• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

இசைக்கலைஞன்

அமெரிக்க தீர்மானம்

Recommended Posts

அமெரிக்க தீர்மானம்

 

பாகம் 1:

 

மாசி மாதத்தின் இறுதி நாட்களுள் ஒன்று. விடிகாலையிலேயே தொலைபேசி அலறியது. யாரப்பா அது இந்த நேரத்தில் என்று எரிச்சலுடன் தொலைபேசிய எடுத்துக் காதில் வைத்தேன்.

 

"ஹலோ.. என்ன நித்திரையா?! ஜெனீவாவில நிண்டுகொண்டு நான் தான் டி.எஸ். கதைக்கிறன்.. அவசரம் இங்கை.." தொலைபேசியின் மறுமுனை படபடத்தது.

 

"ஓ.. நீங்களா.. என்ன இந்த நேரத்தில?!" இது நான்.

 

"இந்த நேரத்திலயோ? நல்லா கேப்பீங்களே.. இங்க முதல் வரைவுத் தீர்மானம் வந்திட்டிது.. பார்த்தியளோ? அல்லது அதுவும் இல்லையா?"

 

"ம்ம்ம்.. பார்த்தனான்... உப்புச் சப்பில்லாமல் இருந்தது.."

 

"அதேதான்.. இதுக்கு உங்களால எதுவும் செய்ய முடியுமே.. ஒரு ஃபோன் அடிச்சு பார்க்கிறது.."

 

"ஓ.. அங்கையா.. இதோ அடிச்சுப் பார்க்கிறன்.. ஆனால் எதையும் உறுதியா சொல்ல முடியாது.."  :blink: 

 

"சரி முடிந்ததை செய்யுங்கோ.. இதைவிட்டால் இனிமேல் கடவுள்தான் காப்பாற்ற வேணும்.." மறுமுனை துண்டிக்கப்பட்டது.

 

என்னடா இது.. காலங்கார்த்தாலயே வம்பு என்று நினைத்துக்கொண்டே அலைபேசியை எடுத்து இலக்கங்களை அழுத்திப் பேசினேன்..

 

--------------------------------------------

 

"ஹலோ.. இது கெல்லியா?!"

 

"ஆம்.. என்ன இந்த நேரத்தில்??"

 

"தீர்மானம் பற்றித்தான்.. ஏன் இவ்வளவு பலவீனமா இருக்கு..?"  :unsure: 

 

"எல்லாம் உங்கள் அண்டை நாட்டால்தான்.. அவர்களை வழிக்குக் கொண்டுவராமல் எடுத்த உடனேயே ஒரு முடிவுக்கு வரமுடியாது.."

 

கெல்லி என்கிற கெல்லி ரிச்சர்ட்சன் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் வேலை பார்ப்பவள். சிற்சில தவல்களைப் பகிர்ந்துகொள்வதில் அவளுக்கு சிரமம் ஏதும் இருப்பதில்லை.

 

"அங்குள்ளவர்களை ஏதாவது வகையில் சரிக்கட்டினால்தான் இது முன்னுக்கு நகரும். நான் வேண்டுமானால் தொடர்பு எடுத்துத் தருகிறேன்." கெல்லி தொடர்ந்தாள்.

 

"சரி.. எனக்கு அனுப்பி வையுங்கள்.. அடுத்தகட்டத்தை யோசிக்கிறேன்."

 

அலைபேசியை வைத்துவிட்டு விடிந்தவிட்டாலும் மேலும் ஒரு குட்டித்தூக்கம் போட எண்ணி போர்வைக்குள் நுழைந்துகொண்டேன். சிந்தனைகள் தறிகெட்டு ஓடியது. அங்கு போய் எந்த புளொக்கில் யாரை சந்திக்கவேண்டும்? சௌத் புளொக்கா, நோர்த் புளக்கா? எல்லா விவரங்களையும் கெல்லி தந்துவிடுவாள் என்கிற நம்பிக்கை இருந்தது. சௌத் புளொக் என்றால் சென்னையிலும், நோர்த் புளொக் என்றால் காத்மண்டுவிலும் இறங்கலாமா என்று சிந்தனை அழிச்சாட்டியம் செய்துகொண்டிருந்தது. :icon_idea:  :D

 

(தொடரும்.) 

Share this post


Link to post
Share on other sites

முதல் பச்சை  எனது

தொடருங்கள்.

Share this post


Link to post
Share on other sites

பாகம் 2:

 

அன்று நண்பகல். இணையத்தில் விசா விண்ணப்ப முறையை அறிந்துகொண்டு விண்ணப்பம் செய்யத் தயாரானேன். முன்புபோல் அல்லாது, இப்போது இணையத்திலேயே விண்ணப்பத்தை தரவேற்றும் வகையில் செய்திருந்தார்கள். இராஜாங்க விசா நடைமுறை எல்லாம் சிக்கலானது. ஏற்கனவே சுற்றுலா விசா கொடுக்காமல் இழுத்தடிக்கப்பட்ட அனுபவம் அடி வயிற்றைப் பினைந்துகொண்டு இருந்தது.

 

ஒரு முடிவுக்கு வந்தவனாக, சுற்றுலா விசா விண்ணப்பிக்க முடிவு செய்தேன். சுற்ருலாவுக்குச் சென்று அரசியல் பேசக்கூடாதுதான். ஆனாலும் ஆபத்துக்குப் பாவமில்லை.

 

அவர்களது இணையப்பக்கத்தில் எனது விவரங்களைத் தரவேற்றினேன். பதிவு இலக்கம் தரப்பட்டது. அதைக் குறித்து வைத்துக்கொண்டு, விண்ணப்பப் படிவத்தையும் பிரதி செய்துகொண்டேன். அடுத்த நாள் நேரில் சென்று விண்ணப்பத்தைக் கொடுக்க வேண்டும். இணையத்தின்மூலம் தரவேற்றியது நடைமுறையை துரிதமாக்க அவர்களுக்கு உதவும் என்று பின்னர் கேள்விப்பட்டேன்.

 

--------------------------------------------

 

மறுநாள் எனக்கு ஒதுக்கப்பட்ட குறித்த நேரத்தில் அங்கிருந்தேன். வழக்கமாக சந்தைக்கடை போலிருக்கும். இந்த முறையும் அப்படித்தான். ஆனால் காணும் நேரத்துடன் (Appointment) வந்தவர்களுக்கு சிறப்பு வரிசை இருந்தது. பத்து நிமிடத்திலேயே எனது இலக்கத்தை அழைத்தார்கள். அந்த அதிகாரிக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு அமர்கிறேன்.

 

"என்ன விடயத்துக்காக உங்களுக்கு விசா?"

 

"உறவினரைப் பார்க்க.."

 

"எத்தனை மாதங்கள் தேவை? மூன்று மாதங்களுக்கு விண்ணப்பிக்கப் போகிறீர்களா?"

 

"ஆம்.. ஆனால் உண்மையில் ஒரு மூன்று வாரங்கள்தான் தங்குவேன்.."

 

"சரி.. உங்கள் விவரங்கள் எல்லாம் நன்கு பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. $92.00 கட்டிவிடுங்கள். ஏழு வேலை நாட்களில் உங்கள் வீட்டுக்கே உங்கள் கடவுச்சீட்டை அனுப்பி வைத்துவிடுவோம். இணையத்தில் நிலமைகளை நீங்கள் அவதானிக்கும்வண்ணமும் செய்து தரப்பட்டுள்ளது."

 

"நன்றி."

 

வெளியே வருகிறேன். அப்பாடா.. வேறு ஒரு கேள்வியும் கேட்கவில்லை. ஏன் போனமுறை பிரச்சினை செய்தாய் என்கிற கேள்வி வருமோ என்று பயந்ததுபோல் எதுவும் நடக்கவில்லை. இருந்தாலும் அடுத்த ஏழு நாட்களுக்கு அந்தக் கேள்வி எழுப்பப்படலாம். எதுவும் நிச்சயமில்லை. இருந்தாலும் என்ன.. வந்தால் மலை.. போனால் முடி.. என்கிற முடிவுடன் வீட்டை நோக்கி நடையைக் கட்டினேன்.

 

(தொடரும்.) :D

Share this post


Link to post
Share on other sites

பாகம் 3:

 

பிரயாணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினேன். விசா கிடைக்கும் வரையில் விமானச் சீட்டுக்களை வாங்குவதில்லை என்பது முடிவு. போன்முறை முன்னதாக வாங்கிவிட்டு விசா கிடைக்காமல் அவதிப்பட்டது நினைவில் வந்து தொலைத்தது. கடைசி நேரத்தில் காசு கூடவாக இருந்தாலும் பரவாயில்லை. விசா கையில் வந்தபின்னர்தான் பிரயாணச் சீட்டை வாங்குவது என முடிவுசெய்துகொண்டேன்.

 

ஏற்கனவே வேலைக்கு மூன்று வாரங்களுக்கு விடுமுறை எடுத்தாகிவிட்டது. விசா கிடையாவிட்டால் கரீபியன் பக்கம் போய் காலத்தை ஓட்டலாம். இல்லாவிட்டால் மாலைதீவு வரைபோய் முயற்சிக்கலாம் என மனதுக்குள் எண்ணிக்கொண்டேன். :( இந்த மாலைதீவு ஐடியாவை அலுவலகத்தில் வேலைபார்க்கும் ஜேர்மானியனுக்கு சொன்னவுடன் அவன் குதூகலம் ஆகிவிட்டான். நல்ல திட்டம்.. கட்டாயம் செய்யுங்கள் என்று அட்வைஸ் வேறு.

 

--------------------------------------------

 

அடுத்த ஏழு நாட்கள் எப்படிப் போனதென்று நினைவில் இல்லை. அழைப்புமணிச் சத்தம் கேட்டது. வாசலில் கடவுச்சீட்டு. மனம் பக் பக் என்று அடிக்க உடைத்துப் பார்த்தேன்.  :unsure: 

 

நல்லவேளை விசா கொடுக்கப்பட்டிருந்தது. அப்பாடா.. இது ஒரு தொல்லை விட்டது. இனிமேல் பிரயாண ஒழுங்குகளைக் கவனிக்கலாம் என்று எண்ணியவாறு அழைப்புகளை ஏற்படுத்தி பிரயாணச் சீட்டுகளையும் பெற்றுக்கொண்டேன்.

 

வழக்கமாக லண்டன் வழியாக பிரயாணத்தை மேற்கொள்வதுதான் வழமை. அந்த உக்கல் விமானநிலையத்தைக் கண்டு அலுத்துவிட்ட காரணத்தினால் :D இம்முறை ஜேர்மனி வழியாக பிரயாணத்தை மேற்கொள்ள முடிவு செய்தேன். :huh: அவர்களுக்கு ஆங்கிலம் விளங்காவிட்டால் ஐன்ஸ், ஐன்ஸ்டைன் என்று எதையாவது சொல்லி சமாளிக்கலாம் என்கிற நம்பிக்கை இருந்தது.. :lol: 

 

என்னதான் விசா கிடைத்துவிட்டாலும் அங்கு போய் இறங்கியவுடன் திருப்பி அனுப்பப்பட்ட சில அவலக்கதைகளையும் கேள்விப்பட்டிருந்தேன். :unsure: அது இப்போது அடி வயிற்றைப் பினைய ஆரம்பித்திருந்தது. திருப்பிவிட்டால் நேரம் விரயம்.. பணமும் விரயம். இருந்தாலும் என்ன செய்வது. எடுத்த முயற்சியை கைவிடக்கூடாது என்கிற முடிவில் விமானம் ஏறும் நாளை எண்ணிக் காத்திருந்தேன்.

 

(தொடரும்.)  :(

Share this post


Link to post
Share on other sites

சுந்தர் .சி யின் படம் பார்த்த மாதிரி இருக்கு ,

கதாநாயகனுக்கு அங்கு வேலையே இருக்காது . :D

Share this post


Link to post
Share on other sites

பாகம் 3:

------

வழக்கமாக லண்டன் வழியாக பிரயாணத்தை மேற்கொள்வதுதான் வழமை. அந்த உக்கல் விமானநிலையத்தைக் கண்டு அலுத்துவிட்ட காரணத்தினால் :D இம்முறை ஜேர்மனி வழியாக பிரயாணத்தை மேற்கொள்ள முடிவு செய்தேன். :huh: அவர்களுக்கு ஆங்கிலம் விளங்காவிட்டால் ஐன்ஸ், ஐன்ஸ்டைன் என்று எதையாவது சொல்லி சமாளிக்கலாம் என்கிற நம்பிக்கை இருந்தது.. :lol: 

-------

 

ஆகா.... சூப்பர்.... இசை.

இதைத்தான்... உங்களிடம் எதிர் பார்த்தோம்.... தொடருங்கள். :)

 

டோய்......... தூங்கிக்கிட்டிருந்த சிங்கம், முழிச்சுட்டுதடா......th_leob.gif

ஓடி, ஒழியுங்கடா.... :D  :lol:

Share this post


Link to post
Share on other sites

கற்பனை அபாரம் . 

தொடருங்கள்.

Share this post


Link to post
Share on other sites

என்னதான் விசா கிடைத்துவிட்டாலும் அங்கு போய் இறங்கியவுடன் திருப்பி அனுப்பப்பட்ட சில அவலக்கதைகளையும் கேள்விப்பட்டிருந்தேன்.  :unsure: அது இப்போது அடி வயிற்றைப் பினைய ஆரம்பித்திருந்தது. திருப்பிவிட்டால் நேரம் விரயம்.. பணமும் விரயம். இருந்தாலும் என்ன செய்வது. எடுத்த முயற்சியை கைவிடக்கூடாது என்கிற முடிவில் விமானம் ஏறும் நாளை எண்ணிக் காத்திருந்தேன்.

 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

 

இதுதான் ஏன் என்று புரியவில்லை இசைகலைஞரே. கேபியால் விடுதலைபுலிகளின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட ஆனானப்பட்ட சாத்தானின் குழந்தையே எந்தப்பயமும் இல்லாமல் ஸ்டைலாக கூலிங்கிளாசை மாட்டிக்கொண்டு  ஒரு கீரோ ரேஞ்சில சென்னை மும்பாய் என்று சுற்றுலா சென்று எந்த பிரச்சினையும் இல்லாமல் திரும்பும் போது தங்களுக்கு அப்படி என்ன பிரச்சினை என்றுதான் புரியவில்லை.  :D  :D  :D 

Share this post


Link to post
Share on other sites

 

என்னதான் விசா கிடைத்துவிட்டாலும் அங்கு போய் இறங்கியவுடன் திருப்பி அனுப்பப்பட்ட சில அவலக்கதைகளையும் கேள்விப்பட்டிருந்தேன்.  :unsure: அது இப்போது அடி வயிற்றைப் பினைய ஆரம்பித்திருந்தது. திருப்பிவிட்டால் நேரம் விரயம்.. பணமும் விரயம். இருந்தாலும் என்ன செய்வது. எடுத்த முயற்சியை கைவிடக்கூடாது என்கிற முடிவில் விமானம் ஏறும் நாளை எண்ணிக் காத்திருந்தேன்.

 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

 

இதுதான் ஏன் என்று புரியவில்லை இசைகலைஞரே. கேபியால் விடுதலைபுலிகளின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட ஆனானப்பட்ட சாத்தானின் குழந்தையே எந்தப்பயமும் இல்லாமல் ஸ்டைலாக கூலிங்கிளாசை மாட்டிக்கொண்டு  ஒரு கீரோ ரேஞ்சில சென்னை மும்பாய் என்று சுற்றுலா சென்று எந்த பிரச்சினையும் இல்லாமல் திரும்பும் போது தங்களுக்கு அப்படி என்ன பிரச்சினை என்றுதான் புரியவில்லை.  :D  :D  :D 

 

 

என்னால.... முடியல.... சீமான்.

சிரித்து, வயிறு நோகுது.

காலங்காத்தால... எங்களை நீங்க இப்பிடி வருத்தலாமா.... :D  :lol: smiley_yeah.gif

Share this post


Link to post
Share on other sites

வாசித்து கருத்துகளைப் பதிந்த வி. அண்ணா, அ. அண்ணா, த.சிறீ, சீ.மான், க. றுப்பி எல்லோருக்கும் நன்றிகள்..! :D

Share this post


Link to post
Share on other sites

இப்பதான் பார்த்தேன் ///சூப்பர் ................. :D  :D

Share this post


Link to post
Share on other sites

பாகம் 4:

 

பிரயாண நாளுக்கு முன்தினம். அதிகாலையிலேயே அலைபேசி அழைத்தது.

 

"வணக்கம்.. யார் பேசுகிறீர்கள்?"

 

"நான் பல்விந்தர் சிங். என்னை பில்லி என அழைக்கலாம். கெல்லியிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொண்டோம். உங்களைக் கையாளப் போகும் நபர் நான்."

 

"சரி. என்ன விடயமாக என்னை அழைக்கிறீர்கள்?"

 

"எங்கள்பால் சிலருக்கு சில தேவைகள் இருப்பதாக அறியமுடிகிறது. எங்கள் ஆதரவினை வழங்கவேண்டுமானால் சில விட்டுக்கொடுப்புகளை நீங்கள் மேற்கொள்ளவேண்டி இருக்கும்."

 

"சரி. எத்தகைய விட்டுக்கொடுப்புகள்?"

 

"இது 25 வருடத்தின் சுமை. இதை அகற்ற நீங்கள் உதவும் பட்சத்தில் எங்களிடமிருந்து அனுகூலங்கள் கிடைக்கலாம்."

 

"சுமையை எடுத்துக் கொள்கிறோம். ஏற்கனவே நாங்கள் திட்டமிட்டதுதான்."

 

"நல்லது. இதற்குமேல் பேசுவதற்கு ஒன்றுமில்லை. உங்களுடன் நேரில் பேச முடியாது. நீங்கள் சுற்றுலா விசாவில் வருகிறீர்கள் என்பதை அறிந்துள்ளோம். வேறு சந்தேகங்கள் உள்ளனவா?"

 

"இப்போதைக்கு இல்லை. நன்றி."

 

இணைப்பு துண்டிக்கப்பட்டது. மீண்டும் தூக்கத்துக்குள் செல்கிறேன்.

 

--------------------------------------------

 

பிரயாண நாளும் வந்தது. மாலை 6:30க்கு லுஃப்ரான்சா விமானத்தில் பயணம். மாலை மூன்று மணிக்கு பள்ளிக்கூடத்தில் இருந்து மகளை கூட்டிக்கொண்டு மனைவியுடன் விமான நிலையம் செல்வதுதான் திட்டம். நேரம் கொஞ்சம் இறுக்கமாகத்தான் இருக்கப் போகிறது. பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை எடுக்கவேண்டாமே என்கிற எண்ணத்தில் இந்த ஏற்பாடு.

 

மாலை மூன்று மணி. அவசர அவசரமாக விமான நிலையம் செல்கிறோம். குறுகிய நேரம் காரை நிறுத்துவதற்கு தனியான கட்டடம் உள்ளது. அதற்குள் காரை செலுத்தி தரிப்பிடங்களைத் தேடுகிறோம். எல்லாமே நிறைந்துள்ளது. இங்குமங்கும் ஓடித் திரிந்ததில் மணி 4:00 ஆகிவிட்டது. பதற்றம் தொற்றிக்கொண்டது. 

 

காரை விட்டு இறங்கி நான் மட்டும் நடந்து செல்வதும் இயலாத காரியம். பயணப் பொதிகளை நான் ஒருவனாக கைகளில் எடுத்துச் செல்ல முடியாது. ஆறாவது மாடியில் தேடிக்கொண்டிருக்கும்போது நல்ல வேளையாக யாரோ ஒரு புண்ணியவான் தள்ளு வண்டிலை (cart) விட்டுவிட்டுப் போயிருந்தான். அப்பாடா என்று அதை எடுத்துக்கொண்டு நான் விமான நிலையத்துக்குள் போய்விட்டேன். நேரம் 4:30.

 

வரிசையில் நிற்கும்போது மனைவியும், பிள்ளையும் வந்துசேர்ந்தார்கள். எங்கேயோ ஒரு மூலையில் தரிப்பிடத்தைக் கண்டுபிடித்திருந்தார்கள்.

 

எல்லா சடங்குகளையும் முடித்துக்கொண்டு மனைவி, குழந்தைக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு உள்ளே செல்கிறேன். இனிமேல் 22 மணித்தியாலங்களுக்குப் பயணம் மட்டுமே. :huh:

 

(தொடரும்.) 

Share this post


Link to post
Share on other sites

பாகம் 5:

 

விமானத்துக்குள் ஏறி எனது இருக்கையை நோக்கிச் செல்கிறேன். ஜன்னல் ஓரமாக எனது இருக்கை. பக்கத்து இருக்கையில் ஒரு கறுத்த, ஒல்லியான இளைஞர் திருதிரு முழியுடன் உட்கார்ந்திருந்தார். இவரை ஏற்கனவே விமான நிலையத்திற்குள் கண்ட ஞாபகம். அவரிடம் வருத்தம் தெரிவிக்கவும், அவர் எழுந்து இடம் கொடுத்தார். புன்னகையுடன் நன்றி தெரிவித்துவிட்டு எனது இருக்கையில் அமர்ந்துகொண்டேன்.

 

ஒரு ஐந்து நிமிடங்கள் கழிந்திருக்கும். 

 

"ஹலோ.. ஐ ஆம் முருகேசன்.." ஒரு கை மட்டும் நீண்டு வந்தது.. :D

 

சிரிப்புடன் என்னையும் அறிமுகம் செய்து கொண்டேன். ஆங்கிலத்தில் உரையாடல் தொடர்ந்தது.

 

"நீங்கள் எந்த ஊர்?" ஆள் எந்த நாடு என்பதை அறிய கேட்டு வைத்தேன். 

 

"ஐ ஆம் ஃப்றொம் பட்டுக்கோட்டை இன் தமிழ் நாட்."

 

"அப்போ தமிழ்லயே பேசலாமே?" என்றேன்.

 

அவருக்கு ஆச்சரியம். என்னை கொல்ட்டி (தெலுங்கர்) என நினைத்திருந்தாராம். :blink: இருவருக்கும் மகிழ்ச்சி.

 

வேலை நிமிர்த்தமாக வெளிநாடுகளுக்குச் சென்று வருவாராம். நீங்கள் எதிர்பார்ப்பதுபோல தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை செய்பவர்தான். :D சென்னையில்தான் அவரது நிறுவனம் உள்ளது என்றார்விமானம் புறப்படவும் உரையாடலும் பல திசைகளில் சென்று வந்தது. இதில் தமிழர், தாயகம் சம்பந்தமான விடயங்களும் இடம்பெறத் தவறவில்லை.

 

தற்காலத்தில் தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு உள்ளதுபோல் உணர்வுகள் அவருக்கும் இருந்தது. ஆனால் ஈழத்தமிழர்கள் தங்கள் பாட்டைப் பார்த்துக்கொண்டு போவதாக குறைபட்டுக்கொண்டார். அந்த மனப்பாங்கு ஏன் ஏற்படுகிறது என்பதை சொல்லி வைத்தேன். சற்றுப் புரிந்துகொண்டார்.

 

திடீரென்று உரையாடலை வள்ளலாரை நோக்கித் திருப்பிவிட்டார். அவரது கையில் வள்ளலார் சம்பந்தமான புத்தகம் ஒன்றும் இருந்தது. திருவருட்பா முதற்கொண்டு, வள்ளலார் அருளிச்சென்று மூலிகை வைத்தியங்கள் வரையில் விளக்கிக்கொண்டு வந்தார். பல தகவல்கள் சிந்தனையைத் தூண்டுவனவாக அமைந்தன. இடையிடையே மெதுவாகப் பேசும்படி கேட்டுக்கொண்டேன். அக்கம்பக்கத்தில் தூக்கம் கெட்டுவிடும் என்கிற காரணத்தினால். சிரிப்புடன் புரிந்துகொண்டார்.

 

கிட்டத்தட்ட ஒரு மூன்று மணிநேரம் அலட்டியபின் தூக்கம் கண்களை தழுவ ஆரம்பித்தது.

 

(தொடரும்.)

 

Share this post


Link to post
Share on other sites

எனக்குத் தூக்கம்போச்சு, பாகம் ஆறு, ஆடிவருமா? ஒடிவருமா?

 

இக்கதையை வடிக்கும் நடை ஒரு புது நடை, அழகான கம்பீரமான நடை, தொடருங்கள். வாழ்த்துக்கள்!!

Share this post


Link to post
Share on other sites

பாகம் 6:

 

இந்த விமானம் சற்று வித்தியாசமான உள் வடிவமைப்பைக் கொண்டிருந்தது. வழக்கமாக கழிவறைகள் ஆங்காங்கே இரண்டிரண்டாக அமைக்கப்பட்டிருக்கும். இந்த விமானத்தில் கீழே படியில் இறங்கிச் செல்வது போலவும் அமைத்திருந்தார்கள். கீழே போனால் ஒரே இடத்தில் ஆறு கழிவறைகள் இருந்தன. :huh: ஜேர்மன்வாலாக்கள் சத்தம் போடுவார்கள் என்று தாராளமாக கட்டிவிட்டிருந்தார்கள்.. :D

 

தூக்கமும், சாப்பாடும், பழச்சாறுமாக அடுத்த நான்கு மணிநேரங்கள் கழிந்தன. ஒருவழியாக ஒரு ஏழு மணிநேரப் பயணத்தின் முடிவில் ஃபிராங்க்ஃபர்ட் சென்றடைந்தோம். விமானம் தரையிறங்கியதும் ஜேர்மன்காரர் எல்லோரும் கைதட்டி விமானிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்.  :huh: உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வந்திருப்பார்கள் போல.  :wub:

 

இறங்கிய கையோடு விமான நிலையத்துக்குள்ளே ஓடும் ரயிலைப் பிடித்து அடுத்த விமானம் புறப்படும் இடத்தைச் சென்றடைந்தோம். பட்டுக்கோட்டை வாலிபரும் கூடவே வந்தார். :D இம்முறை எல்லாமே மண் நிற தோல்களாக இருந்தது. நான் பாஸ்டன்லருந்து வரேன்.. நான் நியூயார்க்லருந்து வரேன்.. என்று பேசிக்கொள்வது காதில் விழுந்தது.  :wub:

 

சில மணிநேரங்களின்பின் அடுத்த விமானம் தயார் என அறிவித்தார்கள். இந்த அடுத்தகட்டப் பயணம் கிட்டத்தட்ட 11 மணித்தியாலங்கள். இப்போது பட்டுக்கோட்டையார் விமானத்தில் வேறு இடத்தில் அமர்ந்திருந்தார். எனக்கு அருகில் அமர்ந்திருந்தது யார் என்பது இப்போது ஞாபகத்தில் இல்லை. கண்டிப்பாக அது ஒரு சூப்பர் ஃபிகர் கிடையாது. :lol:

 

விமானம் புறப்பட்டது. ஒரு சிற்றுண்டியின் பின், திரைப்படம் பார்க்க முடிவு செய்தேன். முதலில் 12 years a slave என்கிற படம். நல்ல படம் தான். ஆனால் மன அழுத்தம் வராதது ஒன்றுதான் குறையாக இருந்தது.  :o

 

அது முடிந்த கையோடு அடுத்த படத்தைப் போட்டேன். இம்முறை All is lost என்கிற படத்தை தெரிவு செய்தேன். படத்தில் ஒரே ஒரு நடிகர்தான். அவர் பிரயாணம் செய்த பாய்மரக்கப்பல் நடுக்கடலில் சேதமாகிவிடுகிறது. அவர் தன்னை காத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்கிறார்; இறுதியில் தப்பிப் பிழைத்தாரா என்பதுதான் கதை. மிக அருமையான படம்.

 

படம் பார்த்து முடித்த கையோடு மறுபடி ஒரு நீண்ட தூக்கம். கண்விழித்துப் பார்த்தபோது விமானம் இந்தியாவை நெருங்கிக் கொண்டிருந்தது. உள்ளே விடுவார்களா என்கிற யோசனை மறுபடியும் எட்டிப் பார்த்தது.  :unsure:

 

(தொடரும்.)

Share this post


Link to post
Share on other sites

பாகம் 7:

 

விமான சிப்பந்திகள் கொடுத்த கோப்பியைக் குடித்து, அவர்கள் தந்த சூடான ஈரத் துவாலையால் முகம், கை, கழுத்து என துடைத்தெடுக்க, அகன்றுபோன உற்சாகம் மீளவும் வந்து பற்றிக்கொண்டது.

 

விமானம் தரையைத் தொட்டதும் கூவம் நாற்றத்தை எதிர்பார்த்தேன். ஏழு வருடங்களுக்கு முன் இந்த அனுபவம் எனக்கு ஏற்பட்டிருந்தது. ஆனாலும் ஆச்சரியம்.! இந்தமுறை அந்த வாடையை உணர முடியவில்லை.

 

எல்லோரும் இறங்கும் வரையில் பொறுத்திருந்தேன். ஏற்கனவே நள்ளிரவு. இதில் அவசரப்படுவதில் அர்த்தம் இல்லை. என்னை வரவேற்பதற்கு யாரும் விமான நிலையத்திற்கு வரவும் இல்லை. சுதந்திரப் பறவைதானே..! :D

 

மெதுவாக இறங்கி சென்னை விமான நிலையத்தினுள் கால் பதித்ததும் ஏதோ எமது ஊரில் கால் வைத்ததுபோல் ஒரு பிரமை. எல்லோரும் குடிவரவுப் பகுதியில் வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள். பட்டுக்கோட்டையாரும் முன்னதாகவே சென்று வரிசை ஒன்றில் நின்றுகொண்டிருந்தார். :D இந்தக் கட்டத்தைக் கடந்தால் சென்னை மண்ணில் கால் வைப்பது உறுதி. :huh:

 

வரிசையில் நிற்கும்போது யாரோ சத்தமாகக் கத்தும் ஒலி கேட்டது. திரும்பிப் பார்த்தால் நேர்த்தியாக உடுத்தியிருந்த ஒரு நடுத்தரவயது மொட்டைத்தலை மனிதர் காவல்துறை அதிகாரி, விமான நிலைய ஊழியர்கள் என யாவரையும் பார்த்து கத்திக் கொண்டிருந்தார். அவர்கள் இவருக்கு பவ்யமாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மற்றவர்களது பேச்சு எதுவுமே காதில் விழவில்லை. வரிசையில் நின்ற அந்த அரைமணி நேரமும் இவரது கத்தல்தான். இறுதியில் ஒரு கதிரையில் உட்கார்ந்து கத்திக் கொண்டிருந்தார். வெளிநாட்டுப் பயணிகள் ஆளை ஆள் பார்த்தபடி மருட்சியுடன் நின்றிருந்தார்கள். காவல்துறை வரவும் இல்லை. ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  :blink:

 

எனது முறை வந்தது. எனது கடவுச்சீட்டையும், நிரப்பிய குடிவரவுச் சீட்டையும் கொடுத்தேன். பக்கங்களைத் திருப்பிப் பார்த்த அதிகாரி என்னுடைய விசாவை ஸ்கானிங் செய்தார். திரும்பவும் செய்தார். எதுவும் வரவில்லை. அதில் இருந்த விசா நம்பரையும் கணினியில் தட்டிப் பார்த்தார். அதுக்கும் ஒன்றும் வரவில்லை. சரிதான்.. ஆரம்பிச்சிட்டாங்கடா என்று நினைக்க ஆரம்பித்துவிட்டேன்.

 

அந்த அதிகாரி அருகில் இருந்த மற்ற அதிகாரியை அழைத்தார்.

 

"என்ன எதுவுமே வரமாட்டேங்குது?"

 

"அதுவா.. அது வழக்கமா நடக்குறதுதானே.. அப்டேட் ஆகியிருக்காது சார்.."

 

அப்பாடா.. இது ஏதோ உள்ளூர் பிரச்சினை என்று தெம்பு வந்தது.

 

கடகடவென்று கணினியில் எதையோ தட்டினார்.. முத்திரையை குத்தினார்.. போய்ட்டு வாப்பா என்றூ அனுப்பி வைத்தார்.. :D

 

ஆஹா.. தடையைத் தாண்டினேனே.. Happy  இன்றுமுதல் Happy   :D என்று மனதுக்குள் பாடிக்கொண்டே பயணப் பொதிகளை கவர்ந்து கொண்டேன். சுங்கவரித்துறையில் காட்டுவதற்கு எதுவும் இருக்கவில்லை.. வரவேற்பு பகுதிக்கு வந்தபோது மணி நள்ளிரவு 1:30 ஆகி விட்டிருந்தது.

 

நேராக விமான நிலைய வாடகை மகிழுந்து பதியும் இடத்திற்குச் சென்றேன்.

 

"எங்கே சார் போகணும்?"

 

"ரெசிடென்சி டவர்ஸ்."

 

"ரூ.350 ஆகும் சார்.."

 

"சரி.."

 

காசைக் கட்டியவுடன் ஒரு வாகன ஓட்டுநர் வந்து அழைத்துச் சென்றார். நான் கேட்காமலேபயணப் பொதிகளை இன்னொருவர் தள்ளி வந்தார், .. லண்டன் தொழிலதிபரை கடத்தியது ஞாபகத்தில் வந்து தொலைத்தது.  :o  :D

 

(தொடரும்.)

Share this post


Link to post
Share on other sites

அமெரிக்க தீர்மானத்தை இந்தியா  கவுட்டாலும்

தீர்மானம் வெற்றி

 

இசையின் தீர்மானம்??? :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

கருத்துக்களைப் பதிந்த த.சூ., பாஞ்சு, வி. அண்ணா எல்லோருக்கும் நன்றிகள்..! :D


அமெரிக்க தீர்மானத்தை இந்தியா  கவுட்டாலும்

தீர்மானம் வெற்றி

 

இசையின் தீர்மானம்??? :icon_idea:

 

கதை முடியும்போது பாருங்கோ.. ஏன் இந்தியா ஒதுங்கிக்கொண்டது என்பது புரியும்.. :lol:

Share this post


Link to post
Share on other sites

சென்னை தன் கலைஞர்களின் எண்ணிக்கையை மேலும் ஒன்றினால் இன்று அதிகரித்துக் கொண்டது.

Share this post


Link to post
Share on other sites

பாகம் 8:

 

பொதிகள் எல்லாம் வாகனத்துக்குள் ஏற்றப்பட்டுவிட்டன.

 

"சார்.." தலையை சொறிந்தார் பொதிகளைத் தள்ளி வந்தவர். பணப்பையை வெளியே எடுக்கவும் யோசனையாக இருந்தது. வெளிநாட்டுத் தாள்கள் இருப்பதால் பிரச்சினையாகிவிடுமோ என்று தோன்றியது. இருந்தாலும், வெளியே எடுத்து ஒரு இருபது ரூபாயை நீட்டினேன். :lol: வாங்கிக்கொண்டு தொடர்ந்தார்.

 

"சார்.. பெரிய நோட்டா குடுங்க சார்.." சிரித்தபடியே கேட்டார். :wub: ஒரு நூறு ரூபாயை கொடுத்துவிட்டு காரில் கிளம்பினேன்.

 

ஒரு இருபது நிமிடத்திற்கு அசகாய ஓட்டம். சென்னை ரொம்பவே மாறிவிட்டிருந்தது. மேம்பாலங்கள், நிலக்கீழ் தொடரூந்துக்கான வேலைகள் என ஒரே கட்டுமானப் பணிகளாக இருந்தது. பார்ப்பதற்கு மிகவும் மகிழ்வாக இருந்தது.

 

2011060863850301.jpg

 

ஓட்ட முடிவில் தங்கும் விடுதியை சென்றடைந்தேன். ரெசிடென்சி டவர்ஸ் விடுதியைப் பற்றி ஏற்கனவே அங்கு ஒருமுறை தங்கிய உறவினர் வாயிலாக ஏற்கனவே அறிந்து கொண்டிருந்தேன். Trip Advisor இணையத்தளத்திலும் நன்றாக எழுதியிருந்தார்கள். அதனால் முன்பதிவு செய்து வைத்திருந்தேன். வாசலில் கார்களை நிறுத்தி குண்டுகள் உள்ளனவா என்று பரிசோதிக்கிறார்கள். எமது பயணப் பொதிகளும் விமான நிலையங்களில் உள்ளதுபோல ஸ்கானிங் செய்து பரிசோதிக்கப் படுகின்றன. நாங்களும் தானியங்கி பரிசோதனை முறைமைக்குள்ளால்தான் சென்று வரவேண்டும்.

 

ஆனாலும், விருந்தினர்களுக்கு வரவேற்பு படு ஜோர். :D ஒரே உபசரிப்புதான். மேலை நாடுகளில் காணக்கிடைக்காத ஒன்று. பரிசோதனைகளை முடித்துக்கொண்டு உள்ளே சென்றேன். அடேயப்பா..!! :wub:

 

3117_457_0.jpg

 

மேலை நாடுகளில் நடுத்தர விடுதிகளுக்கு ஆகும் அதே செலவில் அட்டகாசமான தங்குமிடம் இது. ஆகா.. இதுவல்லவோ சொர்க்கம் என்பது போலிருந்தது.. :D

 

சம்பிரதாயங்களை முடித்துக்கொண்டு 18 ஆவது மாடியில் எனது அறைக்குச் செல்கிறேன். பயணப்பொதிகளை மேலே கொண்டுவந்து தருகிறார்கள். அறையின் அமைப்பை விளக்கிவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். யாரும் டிப்ஸ் எதிர்பார்க்கவில்லை.

 

அறை சுத்தம் என்றால் அந்த மாதிரி ஒரு சுத்தம். எல்லா வகையான வசதிகளும் செய்து தரப்படுகின்றன. மினி பார் கூட உள்ளே வைத்துள்ளார்கள். :wub:

 

110099_14021416280018346106_STD.jpg

 

பரவாயில்லை.. வந்ததுக்கு இது ஒரு நல்ல விடயம் என்று எண்ணிக்கொண்டு ஒரு குளியல் போட்டுவிட்டு போர்வைக்குள் நுழைந்துகொண்டேன்.

 

(தொடரும்.)

Share this post


Link to post
Share on other sites

இசை இப்பிடி எழுதி இந்தியா போகும் எண்ணத்தைப்பின்தள்ளி முடியாமல் முன்னோக்க வைக்கிறீங்களே நியாயமா?

Share this post


Link to post
Share on other sites

கதை ஒரு தனிமையாய் போகுது....கிளுகிளுப்புகளையும் காணேல்லை....போட்ட படத்திலையும் பாலம் குறையிலை நிக்கிது...திரிசா வேறை வீட்டிலை தங்குது????lol2.gif

 

தொடருங்கள்...... :)

Share this post


Link to post
Share on other sites

அமேரிக்கா தீர்மானம் நிறைவேற்றுமா இல்லையா?...இசை தீர்மானம் நிறைவேற்றுவரா இல்லையா?:D

Share this post


Link to post
Share on other sites

காசைக் கட்டியவுடன் ஒரு வாகன ஓட்டுநர் வந்து அழைத்துச் சென்றார். நான் கேட்காமலேபயணப் பொதிகளை இன்னொருவர் தள்ளி வந்தார், .. லண்டன் தொழிலதிபரை கடத்தியது ஞாபகத்தில் வந்து தொலைத்தது.  :o  :D

 

சென்னை விமான நிலையத்தில் நமது பொதிகளை 'கன்வேயர் பெல்டி'லிருந்து சேகரிப்பது முதல் வெளியே வந்து வாகனத்தில் ஏறும் வரை இந்த இடைத் தரகர்களின் தலை சொறிந்து நிற்கும் தொல்லை அதிகம். கொஞ்சம் ஏமாந்தால் உங்களின் சிறு பொதிகளும் நுணுக்கமாக கடத்தப்பட்டுவிடும். மிகவும் சிநேகமாக நடந்து உதவி செய்வார்கள், முடிவில் டிப்ஸ் (அதுவும் வெளிநாட்டு கரன்ஸியில்) வலுக்கட்டாயமாக கொடுக்கவேண்டிய நிலைக்கு ஆளாக நேரிடும். வெளிவாசல் அருகே இருக்கும் ஏர்போட் டாக்ஸி கவுண்டரிலிருந்தே இந்த தொல்லைகள் அதிகமாக இருக்கும்.

 

வெளி வரும்போது தைரியமாக நம் பொதிகளை நாமே டிராலியில் தள்ளிக்கொண்டு வரவேண்டும். ஜெலினியா, திரிசாவே உங்களை அப்பொழுது கடந்தாலும் ஜொள்ளு விடாமல், எந்த பராக்கு பார்க்கும் வேலைகளை செய்யாமல் விழிப்புடன் இருக்கவேண்டும். தவறினால் உடமைகளை இழக்க நேரிடும். :)

 

Share this post


Link to post
Share on other sites

...ரெசிடென்சி டவர்ஸ் விடுதியைப் பற்றி ஏற்கனவே அங்கு ஒருமுறை தங்கிய உறவினர் வாயிலாக ஏற்கனவே அறிந்து கொண்டிருந்தேன்.

 

இந்த ஓட்டலை தி.நகர் வடக்கு போக் சாலையும் தியாகராய சாலையும் சந்திக்கும் முனையில் பார்த்த ஞாபகம். இதன் அருகே 'ஜி.ஆர்.டி கிராண்ட்' என்ற ஓட்டலும் உள்ளது எதிர்த்த சாலையான சவுத் போக் சாலையினுள்ளே சிவாஜி கணேசன் வீடும் , எம்.ஜி.ஆர் நினைவு இல்லமும் பார்த்துள்ளேன்.

 

Share this post


Link to post
Share on other sites