• ×   Pasted as rich text.   Paste as plain text instead

    Only 75 emoji are allowed.

  ×   Your link has been automatically embedded.   Display as a link instead

  ×   Your previous content has been restored.   Clear editor

  ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • ஸ்ரீலங்கா, சிங்கள பெளத்தத்தின் இயங்கு விசை அனாகரிக தர்மபாலவினுடையது,  இது இந்த பழய மதநூல்களை ( குரான், பைபிள், கீதை) விட மிக மோசமானது.... உங்கள் நம்பிக்கை மிக மெல்லியது.
  • 'மனித நேயம்' என்ற வார்த்தை மரித்துக்கொண்டிருக்கும் இன்றைய அவசர உலகில், தன்னலமற்ற ஒருசில மனிதர்கள் தங்களின் செயல்களால் அதை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படியான ஒருவர்தான், புதுச்சேரியைச் சேர்ந்த ஜோசப். மாற்றுத்திறனாளியான இவர், புதுச்சேரி சாரம் பகுதியில் சிறிய அளவில் பிரின்டிங், பைண்டிங் மற்றும் ரப்பர் ஸ்டாம்ப் செய்யும் கடை வைத்திருக்கிறார். சமூகத்தின்மீது மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் இவர், தனது சொற்ப வருவாயில் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வருவதோடு, விளிம்புநிலையில் இருப்பவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்துவருகிறார். ஒப்பீட்டளவில், சராசரி மனிதர்களைவிட உயரம் குறைந்து காணப்படும் இவரின் சட்டைப் பையில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஸ்மைலிகள், ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு வாசகம், 100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் வாசகம் போன்றவை மாறி மாறி இடம்பிடித்திருக்கும். அந்த வரிசையில், '100% டெங்கு கொசுவை ஒழிப்போம்' என்ற வாசகங்களுடன் வீதி வீதியாக வலம்வருகிறார், ஜோசப். வாடகைக்கு எடுத்த கொசு மருத்து இயந்திரத்தைத் தனது சிறிய தோளில் சுமந்துகொண்டு கழிவுநீர் வாய்க்கால்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார். சக்தி நகர் என்ற பகுதியில் மருந்து அடித்துவிட்டு, தனது கடையில் அமர்ந்தவரை சந்தித்தோம். “மருந்து தீர்ந்துபோயிடுச்சி சார்.   நாளைக்குத்தான் வாங்கணும். இன்னைக்கு வருமானம் அந்த அளவுக்கு இல்லை” என்று பேசத் தொடங்கினார். “நீங்க பேட்டி எடுக்கற அளவுக்கு நான் பெருசா எதுவும் பண்ணிடல சார். என்னால முடிஞ்ச உதவிய என்னை சுத்தியிருக்கிறவங்களுக்கு செய்யறேன். அப்பா அல்போன்ஸ், அம்மா அற்புதம் மேரி. ஏழு பேருல 5-வது பையன் நான். 9-ம் வகுப்புக்கு மேல படிப்பு ஏறல. ரப்பர் ஸ்டாம்ப் செய்யிற கடைக்கு வேலைக்குப் போயிட்டேன். 2011 வரைக்கும் அந்த வேலைதான். அந்த வருஷம்தான் கண்ணன்னு ஒரு நல்ல மனிதர் மூலமா தனியா ஒரு கடையை நடத்துற வாய்ப்பு கெடச்சுது. மாசம் ஐயாயிரம், எட்டாயிரம்னு வருமானம் வந்துட்டு இருந்துச்சி. இப்போல்லாம் புத்தகங்களுக்கு பைண்டிங் பண்ணுறது குறைஞ்சிட்டதால வருமானமும் குறைஞ்சிடுச்சி. கவருமென்டு பள்ளிக்கூடத்துல படிக்கிற ஏழைப் புள்ளைங்க புத்தகங்களுக்கு நான் பணம் வாங்குறது இல்ல. ஒருநாள் கடைய முடிச்சிட்டு வீட்டுக்குக் கெளம்பும்போது, கண்ணு தெரியாத பெரியவர் ஒருத்தர் கீழ விழுந்துட்டாரு. அவரைத் தூக்கிவிட்டு தண்ணீர் கொடுத்து சாப்பாடு வாங்கிக் கொடுத்தேன். அப்போதான் நாம வாழுற வாழ்க்கை யாருக்காவது உபயோகமா இருக்கணும்னு எனக்குப் புரிஞ்சுது. மறுநாள், கவருமென்டு ஆஸ்பிட்டல், பஸ் ஸ்டாண்டு பகுதியில இருந்த கண்ணு தெரியாத, நடக்க முடியாம இருந்தவங்களுக்கு கைலி, துண்டு, சாப்பாடுனு வாங்கிக் கொடுக்க ஆரம்பிச்சேன். எனக்கு வரும் கொஞ்ச வருமானத்துக்கு, எல்லா நாளும் இதைச் செய்ய முடியாது. வேலை அதிகமா வரும்போது, அவங்களுக்குத் தேவையானதை வாங்கிட்டுப் போவேன். சக மனிதர்களை நேசிக்கிறதுதான் உண்மையான வாழ்க்கைனு புரிய ஆரம்பிச்சுது. சேவை மனப்பான்மை கொண்ட ஒரு பல் டாக்டர் உதவியால இலவச பல் மருத்துவமனை முகாம் நடத்தியிருக்கிறேன். வீடு வீடா நானே போய் நோட்டீஸ் கொடுத்து மக்களைத் திரட்டினேன். அதேபோல, இலவச கண்சிகிச்சை முகாம் ஒண்ணு நடத்தணும்னு ஆசை. அதுக்கான முயற்சிகளையும் செஞ்சுக்கிட்டு இருக்கேன். நெல்லித்தோப்பு இடைத்தேர்தல், 2018 நாடாளுமன்றத் தேர்தல் சமீபத்தில் நடந்த காமராஜர் நகர் இடைத்தேர்தலில் வீடு வீடாகச் சென்று 100% வாக்குப்பதிவை வலியுறுத்தினேன். இப்போது டெங்கு காய்ச்சல் அதிகமா பரவிக்கிட்டு இருக்குன்னு பேப்பர்ல படிச்சேன். என்ன செய்ய முடியும்னு யோசிச்சேன். எல்லா இடத்துக்கும் போயி மருந்து அடிக்கிறதுக்கு என் உடம்பு ஒத்துழைக்காது. அதனால, எனக்குப் பக்கத்துல இருக்கிற இடங்கள்ல கொசு மருந்து அடிக்கலாம்னு முடிவு எடுத்து வாடகைக்கு அந்த மெஷினை எடுத்தேன். அதுல மருந்து ஊத்தி நானே வாய்க்கால்ல அடிக்க ஆரம்பிச்சேன். சிலர் அவங்க வீட்டுலயும் அடிக்கச் சொல்லி உரிமையோட கேட்டப்ப சந்தோஷமா இருந்துச்சி. இதுதாங்க வாழ்க்கை. வாழுற வரைக்கும் நம்மால முடிஞ்ச உதவிகளை மத்தவங்களுக்கு செய்யணும்னுதான் என் ஆசை. என்னால வண்டி ஓட்ட முடியாததால, எங்க போனாலும் நடந்தே போகவேண்டியிருக்கு. எனக்குத் தகுந்த மாதிரி வண்டி செய்ய முடியும்னு ஒரு ஷோரூம்ல சொல்லி இருக்காங்க. பணம் வந்தவுடன் வாங்கிடுவேன். அதுக்கப்புறம் நடக்க முடியாதவங்களை ஏத்திக்கிட்டுப் போகலாம்” என்கிறார் உற்சாகமாக. உடலளவில் உயரம் குறைவாக இருக்கும் ஜோசப் போன்ற உள்ளங்கள், தங்களின் மனித நேயத்தால் விண்ணைத் தொடுமளவிற்கு உயர்ந்து நிற்கிறார்கள். https://www.vikatan.com/news/miscellaneous/story-about-pondicherry-confident-man-joseph
  • Habaraduwa Polling Division - Galle District Gotabaya Rajapaksa – 47,659 Sajith Premadasa – 17,487 Anura Dissanayake – 2,264   அம்பாந்தோட்டை - தபால் மூல வாக்களிப்பு கோத்தபாய  - 12,983 சஜித் - 3,947 அநுர - 1,731
  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீர்வு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு 1,043 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 29 லட்சத்து 37 ஆயிரத்து 650 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவின் இறுதியில், தேசிய பத்திரிகையாளர்கள் தினத்தை முன்னிட்டு, செய்தியாளர்களுடன்‌ அமைச்சர் கடம்பூர் ராஜூ கேக் வெட்டி கொண்டாடினார். வரும் புத்தாண்டுக்குள், நிச்சயமாக வாரியம் அமைக்கப்படும். திரையரங்குகளில், படம் திரையிடுவதற்கு முன் திருக்குறள் ஒலிபரப்பப்பட்டு வந்தது. அதேபோல், திரையில் படத்தின் தலைப்பு போடுவதற்கு முன்னதாக திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் வெளியிடுவதற்கு, தயாரிப்பாளர்கள் சங்கப் பிரதிநிதிகளிடம் அறிவுறுத்தப்பட்டு ஒலிபரப்பப்படும்” என்றார்.   இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை போட்டியிட விரும்புபவர்களிடம் முதலில் விருப்ப மனுக்களைப் பெற்றது அ.தி.மு.கதான். அதன் பின்னர்தான், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனுக்களைப் பெற்றுவருகின்றன. வாக்காளர் பட்டியல் வெளிப்படையாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உள்ளாட்சியில் உள்ள வார்டுகளில், சுழற்சி முறையில் யார் போட்டியிட வேண்டும் என்பது தொடர்பாகவும் வெளிப்படையாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதைவிட வெளிப்படைத்தன்மை என்ன வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்தான் விளக்கிச் சொல்ல வேண்டும். முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் வெற்றிடங்களை அவர்கள்தான் நிறைவுசெய்ய முடியும். அவர்களுக்குப் பின்னர் கட்சியில் வெற்றிடம் இல்லாமல் இருப்பதால்தான் ஆட்சி முழுமையாகச் செயல்படுத்தப்படுகிறது. தமிழக முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், வெற்றிடம் இல்லாமல் கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்திவருகின்றனர். வெற்றிடம் என்று நினைப்பவர்களுக்கு, அதை நினைக்க மட்டுமே உரிமை உண்டு. யாருக்கு வெற்றிடம், எங்கு வெற்றிடம் என்பது அவர்களுக்குத்தான் தெரியும். தமிழகத்தைப் பொறுத்தவரை வெற்றிடம் என்பதே இல்லை. பத்திரிகையாளர்கள் நலவாரியத்திற்கான பூர்வாங்கப் பணிகள் நடந்துவருகின்றன. வாரியம் அமைப்பதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது.   https://www.vikatan.com/government-and-politics/politics/thirukkural-broadcast-before-movie-title-in-theaters-minister-kadambur-raju
  • சிங்கள புதிய தலைமுறை நவீன உலக ஒழுங்கை விரும்பும் தலைமுறையின் சிந்தனை என்பது அடிப்படை சிங்களவர்களின் சிந்தனையோட்டத்தில் இருந்து மாறுபட்டது. அந்தப் புதிய தலைமுறை ஒரு சிறிய சதவீதமாக இருந்தாலும்.. எதிர்காலத்தில் அதுவே வளரும் சமூகமாகும். தமிழ் மக்களின் சிந்தனை வேறுபட்டது. அவர்கள்.. இலங்கைத் தீவுக்குள் தமக்கான உரிமையை நிலைநாட்டுவதில்.. தொடர்ந்து விருப்போடு இருப்பதோடு.. தம் இனத்தை கொன்றொழித்தவர்களை மன்னிக்கவோ மறக்கவோ தயார் இல்லை.  டக்கியின் கோட்டை என்று டக்கி தனது தலைமையகம் என்று கருதத் தக்க அளவுக்கு ஊரார் வீடுகளை கட்சி வீடுகளாக்கி வைத்திருக்கும்.. நிலையில் கூட.. டக்கியின் சொல்லை அந்த மக்கள் செவி மடுத்திருப்பதாகத் தெரியவில்லை.