• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
கோமகன்

வாடா மல்லிகை

Recommended Posts

தரை தட்டிய விமானத்தில் உள்ள அரேபியர்களில் முக்கால்  வாசியினர் ஐரோப்பிய நவநாகரீக உடைகளில் இருந்து விடுதலை அடைந்து, ஓர் வெள்ளை நிற நாலுமுழ வேட்டி போன்று உயர்த்திகட்டியும் , வெறும் உடலின் மேல் வெள்ளை நிறத்திலான ஓர் போர்வையுடனும் வெறும் கால்களுடனும் நின்றிருந்தார்கள் . இந்தக் காட்சியானது பட்டிக்கு வழிமாறி வந்த ஆட்டுக்குட்டியின் நிலையையே எனக்கு ஏற்படுத்தியது. 

 

இவர்கள் வழக்கமாக அணியும் ஆடைகளல்ல இவை, கோமகன்!

 

ஒவ்வொரு முஸ்லிமுக்கும், ஐந்து விதமான கடமைகளை இஸ்லாம் வலியுறுத்துகின்றது! அதில், வாழ்வில் ஒரு முறையாவது, முடிந்தவர்கள், 'ஹஜ்' யாத்திரை செய்யவேண்டும் என்பதும் ஒன்றாகும்!

 

இதற்காக எவ்வாறு உடையுடுத்தவேண்டும் என்று 'குரானில்' தெளிவாக வரையறுக்கப் பட்டுள்ளது. அது தான் நீங்கள் குறிப்பிட்ட உடையாகும்!

 

இந்த யாத்திரையின் போது, சவூதி மன்னராகட்டும், அல்லது ஒரு சாதாரண குடிமகனாகட்டும், ஒரே விதமாகத் தான் உடையணிய வேண்டுமென்பது விதியாகும்!

 

தொடர் சூடு பிடிக்கத் தொடங்குகின்றது!  தொடருங்கள் !  :D

 

Share this post


Link to post
Share on other sites

 

கோமகன் அண்ணா..முதல் படத்திலேயே மனதை தொட்டுவிட்டீர்கள்.. வாடாமல்லி நெத்தை உருத்தி ஊரில் வீட்டு முற்றத்தில் தூவிவிட்டு தண்ணி ஊத்திப்போட்டு கொஞ்ச நாளையில பாக்க கண்டு எல்லாம் முழைச்சு வரும்..வந்து கொஞ்ச நாள்ளையே பூக்கவெளிக்கிட்டிடும்..மற்றப்பூக்கண்டுகள் போல் இல்லாமல் எந்தவரட்சியையும் கொஞ்சகாலத்துக்கு தாக்கு பிடித்து நிற்கக்கூடிய பூக்கண்டு...இதில் பல கலர்கள் உண்டு..சின்னவயசில ரியூசன் முடிஞ்சு வரேக்க எங்கையாவது உந்த பூக்கண்டு நெத்தைகண்டால் உருவிக்காற்சட்டைபொக்கற்றுக்கை போட்டுக்கொண்டுவந்திடுவன்.. :D நேற்றுப்போல் இருக்கு எல்லாம்..பழைய நினைவுகளை எல்லாம் கிளறிவிட்டிட்டியல்.. நிச்சயமாக புழுதிவாசம் நெஞ்சை முட்டவைக்கும் உங்கள் பதிவு..தொடருங்கள்...
 
துள்ளித்திருந்ததொருகாலம்.....பள்ளிபயின்றதொருகாலம்... காலங்கள் ஓடுது...  :(

 

 

இதுதான் வாடா மல்லிகை ............ :D . ஆழ்நிலை ஞாபகங்கள்  வாடாது இருக்கும் அதே நேரம் வெளிப்புற சுழலுக்கு ஏற்ப மல்லிகை மலர்கள் போல அழகாகவும் இருக்கும் ( வாசம் மட்டும் இருக்காது ) :) . இந்தக் கதை சொல்ல வருவதும் அதுதான் :) . தொடருடன் தொடர்ந்து இருங்கள் . பதிவை வாசித்து கருத்து தந்தமைக்கு மிக்க நன்றிகள் சுபேஸ் :) .

Share this post


Link to post
Share on other sites

தொடரை வாசித்து கருத்துக்களைப் பகிர்ந்த சாத்திரி , புங்கையூரான் , புத்தன் , நுணாவிலான் , சுவியர் , குமாரசாமியர் , அலைமகள் ஆகியோருக்கு மிக்க நன்றிகள்  :)  :)  .

Share this post


Link to post
Share on other sites

 

விமானம் உந்தி மேல் எழும்போது, பூமியில் உள்ளவைகள் சிறு புள்ளிகளாக மாறிப்போகும் அற்புதமான காட்சி!!.... அதனை என் ஒவ்வொரு விமானப் பயணத்திலும் ஆழ்ந்து ரசித்து அனுபவித்திருக்கிறேன். அந்த இன்பமான காட்சியைத் தங்கள் வாடாமல்லிகையும் எனக்கு உணர்த்தி ரசிக்கவைத்தது. எழுத்துகளை நாங்கள் வாசித்துக் கதை படிக்கலாம். ஆனால் எழுத்துக்கள் எங்களை வாசித்துக் கதை செல்வதுபோல் எழுதுவது அது ஒரு வரம். அந்த வரத்தைப் பெற்றவர்களில் ஒருவராக வாடாமல்லிகையும் தங்களை வெளிப்படுத்தி நிற்கிறது. தொடருங்கள்!.காத்திருக்கிறோம்.   

 

 

ஏன் நீங்கள் மட்டும் குறைந்தவாரா என்ன ?? யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை . உங்கள் வருகைக்கும் சத்தான கருத்துக்கும் மிக்க நன்றி பாஞ் :) :) :) .

 

Share this post


Link to post
Share on other sites

எப்ப மிச்சம் வரும்?

Share this post


Link to post
Share on other sites

மிச்சம் எப்ப வரும்...!

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் கோ நானும் வாசிக்கிறேன்

Share this post


Link to post
Share on other sites

0001.jpg

 

தரையை விட்டு சாய்வு கோணத்தில் மேலே எழும்பிய அந்த இயந்திரப்பறவை சிறிது நிமிடங்களை விழுங்கி விட்டு நேர்கோட்டில் தன்னை நிலை நிறுத்தி விரைவு படுத்தியது . வெளியே எங்கும் அந்காரக்  கரும் இருள் அப்பியிருந்தது . அங்காங்கே நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருந்தன . அவைகளை விட வேறு எதையும் வெளியில் என்னால் பார்க்க முடியவில்லை . இப்பொழுது அந்த விமானத்தில் முக்கால் வாசிபேர் இலங்கையரே நிரம்பியிருந்தனர் . அவர்கள் எல்லோருமே சவுதி அரேபியாவை வளப்படுத்த வந்த கடைநிலை ஊழியர்கள் . அரேபிய ஷேக்குளின் ஷோக்குகளுக்காக வீடுகளையும் தொழில் நிலையங்களையும் பராமரிக்கவென்று குறைந்த தினார்களில் கூலிக்கு அமர்த்தப்பட்டவர்கள்  . அவர்களை நான் அவதானித்த அளவில் அவர்களுக்கு எழுத வாசிக்க தெரிந்திருக்கவில்லை . விமானத்தில் வழங்கப்பட்ட குடிவரவு விண்ணப்பங்களை நிரப்புவதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள் . ஒரு சிலர் எல்லோருக்கும் விண்ணப்பப் படிவங்களை நிரப்பிக் கொடுத்து கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் சந்தைக்கடை போல இருந்த அந்த விமானத்தை, அமைதி தன் பிடியினுள் படிப்படியாகத் தன்வசம் கொண்டு வந்தது .  மரங்கள் கூதல் காலத்தில் தங்கள் இலைகளை உதிர்த்து தங்களை உறைநிலைக்கு கொண்டு செல்வது போல அந்த விமானமும் தன் வெளிச்சங்களை உறைநிலைக்கு கொண்டு வந்தது. மெல்லிய இருள் அந்த விமானம் எங்கும் பரவி இருந்தது  . சயனசுகம்  எல்லோரையும் மெதுமெதுவாக அணைத்துக் கொண்டிருந்தது . எனது மனைவி நான் இருக்கும் தைரியத்தில் என் தோள் மீது உறங்கிப் போனாள் . குளத்தில்  கல்லினால் எறிந்த பொழுது வந்த தொடர் அலைகள் போல் , என்மனமோ சிந்தனை அலைகளால் நிரம்பி வழிந்தது .

 

எல்லாமே நேற்றுப் போல இருக்கின்றது  எனது முதல் பயணமும் அது தந்த அனுபவங்கழும்.  காலம் என்ற ஓட்டத்தில் சிறிது தூசி படிந்து இருந்தாலும் , அது தந்த வலி என்னவோ கணனியின் வன்தகட்டில் அழியாது இருக்கும் கோப்புகள் போல பசுமையாகவே என் மனதில் இருக்கின்றன . அவைகள் இப்பொழுது படம் எடுத்தாடியபடியே தம் நாக்குகளை வெளியே விரித்தன . என்மனதில் இனம் புரியாத வலி  ஒன்று பாத்திக்கு வாய்க்கால்  கட்டி ஓடியது . அது என் நித்திரையை குலைக்கும் அளவுக்கு வீறுகொண்டு எழுந்தது . என்னுடன் கூடப் பிறந்தவர்கள் எப்படி என்னை அரவணைக்கப் போகின்றார்கள் ? என்னதான் இரத்த உறவாக இருந்தாலும் இருபத்தைந்து வருடங்களுக்கு மேல் சொந்தங்களையும் , ஓடித் திரிந்த மண்ணையும் தொலைத்த எனக்கு என்ன பெரிய வரவேற்பு அவர்களிடம் இருக்கப் போகின்றது ??  நான் அந்நியன் அந்நியன் தானே ?? யார் யாரை நோவது ??  எல்லோருமே கால ஓட்டத்தில் அள்ளுப்பட்ட குப்பைகள் தானே ?? கால ஓட்டத்தில் அள்ளுப்படாது எதிர்த்து நிற்கும் ஆலமரங்களை நோக்கி வலசை போகும் பறவைகள் போல நான் செல்வது எனக்கே என்மீது அருவருப்பாக இருந்தது . என்னை அறியாது என் கண்கள் கண்ணீர் திரையினால் பார்வையை மட்டுப்படுத்தியது . மீண்டும் ஓர் வலியதும் சிறியதுமான பாம்பு ஒன்று என் நெஞ்சில் ஓங்கி கொத்தியது . எனது கண்ணீர் எனது மனவியை எழுப்பியிருக்க வேண்டும் போல  தன் முகத்தை திருப்பி என்ன என்று பார்வையால் கேட்டா . ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் என்பது போல என் கைவிரல்களை இறுக்கப் பற்றிக்கொண்டா . அந்த இறுக்கம் தந்த அரவணைப்பில் நான்  கரையலானேன்.

 

நேரம் அதிகாலை இரண்டு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது . அந்த இயந்திரப்பறவை தனது உயரத்தை மெது மெதுவாக கீழே இறக்கியது  ஜீ பி எஸ் இல் தெரிந்து கொண்டிருந்தது . தூரத்தே கொழும்பின் ஒளிப்பொட்டுகள் தெரிய ஆரம்பித்தன . இப்பொழுதே எல்லோரும் தங்களை ஆயத்தப்படுத்த தொடங்கி விட்டார்கள் . எனது கண்களோ நித்திரையைத்   தொலைத்து வைன் நிறத்துக்கு மாறி இருந்தது . எனது முகம் எண்ணைப் பிசுக்கினால் அப்பி இருந்தது . ஜெட்டாவிலும் , விமானத்திலும் ஒழுங்கான சாப்பாடு இல்லாததால் மனமும் உடலும் ஒரே சேரக் களைத்திருந்தன . நரம்புகளை முறுக்கும் ஓரு  சூடான கபே க்கும் சிகரட் வளையத்திற்கும் மனது ஏங்கியது .   நமநமத்த நாக்கை என் மனது "சும்மாய் இரு" என்று அதட்டியது . அதுவோ மனதிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியது . அந்த அதிகாலை வேளையில் அந்த விமானம் தரையுடன் நளினமாக மோதி சிறிது தூரம் ஓடி , கட்டுநாயக்கா விமான நிலையத்தின் நீண்ட இறங்கு குழாயுடன் தன்னை அணைத்து தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டது . எல்லோருமே வெளியில் செல்வதற்கு முன்னணியில் நின்றார்கள் . ஆனால் போவதற்கு ஒரு பாதை மட்டுமே உள்ளது என்பதை தெரிந்தும் தெரியாமலும் இருந்தார்கள் .

 

பட்டியில் அடைபட்டிருந்த மாடுகள் முட்டி மோதி எட்டிப் பாய்வது போல பயணிகள் விமான வாயிலை நோக்கி முன்னேறி கொண்டிருந்தார்கள் . நாங்கள்  எமது கடவு சீட்டுகளை சரிபார்த்துக் கொண்டே இறுதியாக வெளியேறினோம் . கட்டுநாயக்கா விமான நிலையம் முன்னைவிட பளபளப்பு கூடி இருந்தது . அந்தப் பளபளப்பின் பின்னால் தெரிந்தும் தெரியாத பாசிகள் படர்ந்திருந்தது . நான் எச்சரிக்கையாகவே கால்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன் . என் வயிற்றில் அமிலம் சுரந்து கொண்டிருந்தது.

 

குடிவரவு குடியகல்வு  ஐரோப்பியர்களுக்கு ஒரு புறமாகவும் , ஏனையோருக்கு ஒரு புறமாகவும் இருந்தது . நாங்கள் ஐரோப்பியர்களுகான வரிசையில் நின்று கொண்டிருந்தோம். குடிவரவு  மேசையில்  ஒரு சிங்கள நங்கை கப்பாயம் அணிந்து இருந்தாள். எமக்கு முன்னால் ஓர் பிரெஞ் தம்பதிகள் நின்றிருந்தனர் . அவர்களிடம் தேவைக்கு அதிகமாக தனது பல்லுகளைக் காட்டியவள் , எமது முறை வந்ததும் அந்த முகம் தானாகவே கருமை கொண்டது . நாங்கள் ஐரோப்பியர்களாக இருந்தும் ஐயத்துடனேயே எமது கடவு சீட்டுகளை நோண்டினாள் . இறுதியில் என்னை நோக்கி " நீங்கள் விசா எடுத்தீர்களா " ? என்ற கேள்வியை வீசினாள் . நான் , நாங்கள் ஏற்கனவே ஒன்லைனில் விசா எடுத்த விடயத்தை சொன்னேன் . அவள் மீண்டும் ,உங்கள் கடவுசீட்டு இலக்கம் பிழையாக இருக்கின்றது போய் காசை கட்டி மீண்டும் எடுத்து வாருங்கள் என்று எனது கடவுசீட்டை தந்தாள் . நான் அவளுடன் தர்க்கம் செய்ய வாய் உன்னுவதை கண்ட எனது மனைவி எனது கையை பிடித்து அழுத்தினாள் .

 

0002.jpg

 

நாங்கள் மீண்டும் எனது கடவுசீட்டை ஆராய்ந்ததில் எனது கடவுசீட்டு இலக்கத்தில் உள்ள "ஐ " ( I ) என்ற ஆங்கில எழுத்து ஒன்றாக ( 1 ) என்னால் மாறி எழுதப்பட்டிருந்தது . நீ என்னதான் ஒழுங்காக செய்திருக்கின்றாய் ? என்பது போல என் மனைவி பார்வையால் என்னை  எரித்தாள் . நாங்கள் மீண்டும் முப்பது டொலர்கள் தண்டமாக செலுத்திவிட்டு விசாவை எடுத்து  கொண்டு குடிவரவை விட்டு வெளியேறினோம் . ஆனால் எனக்கு அவர்கள் செய்த மொள்ள மாரி வேலை கொதியை கிளப்பியது . ஒன்லைனில் விசாவுக்கு விண்ணப்பம் செய்யும் பொழுது கடவு சீட்டு பற்றிய சரியான தகவல்கள் இருந்தாலே அந்த மென் பொருள் எமது விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளும் . இல்லாது விட்டால் எமது விண்ணப்பத்தை நிராகரித்து விடும் . அனால் நான் விண்ணப்பித்த பொழுது வெறும் பதினைந்து நிமிடத்திலேயே எனது கடவுசீட்டு ஆராயப்பட்டு ஒன்லைனால்  விசா வழங்கியிருந்தார்கள் . காசை வறுகுவதற்காக இவர்கள் என்னவும் செய்வார்கள் என்பதை புரிந்து கொண்டேன் . நாங்கள் எல்லாவற்றையும் முடித்து வெளியே வர அதிகாலை மூன்றரை ஆகி விட்டிருந்தது . எனது கையில் சூடான கபேயும் கையில் சிகரட்டும் எனது மனவெக்கையை ஆற்றிகொண்டிருந்தது . நாங்கள்  பம்பலபிட்டி செல்வதற்கு ரக்சிக்காக  காத்திருந்தோம் .

தொடரும்

  • Like 12

Share this post


Link to post
Share on other sites

 சுவாரஸ்யமான உங்கள் பயண அனுபவத்தினை பகிர்வதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.... நெருடிய நெருஞ்சியைப்போல இதுவும் சிறப்பாக இருக்கும் என நம்புகின்றோம்.

ஊருக்குப் போய் வரும் எல்லோரையும் போல் "ஊர் இப்ப அந்த மாதிரி இருக்கு" என்று சொல்ல மாட்டீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

அபிவிருத்தி என்பதற்கு பின்னாலுள்ள இனவழிப்பு வடுக்களையும் தொடரும் வலிகளையும், அன்றாட பிரச்சினைகளையும் வெளிக்கொண்டு வருவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கு. பார்க்கலாம்......! :)  தொடருங்கள்.....கோ!!! :)

 

உண்மைக்குப் புறம்பான கற்பனைகளை , கைதட்டல் வாங்கவேண்டும் என்பதற்காக எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை . இந்த கதைக்கு ஏனோதானோ என்றும் தலைப்பை போடவில்லை . தொடருடன் தொடர்ந்து இருங்கள் . உங்கள் வருகைக்கும் படித்து பார்த்து கருத்து தந்தற்கும் மிக்க நன்றி கவிதை  :)  :D  .

 

Share this post


Link to post
Share on other sites

பகிர்வுக்கு நன்றி . மேலும் தொடர்க.

Share this post


Link to post
Share on other sites

உங்கள் பதிவை வசிக்கும் போது, மன உளைச்சளுடனாவது நாம் பிறந்த மண்ணை மிதிக்கிரீர்களே. எனக்கு என் இறுதிக்காலம் வரைக்கும் அந்தச் சந்தர்ப்பம் வாய்க்கப்போவதில்லை என்னும் உண்மை நெஞ்சில் வலியை உண்டாக்கியது. நாமே நேரில் சென்றது போன்ற உணர்வை உங்கள் எழுத்துக்கள் எனக்குத் தருகின்றன. வாடாமல்லிகையுடன் கடந்த கால நிகழ்வுகள் கிளறப்படுகின்றன. தொடருங்கள் கோமகன்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

Share this post


Link to post
Share on other sites

என்னுடன் கூடப் பிறந்தவர்கள் எப்படி என்னை அரவணைக்கப் போகின்றார்கள் ? என்னதான் இரத்த உறவாக இருந்தாலும் இருபத்தைந்து வருடங்களுக்கு மேல் சொந்தங்களையும் , ஓடித் திரிந்த மண்ணையும் தொலைத்த எனக்கு என்ன பெரிய வரவேற்பு அவர்களிடம் இருக்கப் போகின்றது ??  நான் அந்நியன் அந்நியன் தானே ?? யார் யாரை நோவது ??  எல்லோருமே கால ஓட்டத்தில் அள்ளுப்பட்ட குப்பைகள் தானே ?? கால ஓட்டத்தில் அள்ளுப்படாது எதிர்த்து நிற்கும் ஆலமரங்களை நோக்கி வலசை போகும் பறவைகள் போல நான் செல்வது எனக்கே என்மீது அருவருப்பாக இருந்தது .

 

நெருடிய நெருஞ்சியின்போதும் போய் வந்தீர்கள்தானே.. அதெப்படி இன்னுமொரு 25 வருடங்கள்? :huh: 

எனது கண்ணீர் எனது மனவியை எழுப்பியிருக்க வேண்டும் போல  தன் முகத்தை திருப்பி என்ன என்று பார்வையால் கேட்டா .

 

 

முகத்தை திருப்பியா அல்லது கொமட்டில் குத்தியா? :lol: 

அனால் நான் விண்ணப்பித்த பொழுது வெறும் பதினைந்து நிமிடத்திலேயே எனது கடவுசீட்டு ஆராயப்பட்டு ஒன்லைனால்  விசா வழங்கியிருந்தார்கள் .

 

 

ஃபிரெஞ்ச் கடவுச்சீட்டு இலக்கங்கள் அவர்களால் உறுதி செய்ய முடியாமல் இருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால் அது தனிநபர் சார்ந்த விடயம் என்பதால், ஃபிரெஞ்ச் நடைமுறை அதை தடுக்கும்.

 

தொடர் நன்றாகப் போகிறது கோம்ஸ்.. தொடருங்கள்.. :D

Edited by இசைக்கலைஞன்

Share this post


Link to post
Share on other sites

எனது கடவுசீட்டை ஆராய்ந்ததில் எனது கடவுசீட்டு இலக்கத்தில் உள்ள "ஐ " ( I ) என்ற ஆங்கில எழுத்து ஒன்றாக ( 1 ) என்னால் மாறி எழுதப்பட்டிருந்தது . 

 

ஒரு காலம் இருந்தது. நாங்கள் தமிழ் அதிகாரிகள் இருக்கும் பக்கம் போகத் தயங்குவோம். சிறு தவறென்றாலும் நோண்டி நொங்கெடுத்து விடுவார்கள். சிங்களவர் இருக்கும் பக்கமாகப் போய் சுலபமாகக் காரியமாற்றிக் கொள்வோம். இன்று அது வேறுகோணத்தில் மாறிவிட்டது. இனக்குரோதம் ஒவ்வொரு சிங்களவனிலும் ஆழமாக ஊன்றி வளர்கப்பட்டுள்ளது.

 

விமானத்தில் என்னையும் கோமகன் பயனிக்க வைத்ததால் பயண அலுப்பு இன்னமும் தீரவில்லை. அதற்கிடையில். பம்பலப்பிட்டிக்கு ரக்சியில் சென்ற அனுபவத்தை அறிய உள்ளம் ஏங்குகிறது.    

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் கோ!

 

 

நெருடிய நெருஞ்சியின்போதும் போய் வந்தீர்கள்தானே.. அதெப்படி இன்னுமொரு 25 வருடங்கள்? :huh: 

 

அப்ப Skype ஆல் போயிருப்பார் இப்ப ஆளே போயிருக்கார் போலை  :D  :lol: 

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் கோ!

Share this post


Link to post
Share on other sites

குடிவரவு குடியகல்வு  ஐரோப்பியர்களுக்கு ஒரு புறமாகவும் , ஏனையோருக்கு ஒரு புறமாகவும் இருந்தது . நாங்கள் ஐரோப்பியர்களுகான வரிசையில் நின்று கொண்டிருந்தோம். குடிவரவு  மேசையில்  ஒரு சிங்கள நங்கை கப்பாயம் அணிந்து இருந்தாள். எமக்கு முன்னால் ஓர் பிரெஞ் தம்பதிகள் நின்றிருந்தனர் . அவர்களிடம் தேவைக்கு அதிகமாக தனது பல்லுகளைக் காட்டியவள் , எமது முறை வந்ததும் அந்த முகம் தானாகவே கருமை கொண்டது . நாங்கள் ஐரோப்பியர்களாக இருந்தும் ஐயத்துடனேயே எமது கடவு சீட்டுகளை நோண்டினாள் . இறுதியில் என்னை நோக்கி " நீங்கள் விசா எடுத்தீர்களா " ? என்ற கேள்வியை வீசினாள் . நான் , நாங்கள் ஏற்கனவே ஒன்லைனில் விசா எடுத்த விடயத்தை சொன்னேன் . அவள் மீண்டும் ,உங்கள் கடவுசீட்டு இலக்கம் பிழையாக இருக்கின்றது போய் காசை கட்டி மீண்டும் எடுத்து வாருங்கள் என்று எனது கடவுசீட்டை தந்தாள் . நான் அவளுடன் தர்க்கம் செய்ய வாய் உன்னுவதை கண்ட எனது மனைவி எனது கையை பிடித்து அழுத்தினாள் .

 

 

 

நாங்கள் மீண்டும் எனது கடவுசீட்டை ஆராய்ந்ததில் எனது கடவுசீட்டு இலக்கத்தில் உள்ள "ஐ " ( I ) என்ற ஆங்கில எழுத்து ஒன்றாக ( 1 ) என்னால் மாறி எழுதப்பட்டிருந்தது . நீ என்னதான் ஒழுங்காக செய்திருக்கின்றாய் ? என்பது போல என் மனைவி பார்வையால் என்னை  எரித்தாள் . நாங்கள் மீண்டும் முப்பது டொலர்கள் தண்டமாக செலுத்திவிட்டு விசாவை எடுத்து  கொண்டு குடிவரவை விட்டு வெளியேறினோம் . ஆனால் எனக்கு அவர்கள் செய்த மொள்ள மாரி வேலை கொதியை கிளப்பியது . ஒன்லைனில் விசாவுக்கு விண்ணப்பம் செய்யும் பொழுது கடவு சீட்டு பற்றிய சரியான தகவல்கள் இருந்தாலே அந்த மென் பொருள் எமது விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளும் . இல்லாது விட்டால் எமது விண்ணப்பத்தை நிராகரித்து விடும் . அனால் நான் விண்ணப்பித்த பொழுது வெறும் பதினைந்து நிமிடத்திலேயே எனது கடவுசீட்டு ஆராயப்பட்டு ஒன்லைனால்  விசா வழங்கியிருந்தார்கள் . காசை வறுகுவதற்காக இவர்கள் என்னவும் செய்வார்கள் என்பதை புரிந்து கொண்டேன் . நாங்கள் எல்லாவற்றையும் முடித்து வெளியே வர அதிகாலை மூன்றரை ஆகி விட்டிருந்தது . எனது கையில் சூடான கபேயும் கையில் சிகரட்டும் எனது மனவெக்கையை ஆற்றிகொண்டிருந்தது . நாங்கள்  பம்பலபிட்டி செல்வதற்கு ரக்சிக்காக  காத்திருந்தோம் .

தொடரும்

 

வணக்கம் கோம்ஸ் அண்ணா, இசை அண்ணா சொல்லுவது சரி. நீங்கள் வழங்கும் கடவுசீட்டு இலக்கத்தை தன்னியக் முறையில் சரிபார்க்கும் வசதி எந்தவொரு நாட்டுக்கும் இல்லை. நீங்கள் வழங்கும் எண் அவர்கள் மென்பொருளில் பதிவாகி இருக்கும் உங்கள் கடவுச் சீட்டு விபரங்களை அவர்கள் கணனியில் பதியும் போது நீங்கள்  முதலிலே  இலக்கத்துடன் ஒப்பிட்டு பார்த்தே உங்களுக்கு ETA/OAV வழங்கும். இதற்கு அவுஸ் அரசாங்கம் TRIPS (Travel and Immigration Processing System) என்ற ஒரு மென் பொருளைப் பயன்படுத்துக்கிறார்கள். உங்கள் பக்கத்தில் தவறு இருக்கும் போது காசை வறுகுவதட்காக என நீங்கள் கூற முடியாது தானே. (இலங்கை அரச அதிகாரிகளின் நரி வேலைகள் பலதரம் போய் வந்த எனக்கு நன்கு தெரியும் ஆனால் இந்தவிடத்தில் தவறு உங்கள் பேரில் தான்.)

தொடருங்கோ.....

  • Like 2

Share this post


Link to post
Share on other sites
ஒன்லைனில் விசாவுக்கு விண்ணப்பம் செய்யும் பொழுது கடவு சீட்டு பற்றிய சரியான தகவல்கள் இருந்தாலே அந்த மென் பொருள் எமது விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளும்

 

அப்படியல்ல. நீங்கள் கோமகன் என்ற பெயரில் பகடவு இலக்கம் ABC123456 என்று கொடுத்துப் பாருங்கள். அப்பொழுதும் விசா தருவார்கள். :) சிலவேளைகளில் Black list வைத்திருந்து தன்னியக்கமாக ஒப்பிட்டுப் பார்க்க முடியுமென்று நினைக்கிறேன். இவ்விடயத்தில் தவறு உங்களுடையதே..

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this