Archived

This topic is now archived and is closed to further replies.

நிலாமதி

மலேசிய விமானம் - அமெரிக்க இழைஞன் புதிய தகவல்

Recommended Posts

மலேசிய விமானம் - அமெரிக்க இழைஞன் புதிய தகவல்!
 

 

 

மலேசிய விமானம் தொலைந்தது தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் அன்ரூ ஓட் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். விமானம் பறந்து கொண்டிருந்தபோது திடீரென பெரும் காற்றினால் தாக்கப்பட்டு கதவு திறந்திருக்கும், வெளியில் இருந்து காற்று வேகமாக உள்நுழைந்திருக்கும். சமகாலத்தில் உட்புற அமுக்கமும், வெளிப்புற அமுக்கமும் சேர பயணிகள் மயக்கமுற்றிருப்பார்கள், முற்றிலும் உடையாத நிலையில் விமானம் சுழன்று வேறு பாதைக்கு ஓடியிருக்கும்.

 
அறிவு மயங்கியவர்களால் எதுவும் செய்ய இயலாத நிலையில் விமானம் தறிகெட்டு ஓடி எங்கோ தொலைந்திருக்க வேண்டும்.

ஆகவேதான் தற்போது தேடப்படும் இடங்களுக்கு முற்றிலும் சம்மந்தமில்லாத இடத்தில் அது விழுந்திருக்க வேண்டும் என்றுள்ளார்.

அமெரிக்க விமானப்பகுதி அதிகாரிகளிடையே இவருடைய யோசனை அதிகூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.

நேற்று அமெரிக்க வேள் ஸ்ரீட் யேணல் விமானம் ராடரை விட்டு சுமார் நான்கு மணி நேரம் மேற்குப் புறமாக ஓடியிருப்பதாக தெரிவித்தது.

விமானத்தின் இயந்திரத்திற்குள் பொருத்தப்பட்டுள்ள ஜி.பி.எஸ் தரையுடன் கொண்ட தொடர்பு இவ்வாறு தெரிவிப்பதாக இயந்திரத்தை வடிவமைத்த நிறுவனம் கூறியிருந்தது.

நேற்று மாலையே மலேசிய அதிகாரிகள் இதை மறுத்திருந்தார்கள், ஆனால் இன்று இந்திய பெருங்கடற்பரப்பில் தேடுதல்கள் ஆரம்பித்துள்ளன.

கடந்த வெள்ளி இரவு 23.30 ற்கு சீனாவை சென்றடைந்திருக்க வேண்டிய விமானம் எட்டாவது நாளாக தேடப்படுகிறது.

விமானங்கள் காணாமல் போன வரலாற்றில் இது புதுமைமிக்க செய்தியாக இருக்கிறது.

 

 

தகவல்............செய்தி .

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க இந்தியா `லாக் டவுணி'ல் இருக்கும் இந்த நேரத்தில் கிடைத்திருக்கும் ஒரு தரவு, அதிர்ச்சியளிக்கிறது. ஊரடங்கு அமலில் மக்கள் அனைவரும் வீட்டுக்குள் உள்ள நிலையில், வீட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் குற்றங்களும் அதிகளவில் அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா, ``நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் வன்முறைகளும் இந்த ஊரடங்குத் தடைக்காலத்தில் அதிகளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பொதுவாக நாங்கள் பெண்களிடமிருந்து மின்னஞ்சல்கள் மூலமாகத்தான் புகார்களைப் பெறுகிறோம். இந்த ஊரடங்கு காலத்தில் அதிகளவிலான புகார்களை நாங்கள் பெற்று வருகிறோம். மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் நாடு முழுவதிலுமிருந்து 116 புகார்களைப் பெற்றிருக்கிறோம். ஊரடங்கின் முதல் 10 நாள்களில் மொத்தம் 257 புகார்கள் வந்துள்ளன. மார்ச் மாதத்தில் மட்டும் ஆணையத்துக்கு 69 குடும்ப வன்முறைகள் தொடர்பான புகார்கள் வந்துள்ளன. நாள் ஒன்றுக்கு குறைந்தது 2 புகார்கள் வருகின்றன. பெரும்பாலான புகார்கள், வேலைக்குச் செல்லாமல் வீட்டுக்குள் இருக்கும் ஆண்கள் தங்கள் மனைவிகளை அடித்துத் துன்புறுத்துவதாகவே இருக்கின்றன. பொதுவாகப் பெண்கள், கணவர் வீட்டில் கணவரால் தனக்குப் பிரச்னை என்றால் தங்கள் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள். ஆனால், தற்போதுள்ள சூழலில் அவர்களால் அதுவும் முடியாது. பெரும்பாலான பெண்கள் இதுபோன்ற புகார்களைக் காவல் நிலையத்தில் கொடுக்க பயப்படுகின்றனர். அதனால் எங்களிடம் புகார் அளிக்கின்றனர். அப்படி புகார் அளிப்பவர்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்து வருகிறோம். எங்களிடம் பெண்கள் நேரடியாகவோ, மின்னஞ்சல் வாயிலாகவோ தங்கள் புகார்களைப் பதிவு செய்யலாம். இந்த இக்கட்டான நேரத்திலும்கூட பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழ்த்தப்படுவது வேதனை அளிக்கிறது' என்று கூறியிருக்கிறார். மேலும், தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, `இந்தியாவில் இந்த ஊரடங்கு காலத்தில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 90 புகார்கள் பதிவாகியுள்ளன. அதற்கடுத்தபடியாக டெல்லியில் 30 புகார்களும் மஹாராஷ்டிரா மற்றும் பீகார் மாநிலங்களில் 18 புகார்களும் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் 11 புகார்களும் பதிவாகியுள்ளன. பதிவாகியுள்ள மொத்த புகார்களில் பெண்கள் உரிமை சம்பந்தப்பட்ட புகார்கள் 77, குடும்பப் பிரச்னைகள் குறித்த புகார்கள் 69, பெண்களை வீட்டில் துன்புறுத்துதல் குறித்த புகார்கள் 15 மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து 13 புகார்களும் பதிவாகியுள்ளன. https://www.vikatan.com/lifestyle/relationship/violence-against-womens-increases-during-these-lock-down-days
    • 'கொவிட்19 எனும் கொரோனா வைரஸை ஒன்றிணைந்து ஒழிப்போம், இதற்காக ஒத்துழைப்பு வழங்குவோம்' என்ற தொனிப்பொருளில், கிண்ணியா பொலிஸாரால், பிரதேசம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
    • Editorial   / 2020 ஏப்ரல் 03 , பி.ப. 12:38 - 0      - 15   கே.எல்.ரி.யுதாஜித் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன்  மேற்கொண்ட முயற்சியின் பலனாக, கனடா பாடுமீன் அமைப்பால், 1,000 குடும்பங்களுக்கான அரிசி பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் மட்டக்களப்பு மாநகர பிரதேசத்தில், 300 குடும்பங்களுக்கும் கரடியனாறு பிரதேசத்தில் 200 குடும்பங்களுக்கும், அம்பாறை மாவட்டத்தில் 521 குடும்பங்களுக்கும் உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.  அம்பாறை மாவட்டத்தில், ஆலயடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவிலும் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிலும் உள்ள 521 குடும்பங்களுக்கு, 900 ரூபாய் பெறுமதியான அரிசி பொதிகள், அதற்கான காசோலையை குறித்த பிரதேச செயலகங்களுக்கு, முதல்வர் தி.சரவணபவன் விஜயம் செய்து வழங்கிவைத்தார். http://www.tamilmirror.lk/அம்பாறை/கனடா-பாடுமீன்-அமைப்பால்-உலருணவுப்-பொதிகள்-வழங்கிவைப்பு/74-247890
    • இன்று  சமுதாயத்தில் யாராலும் காணப்படாமலும், ஒதுக்கப்பட்டும் இருக்கும் ஒரு சில சம்பவங்கள் தவறுதலாகவும், பற்றாக்குறையினால்  வந்தாலும். வேண்டுமென்றே இதற்குள் சிக்கவைக்கப்படும் சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வராமலே  தத்தளிப்பவர்கள் பலர்.  போனாலும் கிடைக்காமல் காத்திருந்து இறுதியில் அவமானத்தோடும், ஏமாற்றத்தோடும்   திரும்பியோரும்  உண்டு. போகாமல் விட்டோரும் உண்டு. இது நமக்கொன்றும் புதிதில்லை. 
    • திறமைக்கு எங்கு வரவேற்பு இருக்கிறதோ, அங்கே செல்வதுதான் நல்லது. வேண்டா விருந்தாளியாக இருப்பது முறுகலைத்தான் தரும்.