Jump to content

திங்களும் புதனும் வந்தால் தித்திக்கும்!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கனடாவில்  வாழ்வு
பத்தொன்பது ஆண்டுகள்
கண்ணை மூடி முழிப்பதற்குள்
ஓடி மறைந்து விட்டது.

 

திரும்பிப் பார்த்தால் அண்டப்..
பெருவெளியில் நீண்டதொரு
பயணத்தின் நடுவில் நின்று
கொண்டு இருக்கிறேன்.

 

நான் மட்டுமா இல்லை
என்னோடு சேர்ந்து இன்னும்
பலர் பயணிக்கிறார்களா.....???

 

கடந்து போன ஆண்டுகள் தராத
வேதனையை அடிக்கடி வந்து போகும்
வெண்பனி தந்து சென்றது.

 

எங்கே போனேன்-எங்கே
வந்தேன் ஒன்றுமே தெரியவில்லை.

 

சிட்டுக்குருவியாய் சிறகு விரித்து
வானவெளியில் பறக்க-எனக்கும்
ஆசை ஆனால் சிறகு உடைந்தவள்
ஆச்சே-இல்லை இல்லை விளக்கில்
விழுந்த விட்டில் பூச்சி..

 

எதைச் சொல்ல எதை விட
எனக்குள்ளும் ஆயிரம் ஆசைகள்-ஆயிரம்
நிறை வேறாத கனவுகள்.

 

விபத்தும் என்னை தன்னுள் அடக்காமல்
இன்னும் கொஞ்சம் இவ்வுலகில்
அனுபவித்து வாவன் -என
தள்ளி விட்டு போகிறது.

 

மனிதர்க்கு வராத இரக்கம்
இளவயது என்பதனால் இயமனுக்கு
என்னுள் இருக்குப் போலும்.

 

நவீன வசதி கொண்டதுவாம் கனடா
அந்த நவீனம் தந்த வாகனங்கள்-கூட
பனியைக் கண்டால் ஓட மறுத்து
விழுந்து படுத்துவிடுகின்றன...

 

அந்த தொழில் நுற்பமும் நவீனம் -

கூட சில வேளைகளில்
வாழ்க்கையை பனிக்குள் புதைத்து சென்றது..

சில்லென்றுவீசிய காற்றில் சிறுபொறியாய்
என் உயிர். 

 

அன்றாட வாழ்வை நகர்த்துவதற்காக
நான் படும்பாடு நாய்  படாத பாடு

வீடு உறவுகள் என வீட்டோடு,
கிடந்து படித்தபடிப்பை நல்ல...

 

வாய்ப்புக்களை நொடிப்பொழுதுகளில்
விட்டு விட்டு - ஒரு கூலித்
தொழிளாளியைப் போல்,
ஊதியம் இன்றி சேவகம் செய்கின்றேன்.

 

ஆனாலும் திங்களும் புதனும்

வந்தால் தித்திக்கும் நாட்கள் -அவை

இரண்டும் என் சேவை நாட்கள்.

 

நாகரீகம் என்ற போர்வையில்
நாலுநாள் பழகிவிட்டு நாசுக்காய்
களட்டிவிடும் உறவுகள்.

 

நான் மட்டும் மூச்சை உள் இழுத்து விட்டபடி
சர்வாங்கமும் அடங்கி விக்கித்து நிற்கையில்-
இதுவும் கடந்து போகட்டும் என ஓர் அசரிரி.

 

அண்மையில் தந்தை ஒருவர்
 ஆதங்கப்பட்டார், பார்ப்பவர்
 கண்களுக்கு அழகியாம்-அறிவாளியாம்
இன்னும் நிறையப் பெற்றவளாம் ...

ஆனால் வேண்டாத பெண்ணாம்-ஏன்
காரணம் கேட்டுவிடாதீர்கள்-

கண்ட இடத்தில் திருமணப் பேச்சு
நான் அல்ல பெண்..

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கவிக்கு நன்றி

அது சொல்லும் கருத்தில் உடன்பாடில்லாது விட்டாலும்

வலியை  உணர  மட்டுமே என்னால் முடியும்

யாதும் அறிவேன்

 

இதுவும்  கடந்து போகக்கடவது மகளே.........

இறைவன் 
அருகில் இருக்கட்டும்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யாயி!
மெல்லத்தான் என் மனம் கனக்கிறது!
சொல்லத்தான் வார்த்தை வர மறுக்கின்றது!
ஆயினும் சொல்ல ஆயிரம் இருக்கின்றது!
மௌனமாக என் கண்கள் பனிக்கின்றது!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஒரு கூட்டுப்  பறவை வெளிஉலகம் காணும்போது  அடையும் மகிழ்ச்சி தெரிகிறது. உலகில் சம்பாவனை 

 

கிடைக்காவிடாலும் இறைவன் மறு உலகில் கணக்கு வைத்து இருக்கிறான் போலும்

 

"..உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து  பார்த்து நிம்மதி நாடு..."

வசதிகளைச் செய்து  தரும்  நாட்டுக்கு நன்றியாக  இருப்போம்..

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

-----

அன்றாட வாழ்வை நகர்த்துவதற்காக

நான் படும்பாடு நாய்  படாத பாடு

வீடு உறவுகள் என வீட்டோடு,

கிடந்து படித்தபடிப்பை நல்ல...

 

வாய்ப்புக்களை நொடிப்பொழுதுகளில்

விட்டு விட்டு - ஒரு கூலித்

தொழிளாளியைப் போல்,

ஊதியம் இன்றி சேவகம் செய்கின்றேன்.

 

ஆனாலும் திங்களும் புதனும்

வந்தால் தித்திக்கும் நாட்கள் -அவை

இரண்டும் என் சேவை நாட்கள்.

----

 

காலத்தே... பயிர் செய்ய வேண்டும் என்பது, முதுவாக்கு.

இப்போதும்... காலம் கடந்திருக்காது என்று நம்புகின்றேன்.

சோகத்தை... ஒரு மூலையில் கட்டி வைத்து விட்டு, புத்துணர்ச்சியுடன் அடுத்த அடியை எடுத்து வைப்பவன் தான்... வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

உளத்திற்கு உவப்பளிக்கும் திங்கள் புதன் இன்னும் பலவாய் விரிந்து தொடரட்டும் யாயி.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

திங்கள்  வெள்ளியாய் ஜொலிக்கட்டும் , வாழ்க்கை பௌர்ணமியாய்  மலரட்டும்...!

 

நிஜம்போலானதால்  கவிதை கனக்கிறது...!

 

கவிதைக்கு நன்றி யாயினி...! :)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை என்பது பல அத்தியாயங்களைக் கொண்ட நாங்களே எழுதும் ஒரு நூல். அதில் ஆரம்ப அத்தியாயங்களை பிறர் அதிகம் எழுத உதவி இருந்தாலும்.. ஒரு கட்டத்தின் பின் நாம் தான் அதனை தனித்து எழுதனும். அப்ப தான் அது எங்க வாழ்க்கை. மற்றவர்களை (அது இடையில்.. வந்த உறவுகளாக இருக்கலாம்.. கூட வந்த உறவுகளாகக் கூட இருக்கலாம்) நம்பி அத்தியாயங்களை எழுத வெளிக்கிட்டால்.. அத்தியாயங்கள் எங்கள் விருப்பப்படி அமைவது கடினமாக இருக்கும். எங்கள் வாழ்க்கைப் புத்தகம் எங்களுக்கானது. அதனை பிறர் எழுதுவதும்.. விமர்சிப்பதும் அழகல்ல. நல்ல ஒரு வழிகாட்டல் நூலாக அது அமைந்தால்.. சமூகத்திற்கும்.. பூமியில்.. வாழ்ந்தோம் என்ற அடையாளத்துக்கும் சிறந்ததாக இருக்கும்.

 

இது யாரும் சொல்லித் தரேல்ல.. நாங்களா சிந்தித்து.. நடந்து கொள்வதில் இருந்து........ :lol::icon_idea:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கு மிக்க நன்றி...

 

மிக நீண்ட காலத்தின்  பின் இங்கே ஒரு பதிவை இட்டு இருக்கிறேன்.அந்த வகையில் ஏதோ,ஏதோ காரணிகள் என் மனதையும்  நோகடிச்சதனால் நம்பிக்கைகள் கை விட்டுப் போனதனால் இப்படி எழுத துண்டியது..மற்றப்படி ஒன்றும் இல்லை..பார்த்தவர்கள் மனதை கஸ்ரப்படுத்தி விட்டது என்று நினைக்கிறன்..நான் யாரையும் கஸ்ரப்பத்திக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே ஒவ்வொன்றையும் யோசிச்சு,யோசிச்சு எழுதுவேன்.ஒதுங்கி நடப்பது உண்டு.வேறை என்னத்தை சொல்வது என்று தெரிய இல்லை.

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையென்றால் ஆயிரமிருக்கும்........கவிதைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

குட்டும் உலகத்தில் குனிந்ததால்... வாரத்தில் இருநாட்களே தித்திக்கின்றன. :)

 

நிமிர்ந்தால்! வாரத்தின் ஏழு நாட்களும் தித்திக்கும்!!. :D

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அனைத்து உறவுககும் மீண்டும் மனம் நிறைந்த நன்றிகள்.

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கவிதை, ஒரு விதமான ஏக்கத்தைக் கூறி நிற்கிறது போல உள்ளது! :o

 

உங்களைப்போல நானும் கொஞ்சக்காலம், ஒரு மாற்றுத் திறனாளிகளைப் பராமரிக்கும் நிறுவனமொன்றுக்கு, 'தொண்டர் சேவை' யாக எனது நேரத்தை அர்ப்பணித்தேன்!

 

அவர்களது, சேமிப்புகளைக் கவனிக்கும் 'வேலை' எனக்குத் தரப்பட்டது!

 

அப்போது ஒருவர், தனக்கு ஒரு 'Michael Jackson'இன் 'Dangerous' CD  வேண்டுமென்று கேட்டார்.

 

நான் வாங்கித் தருகின்றேன், உன்னிடம் போதுமான பணமிருக்கிறதா என்று கேட்டேன்! 

 

அவர் உடனே, தன்னுடைய ' பேர்ஸ்' ஐத் தந்து, இவ்வளவு  தான் இருக்கிறது... மிச்சத்தை நீ போட்டு வாங்கித் தரலாம் தானே 'ஒரு அன்பளிப்பாக' என்று என்னிடம் பேர்சைத் தந்தார்.

 

அதனுள் இருந்த பணம் $800 அவுஸ்திரேலியன் டொலர்கள்! :D

 

இவர்களுடன், நான் பழகிய காலத்தை, எனது வாழ்க்கையின் இனிய அத்தியாயங்களாகப் 'பொத்தி' வைத்திருக்கிறேன்!

 

மற்றது, நீங்கள், 'திருநீறு, பொட்டு' வைப்பவர்களை எல்லாம், எமது 'சமுதாயப் பெருசுகள்' என்று நினைக்கத்தேவையில்லை! :icon_idea:  

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யாயினி, மனம் தளர வேண்டாம். நீங்கள் மனது வைத்தால் திங்களும் புதனுமல்ல வாழ்நாள் முழுவதும் தித்திக்கவைக்கலாம். உங்களால் முடியும் யாயினி.

 

 

 

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

 

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

 

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்,
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!

 

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!

 

உள்ளம் என்பது எப்போதும்
உடைந்து போகக்கூடாது,
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக்கூடாது!
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயமில்லை சொல்லுங்கள்!
காலப் போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்!

 

உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும்,
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்!
யாருக்கில்லைப் போராட்டம்!
கண்ணில் என்ன நீரோட்டம்!
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்!

 

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!

 

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

 

வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்!
இலட்சம் கனவு கண்ணோடு
இலட்சியங்கள் நெஞ்சோடு,
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியோடு போராடு!

 

மனிதா! உன் மனதைக் கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் படு தோல்வி
எல்லாமே உரமாகும்!
தோல்வியின்றி வரலாறா!
துக்கம் என்ன என் தோழா!
ஒரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்!

 

மனமே! ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ அது பனியோ நீ மோதிவிடு!

 

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

 

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!

 

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ அது பனியோ? நீ மோதிவிடு!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
ம்ம்ம் ! அருமை.
 
நான் பல நாட்களில் சிந்திப்பது உண்டு .....
ஏன் பிறருக்கு வரும் கஷ்டங்களுக்காக நான் அழ வேண்டும் என்று ???
 
எங்கிருந்து வந்தோம் ...
எங்கே போவோம் ...
எனபது தெரியாத போது  ஒரு வெறுமை எஞ்சும்.
 
அந்த வெறுமைகளில் தொங்கி கொண்டு ....
இந்த உலகை அடிக்கடி நான் பார்பதுண்டு.
 
மிகவும் சுவாரசியமாக இருக்கும்.
எத்தனை வரட்டு சிந்தனைகளுடன் இவர்கள் இருக்கிறாகள் என்று சில மனிதர்களை பார்க்க சிரிப்பு வரும்.
 
மேலே நெடுக்காலபோவான் சொன்னது போல் இது எமது வாழ்வு என்று எண்ணி வாழ மூளை சொல்லி தரும் 
குடும்பம் ..... சமூகம் ................ நாடு ................ நாகரிகம் ............. உலக வழக்கம் ......... என்று பலதும் வந்து மனதை குழப்பி விடும்.
எல்லாவற்றையும் சுமந்துகொண்டு வாழ்வதுதான் வாழ்க்கை.
 
துன்பம் இல்லாது போனால் ........
இன்பம் பற்றி சிந்திக்க வேண்டிய தேவை இல்லை.
துன்பத்தால் தான் எமக்கு இன்பமும் தெரிகிறது.
 
எமது சமூகம் உங்களை விடுதலை செய்யட்டும்.
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 

 
துன்பம் இல்லாது போனால் ........
இன்பம் பற்றி சிந்திக்க வேண்டிய தேவை இல்லை.
துன்பத்தால் தான் எமக்கு இன்பமும் தெரிகிறது.
 
எமது சமூகம் உங்களை விடுதலை செய்யட்டும்.

 

 

அருமையான வரிகள்.....

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அழகு வரிகளில் சுமந்து நிற்கும் சோகம் மெல்ல பரவி அமிழ்த்துகிறது என்னை ........

 

ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றை  இழந்துபோனவர்களா அக்கா...  ??

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அனைவரது  நேரத்திற்கும்,கருத்துக்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்..நான் கடந்த பல ஆண்டுகளின் பின்பு யாழில் இந்தப் பதிவை இட்டேன்..அடிக்கடி எழுதாத காரணத்தினால் இப்படி எழுதி விட்டேனோ தெரிய வில்லை.மற்றப்படி எல்லாமே என்னோடு நின்றுவிடுவது வழமை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் ஒரு லாலா இசையுடன் கூடிய சோகம் இருக்கும் வாழ்வில் ..அதை தாண்டி சாதிப்பது என்று ஒன்று இருக்கு அதுதான் வாழ்தல் ..

 

கவிதைக்கு பாராட்டுக்கள் இன்னும் எதிர்பார்க்கிறோம் யாயினி.

Link to comment
Share on other sites

" கவிதைக்கு நன்றி. ஆனால் கண்டிப்பாக கவிதை சொல்லும் கருத்துக்கு அல்ல."

 

..என்று மேலே நான் எழுதியமாதிரி வரட்சியாக கடமைக்கு எழுதிவிட்டு போக முடியாமல் இருக்கின்றது யாயினி. உங்கள் நிலமை அறிந்தவன் மட்டுமன்றி கல்வித் தகமையும் அதற்குரிய சிறந்த திறமையும் உங்களுக்கு இருந்தும் ஒரு நிரந்தர வேலையைக் கூட தர மறுக்கும் வியாபார உலகினையும் அறிந்துள்ளமையால் உங்கள் வேதனையின் ஆழம் மனசை வருத்துகின்றது.

இது மரமேறி விழுந்தவர்களை மாடு மாதிரி மிதித்து துவைக்கும் சமூகமாயினும் கூட உங்களது உரிமைகள், உங்களுக்கான சில விசேட சட்டங்கள் நிறைந்த ஒரு சமூகமாகவும் இது இருக்கின்றது. கனடாவில் உங்களுக்கான குரலை உயர்த்தி போராட முடியும்.

 

அப்பாவியாக இருப்பது கூட ஒரு தவறுதான். உங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளுக்காக வீட்டிலும் ஏனைய இடங்களிலும் குரல் எழுப்புங்கள். வேலை வாய்ப்புகளில் உங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை அறிந்து வைத்திருங்கள்.  அத்துடன் உங்களது பிரச்சனைகள், இயல்புகள் என்பனவற்றை மனம் திறந்து கதையுங்கள்.

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அனைவரது  கருத்துக்களுக்கும் நன்றிகள்.அத்தோடு விருப்பு புள்ளிகளை இட்டவர்களுக்கும் என் நன்றிகள்.நீங்களே எல்லாவற்றையும் சொல்லி முடித்து விட்டபடியால் மேலதிகமாக நான் சொல்வதற்கோ,எழுதுவதற்கோ எதுவும் இல்லை நிழலியண்ணா.
 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யாயினி தங்கையே.

நம்பிக்கைதான் வாழ்கையின் ஓடம், அதில் எல்லோரும் ஒரு நாள் கரை சேர்வோம்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யாயினியின் கவிதைக்கு பாராட்டுக்கள். வாழ்க்கை ஒவ்வொர வினாடியும் போராட்டமே அதை வெல்வதே நமக்கு முன்னாலுள்ள சவால். எல்லா போராட்டங்களையும் தாண்டி வருவீர்கள் யாயினி.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் யாயினி

 

இங்கு எழுதப்பட்ட  கருத்துக்களாலும்

அறிவுரைகளாலும்

உங்களுக்குள் ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்ததா?  என்பதை அறியத்தந்தால்

எமக்கும்   ஆறுதல் கிடைக்கும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.