Jump to content

70 பது 80 களின் ஒரு மீள் பார்வை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடிதங்கள் எழுதுவதில் ஒரு இன்பம்.

வாழ்த்துமடல் வாங்கி அனுப்புவதிலும் ஆர்வம்.

பி யோனை எதிர்பார்ப்பதில் ஒரு சுகம்.

தந்தி வந்தால் ஒரு ஏக்கமும் பட படப்பும்.

கள்ளமாங்காயின் ருசிக்கு இன்னொரு உணவா?

கள்ள இளனி ஒரு தேனாமிர்தம்.

கள்ள மரவெள்ளி சுட்டால் தனி இன்பம்.

புத்தகத்தினுள் சினிமா எக்ஸ்பிரஸ் படிப்பது.

பள்ளிக்கூடம் கட் அடித்த சினிமா.

ஊரின் தெருக்கள் கூட்ட பெல்பொட்டம்.

சோடாபெட்டி கூனிங்கிளாஸ் போட்டகாலம்.

20 இஞ்சிக்குமேல் கீல்ஸ் போட்டு விழுந்தகாலம்.

கிப்பிதலைமயிர் வளர்த்து சடையுடன் திரிந்த காலம்.

நாவற்பழம் பெறுக்க ஒரு கூட்டம்.

படிப்பதில் போட்டி போட்ட காலங்கள்.

சுழட்டலுக்கு

ஒவ்வொரு குழுக்களாய் செல்வது.

பீடிக்கொம்பனி தொழிலில் ஒரு ஆர்வம்.

நெசவுசாலை பெண்களுக்கு என ஒரு தனி உலகம்.

காலையில் வயலுக்கு செல்லும் மாட்டுவண்டி சத்தம்.

காலை தண்ணி இறைக்க துலாமிதிப்பதில் ஒரு பயிற்ச்சி.காலை வயலுக்குள் வேலை செய்பவர்கள் வரம்பு சண்டைகள்.

 

எங்கடை காணி மரக்கறிகள் தனி ருசி.

காலை பாடசாலைக்கு செல்லும் பரபரப்புக்கள்எங்கடை காணி மரக்கறிகள் தனி ருசி..

காலத்து ஏற்ற பழவகை உணவுகள்.

திருவிழாக்காலங்களில் ஊரே கொண்டாடிய காலங்கள்.

கோயில்கள்,பாடசாலைகள்,வாசிகசாலைகளில் சிரமதான முறைகள்.

சிரமதானங்கள் என்பது பல விரிசல்களை ஒன்று சேர்த்த காலங்கள்.

ஆண்டுவிழாக்களுக்கான ஒழுங்குகளின் பர பரப்புகள்.பரீட்சைக்காய் மாலை நேர வகுப்புகளின் ஆரவாரம்.

பரீட்சை முடிவுகளில் தோல்வி வெற்றிகளின் பர பரப்புக்கள்.

வாசிகசாலைக்கு முன் கைப்பந்து விளையாடும் இளைஞ்ஞர்கள்.

கடதாசிக்கூட்டவிளையாட்டு ஆங்காங்கு நடக்கும்.

மாரியில் கேணிக்கு,கிணற்றுக்கு குளிக்க போன காலங்கள்.

மாலையில் மதுபோதைக்காரர்களுக்கென ஒரு உலகம்.

வேள்விகாலங்களில் ஆடு வளர்ப்பவர்களுக்கென ஒரு உலகம்.கோழி இறைச்சி கோழிக்கு நோய்வந்தால் மட்டுமே.

பழம்சோறும் மீன் குழம்பும்,மரவெள்ளிகறி குழைத்த கவளை.

சையிக்கிளை சோடித்து ஓடும் இளைஞ்ஞர்கள் போட்டிகள்.

அம்மாளை பூட்டி வைத்து ரசித்தவர் காலம்.

அம்மன் ஆலயத்தை துறக்க இளைஞ்ஞர்கள் துடித்த காலங்கள்.

பெரியவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பழித்த காலங்கள்.

சமூகத்தை வளர்க்க உழைத்தவர்கள் வாழ்ந்த காலங்கள்.

நாடகங்கள் போடுவதில் போட்டி போட்டகாலம்.

கொம்மினீசம் ஊருக்குள் அடிவைத்த காலங்கள்.

அந்தக்கால இளைஞ்ஞர்கள் பொறுப்புடையவர்களாய் வாழ்ந்த காலம்.

இலங்கை வானொலியில் சிறந்த நாடகங்கள் கேட்ட காலம்.

சொந்த நிலங்களின் விளைச்சல் உணவாக உண்ட காலம்.

மறுமலர்ச்சி மன்றம் உருவான காலம்.

சிறு கைத்தொழில் வளர்ச்சிகள் உயர்ந்த காலம்.

எமது இளைஞ்ஞர்கள் விவசாயத்துக்காய் வன்னிக்கு சென்ற காலம்.

பொறுப்பற்ற இளைஞ்ஞர்களை வெறுத்த காலங்கள்.

எம்மவர்கள் முப்படைகளிலும் அதிக உத்தியோகங்களை பெற்ற காலம்

திருகோணாமலையில் தொழிலுக்காய் எம்மவர் படையெடுத்த காலம்.

அரசியலில் ஓரளவு ஈடுபாடு இருந்த காலங்கள்.

எமது ஊரை குறிவைத்த அரசியல்வாதிகள் பலர் இருந்த காலம்.

அன்றாட உணவுக்காய பிசிங்கான் பெறுக்கி விற்றவர் பலர் உண்டு.

சிறிமாவின் சுய உற்ப்பத்தி அறிமுகமான காலம்.

அரசாங்க ஊழியர்கள் வீட்டு அடுப்படியில் பூனை படுத்த காலங்கள்.

விவசாகிகளின் வாழ்க்கையின் பொற்க்காலங்கள்.

பாணுக்காய் சங்கக்கடையில் விடிய மூண்டு மணிக்கே கியூக்காலம்.

பல நோய்களைப்பற்றி அறியாத காலங்கள்.

வறுமையானாலும் குடும்பங்களுக்குள் ஒற்றுமைகள் இருந்த காலம்.

குறைந்தது நான்கு ஐந்து பிள்ளைகளை பெற்றடுத்த காலம்.

அண்ணன்,தம்பி,தங்கை,தம்பி என பல உறவுமுறைகள் இருந்த காலம்.

அன்பு பாசம் என பரிமாறி வாழ்ந்த காலங்கள்.

இருக்கிறதை பகிரந்து உண்ட காலங்கள்.

இல்லாதவர்க்கு கொடுத்து வாங்கி வாழ்ந்த காலங்கள்.

குடும்பச்சண்டைகள் சில நாட்களே நீடித்த காலங்கள்.

விவாகரத்து என்பதை அறியாத காலங்கள்.

நன்மை தீமைகளை உறவுகள் சேரந்து நடத்தி காலங்கள்.

வறுமையானாலும் வளங்களுடன் வாழ்ந்த காலங்கள்.

இளைஞ்ஞர்கள் கள்ள தண்ணியும்,கள்ள தம்மும் அடித்த காலம்.

இக்காலம் அப்பன் மகன் சேர்ந்து தண்ணி அடிகாலமாச்சு.

கணனி யுகமானாலும் இக்காலம் மாடிவீட்டு ஏழைகள்காலம்.

காரும்,வீடும்,பணமும்,சொகுசும் வாழ்கை என வாழும்காலம்.

அக்காலம் ஒரு பொற்காலம்.

                                       இக்காலம் ஒரு பொறாத காலமாகிறது

 

உங்கள் பண் .பாலா.

www.panncom.com

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை.

எமது அன்றைய வாழ்கையை படம் பிடித்து காட்டுகிறது.

நன்றி கொழும்பான்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.