Jump to content

"யாழ்" என் காதலி .. #ஜீவா

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"யாழ்" என் காதலி

yarl-logo.png

கனவுகளின் பெருவெடிப்பில் கண்டுகொண்ட களமிவள்

கண்ணுக்குக் குளிர்ச்சியாய் இருக்கவில்லை இருந்தும் என்னைக்

கவர்ந்துகொண்டாள் - மோகிக்கவும் முக்குளிக்கவும் கூடச்செய்தேன்

விளைவு, என் கிறுக்கல்களையும் கருக்கட்டிக் கொண்டாள்..

களத்து மாற்றங்களையும் கருவறுப்புகளையும் கூடத் தன்

காலவோரையில் கல்வெட்டாக்கினாள் - விருந்தினர்களாய் வரும்

வேடந்தாங்கல்களுக்கும் விளைநிலமானாள்

நச்சுக்களையும், வித்துக்களையும் கூடத்தன் கர்ப்பத்தில் சுமந்தாள்..

வேர்கள் இன்னும் அப்படியே தான் இருக்கின்றன

அறுப்புக்களும், விதைப்புக்களும் தொடர்ந்தாலும் அவள் அப்படித்தான்

அவளுக்கு ஆயிரம் குழந்தைகள் இருந்தாலும் என் காதலி

அவளின் கரம்பிடித்துக் கரைசேர்ந்தவனல்லவா நான் ..!

எண்ணிரண்டு பதினாறு வயதின்று - என் இதயத்து ஆசைகளைச்

சொல்லிவிட போதாது இது ஒன்று - இருந்தும்

இன்று போல் என்றும் இருக்க என் "யாழ்"காதலிக்கு வாழ்த்துக்கள்.. !!

**************************

16ம் அகவையில் காலடி எடுத்து வைக்கும் யாழ்மகளின் நினைவுகள் சுமந்து,

ஜீவா

30.03.2014  12:39

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்று. நீங்களும் காதலியாக்கிவிட்டீர்களா ???

Link to comment
Share on other sites

வாழ்த்துப் பா(வை ) கனமாகச் சொல்லியுள்ளீர்கள் பாராட்டுக்கள் ஜீவா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வு தந்தவளை வாழ்த்தாமல் போவது எப்படி? நன்றியோடு வாழ்த்த வந்த வரிகளுக்குள்தான் எத்தனை தத்துவங்கள் மூழ்கிக் கிடக்கின்றன. காலவோரைகளில் கல்வெட்டுகள் நிறைந்தாலும் அதில் காதல் என்னும் இன்பமும் கலந்தல்லவா இனிக்கிறது ஜீவாவுக்கு. யாழின் நரம்புகள் நேர்த்தியானவை அவற்றில் பிசிறுகள் தோன்றுவதில்லை. இடையிடையே அதில் படியும் தூசுகள் சில சமயங்களில் ஒலியின் தன்மையை மாறுபடுத்தும். ஆனால் நரம்புகளைச் சேதப்படுத்த யாழ் அனுமதிப்பதில்லை. நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஜீவாவின் எழுத்துக்கள் இந்தக்களத்தில் வாழ்த்துகளாக வெளிப்பட்டிருக்கின்றது பாராட்டுக்கள் ஜீவா :rolleyes:

Link to comment
Share on other sites

கிழமையில் ஒருநாள் பச்சையை கூட்டி கொடுங்க நிர்வாகம் :p 

அழகான கவி வாழ்த்துக்கள் ஜீவா ..வாழ்வு உங்களுக்கு இங்கா கிடைத்தது மகிழ்ச்சி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி ஜீவாவை கண்டு கனகாலம்......கவிதையோடை வந்திருக்கிறியள்.......வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களத்து மாற்றங்களையும் கருவறுப்புகளையும் கூடத் தன்

காலவோரையில் கல்வெட்டாக்கினாள் - விருந்தினர்களாய் வரும்

வேடந்தாங்கல்களுக்கும் விளைநிலமானாள்

நச்சுக்களையும், வித்துக்களையும் கூடத்தன் கர்ப்பத்தில் சுமந்தாள்..

ஜீவா, உங்கள் கவிதையைக் கண்டதை விடவும், உங்களைக் கண்டது தான் எனக்கு 'இரட்டிப்பு' மகிழ்ச்சி! :D

காந்தி கனவு கண்ட 'ராமராஜ்ஜம்' என்பது கற்பனையில், வெறும் 'கருதுகோளாக' மட்டுமே வாழ முடியும்!

அத்துடன் யாழ் என்பவள், ஒரு கருத்துக்களமாகவே தன்னை எப்போதும் இனம் காட்டுகிறாள்!

நச்சுக்களின் தலைகாட்டல் என்பது 'யாழைப்' பொறுத்த வரையில் தவிர்க்க முடியாததே!

காலப்போக்கில் அந்த நச்சுக்களுக்கான, ' எதிர்ப்புத் தன்மையை' வளர்த்தபடி, மேலும் ஆரோக்கியமாக அவள் பயணம் தொடரும் என்பதும் உறுதியே!

உங்கள் கவிதைக்கு நன்றிகள்...... யாழைப் புரிந்துகொண்டவர்களில் நீங்களும் ஒருவர் ! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக நீண்ட நாட்களின் பின்.... ஜீவாவை, கவிதையுடன் கண்டது மகிழ்ச்சி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை ஜீவா.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"யாழ்" என் காதலி

yarl-logo.png

அவளுக்கு ஆயிரம் குழந்தைகள் இருந்தாலும் என் காதலி

அவளின் கரம்பிடித்துக் கரைசேர்ந்தவனல்லவா நான் ..!

கவிதைக்கும்

வாழ்த்துக்கும்  நன்றி 

பல ஆண்களைக்கரை  சேர்த்த பெருமை யாழுக்கு உண்டு

என்பதையும் சொல்லிச்சென்றீர்

வாழ்க வளமுடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவனுள்ள கவிதையிடன் ஜீவா...! சந்தோசம்...!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை நன்று. நீங்களும் காதலியாக்கிவிட்டீர்களா ???

ஊடலும்,கூடலும் இருந்தாலும் தேடி நித்தம் தொலைவதால் அவள் காதலி தானே? :huh:

நன்றி அக்கா  வரவுக்கும்,கருத்துப் பகிர்விற்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துப் பா(வை ) கனமாகச் சொல்லியுள்ளீர்கள் பாராட்டுக்கள் ஜீவா.

ஆடின காலும்,பாடின வாயும் சும்மா இருக்காது என்பார்கள் அதே போலத்தான் யாழுடனான உறவும் விலக முடியாத பந்தம் இது.

நன்றி அண்ணா கருத்துப்பகிர்வுக்கு. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றாக உள்ளது ஜீவா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்வு தந்தவளை வாழ்த்தாமல் போவது எப்படி? நன்றியோடு வாழ்த்த வந்த வரிகளுக்குள்தான் எத்தனை தத்துவங்கள் மூழ்கிக் கிடக்கின்றன. காலவோரைகளில் கல்வெட்டுகள் நிறைந்தாலும் அதில் காதல் என்னும் இன்பமும் கலந்தல்லவா இனிக்கிறது ஜீவாவுக்கு. யாழின் நரம்புகள் நேர்த்தியானவை அவற்றில் பிசிறுகள் தோன்றுவதில்லை. இடையிடையே அதில் படியும் தூசுகள் சில சமயங்களில் ஒலியின் தன்மையை மாறுபடுத்தும். ஆனால் நரம்புகளைச் சேதப்படுத்த யாழ் அனுமதிப்பதில்லை. நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஜீவாவின் எழுத்துக்கள் இந்தக்களத்தில் வாழ்த்துகளாக வெளிப்பட்டிருக்கின்றது பாராட்டுக்கள் ஜீவா :rolleyes:

கவிதையை விட உங்கள் கருத்து கனதியாய் இருக்கிறது, என்ன இருந்தாலும் "நன்றி மறப்பது நன்றன்று" தானே அக்கா. :)

நன்றி அக்கா, உங்கள் வருகைக்கும், கருத்துப்பகிர்விற்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"யாழ்" என் காதலி

yarl-logo.png

அவளுக்கு ஆயிரம் குழந்தைகள் இருந்தாலும் என் காதலி

அவளின் கரம்பிடித்துக் கரைசேர்ந்தவனல்லவா நான் ..!

**************************

16ம் அகவையில் காலடி எடுத்து வைக்கும் யாழ்மகளின் நினைவுகள் சுமந்து,

ஜீவா

30.03.2014  12:39

கவிதைக்கு நன்றி வாழ்த்துக்கள்

உங்கடை மனம் எல்லாருக்கும் இல்லை :D

Link to comment
Share on other sites

"நின்ட காதலி என்ட மனைவி ஆகலாம் பட்சே,

என்ட மனைவி நின்ட காதலியாகன் பற்றில்லா ஜீவா சாரே,

மனசில்லாயோ" :D

http://www.yarl.com/forum3/index.php?showtopic=138204&p=998287#entry998287

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழமையில் ஒருநாள் பச்சையை கூட்டி கொடுங்க நிர்வாகம் :p 

அழகான கவி வாழ்த்துக்கள் ஜீவா ..வாழ்வு உங்களுக்கு இங்கா கிடைத்தது மகிழ்ச்சி .

குத்தவேணும் என்றால் அடுத்த நாள் வந்து குத்த வேண்டியது தானே? புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறுவது ராஜதுரோகம் சகோ.. :o

சரி ..சரி வந்து கருத்து எழுதினதுக்கு நன்றி சகோ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.