Jump to content

இந்த வார ராசி பலன்(14.3.2014 முதல் 20.3.2014 வரை)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

19-1366353154-meyam-rasi-12-600.jpg

 

மேஷம்

 

பொது:

 

பணப் பிரச்சனை தீரும். எதிரிகளின் பலம் குறையும். சிலர் புனிதப் பயணம் சென்று வரக்கூடும். உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்படலாம்.

 

பெண்களுக்கு:

 

வீட்டுக்கு தேவையான அதிநவீன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். குழந்தைகளின் நலனில் கவனம் செல்லும். உடல் நலனில் கவனம் தேவை. 

 

வேலை பார்ப்போருக்கு:

 

கொடுக்கும் வேலையை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைத்து மகிழக்கூடும். சக ஊழியர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரிகளுக்கு தொழில் நன்றாக நடக்கும்.

 

 

19-1366353204-rishabam-rasi-600.jpg

 

ரிஷபம்

பொது:

 

நண்பர்களும், உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். பண வரவுக்கு குறைவிருக்காது. வழக்குகள் சாதகமாக முடியும். புதிய முயற்சிகளில் ஈடுபடும் முன்பு நன்கு யோசிக்கவும்.

 

பெண்களுக்கு:

 

குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த முயற்சி செய்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். பெரியோரின் உடல் நலனில் கவனம் செலுத்தவும். 

 

வேலை பார்ப்போருக்கு:

 

சிலருக்கு பதவி உயர்வும், விரும்பிய இடத்திற்கு மாற்றமும் கிடைத்து மகிழக்கூடும். எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரிகளுக்கு தொழில் சுமாராகத் தான் நடக்கும்.

 

19-1366353248-midhunam-rasi-56-600.jpg

 

மிதுனம்

 

பொது:

 

திட்டமிட்ட வேலைகள் திட்டமிட்டபடி நடக்கும். குதூகலமாக காணப்படுவீர்கள். தேவையில்லாத பயணங்களை தவிர்க்கவும். உடன் பிறப்புகளுடன் பிரச்சனை ஏற்படலாம்.

பெண்களுக்கு:

 

குடும்பத்தார் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். பணப் புழக்கம் நன்றாக இருக்கும். இருப்பினும் செலவுகள் அதிகரிக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

 

வேலை பார்ப்போருக்கு:

 

வேலைகளை புரிந்து கொண்டு நிதானமாக செய்யவும். உங்கள் பொறுப்பில் உள்ள பணத்தை பத்திரமாக வைத்துக் கொள்ளவும். உயர் அதிகாரிகளின் ஆதரவு சுமாராகத் தான் இருக்கும். வியாபாரிகள் தற்போதைய பிரச்சனைகளை தீர்க்க முயற்சி செய்யவும்.

 

19-1366353278-kadagam-rasi-600.jpg

 

கடகம்

 

பொது:

 

எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். வர வேண்டிய பணம் தக்க சமயத்தில் வந்து சேரும். உங்கள் பேச்சால் பிறரைக் கவர்வீர்கள். நண்பர்களுடன் பொழுதை இனிமையாக கழிப்பீர்கள். 

பெண்களுக்கு:

 

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்களில் உங்களுக்கு வர வேண்டிய பங்கை பெற முயற்சி செய்வீர்கள். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். அதை பார்த்து நீங்கள் நிம்மதி அடைவீர்கள்.

 

வேலை பார்ப்போருக்கு:

 

சிலருக்கு இடமாற்றம் கிடைத்து பிரிந்த குடும்பத்தாருடன் சேர்ந்து வாழக்கூடும். வேலை பளு அதிகரிக்கும். சக ஊழியர்களின் குடும்ப விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரிகள் புதிய முதலீடுகள் செய்யக்கூடும். 

 

19-1366353318-simmmam-rasi-2-600.jpg

 

சிம்மம்

 

பொது:

 

சமுதாயத்தில் பெரிய மனிதர்களை சந்திக்கக்கூடும். பொருளாதாரம் மேம்படும். உறவினர்கள் பாராமுகமாக இருப்பார்கள். அதை பார்த்து கவலைப்பட வேண்டாம். மனக் கவலைகள் மாறும்.

 

பெண்களுக்கு:

 

கணவர் பாசமாக இருப்பார். நண்பர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். திடீர் செலவுகள் ஏற்படும். குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கப்படலாம்.

 

வேலை பார்ப்போருக்கு:

 

உயர் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். அதனால் எதிலும் பொறுமையாக இருப்பது நல்லது. சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கும்.

 

19-1366353352-kanni-rasi-12-600.jpg

 

கன்னி

 

பொது:

 

நடப்பவை நல்லவையாகவே இருக்கும். மனக் கவலைகள் மாறி மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். எதிரிகளும் நேசக்கரம் நீட்டுவார்கள்.

 

பெண்களுக்கு:

 

மகன் அல்லது மகளுக்கு திருமணம் செய்து வைப்பீர்கள். மருத்துவ செலவுகள் குறையும். உறவினர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள். உணவு விஷயத்தில் கவனம் தேவை.

 

வேலை பார்ப்போருக்கு:

 

உயர் அதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். எதிர்பார்த்தபடி பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். சக ஊழியர்களிடம் உங்களின் ரகசியங்களை கூற வேண்டாம். வியாபாரிகள் எதிலும் பொறுமையாக இருப்பீர்கள்.

 

19-1366353398-thulam-rasi-12-600.jpg

 

துலாம்

 

பொது:

 

நினைத்த காரியங்கள் நல்லபடியாக முடியும். சிலர் புதிய வீடு வாங்கி மகிழக்கூடும். சமுதாயத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். நெருக்கமானவர்களுடன் விரோதம் ஏற்படலாம்.

 

பெண்களுக்கு:

 

குடும்பத்தில் ஏற்படும் சிறு, சிறு பிரச்சனைகளை நீங்களே சாமர்த்தியமாக சமாளித்துவிடுவீர்கள். கடன் தொல்லைகள் தீரும். உடல் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். குழந்தைகள் கேட்கும் பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள்.

 

வேலை பார்ப்போருக்கு:

 

வேலையில் கண்ணும் கருத்துமாய் இருக்கவும். உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். வியாபாரிகள் கூட்டாளிகளுடனான பிரச்சனையை பேசித் தீர்க்கவும்.

 

19-1366353439-ciruchigam-rasi-2600.jpg

 

பொது:

 

ஆன்மீக பலம் அதிகரிக்கும். அரசு வழியில் நன்மை அடைவீர்கள். வருமானம் அதிகரிக்கும். ஆனால் புதிய முதலீடுகள் செய்வதில் அவசரம் காட்ட வேண்டாம். 

பெண்களுக்கு:

 

குடும்பம் குதூகலமாக நடக்கும். சிலர் புதிய வீடு வாங்கி குடியேறக்கூடும். குடும்பத்தார் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். குழந்தைகள் அதிக மதிப்பெண்கள் வாங்குவது மகிழ்ச்சி அளிக்கும்.

 

வேலை பார்ப்போருக்கு:

 

சிறப்பாக பணியாற்றி உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறக்கூடும். சிலருக்கு வெளியூருக்கு மாற்றம் கிடைக்கும். அலுவலகத்தில் குடும்ப விஷயங்கள் பற்றி பேச வேண்டாம். வியாபாரிகள் லாபம் பெறுவர்.

 

19-1366353472-dhanusu-12-600.jpg

 

தனுசு

 

பொது:

 

எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, உங்கள் பெயரில் கடன் வாங்கிக் கொடுக்கவோ வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். எதிலும் நிதானமாக இருப்பீர்கள். 

பெண்களுக்கு:

 

கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். சுப காரியங்கள் நடத்த ஏற்பட்ட தடைகள் விலகும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். உடல் நலம் நன்றாக இருக்கும்.

 

வேலை பார்ப்போருக்கு:

 

உங்களின் வேலைகளை உரிய நேரத்திற்குள் செய்து முடிப்பீர்கள். சிலருக்கு பதவி உயர்வுடன் ஊதிய உயர்வு கிடைத்து வெளியூருக்கு மாற்றலாகி செல்லக்கூடும். யாருக்கும் கேட்காமல் அறிவுரை வழங்க வேண்டாம். வியாபாரிகள் திறமையாக செயல்பட்டால் லாபத்தை அள்ளலாம். 

 

19-1366353502-magaram-rasi-2-600.jpg

 

மகரம்

 

பொது:

 

எதிலும் கவனமாக இருக்க வேண்டிய வாரம். நினைத்த காரியங்களை முடிக்க அலைய வேண்டி இருக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். இருப்பினும் சேமிக்க முடியாது.

 

பெண்களுக்கு:

 

கணவரின் உடல் நலம் பாதிக்கப்படலாம். வரவுக்கேற்ற செலவும் உண்டு. குல தெய்வ வழிபாடு செய்ய திட்டமிடுவீர்கள். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். 

 

வேலை பார்ப்போருக்கு:

 

பணி நிமித்தமாக வெளியூர் சென்று வரக்கூடும். பதவி உயர்வு பெற கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். உங்கள் பொறுப்பில் உள்ள ஆவணங்களை பத்திரமாக வைத்துக் கொள்ளவும். வியாபாரிகளுக்கு வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும்.

 

19-1366353547-kumbam-rasi-600.jpg

 

கும்பம்

 

பொது:

 

பிறர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். சிலர் புதிய வாகனம் வாங்கி மகிழக்கூடும். உடன் பிறப்புகள் உங்களுக்கு உதவி செய்வார்கள். மனதில் புது தெம்பு பிறக்கும்.

 

பெண்களுக்கு:

 

பண வரவு ஒரு பக்கம் இருந்தாலும், செலவுகளும் இருக்கும். மகான்களின் ஆசி கிடைக்கும். தடைபட்ட சுப நிகழ்ச்சிகள் நல்லபடியாக நடக்கும். மனம் மகிழும் செய்தியை கேட்பீர்கள்.

 

வேலை பார்ப்போருக்கு:

 

எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும். அலுவலக சூழலில் மாற்றம் ஏற்படும். சிலரின் கடின உழைப்புக்கு பரிசாக பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபகரமான வாரம்.

 

19-1366353585-meenam-rasi--600.jpg

 

 

மீனம்

 

பொது:

 

சமுதாயத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் படிப்படியாக அதிகரிக்கும். சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. உடன் பிறப்புகளுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்வீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்கையில் பெரியோருடன் கலந்தாலோசிக்கவும்.

 

பெண்களுக்கு:

 

புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். கணவர் பாச மழை பொழிவார். குழந்தைகளால் மகிழ்ச்சி அடையக்கூடும்.

வேலை பார்ப்போருக்கு:

 

நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்கவும். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். வியாபாரிகள் புதிய கூட்டாளிகளை பெற முயற்சி செய்வீர்கள்.

 

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.