• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

கோமகன்

வாடா மல்லிகை

Recommended Posts

வாடா மல்லிகை

 

SRILANKAVISIT2014091.jpg

 

கார்த்திகை திங்கள் 2013 ஒரு நாள் மதிய வேளையில் அலுத்துக் களைத்து வீடு திரும்பும் பொழுது எனது மனம் வழமைக்கு மாறாக ஊரைச் சுற்றியே ஊசலாடிக் கொண்டிருந்தது. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை .கடந்த மூன்று  வருடங்களாக அரிதார முகங்களையும் , அவற்றால்  வரும் ஓட்டில்லாத சிரிப்புகளையும் பார்த்துச் சலித்த எனக்கு ஒரு மாற்றம் வேண்டும் என்ற ஓர் எண்ணம் சடுதியாக என் மனதில் சடுகுடு விளையாடியதில் வியப்பு ஏதும் இல்லை . மனதில் எழுந்த எண்ணத்தை செயலாக்கும் முடிவில் வீடு வந்த நான்  ,என் எண்ணத்தை பள்ளியறையில் மஞ்சத்தில் ஆற அமர இருக்கும்பொழுது எனது மனைவியிடம் பகிர்ந்தேன் . அவளும் எனது மன ஓட்டத்தில் இருந்தாளோ என்னவோ எனது எண்ணத்துக்கு பச்சைக்கொடி காட்டினாள் . இருவரும் ஒன்றிணைந்து வருடாந்த விடுமுறையை நாம் வேலைசெய்யும் இடத்தில் கொடுக்கும் முடிவிற்கு வந்த பொழுது உடல் அலுப்பினால் தூக்கம் தானாகவே எம்மை அரவணைத்துக்கொண்டது .

 

நான் எமக்கான விடுமுறையை கொடுத்து விட்டு விமானப்பயணத்துக்கு வேண்டிய பதிவுகளை செய்ய கணணியை நோண்ட ஆரம்பித்தேன் .எனது வீக்கத்துக்கு எயார் சவுதியா என்முன்னே என்னை எடு என்று  பிடித்தது  .நான் அதிக நேரம் சவுதிஅரேபியாவில் அடுத்த விமானத்துக்காக காத்திருக்க வேண்டும்  என்ற ஒரு விடயத்தை சவுதி அரேபிய விமான நிறுவனம் நாசுக்காக சொன்னது .இந்த விலையில் யாருமே எனக்கு தொலை தூர விமானசீட்டை தர மாட்டார்கள் என்றபடியால் அவர்களிடமே விமானப் பயணத்தை பதிவு செய்துகொண்டேன் . நாங்கள் இருவரும் எமக்கான பயண நாளை எண்ணிக்கொண்டே எமது வேலை நாட்களை கடத்திக் கொண்டிருந்தோம். வழமை போலவே 2013 ஆம் ஆண்டும் மேடு பள்ளங்களை தாண்டி எம்மைத் தாண்டிச் சென்றது.

 

தாயகப் பயணம் என்றாலே எல்லாவகையிலும் கனதியானது. ஆனாலும் அதில் ஒரு இன்பம் இருக்கத்தான் செய்கின்றது .அது எப்படி என்றால்  நாங்கள் செய்கின்ற ஓவ்வரு சிறிய செயல்களினாலும் மற்றவர்கள் முகத்தில் ஏற்படுகின்ற பூரிப்பினால் நாங்கள் பட்ட கஸ்ரங்களும் துயரங்களும் பஞ்சாகின்ற பொழுது அதுகூட ஒருவகையில் எமக்கு கிடைக்கின்ற ஆத்ம திருப்தியே . இதில் உறவுகள் எதிர்பார்க்கின்றார்களா  இல்லையா என்பதல்ல பிரச்னை .நாம் அவர்களை எமது உறவாக அங்கீகரிக்கின்றோமா என்பதே முக்கியமானது.  எமது பயணம் மாசிமாதம் இறுதிப்பகுதியில் முடிவான நிலையில், நாங்கள் இருவரும் பயணத்துக்கு தேவையான பொருட்களை சிறிது சிறிதாக வாங்கத் தொடங்கினோம் . இதே வேளையில் எனது மனைவியின் அண்ணை வடிவில் ஓர் சிறு புயல் கனடாவில் இருந்து எம்மை நோக்கி மையம் கொள்ள தொடங்கியது .

 

தொடரும்

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் கோ...

பயண  அனுபவக்கதைக்கு முன் கூட்டிய  வாழ்த்துக்கள்

தொடருங்கள்.

 

வாடா மல்லிகை

அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை .கடந்த மூன்று  வருடங்களாக அரிதார முகங்களையும் , அவற்றால்  வரும் ஓட்டில்லாத சிரிப்புகளையும் பார்த்துச் சலித்த எனக்கு ஒரு மாற்றம் வேண்டும் என்ற ஓர் எண்ணம் சடுதியாக என் மனதில் சடுகுடு விளையாடியதில் வியப்பு ஏதும் இல்லை . 

 

 

இந்த கருத்தியலில் எனக்கு உடன்பாடு கிடையாது

ஒன்றை  உயர்த்துவதற்காக

எம்மை  ஆதரித்த

இன்றும் இரு என இழுத்துப்பிடிக்காத ஒரு தேசத்தை

வசைபாடுதல் சரியன்று.......

 

தொடர்ந்து பேசலாம்....

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் கோமகன் அண்ணா, நெருடிய நெருஞ்சி போல இதுவும் ஒரு காத்திரமான படைப்பாக இருக்கும் என்று காத்திருக்கிறேன், உங்கள் பயணங்களின் மூலம் எங்கள் ஞாபகவீதிகளையும் மீட்டிப்பார்க்கும் வாய்ப்பாக இது இருக்குமென நம்புகிறேன், வாழ்த்துக்கள் அண்ணா, அதே வேளை வர்ணனைகள்,விபரிப்பிலும் முன்னரை விடச் சற்று மெருகேறியிருப்பதாகவே படுகிறது, பார்க்கலாம் அடுத்து வரும் பகுதிகளையும்.

 

எனிவே தொடருங்கள்.. :)

Share this post


Link to post
Share on other sites

உண்மையை எழுதாமல் கற்பனையா எதையாவது எழுதுங்கள் அப்பதான் நல்லா ஓடும்

 

Share this post


Link to post
Share on other sites

வணக்கம், கோமகன்!

 

'வாடாமல்லிகை' என்பது நல்ல ஒரு தலைப்பு!

 

வாசமில்லாத மலர்கள் தான்! ஆனாலும், அழகை அள்ளித் தெளிக்கும் மலர்கள், அவை!

 

அது சரி.... வாடாமல்லிகை என்ற பெயர் எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கின்றது!

 

உங்களுக்கு ஆட்சேபணை இல்லாதவிடத்து, வாடாமல்லிகையிலும் பகிர்ந்து கொள்ளலாம்!

 

ஒரு ஆறுதல்..... நெருஞ்சியைப்போல அல்லாது முத்களில்லாத மலர்!

 

தொடருங்கள், கோமகன்!

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கோ கோமகன்.....வாசிக்க ஆவலாயுள்ளேன்

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் கோ...

பயண  அனுபவக்கதைக்கு முன் கூட்டிய  வாழ்த்துக்கள்

தொடருங்கள்.

 

 

 

இந்த கருத்தியலில் எனக்கு உடன்பாடு கிடையாது

ஒன்றை  உயர்த்துவதற்காக

எம்மை  ஆதரித்த

இன்றும் இரு என இழுத்துப்பிடிக்காத ஒரு தேசத்தை

வசைபாடுதல் சரியன்று.......

 

தொடர்ந்து பேசலாம்....

 

 

வணக்கம் விசுகு ஐயா, இதில்  வசைபாடலோ ஏற்றி இறக்கி எழுதியதாக எனக்குத் தெரியவில்லை . எனது பார்வைகளை மட்டுமே என்னால் எழுத முடியும். கற்பனையில் எழுதுவதை நான் விரும்புவதில்லை. இந்த தொடருக்கு பிள்ளையார் சுழி போட்டு வாழ்த்து தெரிவித்த உங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டவன் .உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் :) :) .

Share this post


Link to post
Share on other sites

வாடா மல்லிகையை வாசிக்க ஆவலாக உள்ளேன்.

Share this post


Link to post
Share on other sites

பல பூக்களில் தனியாக நெத்துக்கள் இருக்கும், வாடாமல்லியில் பூவிதழ்களே நெத்துக்கலாய் மாறி மீன்டும் மீன்டும் வளரும்...!

 

வாசமில்லாத மல்லிகையில் வாசத்தைத் தெளித்துத் தெளியுங்கள் கோமகன்...! :D

Share this post


Link to post
Share on other sites

வாடா மல்லிகை......வளரட்டும். :)

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் கோ, வாசிக்க ஆவல்!!

Share this post


Link to post
Share on other sites

வாடா மல்லிகை

 

SRILANKAVISIT2014091.jpg

 

 

 

 

கோமகன் அண்ணா..முதல் படத்திலேயே மனதை தொட்டுவிட்டீர்கள்.. வாடாமல்லி நெத்தை உருத்தி ஊரில் வீட்டு முற்றத்தில் தூவிவிட்டு தண்ணி ஊத்திப்போட்டு கொஞ்ச நாளையில பாக்க கண்டு எல்லாம் முழைச்சு வரும்..வந்து கொஞ்ச நாள்ளையே பூக்கவெளிக்கிட்டிடும்..மற்றப்பூக்கண்டுகள் போல் இல்லாமல் எந்தவரட்சியையும் கொஞ்சகாலத்துக்கு தாக்கு பிடித்து நிற்கக்கூடிய பூக்கண்டு...இதில் பல கலர்கள் உண்டு..சின்னவயசில ரியூசன் முடிஞ்சு வரேக்க எங்கையாவது உந்த பூக்கண்டு நெத்தைகண்டால் உருவிக்காற்சட்டைபொக்கற்றுக்கை போட்டுக்கொண்டுவந்திடுவன்.. :D நேற்றுப்போல் இருக்கு எல்லாம்..பழைய நினைவுகளை எல்லாம் கிளறிவிட்டிட்டியல்.. நிச்சயமாக புழுதிவாசம் நெஞ்சை முட்டவைக்கும் உங்கள் பதிவு..தொடருங்கள்...
 
துள்ளித்திருந்ததொருகாலம்.....பள்ளிபயின்றதொருகாலம்... காலங்கள் ஓடுது...  :(

Share this post


Link to post
Share on other sites

கோ, பெரிய எழுத்துக்களால் இரண்டு பந்தியை எழுதி  வாசகர்களை ஏமாத்தாமல்  :lol: கனக்க எழுதுங்கள் அப்ப தான் குத்துற பச்சைக்குப் பிரயோசனமாய் இருக்கும்  :D .

Share this post


Link to post
Share on other sites

SaudiArabianAirline_A330.jpg

 

 

நாங்கள் பயண வேலைகளை செய்துகொண்டிருந்த பொழுது ஒருநாள் மாலை கனடாவில் இருந்து மனைவியின் அண்ணை எங்களுடன் தொடர்பு கொண்டார். அவர் எங்களை சந்தோசப்படுத்துகின்றேன் பேர்வழி என்று கனேடிய தபால் சேவை மூலம் ஒரு ஐ பாட் தங்கைக்கு அனுப்பிருந்தார் .தான் அனுப்பி ஒருமாதத்துக்கு மேல் என்றும் அவர் எம்மை எடுக்கசொன்ன செய்தியானது எமது பயணம் நெருங்கிய வேளையில் எனது வயிற்றில் புளியை கரைத்துக்  கொண்டிருந்தது .ஏனெனில் அது கனடாவுக்கும் பிரான்சுக்கும் இடையில் தொங்குபறி நிலையில் நின்று கொண்டிருந்தது .இதனால் எனக்குப் பதட்டம் கூடியதே ஒழிய குறையவில்லை. ஆனாலும் எனது​ பதட்டங்களை வெளிக்காட்டாது எனது வேளைகளில் மூழ்கினேன். நான் வேலை செய்கின்ற உல்லாசவிடுதி மீள்கட்டுமானப்பணி முடிவடைந்த நிலையில் அண்மையிலேயே மீண்டும் வாடிக்கையாளர்களுக்காக திறக்கப்பட்டது . நான் வகிக்கின்ற பதவி காரணமாக விடுமுறையில் செல்வதற்கு முன்பே நான் பல ஆயுத்தங்களை எனது உதவியாளர்களுக்கு செய்யவேண்டியிருந்தது. அது தந்த உடல் களைப்பு எனக்கு மேலும் எப்பொழுது எனது பயண நாள் வரும் என்ற மன ஓட்டத்தினை அதிகரித்தவண்ணமே .இருந்தது . ஒருவழியாக மாசி மாத இறுதிப்பகுதி எம்மை நெருங்கியது .

 

மாசி மாதத்துபிற்பகுதியின் அந்த அதிகாலைப் பொழுது எனக்கும் மனைவிக்கும் இடையே கயிறு இழுத்தல் போட்டியாகவே விடிந்தது. வெளியே , காதலன் காதலியை முதல் முத்தம் கொடுப்பது போல வானம் பொத்துக்கொண்டு மழை நிலத்தை அடங்காத் தாகத்துடன் முத்தமிட்டுக் கொண்டிருந்தது. விமான நிலையத்துக்கு ரக்சியில் செல்வது என்று எனது பக்கமும்,  இல்லையில்லை காசை சேமித்து பத்துநிமிட நடைதூரத்தில் இருக்கும் ரெயில்நிலையத்துக்குச் சென்று ரெயில் மூலம் விமான நிலையம் செல்வது என்று மனைவியும் கயிறு இழுத்துக்கொண்டிருந்தோம். இறுதியில் தொடர் மழை எனது பக்கம் அவளை இழுத்துவந்தது .நான் விரைவாக தொலைபேசி மூலம்  ரக்சி வரவேண்டிய இடத்தைச் சொன்னேன் . நாங்கள் எடுக்கவேண்டிய விமானம் பதினோரு மணிக்கு என்பதால் எங்களுக்கு அதிகமாகவே நேரம் இருந்தது. காலை எட்டுமணியளவில் எம்மைச் சுமந்து கொண்டு  எமது ரக்சி கொட்டும் மழையின் ஊடாக விமான நிலையத்தை நோக்கி வழுக்கிச் சென்றது.

 

சார்ல்ஸ் து கோல் சர்வதேச விமான நிலையம் தினம் தினம் பலதரப்பட்ட மனிதர்களையும் பல விநோதக் காட்சிகளை  அரங்கேற்ரம் செய்கின்ற இடம் . நாங்களும் அதில்  ஐக்கியமாகிவிட்டோம் . நாங்கள்  மனிதர்களுடன் மனிதர்களாக நீந்தினோம்.  நாங்கள் செல்கின்ற வழி இருபுறமும் கண்ணாடி இழைகளால் வேயப்பட்டு வெளிப்புறக் காட்சிகளையும் காணக்கூடியவாறு அமைக்கப்பட்டு இருந்தது . வெளியே பலவகையான இயந்திரப் பறவைகள் இயங்கியும் இயங்காமலும் வரிசை கட்டி நின்றிருந்தன . அந்தக்காலை வேளையில் அவைகளின் அணிவகுப்பு என் மனதில் உற்சாகத்தை கிளப்பி இருந்தது . நாங்கள் ஒருவாறு எயார் சவுதியா வரவேற்பு கூடத்தில் வந்து எமது பயணப்பொதிகளை அனுப்பி விட்டு அங்கே இருந்த இருக்கைகளில் எம்மை நுளைத்துக் கொண்டோம் . எனது மனைவியோ தனது தொலை பேசியில் கிடைத்த இணைய இணைப்பை இனிமையாக அனுபவிக்க , எனக்கோ இறுதி நேர எக்ஸ்பிறாசோ வை நுகர எனது நாக்குகள் நமநமத்தன . எனது முடிவை செயல் படுத்த அருகில் இருந்த கபே பாரை நோக்கி எனது கால்கள் நகர்ந்தன . அங்கே இருந்த குறசோன்ஸ் உம் தன்னையும் எடு என்று அதன் வாசத்தால் எனது நாசித்துவாரத்தை உசுப்பேற்றியது . அதனையும் கபேயையும் வங்கியவாறு வெளியே வந்தேன் . வெளியே மழை விட்டிருந்ததனால் நல்ல ஈரலிப்பாக இருந்தது . கபேயும் குறசோன்ஸ் உம் உள்ளே இறங்கியது மனதிற்கு உயிர்ப்பாக இருந்தது . "இதனுடன் ஒரு சிகரட் அடித்தால் இன்னும் நன்றாக இருக்குமே" என்று மனம் கட்டளை இட்டது . உடனே தன்னிச்சையாகவே உதட்டுடன் சிகரட் பொருந்தி லிட்டர் அதன் முனையை சிவப்பாக்கியது . நான் புகையை ஆழ உள்ளே இழுத்து வெளியே விட்டேன் . இந்த மனம் தான் எவ்வளவு விந்தையானது? எனது சொல் கேட்டு நடக்க வேண்டிய மனதிடம் அது சொல் கேட்டு நான் நடக்க வேண்டிய நிலைய என்வென்று சொல்ல? இதைதான் மனதை குரங்குடன் ஒப்பிட்டார்களோ ?

 

ஒருவழியாக எமது குடிவரவு குடியகல்வை முடிக்கும்படி அறிவிப்பு வந்துகொண்டிருந்தது . அங்கு எமக்கு பெரிய அளவில் பிரச்னை இருக்கவில்லை . நாங்கள்  பொழுதுபோக்கிற்காக சுங்கத் தீர்வையற்ற கடைகளை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தோம் . ஏதாவது வாங்குவதானால் ஜெட்டா விமான நிலையத்தில் வாங்குவதாக முடிவு செய்திருந்தோம். காலம் தனது கடைமையை செய்து நேரம் பத்து மணியை தான் நெருங்கி விட்டதாகக் காட்டிக்கொண்டிருந்தது .எங்களை விமானத்தின் உள்ளே அனுமதிக்க ஆரம்பித்து விட்டார்கள் . எயார் சவுதியாவின் பணிப்பெண்கள் ஏறத்தாழ அரேபியக் குதிரைகளைப் போலவே இருந்தார்கள் .அவர்களின் இனிமையான வரவேற்பில் நான் கிறுங்கித்தான் போனேன். நாங்கள் எமது இருக்கைகளை தேடி போய் அதனுள் எம்மைத் திணித்தோம் .அந்த விமானம் விசாலமாகவும் இருக்கைகளுக்கு இடையே கால்களை வைப்பதற்கு போதிய இடைவெளியும் இருந்தது .அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. அரேபியர்கள் எல்லோருமே போந்தை பொலிந்தவர்களாக இருந்தார்கள் .விமானம் புறப்படுவதற்கு  தயாராக தனது  கதவுகளை இறுக்க மூடிக் கொண்டது  .அப்பொழுதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது .விமானி அராபி மொழியில் தனது வந்ததனத்தை தெரிவித்து விட்டு , மௌலவி ஒருவரின் அல்லாவின் வாழ்த்து ஓதலை தவழ விட்டார் . அல்லாவின் ஓதல் முடிவடைந்ததும் அந்த இயந்திரப் பறவை மெதுவாக ஓடு தளத்தில் ஓடி தன்னை நிலை நிறுத்தி அதிவேகத்தில் ஓடி தனது கால்களை நிலத்தில் உதைத்து எக்கியவாறே மேலே எழுந்தது .

 

விமானத்தின் ஜன்னல்களின் ஊடாக வெளியே வயல்கள் பச்சை போர்த்தி இருந்தன. வாகனங்கள் தூரத்தே சிறு பொட்டுகளாகத் தெரிந்தன .காலை வெய்யில் கண்களைக் கூசியது.  இப்பொழுது அந்த இயந்திரப் பறவை தன்னை நிலைநிறுத்தி ஜெட்டாவை நோக்கி விரைந்தது. பூமிக்கும் எமக்குமான தொப்புள் கொடி உறவு ,பூமியில் இருக்கும் கட்டுப்பாட்டு அறை  மூலமே இருந்தது .அந்தப் பறவை ஏறத்தாழ பதினோரு கிலோமீற்ரர் உயரத்தில் மணிக்கு தொளாயிரம் கிலோ மீற்ரர் வேகத்தில் மிதந்து கொண்டிருந்தது .அதில் பூட்டியிருந்த ஜீ பி எஸ் மூலமே அதன் வேகத்தை உணரக்கூடியதாக இருந்தது. நான் சவுதி அரேபியா எப்படி இருக்கும் என்று எண்ணிப்பார்க்கின்றேன். நான் படித்த பாடங்கள் அதனை அடிக்கடி மாறும் மண்  மலைகளையும், பேரீந்துகளையும் ,ஒட்டகங்களையும், குதிரைகளையும் ,அரேபிய கன்னிகைகளையுமே சொல்லித்தந்தன. இப்பொழுதுதான் நான் நேரடியாக சவுதி அரேபியாவை பார்க்கப் போகின்றேன் .அதுவே எனக்குப் பல கற்பனை சிறகுகளைத் தந்திருந்தது .எமது விùமானம் ஏறத்தாழ ஆறு மணித்தியாலங்களை விழுங்கி மாலை ஏழு மணியளவில் ஜெட்டா சர்வதேச விமான நிலையத்தில் தரை தட்டியது. அங்கே எனது கற்பனைகளுக்கு மாறாக பலத்த அதிர்சிகள் காத்திருந்தன.

 

தொடரும்

Share this post


Link to post
Share on other sites

அழகான வரைவு.. நாங்களும் சவுதியாவில் பறப்பதுபோல் இருக்கு.. :D

Share this post


Link to post
Share on other sites

அழகான வர்ணனை பகிர்வுக்குனன்றி..

Share this post


Link to post
Share on other sites

மோசமான வெயிலிலும் குளிர்மையாக பூத்து நிற்கும் வாடாமல்லி கதைக்கு நல்ல பொருத்தமான தலைப்புத்தான்.

ஊருக்குப் போயிருந்தபோது என்னுடைய கண்ணுக்கு இந்த வாடாமல்லி தட்டுப்படவில்லை. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் ஊசியிலை (Conifer) மரங்களைக் கண்டேன்.

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் கோமகன் அண்ணா, நெருடிய நெருஞ்சி போல இதுவும் ஒரு காத்திரமான படைப்பாக இருக்கும் என்று காத்திருக்கிறேன், உங்கள் பயணங்களின் மூலம் எங்கள் ஞாபகவீதிகளையும் மீட்டிப்பார்க்கும் வாய்ப்பாக இது இருக்குமென நம்புகிறேன், வாழ்த்துக்கள் அண்ணா, அதே வேளை வர்ணனைகள்,விபரிப்பிலும் முன்னரை விடச் சற்று மெருகேறியிருப்பதாகவே படுகிறது, பார்க்கலாம் அடுத்து வரும் பகுதிகளையும்.

 

எனிவே தொடருங்கள்.. :)

 

நெருடிய நெருஞ்சி போல் இருக்குமா என்பது  எனக்கு தெரியாது . ஆனால் உங்கள் எல்லோரது ஞாபகவீதிகளை மீட்டி வைப்பேன் என்ற நம்பிக்கை இருக்கின்றது . வரவுக்கும் வாசித்து கருத்து வைத்தமைக்கும் மிக்க நன்றிகள் ஜீவா .

 

Share this post


Link to post
Share on other sites

எத்தனை தடவைகள்,அந்த சார்ல்ஸ் டி கோல் விமான நிலையத்தை இரசித்திருக்கிறேன்!

 

ஒரு வட்ட வடிவமான அமைப்பு.... பரிசின் நகர அமைப்பு.... பெரிப்பெரி....!

 

மீண்டுமொரு முறை நினைவில் கொண்டு வந்ததற்கு நன்றி! :D

 

சவுதிப்பக்கம் பெரிதாக அதிகம் போனது கிடையாது.

 

ஒரே ஒரு தடவை, விமானநிலைய மலசலகூடத்தில், ஒரு சவூதிக்காரன் தனது கால்களை ஒவ்வொன்றாகத் தூக்கிச் 'சிங்குக்குள்' வைத்துக் கால்கள் கழுவியதைக் கண்டவுடனேயே, சீ எண்டு போச்சுது!

 

அவனது தொழுகை நேரம் போலும்.....! :o

 

தொடருங்கள்! 

Share this post


Link to post
Share on other sites
விமானம் உந்தி மேல் எழும்போது, பூமியில் உள்ளவைகள் சிறு புள்ளிகளாக மாறிப்போகும் அற்புதமான காட்சி!!.... அதனை என் ஒவ்வொரு விமானப் பயணத்திலும் ஆழ்ந்து ரசித்து அனுபவித்திருக்கிறேன். அந்த இன்பமான காட்சியைத் தங்கள் வாடாமல்லிகையும் எனக்கு உணர்த்தி ரசிக்கவைத்தது. எழுத்துகளை நாங்கள் வாசித்துக் கதை படிக்கலாம். ஆனால் எழுத்துக்கள் எங்களை வாசித்துக் கதை செல்வதுபோல் எழுதுவது அது ஒரு வரம். அந்த வரத்தைப் பெற்றவர்களில் ஒருவராக வாடாமல்லிகையும் தங்களை வெளிப்படுத்தி நிற்கிறது. தொடருங்கள்!.காத்திருக்கிறோம்.   
 

Share this post


Link to post
Share on other sites

நாங்களும் வாசிக்கின்றம் தொடருங்கள் கோ .

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் கோ .

Share this post


Link to post
Share on other sites

 சுவாரஸ்யமான உங்கள் பயண அனுபவத்தினை பகிர்வதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.... நெருடிய நெருஞ்சியைப்போல இதுவும் சிறப்பாக இருக்கும் என நம்புகின்றோம்.

ஊருக்குப் போய் வரும் எல்லோரையும் போல் "ஊர் இப்ப அந்த மாதிரி இருக்கு" என்று சொல்ல மாட்டீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

அபிவிருத்தி என்பதற்கு பின்னாலுள்ள இனவழிப்பு வடுக்களையும் தொடரும் வலிகளையும், அன்றாட பிரச்சினைகளையும் வெளிக்கொண்டு வருவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கு. பார்க்கலாம்......! :)  தொடருங்கள்.....கோ!!! :)

Share this post


Link to post
Share on other sites

flickr-3523756281-hd.jpg

 

தரை தட்டிய விமானத்தில் உள்ள அரேபியர்களில் முக்கால்  வாசியினர் ஐரோப்பிய நவநாகரீக உடைகளில் இருந்து விடுதலை அடைந்து, ஓர் வெள்ளை நிற நாலுமுழ வேட்டி போன்று உயர்த்திகட்டியும் , வெறும் உடலின் மேல் வெள்ளை நிறத்திலான ஓர் போர்வையுடனும் வெறும் கால்களுடனும் நின்றிருந்தார்கள் . இந்தக் காட்சியானது பட்டிக்கு வழிமாறி வந்த ஆட்டுக்குட்டியின் நிலையையே எனக்கு ஏற்படுத்தியது. மேற்கு நாடுகளுக்கு உல்லாசம் அனுபவிக்க வரும் இவர்கள் தங்கள் மண்ணை மிதிக்கும் பொழுது மட்டும் சட்டங்களினால் கட்டாயப்படுதப்பட்ட வாழ்வுநிலையை ஏற்றது எனது மனதை நெருடவே செய்தது . எல்லோரும் இறங்குவதற்கு முண்டியடித்தனர் .ஆனாலும் அத்தனை சுலபமாக அவர்களால் இறங்க முடியவில்லை .அதற்கான காரணத்தை நாங்கள் வெளியே போகும் பொழுது தான் அறிந்து கொண்டோம் . விமானம் , விமானநிலையத்துடன் இணைக்காது தொலை தூரத்தில் நின்றது .அதில் படிக்கட்டுகள் இணைக்கப்பட்டிருந்தன .அதன் வழியே உடல் பெருத்த அரேபியர்கள் இறங்குவதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். விமான நிலையத்துக்கு குளிரூட்டிய பேரூந்துகள் பயணிகளை கொண்டு சென்று கொண்டிருந்தன. எல்லோருமே குழந்தயை கிணத்துக்கட்டில் விட்டு விட்டு வந்த மன  நிலையிலேயே இருந்தார்கள். நாங்கள் எல்லாவற்றையும் உன்னிப்பாக விடுப்பு பார்த்துக்கொண்டு இறங்கினோம். நான் ஜெட்டா எப்படி இருக்கப் போகின்றது என்ற மிதப்பில் விமான நிலையத்தில் நுழைந்தேன்.

 

நாங்கள் பாதுகாப்பு கெடுபிடிகளை முடித்துக்கொண்டு பயணிகள் மாறும் இடத்திற்கு சென்று கொண்டிருந்தோம் . கண்ணுக்கெட்டிய தூரதிலேயே அந்த  மண்டபம் சுங்கத் தீர்வைகள் அற்ற ஒரேயொரு கடையுடன் காணப்பட்டது . அங்கேதான் எனக்குப் பல அதிர்சிகள் காத்திருந்தன . எங்களுக்கு உடனடி தேவையாக கழிப்பிடம் செல்ல வேண்டி இருந்தது . அங்கே இரண்டு கழிப்பிடங்களே இருந்தன . ஒன்று  பாதுகாப்பு சோதனைகள் முடிவடையும் இடத்திலும் , இரண்டாவது பயணிகள் தங்கும் இடத்திலும் காணப்பட்டன . நான் மனைவியை முதல் விட்டு விட்டு காத்திருக்கத் தொடங்கினேன். சிறிது நேரத்தில் வந்த மனைவியின் முகத்தில் ஈ ஆடவில்லை .எனக்கு கேள்விகள் கேட்க நேரம் இல்லாததால் உடனடியாகவே ஆண்கள் " பிஸ் " அடிக்கும் இடத்திற்கு சென்றேன் . அங்கே " பிஸ் " அடிக்கும் இடம் மக்களால் நிரம்பி வழிந்தது . கீழே தண்ணிக்காடாக இருந்தது . பலர் தங்கள் கால்களை ஒன்றுமாறி ஒன்றாக முகம் கழுவும் தொட்டியினுள் வைத்து கழுவி அதனுள்ளேயே முகமும் கழுவிக்கொண்டனர் . ஒரு சிலர் வாயுக்குள் தண்ணியை  விட்டு விரல்களினால் கிடாவி பெரும் சத்தத்துடன்  ஓங்காளித்து துப்பினார்கள் . குடலைப் புரட்டும் நாற்றம் அங்கே பரவி இருந்தது . தரையில் கீழே இருந்த தண்ணி வெள்ளத்தை நீக்க ஒரு இந்தியர் தண்ணி வாரும் துடைப்பக்கட்டையுடன் நின்று கொண்டார். எனக்கு வந்த மூத்திரம்  எதிர் திசையில் ஒடியது .அனாலும் எனக்கு  முட்டிய மூத்திரத்தால் விதைப்பை வலி எடுத்தது .நான் எனது விதியை எண்ணியவாறு மூச்சை அடக்கியவாறு எதிரே ஓடிய மூத்திரத்தை நேரே எடுக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினேன் . இறுதியில் வெற்றிக்கனி என்பக்கம் விழுந்தது . வெற்றியை எனதாக்கி கழிப்பிடம் தந்த மன உளைச்சலில் கடுப்புடன் வெளியே வந்த என்னை எனது  மனைவி ஒருவிதமான நமுட்டுச் சிரிப்புடன் எதிர் கொண்டா. அவாவின் சிரிப்பு என்னைக் மேலும் கடுகடுக்க வைத்தது .

 

எங்களை சுங்கதீர்வையற்ற கடைகள் பெரிதாக கவரவில்லை ஆனால் விதம் விதமான பேரீந்துகளை அடுக்கி இருந்தார்கள்  அத்துடன் இருக்கும் ஆறு மணி  நேரத்தை போக்காட்டுவதற்கு அவைகளை விடுப்பு பார்தோம் . ஜெட்டா விமான நிலையம் எனக்கு தின்னவேலி சந்தையையே நினைவுக்கு கொண்டடு  வந்தது .அருகிலே இருக்கும் மெக்கா புனித ஸ்தலத்துக்கு இந்த விமான நிலையத்திலே தான் விமானம் மாறவேண்டும் .உலகின் பல பாகங்களிலும் இருந்து யாத்திரீகர்கள் குவிந்து கொண்டு  இருந்தார்கள் .அதற்கேற்ப போதிய இடவசதிகளோ அடிப்படை சுகாதார வசதிகளோ அங்கு இல்லாதது எனக்கு பெரும் வியப்பையே தந்தது .நேரம் தனது கடமையை செய்துகொண்டிருந்தது. பல யாத்திரீர்கள் இடம் இல்லாததால் நிலத்திலேயே சப்பாணி கட்டிக்கொண்டு இருந்தார்கள் . தாங்கள் உணவுப் பொட்டலங்களை அங்கேயே பிரித்து உண்டார்கள் . இந்த நிகழ்வானது கழிப்பிடத்திற்கு முன்பாகவும் நடந்தது . அதில் அவர்கள் அருவருப்பு நிலையை அடைந்ததாக தெரியவில்லை . வெளிநாட்டுப் பயணிகள் புகைப்பதற்கு புகைக்கும் அறை அங்கு இருக்கவில்லை. இது எனக்கு மேலும் சிக்கலை உருவாக்கியது .அத்துடன் இரண்டே இரண்டு உணவுசாலைகள் தான் இருந்தன . அதில் இருந்த உணவுகள் சாப்பிடும் படியாக இருக்கவில்லை. எமக்கு பசி வயிற்ரை புடுங்கியது. இருவரும் தேநீரை குடித்தபடியே எமது விதியை நொந்து கொண்டோம் . வாழ்க்கையில் அனுபவங்கள் எப்பொழுதுமே அலாதியானதும் இனிமையான  பல படிப்பினைகளை தந்திருக்கின்றன . இந்த ஜெட்டா விமான நிலையமும் எனக்கு பலவித புதுமையான மக்களையும் அவர்களது பழக்கவழக்கங்களையும் தந்தது . நான் கஸ்ரமான நிலமையையும் இனிமையாக்க முயன்றுகொண்டிருந்தேன். ஒருவழியாக நேரம் ஒன்பது  மணியை நெருங்கி கொண்டிருந்தது . எமது விமானம் புறப்படுவற்கான அழைப்பு வந்து கொண்டிருந்தது . எங்களை ஏற்றிக்கொண்டு அந்த இயந்திரப்பறவை மீண்டும் தனது கால்களை இலங்கை நோக்கி எக்கியது.

 

தொடரும்

Share this post


Link to post
Share on other sites

இதுக்குத்தான் நான் அரபு நாடுகளின் விமான நிலையங்களில் தரித்துச் செல்ல விரும்புவதில்லை. தொடருங்கள் கோம்ஸ்..

Share this post


Link to post
Share on other sites