அலைகடலில் நீந்துவதே பிடிக்கும்! :D

 

நீந்துங்கோ, நீந்துங்கோ அலை கடலில் மட்டுமல்ல ஆழ்கடலிலும் நீந்தலாம். யார் வேண்டாம் என்று சொன்னது???? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் அவ்வப்போது வந்து பார்த்துட்டு போறனான்..அதிக சோடனைகளின்றி இலகு நடையில் எழுதினால் நன்றாக இருக்கும்...யாரது மனதையும் கஸ்ரப்படுத்தும் நோக்கம் அல்ல..மற்றப்படி விமர்சனம் எல்லாம் எழுதும் அழவுக்கு  நமக்கு அறிவு இல்லை.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.  கதை சுற்றிச் சுற்றி வருவது போல் ஒரு எண்ணம் எழுகிறது. தயவு செய்து இனி எழுதுபவர்கள் திரியில் நான் இன்று எழுதுகிறேன் என்னும் செய்தியைப் போட்டுவிட்டு எழுதுங்கள். ஏனெனில் ஒருவர் ஒன்றை எழுத இன்னொருவர் வேறோருவிதமாக நகர்த்தும் போது, முதல் எழுதியவர் மீண்டும் எழுத வேண்டி ஏற்பட்டதாக முறைப்பாடு ஒன்று வந்துள்ளது.

 

எல்லோரும் ஆர்வமாக எழுதுவது மகிழ்ச்சியைத் தந்தாலும், எழுதாமல் தட்டிக்கழிக்கும் உறவுகளை நினைக்க மனவருத்தம் தான் விஞ்சுகிறது.

 

பச்சை போடாமைக்கு மன்னியுங்கள் உறவுகளே. :D  பச்சை எனக்கு ஒன்று போட்ட உடனேயே முடிந்துவிட்டது என்று வருகிறது.

காகிதமும் பேனாவும் தந்து என்னைக் கதை எழுதச் சொன்னால்! என்னால் உடனே எழுதிவிட முடியாது. அறிவியல் உலகம் தந்த கணணியே நான் இலகுவாக எழுதிப் பிறரது பாராட்டைப் பெறுவதற்கும் உதவிபுரிகிறது. அனுபவங்களும் கற்பனைகளும் ஊற்றுப்போல் வரும்போது, அதனை அப்படியே கணணியில் கொட்டிவிடுவது எளிதானது. ஒன்றுகொன்று தொடர்பற்ற அவற்றைப் பின் இணைத்துச் சீரான கதையாக்கிப் பதியவும் முடிகிறது. காகிதத்தில் எழுதியதை இதுபோன்று செய்வது கடினம். புங்கை அவர்கள் தெரிவித்ததுபோலக் "கதைகளின் சம்பவங்களைக் கோர்த்து எழுதும் போது, இடையில் புதிய 'அத்தியாயம்' எதிர்பாராமல் தோன்றினால்," அதனைக் கோர்த்துப் படிக்கும் திறன் படிப்பவர்களிடமும் உள்ளதை நாங்கள் குறைவாக மதிப்பிடுவதும் பொருந்தாது. அறிவியல் உலகம் இன்று ஒவ்வொருவரையுமே ஒரு கணணியாகவும் உருவாக்கிவிட்டுள்ளது. ஆகவே உங்களது "யாழில் ஒரு காதல் முயற்சி" வெற்றியளிக்கும் என்பது எனது எண்ணமாகும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்தியாயம் 12 !

 

புங்கை இனி எழுதுபவர்களின் சிரமத்தைக் குறைக்க பல விடயங்களை அழகாக  நூலில்  கோர்த்து விட்டிருக்கிறார்.

 

என் உணர்வைக் கிளறியது அந்த மொக்கங் கடை. முன்பு தினம் தினம் இரவுச் சாப்பாடு அங்குதான்.  பிளவ்ஸ் ஐந்துசந்தியின் அருகில் இருக்கும் ஒழுங்கயில் சிறிது தூரத்தில் , அந்தப் புட்டும் றோசும்  ஆணமும் அடிச்சிக்க முடியாது. பளான் போட அருமையான இடம். அந்த கடையின் மெல்லிய இருட்டும் அழகு...! :rolleyes:  :D

Link to comment
Share on other sites

யாழ் ..காதல் (10)

 

மிக மிக அருமை. பாராட்டுக்கள் வார்த்தைகளை கோர்த்த விதம் அருமை. நல்ல கை தேர்ந்த  எழுத்தாளன் போல் இருக்கிறீர்கள்.

 

நிறைய  புத்தகங்கள் வாசிப்பீர்கள் போல...கற்பனை உருவகம்  அருமை. .பாராட்டுக்கள் பாஞ்ச்...

 

எனக்கு இரண்டு அக்காக்களும் ஒரு அண்ணாவும். யார்முதலில் புத்தகத்தை வாசித்து முடிப்பது என்ற போட்டியில் வரும் சண்டையைத் தீர்த்துவைக்க, வேலியிலுள்ள பூவரச மரத்தின் தடிகள் அத்தனையும் அம்மாவின் கைக்குவந்து சிதம்பிவிடும். :o  
 

 

 

யாழ் ..காதல் (10)

பஞ்ச்

பெயருக்கு ஏற்றாப்போல் பஞ்ச் தான்

 

பலமுனைத்தாக்குதல் நடாத்தியிருக்கின்றீர்கள்

கதாநாயகனையே வில்லனாக்க முயன்று

மனம் வராது 

வில்லனைத்திருந்தவிட்டிருக்கும் பாணி அருமை..

மிக மிக அருமை. பாராட்டுக்கள் 

அடுத்து வருபவருக்க சவால்  காத்திருக்கிறது

பார்க்கலாம்

 

 

கதாநாயகனோ! வில்லனோ! எல்லோரும் மனிதர்கள்தானே!! அடிக்கிற கைதான் அணைக்கவும் செய்கிறது.  :rolleyes:
 

 

பஞ்சின் எழுத்து அந்தமாதிரி இருக்கு. வர்ணனை கொஞ்சம் கூடிப்போச்சு. 

என்னெண்டு உப்பிடிக் கற்பனை பண்ணி எழுதுறீர்கள்?? இந்த அலைக்கு கற்பனை 0%

 

 

நீங்களும் வர்ணனை கொஞ்சம் கூடிப்போச்சு என்று சலிப்பதுபோல்! மேலும் இருக்கா? என்று தேடிப்பார்ப்பது தெரிகிறது. இல்லையென்றால் கற்பனை பற்றி ஏங்கி எழுதுவதற்கு எண்ணம் வந்திராது!!!. :)   
 

 

பாஞ்ச் எங்களைத் தூக்கிச் சாப்பிட்டுவிடுவார் போல் இருக்கே. மிக நன்று எழுத்தும் கதை ஓட்டமும். ஆனாலும் கொஞ்சம் கூடிப்போச்சு 

இதில் என்வென்றால் மற்றவர்களால் எழுதப்படும் சில சம்பவங்கள் என் வாழ்விலும் நடைபெற்றவையாக இருப்பதுதான் அதிசயம். தணிக்கை செய்ய வேண்டிய பகுதியைச் சொல்லவில்லை 

 

நீங்களே எங்களுக்கு விருந்து படைத்தீர்கள். அதன் சுவையை நாங்கள் உலகத்துக்கும் தெரிவித்து, உங்களுக்குப் பெருமைதேடித் தரமுயல்வதில் தவறில்லையே?? :D  
 

 

வாசித்தேன்  பத்து , அத்தேன்  பாஞ்சின் சொத்து ! 

 

மிகவும் பொறுமையாய் பாத்திரங்களைக் கவனித்து  சீராக்கி மிகவும் நன்றாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். இந்தப் பகுதியில் நல்ல ஆளுமை தென்படுகிறது...! 

 

சுவி உங்கள் கவிதான் இனிமை. தேன்சொட்டுது. நான் பஞ்சாகிப் பறக்கிறேன். :D
 

 

இதுவரை வெளிவந்த அங்கங்களிலேயே பஞ்ச் எழுதிய 10வது அங்கமே சிகரமாக இருக்கிறது. பாராட்டுகள்!!

 

இன்னும் எத்தனை சிகரங்கள் வரப் போகிறதோ.. காத்திருக்கிறேன்.

 

தணிக்கையா.. அப்படி ஒரு கை இருக்கிறதா தெரியேலையே...  

 

சிகரத்தில் ஏற்றிவிட்டீர்கள்! இறங்கிவரத் தெரியாது!! விழுந்தால் தாங்க வருவீர்களா?.  :o
 

 

பாஞ்சின், பத்தாவது அத்தியாயத்தை உடனேயே வாசித்து விட்டேன் எனினும், கருத்தெழுதுவதைப்  'பச்சைக் கோட்டா' கிடைக்கும் வரை, தள்ளிப் போடலாம் என எண்ணியிருந்தேன்.

 

ஆனால், தொடர் வெகு வேகமாகத் தொடர்ந்து 'கட்டுப்படுத்தவியலாத' வேகத்தில் சம்பவங்கள் தொடர்கின்றன. மகிழ்ச்சி.

 

இதற்கான, 'பாராட்டு' முழுவதும் 'பாஞ்சுக்கே' சேர வேண்டும் என நினைக்கிறேன்....!

 

அப்பப்பா... அந்த மாதிரி ஒரு கதையோட்டம்...! 

 

அத்துடன், எமது கலாச்சாரத்தின் மீது, பாஞ்சுக்கு இருக்கும் ' கருங்கல்லில் எழுத்துப்' போன்ற அசைக்க முடியாத நம்பிக்கை!

 

சிறு வயதிலேயே, சக்கை உறிஞ்சப்பட்டு, வெறும் விதைகளாக, வெளியில் துப்பப்பட்ட 'எம்மை விடவும்' நீண்ட காலங்கள், எமது கலாச்சாரப் பண்பாடுகளுக்குள் 'பஞ்சர்'  ஆழமாக ஊறிப்போனதால்,  அதிக காலங்கள் 'பதப்படுத்தப் பட்ட' திராட்சை ரசம் போல, அவரது அத்தியாயம் அமைந்துள்ளது!

 

வாழ்த்துக்கள், பாஞ்ச்! 

 

இந்தப் பாராட்டுகள் எல்லாம் சுமேரியரையே சாரும். அவர் ஏற்றிவைத்த இந்தத் திரியின் ஒளியில்தான் நானும் பிரகாசிக்கின்றேன்.  :D
 
 
 
மற்றும் எனக்கு ஊக்கம்தந்த அர்யுன், முதல்வன், யாயினி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். :)  :D
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்திலும் பணம் பார்க்க துடிக்கும் இவ்வுலகில் உங்களைப்போன்ற எழுத்தாளர்களை பெற்றதிற்கு யாழ்களம் பெருமைப்படவேண்டும்.யாழ்கள உறவுகளாகிய நாமும் பெருமைப்படவேண்டும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையின் முடிச்சுக்களை  ஒன்றிணைத்து

அடுத்த கட்ட நகர்வுக்காக

சில மாற்றங்களை  செய்துள்ளேன்.

நன்றி

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=136917&st=0&p=993347

 

Link to comment
Share on other sites

இப்பதான் வாசித்தேன், இன்னமும் முமையாக வாசித்து முடிக்கவில்லை.  தொடங்கிய சுமோவிற்கும் எழுதும் அனைவரிற்கும் பாராட்டுக்கள். 
 
வாசித்தவரை தோன்றிய உணர்வை ஒரு வரியில் சொல்லின்: புங்கையூரான் விக்கிரமன் படம், அர்யுன் கௌதம் மேனன் படம், சோளியான் பாராதிராஜா படம் என்ற வகையில் இருப்பதாய் படுகிறது. 
 
ஒரு ஆதங்கத்தையும் பதிவுசெய்யத் தோன்றுகின்றது. யாழில் பலசமயங்களில் அழகும் இரசனையும் கடந்த காலத்தில் இருந்து வருவதாகவே இருப்பது சற்று நெருடலாக இருக்கிறது. பதினெட்டு வயதிற்குப் பின்னர் வாழ்வு இனிக்கவில்லையா என்ன? குயின்சி ஆசிர்வாதத்தை (உங்கள் வர்ணனையில் அந்தப் பெயரை கூகிள் பண்ணிப் பார்த்தேன் படம் கிடைக்குமா என்று :D  ) வர்ணித்த    வகையில் அர்யுன் தற்போதைய வாழ்வை எழுதவேண்டும் என்று சொல்லத் தோன்றுகின்றது. அதுபோன்றே அனைவரும். மதுரனின் இளமைக்காலத்த ஜீவா சுபேஸ் போன்றவர்கள் எழுதி நகர்ச்சியில் அந்தந்த வயதுக்காரர் தற்போதைய நிலை சார்ந்து எழுதின் இன்னமும் சுவாரசியமாக இருக்குமோ என்று தோன்றுகின்றது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூறுவதுபோல் தான் நானும் எண்ணினேன் இன்னுமொருவன். ஆனாலும் பலர் வேலைப்பளு காரணமாக எழுதுகிறோம் என்றுவிட்டு இழுத்தடிக்கின்றனர். அவர்களை வந்து எழுதினால் ஒழிய நாம் என்ன செய்வது. பலரை தனிமடலிலும் கேட்டாச்சு.

 

நீங்கள் கூட நேரம் இருந்தால் எமக்காக தொடரில் கலந்துகொள்வீர்கள் என்றால் நன்றாக இருக்கும். பார்ப்போம்.

Link to comment
Share on other sites

எல்லோரும் நல்லா கதை எழுதி இருக்கிறீர்கள், பாஞ்ச்தான் கொஞ்சம் ஓவராக வர்ணனை செய்து உள்ளார்

Link to comment
Share on other sites

தாரணிக்கு எப்போ கல்யாணம் நடந்தது அர்யுன்?? கள்ளி என்னைப்பார்த்துக் கண்ணுமடித்தவள்!... அழைப்பிதழும் அனுப்பாமல் ஏமாற்றிவிட்டாள்....!! நாலாம்சடங்கிற்கு என்னைக் கூப்பிட்டு சமாதானப்படுத்த இருக்கிறாள் என்றறிந்தேன். நான் போகமாட்டேன். :blink:

நிலாவை ஒரு துணிந்த வீரப்பெண்மணியாக மாற்றிய கதையோட்டம் அற்புதம் வாழ்த்துக்கள்!!. :D

Link to comment
Share on other sites

அர்ஜுன் அண்ணாவின் எழுத்து முந்திய மாதிரி இல்லை :o , என்னெண்டாலும் எழுதியதிற்கு வாழ்த்துக்கள்  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் ! கீர்த்திகாவின் அக்காவின் கல்யாணத்தில்தானவை ஒளிச்சுப்பிடிச்சு விளையாடினவை. நீங்கள் தாவனியோட போற தாரணிக்கு ஏன் அவசரமாய்க் கலியாணத்தைப் பண்ணிவிட்டனீங்கள். அது பாவம் தன் பாட்டுக்கு  பள்ளிக்குப் போய் வரட்டுமன். பிறகு பாஞ் பள்ளிக்கு கூட்டிக் கொண்டுபோய் வருவார்தானே...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்யுன் இம்முறை கடமைக்கு எழுதியுள்ளார். ஆனாலும் வாழ்த்துக்கள். எனக்குக் கதை கொஞ்சம் குழப்பம். 

Link to comment
Share on other sites

கீர்த்திகாவின் அக்காவின் கலியாணம் தான் அது . 

தாரணிக்கு திடிரென கல்யாணம் செய்துவதற்கு  மன்னிக்கவும் . குறிப்பாக பாஞ்ச்  :icon_mrgreen: .

அரைவாசி எழுதிவிட்டு விட்டுவிட்டேன் பின்னர் ஒரு சிறு இடைவெளியின் பின்னர் அவசரத்தில் மிச்சம் எழுதி போட்டுவிட்டேன் . :lol:

மேசோ -என்ன குழப்பம் ?

அடுத்த முறை நேரம் கிடைக்கும் போது குயின்சியின் கதையை எழுதி முடிக்க யோசிக்கின்றேன் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனும் பிரச்சனைகளுள் இருக்கிறீர்கள் போல பதிந்ததைக் கதையுள் மீண்டும் பதிந்துள்ளீர்கள். ஒருக்கா கதையைப் பாருங்கள்.

 

ஜீவா, இசை, கிருபன் என்று இன்னும் எத்தனையோ உறவுகள் இருக்கின்றனர். யாரும் இன்னும் எழுத முன்வரவில்லை.

 

அதிக நாட்கள் விடாது தொடர்ந்தால்த்தான் கதையை வாசிப்பவர்க்கு சுவாரசியமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனும் பிரச்சனைகளுள் இருக்கிறீர்கள் போல பதிந்ததைக் கதையுள் மீண்டும் பதிந்துள்ளீர்கள். ஒருக்கா கதையைப் பாருங்கள்.

 

ஜீவா, இசை, கிருபன் என்று இன்னும் எத்தனையோ உறவுகள் இருக்கின்றனர். யாரும் இன்னும் எழுத முன்வரவில்லை.

 

அதிக நாட்கள் விடாது தொடர்ந்தால்த்தான் கதையை வாசிப்பவர்க்கு சுவாரசியமாக இருக்கும்.

 

திருத்தியுள்ளேன் சுமே....சுட்டி காட்டியமைக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனும் பிரச்சனைகளுள் இருக்கிறீர்கள் போல பதிந்ததைக் கதையுள் மீண்டும் பதிந்துள்ளீர்கள். ஒருக்கா கதையைப் பாருங்கள்.

 

ஜீவா, இசை, கிருபன் என்று இன்னும் எத்தனையோ உறவுகள் இருக்கின்றனர். யாரும் இன்னும் எழுத முன்வரவில்லை.

 

அதிக நாட்கள் விடாது தொடர்ந்தால்த்தான் கதையை வாசிப்பவர்க்கு சுவாரசியமாக இருக்கும்.

 

 

அத்துடன்

நிழலியும் எழுதணும் என்பது எனது அவா..

அப்பொழுது  தான் இது முழு யாழ்களமும் பங்கு பற்றிய  நிறைவைத்தரும்...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையை வாசிக்கவே நேரம் கிடைப்பது கடினமாக இருக்கு! மெகா தொடர் போன்று இன்னும் ஒரு வருடம் தொடர் நீண்டால் எழுதச் சந்தர்ப்பம் கிடைக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையை வாசிக்கவே நேரம் கிடைப்பது கடினமாக இருக்கு! மெகா தொடர் போன்று இன்னும் ஒரு வருடம் தொடர் நீண்டால் எழுதச் சந்தர்ப்பம் கிடைக்கலாம்.

 

இஞ்சை பாருங்கோவன் இவர்ரை கூத்தை.......கலிகாலம்....கலிகாலம்...மகாபந்தி மன்னன் கிருபனுக்கும் நேர இறுக்கம்.. :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

......ஆறின கஞ்சி பழங்கஞ்சி,, :D

Link to comment
Share on other sites

கோ கெதியாய் முடிக்கப் பார்க்கிறார் கதையை :rolleyes:  :D . அதைவிட பெரிய எழுத்தில் எழுதி ................ :lol: . வாழ்த்துக்கள் கோ! :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.