Archived

This topic is now archived and is closed to further replies.

இசைக்கலைஞன்

அமெரிக்க தீர்மானம்

Recommended Posts

அடுத்து என்ன நட‌ந்திருக்கும்... என்ற ஆவலைத் தூண்டியபடி, இசையின் பயணம் தொடர்ந்து கொண்டுள்ளது. இதே... வேகத்தில், எழுதிக் கொண்டிருங்கள் இசை. தொடர்களுக்கு... இடையில், நீண்ட இடை வெளி விட்டால்... எமது சாபத்துக்கு, ஆளாக நேரிடும் என்பதை... முன்பே தெரிவித்துக் கொள்கின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

பாகம் 8:

 

பரவாயில்லை.. வந்ததுக்கு இது ஒரு நல்ல விடயம் என்று எண்ணிக்கொண்டு ஒரு குளியல் போட்டுவிட்டு போர்வைக்குள் நுழைந்துகொண்டேன்.

சென்னை காலநிலையிலும் முன்னேறிவிட்டதா?.... ஊட்டி கொடைக்கானல் போல் போர்வைக்குள் நுளைந்து படுக்க.....!! :D:lol:

Share this post


Link to post
Share on other sites

கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட வல்வை அக்கா, குமாரசாமியண்ணா, புத்தன், வன்னியன்காரு, த.சிறி, பாஞ்ச் அனைவருக்கும் நன்றிகள்..! :D


சென்னை காலநிலையிலும் முன்னேறிவிட்டதா?.... ஊட்டி கொடைக்கானல் போல் போர்வைக்குள் நுளைந்து படுக்க.....!! :D:lol:

 

அங்கெல்லாம் ஏசின்னு ஒண்ணு இருக்கு சார்.. :huh:  ஏசி.. ஏசி..  :D

Share this post


Link to post
Share on other sites

வேகமான நடையில் எழுதுகின்றீர்கள்.. சரி.. ஒகே...அதுக்காக ரிசப்ஷனிஸ்ட்கள், விமானப் பணிப்பெண்கள் பற்றிக் கூடவா எழுதக் கூடாது? :)

Share this post


Link to post
Share on other sites

பாகம் 9:

 

போர்வைக்குள் நுழைந்து தூக்கத்தை வரவழைத்து முடியவும், அலறிக்கொண்டு குறுஞ்செய்தி ஒன்று வரவும் சரியாக இருந்தது. கனடாவில் இருந்து கிளம்பும்போதே இந்தியாவிலும் பாவிக்கும் வகையில் (Roaming) ஏற்பாடு செய்திருந்தேன். யாரப்பா அது இந்த நேரத்தில் என்று எடுத்துப் பார்த்தால்,

 

"சென்னைக்கு நல்வரவு. தனிப்பட்ட பாதுகாப்பு வசதிகள் எங்களால் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். தொடர்புகளுக்கு அழையுங்கள் - எம்." என்றிருந்தது. :huh:

 

இது யார் எம். என்று இரு வினாடிகள்தான் சிந்திக்க முடிந்தது. சிறு படபடப்புடன் அந்த அழைப்பை மேற்கொண்டேன்.

 

"ஹலோ மாயா ஹியர்.. " பெண் குரலொன்று காதினில் தேன் வார்த்தது.

 

"ஹலோ.. இந்த இலக்கத்தில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது." தயக்கதுடன் நான்.

 

"ஆம். அதை நான் தான் அனுப்பினேன். உங்களைப் போன்ற வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்."

 

"என்ன வகையான சேவைகள்."

 

"எல்லா வகையான சேவைகளும். அது உங்கள் இஷ்டம் ராஜ்." (நான் கொடுத்து வைத்த போலிப் பெயர்.)

 

"சரி. உங்கள் சேவைக்கு எவ்வளவு கட்டணம்?" தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டே விட்டேன்..

 

"மணிக்கு ரூ.1500. ஒரு நாளைக்கு அதிகப்படியாக எட்டு மணித்தியாலங்கள் மட்டுமே செலவிடுவோம். உங்களுடைய அன்றாட செயற்பாடுகளில் பங்கெடுக்க எங்களுக்கு சம்மதம்."

 

'ஆகா.. இது பரவாயில்லையே' என்றது மனம். 'இது சரியில்லடா மவனே' என்றது மனசாட்சி. 

 

குழம்பிய அந்த நொடியில் மறுபடியும் ஒரு குறுஞ்செய்தி. திறந்து பார்த்தால் ஒரு இளம்பெண்ணின் படம் அனுப்பப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட சூப்பர் சிங்கர் டிடி கணக்கில், ஆனால் நிறம் குறைவாகத் தெரிந்தாள். 

 

ஏதோ இழவு ஒண்டு. மனசுக்கும், மனச்சாட்சிக்குமான போராட்டத்தில் சாத்தான் அதிக பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்தது.

 

"இரண்டு மணிநேரத்திற்கு சம்மதம். மீதியெல்லாம் உன் பொறுப்பு.." என்று ஒரு திருவாசகத்தை அனுப்பிவிட்டு பரபரப்பானேன்.

 

அடுத்த அரை மணிநேரமும் அரை யுகம்போல் தோன்றியது. வந்த நித்திரையும் போய்விட்டது. கடைசியில் குண்டர்கள்தான் வந்து கதவைத் தட்டுவார்களோ என்கிற பயமும் தொற்றிக்கொண்டது.

 

நிமிடங்கள் நகர ஒரு *அழைப்பு மணி*

 

குறிப்பு: பதினெட்டு வயதுக்குக் குறைந்தவர்களும், பெண்களும் நேராக கீழே சென்று படிக்கவும். :D

 

Spoiler

மெதுவாகச் சென்று கதவு துவாரம் வழியாகப் பார்க்கிறேன். வெளியில் நின்று கொண்டிருந்தாள் உதட்டில் ஒரு புன்னகையுடனும், கையில் ஒரு சிறு பயணப் பொதியுடனும். தாயாராகத்தான் நிற்கிறாள் என நினைத்துக் கொண்டேன். அக்கம்பக்கத்தில் யாரும் நிற்பதுபோல் தெரியவில்லை. வாயிற்காவலாளிகளை எவ்வாறு ஏமாற்றினாள் என்பதும் புரியவில்லை. சில நொடி தயக்கங்களின்பின் கதவைத் திறந்துவிட்டு ஒரு புன்னகையுடன் வரவேற்றேன்.

 

"ஹாய்" கடந்துபோன நறுமண நங்கை சிறு அணைப்பின்பின் பட்டும் படாமலும் "இச்" என்றுவிட்டுச் சென்றாள்.

 

நேரத்தைப் பார்த்தேன் விடிகாலை 4:30. இனி இவளை வைத்துக் கொண்டு என்ன செய்வது?! ஆப்பிழுத்த குரங்கின் நிலையானது.

 

"உங்கள் பெயர் என்ன?" சும்மா கேட்டு வைத்தேன். பொய்தான் வரப்போகிறது என்று தெரிந்தாலும்.

 

"மாயா. நான்தான் உங்களுடன் முன்பு உரையாடியது."

 

"ஓ.. நீங்கள் உள்ளூரா?" தேவையற்ற கேள்வி என்று உடனேயே புரிந்தது.

 

"ஆம்.."

 

சில பல தேவையற்ற உரையாடல்களுக்குப் பின் அவள் கையில் ஒரு ஐயாயிரத்தைத் திணித்தேன்.

 

"சரி.. எனக்கு அலுப்பாக இருக்கிறது. ஓய்வெடுக்கப் போகிறேன். நாளை கடைத்தொகுதிக்குப் போவதாக உள்ளேன். நீங்களும் வருவீர்கள்தானே.."

 

"ஆம். தாராளமாக. நீங்கள் இப்போது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். நான் உடை மாற்றிவிட்டு வருகிறேன்."

 

அடுத்த சில நிமிடங்களில் நவநாகரிக நங்கை நைட்டிக்கு மாறிவிட்டிருந்தாள். பயணப் பொதியில் எல்லாமே தயாராக இருக்கும்போல. மாறிய கையோடு எனது  கட்டிலின் வலது கரையோரமாக இடம்பிடித்துக் கொண்டாள். மற்றவர்கள் புறமுதுகு காட்டுவது எனக்குப் பிடிக்காவிட்டாலும், இந்தத் தடவை அது கோபத்தை வரவழைக்கவில்லை. சூட்டைத்தான் கிளப்பியது.

 

பல நிமிடங்கள் வெம்மையில், வெறுமையில் கழிந்தன. பொறுமையிழந்து மெதுவாக அவள் இடையினில் கையை வைத்தேன். சிறு சலனத்தின்பின் பக்கம் மாறிக் கொண்டாள். அவள் மூச்சுக்காற்று இப்போது என்மீது பட ஆரம்பித்தது. என் கைகள் தாராளமாக அந்த வளைவு நெளிவுகளில் பயணிக்க ஆரம்பிக்கிறது. நெருக்கம் இன்னும் இறுக்கமாகி அணையாத நெருப்பு சுட்டெரிக்க ஆரம்பிக்கிறது.

 

சட்டங்களுக்கு இனியென்ன வேலை.. முத்தங்கள் மட்டுமே அங்கு செல்லுபடியாகின. ஏற்கனவே பழக்கப்பட்டதுபோல் ஒத்துழைத்தாள். அடுத்த ஒரு மணிநேரம் ஆராதனை நேரம். சங்கமத்தின் காலம். எப்போது முடிந்தது.. எப்போது தூக்கத்திற்குள் சென்றேன் என்பதெல்லாம் நினைவில் இல்லை.

 

நன்றாக விடிந்துவிட்டது. அவளைக் காணவில்லை. சென்றுவிட்டிருந்தாள். எனது பணப்பைகள் பத்திரமாகவே இருந்தன. பயணப் பொதிக்குள் வைத்து  பூட்டி விட்டிருந்தேன்.

 

மறுபடியும் ஒரு *அழைப்பு மணி*.

 

கதவைத் திறந்து பார்த்தால் காலை கோப்பியுடன் நின்றார் சேவகர். முன்னிரவில் சொல்லிவைத்தது ஞாபகம் வந்தது.

 

(தொடரும்.)  :huh:

Share this post


Link to post
Share on other sites

வேகமான நடையில் எழுதுகின்றீர்கள்.. சரி.. ஒகே...அதுக்காக ரிசப்ஷனிஸ்ட்கள், விமானப் பணிப்பெண்கள் பற்றிக் கூடவா எழுதக் கூடாது? :)

 

அதானே... நிழலி.

"லுஃ(F)ப்ற்தான்சா" விமானத்தில் போனவர், விமானத்திலுள்ள ரொய்லற்ரைப் பற்றி எழுதியவர்.....

பணிப் பெண்களைப் பற்றி, எழுதவில்லையே... என்ற கடுப்பில், நான் இருக்கிறன். :D

Share this post


Link to post
Share on other sites

அதானே... நிழலி.

"லுஃ(F)ப்ற்தான்சா" விமானத்தில் போனவர், விமானத்திலுள்ள ரொய்லற்ரைப் பற்றி எழுதியவர்.....

பணிப் பெண்களைப் பற்றி, எழுதவில்லையே... என்ற கடுப்பில், நான் இருக்கிறன். :D

 

லுஃப்ரான்சாவில் ஞான் கண்டது பணிப்பெண்கள் அல்ல.. :(  பணி அம்மாக்கள்.. :o  :lol:

Share this post


Link to post
Share on other sites

லுஃப்ரான்சாவில் ஞான் கண்டது பணிப்பெண்கள் அல்ல.. :(  பணி அம்மாக்கள்.. :o  :lol:

 

எனக்கு, இது... வேணும்.

தேவையில்லாமல்.... வாயைக் கொடுத்து,  "லுஃ(F)ப்ற்தான்சா"வின் பெயரை,  ரிப்பேர் பண்ணிப் போட்டன் போல கிடக்கு. :D  :lol:

Share this post


Link to post
Share on other sites

யாழில் ஒரே உணர்ச்சியை தூண்டும் அனுபவங்களாக வருகிறது.  :D  :D

Share this post


Link to post
Share on other sites

யாழில் ஒரே உணர்ச்சியை தூண்டும் அனுபவங்களாக வருகிறது.  :D  :D

 

 

இத்தால்  எல்லோரும்

முக்கியமாக இங்கெழுதும் தலைவிகள் 

ஒரு முடிவுக்கு வருவார்கள்

ஆண்களில் இராமன் கிடையாது............. :lol:  :D  :D

Share this post


Link to post
Share on other sites

இத்தால்  எல்லோரும்

முக்கியமாக இங்கெழுதும் தலைவிகள் 

ஒரு முடிவுக்கு வருவார்கள்

ஆண்களில் இராமன் கிடையாது............. :lol:  :D  :D

 

இல்லை, விசுகு...

 

இசைக்கலைஞன், 5,000 ரூபாயை... மாயாவுக்கு கொடுக்க, முட்டாள் இல்லை.

அதிலும்... அவரின் கருத்துக்களை வைத்துப் பார்த்த அளவில்,

பெண்களிடம் ஜொள் வடிப்பாரே...தவிர, துணிந்து... வேற்றுப் பெண்களை.... படுக்கை அறைக்குள் அனுமதிக்க மாட்டார் என்று நினைக்கின்றேன். :)  

 

சேவகரின்... மணி அழைப்புடன், தனது கனவு குழம்பி விட்டது என்று....

அடுத்த பகுதியை... ஆரம்பிப்பார். :D

Share this post


Link to post
Share on other sites

இத்தால்  எல்லோரும்

முக்கியமாக இங்கெழுதும் தலைவிகள் 

ஒரு முடிவுக்கு வருவார்கள்

ஆண்களில் இராமன் கிடையாது............. :lol:  :D  :D

 

 

எங்களுக்கு படி தாண்டா பத்தினி வேண்டும். ஆனால் நாங்களோ, எங்கள் புல்லாங்குழ‌லை ஊதிக்கொண்டு, கோபியர்களுடன் கொஞ்சுவோம். :D  :D

Share this post


Link to post
Share on other sites

இல்லை, விசுகு...

 

இசைக்கலைஞன், 5,000 ரூபாயை... மாயாவுக்கு கொடுக்க, முட்டாள் இல்லை.

அதிலும்... அவரின் கருத்துக்களை வைத்துப் பார்த்த அளவில்,

பெண்களிடம் ஜொள் வடிப்பாரே...தவிர, துணிந்து... வேற்றுப் பெண்களை.... படுக்கை அறைக்குள் அனுமதிக்க மாட்டார் என்று நினைக்கின்றேன். :)  

 

சேவகரின்... மணி அழைப்புடன், தனது கனவு குழம்பி விட்டது என்று....

அடுத்த பகுதியை... ஆரம்பிப்பார். :D

 

 

வேறு எதை எழுதமுடியும்

எல்லோரும் இதைத்தானே  செய்து கொண்டு வருகின்றோம்

பரம்பரை  பரம்பரையாக............ :D 

Share this post


Link to post
Share on other sites

வேறு எதை எழுதமுடியும்

எல்லோரும் இதைத்தானே  செய்து கொண்டு வருகின்றோம்

பரம்பரை  பரம்பரையாக............ :D 

 

அடப் பாவி... ரகசியமாகச் சொல்லுங்கள்.

இருக்கிற... பேரை, கெடுத்து விடாதீர்கள்.

பிறகு, ஊரிலை... நம்மை, சனம் மதிக்கமாட்டுது. :D  :lol:

Share this post


Link to post
Share on other sites

அடப் பாவி... ரகசியமாகச் சொல்லுங்கள்.

இருக்கிற... பேரை, கெடுத்து விடாதீர்கள்.

பிறகு, ஊரிலை... நம்மை, சனம் மதிக்கமாட்டுது. :D  :lol:

 

 

SIVAJI க்கு ஏன் தேசிய  விருது கிடைக்கவில்லை  சிறி?

ஏனென்றால் எம்முன் அவரது நடிப்பு தூசு. :lol:

எனவே அது எம்மைக்காப்பாற்றும்

பயப்படாதீர்கள்....... :D

Share this post


Link to post
Share on other sites

அமெரிக்க தீர்மானம் - பாகம் 9 ( நிழலி அண்ணாவின் "தகிக்கும் தீயடி நீ" யால் வந்த கற்பனை)

இசையண்ணா கனவில் இருந்து கெதியா வெளியில வாங்கோ :D:icon_idea:

 

 

Share this post


Link to post
Share on other sites

 ( நிழலி அண்ணாவின் "தகிக்கும் தீயடி நீ" யால் வந்த கற்பனை)

 

 

சனங்கள் வாசிச்சுப் போட்டு சத்தமில்லாமல் இருக்கினம் பா.... :D

Share this post


Link to post
Share on other sites

ஒரு விடயத்தை பிரித்து மேய்வதில் நீங்கள் நீங்கள்தான் . தொடருங்கோ டங்கு .

Share this post


Link to post
Share on other sites

லுஃப்ரான்சாவில் ஞான் கண்டது பணிப்பெண்கள் அல்ல.. :( பணி அம்மாக்கள்.. :o:lol:

உள்ளதை சொல்லி இருக்கிறீர்கள்

Share this post


Link to post
Share on other sites

உள்ளதை சொல்லி இருக்கிறீர்கள்

Share this post


Link to post
Share on other sites

fly-emirates_zpsde3a53fb.jpg

emirates-airlines-cabin-crew-14_zps3597d

 

நான் போறது இதில்,  ஒரு தரம் போய் பாருங்கோ  அப்படியே டுபாயையும்  பார்த்து வரலாம் :D

 

 

sq_zps8a9dd4ae.jpgindex_zps6e29e295.jpg

 

இந்த சிரிப்பை லுப்தான்சா வில் காணமுடியுமா  கும்ஸ் :o:lol:

Share this post


Link to post
Share on other sites

பாகம் 10:

 

காலை வணக்கம் சொல்லியபடியே சேவகர் கோப்பியை மேசையில் வைத்துவிட்டுப் போனார். குளித்து முடித்து கோப்பியை ருசித்துவிட்டு வெளியே கிளம்பினேன்.

 

பதினெட்டாம் மாடியில் காலை உணவு விடுதி இருந்தது. உள்ளே நுழைந்தேன். அப்போது காலை எட்டு மணி இருக்கும். வேறு எந்த விருந்தினரும் அங்கிருக்கவில்லை.

 

110099_120126200537127_STD.jpg

 

காலை உணவுகள் இரண்டு பிரிவாக வைக்கப்பட்டிருந்தன. வெளிநாட்டினருக்கு ஏற்றாற்போல் சோசெஜ், பாண் அல்லது ரொட்டி (Bread), முட்டை வறுவல் போன்றவை ஒருபுறம். இட்லி, பொங்கல், வடை, உப்புமா, சட்னி, சாம்பார் என்று இன்னொரு வரிசை.

 

சைவத்திலேயே நின்றுகொள்ள விரும்பியதால் இட்லி, வடை பொங்கல், உப்புமா, சட்னி சாம்பார் என்று சிறிதளவு உணவுகளை :lol: எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்தேன். ஒரு சேவகனும், இளம் காரிகையும் சேவை புரிய தயாராக வந்து நின்றார்கள். :rolleyes: தோசை சுட்டு வரட்டுமா என்றாள் காரிகை. :D வேண்டாம் என்று சொல்ல முடியுமோ.. சரி என்று சொல்லி வைத்தேன்.  :wub:

 

சில நிமிடங்களில் சுடச்சுட தோசை கொண்டு வந்து வைத்தாள்.  

 

"நீங்கள் தமிழா?" ஆரம்பித்து வைத்தேன்.  :rolleyes:

 

"ஆமா சார்.."

 

"ஏன் இன்றைக்கு நிறையப்பேர் வரவில்லை?"

 

"காலையிலேயே வந்திட்டு போய்ட்டாங்க சார்.. உங்களுக்கு சட்னி இன்னும் கொஞ்சம் தரட்டுமா?"

 

"இல்லை பரவாயில்லை." என்றேன் அவளை வேலை வாங்க விரும்பாமல்.

 

"பரவாயில்லை சார். நான் கொண்டுவந்து தாரேன். சங்கடப்படாதீங்க.."

 

ஆகா.. இப்பிடி பொண்டாட்டிகூட கேட்ட ஞாபகம் இல்லையே.. என்று வந்த நினைப்பில் பெருமூச்சு தானாகவே வந்தது..  :huh:  :D

 

சாப்பிட்டு முடித்துவிட்டு ஒரு தேனீர் அருந்திக்கொண்டே, சென்னையைப் பற்றியும், என்னைப்பற்றியும் இரண்டொரு கதைகள் பேசிவிட்டு விடைபெற்றேன். அவர்களின் சேவையைப் பற்றி ஒரு நற்குறிப்பு எழுதவும், 500 ரூபாய் நன்மதிப்புத்தொகை வழங்கவும் மறக்கவில்லை. மேலை நாடுகள்போல் தங்குபவர்களுக்கு காலை உணவு இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நேராக கீழ்த்தளத்துக்குச் சென்றேன். அங்கு பயண முகவர் அலுவலகமும் வைத்துள்ளார்கள். வெளியே சென்றுவர ஒரு வாடகை கார் ஒன்றை அமர்த்தினேன். அதுபோல், அன்று இரவு சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானப் பற்றுச்சீட்டும் பெற்றுக்கொண்டேன். சென்னை - திருச்சி இடையில் காரில் பயணிப்பதைவிட விமானப்பயணம் இலகுவானது. ரூ.3000 மட்டுமே விலை.

 

காலை பத்துமணி அளவில், வாடகைக் காரில் அருகில் இருந்த எக்ஸ்பிரஸ் அவெனியு என்கிற கடைத்தொகுதிக்குச் சென்றேன். பெரிய அளவில் கட்டி வைத்துள்ளார்கள். மிகவும் அழகாக இருந்தது.

 

Express_avenue_chennai.jpg

 

உள்ளே சென்று பார்த்தால், பல்வேறு வகையான விற்பனை அங்காடிகளும் இருந்தனகிழமை நாள் காலை ஆதலால் அதிக கூட்டம் இருக்கவில்லை. நவநாகரிக ஆடைகளுக்கு குறிப்பிடத்தகுந்த அளவுக்கு கடைகள் இருந்தன. தோளில் பையை மாட்டியபடி இளஞ்சிட்டுக்கள் துணிக்கடைகளில் சுற்றித்திரிந்தன. அப்பன்வீட்டுக்காசு இப்பிடி அனாயாசமாகப் போகுதே என்று நினைப்பு வந்தது.. :D

 

Express-Avenue-Chennai-CentralAutrium.jp

 

சில கடைகளுக்குள் சென்று ஆடைகள் வாங்கினேன். ஏறக்குறைய எல்லா தளங்களையும் சுற்றி வந்தேன். முதல்நாளின் பயணக்களைப்பு அப்போது நீங்கியிருக்கவில்லை. ஒரு இரண்டு மணி நேரம் சுற்றித்திரிந்தபின், தங்கும் விடுதிக்கு மீண்டும் வந்து சேர்ந்தேன். அன்றைய மிகுதிப் போழுது சாப்பாடும், தொலைக்காட்சியுமாகக் கழிந்தது.

 

அன்றிரவு பத்துமணி. விமானநிலையம் செல்லத் தயாரானேன்.  :unsure:

 

(தொடரும்.)

Share this post


Link to post
Share on other sites

கருத்துக்களை எழுதி கலகலப்பாக்கிய தமிழ்சிறி, விசுகு அண்ணா, நவீனன், குசா அண்ணை மற்றும் எல்லோருக்கும் நன்றிகள்.. :D

Share this post


Link to post
Share on other sites

ஒரு விடயத்தை பிரித்து மேய்வதில் நீங்கள் நீங்கள்தான் . தொடருங்கோ டங்கு .

 

நன்றி கோம்ஸ்.. நடந்ததை எழுதுகிறேன்.. அவ்வளவுதான்.. :huh:

Share this post


Link to post
Share on other sites

எனக்கொரு சந்தேகம்?

விமானத்தில் பயணிப்பது என்பதும்

வானத்தில் பறப்பது என்பதும்

பெரும் ஆனந்தமான  விடயம்

ஆயிரக்கணக்கான  விடயங்களை  ரசிக்கமுடியும்

பனி

முகில்

தரை

கடல்.............

 

ஆனால்  பணிப்பெண்களுடன் எமது கண்கள் தடைப்பட்டு விடுகின்றனவே.......

இது பெரும் பின்னடைவு அல்லவா  ராசாக்கள்?? :icon_mrgreen:

Share this post


Link to post
Share on other sites