Archived

This topic is now archived and is closed to further replies.

நிலாமதி

விமானம் மாயமாவதற்கு ஒரு நிமிடத்துக்கு முன் மனைவியுடன் ...

Recommended Posts

விமானம் மாயமாவதற்கு ஒரு நிமிடத்துக்கு முன் மனைவியுடன் Zaharie Ahmad Shah, என்ன பேசினார் ?
 

மாயமான மலேசிய விமானம் காணாமல் போவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, அந்த விமானத்தை ஓட்டிக்கொண்டிருந்த பைலட் தன்னுடைய மனைவிக்கு ஒரு நிமிட போன் கால் ஒன்றை பேசியுள்ளார் என்பதை தற்போது மலேசிய புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மலேசிய விமானத்தை ஓட்டிய பைலட் Zaharie Ahmad Shah, விமானம் மறைவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு தன்னுடைய மனைவியுடன் ஒரே ஒரு நிமிடம் மட்டும் செல்போனில் பேசியுள்ளார்.

 
மலேசிய புலனாய்வு அதிகாரிகள், அந்த அழைப்பு வந்த செல்போன் குறித்த தகவல்களை ஆராய்ந்த போது, அந்த அழைப்பு Pay-as-you-go என்ற சிம் நிறுவனத்தின் சிம்கார்டு போலியான பெயர் மற்றும் முகவரி கொடுத்து வாங்கப்பட்டதாக தெரிகிறது.உண்மையை மறைத்து சிம் வாங்க வேண்டிய தேவை குறித்தும் தீவிரவாதிகளுடன் தொடர்புகளை பேணினாரா என்பது குறித்தும் ஆராய்ந்து வருவதாக மலேசிய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானியிடம் இருந்து அழைப்பு வந்தவுடன் அவரது மனைவி தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் மலேசியாவை விட்டு வெளியேறியதாக தெரிகிறது. தற்போது அவர் தனது குழந்தைகளுடன் தலைமறைவாக இருக்கின்றார்.

 

 

விமானி தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் தற்போது முதன்முதலாக கைப்பற்றியுள்ளது. இந்த புகைப்படத்தை வைத்து விமானியின் மனைவியை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர் கூடியவிரைவில் பிடிபடுவார் என மலேசிய புலனாய்வு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

 

 

நன்றி ...செய்தி

Share this post


Link to post
Share on other sites

ஒரு இழவும் விளங்கவில்லை  :(

Share this post


Link to post
Share on other sites

----

விமானியிடம் இருந்து அழைப்பு வந்தவுடன் அவரது மனைவி தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் மலேசியாவை விட்டு வெளியேறியதாக தெரிகிறது. தற்போது அவர் தனது குழந்தைகளுடன் தலைமறைவாக இருக்கின்றார்.

-----

 

ஒரு மணித்தியால அவகாசத்தில்... ஒருவர் தனது மூன்று குழந்தைகளுடன், தலைமறைவாக நாட்டை விட்டு  வெளியேற முடியுமா?

Share this post


Link to post
Share on other sites

புனைந்து எழுதிய புளுடா செய்தி. நாசமாப்போன தமிழ் ஊததகங்கள்

 
1. விமானம் புறப்பட முன்னர் இனம் தெரியாத ஒரு பெண் விமானியுடன் 2 நிமிடம் போலி அடையாளதில் வேண்டிய சிம் கார்ட் போனில் கதைத்துள்ளார். அந்த் பெண் ஆர் என்ற தேடுதல் தொடர்கிறது.
 

The captain of missing Malaysia Airlines flight MH370 received a two-minute call shortly before take-off from a mystery woman using a mobile phone number obtained under a false identity.

It was one of the last calls made to or from the mobile of Captain Zaharie Ahmad Shah in the hours before his Boeing 777 left Kuala Lumpur 16 days ago.

 

2. இந்த சிம் மிக அண்மையில் வாங்கப்பட்டது. உண்மையான அடையலாம் இன்றி பொய் தகவகள் கொடுத்து பெறப்பட்த ஒன்று.  
Investigators are treating it as potentially significant because anyone buying a pay-as-you-go SIM card in Malaysia has to fill out a form giving their identity card or passport number. They found that it had been bought ‘very recently’ by someone who gave a woman’s name – but was using a false identity.
 
3. விமானியுடன் தொலைபேசியல் கதைத்த மற்றயவர்களை புலனாய்வு துறை விசாரித்துவிட்‌டது.
Everyone else who spoke to the pilot on his phone in the hours before the flight took off has already been interviewed.
 
இது தான் இந்த தொலைபேசி அழைப்பு பற்றிய செய்தி. ஆனால் நமது ஊடகங்கள் எட்கனவே அவரது குடும்பம் பற்றி வந்த செய்திகளை இந்த செய்தியுடன் புனைந்து எங்களை முட்டாள்கள் ஆக்க பாடுபடுகிறார்கள். 
 

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • மனதை ஒருமுகப்படுத்தி வழிபடுவதற்காக கொண்டு வரப்பட்டதே உருவ வழிபாட்டு முறை.  அது உங்களுக்கு பொம்மையாக தெரிந்தாலும் பலருக்கு கடவுள் சிலையாக தெரியும். எப்ப பார்த்தாலும் இந்து மதத்தை விமர்சித்துக்கொண்டு ஏனைய மதங்கள் பற்றி மௌனம் காக்கும் உங்களுடன் இத்திரியில் மேலதிகமாக எதுவும் எழுத எனக்கும் ஏதும் இல்லை.
  • சரி விடுங்க. அத்தி வரதர் என்னும் பணம் உழைக்கும் பொம்மை  தைலங்கள் பூசப்பட்டு (தன்னை பாதுகாக்கும் சக்தி  சக்தி கூட அதற்கு இல்லாத‍தல் பாதகாக்கும் தைலங்கள் பூசப்பட்டு)  குளத்திற்குள் இறக்கபட்டு விட்டது.  எதிர்கால பணவேட்டைக்காக. அந்த பொம்மை ஏமாற்று பேர்வழிகளுக்கு மட்டும் தான் உதவும். நீங்களும் உழைத்தால் தான் நாம் வாழலாம். எமக்கு அது உதவப்போவதில்லை. எமக்கு பிரயோசனம் இல்லாத பொம்மைக்காக நீங்களும் நானும் நேரத்தை செலவழிக்க வேண்டாம்.  நன்றி வணக்கம். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். 
  • லாரா,  சைவம் எமது சமயமா என்பதை பற்றி கொஞ்சம் தர்க பூர்வமாக ஆராய்வோம். முடிந்தளவு கருத்தை பற்றி மட்டுமே கருதெழுதுவோம், கருத்தாளர் என்ன நோக்கில் எழுதுகிறார் என்பதை விட்டு விடுவோம். 1. சைவ சமயத்தின் முழு முதற் கடவுள் என இலங்கை சைவநெறி புத்தகம் சுட்டுவது யாரை ? சிவன் 2. சிவனின் இருப்பிடம் என நீங்கள் மேற்கோள் காட்டும் சைவநெறி புத்தகம் காட்டுவது எவ்விடதை ? திபெத்தில் உள்ள கைலாயமலை.  3. வடக்கே அகோரிகள் வழிபடும் சிவனும், தமிழர்களின் சிவனும் ஒருவரா? 4. ஒருவர் எனில் - தமிழரின் சங்க இலங்கியங்கள், வடக்கர்/ஆரியர் வருகைக்கு முன்னான தமிழ் இலக்கியம்/ கல்வெட்டுகள் ஏதிலும், இந்த சிவனே எமது முழுமுதல் தெய்வம் என்ற குறிப்பு இருக்கிறதா? 5. ஒருவர் இல்லை எனில்- எமது சிவன் என்னவானார்? 6. எமது உணவு, மொழி, நிலம் எல்லாம் எம்மை சுற்றி அமைய, ஏன் எமது முழு முதல் கடவுள் மட்டும் திபெத்தில் இருந்து வந்தார்?  7. சைவத்தை ஏனைய 5 உடன் சேர்த்தவர் யார்? ஆதி சங்கரர். அதுக்கு முன்னே சைவம் தனிச் சமயமாக இருந்தது. அந்த சைவத்துக்கு முன் எமது இறையியல் என்ன? 8. தமிழ் கல்வெட்டுக்கள், பாண்டைய இலக்கியங்கள் யாவுமே, எமது முழுமுதல் இறவனை பற்றி ஒரு வசனமும் எழுதாமல் இருப்பது ஆனால் “தெய்வம்” என்ற தத்துவத்தை முன்னிறுத்துவது ஏன்? 9. சிவனை பண்டை காலத்திலேயே மறைக்க முயற்சித்தனரா? அல்லது அப்போது இவரை பற்றி நாம் அறிந்து இருக்கவில்லையா? 10. நான் ஒன்றும் வரலாற்று பண்டிதன் இல்லை. ஆனால் இது சிறு வயது முதலான எனது தேடல். இந்த கேள்விகளின் பலனாக நான் எடுத்திருக்கும் எடுகோள்கள் ( முடிவு அல்ல) பின்வருவன. தக்க ஆதாரம் காட்டுமிடத்து இவற்றை மாற்றவும் தயராக உள்ளேன். என் எடுகோள்கள்.  அ. கிறீஸ்தவம், அதற்கு முன் இஸ்லாம் இந்த வரிசையில், எம்மை வெற்றி கொண்டு அடிமைப் படுத்தியோரில் முதலில் எம்மை அடிமை செய்த வடக்கத்தியரின் மதமே சைவம். ஆ. சைவத்துக்கு முன்னாக, எமக்கு இறை என்ற ஒரு கருத்தியல் இருந்தது, ஆனால் ஒரு முழு முதற் கடவுளோ நிறுவனமயப்பட்ட மதமோ இருக்கவில்லை. ஆங்காங்கே சிறு தெய்வ, மூதோர் வழிபாடு இருந்திருக்கலாம். இ. வரலாறு வென்றோராலே எழுதப்படும். ஒரு மக்கள் கூட்டத்தை அடிமை செய்யும் போது, எல்லாத்தையும் 100% திணிக்க மாட்டார்கள். சிலதை உருமாற்றுவார்கள், கலாச்சார கபளீகரம் (cultural appropriation) செய்வார்கள். அண்மைய உதாரணங்கள் யேசுவை “பிரான்” என்றழைப்பதும், அல்குரானை, “திருக்குறான்” என்றழைப்பதும்.    அதேபோல, வடக்கத்திய சைவம் எம்மத்தியில் பரவும் போது வெவ்வேறு பகுதிகளில் வேறு வேறாக இருந்த எம் குறு நில தெய்வங்களை சூறையாடி அவர்களை, தம் மதத்தில் சிறு தெய்வங்களாக ஆக்கி கொண்டனர் (முருகன்).  ஈ. எமது இலக்கியங்களை படிக்கும் போது, எம்மில் பண்டைய நாளில் சாதிய ஏற்றத் தாழ்வு இருக்கவில்லை என்பது தெளிவாகிறது. ஆனால் தொழில் முறையாக பகுப்பு இருந்தது. அன்று எம்மில் மீன் பிடிப்பவர்கும், விவசாயம் செய்தவர்க்கும் சமூக ஏற்ற தாழ்வு இருக்கவில்லை.   இப்படி எம் இறையியலை விழுங்கி கொண்ட வடக்கத்திய பிரம்மணியம், எம்மில் இருந்த தொழில்சார் பிரிப்பை தமது வர்ணாசிரம தத்துவத்தோடு இணைத்து, எம்மை சாதிகளாக பிரித்து, தீண்டாமையை அறிமுகம் செய்து வைத்தது. உ. ஆனாலும் தம் மேலாண்மையை தக்கவைக்க தாமே (பிராமணர்) இந்த கட்டமைப்பின் முதல் படி என ஆக்கிகொண்டனர். மட்டுமில்லாமல், எமது மன்னர்களின் ராஜ குருக்களாக, அர்த சாஸ்திரம் போன்ற பிராமண மேலேதிக்கம் பேணும் நூல்கள் வாயிலாக, கல்வியையும், அதிகாரத்தையும் தாமே கையில் வைத்துக் கொண்டனர்.  ஊ. கொடுமையிலும் கொடுமையாக, எம் மக்களை தமிழில் இருந்து அந்நியப் படுத்தி, தாமே தமிழில் விற்பனராகி, நாலாயிரத் திவ்விய பிரபந்தம், மூவர் தமிழ் என்பதாக, எம் மொழி மூலமே, திணிக்கப்பட்ட சைவத்தை, எம் புராதன நம்பிகை என நிறுவியுள்ளனர். இவைதான் எனது எடுகோள்கள்.   
  • நீங்கள் தான் இவ்வாறு கூறினீர்கள். அவர்கள் கோவிலுக்கு கொடுக்காவிட்டால் அப்பணத்தை வேறு யாருக்கும் கொடுத்து சமூக சேவை செய்யப்போவதில்லை என்ற அர்த்தத்தில் கூறினேன். மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லையே.   உங்களுக்கு பொம்மையாக தெரிவது பலருக்கு கடவுள் உருவமாக தெரிகிறது. இயேசு சிலை, மாதா சிலையையும் தான் மக்கள் வழிபடுகிறார்கள். அவை உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை.
  • சாதாரண உழைப்பாளிகள் தாம் உழைத்த பணத்தை  தாம் அனுபவித்து வாழ வேண்டும் என்பதையே அனைவரும் விரும்புவர்.  கோவிலுக்கு கொடுக்காமல் விட்டால் அதை அவ‍ர்கள் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று ஏன் எதிர் பார்க்கிறீர்கள். அவர்கள் உழைத்த பணத்தை அவர்கள் அனுபவத்து விட்டு போகட்டுமே.  பாமர மக்களை அத்தி வரதர் என்ற  பொம்மையை காட்டி ஏமாற்றிய திருட்டு பாப்பனக் கூட்டத்திற்காக வாதாடுறின்றீர்கள்.