Jump to content

இந்த வார ராசி பலன்(7.3.2014 முதல் 13.3.2014 வரை)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

19-1366353154-meyam-rasi-12-600.jpg

 

மேஷம்

 

பொது:

 

திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே வெற்றி பெறும். வீடு மாற்ற இது உகந்த வாரம். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சியை தள்ளிப்போடவும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம்.

 

பெண்களுக்கு:

 

கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை சுமாராகத் தான் இருக்கும். அதனால் கணவருடன் பேசுகையில் நிதானம் தேவை. சேமிப்பு செலவாகும். நீண்ட காலம் பார்க்காத உறவினர் வீடு தேடி வருவார்.

 

வேலை பார்ப்போருக்கு:

 

உயர் அதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். பணி நிமித்த பயணங்களால் நன்மை உண்டு. வேலை பளு அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு கடன் பாக்கி வசூல் ஆகும். 

 

 

19-1366353204-rishabam-rasi-600.jpg

 

ரிஷபம்

பொது:

 

நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. குதூகலமாக காணப்படுவீர்கள். உங்கள் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கடன் பாக்கிகளை திருப்பிக் கொடுப்பீர்கள்.

 

பெண்களுக்கு:

 

பெரியோரின் ஆசி கிடைக்கும். கணவரின் உடல் நலம் பாதிக்கப்படலாம். குழந்தைகள் நல்ல மதிப்பெண்கள் வாங்குவார்கள். சுப நிகழ்ச்சிகள் நல்லபடியாக நடக்கும்.

 

வேலை பார்ப்போருக்கு:

 

சிறப்பாக பணியாற்றி உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சிலருக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரிகள் திறமையாக செயல்பட்டால் லாபம் பெறுவர். 

19-1366353248-midhunam-rasi-56-600.jpg

 

மிதுனம்

 

பொது:

 

வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். நெருங்கியவர்களுடன் பகை ஏற்படலாம். பணப் புழக்கம் சுமாராகத் தான் இருக்கும். உடன் பிறப்புகளை அனுசரித்துச் செல்லவும்.

 

பெண்களுக்கு:

 

மனம் மகிழும் செய்தி கடிதம் மூலம் வரும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட்டு அல்லல்பட வேண்டாம். உறவினர்களுடன் மனம் திறந்து பேச வேண்டாம். குழந்தைகள் கேட்கும் பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள்.

 

வேலை பார்ப்போருக்கு:

 

கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பது நல்லது. சிலருக்கு எதிர்பார்த்தபடி கடன் தொகை கிடைத்து மகிழக்கூடும். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. வியாபாரிகள் கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. 

 

19-1366353278-kadagam-rasi-600.jpg

 

கடகம்

 

பொது:

 

பண வரவுக்கு குறைவிருக்காது. எடுக்கும் காரியங்களை முடிக்க அலைய வேண்டி இருந்தாலும் இறுதியில் நல்லபடியாக முடியும். நண்பர்களும், உறவினர்களும் பக்கபலமாக இருப்பார்கள். எதிரிகளின் பலம் குறையும்.

 

பெண்களுக்கு:

 

குல தெய்வ வழிபாடு செய்ய வெளியூர் சென்று வரக்கூடும். சுப காரியங்களை தள்ளிப் போடுவது நலம். குடும்பத்தில் ஏற்படும் சிறு, சிறு பிரச்சனைகளை நீங்களே சமாளித்துவிடுவீர்கள். குழந்தைகளின் உடல் நலனில் கவனம் செல்லும்.

 

வேலை பார்ப்போருக்கு:

 

திறம்பட வேலைகளை செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். சிலருக்கு எதிர்பார்த்தபடி பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு தொழில் நன்றாக நடக்கும். 

19-1366353318-simmmam-rasi-2-600.jpg

 

சிம்மம்

 

பொது:

 

புதிய வீடு கட்டும் முயற்சியில் ஈடுபட உகந்த வாரம் இது. குடும்பத்தாருடன் சுற்றுலா சென்று வரக்கூடும். முகத்தில் புதுப் பொலிவு ஏற்படும். நீண்ட காலமாக சந்திக்காத நண்பரை சந்தித்து மகிழக்கூடும்.

 

பெண்களுக்கு:

 

கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். மகன் அல்லது மகளுக்கு புதிய வேலை கிடைக்கலாம். யாருடனும் வீண் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். குழந்தைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.

 

வேலை பார்ப்போருக்கு:

 

உங்கள் பொறுப்பில் உள்ள பணத்தை பத்திரமாக வைத்துக் கொள்ளவும். சிலருக்கு ஊதிய உயர்வு கிடைத்து மகிழக்கூடும். எந்த ஒரு வேலையையும் பிறகு செய்யலாம் என்று நினைக்க வேண்டாம். வியாபாரிகளுக்கு வேலை பளு அதிகரிக்கும். 

19-1366353352-kanni-rasi-12-600.jpg

 

கன்னி

 

பொது:

 

உடல் நலம் சிறப்பாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். எடுக்கும் காரியங்களை தடைகளைத் தாண்டி வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிலும் நிதானத்துடன் இருப்பீர்கள்.

 

பெண்களுக்கு:

 

குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடத்த முயற்சி செய்வீர்கள். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். உறவினர்களை அனுசரித்துச் செல்வீர்கள். சமையல் அறையில் வேலை செய்யும்போது கவனமாக இருக்கவும்.

 

 

வேலை பார்ப்போருக்கு:

 

சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு ஊதிய உயர்வும், விரும்பிய இடத்திற்கு மாற்றமும் கிடைக்கலாம். அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். வியாபாரிகள் லாபம் பெறுவர். 

 

19-1366353398-thulam-rasi-12-600.jpg

 

துலாம்

 

பொது:

 

பொருளாதாரம் மேம்படும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நினைத்தபடியே நடக்கும். உங்களின் பேச்சால் பிறரைக் கவர்வீர்கள். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

 

பெண்களுக்கு:

 

குடும்பத்தாரிடையே உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் மருத்துவ செலவு குறையும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கணவர் பாசமாக இருப்பார்.

 

வேலை பார்ப்போருக்கு:

 

கொடுக்கும் வேலைகளை குறித்த நேரத்திற்குள் செய்து முடிப்பீர்கள். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். அடுத்தவர்களின் குடும்ப விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரிகள் தொழிலை விரிவுபடுத்த இது உகந்த வாரம். 

19-1366353439-ciruchigam-rasi-2600.jpg

 

பொது:

 

மனம் மகிழும் செய்தியைக் கேட்பீர்கள். யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். சிலர் புனித யாத்திரை செல்லக்கூடும். தேவையில்லாத பயணங்களை தவிர்ப்பது நல்லது.

 

பெண்களுக்கு:

 

கோபத்தை குறைத்துக் கொள்ளவும். வீண் செலவுகளை தவிர்க்கவும். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். சுபகாரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும்.

 

வேலை பார்ப்போருக்கு:

 

பண வரவு நன்றாக இருக்கும். உயர் அதிகாரிகளுடன் மோதல் வேண்டாம். எதிலும் பொறுமையாக இருக்கவும். வியாபாரிகள் லாபத்தை அள்ளுவார்கள்.

19-1366353472-dhanusu-12-600.jpg

 

தனுசு

 

பொது:

 

சமுதாயத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உறவினர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்வீர்கள். தீய நட்பில் இருந்து விலகியே இருக்கவும். பண வரவு திருப்திகரமாக இருக்கும்.

 

பெண்களுக்கு:

 

சமூக சேவையில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தார் சந்தோஷமாக இருப்பார்கள். அதை பார்த்து நீங்கள் மகிழ்வீர்கள். உணவு விஷயத்தில் கவனம் தேவை.

 

வேலை பார்ப்போருக்கு:

 

வேலையில் கூடுதல் கவனம் தேவை. இல்லை என்றால் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். சக ஊழியர்களை பற்றி யாரிடமும் குறை கூற வேண்டாம். வியாபாரிகளுக்கு லாபத்திற்கு குறைவிருக்காது.

19-1366353502-magaram-rasi-2-600.jpg

 

மகரம்

 

பொது:

 

சமுதாயத்தில் பெரிய மனிதரின் நட்பு கிடைக்கும். யாருக்கும் உங்கள் பெயரில் கடன் வாங்கிக் கொடுக்க வேண்டாம். தேவையில்லாத விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. கடன் தொல்லைகள் தீரும்.

 

பெண்களுக்கு:

 

உடல் நலம் பாதிக்கப்படக்கூடும். கணவரிடம் பாராட்டு பெறுவீர்கள். உறவினர்கள் பாசமாக இருப்பார்கள். குழந்தைகளால் பிரச்சனை இருக்காது.

 

வேலை பார்ப்போருக்கு:

 

கால, நேரம் பார்க்காமல் கடுமையாக உழைப்பீர்கள். உயர் அதிகாரிகள் பாராட்டக்கூடும். சக ஊழியர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரிகளுக்கு உள்ள முக்கிய பிரச்சனைகள் தீரும். 

 

19-1366353547-kumbam-rasi-600.jpg

 

கும்பம்

 

பொது:

 

தடைகளை தகர்த்தெறிவீர்கள். பண வரவு அதிகரிக்கும். உடல் நலம் மேம்படும். பூர்வீக சொத்துகளால் நன்மை அடைவீர்கள். நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள்.

 

பெண்களுக்கு:

 

கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை சுமாராகத் தான் இருக்கும். குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கப்படலாம். பணக் கஷ்டம் இருக்காது. குடும்பத்தாரை அனுசரித்துச் செல்லவும்.

 

வேலை பார்ப்போருக்கு:

 

உயர் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். அலுவலகத்தில் குடும்ப விஷயங்கள் பற்றி பேச வேண்டாம். எதிலும் நிதானமாக இருக்கவும். வியாபாரிகள் புதிய முதலீடுகள் செய்யும்போது கவனமாக இருக்கவும்.  

 

 

19-1366353585-meenam-rasi--600.jpg

 

 

மீனம்

 

பொது:

 

பேச்சில் நிதானம் தேவை. ஆன்மீகத்தில் கவனம் செலுத்தவும். தடைகளைத் தாண்டி காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். பண வரவு சீராக இருக்கும்.

 

பெண்களுக்கு:

 

வாழ்க்கை மீது சலிப்பு ஏற்படலாம். கணவர் அன்பாக இருப்பார். குழந்தைகளால் பிரச்சனை ஏற்படக்கூடும். எதிர்பார்க்கும் நல்ல செய்தி உங்களை தேடி வந்து மகிழ்விக்கும்.

 

வேலை பார்ப்போருக்கு:

 

வேலை பளு அதிகரிக்கும். அதனால் ஓய்வின்றி உழைப்பீர்கள். பிறகு செய்யலாம் என்று நினைத்த வேலை ஒன்றை உடனே செய்து முடிக்க வேண்டி இருக்கும். வியாபாரிகள் வருமானத்தை பெருக்க முயற்சிப்பீர்கள். 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வீடு ஒன்று கடுறதா , பார்க்கிறதா என்டு குழப்பமாய்க் கிடக்கு...! :lol:

 

இணைப்புக்கு நன்றி முதல்வன்...! :)

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.