Jump to content

பருவத்தே பயிர் செய்யாது விட்டால்......


Recommended Posts

கணிதப்பாடத்தில் ஒரு சந்தேகம் தீர்க்கக் கேட்டுவந்தாள் சங்கீதா, யாரையுமே ஏறிட்டுப் பார்க்காத அழகுத் திமிரோடு, அவள் அறிவுத் திமிரும் சுடர்விட்டுப் பிரகாசித்தது. ஆனாலும் கணிதத்தில் வேங்கைப் புலியான சங்கரனிடம் சந்தேகம் கேட்கும்போது மட்டும், கிளிபோலக் கொஞ்சுவாள். சங்கரனுக்கும் தான் அழகன் என்ற திமிர் உண்டு. எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்காத திமிர். ஆனாலும்! சங்கீதாவிடம் மட்டும் அந்தத் திமிர் மோதமுடியாது வழிந்து நிற்கும். அதற்குக் காரணம் என்னவோ..? இருவருக்கும் ஒன்றாக அமைந்த அந்தக் குணாதிசயம்தான் காரணமோ..? ஆமாம்! எதிலும் அவசரமின்றி ஆறுதலாகக் கணக்கிட்டுக், காலையில் நித்திரையால் எழும் நேரம், படிக்கும் நேரம், குளிக்கும் நேரம். உணவு உட்கொள்ளும் நேரம். இன்ன உடைதான் இன்று என்று நேற்றே தீர்மானிக்கும் சுபாவம் போன்ற, இன்னோரன்ன செயற்பாடுகளிலும் ஒற்றுமை இம்மியளவும் குறைந்ததல்ல. இருந்தும்!, தங்கள் இருவருக்கும் உள்ள அந்த ஒற்றுமையை, இருவரும் அறிந்ததுமில்லை! பரிமாறிக்கொண்டதும் இல்லை!.

முன்னழகும் பின்னழகும், இடையழகும் நடையழகும் அவளை அவன் ரசிக்கத்தான் செய்தான். சுருண்ட கேசழகும், நிமிர்ந்த மார்பழகும், திரண்ட உடலழகும் ஆணழகன் நடையழகும் அவள் அவனை ரசிக்கத்தான் செய்தாள். அங்கு காதல் வந்ததா? இல்லை. காதலை அவர்கள் இருவருமே திட்டமிடவில்லை!!. ஆயிற்று! பல்கலைக்கழக வாசல் அவர்களுக்கும் திறந்துகொண்ட போதில்தான், தங்கள் வாழ்க்கையையும் திட்டமிடுவோமா? என்ற எண்ணம் இருவருக்கும் ஏற்பட்டது. காதலை இதயங்கள் பரிமாறின. அன்பு அபரிமிதமாக கட்டுக்கடங்காது அதிகரித்தபோது!... அதனைக் கட்டுக்குள் வைத்திருக்க இருவரின் இயல்பான தன்மையும் மூக்கணாங் கயிற்றைத் தேடியது. இருவருமே பேசிக்கொண்டனர். படிப்பு எதுவரையில் உள்ளதோ! அதுவரையில் படித்து முடித்துப் பட்டம் பெற்று, தொழில்பார்த்துப், பொருள்தேடிக், குடும்ப வாழ்விற்கு உற்ற அனைத்தும் ஆகிவந்து, போதும்! என்ற நிலை வரும் போதுதான் திருமணம்!! முடிவு இருவருக்குமே சம்மதம். அது ஆனந்தத்தையும் அமைதியையும் அளித்தது.

அவர்கள் திட்டங்கள் நிறைவேறிப் போதும்! என்ற நிலையும் வந்தது. பண்பாடு தவறாத ஆடம்பரமற்ற திருமணம். இருவர் மனமும் முன்பே தீர்மானித்து எடுத்த முடிவுதான். திருமணம் அவசியமா?..எதற்காகவோ! இரந்து யாசிப்பதுபோல் அவன் கேட்டான். முதன்முறையாகச் சங்கரின் மனம் அவள் மனத்தினின்றும் வேறுபட்டது. அவசியம்தான் என்றாள்!. முதன்முறையாக சங்கீதாவின் மனம் அவன் மனத்தினின்றும் வேறுபட்டது. திருமணம் முடிந்தது. முதலிரவு அறையும் திறந்து மூடியது. மல்லிகை வாசனை..... அவள் அவன் மடியில் சாய்ந்தாள். சந்தண வாசனை.... அவன் அணைப்பில் அவள் நுகர்ந்தாள். காமன் வந்து ஆசீர்வதிக்க! ஆடை ஆபரணங்கள் தடை நீங்கவேண்டும்!... தடைநீக்க ஆயத்தமானாள். அவன் அதைக் கண்டு ஏனோ கலங்கினான். ஏதையோ சொல்லமுடியாது தவித்தான். தவிப்பை மறைக்க நான் உதவட்டுமா? என்றான். இல்லை நானே.... நாணம்! ஆனாலும் அவன் இன்று என்னவன்தானே!! இருந்தும் அதை அவளே செய்தாள். அவன் அமைதியாகப் பார்த்திருந்தான். எழுந்தவள் சேலை விழுந்தது. ரவிக்கை கழன்றுவிடத், தொங்கி விழுந்தவை...?? வயிறுவரை சென்று தூங்கின!!. கண்ணாடி கழன்று மேசைக்குச் சென்றது. அதனைத் தொடர்ந்து தலையில் இருந்த விக்குடன், பளபளக்கும் பற்களும் கூடவே சென்றன. கண் ஒன்று..! நான் இங்கு இப்போது தேவை இல்லை என்று..! அதுவும் கூடச்சென்றுவிட, இவற்றையெல்லாம் எந்தச் சலனமும் இன்றிப் பார்துக்கொண்டிருந்த சங்கரன் அமைதியாக எழுந்தான். அவள் கைகளைப்பற்றி மன்னித்துவிடு! என்றான். சங்கீதா என்னிடம் அது இல்லை!!!. குணப்படுத்த இப்போது என்னிடம் இள இரத்தம் இல்லையாம். குணப்படுத்தாது விட்டால் உயிருக்கே ஆபத்தாம் நீக்கிவிட்டார்கள். இப்போ அது எல்லாமே செயற்கை. அவள் ஒருகண் அழுதது. அவன் இருகண்களும் கலங்கின. பால்போல் வெளுத்திருந்த அவன் மீசையில் கண்ணீர்த் துளிகள்பட, அது மேலும் பளபளத்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் அறிவியல்பகிர்வு.... இயற்கையின்  பருவ காலங்கள் போன்று மனிதருக்கும் உண்டு ...பருவத்தே பயிர் செய் என்பார்கள் சான்றோர்கள். இல்லாவிட்டால்  காலம் தப்பி பெய்த மழை போன்றது. எல்லாம் உரிய  காலத்தில்  நடக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

 

நல்லதொரு பகிர்வு

எனக்கு ஒரு ஆள் அடிக்கடி ஞாபகத்துக்கு வாறார்.... :lol:

நான் வரட்டே........ :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கதையல்ல  , பாடம்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நொந்து நூலாகிப் போனவனின்,

 

வெந்து போன நினைவுகள் ! :D

 

சரிம்மா... எனக்கு நீயும்... உனக்கு நானும் இருக்கிறமே ...!

அது போதும்....

 

எண்டு தமிழ்க்கதை மாதிரி, முடிக்கிறதை விட்டுட்டு......! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதாசிரியர் இன்னும் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடன் சில வாசர்களும் அங்கேயே..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

கதாசிரியர் இன்னும் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடன் சில வாசர்களும் அங்கேயே..! :lol::icon_idea:

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன்தோன்றி மூத்ததமிழின் மக்கள், இன்றும் உயிர்மூச்சுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் உறவே. :D:icon_idea:

Link to comment
Share on other sites

"விளங்கினாச்சரி" என்று நந்தன் கூறினார். மேலோட்டமாகப் பார்த்தவுடனேயே புரிந்துகொள்ளும்படி இதன் மூலத்தை அப்படியே எழுதியிருக்கலாம். எழுதியிருந்தால்! யாழிலிருந்தே என்னைத் தூக்கியிருப்பார்கள்!! அத்தனைக்கு ஆழமான ஊத்தைப் பகிடி அது. 'பருவத்தே பயிர்செய்' என்ற உண்மையும், பகிடிக்குள் புதைந்து கிடந்ததால்! ஊத்தைகளை வார்த்தைகளால் நீக்கி, வடித்து, இங்கு பதிந்தேன். :rolleyes:

மேலும் பின்னூட்டம் தந்த நிலாமதி, விசுகு, நந்தன், சுவி, புங்கையூரன், நெடுக்காலைபோவன் அனைவருக்கும் நன்றிகள் பல!!. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பான்ச் கதைக்கு, நானும் இந்த உண்மையை காலம் கடந்து உணர்ந்து கொண்டேன்.

Link to comment
Share on other sites

ரொம்பக் கொடுமைசார் இந்தக்கதை..!

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் இந்தக் கதையை ஏற்றுக்கொள்ளவோ ஜீரணிக்கவோ முடியவே இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்யோ வாணம்டா சாமி யாருக்கோ அடிபோடஎன்றே எழுதபட்ட கதைபோல் உள்ளது இந்த விடயங்களிலும் விஞ்ஞானம் புகுந்து விளையாடுது கதையாசிரியருக்கு தெரியவில்லை போல் உள்ளது கதையின்முடிவு மாத்தி எழுதுவது நல்லது .

Link to comment
Share on other sites

அய்யோ வாணம்டா சாமி யாருக்கோ அடிபோடஎன்றே எழுதபட்ட கதைபோல் உள்ளது இந்த விடயங்களிலும் விஞ்ஞானம் புகுந்து விளையாடுது கதையாசிரியருக்கு தெரியவில்லை போல் உள்ளது கதையின்முடிவு மாத்தி எழுதுவது நல்லது .

முடிவு உங்களை உறுத்துகிறது அதுவே உங்களை மாற்றத்தையும் தேடவைத்துள்ளது. அதையே நான் தேடுவதாகவும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். :)

Link to comment
Share on other sites

பாலைவனத்தில் கானல் நீர் என்றுமே பளபளப்பாக இருக்கும் . கதைக்கு வாழ்த்துக்கள் பாஞ்சு .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.