• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

Athavan CH

மென்பொருள் அபிவிருத்தி துறை : இலங்கையின் எதிர்காலத்துக்கு வலுச்சேர்க்கும் 99X Technology

Recommended Posts

99X-Technology.jpg
 
 
மென்பொருள் அபிவிருத்தி செயற்பாடு என்பது சர்வதேச ரீதியில் ‘Agile’ எனும் முறையின் மூலம் புரட்சிகரமான மாற்றத்தை எதிர்கொண்ட வண்ணமுள்ளது. இந்த பாரம்பரியத்துக்கு மாற்றீடான திட்ட முகாமைத்துவ முறையானது, இலங்கையை சேர்ந்த சில தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மூலமாகவும் பின்பற்றப்பட்ட வண்ணமுள்ளது. 
தொழில்துறையில் பிரவேசிக்கும் முன்னர் இந்த அடிப்படை நுட்ப முறைகளை பற்றி தெளிவாக அறிந்து கொள்வதற்காக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மாணவர்களுக்கு இதன் முக்கியத்துவம் பற்றி 99X Technology  நிறுவனம், வர்த்தக முகாமைத்துவத்துக்கான தேசிய பாடசாலை (NSBM) உடன் இணைந்து ‘Towards Agile’ எனும் தலைப்பில் செயலமர்வு ஒன்றை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.
 
Agile மென்பொருள் அபிவிருத்தி கட்டமைப்பு என்பது உலகளாவிய ரீதியில் இன்றைய கால கட்டத்தில் பெருமளவில் உபயோகிக்கப்படும் முறையாக அமைந்துள்ளது. Agile குறித்த அடிப்படை விடயங்களை கம்பனியின் அனுபவம் வாய்ந்த குழுவினர், பங்குபற்றுநர்களுக்கு விளக்கமளித்திருந்தனர். அத்துடன், நாளாந்த செயற்பாடுகளில் இவற்றின் பயன்பாடு பற்றியும் விளக்கமளித்திருந்தனர். இவர்கள் Scrum எனும் முறையை அதிகளவு பிரயோகித்திருந்தனர். 
 
Agile ஐ அறிமுகம் செய்வதற்கு மிகவும் ,லகுவானதும், பிரபல்யமானதுமான முறையாக ,து அமைந்துள்ளது. இலங்கையில்  99X Technology மூலம் இந்த முறை பின்பற்றப்படுகிறது. 
 
விறுவிறுப்பானதும், மகிழ்ச்சியூட்டும் செயற்பாடுகளையும் கொண்ட இந்த செயலமர்வில்  99X Technologyநிறுவனத்தைச் சேர்ந்த அணியினர் பங்குபற்றுநர்களுக்கு செயற்பாட்டு முறைகளை தெளிவாக விளக்கமளித்திருந்தனர். 
 
அத்துடன், பாரம்பரிய அபிவிருத்தி முறைகளுக்கும் Agile Scrum முறைகளுக்குமிடையில் காணப்படும் வேறுபாடுகள் பற்றி தெளிவான விளக்கங்களை வழங்கியிருந்தனர். மேலும், செயலமர்வின் போது பங்குபற்றியவர்கள் வினா விடை நேரத்தின் போது, தமது சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.
 
 
இந்த செயலமர்வு  99X Technologyஇன் பல்கலைக்கழகங்களுடன் இணைக்கும் பகுதியான ‘Dotitude’ மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பிரிவின் பிரதான நோக்கம், பல்கலைக்கழக மாணவர்களுக்கு அவசியமான ஆளுமைகள், வாய்ப்புகள் மற்றும் அனுபவத்தை தகவல் தொழில்நுட்பத்துறையில் ஏற்படுத்திக் கொடுப்பதாகும். இதற்காக தொழிற்துறைக்கும் பல்கலைக்கழக கல்வி கட்டமைப்புக்கும் இடையில் கட்டமைப்பிலான ஒன்றிணைவை ஏற்படுத்திய வண்ணமுள்ளது.
 
இந்த முறை என்பது வௌ;வேறு பல முறைகளின் மூலமாக முன்னெடுக்கப்படுகிறது. மூன்று மாத காலம் முதல், ஒரு வருட காலம் வரையிலான விரிவுரைகள் கம்பனியின் ஊழியர்களின் மூலம் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படுகின்றன. இதில் பல்கலைக்கழக பாடவிதானத்துக்கு அமைவாக விரிவுரைகளை வழங்கல், செயலமர்வுகளையும் பாடநெறிகளையும் வௌ;வேறு பல்கலைக்கழகங்களிலும், உயர் கல்வியகங்களிலும் முன்னெடுப்பதுடன், மாணவர்களை கம்பனி வளாகத்துக்கு அழைத்து கல்விசார் சுற்றுலாக்களை வழங்குவது போன்றன இதில் உள்ளடங்குகின்றன. 
 
Agile Scrum  இலங்கையில் நிறுவப்பட்டது முதல், பல்வேறு விதமான நிகழ்வுகளையும் செயற்பாடுகளையும் காலாகாலமாக மேம்படுத்துவதில் 99X Technology ஈடுபட்டு வருகிறது. இதில் 2012 இல் ஸ்தாபிக்கப்பட்ட கொழும்பு Agile Camps  மற்றும் 2013 இல் இடம்பெற்ற Agile Conference என்பன இதில் உள்ளடங்கியுள்ளன. இலங்கையில் இடம்பெற்ற முதலாவது Agile Conference ஆக இது அமைந்திருந்தது. 
 
99X Technology என்பது மென்பொருள் பொறியியல் துறையில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் மூலம் உலகளாவிய ரீதியில் காணப்படும் சுயாதீன மென்பொருள் வழங்குநர்களுக்கு மென்பொருள் வடிவமைப்பு சேவைகள் வழங்கப்படுகின்றன.
 
ஐரோப்பிய பகுதியில் அதிகளவு வாடிக்கையாளர்களை இந்நிறுவனம் கொண்டுள்ளது. இலங்கையில் தலைமையகத்தை கொண்டுள்ள இந்நிறுவனம், நோர்வே நாட்டின் ஒஸ்லோ நகரிலும் காரியாலயத்தை கொண்டுள்ளது. இது வரையில் 150க்கும் மேற்பட்ட உயர்தரம் வாய்ந்த வர்த்தக மென்பொருட்களை விநியோகித்துள்ளது. 
 
2013ஆம் ஆண்டில் 99X Technology நிறுவனம் இலங்கையில் தொழில்புரிய சிறந்த 15 நிறுவனங்களில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டிருந்தது.
 

 

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • இருபத்திரெண்டாக காணப்படுகின்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை பத்தாகா குறைப்பதற்கான வேலைத்திட்டங்கள் தேசியத்தில் பேரினவாத சக்திகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில், நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையில் இருபத்திரெண்டு உறுப்பினர்களை பத்தாக குறைத்து பின்னர் அதனை அடுத்த தேர்தலில் ஆறாக மாற்றுவதற்கான வேலைகள் நடைபெறுகின்றன. இந்த சதி குறித்து நாம் தெளிவாக இருந்து கொள்ள வேண்டும். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மொட்டுக் கட்சியில் போட்டியிடும் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளர்களும் வெற்றிபெற மாட்டார்கள் என்பதனை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தற்போதைய நிலவரத்தின் படி பொருட்களுக்கான விலைவாசி மற்றும் வாழ்வாதார சிக்கல்கள் காரணமாக கிட்டத்தட்ட ஏழு இலட்சத்திலிருந்து எட்டு இலட்சம் வரையான வாக்குகள் மொட்டுக் கட்சியினர்களுக்கு குறைவடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே நாம் எதிர்கொள்ளவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரேயொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரைத்தான் வென்றெடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இதில் நாம் அனைவரும் சிந்தித்து செயற்பாட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/75844                  
    • (இராஜதுரை ஹஷான்) இராணுவ தளபதி சவேந்திர சில்வாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க விதிக்கப்பட்டுள்ள தடையினை ஆளும் தரப்பினர் பொதுத்தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்திக் கொள்வார்கள் என்று ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். சிறந்த அரசாங்கத்தை உருவாக்க தனக்கு வாய்ப்பளிக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிவேனவால் ஒருபோதும் குறிப்பிடமுடியாது. நல்லாட்சியின் நோக்கத்தை இவரே இல்லாதொழித்தார் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.   இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக பொதுஜன பெரமுனவினர் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தும் இன்று பொய்யாக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலை முழுமையாக தங்களின் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டார்கள். ஆட்சிக்கு வந்து ஒரு மாத காலத்தில் குண்டுத்தாக்குதலின் குற்றவாளிகளை கைது செய்வதாகவும் குறிப்பிட்டார்கள். ஆனால் மூன்று மாத காலத்தில் எவரும் கைது செய்யப்படவில்லை.  மத்திய வங்கியின் பிணைமுறி கொடுக்கல் வாங்கல்களையும் அரசியல் பிரசாரமாக்கினார்கள். தடயவியல் கணக்கறிக்கையில் கடந்த அரசாங்கத்தில் பங்குச்சந்தையில் அதிகளவில் மோசடி இடம் பெற்றுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளமையினால் இன்று பிணைமுறியை அரசியல் பிரசாரமாக்க ஆளும் தரப்பினர் விரும்பவில்லை. இராணுவ தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர்கள் அமெரிக்காவிற்கு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையினை அரசாங்கம் இராஜதந்திர மட்டத்தில் மாத்திரம் திருத்திக் கொள்ள வேண்டும். பொது தேர்தலில் இதனை ஆளும் தரப்பினர் முழுமையாக தங்களின் அரசியல் தேவைகளுக்காக பிரசாரமாக்கிக் கொள்வார்கள். சிறந்த அரசாங்கத்தை கட்டியெழுப்ப முடியாமைக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவரினாலேயே நல்லாட்சி அரசாங்கம் பலவீனமடைந்தது, தேவையற்ற விடயங்களுக்காக அரசாங்கத்துடன் முரண்பட்டுக் கொண்டார். அதனை எதிர்த்தரப்பினர் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு ஆட்சியை கைப்பற்றிக் கொண்டார்கள். மிக் விமான கொள்வனவு விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள உதயங்க வீரதுங்க டுபாய் நாட்டில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார். இன்னும் ஓரிரு நாட்களுக்குள் அவருக்கு பிணை வழங்கப்படும். ஆட்சி மாற்றத்தின் மாற்றங்களை மக்கள் இனியாவது புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் ரீதியில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. வெகுவிரைவில் ஜனாதிபதி அரசியல் ரீதியில் தனிமைப்படுத்தப்படுவார். அவருடன் சஜித் பிரேமதாஸவினால் மாத்திரமே இணைந்து செயற்பட முடியும் என்றார். https://www.virakesari.lk/article/75773  
    • அமெ­ரிக்கா முறை­யான பேச்­சுக்­களை அர­சாங்­கத்­துடன் மேற்கொள்ளவில்லை: இரா­ணுவத் தள­பதி விவ­காரம் தொடர்பில் அமைச்சர் கெஹ­லிய விசனம் (இராஜதுறை ஹஷான்) யுத்தக் குற்றச்சாட்டுக்கள்தொடர்பில் கிடைக்கப் பெற்றநம்பிக்கையான ஆவணங்களைக் கொண்டே இராணுவத் தளபதிக்கு அமெரிக்காவுக்குள் நுழையதடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா குறிப்பிடுவதுஇராஜதந்திர ரீதியான செயற்பாடல்ல. இவ்விடயம் தொடர்பில் அமெரிக்கா முறையான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவில்லை என்று அரசாங்க பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். இராணுவதளபதிசவேந்திர சில்வாவிற்கு விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை தொடர்பில் கருத்துரைக்கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்கா இராணுவதளபதிக்கு அந்நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதித்துள்ளமையானது இராஜதந்திர மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட தீர்மானமல்ல.  இவ்வாறானநிலையில் இரு நாடுகளும் இராஜதந்திரமட்டத்திலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும். ஆனால் அமெரிக்காஇவ்விடயம் குறித்து எவ்வித பேச்சுவார்த்தைகளையும் அரசாங்கத்துடன்முன்னெடுக்கவில்லை. யுத்தக்குற்றசாட்டுக்கள்தொடர்பில்கிடைக்கப் பெற்றநம்பிக்கையான தகவல்களை அடிப்படையாகக் கொண்டேபயணத்தடை விதிக்கப்பட்டுள்ளன என்று அமெரிக்கா குறிப்பிடுகின்றது. அவ்வாறாயின் அந்த ஆவணங்கள் தொடர்பில்அரசாங்கத்துடன் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்க வேண்டும் என்றார். இவ்விடயம் குறித்து இராஜாங்க அமைச்சர் மஹிந்தயாப்பா அபேவர்தன கருத்துத் தெரிவிக்கையில், யுத்தத்தை வெற்றிக் கொண்டவர்களுக்கு எதிராகசெயற்படுவது இலங்கை நாட்டை  அவதிப்பதாகவேகருத முடியும். பல்வேறு தேவைகளை கருத்திற்கொண்டு ஒரு தலைப்பட்சமாக செயற்பட முடியாது.நாட்டுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் நிறைவுபெறவில்லை என்பதற்கு இராணுவ தபளதிக்கு விதிக்கப்பட்டுள்ள அமெரிக்கபயணதடை ஒருசாட்சி. இவ்வாறான நெருக்கடியினை வெற்றி கொள்ள பலமாக அரசாங்கம் பொதுத்தேர்தலை தொடர்ந்து தோற்றம் பெற வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/75771  
    • "போர்க்குற்றவாளியான அமெரிக்காவால் இலங்கை மீது குற்றஞ்சுமத்த முடியது - கம்மன்பில (எம்.மனோசித்ரா) உலகிலேயே அதிகளவு போர்க்குற்றங்களைப் புரிந்திருக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கு இலங்கை மீது குற்றஞ்சுமத்த முடியாது. அத்தோடு எந்த நீதிமன்றத்தில் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் நீரூபிக்கப்பட்டுள்ளன என்று அமெரிக்காவிடம் கேள்வியெழுப்புவதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். " விடுதலைப்புலிகள் என்ற பயங்கரவாத அமைப்பை முற்றாக ஒழிக்கும் யுத்தத்தில் முன்னின்று செயற்பட்டமையையே யுத்தக் குற்றம் என்று அமெரிக்கா கூறுகின்றது. எவ்வாறிருப்பினும் தனக்கு அமெரிக்காவுக்குள் பிரவேசிக்கப்பட்டுள்ளமையால் எந்த நஷ்டமும் இல்லை என்று இராணுவத்தளபதி கூறியிருக்கின்றமை அமெரிக்காவுக்கு சிறந்தவொரு பதிலாக இருக்கும் என்றும் உதய கம்மன்பில மேலும் கூறினார். பத்தரமுல்லையில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/75821
    • இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தாபய தெரிவு செய்யப்பட்ட பின்னர் காணாமல்போகச்செய்யப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் மற்றும் அவர்களிற்கு ஆதரவாக செயற்படும்மனித உரிமை செயற்பாட்டாளர்களிற்கு எதிரான படையினரினதும் புலனாய்வு பிரிவினரினதும் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக சர்வதேச மனிதஉரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் வடகிழக்கின ஆறு பகுதிகளில் காணாமல்போனவர்களினது குடும்பத்தவர்களின் சார்பில் செயற்படும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அரசாங்கத்தின் கண்காணிப்பு நடவடிக்கையும் மிரட்டல்களும் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சமீபத்தை சந்திப்பொன்றிற்கு முன்னதாக காணாமல்போனவர்களின் தாய்மார்க ள் ஒவ்வொருவரிற்கும் ஆகக்குறைந்தது ஆறு தொலைபேசி அழைப்புகளாவது பல புலனாய்வு அமைப்புகளிடமிருந்து வந்துள்ளன  என மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தொலைபேசிகளில் தொடர்புகொண்டவர்கள் சந்திப்புகள் எங்கு இடம்பெறுகின்றன ,யார் ஏற்பாடு செய்துள்ளனர் போன்ற விபரங்களை கோரியுள்ளனர் எனஅவர் தெரிவித்துள்ளார். காணாமல்போனவர்களுடனான சந்திப்புகளில் பேசப்பட்ட விடயங்கள் என்னவென கேள்விஎழுப்பியுள்ளனர் என குறிப்பிட்டுள்ள மற்றுமொரு செயற்பாட்டாளர் எங்களால்எந்த திட்டங்களையும் முன்னெடு;க்க முடியவில்லை நாங்கள் அனைத்தையும் நிறுத்திவிட்டோம் என குறிப்பிட்டுள்ளார். காணாமல்போனவர்களின் உறவினர்கள் பல வருடங்களாக பதிலுக்காக காத்திருக்கின்றனர் என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின்  தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி ராஜபக்சாக்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வந்த பின்னர்  பாதுகாப்பு படையினர் காணாமல்போனவர்களின் உறவினர்களை அவர்களது கோரிக்கைகளை கைவிடுமாறு அச்சுறுத்துகின்றனர் என தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் இந்த துன்புறுத்தல்களை உடனடியாக நிறுத்தி காணாமல்போனவர்கள் குறித்து விசாரiணைகளை மேற்கொண்டு உறவினர்களிற்கு நீதி வழங்குவதாக ஐநாவிற்கு அளிக்கப்பட்ட உறுதிமொழியை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதி தேர்தலிற்கு பின்னர் சிஐடியினர் தனது வீட்டிற்கு தொடர்ச்சியாக வந்து செல்வதாக 2009 இல் தனதுமகனை பறிகொடுத்த தாய் ஒருவர் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்திற்கு தெரிவித்துள்ளார். அவர்கள் என்னிடம் வந்து யார் சந்திப்புகளிற்கு செல்கின்றனர் என கேட்கின்றனர், என தெரிவித்துள்ள அவர் யார் ஜெனீவாவிற்கு செல்கின்றனர் எனவும் இலங்கையின் குற்றப்புலனாய்வு பிரிவினர் கேள்வி எழுப்புவதாக தெரிவித்துள்ளார். இவர்கள் எங்கள் வீடுகளில் இருந்து வெள்ளை வானில் இழுத்துச்செல்லப்பட்டவர்கள் அல்லது இராணுவத்தினரிடம் சரணடைநதவர்கள் எ தெரிவித்துள்ள அவர் இவர்களை பற்றியே நான் கதைக்கின்றேன், எனது மகனிற்கு என்ன நடந்தது என்பதை நான் அறிய விரும்புகின்றேன்,அவர் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்பதை அறிய முயல்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். எனது மகன் உயிருடன் இல்லாவிட்டால் அவருக்கு என்ன நடந்தது?யார் அதனை செய்தார்கள், அவர் அடித்துக்கொல்லப்பட்டாரா அல்லது அடித்து முடமாக்கப்பட்டாரா என்பதையும் அறிய விரும்புகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னைய அரசாங்கத்தின் வெளிப்படையான சூழ்நிலை காரணமாக காணாமல்போனவர்களின் உறவினர்கள் வெளிப்படையாக பேசுவதற்கு முன்வந்தனர் என தெரிவித்துள்ள மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் இதனால் தற்போது படையினருக்கு தங்களை பற்றி யார் கதைக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் அச்சத்தில் உள்ளனர் என தெரிவித்துள்ளார். இலங்கையை பொறுத்தவரை பலவந்தமாக காணாமல்செய்யப்படுதல் என்பது  நீண்ட கால வரலாற்றை கொண்டதாக காணப்படுகின்ற நிலையில் தற்போதைய அரசாங்கம் இந்த விவகாரத்தினை சாதாரணமாக அலட்சியம் செய்வதற்கு அனுமதிக்ககூடாது எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையை அதன் சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றுமாறும், பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சிகளையும் பாதுகாக்குமாறும் ஐக்கியநாடுகளிற்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றுமாறும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் உறுப்புநாடுகள் பெப்ரவரியில் வேண்டுகோள் விடுக்கவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அரசாங்கம் இதனை நிறைவேற்ற தவறினால் சர்வதேச விசாரணைகளிற்கு வழிவகுக்ககூடிய நடவடிக்கைகளை மனித உரிமை பேரவை முன்னெடுக்கவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையில் காணாமல்போனவர்களின் உறவினர்களிற்கு தங்களின் குடும்பத்தவர்களிற்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கான உரிமையுள்ளது என குறிப்பிட்டுள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி உண்மை தெரியவரும் நீதி கிட்டும் என அவர்களிற்கு சிறிதளவு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை மாத்திரம் காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/75830