Jump to content

லக்கிலுக்- உடனான சந்திப்பு : விளக்கம்


Recommended Posts

அன்பு நண்பர்களே, வணக்கம் சில நாட்களுக்கு முன் தமிழ்மணம் பதிவாளர்கள் சந்திப்பு ஒன்று சென்னையில் ஏற்பாடாகியிருந்தது. அதற்காகவும் வேறு சில பணிகளுக்காகவும் சென்னை சென்றிருந்த நேரத்தில் யாழ்கள உறுப்பினர் திரு.லக்கிலுக்கை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அது குறித்து நேற்று ஒரு பதிவாளர் இங்கு கிண்டல் தொனியில் பதிவு செய்திருந்தாகவும் அதை தான் நீக்க கோரியதாகவும் லக்கி என்னிடம் தொலைபேசியில் இரவு தெரிவித்தார். அந்த அன்பருக்கும் உறவுகளுக்கும் விளக்கம் அளிக்கும் முகமாகவே இந்த விளக்கம்.

1) லக்கியுடனான சந்திப்பு முன்பே முடிவு செய்யப்பட்டதல்ல

2)இந்த சந்திப்பு ஒரு உளப்பகையை முடிவுக்கும், ஒரு நட்பை துளிர்ப்புக்கும் வித்திட்டது

3) லக்கி எழுத்தில்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார். நேரில் இந்த பூனையும் பால் குடிக்குமா என்பதுபோல் அவ்வளவு அமைதி

4) இரண்டு நாட்கள் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு நாட்களும் அவரின் ஆச்சர்யம் என் வயது குறித்தே இருந்தது

5) திரு.பிரபாகரனை பற்றி விளிக்கும் போதெல்லாம் "தேசியத்தலைவர்" என்றே குறிப்பிட்டு என்னை மெய்சிலிர்க்க வைத்தார்

6) அர்ஜுன்,விஜயகாந்தை விட இந்தியப்பற்று அவருக்கு அதிகம் இருப்பதாக நான் கிண்டலாக கூறியதை ரசித்தார்

7) உண்மையில் தான் "ராஜாதிராஜா' என்கிற பெயரில் எழுதுவதில்லை என்றும்,அவர் யார் என்றும் அவரின் கருத்துகளில் தனக்கும் உடன்பாடில்லை என்றும் கூறினார்

உங்களை சந்தித்ததும் முகத்தில் மூன்று குத்துவிடவேண்டும் என்று நான் முடிவு செய்து இருந்ததை சொன்னதும், அமைதியாக கேட்டுக்கொண்டார் ஆனால் பிறகு தனது பதிவில் அதை கீழ்க்கண்டவாறு வெளியிட்டுள்ளார்.

//* என்னை நேரில் பார்த்ததுமே முகத்தில் மூன்று குத்து விட வேண்டும் என திட்டமிட்டிருந்ததாக ஒரு வலைப்பதிவாளர் என்னிடம் தனியாகத் தெரிவித்தார்.... அதிர்ஷ்டவசமாக குத்து எல்லாம் விடவில்லை....//

மனிதர்களை எழுத்தை கொண்டு எடை போடக்கூடாது எனும் உண்மையறிந்து ஊர் திரும்பினேன்.

குறிப்பு : அவ்வவ்போது "திடீர் விஜயகாந்தாக" மாற வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டேன்

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply

முத்து தமிழினி(தம்பி) நான் தான் ராஜாதி ராஜா.நான் கூட உங்களை பார்த்தேன்.பூங்காவிற்க்கு எதிரில் இருக்கும் பிஸ் என் எல் தானியங்கி தொலைபேசி கட்டணம் செலுத்தும் இடத்திற்க்கு அருகில் தான் நான் இருந்தேன். என்னை நீங்கள் கவனிக்கவில்லையா? :D

Link to comment
Share on other sites

நண்பர்களே...யாழிலும் உள்ள பலர் தமிழ்மணத்தில் உறுப்பினர்கள் தான்..அந்த வகையில் தமிழ்மண ஒன்று கூடல் பற்றியதும்..அதன் தீர்மானங்கள் பற்றியும் இங்கு விரிவாக உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாமே..நிகழ்வுகள் பகுதியில்..!

Link to comment
Share on other sites

லக்கி எழுத்தில்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார். நேரில் இந்த பூனையும் பால் குடிக்குமா என்பதுபோல் அவ்வளவு அமைதி

:D:lol::lol:

திரு.பிரபாகரனை பற்றி விளிக்கும் போதெல்லாம் "தேசியத்தலைவர்" என்றே குறிப்பிட்டு என்னை மெய்சிலிர்க்க வைத்தார்

என்னுடன் தட்ஸ் தமிழ் காலத்திலிருந்தே பழகிவரும் நண்பர்களுக்கு இது தெரியும்.... :lol::lol:

அர்ஜுன்,விஜயகாந்தை விட இந்தியப்பற்று அவருக்கு அதிகம் இருப்பதாக நான் கிண்டலாக கூறியதை ரசித்தார்

என்னுடைய தேசியப்பற்று என் ஆசிரியர்கள் போதித்தது.... அது மாறுவதற்கு வாய்ப்பே இல்லை என நினைக்கிறேன்.... என் தேசத்தை நான் நேசிப்பது ஒன்றும் பாவம் இல்லையே....

மனிதர்களை எழுத்தை கொண்டு எடை போடக்கூடாது எனும் உண்மையறிந்து ஊர் திரும்பினேன்.

:lol::lol::lol:

நிறைய யாழ்கள நண்பர்கள் என்னை தனிமடலில் தொடர்புகொண்டு இதை எப்பவோ கண்டுபிடித்து விட்டார்கள்.... என்னுடைய யாழ்கள எழுத்துக்கள் பெரும்பாலானவை என் உள்ளத்தில் இருந்து வந்ததல்ல.... எதிர்வினை கருத்துக்கள் மட்டுமே....

என்னைப் பொறுத்தவரை யாழ்களத்தில் இந்தியத்தமிழர் - ஈழத்தமிழர் புரிந்துணர்வு இருக்க வேண்டும் என விரும்பினேன்....

என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை.... தம்பியுடையான் என்றொருவர் என்னிடம் அறிமுகப்படுத்திக் கொண்டபோது என் கையைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்...

ராஜா.... அவர் முத்து (தமிழினி) அல்ல..... :lol::lol::lol:

Link to comment
Share on other sites

ராஜா.... அவர் முத்து (தமிழினி) அல்ல.....

அப்படியா தவறாக எண்ணி விட்டேன். மற்றபடி தம்பியுடையானுக்கு என் மேல் அப்படி என்ன கோபம்? :D:lol::lol:

Link to comment
Share on other sites

என்னைப் பொறுத்தவரை யாழ்களத்தில் இந்தியத்தமிழர் - ஈழத்தமிழர் புரிந்துணர்வு இருக்க வேண்டும் என விரும்பினேன்....

அதை தான் அனைவரும் விரும்புவது. ஆனால் சில பேர் எழுதுவதை பார்த்தால் வெறுப்பாக இருக்கும்.. ஆனால் யாழ் களத்தில் முன்பு போல இந்திய எதிர்ப்பு இல்லை என்பதை என்னும் போது சந்தோசமாக இருக்கிறது

Link to comment
Share on other sites

அதை தான் அனைவரும் விரும்புவது. ஆனால் சில பேர் எழுதுவதை பார்த்தால் வெறுப்பாக இருக்கும்.. ஆனால் யாழ் களத்தில் முன்பு போல இந்திய எதிர்ப்பு இல்லை என்பதை என்னும் போது சந்தோசமாக இருக்கிறது

உண்மைதான் ராஜா....

அதுபோல எழுதுபவர்களும் கூட நாம் வேண்டுகோள் விடுத்தால் மாற்றி எழுதி விடுகிறார்கள்....

எனவே யாழுடன் இப்போது நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை....

நீங்கள் எனக்கு தனிமடல் இடும்போது நீங்களும் தமிழ் ஈழத்தை ஆதரிப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள்.... அதையும் தெளிவாகவே சொல்லி விடுங்கள்.... வீண் மனத்தாங்கல் நமக்குள் எதற்கு?

Link to comment
Share on other sites

அப்படியே ஆகட்டும்,, தனி தமிழ் ஈழமே ஒரே தீர்வு..இதை சொல்வதில் எனக்கு எந்த வித உறுத்தலும் கிடையாது.. எனக்கு விடுதலை புலிகள் மேல் எந்த வெறுப்பும் கிடையாது.. அவர்களே தமிழ்ர்களுக்கு ஒரே பாதுகாப்பு.. மேலும் தயா என்னும் தலை போன்றவர்கள் இந்தியா மேல் வைத்து இருக்கும் மரியாதை உண்மையில் மனதை நெகிழ வைக்கிறது. :D

உண்மைதான் ராஜா....

அதுபோல எழுதுபவர்களும் கூட நாம் வேண்டுகோள் விடுத்தால் மாற்றி எழுதி விடுகிறார்கள்....

எனவே யாழுடன் இப்போது நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை....

நீங்கள் எனக்கு தனிமடல் இடும்போது நீங்களும் தமிழ் ஈழத்தை ஆதரிப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள்.... அதையும் தெளிவாகவே சொல்லி விடுங்கள்.... வீண் மனத்தாங்கல் நமக்குள் எதற்கு?

Link to comment
Share on other sites

இது நல்லதொரு புரிந்துணர்வு.

இந்தியாவில் இருப்பவர்களுக்கு பேசி எமது நிலையை புரியவைக்கமுடியும். ஆனால் ஈழத்தில் பிறந்து அனைத்து பிரச்சினையும் தெரிந்தவகள், தெரியாது போல் எதிர்ப்பை மட்டுமே தெரிவிப்பவர்களுக்குதான் தெளியவைக்கமுடியாது.

"தூங்குபவரை எழுப்பலாம் துங்குவதுபோல் நடிப்ப்வர்களை" :? :? :?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய எதிர்ப்பு என்று நாங்களாக திருஸ்டித்துக் கொள்ளவில்லை நண்பர்களே!

எம் தவறுகளை நாங்களும், உங்கள் தவறுகளை நீங்களும் புரிந்து கொள்ளும்போது தானாகவே, அந்தப் பிரச்சனை முடங்கி விட்டது.

நீங்கள் தமிழ்மணத்தின் ஊடாக ஒன்று கூடியதில் மகிழ்ச்சி! காலம் சரிவரும் போது யாழ்கள உறவுகளாக ஒன்றிணைவோம் என நம்புவோமாக!

தம்பியுடையான், இதற்காக சென்னை சென்றீரா? அல்லது தற்செயலானது தானா?

Link to comment
Share on other sites

தமிழ்மணத்தினூடாக யாழ்கள உறுவுகளும் ஒன்று கூடியது மகிழ்ச்சி. அது நல்லதொரு புரிந்துண்ர்வுக்கு வித்திட்டது இன்னும் மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கால ஒருவர் பினாத்திறார்..! இப்படி தனி நபர்கள் பற்றி அரட்டை அடிக்கிறதுக்கு என்றுதான் ஒன்று கூடுவியள் என்று தெரிஞ்சுதான்..உதால எந்தப் பயனுமில்லை என்று தெரிஞ்சுதான்..தாயகத்தில போர்ச் சூழல் நிலவக் கூடிய சூழலில் பொங்கல் ஒன்று கூடல் அவசியமா என்று கேட்டம்..! இப்ப நிரூப்பிச்சிடியள்...ஒன்று கூடி திண்ணைப் பேச்சோட முடிச்சிருக்கிறியள் என்று..! எது எப்படியோ..ஒரு நாளைக்கு ஒரு திறமையான யாழ் கள ஒன்று கூடலைச் செய்யுது உருப்படியா ஏதாச்சும் நிறைவேற்ற முயற்சிப்பிப்பியள் என்ற ஒரு நம்பிக்கையிலதான் உங்களைக் கலாய்க்கிறது...! நல்ல ஒரு குறிக்கோளோட எப்போதாவது ஒரு ஒன்று கூடலை பகிரங்கமா அறிவிச்சு யாழ் களப் பொறுப்பாளரின் பிரச்சனத்தோடு செய்வீர்களோ...அப்ப குருவிகள் வருங்கள்...! அதுவரைக்கும் உங்கள் ஒன்று கூடல்களின் பலாபலன் என்பது இதுதான்..!

மேல எழுதினது யாரு தெரியுமில்ல நம்ம குருவீஸ் ஏன்பா தமிழ்மணத்துக்கு ஒரு நியாயம் யாழுக்கு ஒரு நியாயமோ!? ஓ தமிழ் மணத்தில குருவீசின்ர விஞ்ஞான செய்தியை போட்டதால வந்த நன்றி கருத்தோ!?

எனிவே,

லக்கியின்ட குறூப் அதாங்க வலைப்பதிவாளர்கள் குழு சந்ததில் நானும் மகிழ்வடைகின்றேன். ஆனால் இரட்டை கருத்து எழுதுபவர்களிடத்தில் லக்கியும் கொஞ்சம் கவனமாய் இருத்தல் நல்லது.

Link to comment
Share on other sites

பறவைகள்..யாழ் களம் என்பது வேறு...தமிழ்மணம் என்பது வேறு. தமிழ்மணம் என்பது வலைப்பூக்களை வரிசைப்படுத்தும் ஒரு தளம். அங்கு உங்கள் சொந்தக் கருத்தை சொந்த வலைப்பூவில்..நீங்களே எழுதிக் கொண்டிருப்பீர்கள்..! அதை நிர்வகிக்கும் பொறுப்பும் உங்களுடையதே..! தமிழ்மணம் என்பது அந்த வலைப்பூக்களையெல்லாம் தன்னிடத்தில் தாங்கி..அவற்றை வாசகர்கள் இலகுவாக அடைய வசதிசெய்தி கொடுக்குமிடம். அந்த வகையில் பல நூற்றுக்கணக்கானோரின் பதிவுகளை தன்மூலம் இணைத்துவிடும் அரிய பணியைச் செய்கின்றது. ஆரம்ப காலத்தில் இருந்தே வலைப்பூ பேணி வருபவர்களின் குருவிகளும் இடம்பெற்றிருப்பதால்..எங்கள் வலைப்பூவும் அங்கு இருந்திருக்கிறது..இருந்தும் வருகிறது..! அந்த வகையில் தமிழ்மணம் வழங்கும் சேவையினூடு தங்களிடையே அறிமுகமானவர்கள் சந்தித்துக் கொண்டு..பல வகையில் கருத்துக்களைப் பரிமாறி இருப்பது தமிழ்மணத்தின் சேவையை பலப்படுத்த உதவும்...பிரபல்யப்படுத்தும்..! அத்தோடு பல்துறை எழுத்தாளர்களையும் ஒருமிக்க ஓரிடத்தில் கூட்டியது அவர்களிடைய கருத்தாடல்கள் மூலம் பொது நிலைப்பாடுகளை எட்ட உதவும்..! வலைப்பூப் பதிவுகளின் தரமுயரவும்..தரமிடப்படவும் உதவும்..!

யாழ் களம் ஒரு கருத்துக்களம். அதாவது தனி ஒரு வலைப்பூ போன்றது. அதை நிர்வகிக்க சிலருக்கு மட்டும் உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் விருப்புவெறுப்புகளுக்கு ஏற்பவே கருத்துக்கள் இங்கு இடப்படும்..! பலதுறை எழுத்தாளர்களை உள்வாங்கி..அவர்களின் ஆற்றல்கள் எல்லாம் வெளிப்பட இங்கு இடமில்லை. அதுமட்டுமன்றி யாழ் களம் ஈழத்தமிழர்களையே அதிகம் தனக்குள் கொண்டுள்ளது. அவர்களின் கருத்துப்பகிர்வுகள் மூலம் சில செய்திகளை வெளி உலகுக்கு கொண்டு வர முயல்கிறது. இந்த நிலையில் யாழ் களத்திலின்றும் தமிழ்மணம் பாரிய அளவில் பன்முகப்படுத்தப்பட்ட நிலையில் பலதரப்பட்ட எழுத்தாளர்களையும் ஒருங்கிணைக்கின்ற இடமென்ற வகையில்..அதன் அங்கத்துவ வலைப்பதிவாளர்கள்..ஒரு ஒன்று கூடலைச் செய்திருப்பதென்பது உண்மையில் பாராட்டத்தக்க விடயம். பயனளிக்க கூடிய விடயம்..!

யாழ் களத்தில் உள்ளவர்கள் வெறும் கருத்தாடிகளாகவே அதிகம் உள்ளனர். அவர்கள் திறமையான ஆக்கங்களை எப்போதும் சுயமாக படைத்து வழங்குபவர்கள் என்பது கிடையாது. வெகு சிலரே அப்படிச் செய்கின்றனர்..! அந்த வகையில் இங்கு ஒரு ஒன்று கூடல் என்பது எதனடிப்படையில் எழுகிறது. வெறும் யாழ் களத்தில் அறிமுகமானவர்கள் என்ற வகையில்தானே அன்றி வேறில்லை..! அந்த ஒன்று கூடல்கள் என்பது எந்தளவுக்கு கருத்தாளர்களின் சுயபடைப்பாற்றல் குறித்து பேச விருத்தி செய்ய உதவிடும்..???! அப்படி உதவினாலும் கூட கள நிர்வாகம் அவை வெளிவர உதவிடுமா..???! இல்லை...!

லக்கி எழுதியதில் பாருங்கள்..அவர்களின் கலந்துரையாடல்கள் பல தளங்களில் இடம்பெற்றிருக்கின்றன..! காரணம்..பல தளங்களில் கருத்துக்களை..சுய ஆக்கங்களைப் படைப்பவர்கள்..சந்தித்து இருந்ததால்...! யாழ் களக் கலந்துரையாடல் என்பது இங்கு வைக்கப்படும் கருத்துக்களின் அடிப்படையில் அறிமுகமாகும் சிலர் தங்களைத் தாங்களே அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர் என்ற வகையிலையே இடம்பெறும். அதன் விளைவுகள் ஒன்றும் ஆரோக்கியமாக இங்கு வெளிப்படக் கூடிய நிலையில்லை. மீண்டும் நிர்வாகத்தின் விருப்பு வெறுப்புக்குள் தான் கருத்துக்களுடன் சுழல வேண்டும். ஆனால் தமிழ்மணத்தின் ஒன்று கூடல் என்பது வலைப்பதிவாளர்களின் பதிவுகளின் திறனை அதிகரிக்கக் கூடியவகையில் அமையலாம். அது வெளிப்படவும்..வாய்ப்பிருக்கி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

¾õÀ¢Ô¨¼Â¡ý எழுதியது:

லக்கி எழுத்தில்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார். நேரில் இந்த பூனையும் பால் குடிக்குமா என்பதுபோல் அவ்வளவு அமைதி

யோவ்வ்வ்... தம்பீஸ்! லக்கிக்கு பனம்பாலைக் குடுத்துப் பாரும், விளாசியிருப்பார்!! :lol:

லக்கியோ லக்கி ரசிகர்கள் இயக்கம்

லக்ஸம்பர்க்லக்கியோ லக்கி ரசிகர்கள் இயக்கம் சைட்...

உயிர் லக்கிக்கு

உடல் நமிதாவுக்கு

லக்கியோ லக்கி ரசிகர்கள் இயக்கம்

லக்ஸம்பர்க்

ஆஆஆஆ..... எங்க கொண்டு போய் தலையை முட்டுகிறது தெரியவில்லை??? :lol:

Link to comment
Share on other sites

எனக்கெண்டா யாழில ஈழத்தமிழருக்கும் இந்திய தமிழருக்கும் சண்டைகள் இல்லாம் இருக்கிறதுக்கு காரணம் புரிந்துணர்வில்லை....களத்தில் பலரை றோ காசு குடுத்து வேண்டிப் போட்டுது.

அதை புரிந்துணர்வு என்ற பெயரில பூசி மெழுகினம்.

இந்தியா இன்னமும் வல்லரசாக வில்லை சந்திரனில இந்தியன் காலெடி எடுத்து வைக்கவில்லை. அதுக்குள்ள தமிழ் மணத்தாருக்கு என்ன ஒன்று கூடல் வேண்டிக்கிடக்கு? சந்திரனில ஒன்றுகூடல் வைய்யுங்கோ நானும் வாறன்.

Link to comment
Share on other sites

தம்பியுடையான் , லக்கி லுக் சந்திப்பு மகிழ்ச்சியே!

நானும் ஓர்காலம் .......லக்கி & ராஜாதி ராஜாகூட சண்டை பிடிச்சவன் தான்....

பின்பு அது எல்லாம் காணாமலே போச்சு...

நீங்கள் மனதளவில் கூட எம் தேசத்துக்கு எதிரானவர்கள் இல்லையென்று தெளிவுபடுத்தியபின்..........

அது உளபூர்வமானதாயிர்க்கும்வரை.....

இனி மோதல் என்று நினைச்சும் பார்க்கமாட்டென்!

இந்தியாவுக்கு எதிராய் எந்த ஈழதமிழனும் இல்லை..........

இருக்கு என்று நீங்க நம்பினாலும்......

சிங்களவன் நம்பவே மாட்டான்!

இன்றுவரை எம்மை தன் தேச பிரஜைகளாக ஏற்றுகொள்ளவே இல்லை.........!!

ஒன்று தெரியுமா?

சிலங்காவின் ... அமைச்சர்கள் யார் என்பது ...

இன்றுவரை எம்மில் பலர் பெரிதாய் அறிந்ததில்லை.........

அறியவும் ஆசை இல்லை.......

ஆனால் தமிழ்நாட்டில் அரசியல் நடப்பு & எம் உறவுகள் பற்றி ஒரு கிராமபுற ஈழத்தவனும் தெரிந்து வைத்திருப்பான்.....

மனசால் அதுவே ........

எம் தந்தை நாடு .. அதுதான்!

Link to comment
Share on other sites

குருவிகள் ..........

''கூத்தடித்தல்''???

என்ன இது?

முதலில் எந்த இடத்தில் என்ன பேசுகிறோம் என்பதையும்.............

அதுக்கு அடுத்ததா .........

உங்களை நீங்களே கட்டுப்படுத்தி...........

கொஞ்சம் நாகரிகமா ..........

எழுத பழகுங்கள்!

Link to comment
Share on other sites

நோக்கமற்று கூடுதல் கொண்டாடுதல்.....கூத்தடித்தல் எனப் பொருள் படும்..! இதில அநாகரிக்கத்துக்கு எதுவுமில்ல..மிஸ்டர் வர்ணன் அவர்களே..! :wink: :P :idea:

Link to comment
Share on other sites

தமிழ் மணத்தை யாழில அறிமுகம் செய்ய கருத்து எழுதிய போது ,அது ஒரு குப்பை அங்கு யார் வேண்டுமானாலும் என்ன விதமாகவும் எழுதலாம் அது நாறுது என்று அன்று எழுதியவரின் குத்துக் கரணத்தைப் பாத்தால் சிரிப்பா இருக்குது.சீ சீ இந்த யாழ் பழம் புளிக்குது எண்டமாதிரி.

தமிழ் மணமும் யாழ்க் களமும் அடிப்படை நோக்கில் விதியாசமானவை.யாழ்க்களத்திற்

Link to comment
Share on other sites

அத்தோடு பல்துறை எழுத்தாளர்களையும் ஒருமிக்க ஓரிடத்தில் கூட்டியது அவர்களிடைய கருத்தாடல்கள் மூலம் பொது நிலைப்பாடுகளை எட்ட உதவும்..! வலைப்பூப் பதிவுகளின் தரமுயரவும்..தரமிடப்படவும் உதவும்..!

தமிழ்மணத்துக்கோ..அதில் உள்ள வலைப்பதிவுகள் யாவற்றுக்குமோ யாரும் நற்சான்றுதழ் வழங்கவில்லை இங்கு. அங்கு சில தரமான வலைப்பூப்பதிவுகளும் உண்டு. அவை பலராலும் காலத்துக்கு காலம் இனங்காட்டப்பட்டுள்ளன..! தமிழ்மணத்தின் பணியே சொல்லப்பட்டது. தங்களுக்கு ஏற்ப சிலர் கருத்துத் திரிவுகளை..குறைவான கண்ணோட்டத்தில் வைப்பதைக் கண்டிக்கின்றோம்..! :idea:

Link to comment
Share on other sites

பிரதி பண்ணி கலர் கலரா வாண வேடிக்கை காட்டாம நல்ல பதுவுகளும் இருக்குது என்று சொல்லி சில வலைப்பதிவுகளையும் இங்கு இணைத்த பொழுது தமிழ் மணம் நாறுது இந்தக் குப்பை எல்லாம் யாழ்க் களத்தில வேண்டாம் என்று எழுதியது யாழ்க் கள பொறுப்பளரா? இப்போது ஏன் யாழ் புளிக்குது, தமிழ் மணம் மணக்குது? நான் சிலருகுப் பதில் எழுதப் போக மாட்டன் என்ற அண்மைய அறிவுப்புக்கு என்ன நடந்தது? வெறும் வெத்துவெட்டுத் தானா?அதன் ஆயுளும் சில மணித் துளிகள் தானா? கண்டிச்சாப்போல சூரியன் நாளை விடியாதோ? ரொம்பத் தான் நினைப்பு .

யாழ்க் களத்திலும் தமிழ் மணத்தைப்போல் சிறந்த கருத்துக்களும் கருத்தாளர்களும் இருகின்றனர். நாகரிகம் அற்று மற்றவர் புண்படுத்தும் வண்ணமும், பொய்களால் புனைந்து எழுதுபவர்களும் இருகிறார்கள். அதற்காக எவ்வாறு யாழ்க்களம், தமிழ் மணத்தை விடக் கீழ் நிலையானதாக இருக்க முடியும். நாகரீகமான எழுத்து எழுதுபவர்களால் வருவது, அது யாழ்க் களம் என்றாலென்ன தமிழ் மணம் என்றால் என்ன ஒன்று தான்.

Link to comment
Share on other sites

தமிழ்மணத்துக்கோ..அதில் உள்ள வலைப்பதிவுகள் யாவற்றுக்குமோ யாரும் நற்சான்றுதழ் வழங்கவில்லை இங்கு. அங்கு சில தரமான வலைப்பூப்பதிவுகளும் உண்டு. அவை பலராலும் காலத்துக்கு காலம் இனங்காட்டப்பட்டுள்ளன..! தமிழ்மணத்தின் பணியே சொல்லப்பட்டது. தங்களுக்கு ஏற்ப சிலர் கருத்துத் திரிவுகளை..குறைவான கண்ணோட்டத்தில் வைப்பதைக் கண்டிக்கின்றோம்..! :idea:

யோவ் பொத்தய்யா வாயை இவரை வீட்டால் *** :evil: :evil: :twisted: :twisted:

***சில விடங்கள் நீக்கப்பட்டுள்ளது - மோகன்

Link to comment
Share on other sites

எங்களது சந்திப்பு உங்களுக்குள் மோதல் ஏற்படுத்துவது குறித்து வருத்தமே.....

யாழ்கள நண்பர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்வது என்பது கருத்துப் பகிர்வுக்கு, நட்பு வளர்ச்சிக்கு உதவும் என்பதே என் கருத்து....

நான் கருத்துக்கள (தமிழ்நாடு.காம்) நண்பர்களைச் சந்தித்தபோது எனக்கு விளைந்த நன்மைகளின் அடிப்படையிலேயே இதைச் சொல்கிறேன்....

Link to comment
Share on other sites

தம்பியுடையான், இதற்காக சென்னை சென்றீரா? அல்லது தற்செயலானது தானா?

ஆம் தூயவன் பயணத்திட்டம் வலைப்பதிவாளர் சந்திப்புக்காகத்தான் மேற்கொள்ளபட்டது. அப்படியே சில சொந்த வேலைகளயும் உருவாக்கிக்கொண்டேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களது சந்திப்பு உங்களுக்குள் மோதல் ஏற்படுத்துவது குறித்து வருத்தமே.......

ம்ம்ம்ம்..... என்ன செய்வது நம்முடன் அது ஊறிப்போய் விட்டது!!! மாற்ற முடியுமா???? :cry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.  
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.