Jump to content

தகிக்கும் தீயடி நீ - சிறுகதை: நிழலி


Recommended Posts

தகிக்கும் தீயடி நீ

 

(கொஞ்சம் பெரிய சிறுகதை)

 

 

-----------------

 

அவளை நீங்கள் ஒரு புத்தகக் கண்காட்சிலோ அல்லது ஒரு ரயில் பயணத்திலோ கண்டிருந்தால் அந்த நிமிடமே "என்னைக் கல்யாணம் செய்வாயா" என்று கேட்டு இருந்து இருப்பீர்கள்.

அல்லது கோவில் ஒன்றின் கர்ப்பக் கிரகத்தில்  கண்டிருந்தால் அன்றே மொட்டை அடித்து இடுப்பில் ஒரு துண்டு மட்டும் கட்டி அனுதினமும் ஆராதிக்கும் ஒரு பக்தனாகவே மாறியிருப்பீர்கள்

அல்லது ஒரு சிறு சந்தியில் கடந்து போகும் இன்னொரு வாகனத்தில் அவளைக் கண்டு இருந்திருந்தாள் அவள் வீடு எங்கு என்று தேடியே பித்துப் பிடித்து அலைந்து இருப்பீர்கள்.

ஆனால் நான் அவளைக் கண்டது இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் அல்ல.  மிகவும் குறுகிய சந்தொன்றின் இடது பக்கம் இருந்த ஒரு சிறு அடுக்குமாடிக் கட்டிடத்தின் ஆறாம் மாடியில் அமைந்து இருந்த 609 இலக்க குடியிருப்பு (அபார்ட்மென்ட்) தான் அவளை முதன் முதலில் காண்கின்றேன்.

 

வீட்டின் முன் அறை முழுதும் சாம்பிராணிப் புகை சூழ்ந்து இருக்கின்றது. அறைக்குள்  இருந்த குத்து விளக்கில் இருந்து வந்த தேங்காய் எண்ணெயின் வாசமும் சாம்பிராணிப் வாசத்துடன் கலந்து வீசுகின்றது. சிவரில் அம்பாளும், குருவாயூரப்பனும் தொங்கிக் கொண்டு இருக்கின்றனர். மூலையில் யேசு நாதர் அமைதியாக காட்சியளிக்கின்றார். வீடே ஒரு வகையான பக்தி மயமாக காட்சியளிக்கின்றது.

 

எனக்கு முன் நின்று கொண்டு இருந்த மூன்று வேறு பெண்களுடன் அவளும் நின்று கொண்டு இருக்கின்றாள். நாங்கள் இரண்டு பேராகச் போயிருக்கின்றோம். இரண்டு பேர் மூன்றில் இருவரை தெரிந்தெடுக்க வேண்டும். என்னுடன் வந்த என் நண்பன் லதன் ஏற்கனே அவர்களுக்கு மிகவும் அறிமுகமானவன். இன்று தான் என்னை இங்கு கூட்டிக் கொண்டு வருகின்றான். "உன் ரசனைக்கும் விருப்பங்களுக்கும்' இவை தான் சரியானவை என்று சொல்லித்தான் அழைத்து வந்திருக்கின்றான்.

 

மூன்று பெண்களில் ஓரமாக அவள் நிற்கின்றாள். முதல் இரண்டு பேரையும் நிமிர்ந்து பார்த்த பின் மூன்றாவதாக நின்ற இவளை நிமிர்ந்து பார்க்கின்றேன். மயில் பச்சை நிற மேலாடையில் சந்தன நிற பட்டுத் தாவணியும், அதே நிறத்தில் பாவாடையையும் உடுத்திக் கொண்டு நீண்ட கூந்தலில் மல்லிகைப் பூவையும் சூடிக் கொண்டு நின்று கொண்டு இருக்கின்றாள். மல்லிகையா அல்லது அதே போன்ற ஒரு பூவா என்று தெரியவில்லை. அவளைப் பார்த்த அந்த வினாடியே பல யுகங்களுக்கு முன் தொலைத்த ஏதோ ஒன்றை மீண்டும் கண்டுவிட்டதாக மனம் குதிக்கின்ற ஆரம்பிக்கின்றது.

 

குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயில் குறும்புச் சிரிப்பும் பவளம் போல் மேனியும் பால்நிற பற்களும் கருமை நிற கேசமும், அதில் புரளும் மலர்களும் என்று இவளைப் போல் இது வரை பலரை பார்க்கினும் இன்று போல் என்றும் என் மனம் ஒரு வினாடியில் விக்கித்து நின்றது இல்லை. சாந்தமான கண்களுடன் கனிவாகப் பார்க்கின்றாள்.  கண்களின் வழியூடாகவே உயிரை அனுப்புகின்றாள். உடலில் ஆறாக ஓடிக்கொண்டு இருந்த என் சுயம்  ஒரு வினாடியில் ஆவியாகி போகின்றது. பாரமற்ற ஒரு சிறு பறவையின் இறகைப்போல நான் ஆகிக்கொண்டு இருக்கின்றேன். ஒரு பெண் இந்தளவுக்கு அமைதியாகவும் சாந்தமாகவும் இருக்க முடியுமா?..

 

அங்கிருக்கும் 50 வயது மதிக்கத்தக்க நெற்றியில் குங்குமப் பொட்டும், திருநீரும் பூசி கண்களில் சலனமும் இன்றி இருந்த பெண்ணிடம் "இவளை பிடித்து இருக்கின்றது" என்கின்றேன்.

 

"ப்ரியா அவருடே போக்கு" என்றுவிட்டு மேலும் இரண்டு மூன்று வசனங்கள் மலையாளத்தில் சொல்லி அந்த வீட்டின் உள்ளே இருக்கும் நான்கு அறைகளில் ஒன்றுக்குள் என்னை அவளுடன்  அனுப்புகின்றார் அந்தப் பெண்மணி.

 

அறைக்குள் மெதுவாக நான் நுழைகின்றேன். இது எனக்கு முதல் தடவை அல்ல. இதுவே இறுதித் தடவையாகவும் இருக்கப் போவதில்லை. ஆனால் மனம் மிகவும் படபடக்கின்றது. கால் பாதங்கள் வியர்க்கின்றன. எனக்குத் தெரிந்த மொழிகளில் உள்ள எல்லா வார்த்தைகளும் ஒரு வினாடியில் மறந்து விட்டதாக உணர்கின்றேன். அங்கிருக்கும் கட்டிலில் நிலை கொள்ளாமல் அமர்கின்றேன். ஒரு கிளாஸ் சிவாஸ் ரீகலாவது அடித்து விட்டு வந்து இருக்கலாமோ என்று ஒரு வினாடி மனம் எண்ணுகின்றது.

 

கதவினைச் இறுக்கிச் சாத்தியவள், ஒரு சில நிமிடங்கள் என்னையே பார்த்துக் கொண்டு நின்று விட்டு மனசில் இருந்து வரும் புன்னகையுடன் என் அருகே ஒரு சிறு இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டு தெளிவான தமிழில் "ஏன் என்னை அப்படியே விழுங்கிற மாதிரி பார்க்கின்றீர்கள்" என்று கேட்டு விட்டு கல கலவெனச் சிரிக்கின்றாள். மனதில் கோயில் பூசை நேரத்தில் ஒரு சேர அடிக்கும் மணிகளின் ஒருமித்த இசைபோல அவள் சிரிப்பு கேட்கின்றது.

 

நான் எதுவும் கதைக்காமல் இருப்பதைக் கண்டு, 'உடுப்புகளை கழட்டவா" எனக் கேட்கின்றாள். அவள் கண்களில் இருந்த சாந்தம் கிறக்கமாக மாறத் தொடங்குகின்றது. உள்ளுக்குள் எங்கோ தொலைந்து கொண்டு இருந்த நான் அவள் கேட்டதை சரிவரப் புரிந்து கொள்ள முன்னமே "வேண்டாம் வேண்டாம், I am not still ready" என்கின்றேன்.

 

விழுங்குவதற்கு எச்சில் கூட எனக்குள் இருக்கவில்லை.

 

-தொடரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலைப்பழுவில மறந்து, கிறந்து போயிடாமல் தொடருங்கோ, நிழலி!

 

'ஏவப்பட்ட நிலை'க்கு ஒரு வாசகனைக் கொண்டு வந்து விட்டு விட்டு, இடையில மாறுற பழக்கம், ஒரு கதை சொல்லிக்கு அழகல்ல! :D

Link to comment
Share on other sites

செல்லாத இடங்களை பயணகட்டுரைகள் வாசித்து அனுபவிப்பது போல இதையும் வாசித்து அனுபவிப்பம் . :icon_mrgreen:

 

இந்தியாவிற்கு கூட்டிக்கொண்டு போய் தாஜ்மகாலை காட்டாமல் விட்ட மாதிரி  இதையும் தொடங்கிவிட்டு இடையில் விடவேண்டாம் .

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏங்க நிழலி...  இது உண்மை கதையா இல்ல உல்டா கதையா?

ஏது எப்படியோ என் சொந்த டயரியில் மறைக்கப்பட்ட சொர்க்க பக்கங்கள் போல இருக்கின்றது உங்கள் எழுத்து...

அப்புறம் என்னாச்சு ? சொந்த கதை, சோகக் கதை கேட்டு ... போன வேலையையும் சரியாக செய்யாது அப்ப அப்ப சின்ன சின்ன காசு உதவிகள் செய்து ஒரு குட்டி (MGR) போல மாறிய என்னை போல அவனுமா உங்கள் நாயகன்?  :o

Link to comment
Share on other sites

ஹிஹி.. இது top gear இல் போகும்.. :wub::D

Link to comment
Share on other sites

என்னங்க நிழலி அண்ணா ஆபாசமாய் கதை எழுதியிருக்கிறீங்க. பொறுப்பாளராய் இருந்து கொண்டு நீங்களே இப்பிடி எழிதினாங்க ...................? இதுங்க கண்டிக்க வேண்டிய விடயமுங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹி.. இது top gear இல் போகும்.. :wub::D

 

ஓமோம்! எல்லாரும் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு மூண்டு நாலு கிழமை வாசிச்சு விசைப் பலகையெல்லாம் ஈரமாகி "ஷோர்ட் சேர்கிற்" ஆகி கணணியெல்லாம் மாத்துற நிலை வந்தாப் பிறகு...நிழலி இப்படி எழுதி முற்றும் வைப்பார்:

 

"மண்டை கிறு கிறுக்க, அடி வயிற்றிலிருந்து தீ எழுந்து உடலெல்லாம் பரவி உஷ்ணத்தில் வியர்த்துக் கொட்டி உச்சம் தொடும் வேளை..

"இஞ்சேருங்கோ! என்னப்பா புசத்துறீங்கள்?" கனவேதுமே??-மனைவியின் தோள் உலுக்கலில் கண் விழித்தேன்..

 

-முற்றும்-

 

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 

விழுங்குவதற்கு எச்சில் கூட எனக்குள் இருக்கவில்லை.

 

-தொடரும்

 

அப்புறம்...........???????????? :rolleyes:  :rolleyes:  :rolleyes:  :rolleyes:

 

ஓமோம்! எல்லாரும் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு மூண்டு நாலு கிழமை வாசிச்சு விசைப் பலகையெல்லாம் ஈரமாகி "ஷோர்ட் சேர்கிற்" ஆகி கணணியெல்லாம் மாத்துற நிலை வந்தாப் பிறகு...நிழலி இப்படி எழுதி முற்றும் வைப்பார்:

 

"மண்டை கிறு கிறுக்க, அடி வயிற்றிலிருந்து தீ எழுந்து உடலெல்லாம் பரவி உஷ்ணத்தில் வியர்த்துக் கொட்டி உச்சம் தொடும் வேளை..

"இஞ்சேருங்கோ! என்னப்பா புசத்துறீங்கள்?" கனவேதுமே??-மனைவியின் தோள் உலுக்கலில் கண் விழித்தேன்..

 

-முற்றும்-

 

:D

 

 

அவரும் எம்மைப்போல்

தொடர்ந்து குடும்பம் நடத்தணுமில்லையா  தலை... :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ற அம்மாச்சீ, ஞான் இவ்விட அந்த பெண்குட்டியே சிந்திச்சுன்ட்டு இருந்தல்லோ. என்ரா குருவாயுரப்பா, இது டுபாயில சம்பவைச்சல்லோ?  அவ்விட பெண்குட்டியே தாராளம் உண்டள்ளோ? :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழுங்குவதற்கு எச்சில் கூட எனக்குள் இருக்கவில்லை.

 

உண்மைதான் ,  வாய் விட்டுக்  கேட்டிருந்தால் வாங்கியிருக்கலாம்...! :)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் ஒரு மார்க்கமாகத்தான் இருக்கிறார்கள்..

Link to comment
Share on other sites

கூர்மையாகப் பார்த்துக் கொண்டு இருந்தவள், "சரி கொஞ்ச நேரம் கதைத்துக்கொண்டு இருப்பம்" என்கின்றாள்.  கொஞ்சம் கொஞ்சமாக என் நிலைக்கு நான் வரத் தொடங்குகின்றேன். மனம் சாந்தம் கொள்ள ஆரம்பிக்கின்றது. பல காலமாக அமைதியிழந்து கொண்டு வந்து கொண்டிருந்த மனம் அவள் அருகாமையில் மெது மெதுவாக அமைதியுறுகின்றது.

 

மிக வேகமான, எதுக்கெடுத்தாலும் பணம் என்ற வாழ்க்கை முறை நிரம்பிய டுபாயில் இப்படி நிதானமாக கதைத்து அளவுறாவி ஆறுதலாக அணுகும் முறை இல்லவே இல்லை. செலவழிக்கும் ஒவ்வொரு மணித்துளிக்கும் ஏற்ப கட்டணம் அறவிடும் இவர்களின் தொழிலில் இப்படியான ஒருவரையோ அல்லது ஒரு விடுதியையோ பார்ப்பது இயலாத காரியம். ஆனால் இவள் முற்றிலும் மாறுபட்டு இருந்தாள், இவள் மட்டுமல்ல அந்த விடுதியே கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருந்தது. வருகின்றவர்களின் பணத்தின் மீதுதான் கரிசனை என்ற போக்கு அங்கு இல்லாதது ஆச்சரியமாகவும் மனசுக்கு நிம்மதியாகவும் இருக்கின்றது.

 

எனக்கு அவள் பலவிதங்களில் வேறுபட்டு தெரிகின்றாள். பக்கத்து வீட்டு பெண்ணை பார்ப்பது போன்ற ஒரு தோற்றம். பல நாட்கள் பழகியது போன்ற ஒரு சிநேகிதம். என் விருப்பங்களுக்கு மட்டுமன்றி தன் விருப்புகளையும் நிறைவேற்றிக் கொள்ள முனையும் சாதுரியம். என் விருப்புகளை நிறைவேற்ற துடிக்கும் லாவகம், தனக்கு பிடிக்காத சில செயல்பாடுகளைத் தவிர்க்கச் சொல்லி கேட்கும் போது இருக்கும் அதிகாரம். போன்றவற்றால் அவள் எனக்குள் அன்றே முழுவதுமாக நிரம்பிக் கொள்கின்றாள்.

 

அதன் பின் அடிக்கடி அங்கு செல்லத் தொடங்குகின்றேன்.

 

ஒவ்வொரு முறையும் செல்ல செல்ல எமக்கிடையிலான நெருக்கமும் அதிகரிக்கின்றது. ஒரு முறை செல்லும் போது அவளிடம் கேட்கின்றேன்

 

"ஏன் இந்த தொழிலை செய்ய வேண்டி வந்தது"

 

அவர்களைப் பார்த்து அவர்களிடம் செல்பவர்கள் கேட்கும் மிகவும் அபத்தமான ஒரு கேள்வி என்றால் இதுதான். ஆனாலும் கேட்கின்றேன். வழக்கமான பதில் தான் வரும் என்று நினைக்கின்றேன்.

 

ஆனால், அவள் கூறுகின்றாள்

 

"எனக்கு இது பிடிச்சு இருக்கு. அதனால் செய்கின்றேன்".

 

" இங்கு இந்த வேலை செய்ய வேண்டி வரும் என்று தெரிந்தா வந்தாய்"

 

"தெரியும், வரும் போதே இந்த வேலைதான் என்று தெரியும். ஆனால் வீட்டு வேலைக்கு வருவதாக பொய் சொல்லித்தான் வீசா பெற்றேன்" என்கின்றாள். வழக்கமான புன்னகையும் தெளிவான பார்வையும் இதனைச் சொல்லும் போதும் அவளிடம் தெரிகின்றது.

 

அவள் எப்பவும் இப்படித்தான் பதில் சொல்கின்றாள். தன்னிடம் வரும் ஆணிடம் ஒரு துளி அனுதாபத்தினைச் சம்பாதித்தாலே போதும் இன்னும் அதிகமாக பணம் பெறலாம் என்ற போக்கும் அவளிடம் இல்லை.

அவள் தன் வேலையை மிகவும் லயித்துச் செய்கின்றாள். அவளால் மனதளவில் ஒன்றுபட முடியாதவர்களை அடுத்த முறை வரும்போது ஏதாவது சொல்லி தவிர்த்துக் கொள்கின்றாள். பிடித்து விட்டால் அவர்களுடன் தன் முழு ஈடுபாட்டினையும் காட்டி வசீகரிக்கின்றாள்.

 

மேலும் மேலும் அடிக்கடி அங்கு செல்கின்றேன். 

 

அவளை காணச் செல்லும் சில நாட்களில் வேறு எவரையும் அனுமதிக்காமல் என் வரவைப் பார்த்துக் கொண்டு இருப்பாள்.  இன்னும் சில நாட்களில் அவள் இன்னொரு வாடிக்கையாளருடன் இருப்பாள். அவருடன் முடித்து விட்டு தலை முழுகி விட்டு வரும் வரைக்கும் நான் அவளுக்காக காத்திருப்பேன்.

 

அவளைப் பார்க்க எனக்கு சில நேரங்களில் பொறாமை வருவதையும் தவிர்க்க முடியவில்லை. தன் வேலையை மிகவும் ரசித்துச் செய்கின்றாள் என்பதை அவள் செயல்களே உணர்த்தி விடும். அவளுக்கும் மிகவும் பிடித்த ஒருவனாக மாறி விடுகின்றேன். அநேகமாக தன்னைப் பற்றி அனைத்தையும் கூறுகின்றாள். அவள் கேரளாவில் உயர் கல்வி படித்து MA பட்டம் பெற்றவள் என்பதும், அங்கு சிறிது காலம் நல்ல வேலையில் இருந்து இருக்கின்றாள் என்பதையும் அறிகின்றேன். அவளுக்கு தம்பியும் ஒரு அக்காவும் கேரளாவில் இருக்கின்றார்கள். உழைக்கும் பணத்தில் அரைவாசியை  அங்கு அனுப்பி விட்டு மிச்சத்தினை இங்கே செலவழிக்கின்றாள்.

 

பல தடவைகள் அவளிடம் போய் வெறுமனே கதைத்து விட்டு வந்திருக்கின்றேன். பின் பல தடவைகள் அவளை வெளியே அழைத்துச் சென்று இறுக்கி அணைத்தவாறு சினிமா பார்த்து இருக்கின்றேன். சில தடவைகள் அவளை நிர்வாணமாக்கி விட்டு புத்தர் சிலைக்கு முன் மண்டியிட்டு இருக்கும் ஒரு பிட்சு போல அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்து இருக்கின்றேன்.  சில இரவுகள் என் அபார்ட்மென்ட் இற்கே வந்து என்னுடன் தங்கி அடுத்த நாள் சென்றிருக்கின்றாள். ஒரு வார இறுதியில் வந்து கேரள முறைப்படி மீனும் சோறும் சமைத்து தந்து வார இறுதி முடியும் நாளில் போயிருக்கின்றாள்.

 

இப்படி ஒரு பெண்ணிடமே தொடர்ந்து போவது தேவையற்ற உணர்ச்சிகளுக்கு (Emotions) இடம் கொடுக்கும் என்று என் நண்பர்கள் சொல்வதையும் நான் கேட்பதாக இல்லை. "கடைசியில் நீ அவளை கலியாணம்தான் கட்டப் போகின்றாய்" என்று நண்பர்கள் சொல்லிப் பார்கின்றார்கள்.

 

இவ் விடயத்தில் நாம் இருவரும் தெளிவாக இருக்கின்றோம். ஆளை ஆள் எவ்வளவு நெருங்கிக் சென்றாலும் இணைய முடியாது என்று அறிந்து கொண்டுள்ளோம். இருவருக்கும் இடையில் நெருக்கம் இருப்பது போன்றே விரிசல்களும் இருப்பதை ஏற்கின்றோம். எல்லாவற்றையும்  சமூகம் என்னைப் பற்றி வைத்திருக்கும் பிம்பத்தினை இழக்க  தயாரில்லை என்பதையும் நான் அறிந்து வைத்து இருக்கின்றேன், அவளும் இதனை அறிந்து வைத்திருக்கின்றாள்.

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

ஒரு நாள் எனக்கு மீண்டும் ஊருக்கு போக வேண்டிய அவசியம் வருகின்றது. ஊரில் என் பெயரில் வாங்கி வைத்து இருந்த ஒரு நிலம் தொடர்பாக ஒரு பிரச்சனை. அவளிடம் சொல்லி விட்டு ஊருக்கு கிளம்புகின்றேன்.

 

பதினைந்து நாட்கள் சென்றிருக்கும், மீண்டும் டுபாய் வருகின்றேன்.

 

வந்த அடுத்த நாள் அவளிற்கு பல முறை தொலைபேசி எடுக்க முயற்சித்தும் அவளது தொலைபேசி துண்டிக்கப்பட்டு இருந்தமையால் தொடர்பு கொள்ள முடியவில்லை. பொதுவாக இவர்கள் அடிக்கடி இலக்கத்தினை மாற்றுவார்கள் என்பதால் அது பற்றி பெரியளவில் கவலைப்படவில்லை. பின் அடுத்த நாள் அவளின் விடுதிக்கு சென்று கதவினைத் தட்டுகின்றேன். ஒரு சீக்கியர் வந்து கதவினைத் திறக்கின்றார்,  அவர் முகத்தினைப் பார்த்தவுடன் புரிந்து போகின்றது, பலர் வந்து கதவைத் தட்டி அவர்களைத் தேடியிருக்கின்றார்கள் என்று. அவர் மொழியில் ஏதோ கத்தி சொல்கின்றார். இது ஒரு Family unit என்று சொல்வது மட்டும் புரிந்தது.

 

எங்கு போயிருப்பாள்?

 

பொதுவாக இவர்கள் எப்படித்தான் வெளியிற்கு தம்மை ஒரு குடும்பம் போன்று காட்டிக் கொண்டாலும் அக்கம் பக்கம் இருப்பவர்கள், அடிக்கடி ஆண்கள் வந்து போகின்றதை வைத்து ஒரு மூன்று நான்கு மாதங்களில் கண்டு பிடித்து கட்டிட உரிமையாளருக்கு ஆக்கினை கொடுத்து எழும்பச் சொல்லிவிடுவார்கள். முதல் ஒருக்காவும் இப்படி நடந்து இரண்டு நாட்களின் பின் அவளே தொலைபேசி எடுத்து தன் புதிய இலக்கத்தினையும் முகவரியையும் தந்து இருந்திருந்தாள்.

 

இம் முறையும் அப்படித்தான் என்று நினைத்து அவள் தொலைபேசி அழைப்புக்காக காத்து இருக்கின்றேன்,

 

இரண்டு நாட்கள் போய் விட்டன. அவள் அழைக்கவில்லை

 

பத்து நாட்கள் போய் விட்டன. அவள் அழைக்கவில்லை

 

ஒரு மாதம் போய்விட்டது; அவள் அழைக்கவில்லை

 

ஒரு வருடமே ஓடிப் போயிட்டு - அவள் அழைக்கவேயில்லை,

 

ஒரு வேளை பொலிஸ் அவர்களைப் பிடித்து ஊருக்கு வலுக் கட்டாயமாக அனுப்பி வைத்து இருக்குமோ. அல்லது சிறையில் தள்ளி இருக்குமோ ("ஐயோ என் நம்பரை தன் அலைபேசியில் இருந்து அழித்து இருப்பாளோ"), அல்லது ஏதாவது விபத்தில் சிக்கியிருப்பாளோ,

 

எங்கே போயிருப்பாள்... ஒரு முறை கூட தொலைபேசியில் அழைக்க முடியாதளவுக்கு என்ன நடந்து இருக்கும்? உயிரோடுதான் இருக்கின்றாளா....?

 

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

 

அடுத்த வருடம் நான் எல்லா பொருத்தங்களும் பார்த்து, ஒன்றுக்கு பல தடவைகள் குடும்பம் கோத்திரம் சாதி எல்லாம் விசாரித்து ஒரு சுப முகூர்த்தத்தில் ஊரில் இருக்கும், என்னை விட 9 வயது குறைந்த ஒரு பெண்ணை,  திருமணம் முடிக்கின்றேன்.

 

ஆனாலும் இடையிடையே அவள் பற்றிய நினைவும் அவள் வரும் கனவுகளும் வருவதை தவிர்க்க முடியவில்லை.

 

ஒரு முறை மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் போது அவள் பெயரை தவறுதலாக உளறி வசமாக  மாட்டிக் கொண்டு பின் ஒருவாறு சமாளித்து மயிரிழையில் தப்பியிருக்கின்றன். (ஆனாலும் ஒரு டவுட்டுடன் தான் மனைவி அதனை நம்பினார். )

 

வேலையில் உயர் பதவிகளும் தேடி வருகின்றது. தென் அமெரிக்காவுக்கு சென்று ஐந்து வருடம் வேலை பார்க்க வேண்டி வருகின்றது.  ஒரு பெண் குழந்தையும் பிறக்கின்றது.

 

பின் ஒரு நாளில் அலுவலக வேலை காரணமாக தென் அமெரிக்காவில் இருந்து ஓமான் செல்ல வேண்டி வருகின்றது.

 

ஒமானில் வேலைகளை முடித்து கொண்டு மீண்டும் தென் அமெரிக்கா செல்வதற்காக விமான நிலையம் வந்து டிக்கெட், வீசா எல்லாம் காட்டி விட்டு விமானம் புறப்பட நேரம் இருப்பதால் உள்ளே விடுப்பு பார்க்க நடக்கத் தொடங்குகின்றேன்.

 

என் பின்னால் ஒருவர் ஓடி வந்து என் தோளைத் தொடுகின்றார். பழக்கமான குளிர்ச்சி நிறைந்த கைகளால் தொடப்படுகின்றேன்

 

மனதில் ஒரு நரம்பு அதிரத் திரும்பிப் பார்க்கின்றேன்.

 

அவள் நின்று கொண்டு இருக்கின்றாள். அவளே தான் நின்று கொண்டு இருக்கின்றாள்.

 

அதே பொலிவுடனும், அதே சிரிப்புடனும் அதே குதூகலத்துடனும், அதே குறும்புடனும் அவள் நின்று கொண்டு இருக்கின்றாள். கொஞ்சம் உடம்பு வைத்திருக்கின்ற மாதிரி இருக்கு. வயிறு இலேசாக ஊதி இருக்கின்ற மாதிரியும் இருக்கு.

 

"நீயாக இருக்குமோ என்று நினைச்சு ஓடி வந்தன்" என்று மூச்சிரைக்கச் சொல்கின்றாள்.

 

பின் கையை பிடிச்சுக் கொண்டு தர தரவென்று அங்கிருக்கும் ஒரு சிறு உணவு விடுதிக்கு கூட்டிக் கொண்டு சென்று ஒரு இளைஞனை அறிமுகப்படுத்துகின்றாள்.

 

"இவர் என் கணவன்" என்று சொல்லி அறிமுகப்படுத்துகின்றாள்.

 

நான் அவனுக்கு கைலாகு கொடுக்கின்றேன். என் பிள்ளை என்று ஒரு ஆண் குழந்தையைக் காட்டுகின்றாள். அத்துடன் தான் இப்ப திருப்பி மாசமாக இருக்கின்றேன் என்கின்றாள்.

 

நிறையக் கதைக்கின்றாள், என்னனென்னவோ எல்லாம் சொல்கின்றாள். அவளது கணவனது கடை தான் அது. ஒரு விமான நிலையத்தில் கடை போட்டு வசதியாக இருக்கின்றார்கள் என்று புரிகின்றது.

 

எனக்கு  நேரமாகின்றது. நான் போகும் விமானத்திற்கான பயணிகள் அழைப்பு அரபு மொழியிலும் ஆங்கிலத்திலுமாக வருகின்றது.

 

அருகில் இருக்கும் ஒரு சிறு அங்காடிக் கடையில் அவளது ஆண் குழந்தைக்கு நிறைய இனிப்புகளும் ஒரு விளையாடு பொம்மையும் வாங்கி கொடுத்து விட்டு விலகி நடக்கின்றேன்.

 

இடையில் திரும்பி பார்க்கின்றேன். நான் போவதையே பார்த்துக் கொண்டு நிற்கின்றாளா என பார்க்கின்றேன். அவள் தன் உணவு விடுதியில் மும்முரமாக இருக்கின்றாள். இந்த வேலையையும் லயித்துச் செய்கின்றாள் போலும். ஆனாலும் என்னை பார்த்துக் கொண்டு நிற்கவில்லை என்பது கொஞ்சம் கவலையை தந்தது என்பது உண்மைதான்.

 

பின் இரண்டு முறை ஓமான் போக வேண்டி வந்தது.

 

ஏன் என்று தெரியவில்லை அவளை மீண்டும் காணக் கூடிய சந்தர்ப்பத்தினை தவிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு சென்று திரும்பி இருந்தேன்.

 

ஒரு வேளை அவள் இறந்து இருக்கலாம் என்று வசதியாக நினைச்ச என் மனம் அவள் கலியாணம் கட்டி குழந்தை குட்டிகளுடன் என்னைப் போலவே நிம்மதியாக இருப்பதை விரும்பவில்லை போலும்.

 

---------------------------------

 

முற்றும்.

 

மார்ச், 27 2014

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு சுயநலம்..கதாசிரியன் கடைசியில் தான் ஆண் என்கிற உணர்வை மேலோங்க வைத்துவிட்டு மறைந்து விட்டார். கதையின் போக்கு இயல்பான ஓட்டம் அடுத்து என்ன சொல்லப்போகிறார் படைப்பாளி என்று ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி வெற்றி பெற்றிருக்கிறது நிழலி. பாராட்டுக்கள் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

மனதைத் தொட்டுவிட்டது கதை.. :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்..சீரியசான கதை! நான் தான் "Y" குரோமோசோமிட வழி நடத்திலில கொஞ்சம் பகிடி விட்டுப் போட்டன்! மன்னிக்கவும் நிழலி! பச்சை நாளைக்குத் தான்! கதை சிம்பிளும் அருமையும்! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1986 களில் டுபாயில் இப்படி ஒரு இடம் இருப்பது எனக்கு தெரியாமல் போய்விட்டது....மற்றது அந்த நாட்டு சட்டத்திற்கு பயந்து சும்மா இருந்தது பெரிய மடத்தனம் என்று கவலையாக இருக்கு...... :D....நிழலி படைப்புக்கு நன்றிகள்.......................................................................................... [ஏன் என்று தெரியவில்லை அவளை மீண்டும் காணக் கூடிய சந்தர்ப்பத்தினை தவிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு சென்று திரும்பி இருந்தேன்.]A fantastic sentence written on every Japanese bus stop.Only buses will stop here – Not your time So Keep walking towards your goal

Link to comment
Share on other sites

என்னடா 'நாயகன் பட சரணியா' சீனோடு ஆரம்பிக்குதே என்று ஜோசித்தேன், ஓமான் விமான நிலையத்தில் விண்ணைத்தாண்டிவருவாயா சீன் sweet and sour சுவையில் வந்து சேர்ந்து, கௌதம் மேனனும் மணிரத்தினும் சேர்ந்தியக்கின ஒரு படத்தைப் பாத்த திருப்த்தி கிடைச்சுது. நன்றி. 
 
இனிப்பான இந்த மேற்கோதுக்குள், Objectivism சிலாகிக்கப்பட்டிருப்பது புரிகிறது. இருப்பினும் இந்தக் கதைக்கு மேற் கோது தான் அதிகம் இனிக்கிறது.
Link to comment
Share on other sites

முதலில் இருந்தது முடிவில் இல்லை .

தனக்கு விரும்பாத பல விடயங்களை மனம் தவிர்க்கத்தான் பார்க்கின்றது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இப்படி சிலவற்றை  எழுதணும் என்று ஆசை

ஆனால் புங்கையண்ணா  சொன்னது போல்

சில எம்முடன் அடங்கிப்போவதே நல்லது சரி....... :D

 

இந்தக்கதையை  வாசித்தபோது

தொண்டைக்குள் இருந்து ஏதோ  ஒன்று வெளியில் விழுந்தது போலிருக்கு..... :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இப்படி சிலவற்றை  எழுதணும் என்று ஆசை

ஆனால் புங்கையண்ணா  சொன்னது போல்

சில எம்முடன் அடங்கிப்போவதே நல்லது சரி....... :D

 

இந்தக்கதையை  வாசித்தபோது

தொண்டைக்குள் இருந்து ஏதோ  ஒன்று வெளியில் விழுந்தது போலிருக்கு..... :icon_idea:

 

நெஞ்சுக்குள்ள அடக்கி அடக்கி வைச்சிருக்கிறது உடம்புக்குக் கூடாது! எல்லாத்தையும் கொட்டிப் போடோணும்! தம்பி நல்லதுக்குத் தான் சொல்லுவன், கேட்டுக் கொள்ளோணும்!

 

(என்னப்பா? நான் மட்டுமா தனிய நிண்டு உருவேற்றுறது? வாங்கப்பா! வந்து சேர்ந்து ஏத்துங்கப்பா! :icon_mrgreen: )

Link to comment
Share on other sites

புங்கை, அர்ஜுன், ஜஸ்ரின், சசி வர்ணம், இசைக்கலைஞன், அஞ்சலி,  விசுகு, கொலம்பன், சுவி, சகாறா, புத்தன், இன்னுமொருவன் ஆகியோருக்கும் விருப்புகளை தெரிவித்த ஏனையவர்களுக்கும் என் நன்றி.

 

ஒரு ஆக்கத்தினை தந்து விட்டு, பின் அது பற்றி எழுதியவரே மேலும் எழுதுவதும் கதைப்பதும்அந்த ஆக்கத்திற்கான பல்வேறுபட்ட வாசிப்புகளை நிராகரித்து விடும் என்பதால் இக் கதை பற்றி நானே மேலும் எழுதுவதை தவிர்க்க விரும்புகின்றேன். ஆயினும் இக் கதை நான் நினைத்த வடிவில் என்னால் கொண்டு வர முடியவில்லை என்பதை உணர முடிகின்றது. வேலையில் இருந்து வீட்டுக்கு போக முன் இறுதிப் பகுதியை அவசரமாக எழுதி முடிக்க முனைந்தமையால் அதன் உயிர் சரியாக அமையவில்லை என்பதை மீண்டும் மீண்டும் வாசிக்கும் போது உணர முடிகின்றது.

 

அவளே கதி என்று சரணாகதி அடைந்த , இன்னொருவருடன் உடலுறவு கொண்டு விட்டு வரும் வரைக்கும் காத்து இருக்கும் அளவுக்கு தன் பற்றிய சுய சார்பு கூட (ஈகோ) இல்லாத ஒரு 'ஆண்' அவளைக் காணவில்லை என்பதனால் அவளுக்கு நல்லது நடந்து இருக்கும் அல்லது நல்லது நடக்கட்டும் என்று நினைக்கவில்லை.  அவனே திருமணம் முடித்து பிள்ளையும் பெற்று சிறப்பாக வாழும் போது கூட அவள் நல்லாக வந்திருப்பாள் என்று எதிர்பார்த்து இருக்கவில்லை.  தன் நினைப்புகளுக்கு மாறாக அவ்வாறு அவள் இறக்காமல், அழியாமல், பிரச்சனைக்குள் சிக்காமல் தன்னைப் போன்று நல்ல வாழ்வு வாழ்கின்றாள் என்பதைக் கூட ஏற்க தயங்குகின்றான்.

 

பாலியல் தொழிலின் சக பங்காளியான ஆண் முழு நட்டமும் பெண் மீது தான் ஏற்படவேண்டும் என்று நினைக்கும் சமூகத்தின் கூட்டு மனநிலை பற்றியும், கற்பு சம்பந்தமான பிரக்ஞையை எப்பவும் ஆண் பெண் சார்பாகத்தான் எண்ணுகின்றான் என்பதை பற்றியும் கருப்பொருளாக கொண்டு எழுத நினைத்து இருந்தேன். முடிவில் அந்த எண்ணத்தினை வாசகர்களுக்கு பல்வேறு பட்ட வாசிப்புகளினூடாகவேனும் சரியாக விதைக்க முடியாமல் போய்விட்டதை நானே ஒரு வாசகனாக நிலை நிறுத்தும் போது உணர்ந்து கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நான் ஆரம்பத்திலேயே ஓரளவு ஊகித்து விட்டேன் இது டுபாயில் நடந்து இருக்க வேண்டும் என. நானும் பல முறை இவ்வாறு "எச்சில் விழுங்கா முடியாத சூழ்நிலைகளை சந்தித்ததுண்ன்டு", நல்லவேலை எல்லாவற்ரையும் தவித்துக்கொண்டேன். பொதுவாக இவர்கள் தாங்களிடம் அன்பாக/உண்மையக‌ பழகுபவர்களிடம் அன்பு செலுத்துவார்கள், என் நண்பர்கள் பலர் இவ்வாறு ரஷ்யா, செக்கொஸ்லாவியா நாட்டு பெண்களுடன் வாழுகின்றார்கள். 
 
ஒரு கேள்வி ஆண்களாகிய நாம், திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்கள்  பரிசுத்தமாக இருக்க வேண்டும் என எதிர்பார்கிரோம், ஆனால் நாம் அப்படி இருப்பதில்லையே?  திருமணத்துக்கு முன்பு நீங்கள் செய்த இந்த செயலால் பின்பு  மன உறுத்துதல் எற்பட்டதுண்டா?
Link to comment
Share on other sites

 

  திருமணத்துக்கு முன்பு நீங்கள் செய்த இந்த செயலால் பின்பு  மன உறுத்துதல் எற்பட்டதுண்டா?

 

 

நல்ல வேளை நான் ஒரு கொலை பற்றியோ அதைச் செய்தவர் பற்றியோ மையப்படுத்தி எழுதவில்லை :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.