Jump to content

யாழிளையா….! கம்பீரம் மொட்டவிழ்க்கும் கட்டழகா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழிளையா….!

கம்பீரம் மொட்டவிழ்க்கும் கட்டழகா!

 

526095549_1583474.gif?4

 

 

நெடிதுயர்தல், நீள் வளர்தல்

அனைத்துமாய் நின் மாற்றம்

 

குரலொலியில் தெரிகிறது

ஆண்மையின் ஏற்றம்

 

செறிந்த பலம் குவிந்து

நிமிர்கிறது நின் மார்பு

 

அகண்ட பெரு வெளியில்

விரிகின்றன  உன் தோள்கள்

 

யாழிளையா….!

கம்பீரம்

மொட்டவிழ்க்கும் கட்டழகா

 

தமிழேந்தி

வலையுலவும் மெட்டழகா

 

பதினாறின் விடலையே

பயமேது உனக்கு

 

பால் வடியும் முகத்தில்

அரும்புதடா மீசை

 

பக்கவாட்டு கன்னங்களில்

படருதடா புற்கள்

 

இலக்கியத்தில்

உனைச் சொன்னால்

 

இரும்பூக்கும்

என் சொல்

 

இன்றுனக்கு

பதினாறாம்

 

இளையவனே!

 

தவழ்பருவம்

முடித்துவிட்டாய்..

 

தமிழேந்தித் திரிந்து

தரணியை வரி

 

அமிழ்ததொன்றே

அவனிக்கு உரை.

 

வீராப்புக் கொள்ளும்

வேழமாய் வளர்

 

வேதனைகள் தீர்க்கும்

ஞாயிராய் ஒளிர்

 

கனிவுன் உடனிருத்தி

காதல் நெய்

 

கடிதகற்றும் போதெல்லாம்

மோதல் செய்

 

இனியேதும் உன்போல்

இருக்காதென்பேன்

 

இணையவெளி உன்னிருக்கை

உடையாதென்பேன்

 

தனிமையிலே நின்றாலும்

தமிழால் போற்றி

 

அமிழ்தினிய பாட்டால்

வாழ்த்துச் சொல்வேன்

 

இனியனே இளையனே

இசைதரும் யாழனே – நான்

பாயிரம் பாடுவேன்

வாழ்க நீ பல்லாண்டு.

Link to comment
Share on other sites

அது..! :D

Link to comment
Share on other sites

அதே அது .பச்சை போட முடியல ////////// :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதுதுதுதுதுதுதுதுது :icon_idea:

அது..! :D

 

ஒரு முடிவோட   தான் இருக்கிறார்கள்

ஆண்களுக்குத்தான் பங்குனியில் 

பச்சையாக வருகுது என்ற  எனது  அபிப்பிராயம்  இத்துடன் காலி.... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பதினாறு கண்டு ...இனிக்கும் இளையனே ...இசை தரும் யாளனே.. வாழ்க பல்லாண்டு.

 

பாராட்டுக்கள் சகாரா :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பதினாறு கண்டு ...இனிக்கும் இளையனே ...இசை தரும் யாளனே.. வாழ்க பல்லாண்டு.

 

பாராட்டுக்கள் சகாரா :D 

 

 

பாட்டியுமா???

பதினாறு

ஆணழகன் என்றவுடன் நீலம் தீட்டுவது சரியா பாட்டி??? :lol:  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளையவனே!

தவழ்பருவம்

முடித்துவிட்டாய்..

தமிழேந்தித் திரிந்து

தரணியை வரி

அமிழ்ததொன்றே

அவனிக்கு உரை.

 

 

அருமையாய் எழுதியுள்ளீர்கள் சகோதரி...! :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமைக்கவி வடித்துள்ளீர்கள் ஆண்மைசொல்லி. வாழ்த்துக்கள் சகாரா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவி. திருக்குறள் போல் ரெட்டை வரிகளில் வடித்துள்ளீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடிதுயர்தல், நீள் வளர்தல்

அனைத்துமாய் நின் மாற்றம்

 

குரலொலியில் தெரிகிறது

ஆண்மையின் ஏற்றம்

 

செறிந்த பலம் குவிந்து

நிமிர்கிறது நின் மார்பு

 

அகண்ட பெரு வெளியில்

விரிகின்றன  உன் தோள்கள்

 

 

புற நானூற்றின் போர் வரிகள், நினைவில் மீண்டும் வந்து போகின்றன, வல்வை! :D

 

ஒளிறு வாள் அருஞ்சமர் உருக்கிக்,

களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே! 

 

கவிதாயினியிடம், வார்த்தைகள் வரிசை கட்டி வருகின்றன!

 

இருந்தாலும் ஒரு கேள்வி....!

 

யாழென்னும் அந்த இளவலை, மீட்டும் 'பாக்கியம்' பெற்ற அந்த 'மங்கை' யார்? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழை ஆணாக வர்ணித்தாலும் அதனை மீட்டுவது பெண்தான்   :D ....வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

நெடிதுயர்தல், நீள் வளர்தல்

அனைத்துமாய் நின் மாற்றம்

 

குரலொலியில் தெரிகிறது

ஆண்மையின் ஏற்றம்

 

செறிந்த பலம் குவிந்து

நிமிர்கிறது நின் மார்பு

 

அகண்ட பெரு வெளியில்

விரிகின்றன  உன் தோள்கள்

 

யாழிளையா….!

கம்பீரம்

மொட்டவிழ்க்கும் கட்டழகா

 

தமிழேந்தி

வலையுலவும் மெட்டழகா

 

பதினாறின் விடலையே

பயமேது உனக்கு

 

பால் வடியும் முகத்தில்

அரும்புதடா மீசை

-------

 

பெரிய ஒரு குறையை போக்கி விட்டீர்கள் வல்வை.

அருமையான... கவிதை. கைவசம் பச்சை இல்லை. மீண்டும் வருவேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்திற்கு

 

பயனுள்ள

 

வகையில்

 

உதவிட

 

யாழ் களம்

 

பல ஆண்டு

 

காலம்

 

கடந்து

 

வாழ

 

வாழ்த்துகிறேன்.

 

 

 

.


இதுதான் வாழ்க்கையில் நான் எழுதும் முதல் "கவிதை"! :o

 


ஏம்ப்பா... 'ஆ.. ஊ'ன்னா ஒரு கவிதையை தூக்கிக் கொண்டு வாரீங்களே..! :lol::)

Link to comment
Share on other sites

தவழ்பருவம்

முடித்துவிட்டாய்..

 

தமிழேந்தித் திரிந்து

தரணியை வரி

 

அமிழ்ததொன்றே

அவனிக்கு உரை.

 

:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிக்கு நன்றிகள் வல்வை

Link to comment
Share on other sites

வயது 16 என்பதால் போட்டி பலமாத்தான் இருக்கும் போல கவிகள் விளையாடுது யாழில் அருமை வாழ்த்துக்கள் அக்கா .!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஹா ! அருமை !! அற்புதம் !!!

 

எதை சொல்ல? சிந்திவிட்ட முத்துமணிகள் போல தமிழ் துள்ளி விளையாடுகிறது.

சொல்ல வார்த்தையில்லை வாழ்த்துக்கள் சஹாரா அக்கா. :)

 

பி.கு: கட்டழகனுக்கு கடிவாளம் போடுங்கக்கா, இல்லைனா காவாலியாகிடப்போறான். :rolleyes::lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை, விசுகு, நிலாமதி,சுவி, சுமே அகஸ்தியன், ரோமியோ, கு.சா, இலையான் கில்லர், ராசவன்னியன், சோழியன், புத்தன், அஞ்சரன் ,ஜீவா எல'லோருக்கும் மனமார்ந்த நன்றிகள்...

 

என்னதான் இருந்தாலும் யாழைப் பெடிப்பிள்ளையாக நினைத்து எழுதிய கவிதைக்கு எந்தப்பெண்களும் பச்சைப்புள்ளிகளை வழங்கவில்லை...நிலாமதியும், சுமேயும் கவிதையைப்பாராட்யுள்ளார்களே தவிர அவர்களும் பையனாக யாழை ஏற்க விரும்பவில்லை.....இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் யாழை பெடியனாக நினைக்க எந்தப் பெண்களும் தயாராக இல்லை....ஆண்களே உங்கள் பக்கத்தை பெண்கள் விரும்புகிறார்களே இல்லையே....ஏன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெடிபிள்ளையோ  பெட்டைச்சியோ முக்கியமில்லை
ஆளாளுக்குப் பிடித்தமாக வைச்சிருக்கட்டும்

 

உங்கள் கவிதை வரிகள் அருமை
என்னால் பச்சை போட முடியவில்லை
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.