Jump to content

திருவாசகம் காட்டும் முக்திநெறி


Recommended Posts

திருவாசகம் காட்டும் முக்திநெறி

எஸ்.கருணானந்தராஜா

 

திருவாசகம் பக்திச் சுவையைப் பிழிந்து கொடுக்கும் திவ்யநூல்திருவாசகத்துக்கு உருகாதவர் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது பழமொழி.

 

வான் கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை

நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பம் சாற்றினிலே

தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து

ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே!

 

என்கிறார் வள்ளலார் பெருமான். கறந்த பால்கன்னலோடு நெய்கலந்தாற்போல சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நிற்கும் பெருமானாக இறைவனைத் தன் உள்ளத்தே கண்டு இன்புறும் மணிவாசகரின் அத்வைத அனுபவக் கருத்துக்கள் நிறைந்துள்ளதால்இறைவன் நமக்கு அண்மையிலும் அண்மையானவன் என்னும் நம்பி;கையை திருவாசகம் படிப்போர் உணர்கின்றனர்.

 

இதே கருத்தை 'விறகில் தீயினன் பாலிற்படு நெய்போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்....' என்று அப்பரும், 'உள்ளம்பெருங் கோயில் ஊனுடம்பு ஆலயம்.....தௌ;ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்' என்று திருமூலரும், 'உள்ளத்திலுள்ளானடி அதை நீ உணர வேண்டுமடி..'> 'நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்..'  என்ற வகையான விரிகள் வாயிலாகச் சித்த பரம்பரையினரும்> 'உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது' என்று சுவாமி விபுலானந்தரும் வலியுறுத்தியுள்ளனர்.

 

ரிக் வேதம் 'பிரக்ஞானம் பிரம்மம்' அதாவது தூய அறிவே பிரம்மம் என்றும், யஜூர் வேதம் 'அகம் பிரம்மாஸ்மி' நானே அந்த பிரம்மம் என்றும்> சாம வேதம் -  'தத்வமஸி' - நான் பிரம்மம் ஆனால் என் எதிரில் நிற்கும் நீயும் அதுவே என்றும். அதர்வண  வேதம் 'அயம் ஆத்மா பிரம்மம் இந்த ஆத்மாவே பிரம்மம் என்றும்இந்தக் கருத்தை வலியுறுத்திக் கூறுகின்றன. கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் குடிகொண்டிருக்கிறார்இதைத் தவிர தனியாக வேறு ஒரு கடவுள் இல்லைஇந்த உண்மையை எவ்வளவோ தவங்களுக்குப் பிறகு நான்  புரிந்து கொண்டிருக்கிறேன்' என்கிறார்சுவாமிவிவேகானந்தர்(http://vivekanandam150.com/?tag=தத்வமஸி) மணிவாசகர் தனது திருவாசகத்தின் மூலம் மேற்கண்ட கருத்துக்களை வலியுறுத்தினாலும் ஒரு சகுணோபாசகராகவே தனது ஆத்மீக வாழ்வை ஆரம்பித்திருக்கிறாரென்பதற்கு  திருவெம்பாவையுட்படப் பல திருவாசகப் பாடல்களும் திருக்கோவையாரும் நமக்குச் சான்று பகருகின்றன

 

சகுணோபாசகம் என்பது இறைவனை நம்மிலிருந்து பிரித்துப் பார்க்கும் நிலைவிக்கிரக வழிபாடுகளில் இறைவன் சகுணநிலையில் வைத்து வணங்கப்படுகிறார்அதாவது அவருக்கு உருவம், நிறம், குணம்போன்ற இயல்புகளுண்டு என்னும் நம்பி;கையில் சரியை> கிரியை> யோகம்> ஞானம் என்னும் வழிமுறைகளினூடாக இறைவனையடைய முயற்சிப்பதாகும்முறையே சாலோக> சாரூப> சாமீப> சாயுச்ய முக்தி நிலைகளுக்கு  இவ்வழிமுறைகள் பக்தனை இட்டுச்செல்கின்றன என்கிறது சித்தாந்தம்.

 

இவையெல்லாவற்றிற்கும் மேலாக உயர்ந்த பிறப்பற்ற முக்தியைக் கைவல்ய முக்தி காட்டுகிறது என்று வேதாந்திகள் கூறுவர். அதாவது: மிகச் சமீபமாக கையிலேயிருக்கும் வெண்ணெய்க்கு நிகரான பிரம்மத்தில் ஐக்கியப்பட்டுப் பிறப்பறுக்கும் நிலை(http://www.kaumaram.com/anuboothi/na_028u.ht)  இந்தக் கைவல்ய நிலையை அடைய இயமம்> நியமம்> ஆசனம்> பிராணாயமம்> பிரத்தியாகாரம்> தாரணை> தியானம்> சமாதி என்னும் எட்டு யோகப் படி நிலைகளைக் கடக்க வேண்டுமென்கின்றனர்தற்காலத்தில் முதல் நான்கு படி நிலைகளும் தேவையற்றவை> வாழ்ந்து கொண்டிருக்கும் சற்குருவின் உதவியோடு ஐந்தாவது படிநிலையாகிய பிரத்தியாகாரத்திலிருந்து தொடங்கி முயற்சியிருந்தால் சமாதிநிலையை அடைந்துவிட முடியுமென்றும்> கலியுகத்தில் இது மக்களுக்குக் கிடைத்தவோர் வரப்பிரசாதமென்றும் கூறி பல குருமார்கள் மக்களுக்கு வழிகாட்டுகின்றனர். எது எவ்வாறிருந்த போதும் பக்தியின்றேல் முக்தியில்லையென்பதே விதியாகும்யோகசாதனைகளைக் கற்று நிர்க்குணோபாசகனாகப் பரிணமிக்கும் ஒரு பக்தனின் ஆரம்பம் சகுண பக்தியிலேயே தொடங்குகிறது. இறைவனாயிருந்தாலும் அல்லது குருவாயிருந்தாலும் வழிகாட்டுபவர் மீது பிரேமபக்தி கொள்ளாது ஞானம் சித்திக்காது என்பது நம்பிக்கைஅந்த வகையில் எமது சமய குரவர்கள் இறைவன்மீதோ அன்றித் தாம்சார்ந்த குருவின்மீதோ வௌ;வேறுபட்ட பாவ நிலைகளில் பக்திசெய்து முக்தியைப் பெற்றார்களென்பது ஐதீகம்.

 

சிதம்பர நடராஜரைத் தம் முழுமுதற் கடவுளாய் ஏற்ற நால்வரில் சம்பந்தர்  வாத்ஸல்ய பாவம் அல்லது சத்புத்திர மார்க்கத்தைக் கடைப்பிடித்துச் சிவனைத் ததையாக வழிபட்டாரென்பர். சில சந்தர்ப்பங்களில்- உதாரணமாக திருத்தோணிபுரப் பதிகத்தில் 'சிறையாரும் மடக்கிழியே இங்கேவா...இளம் பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயோ' என்கின்றவாறாக  தான் கூறாமல் கிளியிடம் சிவனின் பெயரைக் கேட்டு இன்புறுவுது 'பெயரைச் சொல்லலாமா கணவன் பெயரைச் சொல்லலாமா.." என்பது போன்றிருக்கின்றது. அந்தவகையில் அது நாயகன் நாயகி பாவமாகும்இங்கே சம்பந்தர் உமையின் திருமுலைப்பாலையருந்தி சிவனாருக்குச் சத்புத்திரரானார் என்கின்ற கோட்பாடு சறுக்கலுக்குள்ளாகின்றது.

 

நாவுக்கரசர் ஆண்டான் அடிமைப் பாணியில் சிவனின் அடியாளாகச் சரிகைத் தொண்டு புரிந்து தாசமார்க்கத்தைக் கடைப்பிடித்தவர் என்பர்சுந்தரரோ வன்றொண்டர். இறைவனைத் தன் தோழனாக வழிபட்டவர். மணிவாசகர் குருசீட உறவினைப் பின்பற்றpயவர் (http://enthamizh.blogspot.co.uk/2013/10/natarajarchidambaram.htmlஆயினும்> இறைவனைத் தலைவனாக்கித் தான் தலைவியாகும் காந்தா பாவனையையும் (நாயகன் நாயகி பாவம்) கைக்கொண்டவர். இதனை அவரது திருக்கோவையாரிலும்> திருவாசகத்தில் திருவெம்பாவை போன்ற பதிகங்களிலும் நாம் காணலாம்திருக்கோவையார் தலைவன் தலைவி உறவை முன்வைத்து எழுதப்பட்டதாகும்.

 

'குருப் பரம்மா குருவிஷ்ணு குருதேவா மகேஸ்வரா> குரு ஷாட்ஷாத் பரப்ரம்ம தஸ்மை ஸ்ரீ குரவே நமக' என்கிறது குரு ஸ்தோத்திரம்மணிவாசகர் தன் குருவையே இறைவனாய்க் கொண்டார் என்பதற்கு அவரது போற்றித் திரு அகவல் சான்று பகர்கின்றது.

"............. புல்வரம்பு ஆய பலதுறை பிழைத்தும்

தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி

முனிவு இலாதது ஓர் பொருள் அது கருதலும்

ஆறு கோடி மாயா சக்திகள்

வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின

ஆத்தம் ஆனார் அயலவர் கூடி

நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்

சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள்

பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும்

விரதமே பரம் ஆக வேதியரும்

சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர்

சமய வாதிகள் தம்தம் தங்களே

அமைவது ஆக அரற்றி மலைந்தனர்

மிண்டிய மாயா வாதம் என்னும்

சண்ட மாருதம் சுழிந்து அடித்துத் தாஅர்த்து

உலோகாய தமெனும் ஒள் திறப்பாம்பின்

கலா பேதத்த கடுவிடம் எய்தி

அதில் பெருமாயை எனைப்பல சூழவும்

தப்பாமே தாம் பிடித்தது சலியாத்

தழலது கண்ட மெழுகு அது போல.......

 

மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது

அருபரத்து ஒருவன் அவனியில் வந்து

குருபரன் ஆகி அருளிய பெருமையைச்

சிறுமை என்று இகழாதே...."  என்கிறார்.

 

இங்கே நான் இறைவனை என் துணையாக் கொண்டபோது சிலர் நாத்திகமான நிரீசுவர வாதத்தைப் பேசினார்கள்சுற்றத்தவர்கள் என்னைப் பரமார்த்திகப் பாதையிலிருந்து லௌகீகத்துக்குத் திரும்ப வற்புறுத்தினர்வேதியர்கள் விரத உபாசனைகளைக் காட்டி என்னை ஆத்ம சாதனைகளிருந்து திருப்ப முயற்சித்தனர். சமய வாதிகள் தம்தம் மதங்களைக் காட்டி என்னைத் தம் பக்கம் இழுத்தனர். மாயாவாதம் என்னும் புயல் என்னை அலைக்கழித்ததுஇயங்கியல் பொருள்முதல் வாதமென்னும் பாம்பின் கொடிய விடம் என்னைப் பாதித்ததுஅதனால் மாயை சூழ்ந்து சரியெது தப்பெது என்றறியாமல் மயங்கினேன். அதனால் நெருப்புத் தழலைக் கண்ட மெழுகைப் போல உருக வேண்டியதாயிற்று.   அப்படியிருந்தும் வேறொரு தெய்வத்தைக் கனவிலும் நினையாது அருபரனான பிரபஞசத்துக்கு அதிபதியானவன் இப்பூமிக்கு வந்து குருபரனாகி என்னை ஆட்கொண்ட பெருமையைச் சிறுமையென்றிகழாது அவனையே பற்றிக்கொண்டேன் என்கிறார்அந்தப் பிடிவாத பக்தியின்பலனாய்:

 

"தந்ததுன் தன்னைக் கொண்டதென் றன்னைச்

சங்கரா ஆர்கொலோ சதுரர்

அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்

யாதுநீ பெற்றதொன் றென்பால்

சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்

திருப்பெருந்துறையுறை சிவனே

எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்

யானிதற்கிலன் ஓர் கைம்மாறே."           என்கிறார்

கோயில் திருப்பதிகம் -10ம் பாடல்

 

அற்பனான என்னை நான் உனக்குத் தந்தேன் ஆனால் பேரருளாளனான உன்னை நான்பெற்றுக் கொண்டேன்இதிலே யார் வெற்றிபெற்றவர்நான் முடிவிலாத ஆனந்தத்தைப் பெற்றேன் நீ எதனைப் பெற்றாய்திருப்பெருந்துறையுறையும் ஈசா என் உடலிலே இடம் பிடித்தாய் இதற்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்? என்கிறார்.

 

வடநாட்டில் கிட்டத்தட்ட நாநூறு வருடங்களுக்கு முன் மகா பிரபு ஸ்ரீ கிருஷ்ண சைத்தன்யர் என்னும் ஓர் மகான் கிருஷ்ண பக்தியிலூறித் தன்னை மறந்து பாடி ஆடியபடி வாழ்ந்தார்அவருக்குப் பார்த்ததெல்லாம் ஸ்ரீகிருஷ்ண வடிவமாகவே தோன்றியதாம்காடுகளினூடாக அவர் சென்றபோது அவரது பாடலையும் நடனத்தையும் கேட்ட கொடிய காட்டு விலங்குகள் அவருடன் சேர்ந்து ஆடின என்பது ஐதீகம்அவரடைந்த அந்த அந்தப் பரிபக்குவ நிலையை மகாபாவநிலையென்றும் அந்த நிலை இலகுவில் யாருக்கும் வாய்ப்பதில்லையென்றும் அந்நிலையை அடைந்தோர் இறைவனது சன்னிதானத்தைத் தமது பூதவுடலோடு அடைந்து விட்டவர்களென்றும் கூறுவர்

 

மணிவாசகப் பெருமானும் இந்த மாபாவ நிலையை அடைந்து விட்டவராகவே கருதப்படுகிறார்ஏறக்குறைய முப்பததி;ரண்டு வயதிற்குள் வாதவூரர் இந்த நிலையை அடைந்து முக்தி பெற்றுவிட்டதாகக் கூறப்படுகிறதுமுத்திநெறியை அறியாத மூர்க்கருடன் சேர்ந்து பல்வேறு சாதனை முயற்சிகளில் ஈடுபட்டுத் திசையறியாது திரிந்த என்னைத் தடுத்தாட்கொண்டருளி தூய பக்தி நெறியைக்காட்டி எனது பழைய வினைகளெல்லாம் அற்றுப் போகும்படி செய்து, எனது சித்தத்தை மறைத்திருந்த ஆணவம்> கன்மம்> மாயை என்னும் மும்மலங்களையும் அகற்றி நானேசிவம் என்று என்னை உணரும்படி செய்த அத்தனான எனது சற்குருவானவர் எனக்கு திருவருள் கூட்டியது போல வேறு யாருக்குக் கிடைக்கும்என்று மணிவாசகர் தனது அச்சோப்பதிகத்தில் திருப்தியடைகிறார்.

 

தித்திக்கும் பக்தித் துதிகளடங்கிய திருவாசகத்தைத் தம் வித்துவம் காட்டப்  படித்து விளக்கும் மகாபண்டிதர்களைவிட இறைவனையுணர வேண்டுமென்னும் நோக்கோடு கற்பவர்களே பெரும் பயனடைகிறார்கள். அந்த வகையில் அந்தத் திவ்ய நூலை பக்தியோடு கற்று இன்புறுவோமாக.

 

(இனிவரும் காலங்களில் தமிழில் கட்டுரை புனைவோரும் ஓர் உசாத்துணைப் பாரம்பரியத்தைக் கடைப்பிடித்துத் தமது கருத்துக்களுக்கு வலுச்சேர்க்க வேண்டுமென்பதை வலியுறுத்த சில தகவல்களுக்கு கணனிவழி உசாத்துணையும் தரப்பட்டுள்ளது.)

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.