மெசொபொத்தேமியா சுமேரியர் 1,682 Report post Posted March 4, 2014 (edited) உறவுகளே இந்தத் திரியில் உங்கள் கருத்துக்களை வையுங்கள் http://www.yarl.com/forum3/index.php?showtopic=136917&hl= Edited March 5, 2014 by மெசொபொத்தேமியா சுமேரியர் Share this post Link to post Share on other sites
விசுகு 3,523 Report post Posted March 4, 2014 கதை நன்றாக வந்திருக்கிறது வாழ்த்துக்கள் சுமே... தொடருங்கள் அடுத்தது யார் என்பதையும் அவருக்கான கால எல்லை எவ்வளவு என்பதையும் தெரிவு செய்தால் தொடர்வது சுலபமாக இருக்கும் என்பது எனது கருத்து மற்றவர்களது கருத்தையும் பார்க்கலாம் Share this post Link to post Share on other sites
sOliyAn 578 Report post Posted March 4, 2014 சுமோ.. உங்க வழக்கமான எழுத்து நடையில் இருந்து கதையின் முதலாம் வித்தியாசமா இருக்கு... பேரூந்து உந்துருளி போன்ற சொற்கள் தமிழக கதையோ என்ற உணர்வை ஆரம்பத்தில் ஏற்படுத்தினாலும்.. அங்காலை சூப்பர்.. எனக்கு ஞாயிறு வேலை இல்லாததால், சனிக்கிழமை வரை பதியப்படும் அங்கங்களை தொடர்ந்து ஞாயிறு எழுதுகிறேன். நன்றி! Share this post Link to post Share on other sites
கிருபன் 2,829 Report post Posted March 4, 2014 சுமாரானவர்களைச் சுழட்ட நிறையப் பேர் அலைகின்ற ஊராக இருக்கின்றதே! இந்த ஊரில் காக்கைகள்தான் கிளிகளோ Share this post Link to post Share on other sites
மெசொபொத்தேமியா சுமேரியர் 1,682 Report post Posted March 4, 2014 சுமாரானவர்களைச் சுழட்ட நிறையப் பேர் அலைகின்ற ஊராக இருக்கின்றதே! இந்த ஊரில் காக்கைகள்தான் கிளிகளோ உங்கள் இரசனை மற்றவருக்கு இருக்கவேண்டும் என்பதில்லையே ??? ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ரசனை. Share this post Link to post Share on other sites
suvy 5,118 Report post Posted March 4, 2014 அட ,அப்ப நிலாவுக்கே மதுரன் காதல் மடல் கொடுத்தவர். பொடியன் பயமில்லாமல் நேர குடுத்திட்டார்.நானென்டால் தாரணிட்டக் கொடுத்து நிலாட்டக் குடுக்கச் சொல்லியிருப்பன். எதுக்கும் நிலா மறுத்தாலும் , தாரணி ஆறுதலாய் இருப்பா ...! 1 Share this post Link to post Share on other sites
Sasi_varnam 757 Report post Posted March 5, 2014 (edited) நல் முயற்சி, என் பள்ளிக்கூட நாட்கள் கண்முன் வந்து போனது உண்மை. இதோ என் மனத்தில் பட்ட சில கருத்துக்களை பகிர்கின்றேன். கதை களம் பற்றிய சிறு வர்ணனைகள் இருந்தால் இன்னும் சுவாரஷ்யமாக இருக்கும். (ஊர், கிராமம், சந்தி, பெட்டிக்கடை, இயக்க நோடீஸ், மதில், சங்கக்கடை, மதகு, கோயில் மண்டபம், வெளிவீதி, கிணற்றடி, மூலகுடா, நந்தினி அக்கா, சொக்கலிங்கத்தார், பவழம் ஆச்சி, சின்னப்பொடி, சைக்கிள் கடை, பொட்ட நாய்... கதையை சிறுக சிறுக சொல்லலாம். (3 - 4) பந்தியாக இருந்தால் கதையை பல கோணங்களில் யோசித்து திருப்பங்கள் கொண்டு வரலாம். சிறு சம்பாஷனைகள் , உரையாடல்கள் எமக்கே உரிய வட்டார/ பிராந்திய மொழி சார்ந்து இருத்தல். மற்றும் படி எல்லோரும் சேர்ந்து ஒரு கலக்கு கலக்குங்கள். உங்கள் அபிமான வாசகன் சசி வர்ணம் Edited March 5, 2014 by Sasi_varnam 1 Share this post Link to post Share on other sites
வந்தியத்தேவன் 297 Report post Posted March 5, 2014 "பதினாறு வயது என்பது எல்லோருக்கும் ஒரு அழகைக் கொடுக்கும் வயதுதான். இளம் காளையர்கள் எல்லாம் நின்று திரும்பிப் பார்க்கும் வயது. நின்று திரும்பிப் பார்க்கத் துணிவற்றவர்கள் கூட பதினாறு வயது மங்கையைக் கண்டால் கடைக்கண்ணால் தன்னும் பார்த்துக்கொண்டு போகும் அழகு. இயற்கையான அழகு இல்லாதவர் கூட அந்த வயதுக்கான ஒரு தளதளப்பில் ஒரு மினுக்கத்தில் அழகாகத் தெரிவர். தூக்கக் கலக்கத்தில் அவர்களைப் பார்த்தாலும் கூட அழகாகத்தான் தோன்றும்" இப்படி எத்தனை கதைகளில் எழுதுவீர்கள்? படிக்க அலுப்படிக்கின்றது. சரி இதைவிட்டால், கதை நன்றாக இருக்கின்றது, தொடருங்கள் இணைப்பை கொடுத்தால் நன்று http://www.yarl.com/forum3/index.php?showtopic=136917 Share this post Link to post Share on other sites
putthan 1,848 Report post Posted March 5, 2014 பெடியள் பிறந்தநாள் தொடக்கம் கட்டையில் போகும்வரை அழகாய்தான் இருப்பாங்கள் ....16 வயசு வரும்வரை காத்திருக்க வேண்டிய தேவையில்லை....கதை நன்றாக செல்லுகின்றது தொடர் தொடர வாழ்த்துக்கள் Share this post Link to post Share on other sites
புங்கையூரன் 3,630 Report post Posted March 5, 2014 கதையின் ஆரம்பத்துக்கு ஒரு 'பிள்ளையார் சுழி' மாதிரிப் போடுவீங்கள் எண்டு பாத்தால், நீங்கள்'வங்காள விரிகுடாக் கடல் சுழி' மாதிரி ஒரு பெரிய சுழியாப் போட்டிட்டுப் போயிரிக்கிறீங்கள்! பெண் வாடையே தெரியாமல், ஆம்பிளைப்பிள்ளையளின்ர பள்ளிக்கூட விடுதியின் சிறைக்கூடங்களில் வளர்ந்தவர்களால் எப்படித் தொடர முடியும் என்னும் தயக்கம் இருந்தாலும், தொடரத் தானே வேணும்! இருந்தாலும் நம்ம நெடுக்கர் 'காதலைப்பற்றி' எவ்வளவு அழகாக எழுதுகிறார்? அவரெல்லாம் காதலித்துப் பார்த்தா எழுதுகின்றார்? அவரைப் போல நானும் எழுதலாம் எனும் நம்பிக்கையைக் கையில் இறுகப்பிடித்தபடி இருக்கிறேன்! 1 Share this post Link to post Share on other sites
மெசொபொத்தேமியா சுமேரியர் 1,682 Report post Posted March 5, 2014 பெடியள் பிறந்தநாள் தொடக்கம் கட்டையில் போகும்வரை அழகாய்தான் இருப்பாங்கள் ....16 வயசு வரும்வரை காத்திருக்க வேண்டிய தேவையில்லை....கதை நன்றாக செல்லுகின்றது தொடர் தொடர வாழ்த்துக்கள் பெடியள் அழகோ ???? அதை நாங்கள் எல்லோ சொல்ல வேணும். ஒரு இருபத்தைந்துக்குப் பின்தான் ஆண்கள் பார்க்கக் கூடியவாறு இருப்பது. Share this post Link to post Share on other sites
Paanch 1,408 Report post Posted March 5, 2014 படம்காட்டும் அந்த நிலாவுக்கு எந்த பியூட்டிபாலரிலை மேக்கப் போட்டது.? மெழுகு பூசினமாதிரி நிலாவைவிடவும் பளபளப்பாக ஒளிருதே..!! எனது பேனா கிறுக்குவதற்கு நிலவு ஒளி போதுமா? பார்க்கலாம்!!. Share this post Link to post Share on other sites
மெசொபொத்தேமியா சுமேரியர் 1,682 Report post Posted March 5, 2014 படம்காட்டும் அந்த நிலாவுக்கு எந்த பியூட்டிபாலரிலை மேக்கப் போட்டது.? மெழுகு பூசினமாதிரி நிலாவைவிடவும் பளபளப்பாக ஒளிருதே..!! எனது பேனா கிறுக்குவதற்கு நிலவு ஒளி போதுமா? பார்க்கலாம்!!. போதும் போதும் பயம் வேண்டாம் Share this post Link to post Share on other sites
மெசொபொத்தேமியா சுமேரியர் 1,682 Report post Posted March 5, 2014 நல் முயற்சி, என் பள்ளிக்கூட நாட்கள் கண்முன் வந்து போனது உண்மை. இதோ என் மனத்தில் பட்ட சில கருத்துக்களை பகிர்கின்றேன். கதை களம் பற்றிய சிறு வர்ணனைகள் இருந்தால் இன்னும் சுவாரஷ்யமாக இருக்கும். (ஊர், கிராமம், சந்தி, பெட்டிக்கடை, இயக்க நோடீஸ், மதில், சங்கக்கடை, மதகு, கோயில் மண்டபம், வெளிவீதி, கிணற்றடி, மூலகுடா, நந்தினி அக்கா, சொக்கலிங்கத்தார், பவழம் ஆச்சி, சின்னப்பொடி, சைக்கிள் கடை, பொட்ட நாய்... கதையை சிறுக சிறுக சொல்லலாம். (3 - 4) பந்தியாக இருந்தால் கதையை பல கோணங்களில் யோசித்து திருப்பங்கள் கொண்டு வரலாம். சிறு சம்பாஷனைகள் , உரையாடல்கள் எமக்கே உரிய வட்டார/ பிராந்திய மொழி சார்ந்து இருத்தல். மற்றும் படி எல்லோரும் சேர்ந்து ஒரு கலக்கு கலக்குங்கள். உங்கள் அபிமான வாசகன் சசி வர்ணம் கருத்துக்கும் வரவுக்கும் நன்றி சசி. ஒவ்வொருவர் எழுதுவதும் ஒவ்வொருமாதிரி இருப்பதுதானே. எனக்கென்னவோ உந்த வர்ணனைகள் பிடிப்பதில்லை. மற்றவர்கள் நீங்கள் கூறியதை பார்ப்பார்கள் தானே. காத்திருங்கள். வருகைதந்த கருத்துக்கள் கூறிய உறவுகள் அனைவருக்கும் நன்றி. அட ,அப்ப நிலாவுக்கே மதுரன் காதல் மடல் கொடுத்தவர். பொடியன் பயமில்லாமல் நேர குடுத்திட்டார்.நானென்டால் தாரணிட்டக் கொடுத்து நிலாட்டக் குடுக்கச் சொல்லியிருப்பன். எதுக்கும் நிலா மறுத்தாலும் , தாரணி ஆறுதலாய் இருப்பா ...! உப்பிடித்தான் நடந்திருக்குப் போல Share this post Link to post Share on other sites
shanthy 1,194 Report post Posted March 5, 2014 காதல்கதையென்றபடியால் வாசகர்களையும் கவரும் கதையாக செல்லும். முதல் அத்தியாயம் சுமேயக்காவின் வளமையான காதல் ததும்பும் நினைவுகளைக் கொண்டு ஆரம்பித்திருக்கிறது. அடுத்த ஆளெப்ப ? கெதியில எழுதி முடிச்சிடுங்கோ மனிசரை காக்க வைக்காமல். இந்தக் கதையை எழுதி முடிய நூலுருவாக கொண்டு வரலாம். யாழில் எழுதப்பட்ட ஒரு வித்தியாசமான பதிவாகவும் செய்யலாம். சுமாரானவர்களைச் சுழட்ட நிறையப் பேர் அலைகின்ற ஊராக இருக்கின்றதே! இந்த ஊரில் காக்கைகள்தான் கிளிகளோ காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு அதுமாதிரிதான் காதலிலும். காதலுக்கு கண் இல்லையென்று இதாலை சொல்லிச்சினமோ தெரியேல்ல. படம்காட்டும் அந்த நிலாவுக்கு எந்த பியூட்டிபாலரிலை மேக்கப் போட்டது.? மெழுகு பூசினமாதிரி நிலாவைவிடவும் பளபளப்பாக ஒளிருதே..!! எனது பேனா கிறுக்குவதற்கு நிலவு ஒளி போதுமா? பார்க்கலாம்!!. இப்பதானே குறைந்த மின்சாரத்தில் கூடிய ஒளியைப்பெறக்கூடிய வசதிகள் இருக்கிறது நீங்கள் யோசிக்காமல் பேனையை எடுங்கோ. Share this post Link to post Share on other sites
மெசொபொத்தேமியா சுமேரியர் 1,682 Report post Posted March 5, 2014 அடுத்த பகுதியை புங்கையூரன் தருகின்றார். Share this post Link to post Share on other sites
புங்கையூரன் 3,630 Report post Posted March 5, 2014 அடுத்த பகுதியை புங்கையூரன் தருகின்றார். புங்கை அடுத்த பகுதியை, உங்கடை கதைக்குக் கீழையே 'தந்திட்டார்' ! Share this post Link to post Share on other sites
விசுகு 3,523 Report post Posted March 5, 2014 நன்றி புங்கையண்ணா அந்தமாதிரி பல மைல் கீழிறங்கி யோசித்தள்ளீர்கள் அந்த நாளைய ஆட்டங்களின் மீள் ஓட்டம் போலும் தொடருங்கள் புங்கையண்ணா இன்னும் மேலே தள்ளி மெருகூட்டியுள்ளார். Share this post Link to post Share on other sites
மெசொபொத்தேமியா சுமேரியர் 1,682 Report post Posted March 5, 2014 உண்மையில் நாள் கதை எழுதும்போது ஒரு கதையாகவே எழுதினேனே தவிர பழையன பற்றி நினைக்கவே இல்லை. புங்கை எழுதியதாய் வாசிக்க பழசுகள் நிறைய ஞாபகம் வந்திட்டுது. சிரிச்சு வயிறு நொந்துபோச்சு. இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம் புங்கை. அவ்வளவு ரசனையாய் எழுதியிருக்கிறீர்கள் Share this post Link to post Share on other sites
முதல்வன் 30 Report post Posted March 5, 2014 புங்கை அண்ணா இது கவிதையா கதையா என்று என் மனம் விவாதிச்சே ஒரு மணி நேரம் ஓடிவிட்டது. அவ்வளவு 'கவித்துவமாக' இருக்கிறது உங்கள் கதை. உங்கள் உவமானங்கள் 'சனிக்கிழமை காகம்', 'காளீ பக்தன்', 'யாழ்ப்பாணத்து காவோலைகள்', 'படிப்பு சோறு ' உங்கள் கதையை எங்கையோ கொண்டு செல்கின்றன. இந்த கதை முடியக்கூடாது என்று, சிறுவயதில் ஒரு ரூபாய்க்கு வாங்கிய 100 'பல்லி முட்டை' இனிப்பை ஒவ்வொன்றாக சாப்பிடுவது போல என் மனம் ஏங்கியது. தொடரும் என்று கண்ட போது, சூப்பி முடிந்த 50 சத ஐஸ்பழம் வாயிலே இனிக்க 'தடியை நக்கி கொள்ளும்' மனசைப்போல ஆகிவிட்டது என் மனசு. நன்றிகள் உங்கள் 'அருமையான' எழுத்துக்கும் நேரத்துக்கும். 1 Share this post Link to post Share on other sites
suvy 5,118 Report post Posted March 5, 2014 கலக்கிட்டீங்கள் புங்கை....! அடுத்தது யார்....எப்ப...எப்ப...! ஸ் ஸப்பா.! Share this post Link to post Share on other sites
தமிழினி 512 Report post Posted March 5, 2014 சுமோக்காவும் புங்கையூரான் அண்ணாவும் நன்றாக எழுதியுள்ளீர்கள். கதை நன்றாக செல்கின்றது. அடுத்த அத்தியாயத்திற்காக காத்திருக்கின்றோம். Share this post Link to post Share on other sites
ஆரதி 336 Report post Posted March 5, 2014 கதையை நகர்த்தும் விதம் மிக அழகு. கெதியாய் தொடருங்கள், வாசிக்க மிக ஆவல்!! Share this post Link to post Share on other sites
sOliyAn 578 Report post Posted March 5, 2014 புங்கையூரன், கதை நன்றாக உள்ளது. பாராட்டுகள்!! Share this post Link to post Share on other sites
Sasi_varnam 757 Report post Posted March 5, 2014 பூங்கையூரான் .. பிரமாதம்.. ’பிள்ளை, ஏலுமெண்டால் தாரணியையும் கூட்டிக்கொண்டு போவன்...ஆமிக்காரரும் அதுவுமா ஊரெல்லாம் கெட்டுப் போய்க்கிடக்குது...’ ..கதையின் பாதையை மாற்றக்கூடிய வரிகளை பதிந்து இருக்கிறீர்கள் ~ Action starts here; is it? Share this post Link to post Share on other sites