Jump to content

விமர்சனம் என்பதன் பொருள் என்ன?


Recommended Posts

விமர்சனம் என்பதன் பொருள் என்ன?

விவாதத்திற்கு உரிய விடயம்..... தலைப்பிற்கு உரியபடி உங்களுடைய வாதங்களும் விவாதங்களும் இருக்கட்டும். ஆக்கபுூர்வமாக விமர்சனம் செய்வது வளர்ச்சிக்கு என்று எடுத்துக் கொண்டால் இந்த யாழ்க்களத்தில் ஒரு படைப்பாளிக்கு நாங்கள் சிறந்த விமர்சனத்தால் அவர்களை வளர்க்கிறோமா?

Link to comment
Share on other sites

உருப்படியான தலைப்பைக் கண்டால் நிறையப்பேர்வழிகள் காணாமல் போய்விடுவார்கள் நீங்கள் எப்படி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படைப்பாளிகளை வளர்க்க நாங்கள் எத்தகைய விமர்சனங்களை வழங்கலாம் என்று எடுத்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன் ஆதிவாசி.

Link to comment
Share on other sites

விமர்சனம் என்ற சொல்லைக் கேட்கும்போது நம் மனதில் என்ன தோன்றுகின்றது? எங்களிடம் ஒருவர் வந்து " உங்கள் சிறுகதையைப் பற்றிய விமர்சனம் ஒன்று பத்திரிகையில் வந்துள்ளது." என்று கூறினால் எமது எண்ண ஓட்டங்கள் எவ்வாறிருக்கின்றன. இதைப் பற்றிக் சிறிது சிந்தித்துப் பார்த்தால் ஒரு உண்மை புரியும். அதாவது விமர்சனம் என்னும் போது "குறை சொல்வது " என்றே எம்மில் பலர் நினைக்கின்றனர். இந்த நிலைக்கு காரணம் என்ன? எம் சமூகத்தில் அரிதாகக் காணப்படும் விமர்சகர்கள். விமர்சனம் என்ற போர்வையில் படைப்பாளியை தரக்குறைவாகத் தாக்குதல் நல்லவிடயங்களைவிட்டுவிட்டு ஒரு குறையிருந்தால் கூட அதைகுத்திக்காட்டுதல் போன்றவற்றை விமர்சகர்கள் என்று தம்மை இனங்காட்டிக்கொள்வோர் செய்துவருகின்றனர். விமர்சனம் என்றால் யாரும் செய்யலாம் என்ற நிலைதான் இப்பொழுது காணப்படுகின்றது. ஆனால் விமர்சனம் செய்வது கதை சிறுகதை கவிதை மற்றும் கட்டுரை எழுதுவதைவிட கடினமான காரியம். ஒரு படைப்பை விமர்சனம் செய்யும்போது அதிலுள்ள நிறைகளை கண்டறிந்து அதைப் போற்றவேண்டிய அதேவேளையில் குறைகளை பக்குவமாக எடுத்துக்கூறவேண்டிய தேவையும் உள்ளது. நிறைகளை மட்டும் கூறும்போது அது விமர்சனம் ஆகா. வெறும் பாராட்டாகவே அதை எடுத்துக்கொள்ளமுடியும். அதைவிட வெறும் பாராட்டுக்களையே தெரிவித்தால் அது எந்த அளவுக்கு ஒரு படைப்பாளியின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்கின்றது என்பது கேள்விக்குறிதான். அதேவேளை குறைகளை மட்டும் சுட்டிக்காட்டினால் அதையும் விமர்சனம் என்று கொள்ள முடியாது. அதைவிட இது ஒரு படைப்பாளியின் முன்னேற்றத்தை மட்டுமல்ல முயற்சிகளையே தவிடுபொடியாக்கின்றது. இவையிரண்டையும் பார்க்கும் போது ஒரு விமர்சகரின் பொறுப்பு எவ்வளவு பெரியதென்று புரியும். அதவாது அந்தவிமர்சனம் பாராட்டுக்களை மட்டும் உள்ளடக்கி படைப்பாளியின் வளர்ச்சியை கட்டுபடுத்தாமல் இருப்பதோடு குறைகளை அதிகம் சொல்லி படைப்பாளியின் மனபலத்தை உடைக்காமலும் இருக்கவேண்டும். அதற்கு குறைகள் நிறைகள் இரண்டும் சமஅளவில் உள்ளதாகப் பார்த்துக்கொள்ளவேண்டும். மொத்தத்தில் விமர்சனம் என்பது ஒரு செயற்பாட்டுக்கு ஊக்கியாக இருக்கவேண்டுமே தவிர உறுத்தலாக இருக்கக்கூடாது. ஆனால் இந்தகாலத்தில் எமது சமூகத்தில் பெரும்பாலும் தனிநபர்த்தாக்குதல்களே விமர்சனங்களாக வருகின்றன என்பது வேதனைக்குரியது.

யாழ்களத்தைப் பொறுத்தவரையில் இங்கு சிறந்த படைப்பாளிகள் உள்ளனர். அவர்களைப் பாராட்டப் பலர் உள்ளனர். தனிநபர்த்தாக்குதல்களும் விமர்சனம் என்ற போர்வையில் நடைபெறுகின்றன. ஆனால் உண்மையான விமர்சகர்கள் எனக்குத் தெரிந்தவரையில் இல்லை. உண்மையில் இவ்வளவு கதையளக்கும் நானும் ஒரு சிறந்த விமர்சனத்தை இதுவரையும் வைக்கவில்லை. களத்தின் உறுப்பினர்களை உறவுகளாக நினைப்பதால் அவர்களின் மனம் புண்பட்டுவிடும் என்ற கவலைதான். ஆனால் மற்றவர்கள் புண்படாமல் வைப்பதுதான் விமர்சனம். அதற்கு சிறந்த பயிற்சி தேவை. ஆதிவாசி ஆரம்பித்த இந்தத் திரியாவது யாழ்க்களத்தில் சிறந்த விமர்சகர்களை உருவாக்கும் என்று நம்புகின்றேன். அவ்வாறு சிறந்த விமர்சனங்கள் வரும்போது நிச்சயம் சிறந்த படைப்புகளும் உருவாகும். :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமர்சனம் என்பதன் பொருள் என்ன?

விவாதத்திற்கு உரிய விடயம்..... தலைப்பிற்கு உரியபடி உங்களுடைய வாதங்களும் விவாதங்களும் இருக்கட்டும். ஆக்கபுூர்வமாக விமர்சனம் செய்வது வளர்ச்சிக்கு என்று எடுத்துக் கொண்டால் இந்த யாழ்க்களத்தில் ஒரு படைப்பாளிக்கு நாங்கள் சிறந்த விமர்சனத்தால் அவர்களை வளர்க்கிறோமா?

யாழ்கள உறுப்பினரின் ஒரு ஆக்கமதை எடுத்து விமர்சனம் ஒன்றை ஆரம்பியுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமர்சனம், திறனாய்வு என்பனவற்றை ஒன்றாகக் கருதுகிறீர்களா?

விமர்சனம் பொதுவாகப் பாவிக்கப்படலாம். ஒரு படைப்பாளியின் ஆக்கத்தையும் விமர்சிக்கலாம். ஒருவரின் கருத்தையும் விமர்சிக்கலாம்.

திறானாய்வு என்பது படைப்புக்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியது.

எனவே நீங்கள் விமர்சனம் என்பது எதைக் குறித்து என்று முதலில் தெளிவுபடுத்துங்கள்...

Link to comment
Share on other sites

விமர்சனம், திறனாய்வு என்பனவற்றை ஒன்றாகக் கருதுகிறீர்களா?

விமர்சனம் பொதுவாகப் பாவிக்கப்படலாம். ஒரு படைப்பாளியின் ஆக்கத்தையும் விமர்சிக்கலாம். ஒருவரின் கருத்தையும் விமர்சிக்கலாம்.

திறானாய்வு என்பது படைப்புக்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியது.

எனவே நீங்கள் விமர்சனம் என்பது எதைக் குறித்து என்று முதலில் தெளிவுபடுத்துங்கள்...

அதோடு இல்லாமல் தனிமனித நடவடிக்கைகளையும் விமர்சனங்களுக்குள் அடக்கலாம்... உதாரணமாக பில்கிளிங்டன், டயானா, சாள்ஸ் போண்றோர் பட்டது...!

Link to comment
Share on other sites

அதோடு இல்லாமல் தனிமனித நடவடிக்கைகளையும் விமர்சனங்களுக்குள் அடக்கலாம்... உதாரணமாக பில்கிளிங்டன், டயானா, சாள்ஸ் போண்றோர் பட்டது...!

யப்பா.....!!!

இப்படியெல்லாம் விமர்சனத்திற்குள் உட்பிரிவுகள் இருக்கின்றனவா?.......

ஆதிவாசியும் நல்ல விமர்சகனாக மாறலாம் என்று பார்த்தா நீங்கள் கொடுக்கிற ஆரம்பக்கோடுகளே ஆளை அசர வைக்குதப்பா.... இருந்தாலும் இவற்றைப்பற்றி அறியாமல் விடுவதாக உத்தேசம் இல்லை. கிருபன்ஸ் முதலில் திறனாய்வு என்பதை அடிப்படையாகக் கொண்டு எழுதக்கூடிய விமர்சனம் எப்படி அமையவேண்டும் அதற்கு ஏதேனும் வரையரை இருக்கிறதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்து எழுத வந்தமைக்கு முதலில் மன்னிப்புகேட்டுக் கொள்கிறேன். விமர்சனம் எப்படி அமையவேண்டும் என்று ஆராயமுன்பு இந்த யாழ்க்களத்தில் தென்படும் சில தவறுகளைத் திருத்தலாம் அல்லவா? குறிப்பாக செய்திக்களம் எத்தனைபேரால் அவதானிக்கப்படுகிறது. அங்கு செய்திகளை மட்டும் கருத்தாடுங்கள் இவைகளை முதலில் செயலில் கொண்டு வாருங்கள் அதன்பின் படைப்பாளிகளைத் திறனாய்வு செய்யலாம்.

Link to comment
Share on other sites

இதையேன் இங்க எழுதுகிறீர்கள்? நீங்க நிறைகுடம் வைத்து அழைத்தாலும் அந்தப்பகுதிகளுக்குள் வந்து ஆப்பிழுக்க நாங்க..... மன்னிக்கவேணும் அடியேன் ஆதிவாசி தயாரில்லை. (அந்த இடங்கள் ஆதிக்கு சேவ்ரி இல்லை)

Link to comment
Share on other sites

விமர்சனம் என்று வரும்போது படைப்புகளைத்தான் விமர்சனம் செய்யமுடியும். செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராயலாமே தவிர அதை விமர்சனம் செய்ய முடியாது. இங்கு செய்திகள் அவதானிக்கப்படுவதில்லையென்ற

Link to comment
Share on other sites

சுயிந்தா அழவேண்டாம் அங்க அம்புலி வருது.

சரி நாம எடுத்த விடயத்திற்கு வருவம். எங்கேப்பா தலை, கிருபன்ஸ் இந்தத் திறனாய்வு என்பதைப்பற்றி தெளிவான விளக்கம் தரமுடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கேப்பா தலை, கிருபன்ஸ் இந்தத் திறனாய்வு என்பதைப்பற்றி தெளிவான விளக்கம் தரமுடியுமா?

என்ன ஆதிவாசி, நம்மளப் பாத்தா பேராசிரியர் சிவத்தம்பி மாதிரியா இருக்கு?

தமிழில் பாண்டித்தியம் எல்லாம் நமக்குக் கிடையாது. எல்லோரையும் போல் எனக்கும் இது தாய்மொழி அவ்வளவே!

Link to comment
Share on other sites

கிருபன்ஸ் உங்களுக்குத் தெரிந்தவரை எங்களுக்குத் தெரிந்தவரை(தெரிந்தவரை என்பதற்காக தெரிந்தவர்களை இழுக்கக் கூடாது) ஆழமாகப் போகாமல் முடிஞ்சவரைக்கும் சிலவற்றை அறியத்தானே கேட்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமர்சனம் என்றால் ஒரு படைப்பைப் பற்றிய திறனாய்வு என்று கருதி கீழ் வரும் பந்திகளைப் படிக்கவும்..

தமிழ் விமர்சனத் துறையில் வெளியாகும் கருத்துக்களை அழகியல் விமர்சன முறை, மார்க்சிய விமர்சன முறை என்றெல்லாம் பிரிக்கலாம். இவற்றையும் தாண்டி அமைப்பியல் பார்வை, பின்நவீனத்துவப் பார்வை போன்ற போக்குகளும் உள்ளன. இவை எதிரெதிர் நிலைகளைக் கொண்ட விமர்சன முறைகள் என்ற எண்ணமும் உருவாக்கப்பட்டுள்ளது. விமர்சனத்தில் தத்துவ நிலைப்பாடு எடுப்பவர்கள் தங்கள் தத்துவத்திற்கு வெளியே நின்றுகொண்டு செயல்படுபவர்களை எதிரிகளாகவே தங்கள் அணியினருக்கு காட்ட முற்படுகின்றார்கள். தாங்கள் ஏற்று நிற்கும் தத்துவமே முழுமையானது என்றும், அதன் மூலம் மட்டுமே சமூக ஊனங்களுக்குப் பரிகாரம் காண இயலும் அல்லது அவற்றைப் புரிந்துகொள்ள இயலும் என்றும் தங்கள் அணியினரை நம்ப வைக்கும் கட்டாயத்தில் அவர்கள் இருக்கின்றார்கள். உலக அரசியல் அரங்கில் நிகழ்ந்த மாற்றங்கள் காரணமாக இந்த இறுக்கமான பார்வையைக் கொண்டு செலுத்த இயலாத நிலை இப்போது உருவாகிவிட்டது.

Link to comment
Share on other sites

அழகியல் விமர்சன முறை, மார்க்சிய விமர்சன முறை இவற்றையும் தாண்டி அமைப்பியல் பார்வை, பின்நவீனத்துவப் பார்வை போன்ற போக்குகளும் உள்ளன.

இந்த நான்கு பார்வைகளையும் உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் எப்படியான விடயங்கள் இவற்றை வேற்றுமைப்படுத்துகின்றன என்பதை இலகுவாகத் தருவீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகியல் விமர்சனம் படைப்பில் நிற்கும் பொருளைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றும் அது உருவத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுகின்றது என்றும் தொடர்ந்தும் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்திருக்கின்றது. அத்துடன் அழகியல் விமர்சகர்கள் என்று கருதப்படுபவர்கள் தங்களுக்குள் கொண்டிருக்குக் கருத்து வேற்றுமைகளைப் பற்றிக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமலே மார்க்சிய விமர்சகர்களால் முத்திரை குத்தப்பட்டு வந்திருக்கின்றார்கள்.

படைப்பில் பொருளை மட்டும் முன்னிலைப்படுத்டி விமர்சனம் செய்துகொண்டிருந்தவர்கள் காலப்போக்கில் தங்கள் விமர்சன மொழியில் உருவ நேர்த்தி, மொழியழகு, உத்திச் சிறப்பு என்றெல்லாம் சேர்த்துப் பேசத் தொடங்கிவிட்டார்கள்.

ஒரு விமர்சகனை எந்த அளவுகோலை முன்னிறுத்தி நாம் மதிப்பிட வேண்டும்? தத்துவம் தழுவி நிற்கும் விமர்சகன், தத்துவம் சாராத பொது அறிவாளியைவிடவும் கூடுதலான சமூக உண்மைகளை - ஊனக் கண்களுக்குப் புலப்படாமல் ஞானக் கண்களுக்கு மட்டும் புலப்படும் உண்மைகளை - கண்டுவிடித்துக் கூற இயலும் சாத்தியம் எந்த அளவுக்கு நிரூபணம் ஆகியிருக்கின்றது?

தத்துவப் பற்று இயக்கப் பற்றாக்வும் கட்சிப் பற்ராகவும் மாறும்போது ஞானக் கண் பெற்றவர்களால் சாதாரண மனிதன் அறிந்து வைத்திருக்கும் செய்திகளைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாத நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகியல் விமர்சன முறை, மார்க்சிய விமர்சன முறை இவற்றையும் தாண்டி அமைப்பியல் பார்வை, பின்நவீனத்துவப் பார்வை போன்ற போக்குகளும் உள்ளன.

இந்த நான்கு பார்வைகளையும் உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் எப்படியான விடயங்கள் இவற்றை வேற்றுமைப்படுத்துகின்றன என்பதை இலகுவாகத் தருவீர்களா?

சிறப்பு விவாதங்களுக்குள் எழுத ஆரம்பித்துவிட்டு இலகுவாகத் தாருங்கள் என்றால் எப்படி?? :?:

மண்டை விறைக்க வேண்டாமா?? :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலமையினாலோ, பெயர் உதிர்ப்புச் சாமார்த்தியங்களினாலோ தமிழ்ச் சூழலை மதிப்பிடவோ, தமிழ்ப் படைப்பாளிகளின் படைப்புத் திறனை அறிந்து அவர்களை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுபோகவோ, அச்சு இயந்திரம் கணந்தோறும் கக்கும் பக்கங்களிலிருந்து சாரமானவற்றைக் கண்டெடுத்து முன்னிலைப் படுத்தவோ இயக்கம் சார்ந்த விமர்சகளால் இயலவில்லை என்பதை தமிழ் விமர்சனச் செயல்பாடுகளை அறிந்தவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.

Link to comment
Share on other sites

என்ன செய்ய சிறப்பு விவாதத்தில் கேட்ட குற்றத்திற்கு இப்ப விறைக்கிறதே போதாதா?.... யாருடைய மண்டை விறைத்தாலும் பரவாயில்லை ஆனா ஆதியின் மண்டை விறைக்காத வகையில் விடயத்தைத் தந்தால் தொடர்ந்து இந்தக்களத்தில் கேள்விக்கணையோடு நிற்பேன். இல்லையென்றால் ஓடிவிடுவேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி.. நான் தந்தவை எங்கிருந்து சுடப்பட்டன என்று யாராவது கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் :!: (உதவாக்கரைப் புத்தகங்களைப் படிக்கும் என்போன்றவர்கள் யாவர் என்று கண்டுபிடிக்கத்தான் :idea: ) :arrow:

Link to comment
Share on other sites

புலமையினாலோ, பெயர் உதிர்ப்புச் சாமார்த்தியங்களினாலோ தமிழ்ச் சூழலை மதிப்பிடவோ, தமிழ்ப் படைப்பாளிகளின் படைப்புத் திறனை அறிந்து அவர்களை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுபோகவோ, அச்சு இயந்திரம் கணந்தோறும் கக்கும் பக்கங்களிலிருந்து சாரமானவற்றைக் கண்டெடுத்து முன்னிலைப் படுத்தவோ இயக்கம் சார்ந்த விமர்சகளால் இயலவில்லை என்பதை தமிழ் விமர்சனச் செயல்பாடுகளை அறிந்தவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.

இது இலகுவாகப் புரிகிறது

Link to comment
Share on other sites

சரி.. நான் தந்தவை எங்கிருந்து சுடப்பட்டன என்று யாராவது கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் :!: (உதவாக்கரைப் புத்தகங்களைப் படிக்கும் என்போன்றவர்கள் யாவர் என்று கண்டுபிடிக்கத்தான் :idea: ) :arrow:

அப்படியான உதவாக்கரைகள்தான் சில சமயங்களில் உன்னதமானவற்றைப் படைக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

அழகியல் விமர்சனம் படைப்பில் நிற்கும் பொருளைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றும் அது உருவத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுகின்றது என்றும் தொடர்ந்தும் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்திருக்கின்றது. அத்துடன் அழகியல் விமர்சகர்கள் என்று கருதப்படுபவர்கள் தங்களுக்குள் கொண்டிருக்குக் கருத்து வேற்றுமைகளைப் பற்றிக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமலே மார்க்சிய விமர்சகர்களால் முத்திரை குத்தப்பட்டு வந்திருக்கின்றார்கள்.

இந்தக் கூற்றைக் கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் கிருபன்ஸ்.

படிப்படியாகத்தான் வரவேணும் ஆதியோட அறிவு அந்தளவுக்குக்கு டியுூப் லைட்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழிலுள்ள விமர்சகர்கள் எப்போதும் குழுமனப்பாங்கினராகவே இருந்துள்ளனர்/இருக்கின்றனர். மார்க்சீய விமர்சகர்கள்/ எதிரானவர்கள் என்று பல முகாம்கள் உள்ளன (வழமையான குடுமி பிடிச் சண்டைகள்தான்). இதில் அழகியல் விமர்சகர்கள் என்பவர்களுக்குள்ளேயே வேற்றுமைகள் உள்ளன. இவை பற்றித்தான் நான் வாசித்த புத்தகம் சொல்கின்றது.

ஈழத் தமிழருக்குள்ளும் முற்போக்கு, பிற்போக்கு, நற்போக்கு என்று பிரிவுகள் இருந்தன. இப்போதும் அவர்களிம் வழித்தோன்றல்கள் இருக்கவே செய்கின்றார்கள்..

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.