Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

16 வது அகவை காணும் யாழ்.. 26 இல் எப்படி..இருக்கும்.?!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

10007463_10151981058472944_146810450_n.j

 

பேப்பர் கணணியில்.. ஒற்றைப் பக்கத்தில்.. கண் இமை அசைவால்.. முக அசைவால்.. நோண்ட நோண்ட வந்து போகும்.. ஓர் அற்புதமாகக் கூட எதிர்கால யாழ் இணையம்.. இருக்கலாம்.

 

யாழ் இணையம்.. இணைய உலகில்.. தமிழ் இணைய போறம்.. (இதற்கு தமிழ்சொல் என்னென்று தெரியவில்லை. கருத்துக்களம் என்றே சொல்வோமே) வகையில்.. ஒரு முன்னோடி என்றால் அது மிகையல்ல. மேலும்.. இணையத் தமிழ் வரவின் பெருக்கத்தின் ஒரு ஆரம்ப அத்தியாமுமாக அது இருந்து வருகிறது. தமிழ் மொழி 21ம் நூற்றாண்டுச் சவால்களை சந்தித்து மெருகு பெற்று முன்னேறி நிற்க.. ஒரு சிறப்பான பங்களிப்பையும் யாழ் தான் சார்ந்த மொழிக்கு செய்துள்ளது... செய்தும் வருகிறது.

 

யாழ் கருத்துக்கள இணையத் தளமாக தோற்றம் பெற்ற 1998/99 காலப்பகுதிகளிலும் சரி.. பின்னரும் சரி.. இணைய உலகில் பல்வேறு வளர்ச்சிக்கட்டங்கள்.. மாற்றங்கள்..ஏற்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி கணணி தொழில்நுட்ப உலகிலும் பெருமளவு வளர்ச்சிகள் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஏற்பட்டும் வருகின்றன. உலகில் அதிகம் விரைந்து கூர்ப்படையும் துறையாக இத்துறையே அமைந்துள்ளது.

 

மேலும் வலுவான.. சமூக வலைகளின் பெருக்கமும்.. இதர பொழுதுபோக்கு கணணி சார் சாதனங்களின் ஆதிக்கமும்.. இதே காலப் பகுதியில் இருந்துள்ளது. இந்தச் சவால்களை எல்லாம்.. பெரும்பாலும்.. ஒரு தனிமனிதனாக நின்று சமாளித்து.. ஒரு தமிழ் தேசிய உணர்வேந்தலுடன் கூடிய.. ஒரு இணையத்தை அதுவும் தமிழ் மொழியில்.. கொண்டு நடத்துவதென்பது.. ஒன்றும் இலகுவான விடயமல்ல. மேற்படி.. தொழில்நுட்ப காரணிகளுக்கு அப்பால்.. பல்வேறு அரசியல்.. சமூக.. பொருண்மிய காரணிகளின் தாக்கங்கள் மத்தியிலும் 16 ஆண்டுகளுக்கு.. வெற்றிகரமாக.. இதனை நகர்த்தி வருவதென்பது ஒரு மகத்தான சாதனையே. காலத்துக்கு காலம்.. தன்னையும் சூழலையும் அதில் நிகழும் மாற்றங்களையும்.. உணர்ந்து கொள்ளும் ஒரு உன்னிப்பான நுண்ணிய அவதானியால் தான்.. இதனை சாத்தியமாக்க முடியும்.

 

காலத்துக்கு காலம்.. மாறும்.. தொழில்நுட்ப விருத்தி.. மென்பொருள் விருத்தி.. வீக்கமடையும் செலவீனங்கள்.. நேரச் சுருக்கம்.. போட்டிகள்.. அழுத்தங்கள்.. இணைய ஆபத்துக்கள்.. அச்சுறுத்தல்கள் என்று எத்தனையோ சவால்களை வெளியில் இருந்தும்.. சொந்த வீட்டில் இருந்தான..நாம் அறிய முடியாத பல்வேறு அழுத்தங்கள் மத்தியிலும்.. ஒரு தனிமனிதனாக திருவாளர் மோகன் அவர்கள்.. இதனை முன்னெடுத்து வருவது இந்த முயற்சியை.. உண்மையில் வெறும் வார்த்தையில் போற்றுதல் என்பதன் ஊடாக வாழ்த்தி அமைய முடியாது. அது அதற்கும் அப்பாற்பட்டு.. ஒரு தேசிய இனத்தின் பெருமைக்குரிய அடையாளமாக அவரை முன்னிறுத்தி நிற்கிறது என்றால் மிகையல்ல.

 

இன்று வரை மோகன் அண்ணாவுக்கு தமிழ் கூறும் நல்லுலகம்.. ஒரு பாராட்டுதலை நல்கி இருக்கோ என்றும் தெரியவில்லை. தமிழ் இனத்தில்.. பல விடயங்களில் முன்னோடியாக இருக்கும் அவருக்கு.. ஒரு சரியான கெளரவிப்பு இதுவரை வழங்கப்பட்டிருக்கோ என்றும் தெரியவில்லை. அவர் அவற்றை எதிர்பார்ப்பவராகவும் என்றும் இருந்ததில்லை..! ஆனாலும்.. இதே இன்னொரு இன மக்களாக இருந்தால்.. நிச்சயம் அவரின் இந்த பங்களிப்பை மனதார வாழ்த்தி அவரை கெளரவித்தும் இருப்பர்.

 

இருந்தாலும்.. இந்த வார்த்தை ஜாலங்கள் மட்டும் அவர் தொடர்ந்து யாழை இயக்கப் போதுமானவை அல்ல. நிகழ்கால.. எதிர்கால.. சவால்களை அவர் எப்படி எதிர்கொள்ளலாம்.. (யாழுக்கு வயது கூடக் கூட மோகன் அண்ணாக்கும் கூடுது என்பதையும் கருத்தில் கொள்ளனும். இங்குள்ள கருத்தாளர்களுக்கும் கூடுது என்பதையும்.. கருத்தில் கொள்ளனும்...).. வருங்கால.. நிகழ்கால..புதிய தலைமுறை ஏற்ப தொழில்நுட்ப.. பொருண்மிய.. சமூக தேவைகளுக்கு ஏற்ப இதனை.. இன்னும் இன்னும் வெற்றிகரமாக எப்படிக் கொண்டு செல்ல உதவ முடியும்.. என்பதை ஒரு பொழுதுபோக்கும்.. சுவாரசியமும்.. கற்பனையும் அதே நேரம் எதிர்வுகூறல்களை.. எதிர்காலத்தில் நிகழ வாய்ப்பை காட்டக் கூடியதுமான.. ஒரு விபரணக் கருத்தாடலூடாக இங்கு இனங்காட்டின் அது நன்மை பயக்கும். அதற்கு உதவியாக.. உங்கள் சொந்த கருத்துக்களோடு.. படங்கள்.. காணொளிகளை.. கட்டுரைகளை.. இணைக்கலாம்.

 

இதோ.. உங்களின் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். அது யாழ்..அதன் எதிர்காலத்தை எதிர்கால சவால்களை சந்தித்து மிளரச் செய்ய உதவினால்.. அது நாமும் இங்கு இருந்தோம் அதனை வளர்த்தோம் என்பதற்கு ஒரு அடையாளமாகவும் இருக்கும். ஒரு காலத்தில்.. தன் மூதாதையோரை யாழ் நினைவு கூறும் போது நாமும் அதில் ஒரு சிறுபுள்ளியாக அடங்கி இருக்கலாம்.

 

எல்லோரும் ஒற்றுமையாக கூட்டாக.. முயற்சிப்போமே...!

 

இந்த இடத்தில்.. யாழ் மோகன் அண்ணாவிற்கு.. எனது சிறப்பான பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதோடு.. எதிர்காலத்தில்.. கலாநிதிப் பட்டம் ஒன்றைச் செய்யும் எண்ணம் உள்ளது. அந்தப் பட்ட ஆய்வு வெற்றியாக அமைந்தால்... அதனை மோகன் அண்ணாவுக்கு சமர்ப்பித்து.. வெளியிடுவேன் என்று உறுதி சொல்லியும் கொள்கிறேன். இது ஒரு கருத்தாளனாக நான் அவருக்கு அளிக்க விரும்பும் ஒரு கெளரவம் ஆகும். காலம் கூடி வந்தால்.. நிச்சயம்.. அதனை யாழ் உங்களுக்கு ஓர் நாள் தாங்கி வரும்.

Link to post
Share on other sites
 • Replies 54
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

உலகத்தமிழரை (அவுஸ்ரேலியா தொடக்கம் கனடா வரை) 24 மணி நேரமும் செய்திகளாலும் கருத்துக்குளாலும் இணையவைக்கும் யாழ் இணையம் பல நூற்றாண்டு வாழ்க வளர்க .. அதனை தொடங்கிய மோகன் அவர்களுக்கும் மற்றும் அனைத்து சேவைகளை அளிப்பவர்களுக்கும் நன்றிகள், பாராட்டுகள், வாழ்த்துகள்..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யாழ் காலவோடை.. Yarl Timeline

யாழில் நீங்கள் ஒவ்வொருவரும்.. இணைந்த காலப்பகுதியில் இருந்து இன்று வரையான காலம் வரை உணர்ந்த மாற்றங்கள்.. ஏற்பட்ட முன்னேற்றங்கள்.. அவதானித்த பின்னடைவுகள்.. இவற்றைப் பகிர்ந்து கொள்வதோடு.. எதிர்காலத்தில்.. 2014 தொடக்கம் 2024 வரை எப்படி யாழ் உருமாறும் உருமாற்றப்படனும்.. என்ற உங்கள் எண்ணங்களையும் வெளியிடுங்கள். குறைகளை மட்டும் முன்னிறுத்தாமல்.. நிறைகளையும்.. எதிர்கால அடையக்கூடிய.. சாத்தியமான.. மிகையற்ற.. நல் இலக்குகளையும் சுட்டிக்காட்டுங்கள். அது யாழை நடத்திறவர்களுக்கும்.. நிர்வகிப்பவர்களுக்கும் உற்சாகமாக இருக்கும்.

மேலும் இவ்வாண்டில்.. யாழின் ஸ்தாபகர் மோகன் அண்ணாவிற்கு ஒரு விருதை அளித்து விரும்பியவர்களின் பங்களிப்போடு அந்த விருதுக்கு ஒரு பணப் பெறுமதியையும் நன்கொடையாக அளிக்கலாம் என்றும் பரிந்துரைக்கிறோம். எத்தனையோ மணித்துளிகளை தமிழுக்காகவும் தமிழ் தேசிய உணர்வுக்காகவும் மக்களுக்காகவும் செல்வழித்துள்ள அவருக்கு இது ஒரு ஊக்குவிப்பாக மட்டுமன்றி.. பாராட்டுதலாகவும் அமையும். உற்சாகத்தையும் அளிக்கும்.

இங்குள்ள மூத்த உறவுகள் உட்பட எல்லோரினதும் பங்களிப்பை இதில் எதிர்பார்க்கிறோம். நன்றி.

yarl timeline... யாழ் காலவோடை. (மாதிரி)

1999 - யாழ் மோகன் அண்ணாவால் யாழ் இணையம் ஸ்தாபிக்கப்படுகிறது. திண்ணையோடு யாழ் கருத்துக்களமும் உருவாகிறது. ஆரம்பத்தில்.. அனுபவம் மிக்க பலர் இணைந்திருந்தார்கள். யாழ் இணைய இதழில் தங்கள் ஆக்கங்களை பிரசுரிப்பதில் நல்ல ஆர்வம் காட்டினார்கள். மூத்த எழுத்தாளர்களும் இதில் அடங்குவர்.

yarl1999fo5.jpg

2000-

2001-

2002- யாழோடு முதல் பரீட்சையம் ஏற்படுகிறது. php போறமாக அன்று தனித்தமிழில்.. பாமினி எழுத்துருவோடு இயங்கிக் கொண்டிருந்தது. யுனிக்கோட்டு மாற்றும் முக்கிய நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தன. யாழ் தனக்கென வடிவமைத்த வாழ்த்து மடல்களும் பிற அம்சங்களும் இருந்தன. சுய ஆக்கங்களை யாழினூடு பிரதான இணைய முன்பகுதியில் வெளியிடும் வசதியும் இருந்தது.

yarl2002wp4.jpg

96872029bs6.png

உதவி இணைப்புக்கள்:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=35396

http://www.yarl.com/kalam/

2003- யாழில் மோகன் அண்ணாவோடு.. யாழ் வாணன்.. யாழ் அண்ணாவோடு மற்றும்.. சோழியன் அண்ணா.. நாச்சிமார் கோவிலடி இராஜன் அண்ணா.. சந்திரவதனா அக்கா.. நளாயினி அக்கா.. சாந்தி அக்கா என்று எண்ணற்ற உறவுகளோடு பரீட்சையம் ஏற்படுகிறது. யாழின் முற்பகுதியில் குருவிகளுக்கு விஞ்ஞானச் செய்திகளை இணைக்கும் வசதி மோகன் அண்ணாவால் செய்யப்படுகிறது. அப்போது அவரோடு இணைந்து செயற்பட வாய்ப்பு கிடைக்கிறது. யாழ் முதல் php போறத்தில் இருந்து அடுத்த நிலைக்கு உருமாறுகிறது.மீண்டும் கள உறவுகள் யாழில் மீள் உறுப்புரிமை பெற கோரப்படுகின்றனர்.

2004- தாயகத்தில்.. கருணா என்ற காட்டிக்கொடுப்பாளனின் பிளவு யாழிலும் சிறு சச்சரவுகளுக்கு இடமளிக்கிறது. குறிப்பாக சேது இயக்கிய நிதர்சனம்.நெட் போன்ற இணையங்கள்.. திசை மாறுகின்றன. யாழின் நிர்வாகப் பொறுப்புக்களில் இளையோர் உள்ளெடுக்கப்படுகின்றனர். யாழ் அண்ணாவின் முயற்சியில்.. யாழிற்கு என்று குடில்கள்.. யாழ்.நெட் மூலம் உறவுகளுக்கு தரப்படுகிறது. அன்றைய காலத்தில்.. புளாக்கரை விட யாழ் குடில்.. கள உறவுகள் மத்தியில் பிரபல்யம் பெற்றிருந்தது.

2005- ஜெயசிக்குறு புகழ்.. செம்மணிப்புதைகுழி புகழ்... யாழ்ப்பாண ஆக்கிரமிப்பு சிங்கள பேரினவாத அரசி.. சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சிக்காலம் முடிவடைகிறது. யாழ் இணைய உள்ளக குடில்கள் பிரபல்யம் அடைகின்றன. உறவுகள் அங்கும் சொந்த ஆக்கங்களை பிரசுரிக்கிறார்கள். நிறைய அன்றைய இளையோர் களத்தோடு ஐக்கியமாகி இருந்தனர்.

2006 - நெடுக்காலபோவனாகி கருத்துக் களத்தில் இணைகிறோம். அடிபிடிகளோடு.. ஆரம்பமான அன்றைய நாட்கள் காரசாரமான விவாதங்களில் தொடர்ந்து. அன்றைய நாட்களில் நாங்கள் முன்வைத்த கருத்துக்களில்.. திராவிடம் என்பது போலியானது. அதன் வீழ்ச்சியில்.. தமிழ் தேசிய எழுச்சியில் தான் தமிழகத்தில் ஈழத்தமிழர் உரிமை பற்றிய உணர்வை மீள ஊட்ட முடியும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. பல எதிர்ப்புக்கள் அன்று. இருந்தாலும் கொள்கை அளவில். அன்று பெரியாரையும்.. திராவிடத்தையும் புகழ்ந்து திரிந்த சீமானையும் நாங்கள் எதிர்க்கிறோம். ஆனால்... பின்னர் நிலமைகள் மாற்றமடைகின்றன.

2007- யாழில் காலக்கண்ணாடி என்ற பெயரில்... யாழில் பிரசுரமாகும் முக்கிய ஆக்கங்கள்.. செய்திகள் வாரா வாரம் கள உறவு ஒருவரால் தொகுத்து வழங்கப்படும் பாரம்பரியம் ஆரம்பித்து வைக்கப்படுகிறது. இளைஞன் மற்றும் கலைஞனின் பங்களிப்புக்களும் பல இளையோரின் பங்களிப்புக்களும் அன்று அதில் மிகுந்த சிரத்தை எடுத்திருந்தன.

yarl1blackwf6.jpg

http://youtu.be/acXgRg8a1zo

http://www.yarl.com/forum3/index.php?showtopic=25558

 

யாழ் நேசக்கரம்.. தாயக மக்களுக்கான மனிதாபிமான உதவி அமைப்பு.. கள உறவுகளின் பங்களிப்போடு.. நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு உருவாக்கப்பட்டது.

 

yaalneesakkarammf1.jpg

 

2008 - 2009 - போர்வடுக்களை அதிகம் சுமக்கும் காலமாக இருந்தது. அது யாழிற்கும் என்று அமைந்திருந்தது. 2008 பொங்குதமிழின் பின்.. புலம்பெயர் மண்ணில் நிகழ்த்தப்பட்ட போர்க்கால..சாத்வீகப் போராட்டங்களுக்கான தயாரிப்புக்கள் சிலவற்றில் கள உறவுகள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். பதாதைகள் (பானர்கள்) தயாரிப்பு உள்ளிட்ட முக்கிய பணிகள் ஆற்றப்பட்டுக் கொண்டிருந்தன. அதுமட்டுமன்றி "வணங்காமண்"  போரால் அவதிப்பட்ட மக்களுக்கான நிவாரணக் கப்பலை தாயகம் நோக்கி.. அனுப்புகையில் யாழ் உறவுகள் மும்மரமாக தமது பங்களிப்பைச் செய்து கொண்டிருந்த காலமும் அதுவாக இருந்தது.

 

IMG4930-1213468844.jpg

 

vanangamann-150x100.jpg

 

maalaimalarsiddb1540b6-40a8-4908-98fd-57

 

clip_image017.gif

 

nouvelle-image2.jpg

 

மேலும்.. இக்காலத்திலேயே.. புறக்கணி சிறீலங்கா நிகழ்ச்சித் திட்டத்துக்கு.. யாழின் பங்களிப்பையும் கள உறவுகள் யாழின் ஊடாகவும் வழங்கிக் கொண்டிருந்தனர்..

 

BoycottSriLanka004.jpg

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=53416

 

2010 முதல் - 2024 வரை..... நீங்களும்.. எழுதுங்கள்......

 

இது ஒரு முன்மாதிரிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதை விட உங்கள் யாழ் காலவோடையை இன்னும் சிறப்புற செய்து சமர்ப்பிக்கலாம்)

 

(நன்றி உறவுகளே. மீண்டும் காலச்சக்கரத்தை பின்னோக்கிச் சுழற்றச் செய்ததற்கு.)

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யப்பா

என்ன  திறமை

ஞாபக  சக்தி

நன்றிக்கடன்.............. :icon_idea:

 

தொடருங்கள் ராசாக்கள்

நானும் வந்து நிச்சயம் கயிறு பிடிப்பன்............ :icon_idea:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அபாரம் நெடுக்ஸ் !  காலக் கண்ணாடியில் இருமுறை அடியேனும் பங்குபற்றியிருந்தேன். நீங்கள் சிற்பம்போல் அழகாய் சொல்லிக் கொண்டு போறீங்கள். எனக்கும் ஏதாவது  தோன்றினால் சொல்கின்றேன்...! :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கலக்கிட்டீங்க.... நெடுக்ஸ். thumbs_up_smiley.gif

மெய் மறந்து ரசித்தேன். :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்ஸ் இது போன்ற ஒரு காலப் பதிவு மிகவும் அவசியம்.

பாராட்டுக்கள் ... என்னுடைய எண்ணப் பகிர்வுகளை பிறிதொரு நாளில் எழுதுகின்றேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/photo.php?fbid=236406659894909&set=a.118896518312591.1073741828.100005767295561&type=1&theater

 

 

நான் பார்த்த சிறிய இணைய அனுபவத்திலே எத்தனை ஊடகங்களை கருத்துக்களங்களை தரிசித்தாலும் என் மனதிற்கு திருப்தியாக ,நினைத்தது இந்த யாழ் இணையமே .......மனித இனத்திற்கு தேவையான .உண்மை ,நீதி ,சமத்துவம் ,கட்டுக்கோப்பு ,கலை கலாச்சாரம் ,தாயகம் ,பண்பாடு ,...............இவை அனைத்தையும் முற்று முழுதாக கொண்டுள்ள ஓர் இணையம் என்று சொன்னால் அது மிகையாகாது ..........இந்தக்களத்தில் நானும் ஓர் உறுப்பினராக இருப்பதை இட்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்...........இது ஒரு விளம்பரம் அல்ல ...உண்மையான விடயம் ..........நம்பவில்லை என்றால் நீங்களும் ஒரு தடவை தரிசியுங்கள் இந்த யாழ் களத்தை .............அந்த வகையில் 16 ஆவது அகவையை எட்டப்போகும் இந்த யாழ்மகளுக்கு என் வாழ்த்துக்கள் ..........தொடர்ந்து எம் விழுமியங்களை காப்போம் இந்த இனிய களத்தினூடாக ..........வாழிய வாழிய வாழிய யாழ்களம் வாழிய வாழியவே 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.. வாழ்த்துக்கள் ....... நான் வளர்ந்த, என்னை என் கவியாற்றலை வளர்த்த yarl.com க்கு....

இன்றுடன் நான் இணையத்தில் தமிழ் எழுத தொடங்கி 12 வருடங்கள் ஓடி விட்டது. ஆம் முதன் முதலாக இணையத்தில் எழுதியது இங்குதான்..கரவை பரணி என்ற பெயரில் எழுதினேன்...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் 14 வருடங்கள் ஆகி விட்டது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

16 ஆண்டுகால வாசகனாகவும் 12 ஆண்டுகாலமாக கருத்துக்கள உறவாகவும் இருப்பதில் மகிழ்வும் பெருமையும் அடைகின்றேன். உலகளாவியரீதியில் பல உறவுகளை இணைத்துத்தந்த எங்கள் யாழ் இணையம் வாழிய பல்லாண்டு.

இந்தவேளை மோகன் அண்ணா எங்களால் நினைக்கப்ட வேண்டியவர் ஆரம்பகாலம் எதுவுமே புரியால் விழித்த என்போன்ற பலருக்கு கரம் பிடித்து வழி நடத்தியவர். எங்கள் எழுத்துக்களை யாழ்களத்தில் படைப்புக்களுக்கான சிறப்பகுதிகளை திறந்து களம் அமைத்தவர். இந்த வேளையில் நன்றி மோகன் அண்ணா

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சில வருடங்களில் வெப் மொழிபெயர்ப்புகள் நவீனத்துவமடைந்துவிடும் அவரவர் தமது மொழிகளிலேயே உலக செய்தி நிலவரங்களை அறிந்து கொள்ளும் வசதி உருவாகியிருக்கும் எனவே 2026 ல் யாழ் உலகத்தமிழர்களுக்கு முகவரியாகவும் அடையாளமுமாகவும் இருக்கும் என நம்பலாம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அருமையான நினைவூட்டல் நெடுக் அண்ணே அபாரம் வாழ்த்துக்கள் தொடருங்கள் ..

 

உங்களின் கருத்தாடல் ...எழுத்து ஈர்ப்பு ..ஆகியவையே என்னையும் யாழுக்கு இழுத்துவந்தது என்பதை சொல்வதில் பெருமை அடைகிறேன் அடியேன் ...

 

இன்னும் பலர் இருக்கிறார்கள் யாழின் கதாநயகர்கள் அவர்களுக்கும் நன்றிகள் ...!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தின் கடந்துவந்த பாதையினை  நினைக்கத்தூண்டியதாக அமைந்திருந்தது.

வாழ்த்துகள் நெடுக்கு.

 

நிறைய எழுத வேண்டும் என்று நினைப்பதுண்டு. இடைவெளிகள் அதனை நிரப்பிக்கொண்டே இருக்குறது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமை நெடுக்ஸ் அண்ணா, உங்களின் யாழுடனான நெருக்கம் வியக்க வைக்கிறது.

வார்த்தைகளில் சொல்லிவிட முடியவில்லை நெடுக்ஸ் அண்ணா, யாழுடன் இணைந்திருக்கிறோம் என்ற வகையில் நமக்கும் பெருமை தான்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையம் பதினாறாவது அகவையில் காலடி பதிக்கும் இவ்வேளையின் யாழ் தமிழர்கள் உலகில் இருக்கும்வரை தொடர்ந்தும் பயணிக்க மனமுவந்த வாழ்த்துக்கள் :)

யாழுடனான தனது பரிச்சயத்தையும் அதனோடு கூடவே சேர்ந்து வளர்ந்த அனுபவத்தையும் நெடுக்காலபோவான் அழகாகத் தந்துள்ளார். எனக்கும் இது பல பழைய விடயங்களை நினைவுகூர உதவியது.

யாழ் இணையம் பதினாறு வயது வாலைக்குமரியாக இருந்தாலும் எனக்கு அது மழலையாக இருக்கும்போது அறிமுகமாகவில்லை. இணையம் அதிகம் பிரபல்யம் அடையாத அக்காலத்தில் இணையத்தில் IRC (Internet Relay Chat) மூலம் கடலை போடுவதில் அதிக நேரத்தை வீணாக்கிக்கொண்டிருந்த எனக்கு ஏனோ யாழ் கண்ணுக்குத் தட்டுப்படவில்லை. 2002 இல் யாழ் இணையம் நான் சுவிஸ் நாட்டுக்கு விடுமுறையில் சென்றபோது என் ஒன்றுவிட்ட அண்ணா ஒருவரால் அறிமுகப் படுத்தப்பட்டது. ஆனாலும் பாமினி எழுத்துருவில் தட்டச்சுச் செய்யப்பழகி வெறுத்துப்போய் இருந்ததால் 2004 மார்ச் வரை யாழில் இணையவில்லை. 2004 இல் கருணா அம்மான் புலிகள் இயக்கத்தில் பிளவை உருவாக்கியபோது அரசியலில் ஆர்வம் இருந்த காரணத்தால் யாழில் இணைந்து யுனிகோட்டில் எழுதப் பழகினேன். இன்றுவரை தமிழை ஆங்கில உச்சரிப்பினாலேயே எழுதிவருகின்றேன்.

கேள்வி கேட்டே பழகிவிட்டதால் என்னுடைய முதலாவது கருத்தும் கேள்வியிலேயே முடிந்திருந்தது.

"கருத்துக்களத்துக்கு நான் புதிய அங்கத்துவன். ஒரு மாதிரி தமிழில் எழுத பழகி விட்டேன். விரைவில் உங்களுடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள என்ன வழி?"

http://www.yarl.com/forum/index.php?showtopic=1531

என்னை முதன் முதலில் "வாருங்கள் கிரிபன்ஸ்... இக்களத்தோடு கள உறவுகளோடும் கலந்திருக்க எம் வாழ்த்துக்களும் வரவேற்பும்....!" என்று சொல்லி வரவேற்றவர் இப்போதைய நெடுக்காலபோவான். அப்போது மாந்தோப்பில் ஒளிந்திருந்தார் :D நெடுக்காலபோவானுக்கும் எனக்கும் மதம், பெண்ணியம் போன்ற பல விடயங்களில் கருத்துமோதல்கள் இடம்பெற்றிருந்தன. ஆனாலும் மிகவும் அவதானமாகவும் இரகசியமாகவும் இருக்கும் அவரை இரு தடவைகள் காணும் சந்தர்ப்பத்தையும் யாழ் களம் உருவாக்கித் தந்திருந்தது. யாழ்களப் பொறுப்பாளர் மோகன் மீதான நம்பிக்கை காரணமாகவே நெடுக்ஸ் யாழ் கள உறவுகள் சிலரை தெற்கு இலண்டன் பகுதியில் நடந்த பொங்குதமிழ் நிகழ்வில் சந்தித்திருந்தார் என்று நம்புகின்றேன்.

ஆரம்பத்தில் அதிகம் மூளைக்கு வேலை, குறுக்கெழுத்துப் போட்டி என்று பொழுதுபோக்கு அம்சங்களிலும் செய்திகள், அரசியல் போன்றவற்றிலும் பங்குபற்றியிருந்தேன். அன்றைய நாட்களில் இருந்த சக கள உறவுகள் வெண்ணிலா, தமிழினி (பெண்கள்தான் நினைவுக்கு வந்தார்கள், ஆண்கள் மன்னிக்க!) போன்றோரெல்லாம் களத்தில் இருந்து காணாமல் போய்விட்டார்கள்! அரசியலில் மதித்தாத்தாவுடன் நிறைய விவாதங்கள் புரிந்த நினைவு. அவர் யாழ் களத்தில் இருந்த தடை செய்யப்பட்டபோது சந்தோசமாகத்தான் இருந்தது. ஆனாலும் அவர் பல்வேறு கேள்விகளைக் கேட்கும்போது அதற்குப் பதில் அளிப்பதன்மூலம் தமிழர்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளை பலரும் தெளிந்துகொள்ள அவருடனான கருத்தாடல்கள் உதவியிருந்தன. நேர்மையான விமர்சனம் இன்றி வெறும் விதண்டவாதமான, குதர்க்கம் மட்டுமே பேசும் கருத்தாளர்களுடன் நேரத்தை விரயம் செய்வது சரியல்ல என்பதுதான் அவரைப்போன்றவர்களின் மீதான எதிர்ப்புக்குக் காரணம்.

அதுபோன்றே பல்வேறு முகமூடிகளுடனும் வந்து குழப்பம் செய்பவர்களையும் பிடிக்காது. இதனால் புதிதாக வரும் ஒருவரை வரவேற்றுக் கருத்து வைப்பது குறைவு. பழையவர்களே புதிய அவதாரம் எடுத்து வரும்போது உண்மையான புதியவர்கள் யார் என்பதை எப்படி நம்மால் தெரிந்துகொள்ளமுடியும்? ஆனால் வரவேற்காமால் விடுவதும் பிழையானது என்பதை ஒத்துக்கொள்கின்றேன். உண்மையிலேயே புதிதாக வருபவர்களுக்கு பழையவர்கள் வரவேற்புக் கொடுக்காவிட்டால், அவர்கள் யாழில் தொடர்ந்து இணைந்திருக்க விரும்பமாட்டார்கள். எனவே இவ்விடயத்தில் நிர்வாகத்தில் உள்ளவர்கள் புதியவர்களை வரவேற்று அவர்கள் புதியவர்கள்தான் என்று மற்றையவர்களுக்கு உணர்த்த முயலவேண்டும்.

2009 இன் ஆரம்ப மாதங்களில் யாழ் இணையம் பல்வேறு கவனயீர்ப்பு செயற்பாடுகளை முன்னின்று செய்தது. இதன்மூலம் ஒரு பேரலவத்தைத் தடுக்க உலகத் தமிழர்களுடன் சேர்ந்து முயற்சித்தது. ஆனாலும் நான் அக்காலத்தில் இப்படியான முயற்சிகளில் அதிகம் பங்கெடுக்கவில்லை. 2009 தையில் இருந்தே மனம் சலித்துப் போயிருந்தது. எதிலும் நாட்டம் இருந்திருக்கவில்லை. நம்பிக்கை என்பதே இல்லாமல் போயிருந்தது. 2009 மேயில் போர் உச்சக்கட்டத்தை அடைந்து முடிவுக்கு வந்தபோது தமிழன் என்று பெருமைப்பட்டிருந்த உணர்வும் முற்றாக இல்லாமல் போயிருந்தது. ஆனாலும் யாழ்களம் தமிழர்களை தொடர்ந்தும் ஒன்றிணைப்பதில் முயற்சி செய்யும் ஒரு தளமாகவே செயற்பட்டுக்கொண்டிருந்தது. பல்வேறு குழுக்களாகப் பிரிந்து தமிழர்கள் ஒற்றுமையின்றி இருந்தபோதும் யாழ்களம் எவருக்கும் அடிபணியவில்லை. "நாமார்க்கும் குடியல்லோம்" என்று ஓங்கி உரத்துச் சொல்லும் யாழ் களம் தளம்பவில்லை.

தினமும் மாறிவரும் நவீன தொழில்நுட்ப உலகில் யாழ்களம் தன்னை முன்னகர்த்தவும், தமிழர்களிடையே தொடர்ந்தும் பிரபல்யமாகவும் அதிகம் விரும்பப்படுவதுமாகவும் தொடர்ந்திருக்க பல சவால்களைத் தொடர்ந்தும் எதிர்கொண்டு தன்னைப் புதுப்பித்துக்கொள்ளவேண்டிய தேவை இருக்கின்றது. தமிழர்களை தமிழால் இணைக்கும் பாலமாகச் தொடர்ந்தும் செயற்பட பின்வரும் அடிப்படை விடயங்களில் அதிக கவனம் எடுக்கவேண்டும்.

 • விளம்பரம் பெருகவேண்டும்: இதனை நிர்வாகத்தில் உள்ளவர்களால் மட்டும் செய்யமுடியும் என்று தோன்றவில்லை. எனவே கள உறவுகள் விளம்பரங்களை எடுத்துக் கொடுத்து உதவவேண்டும். விளம்பரம் எடுத்துக்கொடுப்பவர்களுக்கு நிர்வாகத்தினர் ஒரு குறித்த வீதத்தைத் "தரகு"க் கட்டணமாகக் கொடுத்தால் பலர் முன்வந்து விளம்பரம் எடுத்துக் கொடுப்பார்கள் என்று நம்புகின்றேன்.
 • உறுப்பினர்கள் தொகை: அதிகம் பேர் யாழ் களத்தில் இணைந்தாலும் கருத்தாடல்களில் பங்குபற்றுவோர் தொகை குறைந்துகொண்டே போவதைத் தடுக்கவேண்டும்.
 • புதியவர்களுக்கான உதவிக்குறிப்புக்கள்: புதிதாக இணைபவர்கள் கண்ணைக் கட்டிக் காட்டில் விடப்பட்டவர்களாக உணர்கின்றார்கள் போலுள்ளது. இதனைச் சீர் செய்ய இலகுவான குறிப்புக்கள் கொடுக்கப்படல் வேண்டும்.
 • தமிழில் எழுதுவது: தமிழில் எழுதுவது பலருக்கு இப்போதும் கடினமான ஒன்றாக உள்ளது. எளிய தமிழில் சரியான விளக்கம் வேண்டும்.
 • இளையோரை உள்வாங்குதல்: யாழ்கள உறுப்பினர்களில் இளையோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவேண்டும். எனவே இளையோரைக் கவரும் ஆக்கங்கள் அதிகம் வரவேண்டும். பல்வேறு மொழிகளையும் அனுமதிக்கலாம். ஆனால் அது இலகுவாக இருக்குமா தெரியவில்லை.
 • குழுவாதம்: கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் அவற்றினை நாகரிகமாக வெளிப்படுத்தும் பண்பினை வளர்க்கவேண்டும். குழுவாதத்தை அடியோடு ஒழிக்கவேண்டும்.
 • சுயமான ஆக்கங்கள்: சுயமான ஆக்கங்கள் தொடர்ந்தும் வரவேற்கப்படவேண்டும். எழுதுபவர்கள் இன்னும் அதிகரிக்கப்படவேண்டும். கதை, கவிதையோடு, அரசியல், சமூகம், பொருளாதாரம் என்று பல்வேறு விடயங்களையும் கள உறுப்பினர்கள் படைக்கவேண்டும்.
 • யாழ் இணைய முகப்பு: யாழ் இணைய முகப்பு தொடர்ந்தும் மெருகூட்டப்பட்டுக் கொண்டு வந்தாலும் பலர் இன்னமும் கருத்துக்களத்தைக் காணாமல் இருக்கின்றார்கள். எனவே கள உறுப்பினர்கள் யாழ் இணையத்தின் வடிவமைப்பு பற்றிய கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கொடுக்கவேண்டும்.
 • உள்ளடக்கம்: கருத்துக்கள உள்ளடக்கம் பல வருடங்களாக மாறாமல் உள்ளது. BBC போன்ற பிரபல்யமான தளங்களே அதிகம் மாறும்போது யாழ்களம் தொடர்ந்தும் ஒரே உள்ளடக்கத்தோடு இருப்பது நல்லதல்ல. இவை பற்றியும் கள உறுப்பினர்களின் ஆலோசனைகளைக் கோரலாம்.
 • apps: யாழ் களம் iOS, Android, Windows என்று சகல செயலிகளிலும் apps ஆக வரவேண்டும்.
 • Multimedia content: படங்கள், காணொளிகள் போன்றவை வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் வசதிகள் இருந்தாலும், கள உறுப்பினர்கள் தம்மவற்றை இலகுவாக தரவேற்றம் செய்யும் வசதி இருக்கவேண்டும்.
என்னதான் இயந்திரமான வாழ்வாக இருந்தாலும் யாழ் களம் எப்போதும் தமிழர்களுடனேயே இருப்பதுபோன்ற உணர்வைத் தருவதால் யாழை விட்டு இலகுவாக விலகமுடியாது என்பது புரிந்து பல காலமாகிவிட்டது!
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

என்னை ஒரு கிறுக்கல் பித்தனாக்கிய யாழ்களத்திற்கு கோடானுகோடி நன்றிகள்.....

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

16ஆம் ஆண்டில் காலடி வைக்கும் யாழ் இணையத்திற்கு வாழ்த்துக்கள்!

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

------

என்னதான் இயந்திரமான வாழ்வாக இருந்தாலும் யாழ் களம் எப்போதும் தமிழர்களுடனேயே இருப்பதுபோன்ற உணர்வைத் தருவதால் யாழை விட்டு இலகுவாக விலகமுடியாது என்பது புரிந்து பல காலமாகிவிட்டது!

 

யாழ்களத்தினூடாக... உங்களது பரிச்சயத்தை அழகாகக் கூறியுள்ளீர்கள் கிருபன்.

மேலே... நீங்கள், கூறியது... நூற்றுக்கு நூறு உண்மை. :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

16 ஆம் ஆண்டில் யாழ் கருத்து களம்

எனக்கும் யாழை அறிமுகபடுத்தி வைத்த பெருமை தமிழ் நாதம் இணையத்துக்கே சேரும்.....சுனாமி பேரலை அனர்த்தத்தின் போது நாம் இரவிரவாக இன்பதமிழ் ஒலி வானொலி ஊடாக மக்களிடம் நிதி சேகரித்து கொண்டு இருந்த பொழுது சுனாமியை பற்றிய கவிதைகள் பல யாழில் வந்தது அதை எமது நேயர்களுடனும் பகிர்ந்து கொண்டு நிதி சேகரிக்கும் இடைவெளிகளை நிரப்ப்பிகொண்டு இருந்தேன்......2004 இல் இருந்து யாழில் ஆரம்பித்த எனது பயணம் 2014 வரை தொடர்கின்றது.....எனக்கு ஓரளவு எழுத கற்றுக்கொடுத்ததே இந்த யாழ் களம் ...தான்...உலகெங்கும் எனக்கு பல உறவுகளை தந்ததும் இந்த யாழ் களம் தான்....வாழிய நீ பல்லாண்டு

Link to post
Share on other sites

எல்லோருக்கும் வணக்கம் , தமிழ் நாதம் இணையத்தின் ஊடாக யாழ் எனக்கு 2006 ஆம் ஆண்டளவில் அறிமுகமானாள் . அப்பொழுது எனக்கு தமிழ் எழுத தெரியாது . KOOMAGAN என்ற பெயரில் பதிந்து விட்டு வாசகனாக மட்டுமே இருந்தேன் . பின்பு 2011ல் யாழுடன் எனது தொடுகை ஆரம்பித்து இன்று வரை தொடர்கின்றது . இதை ஆரம்பித்த மோகன் அண்ணையும் , அவருடன் தோள் நின்று தமிழில் யூனிகோர்ட்டை ஆரம்பித்து பெரும்பங்காற்றிய யாழ் சுரதா வாணனும் மறக்கப்படமுடியாதவர்கள் . அத்துடன் எப்பொழுதும் ஒரு மரத்துக்கு வேர்கள் வெளியே தெரிவதில்லை .அந்தவகையில் பல வேர்கள் யாழுக்கு இருக்கின்றன . அந்த வேர்களும் மறக்கப்பட முடியாதவையே!! யாழ் என்றுமே வாலைக்குமரியாக  வலம் வரவேண்டும் . உண்மை ஓங்குக!! வாழ்க தமிழ்!! வாழிய யாழ் இணையம்!!

Link to post
Share on other sites

யாழ் இணையம் பதினாறாவது அகவையில் காலடி பதிக்கும் இவ்வேளையில் யாழ் இணையம் உலகம் பூராவும் உள்ள தமிழர்களை ஒன்றிணைத்து தொடர்ந்து மென்மேலும் பல ஆண்டுகள் தொடரவேண்டும் என்று வாழ்த்துகிறேன். :)

 

1999ம் வருட இறுதியில் ஏதோ ஒரு தேடுபொறியில் yarlpanam  என்று தேடிய போது தான் எனக்கு யாழ் இணையம் அறிமுகமாகியது. அன்று தொடக்கம் நான் யாழ் இணைய வாசகனாக உள்ளேன். பலவருடங்களாக யாழில் இணைந்து எழுத ஆர்வம் இருந்த போதும், தமிழில் எழுதும் கஸ்டத்தால் யாழில் இணைய விரும்பவில்லை. பின்பு 2011 வருட இறுதியில் யாழில் இணைந்த போதும் 2012 ஜூலையில் தான் நான் ஒரு மாதிரி தமிழில் எழுத தொடங்கியது. :D

 

நான் யாழில் இணைந்து சிறிது காலம்தான் என்றாலும் யாழுக்கு வெளியாலும் சமூகவலைதளங்களில் பல யாழ் உறவுகள் நட்பாக இருக்கிறார்கள். எனவே உலகெங்கும் எனக்கு பல உறவுகளை தந்ததும் இந்த யாழ் களம் தான்..வாழிய நீ பல்லாண்டு.....

 

என்னதான் நடந்தாலும், யாழை விட்டு விலகுவது என்பது இலகுவான காரியம் இல்லை.

 

ஒரு திரியில் கள உறவு ஒருவர் எப்படி யாழை விட்டு விலகுவது என்று கேட்ட கேள்விகக்கு புங்கையூரன் அண்ணா எழுதிஇருந்தார். யாழ் என்பது தமிழ் கல்யாணம் மாதிரி என்று. :o   அதுதான் நிதர்சனமான உண்மை.

நாம் எல்லாம் இங்கு ஒன்று சேர வழி ஏற்படுத்தி தந்த மோகன் அண்ணாவுக்கும் நன்றிகள்......

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யாழ் என்பது தமிழ் கல்யாணம் மாதிரி என்று. :o   அதுதான் நிதர்சனமான உண்மை.

நாம் எல்லாம் இங்கு ஒன்று சேர வழி ஏற்படுத்தி தந்த மோகன் அண்ணாவுக்கும் நன்றிகள்......

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.