Jump to content

உயிர்


Recommended Posts

'ரி-56 ஆல் 'ரச்' அடிச்சுப் பாத்தபோது, ற்றிகரை விரல் அமுக்கியதற்கும், குண்டு வெளிக்கிட்டு இலக்கை அடைந்ததற்குமிடையேயான நேரம் எத்தனை சிறியது என்பது என் மூளை கிரகிக்க முடியாத சிறியதாய் இருந்தது.... படங்களிலும் கதைகளிலும் துப்பாக்கி சுடுதலைப் பார்த்ததற்கும் சுட்டபோது உணரப்பட்டதற்குமிடையேயான வித்தியாசம் வர்ணனைக்கு அப்பாற்பட்டது. சுடுதலின் ஒலி எத்தனை பெரியது! அது செவிப்பறையில் எத்தனை கடினமாய் உதைத்தது என்பதும், துப்பாக்கியின் எனது தோளின் மீதான உதைப்பின் பரிமாணமும் நான் நினைத்திருந்ததைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு பெரிதாய் இருந்தது. சண்டைகளைத் திரைப்படத்தில் பார்ப்பதற்கும் ஒரு குண்டு சுடுவதில் உள்ள உடல் வருத்தத்திற்குமிடையேயான வேறுபாடு அப்போது தான் என்னால் உணரப்பட்டது. அந்த சுடுகலன், அந்த மைதானம்...'
 
சொல்லிக்கொண்டு போனவனை இடைமறித்தவள் 'நீ எந்த சுடுபயிற்சி நிலையத்திற்குச் சென்றாய்?' என்றாள்.
 
'நான் எந்தப் பயிற்சி நிலையத்திற்கும் இங்கு செல்வதில்லை. வாழ்வில் ஒரே ஒரு முறை ரி-56 ஆல் மட்டும் சில ரவகைள் சுட்டுள்ளேன். அதைத் தான் 'ரச்' அடித்தவர்களோடு சேர்ந்தடித்தேன் என்றேன்' என்றான்.
 
'அது என்ன 'ரச்' அடித்தல்' என்றவளிற்கு 'அது ஒரு முடிந்து போன காலத்தின் சொல்லாடல்' என்பதோடு நிறுத்திக்கொண்டான்.
 
'என்ன இன்று நீ கனவுலகில் நடப்பது போல் தோன்றுகின்றாய்..' என்றாள்.
 
'அயன் றான்ட்டின் அற்லஸ் ஷறக்ட் (Ayn Rand's Atlas Shrugged) நாவலில் ஹென்றி, ட்டாஜனி சார்ந்து நினைக்கும் ஒரு பக்கம் வரும். அத்தனை ஆழமையும் புத்திக்கூர்மையும் மிக்க ஒரு பெண்ணோடு, அதி அடிப்படை, அல்லது விலங்கு இச்சை என்று மட்டும் கொள்ளப்படவேண்டிய கலவிக்கான ஆசை தனக்குள் எழுந்தது சார்ந்து அவன் துவழும் ஒரு காட்சி. உன்னில் கூட சமயத்தில் எனக்கு அவ்வாறான எண்ணமே எழுகிறது. எத்தனை அறிவு மிக்க அற்புதம் நீ' என்றான்.
 
ஒரு கணம், மகிழ்ச்சியும் வெட்கமும் கூச்சமும் சோந்த பலரச வெளிப்பாட்டினை முகத்தில் காட்டியவள் பின் சுதாகரித்துக் கொண்டு, அவன் மார்பில் ஒரு கணம் தன் முகம் புதைத்து எடுத்துக் கொண்டாள்.
 
'ரி-56 பற்றி ஏன் இன்று திடீரென நினைத்துக்கொண்டாய்?'
 
'ஏ.கே-47 ரக துப்பாக்கியின் மலிவான சீன வடிவம் ரி-56. ஆனால், நகல் அசலிற்கு விசுவாசமானதாகவே பிறந்தது. அந்தக் கருவியினைக் கையில் வைத்திருந்த கணத்தில்...'
 
'ஏன் நிறுத்திவிட்டாய். என்ன நடந்தது உனக்கின்று?'
 
'அந்த உன்னத தொழில் நுட்பத்திற்கு ஏகப்பட்ட அழகு. ஆனால் உயிர் பறிக்கும் ஒரே நோக்கிற்காகவே அந்தக் கருவி பிறப்பிக்கப்பட்டது. தன் நோக்கம் சார்ந்து அது என்றுமே எந்த பித்தலாட்டமோ நாடகமோ செய்வதில்லை. அந்தக் கருவியினை உருவாக்கிய உயிரின் அறிவினை வியப்பதா இல்லையேல் அக்கருவி பறித்த பறிக்க இருக்கின்ற உயிர்களை நினைப்பதா?...'
 
'கருவி சடம் தானே. பார்வைகளும் செயலும் உன்னுடையவை அல்லவா?'
 
'அதைக் கையில் வைத்திருந்த கணங்கள், ஒரு பூதத்தைச் சிறைப்பிடித்து மடியில் வைத்துத் தடவிய உணர்வு போல் இருந்தது. அந்த உயிர்கொல்லியினை மடியில் வைத்திருக்கையில் வைத்திருப்பவரின் உயிரிற்கு அதன்மேல் ஒரு ஈர்ப்புப் பிறந்தது வினோதமாய் இருந்தது. ஒரு அதிவேக காரினை வாங்கி ஓட்டியது போலிருந்தது...'
 
'ஏன்னாச்சு உனக்கு..'
 
'உனது உடல் இன்று இருக்கும் மினுமினுத்த இறுக்கம்...ட்டாஜினி நீ ஒரு பிரமிப்பு எனக்கு' 
 
'சொல்ல மறந்து போனன். நேற்று ஒரு ஜோடியினை எதிர்பாராமல் காண நேர்ந்தது. அவனை எனக்கு நெடுநாளாத் தெரியும். ஏகப்பட்ட வாசிப்பும் அனுபவமும் மிக்கவன். பல்கலைக்கழகநாட்களில், பெடியளிற்குள் பியர் அடித்தபடி நடக்கும் விவாதங்களில் அனேகமா நானும் அவனும் எதிர்க்கன்னைகளில் தான் இருந்திருக்கிறோம்.திருமணம் என்ற நிறுவனத்தில் உடன்பாடற்றவன். அதால அநேகமாக அவனை நான் ஒரு பெண்ணுடன் இருமுறை பாப்பதில்லை. நேற்று வந்தவளை நான் இதுக்கு முதல் பாத்ததில்லை'
 
'ரி-56 ஐ நீ எப்ப சுட்டுப் பாத்த?'
 
'இல்ல இரண்டு தரம் வரைக்கும் எல்லாம் நல்லாருக்கும், அதுக்குப் பிறகு அவளைப் போன்ற ஒருத்தியோட என்னத்தை அவனால் பேச முடியும்? ஸ்ஸ்சப்பா கண்ணக்கட்டாதா என்று தோன்றிச்சு...'
 
'சுடுபட்டவனிற்குச் சுடுகலன் சார்ந்து வலி வேறுபடவா போகுது? எத்தினை ஆயுதம் உயிர் பறிக்க....'
 
'பசிக்கு மட்டும் சாப்பிட்டா உணவிற்கு அலங்காரம் தேவையா என்ன? வாழைஇலை, மண் சட்டி அல்லது கையில் கவளம், அனகேமாய் ஏழைகளிற்கு உணவு திருப்த்தியாகவே எப்போதும் இருக்கும் என்றே நினைக்கிறேன்'
 
'வீதியில் ஐசில் சறுக்கி விழும்போது, உடல் தரையில் படும் போது, அந்தக் கணத்தில் நோ தெரிவதில்லை பாத்திருக்கிறியா? துப்பாக்கியால் பொயின்ற் பிளாங் றேஞ்சில சுடுபட்டு இறப்பவர்களிற்கு இறப்பு எந்த வலியையும் கொடுக்காது என்று நான் முழுதா நம்புறன்...'
 
'அச்சும்....என்னாச்சு?...நான் அந்த சோடி பத்திப் பேச ஆரம்பிச்சன்.... நீ ரி-56 பற்றியும் சுடுபட்டு இறப்பது பற்றியும் பேசத் தொடங்கினாய். ஆனால் கடந்த இந்த சில வினாடிகளில் நீ பேசிய அனைத்தும் எனக்குள் கிரகிக்கப்பட்டது நான் பேசிய அனைத்தும் உனக்குள்ளும் பதிவானது. இது தான் உன்னில் என்னைக் கட்டிப்போடுவது'
 
அணைந்த விளக்கைத் தொடர்ந்து அறையுள் அடர்ந்த இருட்டு நாளின் முடிவினை உறுதி செய்தது.
Link to comment
Share on other sites

கிருபன், சுபேஸ், புங்கையூரான், சுமே மற்றும் ஈசன். நன்றி உங்கள் வாசிப்பிற்கும் பச்சைக்கும்.

Link to comment
Share on other sites

முதன் முதலில் துவக்கை சுட்ட பின்னர் கைகளில் மணக்கும் அந்த வெடி மருந்தின் வாசத்தை அடிக்கடி நான் ரசித்ததுண்டு. கையை கூட கழுவாமல் நீண்ட நேரம் அதை முகர்ந்ததுண்டு.

அடிக்கடி காதலியை மாற்றுபவனுக்கு ரசிப்பு தன்மை குறைந்து போகும் என்று அவனை நேற்றைய சோடியுடன் பார்க்கும் போது எனக்கு மனசில் பட்டது.

ஆனால் சாவின் வாசம் தெரிந்த பின்னர் இப்போதும் அதை நினைக்க அருவருப்பாக இருக்கிறது.

இவர்களை போல இன்னும் எத்தனையோ பேர் இந்த உலகில் வெளித்தெரியாமல் உலாவுகின்றனர்.



நன்றி பதிவுக்கு இன்னுமொருவன்.

Link to comment
Share on other sites

நன்றி முதல்வன்.
 
பகலவன்,  கதையின் அலைவரிசை உள்வாங்கப்பட்டிருப்பதை, உங்கள் பின்னூட்டம் வாயிலாக அறிவதில் மகிழ்ச்சி. நன்றி உங்கள் வரவிற்கும் கருத்திற்கும்.
Link to comment
Share on other sites

பழைய நினைவை மீண்டும் கிளறிய பதிவு.. நண்றி இன்னும்மொருவன்

 

பயிற்சி முடிஞ்சதும் எனக்கு ஒரு SAR தந்து இருந்தார்கள்  Singapore Assault Rifle   என்பதாக இருக்கும் அதன் விளக்கம்...   புலிக்களுக்குள் அமெரிக்க வகை 5.56 ரகைகளுக்கு எப்போதும் தட்டுப்பாடு இருந்ததால் அந்த துவக்கை சீண்டுவார் யாரும் இருக்கவில்லை....  கடைசியில்  எனது கைகளில் கிடந்தது...  நான்கு மேலதிக ரவைக்கூடுகள் அதிலை இரண்டில் மட்டும் தான் ரவைகள் முழுமையாக இருந்தன...  இரண்டு எப்போதும் வெறுமைதான்...  இருக்கிற ரவைகளை சுட்டு முடிச்சால் பிறகு...?? கேள்வி எப்போதும் எனக்குள் இருக்கும்...

 

புலிகளில் அனேகரின் ஆயுதங்கள் AK வகையை சார்ந்த 7.62 ரவை வகை துவக்குகளே தான் அதிகம் என்பதால் எனக்கு ரவைகள் கிடைப்பதில் நம்பிக்கை அறவே இல்லை ஆதலால் எனக்கு அந்த துவக்கால் பாதுகாப்பு இருக்கும் எண்டு நான் எப்போதும் நம்பி இருந்தது இல்லை... அதே போல என்னால் மற்றவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியும் எண்டும் நம்பி இருக்கவில்லை... எனக்கு என்னவோ ஒரு முட்டைகோதை கையிலை வைத்து இருக்கிற்து போலவே படும்... ஆரம்ப பயிற்சிக்கு கையிலை ஒரு கட்டையை தந்து இதுதான் உங்கட ஆயுதம் என்பார்கள்... அந்த கட்டைக்கும் SAR க்கும் பெரிசாக வித்தியாசம் எனக்கு தெரியவில்லை...

அதை என்னட்டை இருந்து திருப்பி வாங்கிய போது நான் பட்ட சந்தோசம் இருக்கே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி இன்னுமொருவன் . கதையில் உங்கள் தனித்துவம் மிளிர்கிறது...!  :)

Link to comment
Share on other sites

 

'

'அயன் றான்ட்டின் அற்லஸ் ஷறக்ட் (Ayn Rand's Atlas Shrugged) நாவலில் ஹென்றி, ட்டாஜனி சார்ந்து நினைக்கும் ஒரு பக்கம் வரும். அத்தனை ஆழமையும் புத்திக்கூர்மையும் மிக்க ஒரு பெண்ணோடு, அதி அடிப்படை, அல்லது விலங்கு இச்சை என்று மட்டும் கொள்ளப்படவேண்டிய கலவிக்கான ஆசை தனக்குள் எழுந்தது சார்ந்து அவன் துவழும் ஒரு காட்சி. உன்னில் கூட சமயத்தில் எனக்கு அவ்வாறான எண்ணமே எழுகிறது. எத்தனை அறிவு மிக்க அற்புதம் நீ' என்றான்.
 

 

 

ம்ம்ம்... எல்லா இடங்களிலும் ஆண்கள் ஆண்களாகத்தான் இருக்கின்றார்கள் என நினைக்கத் தோன்றுகின்றது. என் அனுபவப் பகிர்வு போன்று இருக்கின்றது இந்த வரிகள். :)

 

'அச்சும்....என்னாச்சு?...நான் அந்த சோடி பத்திப் பேச ஆரம்பிச்சன்.... நீ ரி-56 பற்றியும் சுடுபட்டு இறப்பது பற்றியும் பேசத் தொடங்கினாய். ஆனால் கடந்த இந்த சில வினாடிகளில் நீ பேசிய அனைத்தும் எனக்குள் கிரகிக்கப்பட்டது நான் பேசிய அனைத்தும் உனக்குள்ளும் பதிவானது. இது தான் உன்னில் என்னைக் கட்டிப்போடுவது'
 
அணைந்த விளக்கைத் தொடர்ந்து அறையுள் அடர்ந்த இருட்டு நாளின் முடிவினை உறுதி செய்தது.

 

 

இன்னுமொருவன், இந்த வரிகள் இயல்பாக கதை எழுதிக் கொண்டு இருக்கும் போது தானாகவே வந்து விழுந்தவையா அல்லது இந்த வரிகள் முதலில் மனசுக்குள் தோன்ற இந்த கதை இதையொட்டி விரிந்து கொண்டதா? இக் கதையின் உயிர்மூச்சு இதுதான் என நினைக்கின்றேன். வாசிப்புகள் மாறலாம்.

Link to comment
Share on other sites

நன்றி முதல்வன், தும்பளையான், தயா, சுவி, நிழலி உங்கள் கருத்திற்கும் வரவிற்கும். தயாவின் பின்னூட்டம ஒரு தனிக் கதைக்கான கருவோடு இருக்கிறது. 
 
இக்கதையினை வேறு எவரேனும் எழுதியிருப்பின் நான்கு பக்ககங்களிற்குப் பொழிப்புரை எழுதியிருப்பேன். இங்கு அதைச் செய்ய விரும்பவில்லை. ஆனால், சுருக்கமாக, நிழலியின் அவதானம் சரியானதே. ஒரு அலைவரிசையில் ரியூன்பண்ணப்பட்டிருக்கும் இருவரிற்குள் இரு தடங்களில் சமநேரத்தில் சம்பாசனை சாத்தியம். இரு இசை உபகரணங்களால் முடியுமெனில் ஏன் மனிதரால் முடியாது. மௌனமே உரையாட முடியுமெனின் இருதடங்கள் எம்மாத்திரம்.
 
கடைசி ஐந்து பந்திகளில் உள்ள உரையாடல்கள் அவர்கள் இருவரும் பேசிய இருவேறு விடயங்களிற்கும் அப்படியே பொருந்துவன. அவனது கூற்று அவளது பேசுபொருளிற்கும், அவளது பேச்சு அவனது பேசுபொருளிற்கும் அப்படியே பொருத்தக்கூடியன. இன்னமும் சொல்வதானால், அவர்களது பேச்சுக்களை மற்றையவரின் பேசுபொருளிற்குப் பொருத்துகையில் அவர்களின் பேச்சின் ஆழம் அதிகரிக்கிறது. அதனால் முயற்சியின்றி அவவை மற்றையவருள் கிரகிக்கப்படுகின்றன. அலைவரிசை ஒத்திருக்கிறது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மும்முறை இக்கதையை வாசித்துவிட்டேன் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வடிவத்தை கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறது....இன்னுமொருவன் இக்கதை தொடர்பாக இன்னுமின்னும் எனக்கு மீள்வாசிப்புத் தேவைப்படுகிறது... வரவர மூளை சிந்தனை என்பதை  உற்பத்தி செய்வதை தவிர்த்துவருகிறது என்பதை இச்சிறு படைப்பு எனக்கு உணர்த்துகிறது... மீளவும் வாசிக்கப்போகிறேன்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.