Jump to content

70 பது 80 களின் ஒரு மீள் பார்வை.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கடிதங்கள் எழுதுவதில் ஒரு இன்பம்.

வாழ்த்துமடல் வாங்கி அனுப்புவதிலும் ஆர்வம்.

பி யோனை எதிர்பார்ப்பதில் ஒரு சுகம்.

தந்தி வந்தால் ஒரு ஏக்கமும் பட படப்பும்.

கள்ளமாங்காயின் ருசிக்கு இன்னொரு உணவா?

கள்ள இளனி ஒரு தேனாமிர்தம்.

கள்ள மரவெள்ளி சுட்டால் தனி இன்பம்.

புத்தகத்தினுள் சினிமா எக்ஸ்பிரஸ் படிப்பது.

பள்ளிக்கூடம் கட் அடித்த சினிமா.

ஊரின் தெருக்கள் கூட்ட பெல்பொட்டம்.

சோடாபெட்டி கூனிங்கிளாஸ் போட்டகாலம்.

20 இஞ்சிக்குமேல் கீல்ஸ் போட்டு விழுந்தகாலம்.

கிப்பிதலைமயிர் வளர்த்து சடையுடன் திரிந்த காலம்.

நாவற்பழம் பெறுக்க ஒரு கூட்டம்.

படிப்பதில் போட்டி போட்ட காலங்கள்.

சுழட்டலுக்கு

ஒவ்வொரு குழுக்களாய் செல்வது.

பீடிக்கொம்பனி தொழிலில் ஒரு ஆர்வம்.

நெசவுசாலை பெண்களுக்கு என ஒரு தனி உலகம்.

காலையில் வயலுக்கு செல்லும் மாட்டுவண்டி சத்தம்.

காலை தண்ணி இறைக்க துலாமிதிப்பதில் ஒரு பயிற்ச்சி.காலை வயலுக்குள் வேலை செய்பவர்கள் வரம்பு சண்டைகள்.

 

எங்கடை காணி மரக்கறிகள் தனி ருசி.

காலை பாடசாலைக்கு செல்லும் பரபரப்புக்கள்எங்கடை காணி மரக்கறிகள் தனி ருசி..

காலத்து ஏற்ற பழவகை உணவுகள்.

திருவிழாக்காலங்களில் ஊரே கொண்டாடிய காலங்கள்.

கோயில்கள்,பாடசாலைகள்,வாசிகசாலைகளில் சிரமதான முறைகள்.

சிரமதானங்கள் என்பது பல விரிசல்களை ஒன்று சேர்த்த காலங்கள்.

ஆண்டுவிழாக்களுக்கான ஒழுங்குகளின் பர பரப்புகள்.பரீட்சைக்காய் மாலை நேர வகுப்புகளின் ஆரவாரம்.

பரீட்சை முடிவுகளில் தோல்வி வெற்றிகளின் பர பரப்புக்கள்.

வாசிகசாலைக்கு முன் கைப்பந்து விளையாடும் இளைஞ்ஞர்கள்.

கடதாசிக்கூட்டவிளையாட்டு ஆங்காங்கு நடக்கும்.

மாரியில் கேணிக்கு,கிணற்றுக்கு குளிக்க போன காலங்கள்.

மாலையில் மதுபோதைக்காரர்களுக்கென ஒரு உலகம்.

வேள்விகாலங்களில் ஆடு வளர்ப்பவர்களுக்கென ஒரு உலகம்.கோழி இறைச்சி கோழிக்கு நோய்வந்தால் மட்டுமே.

பழம்சோறும் மீன் குழம்பும்,மரவெள்ளிகறி குழைத்த கவளை.

சையிக்கிளை சோடித்து ஓடும் இளைஞ்ஞர்கள் போட்டிகள்.

அம்மாளை பூட்டி வைத்து ரசித்தவர் காலம்.

அம்மன் ஆலயத்தை துறக்க இளைஞ்ஞர்கள் துடித்த காலங்கள்.

பெரியவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பழித்த காலங்கள்.

சமூகத்தை வளர்க்க உழைத்தவர்கள் வாழ்ந்த காலங்கள்.

நாடகங்கள் போடுவதில் போட்டி போட்டகாலம்.

கொம்மினீசம் ஊருக்குள் அடிவைத்த காலங்கள்.

அந்தக்கால இளைஞ்ஞர்கள் பொறுப்புடையவர்களாய் வாழ்ந்த காலம்.

இலங்கை வானொலியில் சிறந்த நாடகங்கள் கேட்ட காலம்.

சொந்த நிலங்களின் விளைச்சல் உணவாக உண்ட காலம்.

மறுமலர்ச்சி மன்றம் உருவான காலம்.

சிறு கைத்தொழில் வளர்ச்சிகள் உயர்ந்த காலம்.

எமது இளைஞ்ஞர்கள் விவசாயத்துக்காய் வன்னிக்கு சென்ற காலம்.

பொறுப்பற்ற இளைஞ்ஞர்களை வெறுத்த காலங்கள்.

எம்மவர்கள் முப்படைகளிலும் அதிக உத்தியோகங்களை பெற்ற காலம்

திருகோணாமலையில் தொழிலுக்காய் எம்மவர் படையெடுத்த காலம்.

அரசியலில் ஓரளவு ஈடுபாடு இருந்த காலங்கள்.

எமது ஊரை குறிவைத்த அரசியல்வாதிகள் பலர் இருந்த காலம்.

அன்றாட உணவுக்காய பிசிங்கான் பெறுக்கி விற்றவர் பலர் உண்டு.

சிறிமாவின் சுய உற்ப்பத்தி அறிமுகமான காலம்.

அரசாங்க ஊழியர்கள் வீட்டு அடுப்படியில் பூனை படுத்த காலங்கள்.

விவசாகிகளின் வாழ்க்கையின் பொற்க்காலங்கள்.

பாணுக்காய் சங்கக்கடையில் விடிய மூண்டு மணிக்கே கியூக்காலம்.

பல நோய்களைப்பற்றி அறியாத காலங்கள்.

வறுமையானாலும் குடும்பங்களுக்குள் ஒற்றுமைகள் இருந்த காலம்.

குறைந்தது நான்கு ஐந்து பிள்ளைகளை பெற்றடுத்த காலம்.

அண்ணன்,தம்பி,தங்கை,தம்பி என பல உறவுமுறைகள் இருந்த காலம்.

அன்பு பாசம் என பரிமாறி வாழ்ந்த காலங்கள்.

இருக்கிறதை பகிரந்து உண்ட காலங்கள்.

இல்லாதவர்க்கு கொடுத்து வாங்கி வாழ்ந்த காலங்கள்.

குடும்பச்சண்டைகள் சில நாட்களே நீடித்த காலங்கள்.

விவாகரத்து என்பதை அறியாத காலங்கள்.

நன்மை தீமைகளை உறவுகள் சேரந்து நடத்தி காலங்கள்.

வறுமையானாலும் வளங்களுடன் வாழ்ந்த காலங்கள்.

இளைஞ்ஞர்கள் கள்ள தண்ணியும்,கள்ள தம்மும் அடித்த காலம்.

இக்காலம் அப்பன் மகன் சேர்ந்து தண்ணி அடிகாலமாச்சு.

கணனி யுகமானாலும் இக்காலம் மாடிவீட்டு ஏழைகள்காலம்.

காரும்,வீடும்,பணமும்,சொகுசும் வாழ்கை என வாழும்காலம்.

அக்காலம் ஒரு பொற்காலம்.

                                       இக்காலம் ஒரு பொறாத காலமாகிறது

 

உங்கள் பண் .பாலா.

www.panncom.com

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை.

எமது அன்றைய வாழ்கையை படம் பிடித்து காட்டுகிறது.

நன்றி கொழும்பான்

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஜெனீவா பின்னடைவுக்கான தார்மீகப் பொறுப்பை புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஏற்றுக்கொள்ளுமா? – வேல்ஸ் இல் இருந்து அருஸ்    112 Views மிகவும் சின்னம் சிறிய சிறீலங்கா அரசு உலக நாடுகளை ஒரு அணியில் இணைத்து தமிழ் மக்களுக்கு எதிரான போரை நடத்தியிருந்தது. இந்த அணியில் எதிரும் புதிருமாக இருப்பதாக நாம் கருதும் இந்தியாவும், பாகிஸ்தானும் இருந்தன, அமெரிக்காவும் ரஸ்யாவும் இருந்தன. ஏன் தற்போதைய எதிரிகள் என நாம் கருதும், சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் யப்பானும் இருந்தன. சிறீலங்காவின் இந்த வெற்றியானது அதன் இராஜதந்திரத்திர அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றியாகும். தனது அணுகுமுறையில் சிறீலங்கா அரசு மேலும் முன்நகர்ந்துள்ளதையே தற்போது ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் தொடர்பான தகவல்கள் எடுத்துக் காட்டுகின்றன. சிறீலங்கா தொடர்பான தீர்மானம் குறித்த விவாதத்தில் சிறீலங்காவுக்கு ஆதரவாக 21 நாடுகள் தமது வாதங்களை முன்வைத்துள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை (26) கொழும்பு தகவல்கள் தெரிவித்திருந்தன. அதற்கு எதிராக 15 நாடுகளே உள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன. பிரித்தானியா தலைமையிலான இணைக்குழு நாடுகள் முன்வைத்த தீர்மானம் என்பது யாருக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்ட தவறியதே அதன் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கையை தகர்த்து விட்டது. தீர்மானம் ஒன்று முன்வைக்கப்படவுள்ளதாக செய்திகள் வந்தபோதே, புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும், தாயகத்தில் உள்ள தமிழ் கட்சிகளும் தமது கோரிக்கைகளை முன்வைத்திருந்தன. அதில் போர்க்குற்றம், தமிழ் மக்கள் மீதான இனஅழிப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரல் என்பன தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தன. அதனை உள்வாங்கி வெளிவரும் தீர்மானத்திற்கு நாம் ஆதரவு அளித்து பலப்படுத்த வேண்டும் என்ற கருத்துக்களும் பரவலாக முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள பூச்சிய வரைபு தீர்மானம் என்பது சிறீலங்காவில் தமிழ் மக்கள் வாழ்வதற்கான அடையாளத்தையும், அங்கு தமிழ் மக்கள் மீது போர் மேற்கொள்ளப்பட்டது, அவர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர், அவர்களுக்கு எதிராக மனிதாபிமான குற்றங்கள் இழைக்கப்பட்டது என்ற வரலாறுகளையும் முற்றாக மறைத்துள்ளது. அதாவது தமிழ் மக்களின் கோரிக்கைகள் எதனையும் உள்வாங்காது, பிராந்திய மற்றும் உலக வல்லரசுகளின் அரசியல் அபிலாசைகளை முன்நிறுத்தி வரையப்பட்ட வரைபாகவே இதனை நாம் பார்க்க முடியும். இதனை வரைந்த இணைக்குழு நாடுகளில் தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளான பிரித்தானியா, கனடா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் உள்ளடங்கியிருந்தபோதும், புலம்பெயர் அமைப்புக்களால் அந்த நாடுகள் மீது ஒரு அழுத்தத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பது, புலம்பெயர் அமைப்புக்கள், அந்த நாடுகளில் பதவிகளில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் அங்குள்ள அரசியல் கட்சிகளில் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் ஆகியோரின் ஒட்டுமொத்த தோல்வியாகும். இவர்கள் சந்தித்த இந்த தோல்வி என்பது எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்படும் போராட்டங்களில் மக்கள் வைக்கும் நம்பிக்கையை சிதறடிக்கும் என்பது உண்மையானது. தற்போது கூட புலம்பெயர் அமைப்புக்களால் ஒழுங்கமைக்கப்படும் போராட்டங்களில் பங்குபற்றும் மக்களின் தொகையை கொண்டு நாம் அந்த அமைப்புக்களின் செயற்பாடுகள் மீதான மக்களின் நம்பிக்கையை கணிப்பிட்டுக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாது, புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தாம் வாழும் நாடுகளையோ அல்லது அங்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளையோ வென்றெடுக்காது, அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்குள் சென்று தமிழ் மக்களை ஏமாற்ற தலைப்பட்டுள்ளதையும் போர் நிறைவடைந்து 12 வருடங்களின் பின்னர் வெளிவந்துள்ள இந்த தீர்மானம் எடுத்துக்காட்டியுள்ளது. அதாவது தமது இருப்பை தக்கவைப்பதகே இந்த அமைப்புக்கள் போராடுவதாக கருதப்படுகின்றது. புலம்பெயர் தேசங்களில் மேற்கொள்ளப்படும் போராட்டங்களில் பல அமைப்புக்கள் தமது இருப்பை தக்கவைப்பதற்கான போராட்டங்களே தவிர தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்கள் அல்ல என்ற உண்மையையும் தமிழ் மக்கள் தற்போது மெல்ல மெல்ல உணரத் தலைப்பட்டுள்ளனர். தற்போதைய தோல்வி என்பது நாம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை எமக்கு எடுத்துரைப்பாதகவே நாம் பார்க்க வேண்டும். எமது சிந்தனைகள், செயற்பாடுகள், போராட்ட வழிமுறைகள், இராஜதந்திர அணுகுமுறைகள், அதனை வழிநடத்துபவர்கள் மற்றும் அமைப்புக்கள் என்பன கடுமையான மீள் பரிசீலனைக்கு உள்ளாக்கப் படவேண்டும்.   செயற்பட முடியாத புலம்பெயர் அமைப்புக்கள், ஆளுமையற்ற தலைமைகள் தமது தவறுகளை உணர்ந்து ஆளுமையுள்ள அடுத்த சந்ததியிடம் போராட்டத்திற்கான கடமைகளை ஒப்படைத்து ஒதுங்குவதே தமிழ் இனத்திற்கு அவர்கள் ஆற்றும் மிகச் சிறந்த பணியாகும். ஏன் இந்த முடிவை கூறுகின்றேன் என்றால், பிரித்தானியா தீர்மானத்திற்கான வரைபை மேற்கொண்ட போது புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பிரித்தானியாவின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் செயற்பாட்டாளர்கள் என தம்மை பிரநிதித்துவப்படுத்தும் சிலர் பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து தமிழ் மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர். தமிழ் மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து கனடாவில் உள்ள அமைப்புக்களும் செயற்பாட்டாளர்களும், போராட்டங்களையும், இராஜதந்திர அணுகுமுறைகளையும் மேற்கொண்டிருந்தனர் ஆனால் தீர்மானத்தில் தமிழ் இனம் என்றே சொற்பதமே இல்லை. நாசிகள் இனப்படுகொலையை மேற்கொண்டனர் எனக்கூறும் போது அது யூதர்களுக்கு எதிரானது என்று குறிப்பிடப்படுகின்றது. கொசோவோ இனப்படுகொலை என்னும்போது அது சேர்பியர்கள், அல்பேனியர்களுக்கு எதிராக மேற்கொண்டதாகவே குறிப்பிடப்படுகின்றது. ஆனால் தீர்மானத்தில் தமிழ் இனம் தனது உரிமைகளுக்காக போராடியாதாகவோ, அவர்கள் மீது இந்த போர்க் குற்றங்கள் இழைக்கப்பட்டதாகவோ எந்த தடயங்களும் இல்லை. இது தமிழ் மக்களை வழிநடத்துகின்றோம் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் என கூறிக்கொள்ளும் புலம்பெயர் அமைப்புக்கள் சந்தித்த மிகப்பெரும் தோல்வியாகும். எனவே தற்போதுள்ள கேள்வி என்னவெனில், இந்த தோல்விக்கான பொறுப்பை யார் ஏற்றுக்கொள்வது? அரசியல்வாதிகள் தவறிழைக்கும் போது பதவிவிலகுமாறு கோரிக்கை விடும் நாம் ஏன் இந்த அமைப்புக்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் தவறுகளை கண்டுகொள்வதில்லை? இவர்களின் இயலாமையால் ஒரு இனம் மிகப்பெரும் அழிவின் விழிம்பில் நிற்கின்றது. இந்த நிலையை தமது பதவிக்காகவும், கதிரைக்காகவும் தெருச்சண்டியர்களாக மாற்றம் பெற்றுவரும் அமைப்புக்கள் உணர்ந்துகொள்ளுமா? தவறானதும், தகமையற்றதுமான அமைப்புக்களையோ, அரசியல்வாதிகளையோ அல்லது செயற்பாட்டாளர்களையோ தமது பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளும் இனம் ஒருபோதும் தமது இலக்கை அடையப்போவதில்லை. அவ்வாறு அடைந்ததற்கான வரலாறும் இல்லை.   https://www.ilakku.org/?p=43521
  • நன்றாக இருக்கு தொடக்கமே, தொடருங்கள். தாலாட்டுவது பெண்கள் தானே, வள்ளத்திற்கு பெண்கள் பெயர்தான் சரி
  • உண்மையாக கருதி சொல்லி இருந்தால், நீங்கள் கனேடிய பிரசா அல்லது வதிவிட (எந்த வகை ஆயினும்) உரிமை பெற்றவராயின், இதை சொன்னதின் மூலம், வெட்கி தலை குனிய வேண்டும், கனடா இன் விழுமியங்களை அறியாமல் இருப்பதற்கு.       பிராம்டனோ அல்லது வேறு நகரமோ, கனடியன் நகரம், கனடாவின் விழுமியங்களை கொண்டது.   இதை அந்த வாதத்தில், கவுன்சிலர் சொல்கிறார். இதனால் தான், சிங்கள இனவாதம் கனடாவில் அடிபட்டு போகிறது, வெளிக்காட்ட இடம் இருந்தும். நினைவு சின்னமமோ அல்லது எதுவோ கட்டுவதின் முடிவு சனநாயக அடிப்படையில், வெளிப்படையாக வைக்கப்பட்டு, வாதிக்கப்பட்டு, உண்மை தன்மை அறியப்பட்டு, கவுன்சிலர் சொன்னது போல (சிங்கள இனவாத) எதிர்ப்பாளர்களின் கருத்துக்களும் வெளிவருவதற்கு இடமளிக்கப்பட்டு, அடைந்த முடிவு. மாறாக, இங்கே இரண்டு விடயங்கள். சிறி லங்கா தூதரகம் கனேடிய உள்நாட்டு நிர்வாகத்தில் தலை இட்டது. மிக முக்கியமாக, அந்த எதிர்கருத்தை கொண்டுவந்தவர் (youtube இல் உள்ள வீடியோ இல்) சொன்னது.    யாழ் பல்கலையில், கட்டடங்களை  திட்டமிட்ட பெருப்பிக்கும் பணியில் தான், முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடித்து அகற்றப்பட்டதாக, இல்லாததை ஆக்கி பொய் சொல்கிறார் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பொது சேவையாளர்களலான ( elected public servants) பிரம்டன் நகர கவுன்சிலர்களுக்கு. இது மிகப்பெரிய குற்றமாகும். அதுவும் சத்திய பிரமாணம் எடுத்து  (நினைவு சின்னத்திற்கு)  எதிர் கருத்தை கொண்டு வந்து இருந்தால். நீங்கள் கனேடிய பிரசா அல்லது வதிவிட (எந்த வகை ஆயினும்) உரிமை பெற்றவராயின் அல்லது அப்படி உரிமை உள்ள, பிரம்டன் நகர கவுன்சிலுக்கு கொண்டு செல்ல வேண்டிய கடப்பாட்டை கொண்டுளீர்கள்.  பிரசா உரிமைக்கு எழுத்து பரீட்சை அவசியம் என்பதை ஏன் என்று இப்பொது புரிகிறது.
  • பெருக்கி எழுதினால் காதலியின் பேரன் வந்து கதவை தட்டினால்???😆  தொடருங்கள் அண்ணா அருமையான எழுத்து நடை பரிச்சயமான இடங்கள் பெயர்கள்
  • கடைசியா நல்லூரில் திருநீற்றுப் பட்டையோடும் சந்தனப் பொட்டோடும் பார்த்தது போல் ஒரு நினைவு......!  🤔
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.